TnpscTnpsc Current Affairs

26th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

26th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 26th October 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

26th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. 2022 – தேசிய கடல்சார் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Sustainable Maritime Activities

ஆ. Sustainable Shipping beyond COVID–19

இ. Climate Change and Shipping

ஈ. Ship for Global Growth

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. Sustainable Shipping beyond COVID–19

  • ஒவ்வோர் ஆண்டும் ஏப்.5 அன்று இந்தியா தனது தேசிய கடல்சார் நாளைக்கொண்டாடுகிறது. இந்த ஆண்டு (2022) இந்தியா தனது 59ஆவது தேசிய கடல்சார் நாளைக் கொண்டாடியது. “Sustainable Shipping beyond COVID–19” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில் வந்த தேசிய கடல்சார் நாளுக்கானக் கருப்பொருளாகும். பன்னாட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கடந்த 1964ஆம் ஆண்டில் இந்த நாள் முதன் முதலாக கடைப்பிடிக்கப்பட்டது. இந்திய கடல்சார் தொழிற்துறைக்கு முக்கியப் பங்காற்றியவர்களைக் கௌரவிக்கும் வகையில் விருது வழங்கும் விழாவும் இந்நாளின்போது நடத்தப்படுகிறது.

2. கோல்டன் பென் ஆஃப் ஃப்ரீடம் விருது பெற்ற கெஸெட்டா வைபோர்சா என்பது கீழ்க்காணும் எந்த நாட்டைச் சார்ந்த நாளேடாகும்?

அ. உக்ரைன்

ஆ. போலந்து

இ. ஸ்வீடன்

ஈ. ரஷ்யா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. போலந்து

  • போலந்து நாளேடான, ‘Gazeta Wyborcza’ ஆனது உலக செய்தி வெளியீட்டாளர்கள் சங்கத்தால் ‘கோல்டன் பென் ஆஃப் ஃப்ரீடம்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருது தற்போது ஸ்பெயினின் சராகோசாவில் நடைபெற்று வரும் 2022 – உலக செய்தி ஊடக மாநாட்டின்போது அறிவிக்கப்பட்டது. ‘கோல்டன் பென் ஆஃப் ஃப்ரீடம்’ என்பது WAN–IFRAஆல் ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு விருது ஆகும். இது பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களை அங்கீகரிக்கிறது.

3. ‘இந்திய சுற்றுலா புள்ளிவிவரங்கள் – 2022’இன்படி, அயல்நாட்டுப் பயணிகளால் அதிகம் பார்வையிடப்பட்ட நினைவுச்சின்னம் எது?

அ. தாஜ்மஹால்

ஆ. செங்கோட்டை

இ. மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச்சின்னங்களின் குழுமம்

ஈ. குதுப்மினார்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச்சின்னங்களின் குழுமம்

  • நடுவண் சுற்றுலா அமைச்சகம், ‘இந்திய சுற்றுலா புள்ளிவிவரங்கள் – 2022’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. உலக சுற்றுலா நாளில் இந்தியக்குடியரசுத்துணைத்தலைவர் ஜக்தீப் தங்கர் இதனை வெளியிட்டார். தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச்சின்னங்களின் குழுமம் 2021–22 இடைப்பட்ட காலத்தில் அயல்நாட்டுப் பார்வையாளர்களால் அதிகமுறை கண்டு களிக்கப்பட்ட நினைவுச் சின்னமாகும். தாஜ்மஹால் உள்நாட்டுப் பார்வையாளர்களுக்கு அதிகமுறை கண்டுகளிக்கப்பட்ட நினைவுச்சின்னம் ஆகும். செங்கோட்டை மற்றும் குதுப் மினார் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.

4. கீழ்க்காணும் எந்த மூன்று இரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு நடுவணமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?

அ. புது தில்லி, அகமதாபாத் மற்றும் CSMT மும்பை

ஆ. புது தில்லி, சென்னை மற்றும் CSMT மும்பை

இ. புது தில்லி, அகமதாபாத் மற்றும் வாரணாசி

ஈ. புது தில்லி, கொச்சி மற்றும் சென்னை

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. புது தில்லி, அகமதாபாத் மற்றும் CSMT மும்பை

  • பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான நடுவணமைச்சரவை, புது தில்லி, அகமதாபாத் மற்றும் CSMT மும்பை ஆகிய மூன்று முதன்மை இரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்வதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஏறக்குறைய `10,000 கோடி முதலீட்டில், சூரிய ஆற்றல், நீர்ப்பாதுகாப்பு மற்றும் மறுசுழற்சி மற்றும் மேம்படுத்தப்பட்ட பசுமைக்கட்டட நுட்பங்களைப்பயன்படுத்தி அம்மூன்று நிலையங்கள் மறுவடிவமைக்கப்படும். அவை மெட்ரோ மற்றும் பேருந்துபோன்ற பிற பொதுப்போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைக்கப்படும். இந்த மூன்று முதன்மை இரயில் நிலையங்களையும் சேர்த்து 199 இரயில் நிலையங்களின் மறுசீரமைப்புக்கான மொத்த செலவு `60,000 கோடியாக உள்ளது.

5. தனது முதல் கிளவுட் பிராந்தியத்தை கிரேக்கத்தில் அமைப்பதாக அறிவித்துள்ள நிறுவனம் எது?

அ. அமேசான்

ஆ. மைக்ரோசாப்ட்

இ. கூகிள்

ஈ. மெட்டா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. கூகிள்

  • உலக கிளவுட் கம்ப்யூட்டிங் மையமாக தன்னை மாற்றிக்கொள்வதற்கான முயற்சிகளை கிரேக்கம் மேற்கொண்டு வரும் இந்நிலையில், ஆல்பாபெட் நிறுவனத்தின் கூகுள் தனது முதல் கிளவுட் பகுதியை கிரேக்கத்தில் அமைப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் கிரேக்கத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் $2.13 பில்லியன் அமெரிக்க டாலர்களைப் பங்களிக்கும் என்றும் 2030ஆம் ஆண்டுக்குள் சுமார் 20,000 பணிவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு கிளவுட் பிராந்தியமானது தரவு மையங்களின் தொகுப்பைச்சுற்றி அமைந்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் கிரேக்கத்தில் தரவு மைய மையத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது.

6. 2022 – சர்வதேச மொழிபெயர்ப்பு நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. A world without barriers

ஆ. Accessibility and Translation

இ. Translation includes All

ஈ. Strengthening Peace

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. A world without barriers

  • உலகெங்கும் உள்ள மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழியியல் வல்லுநர்களின் பணியைப்போற்றும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் செப்.30 அன்று சர்வதேச மொழிபெயர்ப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு (2022) சர்வதேச மொழிபெயர்ப்பு நாளுக்கானக் கருப்பொருள், “A world without barriers – தடைகள் இல்லாத உலகம்” என்பதாகும். செப்.30 பைபிள் மொழிபெயர்ப்பாளர் புனித ஜெரோமின் விழாவுடன் ஒத்திசைந்துபோகிறது.

7. UN SDG அதிரடி விருதுகளுள், ‘சேஞ்ச்மேக்கர்’ விருதை வென்ற இந்தியர் யார்?

அ. சிருஷ்டி பக்ஷி

ஆ. கபில் மண்டவெவல

இ. அமித் சரோகி

ஈ. கைஃப் அலி

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. சிருஷ்டி பக்ஷி

  • இந்தியாவைச் சேர்ந்த பெண்ணுரிமை ஆர்வலரான சிருஷ்டி பக்ஷி, UN SDG அதிரடி விருதுகளுள், ‘சேஞ்ச்மேக்கர்’ விருதை வென்றுள்ளார். பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் சமத்துவமின்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஓராண்டுக்குள் நாடு முழுவதும் 3800 கிலோ மீட்டர் அவர் பயணம் செய்துள்ளார். “பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்கொண்டதற்காகவும், பொது இடங்களுக்குப் பாதுகாப்பான அணுகலை வழங்க வாதிட்டதற்காகவும்” அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

8. சிறந்த சாகச சுற்றுலாத்தலமாகவும், முழுமையான சுற்றுலா வளர்ச்சிக்காகவும் முதற்பரிசை வென்றுள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. கோவா

ஈ. உத்தரகாண்ட்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. உத்தரகாண்ட்

  • நடுவண் சுற்றுலா அமைச்சகத்திடமிருந்து சிறந்த சாகச சுற்றுலாத்தலம் என்பதற்காகவும், முழுமையான சுற்றுலா வளர்ச்சிக்காகவும் உத்தரகாண்ட் இரு பிரிவுகளில் முதல் பரிசைப்பெற்றது. உலக சுற்றுலா நாளையொட்டி, இந்தியக் குடியரசுத்துணைத்தலைவர் ஜக்தீப் தங்கர் 2018–19க்கான தேசிய சுற்றுலா விருதுகளை வழங்கினார். இந்த நிகழ்வின்போது நிழற்படம் மற்றும் காணொளிப் போட்டி ஒன்றையும் அவர் தொடங்கி வைத்தார்.

9. உலக ரேபிஸ் நாளானது கீழ்க்காணும் எந்த அறிவியலாளரின் நினைவு நாளை அனுசரிக்கிறது?

அ. லூயிஸ் பாஸ்டர்

ஆ. சர் ஐசக் நியூட்டன்

இ. ஆண்டன் வான் லீவன்ஹூக்

ஈ. வில்ஹெம் இரான்ட்ஜென்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. லூயிஸ் பாஸ்டர்

  • ரேபிஸ் தடுப்புகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அந்நோயை ஒழித்துக்கட்டுவதில் முன்னேற்றம் காணவுமாக ஒவ்வோர் ஆண்டும் செப்.28 அன்று ‘உலக ரேபிஸ் நாள்’ அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளானது முதல் ரேபிஸ் தடுப்பூசியை உருவாக்கிய பிரெஞ்சு வேதியியலாளரும் நுண்ணுயிரியலாளருமான லூயிஸ் பாஸ்டரின் நினைவு நாளைக் குறிக்கின்றது.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சுகபைகா ஆறு பாயும் மாநிலம் எது?

அ. ஒடிஸா

ஆ. மேற்கு வங்காளம்

இ. பீகார்

ஈ. உத்தரகாண்ட்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. ஒடிஸா

  • சுகபைகா வடிகால் கால்வாய் திட்டத்திற்குப் புத்துயிரூட்டுவதற்காக 2023 மார்ச் மாதத்திற்குள் `49.67 கோடி நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஒடிஸா மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. குறைந்த பட்சம் கட்டாக் மாவட்டத்தின் மூன்று வளர்ச்சித் தொகுதிகளின் குடிநீர்த் தட்டுப்பாட்டை குறைக்க வேண்டியாவது, இறந்த இவ்வாற்றுக்கு புத்துயிரளிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வங்கதேசத்தில் ‘சித்ரகாங் புயல்’ கரையைக் கடந்தது

வங்கதேசத்தில் டிங்கோனா மற்றும் சாண்ட்விப் இடையே பரிசால் பகுதிக்கு அருகில் சித்ரகாங் புயல் கரையைக் கடந்தது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுமண்டலம், சித்ரகாங் புயலாக வலுவடைந்தது. சித்ரகாங் புயல் வங்கதேசத்தில் கரையைக் கடந்துள்ளது. இப்புயல் மேலும் வலுவிழந்து வடகிழக்கு மாநிலங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

26th October 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. What is the theme of the ‘National Maritime Day’ 2022?

A. Sustainable Maritime Activities

B. Sustainable Shipping beyond COVID–19

C. Climate Change and Shipping

D. Ship for Global Growth

Answer & Explanation

Answer: B. Sustainable Shipping beyond COVID–19

  • India recently celebrated the 59th National Maritime Day which falls on April 5 every year. This year’s theme is ‘Sustainable Shipping beyond COVID–19’. The first anniversary of the day was held in 1964 to raise awareness about international trade and economy.  An award ceremony is held to honour those who made important contributions to the Indian maritime industry.

2. Gazeta Wyborcza, which was awarded Golden Pen of Freedom award, is a Newspaper from which country?

A. Ukraine

B. Poland

C. Sweden

D. Russia

Answer & Explanation

Answer: B. Poland

  • Polish newspaper Gazeta Wyborcza was awarded Golden Pen of Freedom by World Association of News Publishers The award was announced during the 2022 World News Media Congress currently taking place in Zaragoza, Spain. The Golden Pen of Freedom is WAN–IFRA’s annual award recognising individuals or organisations who contribute to the defence and promotion of press freedom.

3. Which was the most visited centrally–protected ticketed monument for foreign visitors, as per the ‘India Tourism Statistics 2022’?

A. Taj Mahal

B. Red Fort

C. Group of Monuments at Mamallapuram

D. Qutub Minar

Answer & Explanation

Answer: C. Group of Monuments at Mamallapuram

  • Union Ministry of Tourism released a report titled ‘India Tourism Statistics 2022’. It was released by Vice–President Jagdeep Dhankhar on World Tourism Day. The Group of Monuments at Mamallapuram in Tamil Nadu was the most visited centrally–protected ticketed monument for foreign visitors. in 2021–22. Taj Mahal was the most popular centrally–protected ticketed monument for domestic visitors. The Red Fort and the Qutub Minar were the second and third most visited sites.

4. The Union Cabinet approved a Plan to modernise which three Railway stations?

A. New Delhi, Ahmedabad and CSMT Mumbai

B. New Delhi, Chennai and CSMT Mumbai

C. New Delhi, Ahmedabad and Varanasi

D. New Delhi, Cochi and Chennai

Answer & Explanation

Answer: A. New Delhi, Ahmedabad and CSMT Mumbai

  • The Union Cabinet, chaired by Prime Minister Narendra Modi, has approved a proposal for the redevelopment of three major railway stations — New Delhi, Ahmedabad and CSMT Mumbai. With an approximate total investment of nearly Rs 10,000 crore, the stations will be redeveloped using Green Building Techniques with solar energy, water conservation, and recycling and improved tree cover. They will be integrated with other modes of transportation like metro and bus. The total cost of redevelopment of 199 stations including these three major stations is Rs 60,000 crores.

5. Which company has announced to set up its first cloud region in Greece?

A. Amazon

B. Microsoft

C. Google

D. Meta

Answer & Explanation

Answer: C. Google

  • Alphabet Inc’s Google has announced to set up its first cloud region in Greece, as the country is making efforts to become a world cloud computing hub. The deal is estimated to contribute some USD 2.13 billion to the GDP of Greece and create some 20,000 jobs by 2030. A cloud region is based around a cluster of data centres. Microsoft has also decided to build a data centre hub in the country.

6. What is the theme of the ‘International Translation Day 2022’?

A. A world without barriers

B. Accessibility and Translation

C. Translation includes All

D. Strengthening Peace

Answer & Explanation

Answer: A. A world without barriers

  • Every year International Translation Day is observed on September 30 to honour the work of translators and language professionals across the world. The theme for this year’s International Translation Day is “A world without barriers”. September 30 was chosen as it also coincides with the feast of the Bible translator, St. Jerome.

7. Which Indian personality has won the ‘Changemaker’ award at the UN SDG Action Awards?

A. Srishti Bakshi

B. Kapil Mandawewala

C. Amit Saraogi

D. Kaif Ali

Answer & Explanation

Answer: A. Srishti Bakshi

  • Srishti Bakshi, a women’s rights activist from India, was honoured with the ‘Changemaker’ award at the UN SDG Action Awards. The activist has travelled 3,800km around the country in less than a year to raise awareness on gender–based violence and inequality. She was awarded for “confronting gender–based violence and advocating for safe access to public spaces.”

8. Which state won the first prize for the best adventure tourism destination and all–around development of tourism?

A. Tamil Nadu

B. Kerala

C. Goa

D. Uttarakhand

Answer & Explanation

Answer: D. Uttarakhand

  • Uttarakhand received the first prize in two categories, for the best adventure tourism destination and all–around development of tourism from the Ministry of Tourism. Vice President Jagdeep Dhankar presented National Tourism Awards 2018–19, on the occasion of World Tourism Day. He also launched photography and videography contest during the event.

9. ‘World Rabies Day’ is observed marking the death anniversary of which scientist?

A. Louis Pasteur

B. Sir Isaac Newton

C. Anton van Leeuwenhoek

D. Wilhelm Rontgen

Answer & Explanation

Answer: A. Louis Pasteur

  • ‘World Rabies Day’ is observed every year on September 28, to raise awareness about rabies prevention and to highlight progress in defeating this disease. It also marks the death anniversary of the French chemist and microbiologist Louis Pasteur, who developed the first rabies vaccine.

10. Sukapaika River, which was seen in the news, is located in which state?

A. Odisha

B. West Bengal

C. Bihar

D. Uttarakhand

Answer & Explanation

Answer: A. Odisha

  • The National Green Tribunal (NGT) has directed the Odisha state government to sanction budgetary allocation of Rs 4967 lakh towards rejuvenation of Sukapaika Drainage Channel project by March 2023. The NGT directed to rejuvenate the dead river, to mitigate the drinking water crisis of at least three blocks of Cuttack district.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!