Tnpsc

27th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

27th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 27th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

27th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. மாநிலத்தில் COVID தொற்றுநோய் குறித்த தகவல்களை வழங்க ‘அம்ரித் வாகினி’ மற்றும் ‘சாட்போட்’ ஆகிய செயலிகளை அறிமுகம் செய்துள்ள மாநில அரசு எது?

அ) பீகார்

ஆ) ஹிமாச்சல பிரதேசம்

இ) ஜார்க்கண்ட்

ஈ) சத்தீஸ்கர்

  • ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் சமீபத்தில், ‘அம்ரித் வாகினி’ மற்றும் ‘சாட்போட்’ ஆகிய செயலிகளை அறிமுகப்படுத்தினார். ‘அம்ரித் வாகினி’ செயலி அல்லது வலைத்தளத்தின்மூலம் மருத்துவமனை படுக்கைகள் இருப்பு மற்றும் படுக்கையை பதிவுசெய்வது குறித்த அனைத்து தகவல்களையும் ஆன்லைனில் பெறலாம். ‘சாட்போட்’மூலம், COVID தொடர்பான பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், பரிந்துரைக்கப்பட்ட உணவு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஒருவர் பெறலாம்.

2. ஹையாங் 2D என்பது எந்த நாட்டால் ஏவப்பட்ட புதிய புவி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும்?

அ) தென் கொரியா

ஆ) ஈரான்

இ) சீனா

ஈ) இஸ்ரேல்

  • லாங் மார்ச்-4B ஏவுகலத்தின்மூலம் ஹையாங்-2D (HY-2D) என்ற ஒரு புதிய பெருங்கடல் கண்காணிப்பு செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக ஏவியது. இச்செயற்கைக்கோள் அனைத்து விதமான வானிலை மற்றும் கடற்சூழல் கண்காணிப்பு அமைப்பை உருவாக்குவதற்காக HY-2B மற்றும் HY-2C ஆகிய செயற்கைக்கோள்களுடன் இணைந்து ஒரு தொகுப்பை உருவாக்கும். கடல் பேரிடர்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கும் அமைப்பை சீனா உருவாக்கி வருகிறது.

3.  ‘டெர்மட்டாலஜி அசிஸ்ட்’ என்பது எந்த நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட, செயற்கை நுண்ணறிவில் இயங்கும் கருவியாகும்?

அ) கூகிள்

ஆ) ஆப்பிள்

இ) சாம்சங்

ஈ) மைக்ரோசாப்ட்

  • கூகிளின் I/O டெவலப்பர் மாநாட்டின்போது, கூகிள் நிறுவனம் ‘டெர்மட் -டாலஜி அசிஸ்ட்’ என்ற கருவியை அறிமுகப்படுத்தியது. இது திறன்பேசி நிழற்படக்கருவிகளைப்பயன்படுத்தி தோல் நோய்களைக் கண்டறிகிறது. இந்தக் கருவி இணையத்தை அடிப்படையாகக்கொண்டு இயங்குகிறது. இவ்வாண்டின் பிற்பகுதியில், சோதனை அடிப்படையில் கூகிள் இதனை அறிமுகம் செய்யவுள்ளது. இது தோல், முடி மற்றும் நகங்கள் தொடர்பான சிக்கல்களைப் புரிந்துகொள்ள பயனருக்கு உதவுகிறது.

4. LaMDA (Language Model for Dialogue Applications) என்பது எந்த நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட, செயற்கை நுண்ணறிவில் (AI) இயங்கும் கருவியாகும்?

அ) கூகிள்

ஆ) ஆப்பிள்

இ) சாம்சங்

ஈ) மைக்ரோசாப்ட்

  • கூகிள் நிறுவனம் அண்மையில் தனது செயற்கை நுண்ணறிவில் (AI) இயங்கும் நவீன நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. அது, பல்வேறு தலைப்புகளில் உரையாடல்களை மேற்கொள்ள அனுமதிக்கிறது. LaMDA (Language Model for Dialogue Applications) எனப் பெயரிடப்பட்ட இது ஒரு எந்திரகற்றல் நுட்பமாகும். அது தனக்கும் பயனர்களுக்கும் இடையிலான உரையாடல்களை செயல்படுத்துகிறது. இது இயலிகளின் அடுத்த கட்டம் எனக் கூறப்படுகிறது.

5. COVID தொடர்பான நன்கொடைகளுக்கு வசூலிக்கப்பட்ட GST’ஐ திருப்பிச்செலுத்திய முதல் மாநிலம் எது?

அ) ஆந்திர பிரதேசம்

ஆ) ஹரியானா

இ) இராஜஸ்தான்

ஈ) பஞ்சாப்

  • மாநில அரசு மற்றும் அரசுசார் நிறுவனங்களுக்கு COVID தொடர்பாக செலுத்தப்பட்ட நன்கொடைகளின்போது வசூலிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியை (GST) திருப்பிச் செலுத்திய நாட்டின் முதல் மாநிலமாக ஹரியானா திகழ்கிறது. நிபந்தனைகளுக்கு உட்பட்டு இதுபோன்ற COVID தொடர்பாக ஏற்கனவே பெறப்பட்ட GST’ஐ ஹரியானா திருப்பிச் செலுத்தும். நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் முயற்சிகளை ஊக்குவிப்பதும், உயிர்வளி செறிவூட்டிகள், COVID தடுப்பூசிகள், ரெம்டெசிவிர் ஊசி போன்றவற்றை நன்கொடையாக பெறுதையும் நோக்கமாகக்கொண்ட இந்த நடவடிக்கை ஜூன்.30 வரை பொருந்தும்.

6. சுற்றுச்சூழல் அறிவியலைப் பொருத்தவரை, சமீபத்திய செய்திகளி -ல் இடம்பெற்ற A76 என்றால் என்ன?

அ) தவளை

ஆ) பனிப்பாறை

இ) பாசி

ஈ) பூஞ்சை

  • ஐரோப்பிய விண்வெளி ஆய்வு முகமையின் சமீபத்திய தரவுகளின்படி, அண்டார்டிகாவில் உள்ள ரோனே பரப்பிலிருந்து உடைந்த பனிப்பாறை A76, வெடெல் கடலில் மிதக்கிறது. 170 கிமீ நீளமும் 25 கிமீ அகலமும் கொண்ட இது, உலகின் மிகப்பெரிய பனிப்பாறை என்று கூறப்படுகிறது. அண்டார்டிகா பனிக்கட்டிகள், புவியின் மற்ற பகுதிகளைவிட வேகமாக வெப்பமடைந்து வருகிறது. இதனால் வெடெல் கடலைச்சுற்றி பனிக்கட்டிகளும் பனிப்பாறைகளும் மிதந்து வருகின்றன.

7. DAP உரத்திற்கான மானியத்தை அரசாங்கம் 140% உயர்த்தி உள்ளது. DAP என்பது எதைக் குறிக்கிறது?

அ) Diammonium Phosphate

ஆ) Dialuminium Phosphate

இ) Dichloride Pottasium

ஈ) Dihydroxyacetone phosphate

  • டை அமோனியம் பாஸ்பேட் (DAP) உரத்திற்கான மானியத்தை பை ஒன்றுக்கு `1,200ஆக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பன்னாட்டளவில் பாஸ்போரிக் அமிலம், அம்மோனியா போன்றவற்றின் விலைகள் அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு உரங்களின் விலை குறித்த உயர்மட்டக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

8. UNESCO’இன் உலக பாரம்பரிய தளங்களின் தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சாத்புரா புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) மகாராஷ்டிரா

ஆ) மத்திய பிரதேசம்

இ) ஒடிஸா

ஈ) மேற்கு வங்கம்

  • கலாச்சார அமைச்சின் சமீபத்திய அறிவிப்பின்படி, இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம், 6 இந்திய தளங்களை UNESCO’இன் உலக பாரம்பரிய தளங்களின் தற்காலிக பட்டியலில் சமர்ப்பித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் சாத்புரா புலிகள் காப்பகம், வாரணாசியின் ஆற்றங்கரை, கர்நாடக மாநிலத்தின் ஹைர் பெங்கலில் உள்ள பெருங்கற்கால தளம், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மராத்தா இராணுவ கட்டடக்கலை, ஜபல்பூரின் நர்மதா பள்ளத்தாக்கிலுள்ள பெடகாட்-லாமெதகாட், தமிழ்நாட் -டின் காஞ்சியில் உள்ள கோவில்கள் ஆகியவை அந்த 6 இடங்களாகும்.

9. சமீபத்தில் ICMR’ஆல் ஒப்புதல் அளிக்கப்பட்ட ‘Coviself’ என்றால் என்ன?

அ) COVID மருந்து

ஆ) COVID தன்பரிசோதனைக்கருவி

இ) வீட்டுப்பயன்பாடுக்கான  உயிர்வளி உருளை

ஈ) உயிர்வளி செறிவூட்டிகள்

  • மைலேப் டிஸ்கவரி சொல்யூசன்ஸ் உருவாக்கிய COVID-19’க்கான தன் பரிசோதனைக் கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட இதற்கு ‘Coviself’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ICMR வழிகாட்டுதல்களின்படி, அறிகுறியுள்ள நபர்கள் இந்தக்கருவியைப்பயன்படுத்தலாம்.
  • அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் RAT’ஆல் எதிர்மறையான முடிவு பெற்றவர்கள் RTPCR’ஆல் பரிசோதிக்கப்பட வேண்டும் என்றும் ICMR எச்சரித்துள்ளது.

10. தஹானு கோல்வாட் சபோட்டா என்பது எந்த மாநிலத்திலிருந்து புவிசார் குறியீடு பெற்ற தயாரிப்பாகும்?

அ) தமிழ்நாடு

ஆ) மகாராஷ்டிரா

இ) கேரளா

ஈ) ஒடிஸா

  • மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தைச் சார்ந்த புவிசார் குறியீடு பெற்ற தஹானு கோல்வாட் சபோட்டா சரக்கு ஐக்கிய பேரரசிற்கு அனுப்பப்பட்டது. இப்பழம் அதன் இனிமையான மற்றும் தனித்துவமான சுவைக்கு பெயர் பெற்றது. கோல்வாட் கிராமத்தின் கால்சியம் நிறைந்த மண்ணிலிருந்து தனித்துவமான இந்தச் சுவை பெறப்படுவதாக நம்பப்படுகிறது. பால்கர் மாவட்டத்தில், சுமார் 5000 ஹெக்டேர் நிலம் சபோட்டா தோட்டமாக உள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ‘முத்ரா’ திட்டத்தில் ஆறு ஆண்டுகளில் `15 இலட்சம் கோடி கடன் வழங்கல்: மத்திய நிதியமைச்சகம்

பிரதமரின் ‘முத்ரா’ கடன் திட்டத்தின்கீழ் கடந்த ஆறு ஆண்டுகளில் 28.81 கோடி பேருக்கு `15.10 இலட்சம் கோடி கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது. தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 2015 ஏப்ரல் 8-ஆம் தேதி ‘முத்ரா’ கடன் திட்டத்தை பிரதமர் மோடி தொடக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக நிதியமைச்சகத்தின்கீழ் வரும் நிதிச்சேவைகள் துறை சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘நடப்பாண்டு மார்ச் 26 வரை முத்ரா திட்டத்தின் கீழ் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் 28.81 கோடி பேருக்கு `15.10 இலட்சம் கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளன.

இத்திட்டத்தின்கீழ் ‘சிஷு’, ‘கிஷோர்’, ‘தருண்’ ஆகிய மூன்று பிரிவுகளில் மொத்தமாக `10 இலட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படுகிறது. உற்பத்தி, வர்த்தகம், சேவைத்துறைகள், வேளாண்சார் நடவடிக்கைகள் ஆகியவற்றின்மூலம் வருவாய் ஈட்டும் தொழிலில் ஈடுபடுவதற்காக இந்தக் கடன் வழங்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறு தொழில்களுக்கு உதவும் வகையில் அந்த ஆண்டு மே மாதம் பொருளாதார ஊக்குவிப்பு தொகுப்பு அறிவிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, முத்ரா திட்டத்தின் ‘சிஷு’ பிரிவில் கடன் பெற்றவா்களுக்கு 2 சதவீதம் வட்டிச் சலுகை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. ‘சிஷு’ பிரிவில் `50,000 வரை பிணையில்லா கடன் வழங்கப்படுகிறது. பின்னர் 2020 மார்ச்.31 வரை நிலுவையில் இருக்கும் கடன் கணக்குகளுக்கும் இந்தச் சலுகை நீட்டிக்கப்பட்டது. அந்த ஆண்டு மார்ச் கடைசி நிலவரப்படி, ‘சிஷு’ பிரிவின் கீழ் உள்ள `1.62 இலட்சம் கோடி மதிப்பிலான சுமார் 9.37 கோடி கடன் கணக்குகள் நிலுவையில் உள்ளன.

2. ‘30.54 கோடி டன் உணவு தானியங்கள் 2020-21 நிதியாண்டில் விளைவிக்கப்படும்’

2020-21ஆம் ஆண்டுக்கான முக்கிய வேளாண் பயிர்களின் மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீடுகளை வேளாண், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, உணவு தானியங்களின் மொத்த விளைச்சல் சாதனை அளவாக 30.54 கோடி டன்களாக மில்லியன் டன்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

3. கவிஞர் வைரமுத்துவுக்கு ஓ என் வி இலக்கிய விருது

கேரளத்தில் இலக்கியத்துக்கான உயர்ந்த தேசிய விருதாக வழங்கப்படும் ஓ என் வி இலக்கிய விருது இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்படுகிறது. மலையாளி அல்லாத ஒருவர் பெறும் முதல் விருது இதுதான். ஓ என் வி பண்பாட்டுக் கழகம் இந்த விருதை வழங்குகிறது.

மலையாளப்பெருங்கவிஞர்களுள் ஒருவர் ஓ என் வி குறுப். சிறந்த இலக்கி -யவாதியாகவும் பாடலாசிரியராகவும் விளங்கியவர். இந்தியாவின் உயர் -ந்த இலக்கிய விருதான ஞானபீட விருதுபெற்றவர். சிறந்த பாடலுக்கென ஒரு தேசிய விருதும் பெற்றவர். 25 கவிதைத்தொகுதிகளை வெளியிட்டிரு -க்கிறார். அவர் பெயரால் 2017இல் நிறுவப்பட்டது ஓ என் வி இலக்கிய விருது. இதுவரை சுகதகுமாரி, எம் டி வாசுதேவன் நாயர், அக்கிதம் அச்சுத -ன் நம்பூதிரி, லீலாவதி போன்ற மூத்த மலையாளப் படைப்பாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதில் எம் டி வாசுதேவன் நாயர், அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி இருவரும் ஞானபீட விருதுகளையும் பெற்றவர்கள்.

இந்த ஆண்டுதான் மலையாளி அல்லாத ஓர் இலக்கியவாதிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இது அகில இந்திய அளவில் வழங்கப்படும் தேசிய விருதாகும். இந்திய இலக்கியத்திற்கு கவிஞர் வைரமுத்துவின் ஒட்டுமொத்த பங்களிப்பைப் பாராட்டி இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த விருது ஒரு சிலை, ஒரு தகுதிப்பட்டயம் மற்றும் `3 இலட்சம் ரொக்கம் கொண்டதாகும். ஓ என் வி குறுப் ஒரு கவிஞராகவும் பாடலாசிரியராகவும் திகழ்ந்ததுபோல், கவிஞர் வைரமுத்துவும் கவிஞராகவும் பாடலாசிரியராக -வும் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

1. Which state has launched ‘Amrit Vahini’ App and ‘Chatboat’ App, to provide information about Covid pandemic in the state?

A) Bihar

B) Himachal Pradesh

C) Jharkhand

D) Chhattisgarh

  • Jharkhand Chief Minister Hemant Soren recently launched the ‘Amrit Vahini’ App and a ‘Chatboat’ App. Though ‘Amrit Vahini’ App or website one can get all information about the availability of hospital beds and book bed online. Through Chatboat, one may get all information related to coronavirus, like the medicines prescribed for it, recommended diet, or free consultation with doctors.

2. Haiyang 2D is the new earth observation satellite launched by which country?

A) South Korea

B) Iran

C) China

D) Israel

  • China successfully sent a new ocean–monitoring satellite Haiyang–2D (HY–2D) into orbit, on board the Long March–4B rocket. This satellite will form a constellation with the HY–2B and HY–2C satellites to build an all–weather and round–the–clock dynamic ocean environment monitoring system. China is creating such a system which would provide early warning on marine disasters.

3. ‘Dermatology assist’ is an AI powered tool to detect skin disease, introduced by which company?

A) Google

B) Apple

C) Samsung

D) Microsoft

  • During the Google’s I/O developer conference, the company introduced AI–powered dermatology assist tool, which can detect skin diseases using smartphone cameras. The tool is a web–based application that the company would launch as a pilot later this year. It enables the user understand the issues related to skin, hair and nails.

4. LaMDA (Language Model for Dialogue Applications) is an AI–driven technique being introduced by which company?

A) Google

B) Apple

C) Samsung

D) Microsoft

  • Google has recently introduced its latest AI–driven technique, that will allow people to have conversations on various topics, open–endedly. Named as LaMDA (“Language Model for Dialogue Applications”), it is a machine learning technique that enables a conversational interaction between itself and users. This is said to be the next step to chatbots which are limited to pre–fixed responses.

5. Which is the first state to reimburse GST on Covid–related donations?

A) Andhra Pradesh

B) Haryana

C) Rajasthan

D) Punjab

  • Haryana became the first state in the country to reimburse Goods and services tax (GST) paid on Covid–related donations made to the state and state–run organisations. Haryana will reimburse GST already paid on such Covid–19 related items, subject to conditions.
  • This move, which will be applicable till June 30, is aimed at encouraging efforts by corporations, NGOs and individuals and facilitate donations of oxygen concentrators, Covid–19 vaccines, Remdesivir injections, etc.

6. With reference to Environmental Science, what is A–76, which was seen in news recently?

A) Frog

B) Iceberg

C) Moss

D) Fungus

  • As per the recent data from the European Space Agency, the Iceberg A–76 broke from the western side of the Ronne Ice Shelf in Antarctica is now floating on the Weddell Sea. This is said to be the largest iceberg in the world as it measures around 170 kilometers long and 25 kilometers wide. The Antarctica ice sheet is warming faster than the rest of the planet, causing melting of snow, ice covers and the retreat of glaciers, around the Weddell Sea.

7. Government raises subsidy on DAP fertiliser by 140%. What does DAP stand for?

A) Diammonium Phosphate

B) Dialuminium Phosphate

C) Dichloride Pottasium

D) Dihydroxyacetone phosphate

  • The Central Government announced to hike the fertiliser subsidy to Rs 1,200 per bag of Diammonium Phosphate (DAP). This decision has been taken in a high–level meeting on the issue of fertiliser prices after taking into account of the rising prices of phosphoric acid, ammonia etc internationally.

8. Satpura Tiger Reserve, which has been added to the tentative list of UNESCO’s world heritage sites, is located in which Indian state?

A) Maharashtra

B) Madhya Pradesh

C) Odisha

D) West Bengal

  • The Archaeological Survey of India have submitted six Indian sites to the tentative list of UNESCO’s world heritage sites, as per the recent announcement of Culture Ministry. The six sites are namely Satpura Tiger Reserve in Madhya Pradesh, Iconic riverfront of the historic city of Varanasi, Megalithic site of Hire Benkal in Karnataka, Maratha Military Architecture in Maharashtra, Bhedaghat–Lametaghat in Narmada Valley– Jabalpur, and temples of Kanchipuram (Tamil Nadu).

9. What is ‘Coviself’, that was recently approved by ICMR?

A) COVID Medicine

B) COVID Self–test kit

C) Home Use Oxygen Cylinder

D) Oxygen Concentrator

  • French President Emmanuel Macron hosted the Paris summit for African, European and financial leaders. They agreed on a plan to help The Indian Council of Medical Research (ICMR) has approved the self–use Rapid Antigen Test for Covid–19 developed by Mylab Discovery Solutions. The test has been developed in India and is named as CoviSelf. Symptomatic individuals and immediate contacts of confirmed cases can use this self–use, as per ICMR guidelines. ICMR also warned that those who are symptomatic and test negative by RAT should get tested by RTPCR.

10. Dahanu Gholvad Sapota is a Geographical Indication (GI) certified product from which state?

A) Tamil Nadu

B) Maharashtra

C) Kerala

D) Odisha

  • A consignment of Dahanu Gholvad Sapota, a Geographical Indication (GI) certified product from Palghar district of Maharashtra was shipped to the United Kingdom. The fruit is known for its sweet and unique taste and it is believed that the unique taste is derived from calcium rich soil of Gholvad village. In the Palgahr district, around 5000 hectares of land is under sapota plantation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!