Tnpsc

27th & 28th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

27th & 28th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 27th & 28th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

27th & 28th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. “PRANIT” என்ற பெயரில் மின்னணு வணிக வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ள பொதுத்துறை நிறுவனம் எது?

அ) பவர் கிரிட்

ஆ) NTPC

இ) HAL

ஈ) IOL

  • மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் ‘மகாரத்னா’ தகுதிபெற்ற பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட், மின்னணு முறையிலான ஒப்பந்தப்புள்ளி கோரும் “PRANIT” என்ற வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வலைத்தளம், ஒப்பந்தப்புள்ளி செயல்முறையை மிகவும் வெளிப்படையானதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், தாள் செயல்பாடுகளை குறைக்கிறது. இவ்வலைத்தளத்திற்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தரப்படுத்தல், சோதனை மற்றும் தரச்சான்றிதழ் இயக்குநரகம் சான்றளித்துள்ளது.

2. பெப்சூ முசாரா இயக்கம் என்பது எந்த இந்திய மாநிலத்தில் நடந்த ஒரு விவசாயிகள் இயக்கமாகும்?

அ) கர்நாடகா

ஆ) இராஜஸ்தான்

இ) பஞ்சாப்

ஈ) ஹிமாச்சல பிரதேசம்

  • முசாரா இயக்கமானது 1930’களில் பஞ்சாப் கிராமங்களில் தொடங்கியது. விடுதலைக்குப் பிறகு பஞ்சாப் என்று பெயரிடப்படுவதற்கு முன்னர் வரை இந்த மாகாணம் பெப்சூ என்று அழைக்கப்பட்டது.
  • ‘முசாரா’ என்றால் ஒருவரின் நிலத்தில் வேலை செய்த நிலமற்ற உழவர் என்று பொருளாகும். இவ்வியக்கம் பல்லாண்டுகளாக நிலத்தை உழுதவர்களுக்கே நிலம் என்ற கோட்பாட்டைக் கொண்டது. இறுதியாக, 1952ஆம் ஆண்டில், ஒருமுறை இழப்பீடு செலுத்திய பின்னர் மக்களுக்கு நிலவுரிமை வழங்கப்பட்டது. அண்மையில், புது தில்லியில் நடந்த விவசாயிகள் போராட்ட இடங்களிலும், பஞ்சாப் மாநிலத்திலும் இந்த இயக்கம் நினைவுகூரப்பட்டது.

3. பின்வரும் எந்த மாநிலம், மியான்மருடன் 510 கிலோமீட்டர் நீள எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது?

அ) அஸ்ஸாம்

ஆ) மிசோரம்

இ) மணிப்பூர்

ஈ) மேகாலயா

  • மிசோரம் மாநிலம் மியான்மருடன் 510 கிமீ நீள எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. மியான்மரைச் சார்ந்த “அரசியல் ஏதிலிகளுக்கு” அரசியல் தஞ்சம் வழங்குமாறு மிசோரம் மாநில முதலமைச்சர் சோரம்தங்கா நடுவணரசிடம் கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக, எந்தவொரு வெளி நாட்டினருக்கும் “ஏதிலி” என்ற அந்தஸ்தை வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்றும், 1951 ஐநா அகதிகள் மாநாடு மற்றும் அதன் 1967 நெறிமுறையில் இந்தியா கையெழுத்திடவில்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

4. சமீப செய்திகளில் இடம்பெற்ற, 2011 இஸ்தான்புல் மாநாட்டுடன் தொடர்புடைய பிரச்சினை எது?

அ) குடும்ப வன்முறை மற்றும் பாலின சமத்துவம்

ஆ) பருவநிலை மாற்றம்

இ) நிதியியல் உள்ளடக்கம்

ஈ) பரவா நோய்

  • இசுதான்புல்லில் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய கவுன்சில் ஒப்பந்தமானது, குடும்ப வன்முறைகளைத் தடுக்கவும், வழக்குத் தொடரவும், ஒழிக்கவும், சமத்துவத்தை ஊக்குவிக்கவும் உறுதியளித்தது. துருக்கி அதிபர் தயிப் எர்டோகன், பெண்களைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட இந்தப் பன்னாட்டு ஒப்பந்தத்திலிருந்து, துருக்கியை வெளியேற்றினார்.
  • எவ்வாறாயினும், அதிகரித்துவரும் குடும்ப வன்முறைகளை எதிர்ப்பதற் -கான ஒரு கருவியாக இந்த ஒப்பந்தத்தை காணும் மக்கள், தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற திவ்யன்ஷ் சிங் பன்வார் மற்றும் இளவேனில் வாலறிவன் ஆகியோர் கீழ்காணும் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்களாவர்?

அ) டென்னிஸ்

ஆ) துப்பாக்கிச்சுடுதல்

இ) தடகளம்

ஈ) டேபிள் டென்னிஸ்

  • தில்லியில் நடைபெற்று வரும் ISSF உலகக்கோப்பையில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி போட்டியில் இந்தியாவின் இளம் துப்பாக்கி சுடும் வீரர்களான திவ்யன்ஷ் சிங் பன்வார் மற்றும் இளவேனில் வாலறிவன் ஆகியோர் தங்கம் வென்றனர். பெண்கள் ஸ்கீட் போட்டியில் மற்றொரு இந்திய துப்பாக்கிச்சுடும் வீராங்கனை கணேமத் சேகோன் வெண்கலம் வென்றார். முன்னதாக, புது தில்லியில் நடந்து வரும் ISSF உலகக்கோப் -பையில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டிகளில் இந்திய பெண்கள் மற்றும் ஆண்கள் அணிகள் தங்கப்பதக்கங்களை வென்றன.

6. முதல் பழங்குடி கல்வி அமைப்புப் பள்ளியான, ‘நியுபு நைவ்காம் யெர்கோ’ திறக்கப்பட்டுள்ள மாநிலம் எது?

அ) ஒடிஸா

ஆ) அருணாச்சல பிரதேசம்

இ) மேற்கு வங்கம்

ஈ) மிசோரம்

  • அருணாச்சலபிரதேச மாநில முதலமைச்சர் பேமா கந்து, அம்மாநிலத்தின் முதல் முதல் பழங்குடி மொழிவழிக்கல்வி அமைப்புப் பள்ளியைத் திறந்து வைத்துள்ளார். ‘நியுபு நைவ்காம் யெர்கோ’ என்று பெயரிடப்பட்ட இந்தப் பள்ளி, பழங்குடி மரபுகள், கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றை மேம் -படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் உதவும். பள்ளியின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்காக `3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

7. ஓமான் வளைகுடா அருகே, ‘அரபிக்கடல் குழு போர்ப்பயிற்சி’யை நடத்தவுள்ள நாடு எது?

அ) இந்தியா

ஆ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ) சீனா

ஈ) ஜப்பான்

  • அமெரிக்க கடற்படையானது பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகியவற்றுடன் இணைந்து மைடாஸ்டில் ஒரு மிகப்பெரிய கடற்படைப் பயிற்சியை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது. ‘அரபிக்கடல் குழு போர்ப் பயிற்சி’யில் நான்கு நாடுகளைச் சார்ந்த கப்பல்கள் பங்கேற்கவுள்ளன. ஈரானின் அணுவாற்றல் திட்டம் குறித்த பதட்டங்களுக்கு மத்தியில் அந்த பிராந்தியத்தில் இப்பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

8. “Forest restoration: a path to recovery and well-being” என்ற கருப்பொருளுடன், நடப்பாண்டு (2021) மார்ச்.21 அன்று ஐநா’ஆல் கொண்டாடப்பட்ட நாள் எது?

அ) பூச்சிகளுக்கான பன்னாட்டு நாள்

ஆ) இனங்களுக்கான பன்னாட்டு நாள்

இ) வனங்களுக்கான பன்னாட்டு நாள்

ஈ) மரங்களுக்கான பன்னாட்டு நாள்

  • மார்ச்.21ஆம் தேதியை ஐநா அவை வனங்களுக்கான பன்னாட்டு நாள் எனக்கொண்டாடுகிறது. இந்நாள், உலகம் முழுவதுமுள்ள பசுமையான காடுகளின் முக்கியத்துவத்தை நினைவுகூர்கிறது. “Forest restoration: a path to recovery and well-being” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். இந்த நாள், முதன்முதலில் ஐநா’ஆல் கடந்த 2012ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

9. கென்-பெட்வா திட்டத்தைச் செயல்படுத்தும் நடுவண் அமைச்சகம் எது?

அ) பாதுகாப்பு அமைச்சகம்

ஆ) ஜல் சக்தி அமைச்சகம்

இ) உள்துறை அமைச்சகம்

ஈ) சுற்றுச்சூழல் அமைச்சகம்

  • இந்தியாவின் முதல் ஆறுகள் இணைப்புத்திட்டமான கென்-பெட்வா திட்டத்தை மத்திய ஜல் சக்தி அமைச்சகம் செயல்படுத்தவுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் பாய்ந்தோடும் கென் ஆற்றை உத்தர பிரதேசத்தில் பாயும் பெட்வா ஆற்றுடன் இணைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தை ஒரு தேசிய திட்டமாக செயல்படுத்த, பொது முதலீட்டு வாரியத்தின் ஒப்புதலை ஜல் சக்தி அமைச்சகம் கோரியுள்ளது.

10. மாவட்டங்களின் ஆண்டு ஏற்றுமதி தரவரிசைக் குறியீட்டைத் தயாரிப்பதில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு உதவுவது எது?

அ) NITI ஆயோக்

ஆ) வணிக அமைச்சகம்

இ) திட்ட ஆணையம்

ஈ) தேசிய வளர்ச்சிக் கழகம்

  • பல்வேறு மாவட்டங்களின் ஆண்டு ஏற்றுமதி தரவரிசைக் குறியீட்டைத் தயாரிக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் உதவும் என மத்திய வணிகம் & தொழிற்துறை அமைச்சகம் அறிவித்தது. இக்குறியீடு ஒவ்வொரு மாவட்டத்தையும் அதன் ஏற்றுமதி போட்டித்தன்மைக்கு ஏற்ப வரிசைப்படுத்தும். மாவட்டத்தில் ஏற்றுமதி திறன்கொண்ட பொருட்கள் மற்றும் சேவைகளை அடையாள -ங்காண்பதே மாவட்ட ஏற்றுமதி செயல்திட்டமாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்திய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஜப்பான் `15,322 கோடி நிதி

இந்திய உட்கட்டமைப்புத் திட்டங்களுக்காக ஜப்பான் அரசு கடனாகவும், மானியமாகவும் `15,322 கோடி நிதியளித்துள்ளது. தில்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் நான்காம் கட்டப்பணிகள் உள்பட பல்வேறு உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட இருக்கிறது. இது தொடர்பாக தில்லியில் உள்ள ஜப்பான் தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

இருநாடுகள் இடையிலான மானியம், கடன் தொடர்பான ஒப்பந்தத்தை இந்திய நிதியமைச்சகத்தின் பொருளாதாரத்துறை கூடுதல் செயலர் C S மோகபத்ராவும், ஜப்பான் தூதர் சுகோஷி சுசூகியும் பரிமாறிக்கொண்டனர். முதல்கட்டமாக `2.65 கோடி மானியம் அந்தமான்-நிகோபார் மின்சார திட்டங்களுக்கு வழங்கப்படும். பெங்களூரு மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்துக்கு `3,442 கோடியும், தில்லி மெட்ரோ நான்காம் கட்டத்திட்டத்துக்கு `7,932 கோடியும் கடனளிக்கப்படும்.

தில்லி மெட்ரோ ரயில் திட்டத்துக்காக 1997 முதல் இப்போது வரை சுமார் `47 கோடி வரை ஜப்பான் கடனுதவி அளித்துள்ளது. இது தவிர ஹிமாச்சல பிரதேசத்தில் பயிர் பகுப்பு முறை திட்டத்தின் இரண்டாவது கட்டத்துக்கு `737 கோடி கடனுதவி அளிக்கப்படும். இதன்மூலம் வேளாண் பொருள் உற்பத்தி அதிகரிக்கும். இராஜஸ்தானில் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த `3,032 கோடி கடனுதவி அளிக்கப்படவிருக்கிறது என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

2. இந்தியப் பொருளாதாரம் மெதுவாக மீண்டு வருகிறது: IMF

இந்தியப் பொருளாதாரம் மெதுவாக மீண்டு வருகிறது என்று சர்வதேச நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் IMF – உலக வங்கி இடையிலான கூட்டம் நடைபெறவுள்ள நிலையில இத்தகவல் வெளியாகி உள்ளது. IMF செய்தித்தொடர்பாளர் கேரி ரைஸ் கூறுகையில், “இந்தியப் பொருளாதாரம் மெதுவான முறையில் மீண்டு வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மோசமான நிலையில் இருந்து இப்போது மெதுவாக வளர்ச்சி கண்டுள்ளது. 2020’ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டிலேயே இந்த வளர்ச்சி தெரியத் தொடங்கிவிட்டது.

இந்தியாவில் மூலதன உருவாக்கம் மேம்பட்டுள்ளது. COVID-19 பெருந் தொற்றால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு இப்போது நிலைமை மேம்பட்டுள்ளது. அதே நேரத்தில் வர்த்தகம், பொருள்கள்-சேவைகளின் விநியோகம் ஆகியவை இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில் இப்போது சில இடங்களில் உள்ளூரளவில் அமல்படுத்தப்ப -டும் பொதுமுடக்கம் சிலபாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது” என்றார். உலகப்பொருளாதாரம் தொடர்பான IMF அறிக்கை ஏப்ரல் 6ஆம் தேதியன்று வெளியிடப்படவுள்ளது.

3. தில்லியில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டியில், இந்தியா ஆடவர் 50 மீட்டர் ரைபிள் குழுப்பிரிவில் தங்கம் வென்றனர்.

தில்லியில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டியி -ல், இந்தியாவின் நிரஜ் குமார், ஸ்வப்னில் குசாலே, செயின் சிங் ஆகியோர் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் குழுப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றனர். 50 மீட்டர் ரைபிள் கலப்பு இரட்டையர் குழுப்பிரிவில் இந்தியாவின் சஞ்சீவ் ராஜ்புத் – தேஜஸ்வினி சாவந்த் இணை தங்கப்பதக்கம் வென்றது.

இதேபிரிவில், இந்தியாவின் பிரதாப் சிங் – சுனிதி செளகான் இணை வெண்கலம் வென்றது. ஆடவர் 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில், விஜய்வீர் சித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்தப்போட்டியில் இதுவரை இந்தியா 12 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலங்களை வென்றுள்ளது.

4. ஏப்.2-ம் தேதி வரை 20 மாவட்டங்களில் அதிக வெப்பநிலை

தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு வேலூர், இராணிப்பேட் -டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய 20 மாவட்டங்களில் ஏப்.2 வரை வெப்பநிலை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமைய -ம் தெரிவித்துள்ளது.

5. இந்தியா – வங்கதேசம் இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா – வங்கதேச நாடுகளிடையே வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக வங்கதேசம் வந்துள்ள நிலையில், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. தலைநகர் டாக்காவில் நடைபெற்ற வங்கதேச சுதந்திர பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

முன்னதாக, கோபால்கஞ்ச் என்ற இடத்தில் உள்ள ஒரகண்டி கோயிலுக்கு பிரதமா் மோடி சென்று வழிபாடு நடத்தினார். பின்னர் கோபால்கஞ்ச் பகுதியில் வசிக்கும் மதுவா ஹிந்து சமூகத்தினரிடையே மோடி உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

தொடக்கப்பள்ளி கட்டித்தரப்படும்: மேலும், ஒரகண்டியில் இந்தியா சார்பில் ஒரு தொடக்கப்பள்ளி கட்டித்தரப்படும். அதோடு இங்குள்ள பெண்கள் நடுநிலைப்பள்ளி ஒன்று இந்தியா சார்பில் தரம் உயர்த்தித்தரப்படும் என்ற அறிவிப்பை பிரதமர் மோடி அப்போது வெளியிட்டார்.

இந்தியா சார்பில் சமூக நலக்கூடம்: பின்னர் சத்கிரா என்ற இடத்தில் உள்ள ஜெஸோரேஸ்வரி காளி கோயிலுக்கு பிரதமர் சென்றார்.

புதிய இரயில்: வங்கதேசத்தின் டாக்கா – மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரி இடையிலான புதிய பயணிகள் இரயிலை பிரதமர் மோடியும், ஷேக் ஹசீனாவும் காணொலி முறையில் தொடங்கிவைத்தனர். இருநாடு -களுக்கு இடையே இயக்கப்படும் மூன்றாவது பயணிகள் இரயில் இதுவா -கும். ஏற்கனவே, டாக்கா-கொல்கத்தா, குலானா-கொல்கத்தா இடையே பயணிகள் இரயில் உள்ளது.

6. கோவோவாக்ஸ் தடுப்பூசி செப்டம்பரில் அறிமுகம்: சீரம் நிறுவனம்

புதிய கோவோவாக்ஸ் தடுப்பூசி வரும் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அடார் புனேவாலா கூறினார். புனேவில் உள்ள சீரம் நிறுவனம் ஏற்கனவே ‘கோவிஷீல்ட்’ கரோனா தடுப்பூசியை தயாரித்து இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு விநியோகித்து வரும் நிலையில், அமெரிக்காவைச் சார்ந்த ‘நோவாவாக்ஸ்’ என்ற தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ‘கோவோவாக்ஸ்’ என்ற இரண்டாவது கரோனா தடுப்பூசியையும் தயாரித்து வருகிறது. இந்தத் தடுப்பூசியின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்புத்திறன் 89% என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தப் புதிய தடுப்பூசி வரும் ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்ப்பதாக கடந்த ஜனவரியில் அடார் புனேவாலா கூறியிருந்த நிலையில், இப்போது வரும் செப்டம்பரில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

7. போலந்து நாட்டில் இரண்டு தமிழ் இருக்கைகளுக்கு 7 ஆண்டுகளுக்கு பின் பேராசிரியர் பணி நியமன அறிவிப்பு

மத்திய கலாச்சாரத் துறையின் கீழ் ICCR அமைப்பு செயல்படுகிறது. இதன் சார்பில் 1970ஆம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் இந்திய அரசு சார்பிலான இருக்கைகள் அமைக்கப்பட்டுள் -ளன. இதில் ICCR அமைப்பால் தேர்வுசெய்யப்பட்டு அனுப்பப்படும் பேராசி -ரியருக்கான ஊதியத்தை மத்திய அரசு வழங்கும்.

வெளிநாடுகளின் 69 கல்வி நிறுவனங்களில் இந்திய இருக்கைகள் உள் -ளன. இதில் அதிகபட்சமாக இந்திக்கு 25’க்கும் மேற்பட்ட இருக்கைகளும் இதையடுத்து சமற்கிருதத்துக்கும் உள்ளன. தமிழுக்கு வெறும் இரண்டு இருக்கைகள், போலந்து நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஒன்றாக வார்ஸா நகரின் வார்ஸா பல்கலையில் இந்திய மொழிகள் துறையில் 47 ஆண்டுகளாக தமிழ் இருக்கை உள்ளது. இதன் அருகிலுள்ள கிராக்கூப் நகரின் கிராக்கூப்யாகி எலோனியன் பல்கலைக்கழகத்தில் 2008 முதல் தமிழ் இருக்கை உள்ளது.

இவற்றுக்கு 7 ஆண்டுகளாக பேராசிரியர்கள் அமர்த்தப்படவில்லை. இந்தச் சூழலில் போலந்தின் இரண்டு தமிழ் இருக்கைகளுக்கும் பேராசிரியர் பணி நியமன அறிவிப்பை ICCR தற்போது வெளியிட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் தமிழ்ப்பேராசிரியர்கள் அயல்பணியில் இங்கு பணியாற்ற விண்ணப்பிக்கும்படி கோரப்பட்டுள்ளது.

1. Which PSU has launched an e trading portal named “PRANIT”?

A) Power Grid

B) NTPC

C) HAL

D) IOL

  • The Union Power Ministry’s Maharatna PSU – Power Grid has launched an e–tendering portal – “PRANIT”. This portal is aimed to make the tendering process by power grid more transparent and decreases the paperwork in the process. This portal has been certified by Standardisation, Testing and Quality Certification Directorate (STQC), Ministry of Electronics and Information Technology.

2. PEPSU Muzara movement was a farmers’ movement that happened in which Indian state?

A) Karnataka

B) Rajasthan

C) Punjab

D) Himachal Pradesh

  • The Muzara movement had started in the 1930s in Punjab villages. The province was called PEPSU after Independence before being named Punjab. Muzara means landless farmers who worked on someone’s land. This movement was started to take ownership rights of the land after tilling it for years. Finally, people got ownership rights in 1952 after paying one–time compensation. The movement was remembered in Punjab and farmer protest sites in New Delhi recently.

3. Which state shares a 510–kilometer border with Myanmar?

A) Assam

B) Mizoram

C) Manipur

D) Meghalaya

  • Mizoram shares a 510–kilometer border with Myanmar. The Chief Minister of Mizoram Zoramthanga asked the Centre to grant political asylum to “political refugees” from Myanmar. Earlier, the Home Ministry had directed that State governments have no powers to grant refugee status to any foreigner and India is not a signatory to the United Nations Refugee Convention of 1951 and its 1967 Protocol.

4. 2011 Istanbul Convention, which was making news recently, is associated with which issue?

A) Domestic violence and Gender Equality

B) Climate Change

C) Financial Inclusion

D) Non–Communicable Disease

  • The Council of Europe accord, created in Istanbul, pledged to prevent, prosecute and eliminate domestic violence and promote equality. Turkey President Tayyip Erdogan pulled Turkey out of an international accord designed to protect women.
  • However, people who see the pact as key to combating rising domestic violence, have been expressing their concerns.

5. Divyansh Singh Panwar and Elavenil Valarivan, who were in the news recently, are associated with which sports?

A) Tennis B) Shooting

C) Athletics D) Table Tennis

  • India’s young shooters Divyansh Singh Panwar and Elavenil Valarivan won the gold medal in the 10m Air Rifle Mixed Team event at the ISSF World Cup, which is being held in Delhi.
  • Another Indian shooter Ganemat Sekhon won the bronze medal in the women’s Skeet event. Earlier, the Indian women and men’s teams won gold medals in the 10m Air Pistol events at the ongoing ISSF World Cup being held in New Delhi.

6. ‘Nyubu Nyvgam Yerko’, the first indigenous knowledge system school, has been inaugurated at which state?

A) Odisha

B) Arunachal Pradesh

C) West Bengal

D) Mizoram

  • Arunachal Pradesh Chief Minister Pema Khandu has inaugurated the state’s 1st formal indigenous language and knowledge system school.
  • Named as ‘Nyubu Nyvgam Yerko’, the school will help in promoting and preserving indigenous traditions, culture and language. Rs 3 crore has been allocated for the development and maintenance of the school.

7. Which country is to hold the ‘Group Arabian Sea Warfare Exercise’ near Gulf of Oman?

A) India

B) USA

C) China

D) Japan

  • The US Navy announced that it is set to hold a major naval exercise along with Belgium, France and Japan in the Mideast.
  • The ‘Group Arabian Sea Warfare Exercise’ will include ships from the four countries to conduct drills in the Arabian Sea and the Gulf of Oman. This exercise has been planned amid tensions over the nuclear programme of Iran in the region.

8. Which day is celebrated by the UN this year on March 21, with the theme “Forest restoration: a path to recovery and well–being”?

A) International Day of Insects

B) International Day of Species

C) International Day of Forests

D) International Day of Trees

  • March 21 is observed by the United Nations as the International Day of Forests. This day commemorates the importance of green forest cover around the world. The theme for this year’s International Day of Forests is “Forest restoration: a path to recovery and well–being”. This day was first proclaimed by UN in 2012.

9. Which Union Ministry is set to implement the Ken–Betwa project?

A) Ministry of Defense

B) Ministry of Jal Shakti

C) Ministry of Home Affairs

D) Ministry of Environment

  • The Union Ministry of Jal Sakthi is all set to implement the first river interlinking project in India – Ken Betwa Project. The project aims to link Ken river in Madhya Pradesh with Betwa in Uttar Pradesh.
  • The Ministry has sought for Public Investment Board’s approval for implementing the project as a national project.

10. Which institution is to assist the states/UTs in preparing the annual export ranking index of districts?

A) NITI Aayog

B) Commerce Ministry

C) Planning Commission

D) National Development Council

  • The Union Commerce and Industry Ministry announced that the Directorate General of Foreign Trade (DGFT) will assist states and union territories to prepare an annual export ranking index of different districts. The index will rank each district on its export competitiveness. A district export action plan that will include identification of goods and services with export potential in the district.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!