Tnpsc

26th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

26th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 26th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

26th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. 80 மில்லியன் டோஸ் COVID-19 தடுப்பூசிகளை தேவைப்படும் நாடுகளுக்கு விநியோகிப்பதாக கூறியுள்ள நாடு எது?

அ) இந்தியா

ஆ) ரஷியா

இ) சீனா

ஈ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

  • வரும் வாரங்களில் 80 மில்லியன் டோஸ் COVID-19 தடுப்பூசிகளை தேவைப்படும் நாடுகளுக்கு பகிர்ந்து அனுப்பப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு, அமெரிக்காவில் தடுப்பூசிகளுக்கான தேவை குறைந்ததையடுத்தும் உலகளவில் அதன் தேவை அதிகரித்ததையடுத்தும் வந்துள்ளது. 80 மில்லியன் அளவுகளில் பைசர், மாடர்னா அல்லது ஜான்சன் & ஜான்சன் தயாரித்த 20 மில்லியன் டோஸ்களும் அடங்கும்.

2. இந்தியாவில், COVID-19 சிகிச்சைகள் பட்டியலிலிருந்து கைவிடப்பட்ட சிகிச்சை முறை எது?

அ) பிளாஸ்மா தான சிகிச்சை

ஆ) தடுப்பூசி போடுதல்

இ) உயிர்வளி சிகிச்சை

ஈ) ஹைட்ரோடைலேட்டேஷன்

  • இந்திய அரசாங்கத்தால் COVID சிகிச்சைகள் பட்டியலிலிருந்து பிளாஸ்மா தான சிகிச்சை நீக்கப்பட்டுள்ளது. COVID தொற்றுக்கு சிகிச்சையளிப்பதில் இந்தச் சிகிச்சை முறை பயனற்றது எனக் கண்டறியப்பட்டதால், இந்த முடிவு, தேசிய COVID பணிக்குழுவால் எடுக்கப்பட்டுள்ளது.

3. சமீப செய்திகளில் இடம்பெற்ற, “New Big 5” திட்டம் என்றால் என்ன?

அ) மெட்ரோ இரயில் திட்டம்

ஆ) வனவுயிரிகளை நிழற்படம் எடுத்தல் திட்டம்

இ) தடுப்பூசி திட்டம்

ஈ) செயற்கைக்கோள் திட்டம்

  • “New Big 5” திட்டம் என்பது உலகெங்கிலும் 250’க்கும் மேற்பட்ட நிழற் படக்கலைஞர்கள், பாதுகாவலர்கள் மற்றும் வனவுயிரி தொண்டு நிறுவனங்கள் ஆகியவை 5 விலங்குகளை நிழற்படம் எடுப்பதற்கான ஒரு பன்னாட்டளவிலான முயற்சியாகும்.
  • அந்த ஐந்து விலங்குகள் வேட்டையாடப்படுவதிலிருந்து தடுப்பதை இத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த விலங்குகள் யானை, துருவ கரடி, கொரில்லா, புலி மற்றும் சிங்கமாகும். கசிரங்கா தேசிய பூங்காவைச் சேர்ந்த இரு விலங்குகள் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளன. ஆனால், புகழ்பெற்ற ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் இப்பட்டியலில் இல்லை.

4. தனது இறப்பிற்குப்பின், கூடைப்பந்து புகழரங்கில் சேர்க்கப்பட்ட கூடைப்பந்து மேதை யார்?

அ) வில்ட் சேம்பர்லேன்

ஆ) டாம் ஹெய்ன்சோன்

இ) கோபி பிரையன்ட்

ஈ) ஜான் ஹவ்லிசெக்

  • COVID தொற்றுநோயால் 9 மாதங்கள் தாமதமாக நடந்த ஒரு விழாவில் கூடைப்பந்து மேதையான கோபி பிரையன்ட், அவரது இறப்பிற்குப்பின் கூடைப்பந்து புகழரங்கில் சேர்க்கப்பட்டார்.
  • கோபி: கூடைப்பந்து வாழ்வு, காணொலி அஞ்சலி, படங்கள், பழங்கால உடை, காலணிகள் மற்றும் கூடைப்பந்துகள், பிரையண்டின் ஆஸ்கர் விருதுபெற்ற திரைப்படமான டியர் கூடைப்பந்து ஆகியவை இடம்பெற்ற ஒரு கண்காட்சியும் அங்கிருந்தது. கடந்த 2020ஆம் ஆண்டில், பிரையன்ட், அவரது மகள் கியானா மற்றும் எழுவருடன் கலிபோர்னியாவில் ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார்.

5. கலப்பு தற்காப்பு கலைஞர் உலக சாம்பியன்ஷிப்பை வென்ற முதல் இந்திய-வம்சாவளி வீரர் யார்?

அ) அர்ஜன் புல்லர்

ஆ) ஜெயிண்ட் சஞ்சீர்

இ) குரு ராஜ்

ஈ) தில்ஷர் ஷாங்கி

  • கலப்பு தற்காப்பு கலைஞர் அர்ஜன் புல்லர், கலப்பு தற்காப்பு கலைஞர் உலக சாம்பியன்ஷிப்பை வென்ற முதல் இந்திய-வம்சாவளி வீரர் என்ற பெருமையைப் பெற்றார். சிங்கப்பூரின் ஒன் சாம்பியன்ஷிப் போட்டியின் பட்டத்தை வெல்வதற்காக, புல்லர், ஐந்து முறை ஹெவிவெயிட் சாம்பியனான பிராண்டன் வேராக்கு எதிராக இரண்டாம் சுற்று தொழில்நுட்ப நாக் அவுட் வெற்றியைப் பதிவு செய்தார்.

6. அண்மையில் காலமான கி இராஜநாராயணன், எந்த மொழிசார் எழுத்தாளராவார்?

அ) தமிழ்

ஆ) மலையாளம்

இ) தெலுங்கு

ஈ) கன்னடம்

  • மூத்த தமிழ் எழுத்தாளரும் சாகித்ய அகாடமி வெற்றியாளருமான ‘கி ரா’ என பிரபலமாக அறியப்பட்ட கி இராஜநாராயணன், மூப்பு காரணமாக 98 வயதில் காலமானார். அவரது முதல் சிறுகதை, கடந்த 1958ஆம் ஆண்டில் வெளியானதிலிருந்து, அவர் ஒரு விரிவான இலக்கிய வாழ்க்கையை மேற்கொண்டுவந்தார். ‘கரிசல் இலக்கியத்தின்’ தந்தை என அறியப்பட்ட இவர், 1991’இல் ‘கோபல்லபுரத்து மக்கள்’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதை வென்றார். ‘கரிசல் பூமி’ என்பது தென்தமிழகத்தின் வெப்பமான மற்றும் வறண்ட நிலப் பகுதியாகும்.

7. ___ அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் ___அமைச்சகம், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியம் வழங்குவதற்காக 25 மாநிலங்களுக்கு `8,923.8 கோடியை விடுவித்தது?

அ) பஞ்சாயத்து ராஜ், நிதி

ஆ) நிதி, பஞ்சாயத்து ராஜ்

இ) உள்துறை, ஊரக வளர்ச்சி

ஈ) நிதி, ஊரக வளர்ச்சி

  • மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று, மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை, 25 மாநிலங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு `8,923.8 கோடி மானியத்தொகையை வழங்கியுள்ளது. இத்தொகை அடிப்படைமானியத்தின், முதல் தவணைத் தொகை. இதனை COVID-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

8. சமீப செய்திகளில் இடம்பெற்ற டார்வின் வளைவு அமைந்துள்ள நாடு எது?

அ) ஈக்வடார்

ஆ) ஸ்பெயின்

இ) இத்தாலி

ஈ) ஐக்கியப் பேரரசு

  • டார்வின் வளைவு என்பது ஈக்வடாரில் உள்ள கலபகோஸ் தீவுக்கூட்டத்தில் டார்வின் தீவின் தென்கிழக்கில் உள்ள பாறை உருவாக்கமாகும். இயற்கை அரிப்பு காரணமாக இந்த அமைப்பு அண்மையில் சரிந்தது.
  • தற்போது, பசிபிக் பெருங்கடல் தீவுக்கூட்டத்தின் வடதிசையில் இரண்டு பாறைத்தூண்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. டார்வின் வளைவானது டார்வின் தீவின் ஒருபகுதியாக இருந்த இயற்கை கல்லால் ஆனது. இது சுறாக்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களுக்கான சிறந்த இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

9. COVID தொற்றுநோயை கையாள, ஆப்பிரிக்காவுக்கு உதவும் திட்டத்தை ஒப்புக்கொண்ட பாரிஸ் உச்சிமாநாட்டை நடத்திய நாடு எது?

அ) ஐக்கியப் பேரரசு

ஆ) ஆஸ்திரேலியா

இ) பிரான்ஸ்

ஈ) ரஷியா

  • பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஆப்பிரிக்க, ஐரோப்பிய மற்றும் நிதியியல் தலைவர்களுக்கான பாரிஸ் உச்சிமாநாட்டை நடத்தினார்.
  • ‘ஆப்பிரிக்காவால் ஆப்பிரிக்காவுக்காக புதிய ஒப்பந்தம்’ என்று அழைக்கப் -படும் COVID தொற்றுநோயின் பொருளாதார விளைவுகளை சமாளிக்க ஆப்பிரிக்காவுக்கு உதவும் திட்டத்திற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆப்பிரிக்கா தனது சொந்த தடுப்பூசிகளை தயாரிக்கத் தொடங்குவதற்காக, COVID தடுப்பூசி காப்புரிமையை தள்ளுபடிசெய்யுமாறு பிரெஞ்சு அதிபர் அழைப்புவிடுத்துள்ளார். அறிவுசார் சொத்துக்களின் அடிப்படையிலான அனைத்து தடைகளையும் நீக்குமாறு WHO, WTP மற்றும் மருந்துகள் காப்புரிமை குழு ஆகியவற்றை தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

10. 2020-21ஆம் ஆண்டில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் நல வாழ்வு மையங்களை அமைப்பதில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கர்நாடகா

இ) கேரளா

ஈ) ஒடிஸா

  • 2020-21ஆம் ஆண்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் நலவாழ்வு மையங்களை நிறுவுவதில் கர்நாடகா முதலிடத்தைப் பிடித்தது. 2,263 மையங்களை நிறுவுவதற்கான இலக்கை நடுவணரசு நிர்ணயித்திருந் -தாலும், கிராமப்புறங்களில் விரிவான ஆரம்ப நலவாழ்வுச் சேவையை வழங்குவதற்காக மார்ச்.31ஆம் தேதி வரை மட்டும் 3,300 மையங்களை கர்நாடக மாநில அரசு மேம்படுத்தியுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. CBI இயக்குநராக பொறுப்பேற்றார் சுபோத் குமாற் ஜைஸ்வால்

மூத்த IPS அதிகாரியான சுபோத் குமார் ஜைஸ்வால் புதிய CBI இயக்குநரா -க பொறுப்பேற்றுக்கொண்டார். 1985ஆம் ஆண்டு மகாராஷ்டிர பிரிவு IPS அதிகாரியான ஜைஸ்வால் தற்போது CISF இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். பிரதமர் மோடி தலைமையில் 3 பேர் கொண்ட தேர்வுக்குழு இவரை நியமித்தது. CBI இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ஜைஸ்வால் 2 ஆண்டுகள் அப்பதவி வகிப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2. காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட 11 கோயில்களுக்கு உலக பாரம்பரிய நினைவுச் சின்ன பட்டியலில் இடம்

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் குடவரை சிற்பங்கள், நினைவுச் சின்னங்கள் என 45 கலைச் சின்னங்களை தொல்லியல் துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது. இவற்றில் குடவரை சிற்பங்கள் உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்களாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 17 புராதன கோயில்கள் மற்றும் 31 பாரம்பரிய கலைச் சின்னங்கள் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்நிலையில், ஏற்கெனவே தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுரகேஸ்வரர் கோயில், கைலாசநாதர், வைகுண்ட பெருமாள், முக்தீஸ்வரர், இறவாதீஸ்வரர், பிறவாதீஸ்வரர் கோயில்கள் மற்றும் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் உள்ளிட்ட 11 கோயில்கள், உலகபாரம்பரிய நினைவுச் சின்னங்களாக அங்கீகரிப்பதற்கான யுனெஸ்கோவின் தற்காலிக பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

1. Which country has stated that it would distribute 80 million doses of COVID–19 vaccines to the needy countries?

A) India

B) Russia

C) China

D) USA

  • The US President Joe Biden has stated that the USA would share 80 million doses of Covid–19 vaccines to the needy countries in the following weeks. This announcement has come in the backdrop of lower demand for vaccines in the USA and increased demand globally. The 80 million doses will include 20 million doses manufactured by Pfizer, Moderna or Johnson & Johnson.

2. Which treatment has been dropped from the list of COVID–19 treatments in India?

A) Convalescent Plasma therapy

B) Vaccination

C) Oxygen Therapy

D) Hydrodilatation

  • Convalescent plasma therapy has been dropped from the list of COVID–19 treatments by the Government of India. This decision has been made by the national Covid task force, since the experiments with the treatment have been found to be ineffective in treating COVID infection.

3. What is the “New Big 5 project” which is in news recently?

A) Metro Rail Project

B) Wildlife Photography Project

C) Vaccination Project

D) Satellite Project

  • The “New Big 5 project” is an international initiative involving more than 250 photographers, conservationists and wildlife charities across the globe to photograph five animals. The project aims to frame these five animals across the world instead of poaching it. These animals are elephant, polar bear, gorilla, tiger and lion. Two animals from the Kaziranga National Park have made it into the list. But, the legendary one horn rhino is out of the list.

4. Which basketball legend has been inducted posthumously into the Basketball Hall of Fame?

A) Wilt Chamberlain

B) Tom Heinsohn

C) Kobe Bryant

D) John Havlicek

  • Basketball Legend Kobe Bryant was inducted posthumously into the Basketball Hall of Fame in a ceremony that was delayed around nine months due to the coronavirus pandemic. There was an exhibit, called Kobe: Basketball Life, a video tribute, iconic pictures, vintage jerseys, shoes and basketballs, the playing of Bryant’s Oscar award–winning film, Dear Basketball. In 2020, Bryant, along with his daughter Gianna and seven others, died in a helicopter crash in California.

5. Who is the first India descent player to win the Mixed Martial Artist (MMA) world championship?

A) Arjan Bhullar

B) Giant Zanjeer

C) Guru Raaj

D) Dilsher Shanky

  • Mixed Martial Artist (MMA) Arjan Bhullar made history as he became the first fighter of India descent to win a world title in the sport. Bhullar registered a second–round technical knockout (TKO) win over five–time heavyweight champion Brandon Vera to clinch the title of the Singapore–based One Championship tournament.

6. Ki Rajanarayanan, who recently passed away, was an award–winning writer of which language?

A) Tamil

B) Malayalam

C) Telugu

D) Kannada

  • Veteran Tamil writer and Sahitya Akademi winner Ki Rajanarayanan popularly known as Ki Ra, passed away due to age related illness at the age of 98. Since his first short story was published in 1958, the writer had an expansive literary career. Known as the pioneer of ‘Karisal Literature’, he won the Sakitya Akademi award in 1991 for the novel ‘Gopallapurathu Makkal’. ‘Karisal bhoomi’ is the hot and dry land of southern Tamil Nadu.

7. ……… Ministry, on the recommendation of the ……. Ministry, released Rs 8,923.8 crore to 25 states for providing grant to rural local bodies?

A) Panchayati Raj, Finance

B) Finance, Panchayati Raj

C) Home Affairs, Rural Development

D) Finance, Rural Development

  • The Union Finance Ministry, on the recommendation of the Panchayati Raj Ministry, released Rs 8,923.8 crore to 25 states for providing grant to rural local bodies. The Department of Expenditure, Ministry of Finance released the first installment of the Basic (Untied) Grants. It may be utilized among other things for various prevention and mitigation measures needed to combat the Covid pandemic

8. The Darwin Arch, which was seen in the news recently, is located in which country?

A) Ecuador

B) Spain

C) Italy

D) UK

  • Darwin’s Arch is a rock formation south–east of Darwin Island in the Galápagos archipelago, Ecuador. The structure has recently collapsed due to natural erosion. At present, only two rocky pillars are left at the northernmost island of the Pacific Ocean archipelago. Darwin’s Arch is made of natural stone that would have been part of Darwin Island. This site is considered one of the best places to dive and observe sharks and other aquatic species.

9. Which country hosted the Paris Summit, which agreed on a plan to help Africa to tackle Covid pandemic?

A) UK

B) Australia

C) France

D) Russia

  • French President Emmanuel Macron hosted the Paris summit for African, European and financial leaders. They agreed on a plan to help Africa overcome the economic effects of the coronavirus pandemic, called the ‘New Deal for Africa and by Africa’. French president calls for waiving of COVID vaccine patents so that Africa could begin to produce its own vaccines. The leaders have also urged WHO, WTP and Medicines Patent Pool to remove all constraints in terms of intellectual property.

10. Which state has been ranked first in setting up Health and Wellness Centres under Ayushman Bharat Program in 2020–21?

A) Tamil Nadu

B) Karnataka

C) Kerala

D) Odisha

  • Karnataka has been ranked first in establishing Health and Wellness Centres under Ayushman Bharat Program in 2020–21. While the Centre had set a target of establishing 2,263 centres, the State has upgraded 3,300 centres till March 31, to provide comprehensive primary health care in rural areas.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!