TnpscTnpsc Current Affairs

27th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

27th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 27th December 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

27th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. ‘பிரசந்தா’ என அழைக்கப்படும் புஷ்ப கமல் தஹால் கீழ்க்காணும் எந்த நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்?

அ. வங்காளதேசம்

ஆ. நேபாளம்

இ. மாலத்தீவுகள்

ஈ. மொரீஷியஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நேபாளம்

  • நேபாளத்தின் குடியரசுத்தலைவர் வித்யா தேவி பண்டாரி, நேபாளத்தின் புதிய பிரதமராக CPN–மாவோயிஸ்ட் மையத்தின் தலைவர் ‘பிரசந்தா’ என அழைக்கப்படும் புஷ்ப கமல் தஹாலை நியமித்தார். அரசியலமைப்பின் 76ஆம் பிரிவு–2இன்படி நேபாளத்தின் புதிய பிரதமராக ‘பிரசந்தா’ நியமிக்கப்பட்டுள்ளார். சுழற்சி முறையில் அரசாங்கத்தை வழிநடத்த ‘பிரசந்தா’வுக்கும் சர்மா ஒலிக்கும் இடையே புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது.

2. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பேரரச பென்குயின்கள் சார்ந்த பகுதி/நாடு எது?

அ. அண்டார்டிகா

ஆ. ஆஸ்திரேலியா

இ. கிரீன்லாந்து

ஈ. ஐஸ்லாந்து

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. அண்டார்டிகா

  • ஒரு புதிய ஆய்வின்படி, பேரரச பெங்குவின் உட்பட அண்டார்டிகாவின் பூர்வீக இனங்களில் மூன்றில் இரண்டு பங்கு இனங்கள் முற்றிலும் அழிந்துபோகும் நிலையிலோ அல்லது 2100ஆம் ஆண்டளவில் பேரெண்ணிக்கையில் வீழ்ச்சிக்குள்ளாகும் நிலையிலோ உள்ளன. இது தற்போதைய புவி வெப்பமயமாதலின் காரணத்தால் ஏற்படும் எனச் சொல்லப்படுகிறது. 12 நாடுகளைச் சேர்ந்த அறிவியலாளர்கள், பாதுகாவலர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. பேரரச பென்குவின்களை அழிந்துபோகும் அபாயத்தில் உள்ள அண்டார்டிக் வாழ் உயிர் இனங்களாக வகைப்படுத்தியுள்ளனர். அதைத்தொடர்ந்து பிற கடற்பறவையினங்களும் உலர்ந்த மண் நூற்புழு இனங்களும் உள்ளன.

3. நடுவண் அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் அவர்கள் கீழ்க்காணும் எந்த நகரத்தில் விளையாட்டு அறிவியல் மையத்தை திறந்து வைத்தார்?

அ. புனே

ஆ. அமராவதி

இ. உடுப்பி

ஈ. வாரணாசி

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. உடுப்பி

  • நடுவண் இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் உடுப்பியில் விளையாட்டு அறிவியல் மையத்தை திறந்து வைத்தார். இந்த விளையாட்டு அறிவியல் மையமானது விளையாட்டு சார் அறிவியலாளர்களையும் விளையாட்டு வீரர்களையும் ஒன்றிணைக்கும். விளையாட்டுக் கட்டமைப்பை மேம்படு –த்துவதற்காக `2700 கோடியையும், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளுக்காக `3,136 கோடியையும் அரசாங்கம் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் செலவிட்டுள்ளது.

4. எந்த அண்டை நாட்டுடனான கட்டற்ற வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்க இந்தியா ஒப்புக்கொண்டது?

அ. சீனா

ஆ. இலங்கை

இ. வங்காளதேசம்

ஈ. நேபாளம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. வங்காளதேசம்

  • இந்தியாவும் வங்கதேசமும் கட்டற்ற வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தையை முன்கூட்டியே தொடங்க ஒப்புக்கொண்டன. வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் வங்காளதேச அமைச்சர் திப்பு முன்ஷி இடையே நடைபெற்ற சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இருநாடுகளும் வர்த்தக உடன்படிக்கையின் சாத்தியக்கூறுகளை ஆராய ஒப்புக்கொண்டதையடுத்து, விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம்பற்றிய ஒரு கூட்டு சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2021–22இல் இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் $18.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.

5. ‘நடுவண் கலால் மற்றும் சேவை வரி தீர்வு ஆணையத்தை’ அமைத்துள்ள நிறுவனம் எது?

அ. SEBI

ஆ. CBIC

இ. CBDT

ஈ. அமலாக்க இயக்குநரகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. CBIC

  • நடுவண் மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியமானது (CBIC) சுங்கம், நடுவண் கலால் மற்றும் சேவை வரி தீர்வு ஆணையத்தை அமைத்துள்ளது. இது சுங்கச்சட்டம், நடுவண் கலால் சட்டம் மற்றும் சேவை வரி விதிகளின்கீழ் வழங்கப்பட்ட காரணம் கேட்கும் குறிப்பாணைகளுக்குத் தீர்வுகாண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை பழைய மறைமுக வரி முறையின்கீழ் வழக்குகளுக்குத் விரைவாக தீர்வுகாண்பதை உறுதிசெய்யும்.

6. ‘தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தை’த் தொடங்கியுள்ள அரசு எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. கேரளா

ஈ. நாகாலாந்து

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. தமிழ்நாடு

  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், மாநிலம் முழுமைக்கும் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்து, பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். தூய்மைப் பணியாளர்களைக் கண்டறிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, திறன்பேசி செயலியில் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது. முதற்கட்டமாக, 5 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, மற்ற அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

7. நடுவண் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகமானது மேற்கூரை சூரியவொளி மின்னுற்பத்தித் திட்டத்தை கீழ்க்காணும் எந்த ஆண்டு வரை நீட்டித்துள்ளது?

அ. 2024

ஆ. 2025

இ. 2026

ஈ. 2027

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. 2026

  • நடுவண் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகமானது மேற்கூரையில் பதிக்கப்படும் சூரியவொளித் தகடுகள்மூலம் மின்னுற்பத்தி செய்யும் திட்டத்தை 2026ஆம் ஆண்டு மார்ச்.31 வரை நீட்டித்துள்ளது. இதன்மூலம், திட்டத்திற்கான இலக்கு அடையப்படும்வரை மானியம் வழங்கப்படும். தேசிய வலைதளத்தில் விண்ணப்பிப்பதற்கான கட்டணம் அல்லது அளவிடல் அல்லது சோதனைக்கான கூடுதல் கட்டணங்கள் தவிர வேறெந்த காரணத்திற்காகவும் எந்தவொரு விற்பனையாளருக்கும் கூடுதல் கட்டணங்களைச் செலுத்தவேண்டாம் என அனைத்து குடியிருப்பாளர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

8. சுக்விந்தர் சிங் சுகு என்பவர் கீழ்க்காணும் எந்த மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றார்?

அ. கோவா

ஆ. குஜராத்

இ. ஹிமாச்சல பிரதேசம்

ஈ. உத்தரகாண்ட்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ஹிமாச்சல பிரதேசம்

  • ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுகு அண்மையில் பதவியேற்றார். நான்கு முறை சமஉஆகவும், காங்கிரஸின் மாநிலத் தேர்தல் பிரசாரக் குழு தலைவராகவும் இருந்தவர் சுக்விந்தர் சிங் சுகு. துணை முதலமைச்சராக முகேஷ் அக்னிகோத்ரி தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ஹிமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

9. ஜல் சக்தி அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஆறுகளை இணைக்கும் எத்தனை கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன?

அ. 10

ஆ. 20

இ. 30

ஈ. 50

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. 30

  • ஆறுகளை இணைக்கும் முப்பது கூறுகள் கண்டறியப்பட்டுள்ளதாக நடுவண் ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் கூறினார். ஜல் சக்தி அமைச்சகத்தின்கீழ் உள்ள தேசிய நீர்மேம்பாட்டு நிறுவனம் தீபகற்ப ஆறுகளின் கூறுகளின்கீழ் 16 இணைப்புகளையும், தேசிய தொலைநோக்குத்திட்டத்தின் (NPP) இமாலய கூறுகளின் கீழ் 14 இணைப்புகளையும் இடைப்பட்ட படுகை பரிமாற்றத்திற்காக அடையாளம் கண்டுள்ளது. `39,317 கோடி என்ற நடுவண் அரசின் பங்களிப்புடன் மோதகம் `44,605 கோடி மதிப்பீட்டில் கென்–பெட்வா ஆறுகள் இணைப்புத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

10. 2022 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றவர் யார்?

அ. பூபேந்திர படேல்

ஆ. விஜய் ரூபானி

இ. ஆனந்திபென் படேல்

ஈ. கேசுபாய் படேல்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. பூபேந்திர படேல்

  • குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற்றதை அடுத்து, பூபேந்திர படேல் தொடர்ந்து இரண்டாவது முறையாக குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பில் நீடிப்பார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி சமஉக்கள் பூபேந்திர படேலை சட்டமன்றக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழ்நாட்டில் நகர்ப்புற சேவைகளை மேம்படுத்துவதற்காக இந்தியாவும் ஆசிய வளர்ச்சி வங்கியும் `1,040 கோடி மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

தமிழ்நாட்டின் மூன்று நகரங்களில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில், கழிவுநீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு, கழிவுநீர் அகற்றுதல் மற்றும் குடிநீர் விநியோக முறைகளை உருவாக்குவதற்காக நடுவணரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் `1,040 கோடி கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

தமிழ்நாட்டில் தொழிற்துறை முக்கியத்துவம் வாய்ந்த பத்து நகரங்களில் குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்றுதல் ஆகியவற்றின் கட்டமைப்புக்காக 2018இல் ஆசிய வளர்ச்சி வங்கியால் $500 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பல தொகுப்பு நிதி வசதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் மூன்றாவது மற்றும் கடைசி தொகுப்பாக இந்த ஒப்பந்தம் கையழுத்தாகியுள்ளது. இந்தத் தொகுப்பில் கோயம்புத்தூர், மதுரை, தூத்துக்குடி ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

2. இந்திய இரயில்வேக்கான அமிர்த பாரத் இரயில் நிலைய திட்டம்.

இரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் அமிர்த பாரத் இரயில் நிலைய திட்டம் என்னும் புதிய கொள்கையை இரயில்வே அமைச்சகம் வகுத்துள்ளது. தொலைநோக்குப் பார்வையுடன் இரயில் நிலையங்களை தொடர்ந்து மேம்படுத்துவதற்கு இந்தத் திட்டம் வகைசெய்யும். இரயில் நிலையத்திற்கு வந்துசெல்லும் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து வசதிகளின் தேவையை கருத்தில்கொண்டு செயல்படுத்தப்படும் பெருந்திட்டத்தை இது அடிப்படையாக கொண்டதாகும்.

குறைந்தபட்ச அத்தியாவசிய வசதிகளை கருத்தில்கொண்டு இரயில் நிலையங்களின் மேல்தளத்தில் அங்காடிகள், வணிக நிறுவனங்கள் அமைக்கப்படும். இரயில் நிலையங்களில் ஏற்கனவே உள்ள வசதிகளுக்கு மாற்றாக மேம்பாடும் மற்றும் புதிய வசதிகளை அறிமுகப்படுத்துதலை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டதாகும். தகவல் பலகைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் ஆகியவை இரயில் நிலையங்களில் உறுதிசெய்யப்படும். பயணிகள் தங்குமறை, நடைமேடைகள், ஓய்வறைகள், அதிகாரிகள் ஆய்வறை ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்படும்.

27th December 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Pushpa Kamal Dahal also known as ‘Prachanda’ has been appointed as the new Prime Minister of which country?

A. Bangladesh

B. Nepal

C. Maldives

D. Mauritius

Answer & Explanation

Answer: B. Nepal

  • Nepal President Bidya Devi Bhandari appointed CPN–Maoist Centre chairman Pushpa Kamal Dahal ‘Prachanda’ as the new Prime Minister of Nepal. Prachanda has been appointed as the Prime Minister of Nepal as per the Article 76 Clause 2 of the Constitution. There has been an understanding between Prachanda and Oli to lead the government on rotation basis.

2. Emperor penguins, which were seen in the news, are native to which region/ country?

A. Antarctica

B. Australia

C. Greenland

D. Iceland

Answer & Explanation

Answer: A. Antarctica

  • As per new research, two–thirds of Antarctica’s native species, including emperor penguins, are under threat of extinction or major population declines by 2100. This is due to current trajectories of global heating. The study was conducted by scientists, conservationists and policymakers from 12 countries.  It has identified emperor penguins as the Antarctic species at greatest risk of extinction, followed by other seabirds and dry soil nematodes.

3. Union Minister Anurag Singh Thakur inaugurated Sports Science Centre in which city?

A. Pune

B. Amravati

C. Udupi

D. Varanasi

Answer & Explanation

Answer: C. Udupi

  • Union Minister for Youth Affairs and Sports, Anurag Singh Thakur inaugurated the Sports Science Centre in Udupi. This Sports Science Centre will bring together sports scientists and athletes. The Government has spent 2700 crore rupees to enhance sporting infrastructure as well as 3,136 crore rupees for Khelo India Games, for a period of five years.

4. India has agreed to start negotiations for a free trade agreement with which neighbouring country?

A. China

B. Sri Lanka

C. Bangladesh

D. Nepal

Answer & Explanation

Answer: C. Bangladesh

  • India and Bangladesh agreed to start negotiations for a free trade agreement (FTA) at an early date. The decision was taken in a meeting between Commerce and Industry Minister Piyush Goyal and his Bangladeshi counterpart Tipu Munshi. A joint feasibility study on the Comprehensive Economic Partnership Agreement (CEPA), has been carried out after the two countries agreed to explore the possibility of negotiating a trade pact. The bilateral trade between India and Bangladesh increased to USD 18.2 billion in 2021–22.

5. Which institution has set up ‘Central Excise and Service Tax Settlement Commission’?

A. SEBI

B. CBIC

C. CBDT

D. Enforcement Directorate

Answer & Explanation

Answer: B. CBIC

  • The Central Board of Indirect Taxes and Customs (CBIC) has constituted Customs, Central Excise and Service Tax Settlement Commission. It aims to resolve and settle the show–cause notices issued under the Customs Act, Central Excise Act and Service Tax regime. This move would ensure speedy disposal of cases under the old indirect tax regime.

6. Which state launched the ‘Sanitation Workers Development Scheme’?

A. Tamil Nadu

B. Andhra Pradesh

C. Kerala

D. Nagaland

Answer & Explanation

Answer: A. Tamil Nadu

  • Tamil Nadu Chief Minister MK Stalin launched sanitation workers’ development programme across the state and distributed safety equipment. A survey will be carried out to identify sanitation workers and details will be uploaded on a mobile application. In the first phase, the scheme will be implemented in five urban local bodies and will be extended to all other local bodies.

7. The New and Renewable Energy Ministry extended the rooftop solar programme till which year?

A. 2024

B. 2025

C. 2026

D. 2027

Answer & Explanation

Answer: C. 2026

  • The Union Ministry of new and renewable energy extended the rooftop solar programme till March 31, 2026. With this, subsidy under the programme will be available until the target for the scheme is achieved. All residential consumers are advised not to pay any additional charges to any vendor on account of fee for application on the National Portal or any additional charges for net–metering or testing.

8. Sukhvinder Singh Sukhu was sworn in as the Chief Minister of which state?

A. Goa

B. Gujarat

C. Himachal Pradesh

D. Uttarakhand

Answer & Explanation

Answer: C. Himachal Pradesh

  • Sukhvinder Singh Sukhu has recently sworn in as the next Chief Minister of Himachal Pradesh. He was a four–time MLA and chairman of the Congress’ state election campaign committee. Mukesh Agnihotri has been selected as the deputy chief minister. The Indian National Congress party won the Himachal Pradesh state assembly elections.

9. As per the Union Jal Shakti Ministry, how many River–linking components have been identified?

A. 10

B. 20

C. 30

D. 50

Answer & Explanation

Answer: C. 30

  • The Union Jal Shakti Minister Gajendra Singh Shekhawat said in Lok Sabha that 30 River–linking components have been identified. National Water Development Agency (NWDA) under the Ministry of Jal Shakti identified 16 links under peninsular rivers component and 14 links under Himalayan component of National Perspective Plan (NPP) for inter basin transfer. Ken–Betwa River link project has been approved with estimated cost of ₹44,605 crore with central support of ₹39,317 crore.

10. Who is the new Chief Minister of Gujarat, after the 2022 assembly elections?

A. Bhupendra Patel

B. Vijay Rupani

C. Anandiben Patel

D. Keshubhai Patel

Answer & Explanation

Answer: A. Bhupendra Patel

  • Bhupendra Patel will continue as the Chief Minister of Gujarat for a second straight term, after the Bharatiya Janata Party (BJP) wins in the state assembly elections. The newly–elected Bharatiya Janata Party (BJP) MLAs elected Bhupendra Patel as the leader of the legislative party.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!