TnpscTnpsc Current Affairs

27th & 28th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

27th & 28th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 27th & 28th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. இந்தியாவில் உள்ள 51 புலிகள் காப்பகங்களிலும் அக்.2ஆம் தேதி தொடங்கிய புலிப்பேரணியின் கருப்பொருள் என்ன?

அ) Amrut Bharat

ஆ) India for Tigers – A Rally on Wheels 

இ) Atma Nirbhar Tigers

ஈ) Tiger on Wheels

  • மத்திய சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்ற அமைச்சர் பூபேந்தர் யாதவ், “India for Tigers – A Rally on Wheels” என்ற கருப்பொருளின்கீழ், நாட்டில் உள்ள 51 காப்பகங்களில் ஒரு பேரணியைத் தொடங்கினார். ‘ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்’ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இது தொடங்கப்பட்டுள்ளது.

2. ‘The State of Climate Services 2021: Water’ என்ற பெயரிலான அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

அ) WMO 

ஆ) FAO

இ) NITI ஆயோக்

ஈ) NABARD

  • உலக வானிலை அமைப்பானது (WMO) சமீபத்தில் ‘The State of Climate Services 2021: Water’ என்ற தலைப்பிலான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கை உலக வானிலை அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்டது மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள், மேம்பாட்டு முகமைகள் மற்றும் அறிவியல் நிறுவனங்களின் உள்ளீடுகளை உள்ளடக்கியது. இவ்வறிக்கையின்படி, 2018ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 3.6 பில்லியன் மக்களுக்கு ஓர் ஆண்டில் ஒருமாதகாலத்திற்கு போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. இந்த நிலை, 2050ஆம் ஆண்டில், ஐந்து பில்லியனைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3. சமீப செய்திகளில் இடம்பெற்ற ‘Mosquirix’ என்பது எந்த நோய்க்கு எதிராக WHO’ஆல் அங்கீகரிக்கப்பட்ட முதல் தடுப்பூசியாகும்?

அ) டெங்கு

ஆ) மலேரியா 

இ) ஜிகா

ஈ) மேற்கு நைல் வைரஸ்

  • உலக நலவாழ்வு அமைப்பானது குழந்தைகளுக்கான முதல் மலேரியா தடுப்பூசியைப் பயன்படுத்த பரிந்துரைத்துள்ளது. WHO குழு RTS, S/AS01 மலேரியா அல்லது Mosquirix – பிரித்தானிய மருந்து தயாரிப்பாளரான கிளாக்ஸோஸ்மித்கிளைன் உருவாக்கிய தடுப்பூசியை அங்கீகரித்தது. உலக நலவாழ்வு அமைப்பின் கூற்றுப்படி (WHO), மலேரியா, ஒவ்வோர் ஆண்டும் சுமார் 500,000 மக்களைக் கொல்கிறது; அவர்களுள் பாதி பேர் ஆப்பிரிக்காவில் உள்ள சிறார்களாவர்.

4. சமீபத்தில் புவிசார் குறியீடு பெற்ற, ‘ஜூடிமா’ என்ற ஒருவகை மதுவானது பின்வரும் எந்த மாநிலத்தில், வீட்டிலேயே தயாரிக்கப்ப -டுகிறது?

அ) அஸ்ஸாம் 

ஆ) மணிப்பூர்

இ) மேகாலயா

ஈ) மேற்கு வங்காளம்

  • அஸ்ஸாம் மாநிலத்தின் திமாசா ஹசாவ் மாவட்டத்தைச் சேர்ந்த திமாசா பழங்குடியினரால் வீட்டிலேயே தயாரிக்கப்படும் அரிசி மதுவான ‘ஜூடிமா’ என்ற ஒருவகை மதுவுக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இது வெளிர் மஞ்சள் (அ) சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. மெல்லிய நறுமணத்தில் அரிசிகொண்டு தயாரிக்கப்படும் புளிக்கவைக்கப்பட்ட பானமாகும் இது. இப்பானம் அவர்களின் பாரம்பரியத்தின் ஒரு முக்கிய பகுதியாக விளங்குகிறது.

5. 2021ஆம் ஆண்டு நோபல் பரிசை வென்ற அப்துல்ரசாக் குர்னா சார்ந்த நாடு எது?

அ) இஸ்ரேல்

ஆ) தான்சானியா 

இ) அமெரிக்கா

ஈ) ஆஸ்திரேலியா

  • தான்சானிய நாவலாசிரியர் அப்துல்ரசாக் குர்னா, காலனித்துவம் மற்றும் அகதிகள் மீதான தனது இலக்கியப் படைப்புகளுக்காக 2021ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசை வென்றார். 1948’இல் பிறந்த அப்துல்ரசாக் குர்னா, இந்தியப் பெருங்கடலில் உள்ள சான்சிபார் தீவில் வளர்ந்தார். 1960’களின் இறுதியில் அகதியாக இங்கிலாந்து நாட்டுக்குச் சென்றார்.

6. 2021 – உலக போலியோ நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ) Leaving No one behind

ஆ) Delivering on a Promise 

இ) Inclusive and Inspirational

ஈ) No Polio World

  • போலியோ சொட்டு மருந்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், போலியோவை ஒழிக்கவுமாக ஒவ்வோராண்டும் அக்டோபர்.24 அன்று உலக போலியோ நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. “Delivering on a Promise” என்பது 2021ஆம் ஆண்டு உலக போலியோ நாளுக்கானக் கருப்பொருளாகும். போலியோமைலிட்டிஸுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கிய முதல் குழுவை வழிநடத்திய ஜோனாஸ் சால்க் பிறந்ததை நினைவுகூரும் வகையில், ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பால் உலக போலியோ நாள் நிறுவப்பட்டது.

7. ஐக்கிய நாடுகள் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) அக்டோபர் 21

ஆ) அக்டோபர் 24 

இ) அக்டோபர் 25

ஈ) அக்டோபர் 27

  • கடந்த 1945ஆம் ஆண்டில் ஐநா சாசனம் அமலுக்கு வந்ததன் நினைவாக ஒவ்வோராண்டும் அக்.24 அன்று ஐநா நாள் அனுசரிக்கப்படுகிறது. ஐநா, அதிகாரப்பூர்வமாக 24 அக்டோபர் 1945 அன்று நடைமுறைக்கு வந்தது. 2021ஆம் ஆண்டு, ஐநா’இன் 76ஆவது ஆண்டு நிறைவைக்குறிக்கிறது. ஐநா சாசனம் என்பது உலகளாவிய அமைதி மற்றும் சமத்துவத்தை நோக்கிச் செயல்பட்டு வரும் ஐநா’இன் நிறுவன ஆவணமாகும்.

8. 2021 – ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகளுக்கான உயரிய விருதான சாகரோவ் பரிசு, யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

அ) விளாடிமிர் புதின்

ஆ) அலெக்ஸி நவல்னி 

இ) கோத்தபய இராஜபக்ச

ஈ) நரேந்திர மோடி

  • சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு, ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகளுக்கான உயரிய விருதான சாகரோவ் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அபாரமான தனிப்பட்ட துணிச்சலைப்பாராட்டி, ஐரோப்பிய நாடாளுமன்றம் அவருக்கு இந்தப் பரிசை வழங்கியுள்ளது. ரஷ்யாவின் ஆளும் அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிராக அவர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

9. தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், ‘சிறந்த திரைப் பட’த்திற்கான விருதை வென்ற திரைப்படம் எது?

அ) மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம் 

ஆ) சிச்சோர்

இ) அசுரன்

ஈ) கேசரி

  • தில்லியிலுள்ள விஞ்ஞான் பவனில் வைத்து 67ஆவது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையா வழங்கினார். சிறந்த திரைப்படத்திற்கான விருது பிரியதர்ஷனின் மலையாளத்திரைப் படமான “மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கத்திற்கு” வழங்கப்பட்டது.
  • மணிகர்னிகா மற்றும் பங்கா படங்களில் நடித்ததற்காக ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத், ‘சிறந்த நடிகை’க்கான விருதை வென்றார். சிறந்த நடிகருக்கான விருதை ‘போன்ஸ்லே’ படத்திற்காக மனோஜ் பாஜ்பாய் மற்றும் ‘அசுரன்’ படத்திற்காக தனுஷ் ஆகியோர் பெற்றனர்.

10. 2021 – கொங்கன் சக்தி என்பது இந்தியாவிற்கும் பின்வரும் எந்நாட்டிற்கும் இடையிலான முதல் முப்படைகளின் கூட்டுப்பயிற்சி ஆகும்?

அ) இங்கிலாந்து (UK) 

ஆ) அமெரிக்கா

இ) பிரான்ஸ்

ஈ) ஜப்பான்

  • 2021 – கொங்கன் சக்தி என்பது இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் (UK) இடையிலான முதல் முப்படைகளின் கூட்டுப் பயிற்சியாகும். ஒருவார காலம் நடக்கும் இப்பயிற்சி சமீபத்தில் தொடங்கியது. இப்பயிற்சியானது பரஸ்பர அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வெளிப்படுத்துவதற்கும் ஒரு தளமாக இருக்கும். இப்பயிற்சியின் கடல்சார் பயிற்சிப் பகுதி இந்தியாவின் மேற்கு கடற்கரையில் நடத்தப்படும் மற்றும் துறைமுகம்சார் பயிற்சி மும்பையில் நடைபெறும். இப்பயிற்சியின் தரைசார் பயிற்சி உத்தரகாண்டில் உள்ள சௌபதியாவில் நடைபெறும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரிசெய்ய ரூ.200 கோடியில் – ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் இன்று தொடக்கம்:

‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை மரக்காணத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பள்ளிக்குழந்தைகளின் கற்றலில் ஏற்பட்டுள்ள இடைவெளியை சரிசெய்யும் நோக்கில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் (எஸ்எஸ்ஏ) சார்பில் ‘இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டம் `200 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.

குழந்தைகளின் கற்றல் இடைவெளியை குறைக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டம்மூலம் பள்ளிக்குழந்தைகளுக்கு தினமும் மாலை வேளையில் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் போன்றவைமூலம் மகிழ்ச்சியான முறையில் தன்னார்வலர்கள் கற்றுக்கொடுப்பார்கள்.

சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, நீலகிரி, மதுரை, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

2. சிறப்பாக பணியாற்றும் போலீஸாருக்கு நட்சத்திர காவலர் விருது: காவல் ஆணையர் அறிவிப்பு

சிறப்பாக பணியாற்றும் போலீஸாருக்கு இனி கூடுதலாக ஒவ்வொரு மாதமும் விருது வழங்கப்படும். கூடுதல் காவல் ஆணையர் (தலைமையிடம்) தலைமையிலான குழு, சென்னை பெருநகரகாவல் துறையில் சிறப்பான போலீஸாரை கண்டறிந்து அவர்களது பணியைமதிப்பிட்டு ‘மாதத்தின் நட்சத்திர காவலர்’ என்றவிருதை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

‘மாதத்தின் நட்சத்திரகாவலர்’ விருதை பெறதேர்ந்தெடுக்கப்படும் காவல -ருக்கு `5000 பண வெகுமதியுடன், தனிப்பட்ட செயல் திறன் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படும்.

3. அமெரிக்கா: ஹிந்து பாரம்பரிய மாதமாக அக்டோபர் அறிவிப்பு

இந்த மாதத்தை ஹிந்து பாரம்பரிய மாதமாகக் கொண்டாட அமெரிக்க ஹிந்துக்கள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்க ஹிந்து அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அக்டோபர் மாதவாக்கில்தான் நவராத்திரி, தசரா, துர்கா பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்கள் கொண்டாடுகின்றனர். எனவே, அமெரிக்காவில் ஹிந்து பாரம்பரிய மாதமாகக் கொண்டாட அக்டோபர்தான் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று ஹிந்து அமைப்பினர் முடிவு செய்தனர்.

4. இந்தியாவில் அவதாரம் எடுத்துள்ள புதிய உருமாற்ற கொரோனா: அடுத்த பயங்கரமா ஏஒய் 4.2? வேகமாக பரவும் தன்மை கொண்டதால் பீதி

இங்கிலாந்தைத் தொடர்ந்து இந்தியாவில் பரவியிருக்கும் ஏஒய் 4.2 எனும் புதிய வகை டெல்டா வைரஸ், கொரோனாவின் அடுத்த ஆதிக்கம் செலுத்தும் உருமாற்ற வரிசையா என மக்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது. இது குறித்து இங்கிலாந்து மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். உலகையே வாட்டி வதக்கிய கொரோனா வைரஸ் ஒருவழியாக ஓய்ந்துவிட்டது என மக்கள் நிம்மதி அடைந்துள்ள நிலையில், இங்கிலாந்தில் ஏஒய் 4.2 எனும் புதிய வகை டெல்டா வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டது. தற்போது அதிகளவில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இங்கிலாந்தில் தினசரி கொரோனா பாதிப்பு தற்போது அதிகரிக்க, ஏஒய் 4.2 வைரசே காரணம் என ஆய்வு முடிவுகள் கூறி உள்ளன. இதனால் டெல்டா வைரசை போல, அதிகளவில் மக்களை தொற்றும் அடுத்த ஆதிக்கம் செலுத்தும் உருமாற்ற வகை வைரசாக ஏஒய் 4.2 இருக்குமா? என மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியாவிலும் இந்த வகை வைரஸ் பரவி இருக்கிறது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மாதிரிகளில் 17 மாதிரிகள் ஏஒய் 4.2 வகை வைரஸ் பாதிப்புக்குள்ளான -வை என உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே டெல்டாவின் மற்றொரு வீரியம்மிக்க ஏஒய்-4 வகை வைரசும் பரவத் தொடங்கியிருக்கிறது. எல்லாம் முடிந்துவிட்டது என எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தப் புதிய பிறழ்வுகள் குறித்து நாம் கவலைகொள்ளவேண்டுமா என்பது குறித்து இங்கிலாந்து ஆய்வாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

கொரோனாவின் மரபணு மாற்றங்கள் மற்றும் புதிய வகை வைரஸ்களை கண்காணிப்பதற்கான எடின்பர்க் மற்றும் ஆக்ஸ்போர்டு ஆய்வாளர்களை கொண்ட கூட்டுக் குழு கூறியதாவது:

ஏஒய் 4.2 என்பது டெல்டா வைரசின் பரம்பரையாகும். தற்போது, இதே மரபணுவில் பல்வேறு உருமாற்றங்களுடன் 75 ஏஒய் பரம்பரை வைரஸ்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் ஏஒய் 4.2 வகை வைரஸ் இங்கிலாந்தில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 28 நாட்களில் 63% மாதிரிகளில் ஏஒய் 4.2 வரை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரசில் ஒய்145எச் மற்றும் ஏ222வி ஆகிய இரு மரபணு உருமாற்றங்கள் காணப்படுகின்றன.

இதில், ஒய்145எச் உருமாற்றம் நோய் எதிர்ப்பிலிருந்து தப்பித்து தாக்கக் கூடிய திறன் கொண்டது. ஆனாலும், ஏஒய் 4.2 வகை வைரஸ் இங்கிலாந்து தவிர ஜெர்மனி, அயர்லாந்து, டென்மார்க்கிலும் பரவி இருக்கிறது. அங்கு பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. இதன் பரவல் படிப்படியாக மட்டுமே இருப்பதால், இது டெல்டா வைரஸ் அளவுக்கு வீரியமிக்கதாக இருக்காது என நம்பலாம். எனவே, ஏஒய் 4.2 வகை வைரஸ் கொரோனாவின் அடுத்த பயங்கரமாக இருக்குமா என இப்போதே கணிக்க முடியாது. இதற்கு இன்னும் அதிகப்படியான ஆய்வுகள் தேவை. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

5. 90,000 டன் யூரியா ஒதுக்கீடு: வேளாண்மைத் துறை தகவல்

வேளாண்மைத் துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் சாதகமான பருவமழை காரணமாக 13.75 லட்சம் ஹெக்டேரில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளத் திட்டமிட்டு, இதுவரை 7.82 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நடப்பு சம்பா (ராபி) பருவத்தில் நெல் மற்றும் இதர பயிர்களான சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், கரும்பு, பருத்தி ஆகியவற்றின் சாகுபடி ஒட்டுமொத்தமாக 24.83 லட்சம் ஹெக்டேர் பரப்பில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் யூரியா மற்றும் டிஏபிஉள்ளிட்ட அனைத்து வகை உரங்களின் தேவை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு மத்திய ரசாயனத் துறைஅமைச்சருக்கு முதல்வர் கடிதம் எழுதினார். அதில், 20 ஆயிரம் டன்டிஏபி, 10 ஆயிரம் டன் பொட்டாஷ் உரம் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதையடுத்து, காரைக்கால் துறைமுகத்துக்கு வரவுள்ள 90ஆயிரம் டன் இறக்குமதி யூரியாவை, தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இம்மாத இறுதிக்குள் ஸ்பிக் நிறுவனம் 10 ஆயிரம் டன், எம்எஃப்எல் உர நிறுவனம் 8,000 டன் யூரியா வழங்கத் திட்டமிட்டு உள்ளன. காரைக்கால் துறைமுகத்தில் தற்போதுள்ள 4,400 டன்யூரியா, பல்வேறு மாவட்டங்களுக்கு இரயில்மூலம் அனுப்பப்படும்.

தமிழகத்தில் தனியார் மற்றும் சில்லறை உர விற்பனை நிலையங்களில் யூரியா 64,111 டன், டிஏபி 23,654 டன், பொட்டாஷ் 35,590 டன், காம்ப்ளக்ஸ் 1,17,575 டன் உரங்கள் இருப்பில் உள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. பெகாசஸ் விவகாரம்; உளவுபார்த்த குற்றச்சாட்டை விசாரிக்க வல்லுந -ர்கள் குழு அமைப்பு; மத்திய அரசிடம் தெளிவான விளக்கம் இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பெகாசஸ் மென்பொருள்மூலம் பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் வல்லுநர்களைக் கொண்ட விசாரணைக் குழு அமைத்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த வல்லுநர்களைக் கொண்ட விசாரணைக் குழு, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் செயல்படும்.

இந்த வல்லுநர்கள் குழுவுக்குத் தலைவராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர் வி ரவிந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு உதவியாக, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அசோக் ஜோஷி, டாக்டர் சந்தீப் ஓப்ராய், குஜராத் காந்தி நகர் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் டீன் டாக்டர் நவீன் குமார் சவுத்ரி, கேரளாவில் உள்ள அமிர்தா விஷ்வ வித்யாபீடத்தின் பேராசிரியர் Dr பி பிரபாகரன், மும்பை ஐஐடி பேராசிரியர் Dr அஸ்வின் அனில் குப்தே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவு மென்பொருள்மூலம் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களின் கைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் முழுவதும் முடங்கியது.

இதனிடையே, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பத்திரிகையாளர் என் ராம், எடிட்டர் கில்ட் ஆஃப் இந்தியா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என் வி ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா ஹோலி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து கடந்த செப்டம்பர் 13-ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்த வழக்கின் வாதத்தின்போது மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அளித்த பிரமாணப் பத்திரத்தில், “பெகாசஸ் விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் என்பது உயர்ந்த தொழில்நுட்பம் சார்ந்த விஷயம். ஆதலால், வல்லுநர்கள் குழுவின்மூலம் ஆய்வு செய்வது அவசியம். பெகாசஸ் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி உபாத்யாயா ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளார்.

மனுதாரர்கள் கோரியபடி, பிரமாணப் பத்திரத்தில் தகவல்களை வெளியிடுவது நாட்டின் பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை வெளியிட முடியாது. பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விரிவான பதில் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய மத்திய அரசு விரும்பவில்லை. மத்திய அரசு சார்பில் எதையும் மறைக்க விரும்பவில்லை. அதனால்தான் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட குழுவை அமைத்து, குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடுகிறோம்.

குறிப்பிட்ட மென்பொருளைப் பயன்படுத்தி மத்திய அரசு கண்காணிப்பில் ஈடுபட்டதா, இல்லையா என்று வெளிப்படையாக விவாதிக்க அரசு விரும்பவில்லை. இந்தத் தகவல்கள் நாட்டின் நலனுக்கும் உகந்ததாக இருக்காது. ஆனால், வல்லுநர்கள் குழு ஆய்வு செய்து அளிக்கும் அறிக்
-கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்படும்” எனத்தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என் வி ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா ஹோலி ஆகியோர் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

அந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது:

“சமூகத்தில் பல்வேறு வகையான மக்களைக் கண்காணிக்க இஸ்ரேலைச் சேர்ந்த பெகாசஸ் மென்பொருளை வைத்து மத்திய அரசு உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க வல்லுநர்கள் குழுவை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கிறோம்.

இந்த விவகாரத்தில் உளவு பார்க்கப்பட்டதா, இல்லையா என்பது குறித்த தெளிவான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்திருந்தால், இந்த உத்தரவை நாங்கள் பிறப்பித்திருக்க வேண்டிய கட்டாயம் இருந்திருக்காது. பெகாசஸ் குற்றச்சாட்டை மத்திய அரசு எந்தவிதத்திலும் மறுக்கவில்லை.

தேசியப் பாதுகாப்பு என்ற விஷயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு வரும் மத்திய அரசுக்கு அனைத்திலும் விலக்கு அளிக்க முடியாது. நீதித்துறை மறு ஆய்வுக்கு எதிராக தேசியப் பாதுகாப்பைக் காரணம் கூறி சாதாரணமாகத் தடை விதிக்க முடியாது. இங்கு மத்திய அரசு தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தியிருக்க வேண்டும், நீதிமன்றத்தை வாய்மூடிப் பார்வையாளனாக ஆக்கிவிடக் கூடாது.

மக்களின் அந்தரங்க உரிமை, பேச்சு சுதந்திரம் உரிமை ஆகியவை உளவு பார்க்கும் விஷயத்தில் முழுமையாக மீறப்பட்டுள்ளன. உளவு பார்க்கப்பட்ட விவகாரம், அறிக்கை போன்றவை மற்ற நாடுகளில் தீவிரமாக எடுக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றன. மற்ற நாடுகளின் உளவு மென்பொருள் மூலம் கண்காணிப்புக்குப் பயன்படுத்துவது தேசியப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும்.

என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை விரிவாகத் தெரிவிக்க பல வாய்ப்புகளை மத்திய அரசுக்கு நாங்கள் அளித்தோம். ஆனால், மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட அடுத்தடுத்த வாய்ப்புகளில் பிரமாணப் பத்திரத்தில் தெளிவான விளக்கம் இல்லை. இதைத் தெளிவுபடுத்தியிருந்தால் எங்களின் சுமை குறைந்திருக்கும்.

எந்தவிதமான விளக்கம் தராமல் மத்திய அரசு மறுப்பது என்பது போதுமானதாக இருக்காது. இந்தக் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும். அதனால்தான் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கிறோம்.

இந்த விவகாரத்தில் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன, வெளிநாட்டு நிறுவனங்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படும்போது அதைப் பாதுகாக்காமல், தடுக்காமல் நாங்கள் இருக்க முடியாது. அந்தரங்க உரிமை என்பது விவாதிக்கப்பட வேண்டியது. அந்தரங்க உரிமை என்பது அரசியல் தலைவர்கள் பத்திரிகையாளர்ளுக்கு மட்டுமல்ல, தனிநபர்களுக்கும் உரியது. அனைத்து முடிவுகளும் அரசியலமைப்புக்கு உட்பட்டு எடுக்கப்பட்டது”.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

7. அக்னி-5 ஏவுகணை- இந்தியாவின் சோதனை வெற்றி!

அக்னி 5 (Agni-V) ஏவுகணை ஒலியை விட வேகமாக செல்லும் ஆற்றல் படைத்தது. நொடிக்கு 8.16 கிமீட்டர் வேகத்திலும் ஒரு மணி நேரத்துக்கு 29,401 கிலோமீட்டர் வேகத்திலும் பாயும் திறன் கொண்டது.

ஆயிரம் கிமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை நிலப்பரப்பில் இருந்து துல்லியமாக தாக்கக்கூடிய அக்னி-5 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

அக்னி-5 என்னும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவில் இந்தியா சோதித்து பார்த்தது. 5,000 கிமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை நிலப்பரப்பில் இருந்து துல்லியமாக தாக்கக்கூடிய இந்த அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

3 பிரிவு திடமான எரிசக்தியுடன் கூடிய என்ஜின் பொருத்தப்பட்டுள்ள இந்த ஏவுகணை இலக்கை மிக துல்லியமாக தாக்குதல் திறன் கொண்டது. கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணையை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் இணைந்து உருவாக்கியுள்ளன. சுமார் 50 ஆயிரம் கிலோ எடைகொண்ட இந்த ஏவுகணை 1.7 மீட்டர் உயரத்தையும் 2 மீட்டர் விட்டத்தையும் கொண்டுள்ளது.

8. முதுபெரும் காந்தியவாதி எஸ் என் சுப்பா ராவ் காலமானார்

முதுபெரும் காந்தியவாதியான எஸ் என் சுப்பா ராவ் (92), ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்த சுப்பா ராவ், பள்ளிப்பருவத்தி
-லேயே மகாத்மா காந்திமீது பற்றுகொண்டவர். சக மாணவர்களை ஒன்று திரட்டி வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்றார். ர்களில் ஆங்கிலேய அரசுக்கு எதிரான போராட்ட வாசகங்களை எழுதியதற்காக கைது செய்யப்பட்டார். 13 வயது சிறுவன் என்பதால் அவரை பின்னர் போலீஸார் விடுவித்துவிட்டனர். எனினும், தொடர்ந்து விடுதலைப் போராட்ட கூட்டங்களில் பங்கேற்றார்.

மாணவர் காங்கிரஸில் பணியாற்றிய அவர், பின்னர் இளைஞர்களுக்கா -ன மகாத்மா காந்தி இயக்கத்தையும் நடத்தினார். சட்டப்படிப்பு முடித்த அவர், காங்கிரஸ் சேவாதளத்தில் பணியாற்றினார். ஜவாஹர்லால் நேரு, காமராஜர் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர். எனினும், நேரடியாக அரசியலில் ஈடுபடாமல் தொடர்ந்து பல்வேறு வழிகளில் நாட்டுக்கும், சமூகத்துக்கும் சேவையாற்றி வந்தார்.

1. What is the theme for the tiger rallies which commenced on 2nd October across 51 tiger reserves in India?

A) Amrut Bharat

B) India for Tigers – A Rally on Wheels 

C) Atma Nirbhar Tigers

D) Tiger on Wheels

  • The union minister for Environment Forest and Climate Change Shri. Bhupender Yadav has launched tiger rallies in 51 reserves in the country, under the theme “India for Tigers – A Rally on Wheels”. This is a part of ‘Azadi ka Amrit Mahotsav’ celebrations in India.

2. ‘The State of Climate Services 2021: Water report’ has been released by which organisation?

A) WMO 

B) FAO

C) NITI Aayog

D) NABARD

  • World Meteorological Organization (WMO) has recently released a report titled ‘The State of Climate Services 2021: Water report’.
  • The report was coordinated by WMO and includes input from more than 20 international organizations, development agencies and scientific institutions. As per the report, some 3.6 billion people globally had inadequate access to water for one month per year in 2018, which is expected to surpass five billion by 2050.

3. Mosquirix, which was seen in the news, is the first vaccine approved by WHO, against which disease?

A) Dengue

B) Malaria 

C) Zika

D) West Nile virus

  • The World Health Organization (WHO) has recommended the use of the first–ever malaria vaccine for children. The WHO panel approved the RTS, S/AS01 malaria or Mosquirix – a vaccine developed by the British drugmaker GlaxoSmithKline (GSK). As per WHO, Malaria kills about 500,000 people each year, about half of them are the children in Africa.

4. ‘Judima’, which got G.I tag recently, is the home–made wine of which state?

A) Assam 

B) Manipur

C) Meghalaya

D) West Bengal

  • Judima, the home–made rice wine of the Dimasa tribe from the Dimasa Hasao district of Assam received the GI tag recently. It is a local fermented drink made with rice, in a pale yellow or reddish colour and a mellow fragrance. The drink is an important part of their tradition.

5. Abdulrazak Gurnah, who won the 2021 Nobel Prize, belongs to which country?

A) Israel

B) Tanzania 

C) USA

D) Australia

  • Tanzanian novelist Abdulrazak Gurnah won the 2021 Nobel Prize for his compassionate literary works on colonialism and refugees. Abdulrazak Gurnah was born in 1948 and grew up on the island of Zanzibar in the Indian Ocean but arrived in England as a refugee at the end of the 1960’s.

6. What is the theme of World Polio Day 2021?

A) Leaving No one behind

B) Delivering on a Promise 

C) Inclusive and Inspirational

D) No Polio World

  • World Polio Day is observed on October 24 every year to raise awareness for polio vaccination and to eradicate polio. The theme of World Polio Day 2021 is “Delivering on a Promise”.
  • The World Polio Day was established by Rotary International to commemorate the birth of Jonas Salk, who led the first team to develop a vaccine against poliomyelitis.

7. When is the ‘United Nations (UN) Day’ observed every year?

A) October 21

B) October 24 

C) October 25

D) October 27

  • The United Nations Day has been observed on October 24 every year, to commemorate the anniversary of the entry into force of the UN Charter, in 1945. UN officially came into existence on 24 October 1945. The year 2021 marks the 76th anniversary of the United Nations and its founding Charter. It is the founding document of the UN, which has been working towards global peace and equality.

8. Who has been awarded the top EU human rights prize – the Sakharov Prize for 2021?

A) Vladimir Putin

B) Alexei Navalny 

C) Gotabaya Rajapaksa

D) Narendra Modi

  • Imprisoned Russian Opposition leader Alexei Navalny has been awarded the European Union’s top human rights prize– the Sakharov Prize. The European Parliament praised the 45–year–old activist’s immense personal bravery. He was poisoned with a nerve agent last year and arrested and imprisoned. He has campaigned consistently against the corruption of Russia’s ruling government.

9. Which movie won the Best Feature Film award, at the National Film Awards ceremony?

A) Marakkar: Lion of the Arabian Sea 

B) Chhichhore

C) Asuran

D) Kesari

  • Vice President M Venkaiah Naidu presented the 67th National Film Awards, at Delhi’s Vigyan Bhawan. The Best Feature Film award was given to Priyadarshan’s Malayalam period epic Marakkar: Lion of the Arabian Sea. Bollywood actor Kangana Ranaut won Best Actress awrd for her performances in Manikarnika and Panga, while the Best Actor award went to Manoj Bajpayee for Bhonsle and Dhanush for Asuran.

10. Konkan Shakti 2021 is the first–ever tri–services joint exercise between India and which country?

A) UK 

B) USA

C) France

D) Japan

  • Konkan Shakti 2021 is the first–ever tri–services joint exercise between India and the UK.
  • The week–long exercise has begun recently. The exercise will be a platform to share each other’s experiences and to showcase the cooperation between the two countries. The maritime component of the exercise will be conducted off India’s west coast and the Harbour phase will be held in Mumbai. The land phase of the exercise will be held at Chaubatia in Uttarakhand.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!