TnpscTnpsc Current Affairs

26th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

26th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 26th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Attend Free Test - Install Winmeen App

Question Bank Books - Buy Hard Copy

Samacheer Lesson Wise Test Series - MCQ Pdf & Online Test

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. Monitor on the World of Work” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. UNESCO

ஆ. உலகப் பொருளாதார மன்றம்

இ. UNICEF

ஈ. பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு 

 • பன்னாட்டு தொழிலாளர் அமைப்பானது (ILO) Monitor on the World of Work” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, பல உலகளாவிய நெருக்கடிகள் உலகளாவிய தொழிலாளர் சந்தை மீட்சியில் சரிவை ஏற்படுத்துகிது; அது நாடுகளுக்குள்ளும் நாடுகளுக்கிடையேயும் ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்து வருகிறது. 2022ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் உலகளவில் வேலைசெய்யும் மணிநேரங்களின் எண்ணிக்கை, நெருக்கடிக்கு முந்தைய சதவீதத்திலிருந்து 3.8 சதவீதமாக குறைந்துள்ளது.

2. வங்கிகள், NBFC-கள் மற்றும் பிற ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களில் வாடிக்கையாளர் சேவையின் தரத்தை மதிப்பிடுவதற்காக உருவாக்கப்பட்ட RBI குழுவின் தலைவர் யார்?

அ. M D பத்ரா

ஆ. B P கனுங்கோ 

இ. M K ஜெயின்

ஈ. உர்ஜித் படேல்

 • இந்திய ரிசர்வ் வங்கியானது வங்கிகள், NBFC-கள் மற்றும் அதன்மூலம் கட்டுப்படுத்தப்படும் பிற நிறுவனங்களில் வாடிக்கையாளர் சேவையின் செயல்திறன், போதுமை மற்றும் தரம் ஆகியவற்றை மதிப்பீடு செய்ய குழுவொன்றை அமைத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் BP கனுங்கோ தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு தனது முதல் கூட்டம் நடைபெற்ற நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

3. ‘MyGov ஹெல்ப் டெஸ்க்’ ஆனது கீழ்காணும் எந்தச் சமூக தளத்தில் குடிமக்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றப்பட்டுள்ளது?

அ. கீச்சகம் (Twitter)

ஆ. புலனம் (WhatsApp) 

இ. தந்தி (Telegram)

ஈ. முகநூல் (Facebook)

 • கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எண்ம வடிவில் சேகரித்து வைப்பதற்கான மத்திய, மாநில அரசுகளின் சேவைகளை இனி வாட்ஸ்ஆப் வாயிலாகப் பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு முக்கிய ஆவணங்களை எண்மவடிவில் சேகரித்து வைப்பதற்கான வசதிகளை ‘டிஜிலாக்கர்’ செயலி வழங்கி வருகிறது. ‘மைகௌ ஹெல்ப்டெஸ்க்’ வாயிலாக அச்செயலி வழங்கும் சேவைகளை இனி வாட்ஸ்ஆப் மூலமாகவே மக்கள் பெற முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

4. ‘உலகளாவிய ஒத்துழைப்பு கிராமம்’ என்பது எந்த அமைப்பின் புதிய முன்னெடுப்பாகும்?

அ. ஆசிய வளர்ச்சி வங்கி

ஆ. உலகப் பொருளாதார மன்றம் 

Attend Free Test - Install Winmeen App

Question Bank Books - Buy Hard Copy

Samacheer Lesson Wise Test Series - MCQ Pdf & Online Test

இ. பன்னாட்டுச் செலவாணி நிதியம்

ஈ. NITI ஆயோக்

 • உலகப்பொருளாதார மன்றம் அதன் தாவோஸ் கூட்டத்தில் பொது-தனியார் ஒத்துழைப்பின் மெய்நிகர் எதிர்காலமாக ‘உலகளாவிய ஒத்துழைப்பு கிராமத்தை’ உருவாக்குவதாக அறிவித்துள்ளது. அக்செஞ்சர் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து இம்முன்னெடுப்பு தொடங்கப்படுகிறது. உலகப்பொருளாதார மன்றமானது மெடாவெர்சை வரையறுத்து உருவாக்குவதற்கான முயற்சியைத்தொடங்கியுள்ளது.

5. ‘ஸ்வச் சர்வேக்ஷன் – எஸ்எஸ்-2023’இன் கருப்பொருள் என்ன?

அ. ஜன் பாகிதாரி

ஆ. ஜன் அந்தோலன்

இ. வீணிலிருந்து செல்வம் (Waste to Wealth) 

ஈ. சாம்பல் நீர் மேலாண்மை

 • தூய்மை இந்தியா இயக்கம் – நகர்ப்புறம் 2.0-இன்கீழ் ‘ஸ்வச் சர்வேக்ஷன் – எஸ்எஸ்-2023’இன் 8ஆவது பதிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஸ்வச் சர்வேக்ஷன்- 2023 ஆனது ‘Waste to Wealth’ என்ற கருப்பொருளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்று Rகள் குறைத்தல் (Reduce), மறுசுழற்சி செய்தல் (Recycle) மற்றும் மறுபயன்பாடு (Reuse) என்ற கொள்கைக்கும் இந்த ஆய்வு முன்னுரிமை அளிக்கும்.

6. 2022-இல் BRICS கலாச்சார அமைச்சர்கள் கூட்டத்தை நடத்திய நாடு எது?

அ. இந்தியா

ஆ. ரஷ்யா

இ. சீனா 

ஈ. தென்னாப்பிரிக்கா

 • 7ஆவது BRICS கலாச்சார அமைச்சர்கள் கூட்டத்தில் கலாச்சாரம் மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி பங்கேற்றார். அனைத்து BRICS உறுப்புநாடுகளின் பங்கேற்புடன் காணொளிக்காட்சிமூலம் சீன மக்கள் குடியரசால் இது நடத்தப்பட்டது. “Establishing a Cultural Partnership Featuring Inclusiveness and Mutual Learning among BRICS” என்ற கருப்பொருளின்கீழ் இது நடைபெற்றது. கலாச்சார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் அமைச்சர்கள் 2022-2026 BRICS செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டனர்.

7. ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கானது (ABHA) எத்தனை இலக்கங்களைக் கொண்டுள்ளது?

அ. 10

ஆ. 12

இ. 14 

ஈ. 16

 • தேசிய சுகாதார ஆணையம் அதன் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தின்கீழ் புதுப்பிக்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் சுகாதாரஅ கணக்கிற்கான (ABHA) திறன்பேசி செயலியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. ABHA செயலியின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பில் புதிய பயனர் இடைமுகம் இடம்பெற்றுள்ளது. 14 இலக்க ABHA எண்ணுடன் இணைக்கக்கூடிய ஒரு பயனர்பெயரான ABHA முகவரியை உருவாக்கவும் இச்செயலி ஒருவருக்கு உதவுகிறது. இந்தப்புதிய செயலியில், தனிநபர்கள் தங்கள் உடல்நலப்பதிவுகளை எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் அணுகலாம்.

8. டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், எந்த நிறுவனத்தின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்?

அ. ILO

ஆ. WHO 

இ. UNICEF ஈ. உலக வங்கி

 • உலக சுகாதார அமைப்பின் (WHO) உறுப்புநாடுகள் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸை 2ஆவது ஐந்தாண்டு காலத்திற்கு அவ்வமைப்பின் பொது இயக்குநராக மீண்டும் தேர்ந்தெடுத்தது. ஜெனிவாவில் நடந்த 75ஆவது உலக சுகாதார சபையின்போது அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். உலக சுகாதார சபையின் விதிகள் மற்றும் நடைமுறைகளின்படி, ஒரு பொது இயக்குநரை ஒருமுறை மட்டும் மீண்டும் நியமிக்கலாம்.

9. தேசிய சாதனை கணக்கெடுப்பு (NAS) 2021-இன்படி, இந்தியாவில் உள்ள பள்ளி மாணவர்களில் எத்தனை சதவீதம் பேர் பள்ளிகளுக்கு கால்நடையாகப் பயணஞ்செய்கிறார்கள்?

அ. 45%

ஆ. 48% 

இ. 50%

ஈ. 52%

 • NAS-2021இன்படி, நாடு முழுவதுமுள்ள மாணவர்களில் குறைந்தது 48% பேர் பள்ளிக்கு நடந்து செல்கிறார்கள்; அவர்களுள் 9 சதவீதம் பேர் பள்ளிப் போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்தக் கணக்கெடுப்பின்படி, குறைந்தபட்சம் 25% பள்ளிகள், மாணவர்களின் கற்றலில் பெற்றோரின் ஆதரவின்மையை எதிர்கொள்கின்றன.

10. ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோனி நார்மன் அல்பானீஸ் சார்ந்த அரசியல் கட்சி எது?

அ. ஆஸ்திரேலிய தேசிய கட்சி

ஆ. ஆஸ்திரேலிய லிபரல் கட்சி

இ. ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சி 

ஈ. ஆஸ்திரேலிய கிரீன்ஸ்

 • 9 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்தபிறகு, அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. நாட்டில் 74.6% வாக்குகள் பதிவாகியுள்ளன; 151 உறுப்பினர்களைக்கொண்ட பிரதிநிதிகள் சபையில் அந்தோனி அல்பானீஸ் கட்சி 75 இடங்களை வென்றது; அதே சமயம் பழமைவாத லிபரல் தேசிய கூட்டணி 57 இடங்களில் வெற்றிபெற்றது. அந்தோனி நார்மன் அல்பானீஸ் ஓர் ஆஸ்திரேலிய அரசியல்வாதி ஆவார். இவர், ஆஸ்திரேலியாவின் 31ஆவது மற்றும் தற்போதைய பிரதமராவார். அவர் 2019 முதல் ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சியின் தலைவராகவும், 1996ஆம் ஆண்டு முதல் கிரெண்ட்லரின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துவருகிறார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. `31,500 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள்: பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்

உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் `31,500 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி, சென்னையில் தொடங்கி வைத்தார்.

பிரதமர் தொடக்கி வைத்த நிறைவடைந்த திட்டங்கள்:

`500 கோடியில் மதுரை-தேனி இடையே அகல இரயில்பாதை, `590 கோடியில் சென்னை தாம்பரம்-செங்கல்பட்டு இடையேயான 3ஆவது இரயில்பாதை, `116 கோடியில் பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித்திட்டத்தின்கீழ், குறைந்த செலவில் சென்னையில் கட்டப்பட்ட 1,152 வீடுகளைத் தொடக்கிவைக்கப்பட்டுள்ளன.

எண்ணூர்-செங்கல்பட்டு பிரிவு மற்றும் திருவள்ளூர்-பெங்களூரு இடையே இயற்கை எரிவாயு குழாய் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களையும் பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

அடிக்கல் நாட்டுதல்:

`14,870 கோடியில் 262 கிலோமீட்டர் தூர பெங்களூரு-சென்னை விரைவுச்சாலை திட்டம் கர்நாடகம்-ஆந்திரம்-தமிழ்நாடு வழியாகச்செல்கிறது.

சென்னை துறைமுகம் – மதுரவாயிலையும் இணைக்கும் 21 கிலோமீட்டர் தூர ஈரடுக்கு, நான்குவழி உயர்நிலைச் சாலை, `5,850 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது.

நெரலூரு-தருமபுரி பிரிவில் 94 கிமீ தொலைவுக்கு நான்கு வழிச்சாலை, மீன்சுருட்டி-சிதம்பரம் பிரிவில் 31 கிமீ இரு வழிச்சாலை ஆகியவை `3,870 கோடி மற்றும் `720 கோடியில் அமைக்கப்படவுள்ளது. இந்தத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

சென்னை எழும்பூர், இராமேசுவரம், மதுரை, காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஐந்து இரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. `1,800 கோடியில் இரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும். சென்னையில் `1,400 கோடியில் பன்மாதிரி சரக்கு போக்குவரத்துப் பூங்கா உள்ளிட்ட `28,500 கோடி செலவிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

2. இந்திய வான்படையின் முதல் பெண் போர்விமானி அபிலாஷா பாரக்

இந்திய வான்படையின் முதல் பெண் போர்விமானியாக அபிலாஷா பாரக் நியமிக்கப்பட்டுள்ளார். நாசிக்கில் உள்ள வான்படை பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 36 வான்படை விமானிகளுடன் அபிலாஷா பாரக்கிற்கு விமானி பட்டம் வழங்கப்பட்டது. இதன்மூலம் இந்தியாவின் போர்விமானத்தின் பெண் விமானி என்ற பெருமையை அபிலாஷா பாரக் பெற்றுள்ளார். ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த அபிலாஷா பாரக், கடந்த 2018, செப்டம்பர் மாதம் வான்படையில் சேர்ந்தார். இவர், ஓய்வுற்ற வான்படை அதிகாரி கர்னல் எஸ் ஓம் சிங்கின் மகள் ஆவார்.

3. ஓய்வூதியதாரருக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம்: 4 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஓய்வூதியதாரருக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை நான்கு ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக நிதித்துறை வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்:

அரசுப்பணிகளிலிருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கான புதிய காப்பீட்டுத்திட்டம் வரும் ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்தது. இந்தத் திட்டத்தை மேலும் நான்கு ஆண்டுகளுக்கு அதாவது 2026ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது. இதற்கான தகுந்த பொதுத்துறை நிறுவனமானது ஒப்பந்தப்புள்ளிகள் கோரல் அடிப்படையில் இறுதி செய்யப்படும்.

நான்கு ஆண்டுகளில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு நிதியுதவியின் அளவு `4 லட்சத்தில் இருந்து `5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. புற்றுநோய், கணையம் உள்ளிட்ட இதர உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வோருக்கு மருத்துவ உதவித் தொகையின் அளவு `10 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது.

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு `10 லட்சம் வரையில் மருத்துவ உதவித் தொகை கிடைக்கும். ஓய்வூதியதாரர்களைச் சார்ந்து இருக்கும் நபர்களும் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்குள் வருவர். காப்பீட்டு நிறுவனம் இறுதி செய்யும் மாதாந்திரத் தொகையானது ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களிடம் இருந்து பெறப்படும்.

1. Which organisation released a report “Monitor on the World of Work”?

A. UNESCO

B. World Economic Forum

C. UNICEF

D. International Labour Organisation 

 • International Labour Organization (ILO) released the 9th edition of the ILO Monitor on the World of Work. As per the report, multiple global crises are causing deterioration in the global labour market recovery, with increasing inequalities within and between countries.
 • The number of hours worked globally dropped in the first quarter of 2022, to 3.8 percent below the pre–crisis benchmark.

2. Who is the head of the RBI committee formed to evaluate the quality of customer service in banks, NBFCs, and other regulated entities?

A. M D Patra

B. B P Kanungo 

C. M K Jain

D. Urjit Patel

 • The Reserve Bank of India (RBI) has set up a committee to evaluate the efficacy, adequacy and quality of customer service in banks, NBFCs, and other entities regulated by it. The six–member committee is headed by former RBI deputy governor B P Kanungo. The committee has been asked to submit a report within three months from the date of its first meeting.

3. MyGov Helpdesk has been made accessible to citizens in which social platform?

A. Twitter

B. WhatsApp 

C. Telegram

D. Facebook

 • It has been announced that the services of the Central and State Governments for the archiving of important documents including Academic certificate, Aadhar card, driving license can now be accessed through WhatsApp. The Digilocker application provides the facility to store various important documents in digital format. The central government has announced that people will now be able to access the services provided by the application through, ‘MyGov HelpDesk’ through WhatsApp.

4. ‘Global Collaboration Village’ is the new initiative of which organisation?

A. Asian Development Bank

B. World Economic Forum 

C. International Monetary Fund

D. NITI Aayog

 • The World Economic Forum (WEF), during its Davos meeting has announced that it is building a “Global Collaboration Village” as the virtual future of public–private cooperation. The initiative is being launched in collaboration with Accenture and Microsoft. WEF launched the initiative for Defining and Building the Metaverse.

5. What is the theme of the ‘Swachh Survekshan – SS–2023’?

A. Jan Bhagidhari

B. Jan Andolan

C. Waste to Wealth 

D. Grey Water Management

 • Union Government has launched the 8th Edition of Swachh Survekshan – SS–2023 under Swachh Bharat Mission Urban 2.0. Swachh Survekshan– 2023 has been designed with the theme of ‘Waste to Wealth’ as its driving philosophy. The survey would also give priority to the principle of 3 Rs– Reduce, Recycle and Reuse.

6. Which country hosted the BRICS Culture Ministers’ Meeting in 2022?

A. India

B. Russia

C. China 

D. South Africa

 • Meenakshi Lekhi, Minister of State for Culture and External Affairs participated in the 7th BRICS Culture Ministers’ Meeting. It was hosted by the People’s Republic of China through video conference with participation from all BRICS Member Nations.
 • Discussion was held under the theme “Establishing a Cultural Partnership Featuring Inclusiveness and Mutual Learning among BRICS”. The Ministers adopted the BRICS Action Plan 2022–2026 to strengthen the cultural cooperation.

7. How many digits are in the Ayushman Bharat Health Account (ABHA) number?

A. 10

B. 12

C. 14

D. 16

 • The National Health Authority (NHA) under its Ayushman Bharat Digital Mission (ABDM) scheme has announced the launch of a revamped Ayushman Bharat Health Account (ABHA) mobile application. The updated version of the ABHA app has a new User Interface (UI).
 • The application also enables an individual to create an ABHA address, a username that can be linked with the 14–digit ABHA number. In the new application, individuals can access their health records anytime and anywhere.

8. Tedros Adhanom Ghebreyesus has been re–elected as the head of which institution?

A. ILO

B. WHO 

C. UNICEF

D. World Bank

 • The Member States of the World Health Organization (WHO) re–elected Tedros Adhanom Ghebreyesus for a second five–year term as Director–General of the agency. His re–election was confirmed during the 75th World Health Assembly in Geneva. A Director–General can be re–appointed once, in accordance with World Health Assembly rules and procedures.

9. According to the National Achievement Survey (NAS) 2021, what percentage of school students in India commute to and from schools on foot?

A. 45%

B. 48% 

C. 50%

D. 52%

 • According to NAS–2021, at least 48 percent of students across the country walk to school, while nine percent of them use school transportation. According to the survey, at least 25 percent of schools face a lack of parental support in students’ learning.

10. Australia’s new Prime Minister Anthony Norman Albanese belongs to which political party?

A. National Party of Australia

B. Liberal Party of Australia

C. Australian Labor Party 

D. Australian Greens

 • After nine years in opposition, the Australian Labor Party, led by Anthony Albanese, is back in power. 74.6% of the votes were cast in the country, with Anthony Albanese’s party winning 75 seats in the 151–member House of Representatives; While the conservative Liberal National Coalition won 57 seats. Anthony Norman Albanese is an Australian politician who is the 31st and current Prime Minister of Australia. He has been the leader of the Australian Labor Party since 2019, and the Member of Parliament for Grendler since 1996.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button