TnpscTnpsc Current Affairs

26th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

26th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 26th December 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

26th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. COVID தொற்றுநோய்க்கான நாசிவழி ஊக்கத் தடுப்பூசியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ‘iNCOVACC’ஐ தயாரிக்கின்ற நிறுவனம் எது?

அ. சீரம் இந்தியா நிறுவனம்

ஆ. பயோலாஜிக்கல் E லிட்

இ. பாரத் பயோடெக்

ஈ. பயோகான்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. பாரத் பயோடெக்

  • 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஊக்கத்தவணை தடுப்பூசியாக பாரத் பயோடெக்கின் நாசிவழி செலுத்தக்கூடிய தடுப்பூசியை நடுவண் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் அங்கீகரித்துள்ளது. இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்துகொள்ளும் இணையதளமான ‘CoWin’ செயலியில் இந்தியாவின் முதல் நாசிவழி COVID தடுப்பூசியான ‘iNCOVACC’ சேர்க்கப்படும். தற்போது, பாரத் பயோ டெக்கின் கோவாக்ஸின், சீரம் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்ட் மற்றும் கோவோவாக்ஸ், ரஷிய ஸ்புட்னிக்–V மற்றும் பயோலாஜிக்கல் E லிட் இன் கோர்பிவாக்ஸ் ஆகியவை CoWin இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.

2. ‘அரசுத்துறையில் சிறந்த பாதுகாப்பு நடைமுறைகளுக்கான’ DSCI AISS விருதை வென்ற நிறுவனம் எது?

அ. இந்திய இரயில்வே

ஆ. UIDAI

இ. ISRO

ஈ. NASSCOM

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. UIDAI

  • இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ‘அரசுத்துறையில் சிறந்த நடைமுறைகளுக்கான சிறந்த தரவுப் பாதுகாப்பு விருதைப்’ பெற்றுள்ளது. இந்திய தரவுப்பாதுகாவல் கழகம் (DSCI) என்பது NASSCOM அமைப்பால் இந்திய நாட்டில் தரவுப்பாதுகாப்பிற்காக நிறுவப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். குடிகளுக்கு டிஜிட்டல் அடையாள அடிப்படையிலான நலன்புரி சேவைகளை வழங்கும், ‘ஆதார்’ உட்கட்டமைப்பைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கியதற்காக DSCI UIDAIக்கு இவ்விருதை வழங்கியது.

3. பன்னாட்டு நிதிக் கழகம் (IFC) இந்தியாவிலுள்ள கீழ்க்காணும் எந்த நிறுவனத்திற்கு $400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடனை வழங்கியுள்ளது?

அ. பாரத வங்கி

ஆ. கேன் ஃபின் ஹோம்ஸ்

இ. HDFC

ஈ. LIC ஹவுசிங் ஃபைனான்ஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. HDFC

  • பன்னாட்டு நிதிக்கழகம் (IFC) அடமான சேவைகள் வழங்கும் நிறுவனமான HDFC–க்கு $400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடனை வழங்கியுள்ளது. இந்தக்கடன் நகர்ப்புறங்களில் வீடு கட்டுதலில் உள்ள இடைவெளியை குறைத்தற்கும், பசுமை வீடுகளை அதிகரிப்பதற்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்குதற்கும் நீண்டகால வணிக வளர்ச்சியை உறுதிசெய்வதன்மூலம் காலநிலை–திறன்மிகு வீடுகளுக்கான அணுகலை மேம்படுத்தவும் உதவும்.

4. 2023–FIH ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ. ஹர்மன்பிரீத் சிங்

ஆ. P R ஸ்ரீஜேஷ்

இ. அமித் ரோஹிதாஸ்

ஈ. ருபிந்தர் பால் சிங்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. ஹர்மன்பிரீத் சிங்

  • FIH ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பைக்கான 18 பேர்கொண்ட இந்திய அணிக்கு ஹர்மன்ப்ரீத் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஒடிஸாவின் புவனேசுவரம்–ரூர்கேலாவில் 2023 ஜன.13–29 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள FIH ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பைக்கான அணியை ஹாக்கி இந்தியா அறிவித்தது. இந்த நிகழ்விற்கு அமித் ரோகிதாஸ் துணைத்தலைவராக இருப்பார். ரூர்கேலாவில் புதிதாக கட்டப்பட்ட பிர்சா முண்டா அரங்கில் இந்திய ஹாக்கி அணி தனது தொடக்க ஆட்டத்தை ஸ்பெயினுக்கு எதிராக விளையாடும்.

5. இந்தியாவிற்கு S–400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை வழங்குகிற நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. இஸ்ரேல்

இ. ரஷ்யா

ஈ. பிரான்ஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ரஷ்யா

  • அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் S–400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் மூன்றாவது படைப் பிரிவை ரஷியா இந்தியாவுக்கு வழங்கத் தொடங்கும். இந்தியா ஏற்கனவே தனது முதல் இரண்டு ஏவுகணை அமைப்பு படைப்பிரிவுகளை லடாக் பிரிவு, மேற்கு வங்கத்தின் சிலிகுரி பாதை மற்றும் முழு வடகிழக்குப் பகுதியிலும் ரோந்துப்பணியில் ஈடுபடுத்தியுள்ளது. S–400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் ஐந்து படைப்பிரிவுகளை வாங்குவதற்கான `35,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்திற்கு இந்தியாவும் ரஷ்யாவும் ஒப்பந்தம் செய்துள்ளன.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற அனிஷ் தோப்பானி என்பவருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. கிரிக்கெட்

ஆ. செஸ்

இ. பூப்பந்து

ஈ. ஹாக்கி

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. பூப்பந்து

  • தாய்லாந்தின் நோந்தபுரியில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அனிஷ் தோப்பானி 15 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார். அனிஷ் தோப்பானி ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் சீன தைபேயின் சுங்–ஹ்சியாங் யீக்கு எதிராக தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இந்தியாவின் 17 வயதுக்குட்பட்ட ஆடவர் இரட்டையர்களான அர்ஷ் முகமது மற்றும் சன்ஸ்கர் ஸ்ரஸ்வத் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஆச்சார்யா ஜெகதீஷ் சந்திரபோஸ் இந்திய தாவரவியல் பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?

அ. மேற்கு வங்காளம்

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. ஹிமாச்சல பிரதேசம்

ஈ. மத்திய பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. மேற்கு வங்காளம்

  • மேற்கு வங்க மாநிலத்தின் ஹௌராவில் அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய தாவரவியல் பூங்காவான ஆச்சார்யா ஜெகதீஷ் சந்திரபோஸ் இந்திய தாவரவியல் பூங்கா கங்கையாற்றின் மிகக்கடுமையான நில அரிப்பு காரணமாக அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. சமீபத்திய தளப்பார்வையின்போது, ​​வேலி மற்றும் உள்தோட்டத்தின் சில பகுதிகள் ஆற்றுவெள்ளத்தால் அடித்துச் செல்லப்படலாம் என்று நிபுணர்கள் எச்சரித்தனர். இத்தோட்டம் இந்திய தாவரவியல் ஆய்வகத்தின் (BSI) அதிகார வரம்பிற்கு உட்பட்டதாகும்.

8. நியூயார்க்கின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைமை இயக்க அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் யார்?

அ. சுஷ்மிதா சுக்லா

ஆ. இந்திரா நூயி

இ. பிரீத்தி சுதன்

ஈ. கீதா கோபிநாத்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. சுஷ்மிதா சுக்லா

  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காப்பீட்டுத் துறைசார் மூத்த அதிகாரியான சுஷ்மிதா சுக்லா, நியூயார்க் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் முதல் துணைத்தலைவர் மற்றும் தலைமை இயக்க அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு நியூயார்க்கின் பெடரல் ரிசர்வ் அமைப்பின் ஆளுநர்கள் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது. அவர் 2023 மார்ச் முதல் துணைத்தலைவராகவும், தலைமை இயக்க அதிகாரியாகவும் செயல்படுவார்.

9. உலக வங்கியின் முதன்மையான பாலினக் கருவித்தொகுப்பை அறிமுகப்படுத்திய மாநகராட்சி எது?

அ. மும்பை

ஆ. சென்னை

இ. கொல்கத்தா

ஈ. புது தில்லி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சென்னை

  • பெருநகர சென்னை மாநகராட்சிமூலம் ‘பாலினம் சார்ந்து செயல்படும் நகர்ப்புற இயக்கம் மற்றும் பொதுவெளிகளை இயக்குதல்’ அடிப்படையிலான பாலின கருவித்தொகுப்பு தொடங்கப்பட்டது. உலக வங்கி மற்றும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் இணைந்து நடத்திய அமர்வின்போது இக்கருவித்தொகுப்பு வெளியிடப்பட்டது. பெண்களின் பயணத் தேவைகளை ஆதரிக்கக்கூடிய பொதுப்போக்குவரத்து மற்றும் நகர்ப்புற இடங்களை வடிவமைப்பதற்கு இந்திய நகரங்களுக்கு வழிகாட்டுவதே இதன் நோக்கம் ஆகும்.

10. ‘சர்வதேச ஊழல் எதிர்ப்பு நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. டிசம்பர்.09

ஆ. டிசம்பர்.11

இ. டிசம்பர்.15

ஈ. டிசம்பர்.26

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. டிசம்பர்.09

  • “ஊழலுக்கு எதிராக உலகை ஒன்றிணைத்தல் – Uniting the World Against Corruption” என்ற கருப்பொருளின்கீழ் சர்வதேச ஊழல் எதிர்ப்பு நாள் டிச.09 அன்று அனுசரிக்கப்பட்டது. 2022 சர்வதேச ஊழல் எதிர்ப்பு நாளானது ஊழல் எதிர்ப்பு மற்றும் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றுக்கு இடையேயான முக்கியமான தொடர்பை முன்னிலைப்படுத்த எண்ணுகிறது. ஊழலுக்கு எதிரான ஐநா தீர்மானத்தின் இருபதாம் ஆண்டு நிறைவையும் இந்த நாள் குறிக்கிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சாதனங்களைப் பழுதுநீக்க உதவும் வலைதளம்.

மின்னணு சாதனங்கள், வேளாண் கருவிகள் உள்ளிட்டவற்றை மற்றவர்களின் உதவியின்றி சுயமாகவே பழுது பார்க்க உதவும் ‘ரைட் டூ ரிப்பேர்’ என்ற வலைதளத்தை நடுவண் அமைச்சர் பியூஷ் கோயல் தொடக்கிவைத்தார். அந்த வலைதளத்தில் சாதனங்களின் பழுதை நீக்குவதற்கான கையேடுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக, பழுதை நீக்குவதற்கு அந்தச் சாதனங்களைத் தயாரித்த நிறுவனங்களை நாடவேண்டிய கட்டாயம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, கைப்பேசிகள், மின்னணு சாதனங்கள், நுகர்வோர் பொருள்கள், வாகனங்கள், வேளாண் கருவிகள் ஆகியவற்றைப் பழுதுநீக்குவதற்கான கையேடுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அக்கையேடுகளை வாசித்து சுயமாகப் பழுதை சரிசெய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுவண் நுகர்வோர் விவகாரங்கள் துறைக்கும் ஐஐடி வாரணாசிக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தமும் இதன்போது கையொப்பமானது.

26th December 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. iNCOVACC, which was approved as an intra–nasal booster dose for COVID, is manufactured by which institution?

A. Serum Institute of India

B. Biological E Ltd

C. Bharat Biotech

D. Biocon

Answer & Explanation

Answer: C. Bharat Biotech

  • The Ministry of Health and Family Welfare has approved Bharat Biotech’s intranasal Covid vaccine as a booster dose for those above 18 years of age. India’s first intranasal Covid vaccine iNCOVACC will be added to the CoWin app, which is a web platform for vaccination registration in the country. At present, only Bharat Biotech’s Covaxin, Serum Institute’s Covishield and Covovax, Russian Sputink V and Biological E Ltd’s Corbevax are listed in the CoWin portal.

2. Which institution won the DSCI AISS Award for ‘Best Security Practices in Government Sector’?

A. Indian Railways

B. UIDAI

C. ISRO

D. NASSCOM

Answer & Explanation

Answer: B. UIDAI

  • The Unique Identification Authority of India (UIDAI) has bagged a top data security award for best practices in the government sector. Data Security Council of India (DSCI) is a not–for–profit industry body on data protection in India, setup by NASSCOM.  DSCI awarded UIDAI for its significant role in securing ‘Aadhaar’ infrastructure that provides digital identity–based welfare services to residents.

3. International Finance Corporation has extended a USD 400 million loan to which company in India?

A. SBI

B. Can Fin Homes

C. HDFC

D. LIC Housing Finance

Answer & Explanation

Answer: C. HDFC 

  • The International Finance Corporation (IFC) has extended a USD 400–million loan to mortgage company HDFC for financing green affordable housing units. The loan will help close the urban housing gap and improve access to climate–smart affordable homes by boosting green housing, creating jobs and ensuring long–term business growth.

4. Who has been named as the captain of the Indian squad for the FIH Men’s Hockey World Cup 2023?

A. Harmanpreet Singh

B. P R Sreejesh

C. Amit Rohidas

D. Rupinder Pal Singh

Answer & Explanation

Answer: A. Harmanpreet Singh

  • Harmanpreet Singh was named the captain of the 18–member Indian squad for the FIH Men’s Hockey World Cup. Hockey India announced the squad for the FIH men’s World Cup scheduled from January 13 to 29, 2023 in Bhubaneswar–Rourkela, Odisha. Amit Rohidas will be his deputy for the event. The Men in Blue will play its opening game against Spain at the newly built Birsa Munda Stadium in Rourkela.

5. Which country supplies S–400 air defence missile system to India?

A. USA

B. Israel

C. Russia

D. France

Answer & Explanation

Answer: C. Russia

  • Russia will begin supplying India with the third squadron of the S–400 air defence missile system in January or February of next year. India has already deployed its first two missile system squadrons to patrol the Ladakh sector, West Bengal’s Chicken’s Neck Corridor and the entire north–eastern region. India and Russia have agreed to a three–year ₹35,000 crore deal to buy five squadrons of S–400 air defence missiles.

6. Anish Thoppani, who was seen in the news, plays which sports?

A. Cricket

B. Chess

C. Badminton

D. Hockey

Answer & Explanation

Answer: C. Badminton

  • Indian shuttler Anish Thoppani clinches silver medal in U–15 category at Badminton Asia Junior Championships, in Nonthaburi, Thailand. Anish lost the men’s singles final against Chinese Taipei’s Chung–Hsiang Yih to settle for silver. India’s under–17 men’s duo Arsh Mohammad and Sanskar Sraswat secured a silver medal.

7. Acharya Jagadish Chandra Bose Indian Botanic Garden, which was seen in the news, is located in which state?

A. West Bengal

B. Andhra Pradesh

C. Himachal Pradesh

D. Madhya Pradesh

Answer & Explanation

Answer: A. West Bengal

  • India’s largest botanical garden, Acharya Jagadish Chandra Bose Indian Botanic Garden in Howrah, West Bengal, is under threat due to severe land erosion by Ganga River. During a recent site visit, experts warned that parts of the fencing and inner plantation may get washed away by the swelling river. The garden is under the jurisdiction of the Botanical Survey of India (BSI).

8. Which Indian–origin veteran has been appointed as the Chief Operating Officer of Federal Reserve Bank of New York?

A. Sushmita Shukla

B. Indra Nooyi

C. Preeti Sudan

D. Gita Gopinath

Answer & Explanation

Answer: A. Sushmita Shukla

  • Sushmita Shukla, Indian–origin veteran of the insurance industry, has been appointed as First Vice President and Chief Operating Officer at the Federal Reserve Bank of New York. The appointment was approved by the Board of Governors of the Federal Reserve System of New York. She has been appointed as First Vice President and Chief Operating Officer, effective March 2023

9. Which city corporation launched the World Bank’s flagship Gender Toolkit?

A. Mumbai

B. Chennai

C. Kolkata

D. New Delhi

Answer & Explanation

Answer: B. Chennai

  • A Gender Toolkit based on ‘Enabling gender responsive urban mobility and public spaces’ was launched by Greater Chennai Corporation. The toolkit was launched at a session conducted by the World Bank and the Chennai Urban Metropolitan Transport Authority.  It aims to highlight the gender issues surrounding mobility and city design.

10. When is the ‘International Anti–Corruption Day’ observed?

A. December.09

B. December.11

C. December.15

D. December.26

Answer & Explanation

Answer: A. December.09

  • International Anti–Corruption Day is observed on 9 December, with the theme of ‘Uniting the World against Corruption’. The 2022 International Anti–Corruption Day (IACD) seeks to highlight the crucial link between anti–corruption and peace, security, and development. It also marks the start of twentieth anniversary of the UN Convention against Corruption (UNCAC).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!