Tnpsc

27th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

27th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 27th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

27th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. OECD நிறுவப்பட்ட ஆண்டு எது?

அ) 1940

ஆ) 1957

இ) 1961

ஈ) 1999

  • பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD) என்பது பன்னாட்டு அரசுகளுக்கிடையேயான ஒரு பொருளியல் அமைப்பாகும். இது, கடந்த 1961ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸை தலைமை இடமாகக்கொண்டு நிறுவப்பட்டது. அண்மையில் வெளியிடப்பட்ட OECD FAO வேளாண் கண்ணோட்டம் 2021-2030’இன்படி, வரும் 2030ஆம் ஆண்டில், உலகளாவிய பருப்பு வகை சந்தையானது தற்போதைய 92 மில்லியன் டன்களிலிருந்து 22 மில்லியன் டன்களாக அதிகரிக்கும். கணிக்கப்பட்டுள்ள இவ்வதிகரிப்பு பெரும்பாலும் ஆசிய நாடுகளிலிருந்து, குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் என்று அவ்வறிக்கை கூறுகிறது.

2. பிரதம அமைச்சர் கானிஜ் க்ஷேத்ரா கல்யாண் யோஜனாவை செயல்படுத்துகிற மத்திய அமைச்சகம் எது?

அ) சுரங்கங்கள் அமைச்சகம்

ஆ) நிலக்கரி அமைச்சகம்

இ) உள்துறை அமைச்சகம்

ஈ) பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம்

  • மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியின் முழு கட்டுப்பாட்டையும் மத்திய அரசு எடுத்துக்கொண்டுள்ளது. சுரங்க குத்தகைதாரர்களிடமிருந்து கட்டாய பங்களிப்பில் பெறப்பட்ட நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் எந்த ஒரு செலவையும் அனுமதிக்கும் (அ) ஒப்புதல் அளிக்கும் மாநிலங்களின் உரிமையை அது நிராகரித்துள்ளது.
  • பிரதம அமைச்சர் கானிஜ் சேத்ரா கல்யாண் யோஜனாவின்கீழ், சுரங்கம் தொடர்புடைய நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் பகுதிகளின் நலனுக்காக மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியங்கள் இந்த நிதியைப் பயன்படுத்த வேண்டும். பழங்குடி மக்கள் இதன் முக்கிய பயனாளிகளாக இருப்பர்.

3. “விகாஸ் எஞ்சினுடன்” தொடர்புடைய அமைப்பு எது?

அ) ISRO

ஆ) DRDO

இ) HAL

ஈ) BHEL

  • இந்திய விண்வெளி ஆய்வு மையமானது (ISRO) விகாஸ் எஞ்சினின் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
  • இது, இந்தியாவின் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தப்படவுள்ள திரவ உந்து எஞ்சினாகும். ககன்யான் திட்டத்திற்காக GSLV Mk-III ஏவுகலத்தின் மைய L110 திரவ கட்டத்தில் இந்த எஞ்சின் பயன்படுத்தப்படும்.

4. ‘FASTER’ / ‘Fast and Secure Transmission of Electronic Records’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் எது?

அ) இந்திய ரிசர்வ் வங்கி

ஆ) இந்திய உச்சநீதிமன்றம்

இ) இந்திய தேர்தல் ஆணையம்

ஈ) மத்திய புலனாய்வு முகமை

  • இந்தியாவின் தலைமை நீதிபதி N V இரமணா, ‘FASTER’ / ‘Fast and Secure Transmission of Electronic Records’ என்ற புதிய திட்டத்தைத் தொடங்கினார். இந்தத் திட்டத்தின்கீழ், சிறை அதிகாரிகள், மாவட்ட நீதி மன்றங்கள் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உடனடியாக பிணை மற்றும் பிற ஆணைகளை அனுப்பும்.
  • இது மின்னணு முறையில் பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளப்படும். தற்போதைய நடைமுறையில், பிணை உத்தரவின் அச்சிடப்பட்ட நகல் நேரிலேயே பெறப்பட்டு வருகிறது.

5. 2021 ஜூலையில் நடைபெற்ற 7ஆவது BRICS தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கு தலைமைதாங்கிய நாடு எது?

அ) பிரேசில்

ஆ) ரஷ்யா

இ) இந்தியா

ஈ) சீனா

  • இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற BRICD தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கு மத்திய தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமைவகித்தார். பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய உறுப்புநாடுகளின் அமைச்சர்கள் அக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
  • வலுவான தேசிய பொருளாதாரம், உள்ளடக்கிய தொழிலாளர் சந்தைகள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைப்புகளுடன் மீண்டுவர ஐந்து நாடுகளும் தீர்மானித்தன. 2020 அக்டோபர்.9 அன்று மாஸ்கோவில் தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சர்களின் ஆறாவது கூட்டத்தை ரஷ்யா ஏற்பாடு செய்திருந்தது.

6. சமீபத்தில் எந்த இருநாடுகளுடன் இணைந்து ‘ஷீல்டு’ என்னும் பெயரிலான ஒரு மெய்நிகர் கடல் பயிற்சியை இந்தியா நடத்தியது?

அ) இலங்கை மற்றும் மாலத்தீவு

ஆ) வங்கதேசம் மற்றும் மாலத்தீவு

இ) ஜப்பான் மற்றும் தாய்லாந்து

ஈ) அமெரிக்கா மற்றும் ரஷ்யா

  • இந்தியவானது இலங்கை மற்றும் மாலத்தீவின் கடற்படைகளுடன் இணைந்து ‘ஷீல்டு’ என்னும் பெயரில் போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப்பயிற்சியை நடத்தியது. மெய்நிகராக இப்பயிற்சி நடைபெற்றது. போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான சிறந்த நடைமுறைகள் மற்றும் நேர்த்தியான நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்பயிற்சியை மும்பை கடல்சார் போர்ப்பயிற்சி மையம் ஒருங்கிணைத்து நடத்தியது.

7. 2021 உலக இளையோர் திறன்கள் நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) Reimagining Youth Skills Post-Pandemic

ஆ) Leaving No one Behind

இ) Skillful World, Safe World

ஈ) Skill Development in Schools

  • ஐநா பொது அவையானது கடந்த 2014ஆம் ஆண்டில், ஜூலை.15ஆம் தேதியை உலக இளையோர் திறன்கள் நாளாக அறிவித்தது.
  • இளையோருக்கு பணிவாய்ப்பு, நல்ல வேலை மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றுக்கான திறன்களை வழங்குவதன் முக்கியத்துவத்தை கொண்டாடும் விதமாக இந்நாள் உருவாக்கப்பட்டது. “Reimagining Youth Skills Post-Pandemic” என்பது நடப்பாண்டின் (2021) இந்த நாளுக்கான கருப்பொருளாகும். UNESCO’இன் கூற்றுப்படி, COVID தொற்று, தொழினுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சித்துறையில் பரவலாக இடையூறு விளைவித்தது. திறன் இந்தியா திட்டத்தின் ஆறாவது ஆண்டுவிழா சமீபத்தில் இந்தியாவில் அனுசரிக்கப்பட்டது.

8. எந்த நாட்டின் தேசிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நாள், உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நாளாக கொண்டாடப்படுகிறது?

அ) ஜப்பான்

ஆ) இந்தியா

இ) தாய்லாந்து

ஈ) சிங்கப்பூர்

  • பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை இந்தியாவில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கமானது 2011ஆம் ஆண்டில் தேசிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நாள் என்ற கருத்தை அறிமுகப்படுத்தியது. அப்போதிருந்து, ஜூலை.15ஆம் தேதி, இந்தியாவில், நாடு முழுவதும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இலவச செயல்பாடுகளைச் செய்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும் நாள் அனுசரிக்கப்பட்டது.
  • சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட உலகத்தலைவர்கள் சபையில், ஜூலை 15ஆம் தேதியானது உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நாளாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

9. ‘பள்ளி புதுமை தூதர் பயிற்சி திட்டத்தை’ வடிவமைத்து அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?

அ) திறன் மேம்பாட்டு அமைச்சகம்

ஆ) கல்வி அமைச்சகம்

இ) பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

ஈ) தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

  • மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும் மத்திய பழங்குடியினர் நலன் அமைச்சர் அர்ஜுன் முண்டாவும் இணைந்து ‘பள்ளி புதுமை தூதர் பயிற்சி திட்டத்தை’ தொடக்கி வைத்தனர். பள்ளி ஆசிரியர்களுக்கான இந்தப் புதுமையான & பிரத்தியேகமான திட்டத்தின்மூலம், புதுமைகள், தொழில்முனைதல், தனிநபர் அறிவுசார் சொத்துரிமை, வடிவமைப்பு சிந்தனை, பொருள் உருவாக்கம், சிந்தனை உருவாக்கம் ஆகியவற்றில் 50,000 ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படும்.
  • கல்வி அமைச்சகத்தின் புதுமைகள் பிரிவு மற்றும் அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி குழுவால் பள்ளி ஆசிரியர்களுக்காக இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

10. வளைகுடா பிராந்தியத்தில் இந்திய கப்பல்களைப் பாதுகாக்க இந்திய கடற்படை மேற்கொண்ட நடவடிக்கையின் பெயர் என்ன?

அ) ஆபரேஷன் வெண்ணிலா

ஆ) ஆபரேஷன் சங்கல்ப்

இ) ஆபரேஷன் பர்ப்பிள்

ஈ) ஆபரேஷன் குரூட்

  • ஓமான் வளைகுடாவில் இரு எண்ணெய்க் கப்பல்களில் வெடிவிபத்து ஏற்பட்டதை அடுத்து, 2019 ஜூனில் ‘ஆபரேஷன் சங்கல்ப்பை’ இந்திய கடற்படை தொடங்கியது.
  • இந்தியகடற்படையின் அலுவல்பூர்வ அறிக்கையின்படி, இந்நடவடிக்கை, ஒவ்வொரு நாளும், வளைகுடா பிராந்தியத்தில் சராசரியாக 16 இந்தியக் கொடியிடப்பட்ட வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பான வழித்தடத்தை வழங்கியுள்ளது. உலங்கூர்தியுடன் கூடிய இந்திய கடற்படை கப்பல் கடந்த 2019 ஜூனிலிருந்து வடமேற்கு அரபிக்கடல், ஓமான் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடாவில் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கார்கில் வெற்றி நாள்:

கார்கில் போரில் வெற்றி பெற்ற தினத்தையொட்டி, அப்போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு ராணுவத்தினரும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மரியாதை செலுத்தினர். லடாக்கில் உள்ள கார்கில் பகுதியில் ஊடுருவி கைப்பற்றுவதற்கு பாகிஸ்தான் இராணுவம் கடந்த 1999ஆம் ஆண்டில் முயற்சி செய்தது. அந்த முயற்சியை இந்திய இராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இருநாட்டு ராணுவங்களுக்குமிடையே நடைபெற்ற போரில் இந்தியா வெற்றிபெற்றது.

போரில் வெற்றி பெற்ற ஜூலை.26ஆம் தேதியானது ஆண்டுதோறும் கார்கில் வெற்றி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. போரின் 22ஆவது வெற்றி தின விழா லடாக்கின் திராஸ் பகுதியில் அமைந்துள்ள கார்கில் போர் நினைவிடத்தில் நடைபெற்றது.

1. In which year was the OECD founded?

A) 1940

B) 1957

C) 1961

D) 1999

  • The Organisation for Economic Co–operation and Development (OECD) is an intergovernmental economic organization, founded in the year 1961 with it headquarter in Paris, France.
  • As per the OECD FAO Agricultural Outlook 2021–2030 released recently, the global pulse market would increase by 22 million tons by 2030 from the present level of 92 million tons. The report further states that the projected increase would come mostly from Asian countries, especially India.

2. Which Union Ministry implements the Pradhan Mantri Khanij Kshetra Kalyan Yojana?

A) Ministry of Mines

B) Ministry of Coal

C) Ministry of Home Affairs

D) Ministry of Women and Child Welfare

  • The Centre has taken complete control of the district mineral foundation (DMF) funds. It has rejected the states’ right to sanction or approve any expenditure out of the funds accrued from mandatory contribution from mining lease holders.
  • Under Pradhan Mantri Khanij Kshetra Kalyan Yojana, The DMFs are required to use these funds for the welfare of persons and areas affected by mining–related operations. The tribal population are the main targeted beneficiaries.

3. “Vikas Engine” is associated with which organization?

A) ISRO

B) DRDO

C) HAL

D) BHEL

  • The Indian Space Research Organisation (ISRO) has successfully conducted the third long–duration hot test of the Vikas Engine – the liquid propellant engine to be used for India’s human mission to space, the Gaganyaan. The engine would be used at the core L110 liquid stage of GSLV Mk III rocket for the Gaganyaan mission.

4. Which institution has launched a new scheme named ‘FASTER’ or ‘Fast and Secure Transmission of Electronic Records’?

A) Reserve Bank of India

B) Supreme Court of India

C) Election Commission of India

D) Central Bureau of Investigation

  • Chief Justice of India N.V. Ramana launched a new scheme called ‘FASTER’ or ‘Fast and Secure Transmission of Electronic Records’.
  • Under the scheme, the Supreme Court will instantly transmit bail and other orders to the jail authorities, district courts and the High Courts. This will be done in a secure way electronically. As per the present practice, hard copy of the bail order received by hand mandated.

5. Which country chaired the 7th BRICS Labour and Employment Ministers’ Meeting, held in July 2021?

A) Brazil

B) Russia

C) India

D) China

  • The Labour Ministers of five BRICS nations –Brazil, Russia, India, China and South Africa took part in the BRICS Labour and Employment Ministers’ Declaration. India’s Union Minister for Labour and Employment Bhupender Yadav chaired the 7th BRICS meeting.
  • The five countries resolved to recover with stronger national economies, inclusive labour markets and social protection systems. Russia organized the 6th meeting of Labour and Employment Ministers in Moscow on October 9, 2020.

6. India recently held a virtual maritime exercise ‘Exercise Shield’, with which countries?

A) Sri Lanka and Maldives

B) Bangladesh and Maldives

C) Japan and Thailand

D) USA and Russia

  • Indian and Sri Lankan Navies and Maldives National Defence Force held a tri–nation table top anti–narcotics and maritime search and rescue exercise, ‘Exercise Shield’.
  • The Table top Exercise held virtually, aims to share best practices and fine–tune procedures to curb narcotics smuggling in the region. Indian Navy’s Western Naval Command was the lead agency and the exercise was coordinated by Maritime Warfare Centre, Mumbai.

7. What is the theme of the World Youth Skills Day 2021?

A) Reimagining Youth Skills Post–Pandemic

B) Leaving No one Behind

C) Skillful World, Safe World

D) Skill Development in Schools

  • In 2014, the United Nations General Assembly (UNGA) declared 15 July as World Youth Skills Day, to celebrate the importance of providing young people with skills for employment, decent work and entrepreneurship. This year, the theme of the World Youth Skills Day is ‘Reimagining Youth Skills Post–Pandemic’.
  • As per UNESCO, COVID–19 pandemic resulted in the widespread disruption of the technical and vocational education and training sector. 6th anniversary of Skill India Mission was also observed in India.

8. Which country’s National Plastic Surgery Day is celebrated as World Plastic Surgery Day?

A) Japan

B) India

C) Thailand

D) Singapore

  • Plastic surgery is said to have originated in India. Association of Plastic Surgeons in India (APSI) introduced the concept of National Plastic Surgery Day in 2011. Since then, on July 15, the day has been observed in India, when Plastic surgeons across the country perform free operations and conduct awareness programmes.
  • At the World Council of Leaders organised recently, July 15 is accepted as World Plastic Surgery Day.

9. Which Union Ministry designed and launched the ‘School Innovation Ambassador Training Program’?

A) Skill Development Ministry

B) Education Ministry

C) Women and Child Development Ministry

D) Information and Broadcasting Ministry

  • Union Education Minister Dharmendra Pradhan along with Tribal Affairs Minister Arjun Munda launched the ‘School Innovation Ambassador Training Program’. The program is jointly designed by Innovation Cell of Education Ministry and AICTE. It aims at training 50,000 school teachers on Innovation, Entrepreneurship, IPR, Design Thinking, Product development, among others.

10. What is the name of the operation launched by the Indian Navy to protect Indian vessels in the Gulf region?

A) Operation Vanilla

B) Operation Sankalp

C) Operation Purple

D) Operation Crude

  • Operation Sankalp was launched by the Indian Navy in June 2019, after there were explosions on board two oil tanker ships in the Gulf of Oman. As per the official statement of the Indian Navy, the operation has provided safe passage to an average of 16 Indian–flagged merchant vessels in the Gulf region every day.
  • The Indian Navy ship with an integral helicopter has been continuously deployed in the north–west Arabian Sea, Gulf of Oman and Persian Gulf from June 2019.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!