TnpscTnpsc Current Affairs

27th & 28th August 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

27th & 28th August 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 27th & 28th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

27th & 28th August 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. பரிவார் கல்யாண் அட்டைத் திட்டத்தைத் தொடங்கிய மாநிலம்/UT எது?

அ. பீகார்

ஆ. உத்தர பிரதேசம்

இ. கர்நாடகா

ஈ. மத்திய பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. உத்தர பிரதேசம்

  • பரிவார் கல்யாண் அட்டைத் திட்டம் என்பது உத்தர பிரதேச மாநில அரசாங்கத்தின் குடும்ப அடையாள அட்டைத் திட்டமாகும். மாநிலத்தில் உள்ள குடும்பங்கள் குறித்த ஒருங்கிணைந்த தரவுத்தளத்தை நிறுவவும் அதன் பல்வேறு திட்டங்களுக்கு பயனாளிகளை அடையாளம் காணவும் இது பயன்படும். PKC ஆனது ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனிப்பட்ட பன்னிரண்டிலக்க அடையாள எண்ணை வழங்கும். மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆதார் தரவை PKCஉடன் இணைக்க மாநில அரசுக்கு அனுமதி தந்துள்ளது.

2. 2022–இல் பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாட்டு அமைப்பின் (DRDO) புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. சமீர் V காமத்

ஆ. K சிவன்

இ. மயில்சாமி அண்ணாதுரை

ஈ. டெஸ்ஸி தாமஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. சமீர் V காமத்

  • மூத்த அறிவியலாளர் Dr சமீர் V காமத், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டமைப்பின் (DRDO) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நடுவண் பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகராகப் பொறுப்பேற்ற Dr G சதீஷுக்குப் பிறகு அவர் இப்பதவிக்கு வந்துள்ளார். முன்னதாக, Dr சமீர் V காமத், 2017ஆம் ஆண்டு முதல் DRDOஇல் கடற்படை அமைப்புகள் இயக்குநராக பணியாற்றி வந்தார்.

3. மா–ஆன் என்ற வெப்பமண்டலச் சூறாவளியால் பாதிக்கப்பட்ட நாடு எது?

அ. சீனா

ஆ. ஜப்பான்

இ. பிலிப்பைன்ஸ்

ஈ. இந்தோனேசியா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. பிலிப்பைன்ஸ்

  • பிலிப்பைன்ஸ் நாட்டின் லூசன் தீவைச் சேதப்படுத்திய மா–ஆன் என்ற வெப்பமண்டலச் சூறாவளியால் அந்த நாடு பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை கவுன்சிலின் கூற்றுப்படி, அந்தச்சூறாவளி காரணமாக குறைந்தது மூவர் இறப்பெய்தினர் மற்றும் நால்வர் காயமடைந்தனர். இந்த ஆண்டில் (2022) தென்கிழக்காசிய நாட்டைத் தாக்கிய ஆறாவது வெப்பமண்டலச் சூறாவளி “மா–ஆன்” ஆகும்.

4. பன்னாட்டு செலாவணி நிதியத்தில் (IMF) இந்தியாவின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியப் பொருளாதார நிபுணர் யார்?

அ. உர்ஜித் படேல்

ஆ. K சுப்ரமணியன்

இ. வைரல் ஆச்சார்யா

ஈ. அனந்த நாகேஸ்வரன்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. K சுப்ரமணியன்

  • முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் K V சுப்ரமணியன், பன்னாட்டு செலாவணி நிதியத்தில் (IMF) இந்தியாவின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். K V சுப்ரமணியனின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் அல்லது மறு ஆணை வரும் வரை தொடரும். தற்போது சர்வதேச நிதியத்தில் இந்தியா சார்பில் செயல் இயக்குநராக செயல்பட்டு வரும் சுர்ஜித் எஸ் பல்லா கடந்த 2019 அக்டோபரில் இந்தப்பொறுப்பை ஏற்றார். அவரது பணிக்காலம் அக்.30–இல் நிறைவடைகிறது.

5.’மின்கல கழிவு மேலாண்மை விதிகள், 2022’ஐ வெளியிட்டுள்ள நடுவண் அமைச்சகம் எது?

அ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம்

ஆ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

இ. வெளியுறவு அமைச்சகம்

ஈ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம்

  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமானது சமீபத்தில் மின்கல கழிவு மேலாண்மை விதிகள், 2022ஐ வெளியிட்டது. இப்புதிய விதிகள் மின்கலங்கள் (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதிகள், 2001–க்கு மாற்றாக, கழிவு மின்கலங்களின் சுற்றுச்சூழலுக்கு உகந்த மேலாண்மையை உறுதிசெய்யும். மின்–வாகனங்களின் மின்கலங்கள், எடுத்துச்செல்லக்கூடிய மின்கலங்கள், தானுந்து மின்கலங்கள் மற்றும் தொழிற்துறை மின்கலங்கள் உட்பட அனைத்து வகையான மின்கலங்களையும் இந்த விதிகள் உள்ளடக்கியுள்ளது.

6. ‘இயற்கை குறியீடு (Nature Index) – 2022’ தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ள பல்கலைக்கழகம் எது?

அ. தில்லி பல்கலைக்கழகம்

ஆ. ஹைதராபாத் பல்கலைக்கழகம்

இ. பஞ்சாப் பல்கலைக்கழகம்

ஈ. மெட்ராஸ் பல்கலைக்கழகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஹைதராபாத் பல்கலைக்கழகம்

  • சமீபத்திய நேச்சர் இன்டெக்ஸ்–2022 தரவரிசையில் ஹைதராபாத் பல்கலைக்கழகம் (UoH) தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நேச்சர் இன்டெக்ஸ் என்பது இயற்கை மற்றும் இயற்பியல் அறிவியலில் உயர்தர ஆராய்ச்சிகளை தர வரிசைப்படுத்தும் ஒரு குறியீடாகும். UoH, இந்தியப் பல்கலைக்கழகங்களில் முதல் இடத்தையும், கல்வித்துறையில் உள்ள அனைத்து நிறுவனங்களில் 16ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. 2021 ஏப்ரல்.1 முதல் 2022 மார்ச்.31 வரையிலான தரவுகளின் அடிப்படையில் இந்தத் தரவரிசை உள்ளது.

7. “Intergenerational solidarity: creating a world for all ages” என்பது ஆகஸ்ட் மாதத்தில் கொண்டாடப்படும் கீழ்க்காணும் எந்தச் சர்வதேச நாளுக்கானக் கருப்பொருளாகும்?

அ. சர்வதேச இளையோர் நாள்

ஆ. சர்வதேச மூத்தோர்கள் நாள்

இ. சர்வதேச வளரிளம்பருவத்தில் உள்ள குழந்தைகள் நாள்

ஈ. சர்வதேச ஜென்–Z நாள்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. சர்வதேச இளையோர் நாள்

  • சமூகத்தின் வளர்ச்சிக்கு இளையோரின் பங்களிப்பைக்குறிக்கவும், உலகம் முழுவதும் இளையோர் எதிர்கொள்ளும் அநீதிகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தவுமாக ஒவ்வோர் ஆண்டும் ஆக.12 அன்று சர்வதேச இளையோர் நாள் கொண்டாடப்படுகிறது. “Intergenerational solidarity: creating a world for all ages” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில் வரும் சர்வதேச இளையோர் நாளுக்கானக் கருப்பொருளாகும். 2022ஆம் ஆண்டு சர்வதேச இளையோர் நாளுக்கானத் தலைப்பு, ‘வயதுசார் பாரபட்சம்’ ஆகும். ஒரு தனிநபரின் வயதை அடிப்படையாகக்கொண்ட பாகுபாடு செய்யும் நடைமுறையே ‘வயதுசார் பாரபட்சம்’ ஆகும்.

8. வடகிழக்கிந்திய விழா – 2022 ஆனது இந்தியா மற்றும் கீழ்க்காணும் எந்த நாட்டின் உறவுகளின் 75ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது?

அ. ஜப்பான்

ஆ. தாய்லாந்து

இ. மியான்மர்

ஈ. சிங்கப்பூர்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. தாய்லாந்து

  • இந்தியா–தாய்லாந்து உறவின் 75ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், வடகிழக்கிந்திய விழா நடைபெறும் என மேகாலயா மாநில முதலமைச்சர் கான்ராட் சங்மா அறிவித்துள்ளார். வடகிழக்குத் திருவிழாவான, ‘கலாசாரத்தைக்கொண்டாடும் மக்களை இணைக்கிறது’ என்பது வடகிழக்கிந்தியாவின் மிகப்பெரிய முனைவாகும். வடகிழக்கின் தனித்துவத்தை வெளிப்படுத்தவும், சுற்றுலா மற்றும் முதலீட்டு அடிப்படையில் ஆராயப்படாத வழிகளை மேம்படுத்தவுமாக இந்த விழா பாங்காக்கில் நடைபெறும்.

9. முதல் கேலோ இந்தியா மகளிர் ஹாக்கி லீக் போட்டியை (U–16) நடத்துகிற மாநிலம்/UT எது?

அ. புது தில்லி

ஆ. ஒடிஸா

இ. கர்நாடகா

ஈ. ஹரியானா

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. புது தில்லி

  • U–16 பெண்களுக்கான முதல், ‘கேலோ இந்தியா மகளிர் ஹாக்கி லீக்’ ஆக.16 அன்று புது தில்லியில் உள்ள மேஜர் தியான்சந்த் அரங்கில் தொடங்கவுள்ளது. கேலோ இந்தியா மகளிர் ஹாக்கி லீகானது (U–21) இந்த ஆண்டின் தொடக்கத்தில் புது தில்லி மற்றும் லக்நௌவில் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த லீக்கில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

10. நடுவணரசு வசூலிக்கும் வரியில் எத்தனை சதவீதம் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது?

அ. 40%

ஆ. 41%

இ. 42%

ஈ. 45%

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 41%

  • தற்போது, ஒரு நிதியாண்டில், நடுவணரசு வசூலிக்கும் வரியில், 41 சதவீதம், 14 தவணைகளாக, மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. `1.16 இலட்சம் கோடி நிதியை மாநில அரசுகளுக்கு இரண்டு தவணைகளாக நடுவணரசு அண்மையில் வழங்கியது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இமாச்சல பிரதேசத்தின் பாக்லோவில் இந்தியா – அமெரிக்கா சிறப்புப்படைகளின் கூட்டுப்பயிற்சி நிறைவடைந்தது

வஜ்ரா பிரஹார் 2022 எனும் இந்தியா – அமெரிக்கா சிறப்புப் படைகளின் 13வது கூட்டுப்பயிற்சி பாக்லோவில் 2022 ஆக.28 அன்று நிறைவடைந்தது.  இந்தியா – அமெரிக்கா இடையேயான இந்த வருடாந்தரப் பயிற்சி அடுத்தடுத்த ஆண்டுகளில் நடைபெறுகிறது. இதன்படி 12ஆவது பயிற்சி வாஷிங்டனில் உள்ள லெவிஸ் மெக் கார்ட் கூட்டுப் படைதளத்தில் 2021 அக்டோபரில் நடைபெற்றது.

ஐநா சாசனப்படி 21 நாள் நடைபெற்ற இந்தக் கூட்டுப்பயிற்சி இருநாட்டு சிறப்புப் படைகளுக்கும் சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்தப்பயிற்சி இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. முதல் கட்டத்தில் எதிர்ப்பை முறியடிக்கும் நிலைமை, போர்தந்திர நிலையில் சிறப்பு நடவடிக்கைகள் ஆகியவையும் இரண்டாவது கட்டத்தில் 48 மணி நேர மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட பயிற்சியும் நடைபெற்றது.

2. ஊராட்சிகளுக்கு `751 கோடி மானியம் தமிழ்நாடு அரசு உத்தரவு

ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களுக்கு மானியமாக `751.99 கோடியை விடுவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வெளியிட்டுள்ளது. அவ்வுத்தரவு விவரம்:

ஐந்தாவது மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் இருந்து 10% உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்படுகிறது. இதில், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 56 சதவீதமும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 44 சதவீதமும் நிதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான மாநில நிதி ஆணையத்தின் மானியங்கள் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படவுள்ளன.

3. வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான கற்கால மண்பானைகள் கண்டெடுப்பு

வெம்பக்கோட்டையில் நடந்துவரும் அகழாய்வில் சுடுமண்ணாலான கற்கால பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் உள்ள வைப்பாற்றங்கரை விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட வடகரை உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல்மேட்டில் கடந்த மார்ச்.16ஆம் தேதி முதல் அகழ்வாராய்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த அகழாய்வில் சுடுமண்ணாலான பகடைக்காய், தக்கலி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள், பெண்ணுருவம், காளை உருவம், விளையாட்டுப்பொருள்கள், கோடரி, தங்க அணிகலன்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன.

4. ‘பாரத்’ பெயரில் மானிய உரங்கள் அக்டோபர் முதல் விற்பனை: ‘ஒரே நாடு ஒரே உரம்’ திட்டம்

‘ஒரே நாடு ஒரே உரம்’ திட்டத்தின்கீழ், ‘பாரத்’ என்ற ஒற்றைப்பெயரில் மானிய உரங்கள் அனைத்தும் அக்டோபர் மாதம் முதல் விற்பனை செய்யப்படவுள்ளன. விவசாயிகளுக்கு குறித்த நேரத்துக்குள் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதுடன், அதன் போக்குவரத்துக்கான மானிய சுமையைக் குறைப்பதுமே இத்திட்டத்தின் நோக்கம் என நடுவண் இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

பிரதமரின் உரங்கள் மானியத்திட்டத்தின்கீழ் (பிரதமரின் பாரதிய ஜனூர்வாரக் பரியோஜனா-பிஎம்பிஜேபி) ‘ஒரே நாடு ஒரே உரம்’ திட்டத்தை அறிவித்து, அவர் மேலும் கூறியதாவது:

உரப்பைகளின் மீது 1/3 இடத்தில், சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்தின் வணிகப்பெயர், இலச்சினை, பொருள் தொடர்பான இதர விவரக்குறிப்புகள் இடம்பெற அனுமதிக்கப்படும். 2/3 பங்கு இடத்தில் ‘பாரத்’ என்ற வணிகப் பெயரும், பிஎம்பிஜேபி திட்டத்தின் இலச்சினையும் இடம்பெற வேண்டும். உர நிறுவனங்கள், தங்களிடமுள்ள பழைய இருப்புகளை காலிசெய்ய இந்த ஆண்டு இறுதிவரை அவகாசம் அளிக்கப்படும்.

கடந்த நிதியாண்டில் உர மானியங்களுக்கான செலவு `1.62 லட்சம் கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் இது `2.25 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுதவிர உரங்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு கொண்டு செல்வதற்கு ஆண்டுதோறும் `6,000 கோடி முதல் 9,000 கோடி வரை மானியம் வழங்கப்படுகிறது.

யூரியாவின் சில்லறை விற்பனை விலையில் 80 சதவீதம், டை அமோனியம் பாஸ்பேட்டுக்கு 65 சதவீதம், என்பிகே உரத்துக்கு 55 சதவீதம், எம்ஓபி உரத்துக்கு 31 சதவீதம் நடுவணரசு மானியம் வழங்குகிறது.

உரங்கள் விநியோகத்தில் ஏற்படும் தடைகளைக் களைந்து, உர தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையிலான ஆரோக்கியமற்ற போட்டியை தடுப்பதே ஒரே நாடு, ஒரே உரம் திட்டத்தின் நோக்கமாகும். ஒரே பெயரில் மானிய உரங்களை விற்பனை செய்யும்போது, உர தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது அருகிலுள்ள இடங்களிலேயே விற்பனை செய்ய வழி ஏற்படும். தேவையற்ற போக்குவரத்து தடுக்கப்படும். உர நிறுவனத்தை தேர்வுசெய்வதில் விவசாயிகளுக்கு ஏற்படும் குழப்பம் தீரும். அதேசமயம், உரத்தின் தரத்திலும் எந்த சமரசமும் இருக்காது. விவசாயிகள் மீதான இடைத்தரகர்களின் ஆதிக்கமும் இருக்காது என்றார் அவர்.

27th & 28th August 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which Indian state/UT launched the Parivar Kalyan Card (PKC) Scheme?

A. Bihar

B. Uttar Pradesh

C. Karnataka

D. Madhya Pradesh

Answer & Explanation

Answer: B. Uttar Pradesh

  • Parivar Kalyan Card scheme is the Uttar Pradesh government’s Family ID plan. It was announced to establish a comprehensive database of the state’s family units and identify beneficiaries for its various schemes. The PKC will provide a unique 12–digit ID number for each family. The Ministry of Electronics and Information Technology has allowed the state government to link Aadhaar data with the PKC.

2. Who has been appointed as the new Chairman of Defence Research and Development Organisation (DRDO) in 2022?

A. Samir V Kamat

B. K Sivan

C. Mayilsamy Annadurai

D. Tessy Thomas

Answer & Explanation

Answer: A. Samir V Kamat

  • Veteran Scientist Dr. Samir V Kamat has been appointed as the new Chairman of Defence Research and Development Organisation (DRDO). He succeeds Dr. G Satheesh Reddy who will take charge as Scientific Advisor to the union defence minister. Earlier, Dr. Samir V Kamat was the Director General of Naval Systems & Materials at DRDO since 2017.

3. Which country has been hit by the Tropical cyclone Ma–On?

A. China

B. Japan

C. Philippines

D. Indonesia

Answer & Explanation

Answer: C. Philippines

  • The Philippines has been hit by the tropical cyclone Ma–on that has damaged the main Luzon Island in the country. The cyclone has killed at least three people and injured four others, as per the country’s National Disaster Risk Reduction and Management Council. Ma–on was the sixth tropical cyclone to hit this Southeast Asian country this year.

4. Which Indian economist has been appointed as the Executive Director for India at the International Monetary Fund (IMF)?

A. Urjit Patel

B. K Subramanian

C. Viral Acharya

D. Anantha Nageswaran

Answer & Explanation

Answer: B. K Subramanian

  • Former Chief Economic Adviser KV Subramanian has been appointed as the Executive Director for India at the International Monetary Fund (IMF). Subramanian’s term will continue for a period of three years or until further orders. The tenure of economist Surjit S Bhalla as ED (India), IMF has been curtailed up to 31 October, 2022.

5. Which Union Ministry has published ‘Battery Waste Management Rules, 2022’?

A. Ministry of Environment, Forest and Climate Change

B. Ministry of Electronics and Information Technology

C. Ministry of External Affairs

D. Ministry of Housing and Urban affairs

Answer & Explanation

Answer: A. Ministry of Environment, Forest and Climate Change

  • Ministry of Environment, Forest and Climate Change recently published the Battery Waste Management Rules, 2022. New rules will replace Batteries (Management and Handling) Rules, 2001, to ensure environmentally sound management of waste batteries. The rules cover all types of batteries including Electric Vehicle batteries, portable batteries, automotive batteries and industrial batteries.

6. Which University has been ranked first in the ‘Nature Index 2022’ ranking?

A. Delhi University

B. University of Hyderabad

C. Punjab University

D. Madras University

Answer & Explanation

Answer: B. University of Hyderabad

  • The University of Hyderabad (UoH) continues to be in the top position in the latest Nature Index 2022 ranking. The Nature Index is an indicator of high–quality research in natural and physical sciences. The UoH has been ranked first among Indian Universities and 16th among all institutions in the academic sector. The rankings are based on the data from 1 April 2021 to 31 March 2022.

7. ‘Intergenerational solidarity: creating a world for all ages’ is the theme of which international day celebrated in August?

A. International Youth Day

B. International Senior Citizens Day

C. International Adolescent Children Day

D. International Youth Gen–Z Day

Answer & Explanation

Answer: A. International Youth Day

  • Every year, International Youth Day is celebrated on August 12 to mark the contribution of the youth to the development of society and to raise awareness against the injustice faced by the youth worldwide. This year’s theme for International Youth Day 2022 is ‘Intergenerational solidarity: creating a world for all ages. Ageism, a practice of discrimination based on an individual’s age, is the topic of International Youth Day in 2022.

8. North East India Festival 2022 celebrates the 75 years of relations of India and which country?

A. Japan

B. Thailand

C. Myanmar

D. Singapore

Answer & Explanation

Answer: B. Thailand

  • Meghalaya Chief Minister Conrad Sangma announced that the North East India Festival will celebrate 75 years of India–Thailand relations. The North East Festival ‘Connecting People celebrating Culture’ is the largest initiative of North East India. It will be held in Bangkok, to showcase the uniqueness of North East and promote unexplored avenues in terms of tourism and investment.

9. Which state/UT hosts the first khelo India Women’s Hockey League (U–16)?

A. New Delhi

B. Odisha

C. Karnataka

D. Haryana

Answer & Explanation

Answer: A. New Delhi

  • The first ‘Khelo India Women’s Hockey League for U–16 girls’ is scheduled to start on August 16 at the Major Dhyanchand Stadium in New Delhi. The Khelo India Women’s Hockey League (U–21) was held over three phases in New Delhi and Lucknow earlier this year. A total of 16 teams across the country are participating and over 300 players will compete in the league.

10. What percent of the taxes collected by the Centre is devolved among states?

A. 40

B. 41

C. 42

D. 45

Answer & Explanation

Answer: B. 41

  • At present, 41 per cent of taxes collected by the Centre is devolved in 14 instalments among states during a fiscal year. The Centre recently released two instalments of tax devolution to state governments amounting to Rs 1.16 lakh crore to states.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!