TnpscTnpsc Current Affairs

27th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

27th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 27th October 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

27th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. ‘நீலக்கொடி சான்று பெற்ற கடற்கரைகள்’ பட்டியலில் சேர்க்கப்பட்ட மினிகாய் துண்டி கடற்கரை மற்றும் கத்மத் கடற்கரை அமைந்துள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. கேரளா

இ. இலட்சத்தீவுகள்

ஈ. அந்தமான் நிக்கோபார்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. இலட்சத்தீவுகள்

  • இலட்சத்தீவுகளின் மினிகாய் துண்டி கடற்கரை மற்றும் கத்மத் கடற்கரை ஆகிய இரண்டு கடற்கரைகள், ‘நீலக்கொடி சான்று பெற்ற கடற்கரைகள்’ பட்டியலில் சேர்க்கப்பட்டன. இது சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை (FEE)மூலம் உலகின் தூய்மையான கடற்கரைகளுக்கு வழங்கப்படும் சுற்றுச்சூழல்சார் சான்றாகும். இதன்மூலம், இந்தியாவில் இப்போது பன்னிரு கடற்கரைகள் நீலக்கொடி சான்றின்கீழ் சான்றளிக்கப்பட்டுள்ளன. 729 கடற்கரைகளுடன் ஸ்பெயின், நீலக்கொடி சான்று பெற்ற கடற்கரைகள்கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

2. ஒருமுறை சொத்து வரி பொறுத்தருளும் திட்டமான, ‘சம்ரித்தி’யை அறிவித்துள்ள மாநிலம்/UT எது?

அ. ஆந்திர பிரதேசம்

ஆ. புது தில்லி

இ. ஜம்மு காஷ்மீர்

ஈ. குஜராத்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. புது தில்லி

  • தில்லியின் துணை நிலை ஆளுநர் வினை குமார் சக்சேனா அண்மையில் ஒருமுறை சொத்து வரி பொறுத்தருளும் என்ற திட்டத்தை அறிவித்தார். தில்லியில் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக நகராட்சி வருவாயை வலுப்படுத்துதல் மற்றும் பெருக்குதல் (Strengthening & Augmentation of Municipal Revenue for Infrastructure Development in Delhi –SAMRIDDHI) 2022–23 என்ற திட்டத்தின்கீழ், தேசிய தலைநகர பிராந்தியத்தில் (NCR) வசிக்கும் மக்கள் கடந்த ஐந்தாண்டுகளில் தாங்கள் செலுத்தாத, நிலுவையில் உள்ள வரிகளை அபராதம் ஏதும் இல்லாமல் செலுத்த முடியும்.

3. ‘COP27: 27ஆவது வருடாந்த காலநிலை குறித்த ஐநா கூட்டத்தை’ நடத்தும் நாடு எது?

அ. இந்தியா

ஆ. எகிப்து

இ. தென்னாப்பிரிக்கா

ஈ. சீனா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. எகிப்து

  • காலநிலை குறித்த 27ஆவது வருடாந்திர ஐநா கூட்டம், COP27 (உறுப்புநாடுகளின் மாநாடு) எகிப்தின் ஷர்ம்–எல்–ஷேக்கில் நவ.6–18 வரை நடைபெறுகிறது. ஆப்பிரிக்காவில் பருவநிலை மாநாடு நடத்தப்படுவது இது ஐந்தாவது முறையாகும். கரியமிலவாயு உமிழ்வைக் குறைத்தல், காலநிலை மாற்றத்திற்கு தயாராக இருக்கவும் அதனைச் சமாளிக்கவும் நாடுகளுக்கு உதவுதல் மற்றும் பருவநிலை நடவடிக்கைகளுக்கு வளரும் நாடுகளுக்கு தொழில்நுட்ப ஆதரவு மற்றும் நிதியைப்பெறுதல் முதலிய மூன்று முதன்மை பகுதிகளில் COP27 ஆனது கவனம் செலுத்தும்,.

4. மரபியல் பொறியியல் மதிப்பீட்டுக் குழுவானது (GEAC) வணிகரீதியான சாகுபடிக்கு கீழ்க்காணும் எதன் மரபணு மாற்றப்பட்ட (GM) பதிப்பை அங்கீகரித்துள்ளது?

அ. கத்தரிக்காய்

ஆ. கடுகு

இ. பருத்தி

ஈ. தக்காளி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கடுகு

  • மரபியல் பொறியியல் மதிப்பீட்டுக்குழுவானது மரபணு மாற்றப்பட்ட கடுகை வணிகரீதியான சாகுபடி செய்வதற்கான தனது ஒப்புதலை வழங்கியுள்ளது. தில்லி பல்கலைக்கழகத்தின் உணவுப்பயிர்களின் மரபணு கையாளுதல் மையம் மற்றும் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தால் உருவாக்கப்பட்ட இந்தக் கடுகு வகை, தொழில்நுட்ப ரீதியாக தாரா கடுகு ஹைப்ரிட்–11 (DMH–11) என அழைக்கப்படுகிறது. உயிரி தொழில்நுட்பத் துறையின் நிதி ஆதரவும் இதற்கு வழங்கப்பட்டது.

5. 2022 – NDC தொகுப்பறிக்கையை வெளியிட்டுள்ள நிறுவனம் எது?

அ. WEF

ஆ. UNEP

இ. UNFCCC

ஈ. உலக வங்கி

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. UNFCCC

  • காலநிலை மாற்றம் தொடர்பான ஐநா கட்டமைப்பு கூட்டமைப்பின் (UNFCCC) ‘2022 – NDC தொகுப்பறிக்கை’, உலக நாடுகள் உலகளாவிய பைங்குடில் இல்ல வாயு வெளியேற்றத்தை குறைத்து வருகின்றன என்பதைக் காட்டுகிறது. இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலகின் வெப்பநிலை உயர்வை 1.5°C அளவுக்குக் கட்டுப்படுத்த இந்த முயற்சிகள் போதுமானதாக இல்லை என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கை விடுக்கிறது.

6. 2022இல், ‘இந்தியன் மொபைல் காங்கிரஸை’ நடத்திய நகரம் எது?

அ. புது தில்லி

ஆ. அகமதாபாத்

இ. மும்பை

ஈ. சென்னை

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. புது தில்லி

  • 2022ஆம் ஆண்டு புது தில்லியில் நடைபெற்ற, ‘இந்திய மொபைல் காங்கிரஸ்’ நிகழ்வினில், தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 5G சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பார்தி ஏர்டெல் மற்றும் ஜியோபோன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய நகரங்களில் 5G சேவைகளை வெளியிடுவதாக உறுதிசெய்துள்ளன.

7. அஜை குமார் ஸ்ரீவஸ்தவா என்பார் கீழ்க்காணும் எந்தப் பொதுத்துறை வங்கியின் MD & CEO ஆக உள்ளார்?

அ. இந்தியன் வங்கி

ஆ. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

இ. கனரா வங்கி

ஈ. பாரத வங்கி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (IOB) தற்போதைய நிர்வாக இயக்குநரான அஜைகுமார் ஸ்ரீவஸ்தவாவை வங்கியின் நிர்வாக இயக்குநராகவும், தலைமைச் செயல் அதிகாரியாகவும் நடுவணரசு நியமித்துள்ளது. அவர் 2023 ஜனவரி.1 முதல் 3 ஆண்டுகள் வரை அப்பதவியிலிருப்பார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு பொதுத்துறை வங்கியாகும்.

8. ஆண்டுதோறும், ‘சர்வதேச முதியோர் நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. அக்டோபர்.01

ஆ. அக்டோபர்.02

இ. அக்டோபர்.03

ஈ. அக்டோபர்.04

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. அக்டோபர்.01

  • ஒவ்வோர் ஆண்டும் அக்.1ஆம் தேதி உலக முதியோர் நாளாக அனுசரிக்கப்படுகிறது. முதியவர்களின் பங்களிப்பை கௌரவிக்கும் நோக்கத்துடன் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் கவனஞ்செலுத்தும் நோக்கத்துடன் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் இந்த நாள் உருவாக்கப்பட்டது. “Resilience of Older Persons in a Changing World” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில் வந்த உலக முதியோர் நாளுக்கானக் கருப்பொருளாகும்.

9. 2021–22 நிலவரப்படி உலக சந்தைக்கு பாஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்வதில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

அ. சீனா

ஆ. ஈரான்

இ. இந்தியா

ஈ. இஸ்ரேல்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. இந்தியா

  • 2021–22இல் `26,416 கோடி மதிப்புள்ள 3,948,161 மெட்ரிக் டன் பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்ததன்மூலம், உலக சந்தைக்கு பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (IARI) சமீபத்தில் ஹரியானா மற்றும் பஞ்சாபில் புதிதாக வெளியிடப்பட்ட மூன்று IARI பாஸ்மதி வகைகளைப் பற்றிய கருத்துக்களைப் பெறுவதற்காக, ‘கிசான் சம்பர்க் யாத்ராவை’ ஏற்பாடு செய்தது. பூசா பாஸ்மதி 1847, பூசா பாஸ்மதி 1885 மற்றும் பூசா பாஸ்மதி 1886 ஆகிய இரகங்கள் நுண்ம இலைக்கருகல் நோய் மற்றும் கொள்ளை நோய்களுக்கு உள்ளமைந்த எதிர்ப்பைக் கொண்டுள்ளன.

10. சமீப செய்திகளில் இடம்பெற்ற, Anopheles stephensi ஆனது எந்த நோயுடன் தொடர்புடைய உயிரினமாகும்?

அ. டெங்கு

ஆ. மலேரியா

இ. சிக்குன்குனியா

ஈ. தக்காளிக்காய்ச்சல்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மலேரியா

  • உலக நலவாழ்வு அமைப்பானது (WHO) ஆப்பிரிக்காவில் மலேரியா பரவுவதைத் தடுக்க புதிய முனைவுகளைத் தொடங்கியுள்ளது. நகர்ப்புற சூழல்களில் மலேரியா நோயைப் பரப்புவதற்கான முதன்மை காரணியாக Anopheles stephensi உள்ளது. இந்த முனைவானது ஆப்பிரிக்க கண்டத்தில் Anopheles stephensi–ஐ ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. WHO ஆனது உலகளாவிய கடத்திகள் கட்டுப்பாட்டு மறுமொழி (Global Vector Control Response) 2017–2030ஐயும் வெளியிட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள் 

1. காசி தமிழ்ச்சங்கமம்

பல நூற்றாண்டுகளாக நீடித்திருக்கும் தமிழ் கலாச்சாரம் மற்றும் காசிக்கு இடையேயான தொடர்புகளை மீண்டும் கண்டறியவும் உறுதிசெய்யவும் கொண்டாடவும் பாரதிய பாஷா சமிதி ஒரு முன்மொழிவை கண்டுள்ளது. அதன்படி 2022 நவ.16 முதல் டிச.19 வரை வாரணாசியில் ஒருமாத கால காசி தமிழ்ச்சங்கமத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய கலாச்சாரத்தின் இரண்டு தொன்மையான பகுதிகளின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களும் அறிஞர்களும் கருத்துப்பரிமாற்றம் செய்வது கருத்தரங்குகள், விவாதங்கள் நடத்துவதும் இந்த இருபகுதிகளுக்கு இடையேயான தொடர்புகள் மற்றும் பகிரப்பட்ட மாண்புகளை வெளிக்கொண்டு வருவதும் இதன் நோக்கமாகும். ஞானம் மற்றும் கலாச்சார பாரம்பரியங்களின் இரண்டு பகுதிகளை மிக நெருக்கமாக கொண்டுவருவது இதன் விரிவான நோக்கமாகும். நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தை புரிந்துகொள்வதும், இருபகுதிகளின் மக்களிடையேயான உறவை ஆழப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.

27th October 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Minicoy Thundi Beach and Kadmat Beach, which were added to the list of ‘Blue Flag Beaches’, are located in which state/UT?

A. Maharashtra

B. Kerala

C. Lakshadweep

D. Andaman and Nicobar

Answer & Explanation

Answer: C. Lakshadweep

  • Two beaches from Lakshadweep Minicoy Thundi Beach and Kadmat Beach were added to the list of ‘Blue Flag Beaches’. It is an eco–label given to the cleanest beaches in the world by the Foundation for Environment Education (FEE). With this, India now has 12 beaches certified under the Blue Flag Certification. Spain with 729 sites tops the list of countries with Blue Flag awarded sites.

2. Which state/UT released the ‘SAMRIDDHI’, a one–time property tax amnesty scheme?

A. Andhra Pradesh

B. New Delhi

C. Jammu and Kashmir

D. Gujarat

Answer & Explanation

Answer: B. New Delhi

  • Delhi Lieutenant–Governor Vinai Kumar Saxena recently announced a one–time property tax amnesty scheme. Under the Strengthening & Augmentation of Municipal Revenue for Infrastructure Development in Delhi (SAMRIDDHI) 2022–23 scheme, the NCR people will be able to pay the principal amount of the current and pending tax of past five years for residential properties.

3. Which country is the host of the ‘COP27: 27th annual UN meeting on climate’?

A. India

B. Egypt

C. South Africa

D. China

Answer & Explanation

Answer: B. Egypt

  • The 27th annual UN meeting on climate, COP27 (Conference of Parties) will take place in Sharm–el–Sheikh, Egypt from 6th to 18th November. This will be the fifth time a Climate Conference is being hosted in Africa. COP27 will focus on three main areas, reducing emissions, helping countries to prepare and deal with climate change and securing technical support and funding for developing countries for climate activities.

4. Genetic Engineering Appraisal Committee (GEAC) approved genetically modified (GM) version of which product for commercial cultivation?

A. Brinjal

B. Mustard

C. Cotton

D. Tomato

Answer & Explanation

Answer: B. Mustard

  • The Genetic Engineering Appraisal Committee (GEAC) has approved genetically modified (GM) mustard for commercial cultivation. Technically called Dhara Mustard Hybrid–11 (DMH–11), it was developed by the Centre for Genetic Manipulation of Crop Plants of Delhi University and the National Dairy Development Board and partly funded by the department of biotechnology.

5. Which institution has released the ‘2022 NDC Synthesis Report’?

A. WEF

B. UNEP

C. UNFCCC

D. World Bank

Answer & Explanation

Answer: C. UNFCCC

  • ‘2022 NDC Synthesis Report’ from United Nations Framework Convention on Climate Change (UNFCCC) shows countries are bending the curve of global greenhouse gas emissions downward. It also warns that these efforts remain insufficient to limit global temperature rise to 1.5 degrees Celsius by the end of the century.

6. Which city is the host of ‘Indian Mobile Congress’ in 2022?

A. New Delhi

B. Ahmedabad

C. Mumbai

D. Chennai

Answer & Explanation

Answer: A. New Delhi

  • Prime Minister Narendra Modi officially announced the launch of 5G in select cities, during the ‘Indian Mobile Congress’ held in 2022 in New Delhi. Leading Telecom companies like Bharti Airtel and Jio confirmed that it will roll out 5G services in select cities.

7. Ajay Kumar Srivastava is the MD & CEO of which public sector bank?

A. Indian Bank

B. Indian Overseas Bank

C. Canara Bank

D. State Bank of India

Answer & Explanation

Answer: B. Indian Overseas Bank

  • The Union Government has promoted Ajay Kumar Srivastava, the present Executive Director of Indian Overseas Bank (IOB) as the bank’s Managing Director and Chief Executive Officer. He will hold the post for a period of three years with effect from January 1, 2023. Indian Overseas Bank is a public sector bank headquartered in Chennai.

8. When is the ‘International Day of Older Persons’ observed every year?

A. October.01

B. October.02

C. October.03

D. October.04

Answer & Explanation

Answer: A. October.01

  • October 1 is observed as the International Day of Older Persons across the world every year. It was introduced by the United Nations General Assembly with an aim of honouring the contribution of older persons and focussing on the problems they face. This year, the theme for the International Day of Older Persons is ‘Resilience of Older Persons in a Changing World’.

9. Which country is the leading exporter of Basmati Rice to the global market as of 2021–22?

A. China

B. Iran

C. India

D. Israel

Answer & Explanation

Answer: C. India

  • India is the leading exporter of Basmati Rice to the global market, as it exported 3,948,161 MT of Basmati Rice worth Rs. 26,416 Crores during 2021–22. The Indian Agricultural Research Institute (IARI) recently organised ‘Kisan Sampark Yatra’ in Haryana and Punjab to obtain feedback on the three newly released IARI Basmati varieties. Pusa Basmati 1847, Pusa Basmati 1885 and Pusa Basmati 1886 were by ICAR–IARI with inbuilt resistance to Bacterial blight and blast diseases.

10. Anopheles stephensi, which was seen in the news, is a species associated with which disease?

A. Dengue

B. Malaria

C. Chikungunya

D. Uttarakhand

Answer & Explanation

Answer: B. Malaria

  • The World Health Organization (WHO) has launched new initiatives to stop the spread of invasive malaria vectors in Africa. Anopheles stephensi is the primary mosquito vector, responsible for causing malaria in urban environments. The initiative aims to support a regional response to Anopheles stephensi on the African continent. The WHO had also released Global Vector Control Response 2017–2030.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!