TnpscTnpsc Current Affairs

26th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

26th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 26th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs


  1. சமீப செய்திகளில் இடம்பெற்ற Allium negianum கண்டுபிடிக்கப்பட்ட இந்திய மாநிலம்/UT எது?

அ) அஸ்ஸாம்

ஆ) உத்தரகாண்ட் 

இ) அருணாச்சல பிரதேசம்

ஈ) கோவா

  • 2019ஆம் ஆண்டில் உத்தரகாண்ட் மாநிலத்தில் Allium negianum என்ற தாவரமானது கண்டுபிடிக்கப்பட்டதாக, PhytoKeys இதழில் வெளியிடப்பட் -டது. இது, அல்லியத்தின் புதிய இனமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • அல்லியம் என்பது உலகளவில் வெங்காயம் மற்றும் பூண்டுபோன்ற 1,100 இனங்களை உள்ளடக்கிய ஓர் இனமாகும். இது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சாமோலி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கடல் மட்டத்திலிருந்து 3,000 முதல் 4,800 மீ உயரத்தில் வளர்கிறது. Allium negianum என்ற அறிவியல் பெயர், ஆய்வாளர் மற்றும் அல்லியம் சேகரிப்பாளரான மறைந்த டாக்டர் குல்தீப் சிங் நேகியைப் போற்றுகிறது.

2. 2021 அக்டோபர் நிலவரப்படி, T20 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டை வீழ்த்தியவர் யார்?

அ) R அஸ்வின்

ஆ) ஜஸ்பிரித் பும்ரா

இ) ஷகிப் அல் ஹசன் 

ஈ) டிம் சௌத்தி

  • வங்காளதேச வீரர் ஷகிப் அல் ஹசன் சர்வதேச T20 கிரிக்கெட்டில் லசித் மலிங்காவின் விக்கெட்டுகளை முறியடித்ததன்மூலம் அதிக விக்கெட்டுக -ளை (107ஆவது) வீழ்த்தினார். ஷாகிப், 89 T20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 108 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவ்வடிவத்தில், 100 விக்கெட்டுகள் மற்றும் 1000+ ரன்களை எடுத்த ஒரே கிரிக்கெட் வீரர். 99 விக்கெட்டுகளுடன் நியூசிலாந்தின் டிம் சௌத்தி 3ஆவது இடத்திலுள்ளார்.

3. சமீப செய்திகளில் இடம்பெற்ற நெச்சிபு சுரங்கப்பாதை அமைந்து உள்ள மாநிலம் எது?

அ) அருணாச்சல பிரதேசம் 

ஆ) உத்தரகாண்ட்

இ) சிக்கிம்

ஈ) பீகார்

  • அருணாச்சல பிரதேசத்தில் உள்ள நெச்சிபு கணவாய் அருகே 500 மீ நீள சுரங்கவழியை எல்லைப்புறச்சாலைகள் அமைப்பு அமைத்து வருகிறது. இது சீன எல்லைக்கருகே, முன்னோக்கி தளத்தை நோக்கிச்செல்லும் வாகனங்களின் பயணநேரத்தைக் குறைப்பதை நோக்கமாகக்கொண் -டுள்ளது. நெச்சிபு சுரங்கப்பாதை 5,600 அடி உயரத்தில் BRO’வின் வர்டக் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வருகிறது.

4. ஆயுர்வேத மூலிகைகளுக்கான பிரத்தியேக வனப்பகுதியான ‘ஆயுஷ் வனம்’ திறக்கப்பட்டுள்ள மாநிலம்/UT எது?

அ) இராஜஸ்தான்

ஆ) குஜராத் 

இ) பஞ்சாப்

ஈ) சண்டிகர்

  • மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சரான சர்பானந்தா சோனோவால், குஜராத்தின் காந்திதாமில் ஆயுர்வேத மூலிகைகளுக்கான பிரத்தியேக வனமான ‘ஆயுஷ் வனத்தைத்’ திறந்துவைத்தார்.
  • தீனதயாள் துறைமுக அறக்கட்டளை வழங்கிய 30 ஏக்கர் நிலத்தில் ‘ஆயுஷ் வனம்’ அமைக்கப்பட்டது. நகர்ப்புறத்தில் பசுமையை மேம்படுத்த -வும், கட்ச் பகுதியில் மரங்களின் அடர்த்தியை அதிகரிக்கவும் மரக்கன்று நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

5. சமீப செய்திகளில் இடம்பெற்ற தல்பியோட் இடுகாடு அமைந்து உள்ள நாடு எது?

அ) ரஷ்யா

ஆ) இஸ்ரேல் 

இ) இத்தாலி

ஈ) அமெரிக்கா

  • வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கர் தனது 5 நாள் இஸ்ரேல் பயணத்தி -ன்போது, தல்பியோட் இடுகாட்டுக்குச் சென்றதை அடுத்து இவ்விடம் சமீப செய்திகளில் இடம்பெற்றது. ஜெருசலேமில் உள்ள தல்பியோட்டில் அமைந்துள்ள இது, முதல் உலகப்போரின்போது தங்கள் இன்னுயிரை தியாகஞ்செய்த இந்தியவீரர்களின் இடுகாடு ஆகும். இஸ்ரேல் முழுவதும் ஜெருசலேம், ராம்லே மற்றும் ஹைபாவில் உள்ள இடுகாடுகளில் சுமார் 900 இந்திய வீரர்கள் புதைக்கப்பட்டுள்ளனர். இந்திய இராணுவம், ஒவ்வோர் ஆண்டும் செப்.23’ஐ ஹைபா நாளாக நினைவுகூருகிறது.

6. ICC எலைட் பேனல் மேட்ச் ரெப்ரியுமான எந்த இந்திய கிரிக்கெட் வீரர், மேரிலெபோன் கிரிக்கெட் கிளப்பின் வாழ்நாள் உறுப்பினர் தகுதியைப் பெற்றுள்ளார்?

அ) ஹர்பஜன் சிங்

ஆ) ஜவகல் ஸ்ரீநாத் 

இ) ராகுல் டிராவிட்

ஈ) VVS லட்சுமணன்

  • இந்தியாவின் ஹர்பஜன் சிங் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் மெரிலிபோன் கிரிக்கெட் கிளப்பின் வாழ்நாள் உறுப்பினர் தகுதியைப் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 16 கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தத் தகுதி கொடுக்கப்பட்டது. ஹர்பஜன், டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் 3ஆவது அதிக விக்கெட்டுகள் (417 விக்கெட்டுகள்) வீழ்த்திய வீரராவார். மேலும், 700’க்கும் மேற்பட்ட சர்வதேச விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
  • ஸ்ரீநாத், தற்போது ICC எலைட் பேனல் போட்டி நடுவராக உள்ளார். 315 ஒருநாள் விக்கெட்டுகளையும், 236 டெஸ்ட் விக்கெட்டுகளையும் வீழ்த்தி -ய வேகப்பந்து வீச்சாளராவார்.

7. ‘ஆதார் ஹேக்கத்தான் – 2021’ஐ நடத்தவுள்ள அமைப்பு எது?

அ) NITI Aayog

ஆ) NRDC

இ) UIDAI 

ஈ) RBI

  • இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது (UIDAI) 2021 ‘ஆதார் ஹேக்கத்தானை’ நடத்தவுள்ளது. மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஆதார் ஹேக்கத்தான்-2021 2 தலைப்புகளை மையமாகக் கொண்டது. “பதிவு மற்றும் புதுப்பித்தலை” மையமாகக்கொண்டு முதல் கருப்பொருள் அமைந்துள்ளது.
  • முகவரியைப் புதுப்பிக்கும் போது குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் சில நிஜ வாழ்க்கையின் சவால்களை இது உள்ளடக்கியதாக இருக்கும். ஹேக்கத்தானின் 2ஆவது கருப்பொருள் UIDAI வழங்கும் “அடையாளம் மற்றும் அங்கீகாரம்” தீர்வை மையமாகக் கொண்டுள்ளது. இந்தக்கருப் பொருளின்கீழ், ஆதார் எண் அல்லது அந்த தனிநபரின் இதர தனிப்பட்ட தகவலையும் பகிராமல் அடையாளத்தை நிரூபிக்க புதுமையான தீர்வுகளை UIDAI கோருகிறது.

8. ‘தேசிய சாலை பாதுகாப்பு வாரியத்தின்’ தலைமையகம் உள்ள இந்திய நகரம் எது?

அ) மும்பை

ஆ) புது தில்லி 

இ) ஔரங்காபாத்

ஈ) கொல்கத்தா

  • சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகமானது தேசிய சாலைப் பாதுகாப்பு வாரியத்தின் கட்டமைப்பை அறிவித்துள்ளது. சாலைப் பாதுகாப்பு, புதுமைகள் மற்றும் புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வது, போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகனங்களை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றுக்கு வாரியம் பொறுப்பாகும்.
  • இவ்வாரியத்தின் தலைமை அலுவலகம் தேசிய தலைநகர பகுதியில் இருக்கவேண்டும். இந்தியாவில் மற்ற இடங்களில் அலுவலகங்களை வாரியம் நிறுவலாம். மத்திய அரசால் நியமிக்கப்பட வேண்டிய தலைவர் மற்றும் மூவருக்கு குறையாமல் எழுவருக்கு மிகாமல் உறுப்பினர்கள் வாரியத்தில் இருக்கவேண்டும்.

9. 2021ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு, மூலக் கூறுகளை உருவாக்குவதற்கான பின்வரும் எந்தப் புதிய வழியை உருவாக்கியதற்காக வழங்கப்பட்டுள்ளது?

அ) சமச்சீரற்ற ஆர்கனோகாடலிசிஸ் 

ஆ) மாற்றப்பட்ட DNA’க்கள்

இ) மாற்றப்பட்ட mRNA’க்கள்

ஈ) இவற்றில் ஏதுமில்லை

  • 2021ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு, பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் டபிள்யூசி மேக்மில்லனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மூலக்கூறுகளை உருவாக்குதற்கான “சமச்சீரற்ற ஆர்கனோகாடலிசிஸ்” எனப்படும் புதிய வழியை உருவாக்கியதற்காக இப்பரிசு வழங்கப்பட்டு உள்ளது. நோபல் பரிசுக்குழுவின்படி, லிஸ்ட் & மேக்மில்லன் ஆகியோர் சுயாதீனமாக ஒரு புதிய வினையூக்க வழியை உருவாக்கினர்.

10. 2021 – உலக பருத்தி நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ) There’s more to cotton than you think 

ஆ) Sustainable Cotton

இ) e-commerce in Cotton

ஈ) White Gold: Cotton

  • பன்னாட்டு பருத்தி ஆலோசனைக் குழு (ICAC) மற்றும் உலக வர்த்தக அமைப்பு (WTO) ஆகியவை இணைந்து உலக பருத்தி நாளை நிறுவின. இது, கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் அக்.7 அன்று கொண்டாடப்படுகிறது. “There’s more to cotton than you think” என்பத் நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும்.
  • பருத்தியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பரப்புவது இந்த நாளின் நோக்கமாகும். உலகில் உள்ள பருத்திப் பொருளாதாரங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் இது வலியுறுத்துகிறது. 2019ஆம் ஆண்டில், ஜெனிவாவில், முதல் உலக பருத்தி நாள் கொண்டாடப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 5 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி 334% அதிகரிப்பு

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதி 334% அதிகரித்துள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு சார்பில் குஜராத் தலைநகர் காந்திநகரில் அடுத்த ஆண்டு மார்ச் 11-13ஆம் தேதி வரை பாதுகாப்பு கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சியை பிரபலப்படுத்தும் நோக்கில் பல நாடுகளுக்கான தூதர்களை அமைச்சர் ராஜ்நாத்சிங் சந்தித்துப்பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதி 334% அதிகரித்துள்ளது. 75’க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு போர்த் தளவாடங்களை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. அதிக தரம், போட்டியிடும் திறன் ஆகியவற்றின் காரணமாக இந்திய போர்த் தளவாடங்கள் அதிக அளவில் ஏற்றுமதியாகின்றன.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாதுகாப்பு கண்காட்சி, போர்த் தளவாடங்கள் உற்பத்தியில் காணப்படும் நவீன தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தும். பாதுகாப்பு ஆராய்ச்சி-மேம்பாட்டில் இந்தியா படைத்துள்ள சாதனைகளையும் எதிர்கால வாய்ப்புகளையும் வெளிப்படுத்தும் வகையில் அந்தக் கண்காட்சி இருக்கும்.

குறுகிய காலகட்டத்தில் பாதுகாப்புத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன தொழில்நுட்பங்கள், ஒருங்கிணைந்த கொள்கைகள் ஆகியவற்றையும் கண்காட்சி எடுத்துரைக்கும். பாதுகாப்பு கண்காட்சியில் பங்கேற்கும் நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவு மேம்படும் என்பதால், கண்காட்சியில் பங்கேற்க நாடுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

பாதுகாப்பு உற்பத்திசார்ந்த விவகாரங்களில் மற்ற நாடுகளுக்குப் போதிய ஒத்துழைப்பை நல்கி ஒருங்கிணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளது. கலாசாரம், கலை, உணவுப் பழக்கவழக்கம் உள்ளிட்டவற்றில் குஜராத் சிறந்து விளங்கி வருகிறது. அங்கு நடைபெறவுள்ள பாதுகாப்பு கண்காட்சியில் பங்கேற்கும் நாடுகளுக்கு சிறந்த வாய்ப்புகள் உருவாகும்.

சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டை இந்தியா கொண்டாடி வரும் சூழலில், பாதுகாப்புக் கண்காட்சியை சிறப்புடன் நடத்துவதற்கான நடவடிக்கை
-களை அனைத்துநாடுகளுடனும் இணைந்து இந்தியா மேற்கொள்ளும் என்றார் அவர்.

2. பசுமைஇல்ல வாயுக்கள்வெளியேற்றம் புதிய உச்சம்: ஐ.நா. அமைப்பு அறிக்கை

வெப்பமயமாதல் உள்ளிட்ட பருவநிலை மாற்றத்துக்கு முக்கியக் காரணியாக விளங்கும் பசுமைஇல்ல வாயுக்கள் வெளியேற்றம் கடந்த ஆண்டு புதிய உச்சத்தைத் தொட்டதாக ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக உலக வானிலை அமைப்பின் ஆண்டறிக்கையை வெளியிட்டு அதன் பொதுச்செயலர் பெட்டரி டாலஸ் கூறியதாவது:

முக்கியமான பசுமை இல்ல வாயுவான கார்பன் டைஆக்ஸைடின் (கரிய -மிலவாயு) வெளியேற்றமானது உலக சராசரி அளவானது 10 இலட்சத்து -க்கு 413.2 பாகங்கள் என்ற புதிய உச்சத்தை 2020’இல் எட்டியது. பொதுமுடக்கம் உள்ளிட்ட கரோனா கட்டுப்பாடுகளால் புதைபடிவ எரிபொருள்களிலிருந்து வெளியாகும் கார்பன் டைஆக்ஸைடின் வெளி
-யேற்றம் குறைந்தபோதும், இந்த உச்சமானது கடந்த 10 ஆண்டுகளில் அதிகமாகும். இதன்மூலம் வெப்பமயமாதல் அதிகரிக்கும். அமேசான் மழைக்காடுகள் அழிப்பும் இதற்கு ஒரு முக்கியமான காரணம் ஆகும்.

இதற்கு முன்னர் 2015’இல் 10 இலட்சத்துக்கு 400 பாகங்கள் என்ற அளவை எட்டியிருந்தது. இது, நமது அன்றாட வாழ்க்கை, நமது குழந்தை -களின் எதிர்காலத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள் -ளது. மனிதர்களால் வெளியேற்றப்படும் கரியமிலவாயுவானது எண்ணெய், வாயு போன்ற புதைபடிவ எரிபொருள்களை எரிப்பதால் அல்லது சிமென்ட் உற்பத்தி செய்வதிலிருந்து ஏற்படுகிறது. பருவ நிலையில் மூன்றில் இரு பங்கு மாற்றத்தை இது ஏற்படுகிறது.

கரோனா தொற்றால் கடந்த ஆண்டு தொழில்கள் முடங்கி, பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டு தற்காலிகமாக கரியமிலவாயு வெளியேற்றம் குறைந்திருந்தாலும், பசுமைஇல்ல வாயுக்கள் வெளியேற்றத்தில் அது வெளிப்படையான எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தில் ஐ.நா.வின் பருவநிலை மாற்ற மாநாடு அக்.31-ஆம் தேதி தொடங்கி நவம்பர்.12 வரை நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

1. Allium negianum, which was seen in the news, as discovered in which Indian state/UT?

A) Assam

B) Uttarakhand 

C) Arunachal Pradesh

D) Goa

  • Allium negianum, a plant discovered in Uttarakhand in the year 2019 has been recently confirmed as a new species of Allium, in journal PhytoKeys. Allium is the genus that includes many foods such as onion and garlic, among 1,100 species globally. It was discovered in the Chamoli district of Uttarakhand. It grows at 3,000 to 4,800 m above sea level. The scientific name Allium negianum honours late Dr Kuldeep Singh Negi, an explorer and Allium collector.

2. As of October 2021, who is the highest wicket–taker in T20 International cricket?

A) R Ashwin

B) Jasprit Bumrah

C) Shakib Al Hasan 

D) Tim Southee

  • Bangladesh all–rounder Shakib Al Hasan became the highest wicket–taker in T20 International cricket after he surpassed Lasith Malinga’s tally of 107 wickets. Shakib has 108 wickets from 89 T20 International games. He is also the only cricketer to have a double of 100 wickets and 1000 plus runs in this format. The third cricketer in the list is New Zealand’s Tim Southee, with 99 wickets.

3. Nechiphu tunnel, which was seen in the news recently, is located in which state?

A) Arunachal Pradesh 

B) Uttarakhand

C) Sikkim

D) Bihar

  • The Border Roads Organization (BRO) is constructing a 500–metre tunnel near Nechiphu pass in Arunachal Pradesh. It aims to cut down the travel time for vehicles going towards the forward base near China border. The Nechiphu tunnel is being constructed at an altitude of 5,600 feet under Project Vartak of BRO.

4. Ayush Van, a dedicated forest for Ayurvedic plants, has been inaugurated in which state/UT?

A) Rajasthan

B) Gujarat 

C) Punjab

D) Chandigarh

  • Union Minister of Ports, Shipping and Waterways and AYUSH Sarbananda Sonowal inaugurated Ayush Van, a dedicated forest for Ayurvedic plants, at Gandhidham, Gujarat. The Ayush Van was set up in 30 acres of land allotted by the Deendayal Port Trust (DPT). Tree plantation is being done to improve greenery in urban area and increase density of tree cover in the Kutch region.

5. Talpiot Cemetery, which was seen in the news recently, is located in which country?

A) Russia

B) Israel 

C) Italy

D) USA

  • Talpiot Cemetery is seen in the news recently, as External Affairs Minister S Jaishankar visited the place as he began his five–day visit to Israel. It is the cemetery for Indian soldiers who laid down their lives in the region during the World War I, located in Talpiot, Jerusalem. About 900 Indian soldiers are buried in cemeteries across Israel in Jerusalem, Ramle and Haifa. The Indian Army commemorates September 23 every year as Haifa Day.

6. Which Indian cricketer, also an ICC Elite Panel Match Referee, has been awarded life membership of the Marylebone Cricket Club (MCC)?

A) Harbhajan Singh

B) Javagal Srinath 

C) Rahul Dravid

D) VVS Lakshman

  • India’s Harbhajan Singh and Javagal Srinath have been awarded life membership of the Marylebone Cricket Club (MCC). They have joined sixteen other cricketers who were given the honour this year. Harbhajan is India’s third–highest wicket–taker in Tests (417 wickets) and more than 700 plus international wickets. Srinath is an ICC Elite Panel Match Referee at present. He is a fast bowler with 315 ODI wickets and 236 Test wickets.

7. Which institution is set to play host to the “Aadhaar Hackathon 2021”?

A) NITI Aayog

B) NRDC

C) UIDAI 

D) RBI

  • Unique Identification Authority of India (UIDAI) is set to host a Hackathon titled “Aadhaar Hackathon 2021”. According to a statement issued by the Ministry of Electronics and IT on Monday, the Hackathon is themed around two topics. The first theme is “Enrolment and Update”, which covers some of the real–life challenges being faced by the residents while updating their address.
  • The second theme of the Hackathon is around the “Identity and Authentication”, for solutions to prove Identity without sharing the Aadhaar number or any demographics information.

8. The headquarters of the ‘National Road Safety Board’ is in which Indian city?

A) Mumbai

B) New Delhi 

C) Aurangabad

D) Kolkata

  • The Ministry of Road Transport & Highways has notified the constitution of National Road Safety Board. The Board will be responsible for promoting road safety, innovation and adoption of new technology, and regulation of traffic and motor vehicles.
  • The Head Office of the Board in the National Capital Region and the board may set up offices at other places in India. It shall consist of the Chairman and not three to seven Members, to be appointed by the Central Government.

9. The Nobel Prize for Chemistry 2021 has been awarded for developing a new way for building molecules known as?

A) Asymmetric organocatalysis 

B) Altered DNAs

C) Altered mRNAs

D) None of these

  • The Nobel Prize for Chemistry 2021 has been awarded to Benjamin List and David WC MacMillan. They were cited for developing a new way for building molecules known as “Asymmetric organocatalysis.” As per the Nobel panel, List and MacMillan independently developed a new way of catalysis.

10. What is the theme of the World Cotton Day 2021?

A) There’s more to cotton than you think 

B) Sustainable Cotton

C) E–Commerce in Cotton

D) White Gold: Cotton

  • The International Cotton Advisory Committee (ICAC) and the World Trade Organization (WTO) established the World Cotton Day, which is celebrated on October 7th every year since 2019. This year the theme is “There’s more to cotton than you think”.
  • The purpose of the international day is to maximize the importance of cotton. It also emphasises the problems faced by the world’s cotton economies. The inaugural World Cotton Day was held in Geneva in 2019.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!