TnpscTnpsc Current Affairs

28th & 29th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

28th & 29th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 28th & 29th December 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

28th & 29th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. இரயில்வே அமைச்சகத்தின் நிலைய மறுமேம்பாட்டின்கீழ் அறிவிக்கப்பட்ட புதிய திட்டத்தின் பெயர் என்ன?

அ. ஆத்மார்பார் பாரத் நிலைய திட்டம்

ஆ. அம்ருத் பாரத் நிலைய திட்டம்

இ. பாரத் இரயில் நிலைய திட்டம்

ஈ. அடல் நிலைய திட்டம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. அம்ருத் பாரத் நிலைய திட்டம்

  • இரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் அம்ருத் பாரத் இரயில் நிலைய திட்டம் என்னும் புதிய கொள்கையை இரயில்வே அமைச்சகம் வகுத்துள்ளது. தொலைநோக்குப் பார்வையுடன் இரயில் நிலையங்களைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்கு இந்தத் திட்டம் வகைசெய்யும். குறைந்தபட்ச அத்தியாவசிய வசதிகளைக் கருத்தில்கொண்டு இரயில் நிலையங்களின் மேல்தளத்தில் அங்காடிகள், வணிக நிறுவனங்கள் அமைக்கப்படும். இரயில் நிலையங்க –ளில் ஏற்கனவேயுள்ள வசதிகளுக்கு மாற்றாக மேம்பாடும் மற்றும் புதிய வசதிகளை அறிமுகப்படுத்துதலையும் இத் திட்டம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

2. ZUF ஆயுதக்குழுவுடனான செயல்பாட்டு நிறுத்த ஒப்பந்தத்தில் நடுவண் உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து கையெழுத்திட்ட மாநிலம் எது?

அ. மணிப்பூர்

ஆ. அஸ்ஸாம்

இ. அருணாச்சல பிரதேசம்

ஈ. சிக்கிம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. மணிப்பூர்

  • நடுவண் அரசும் மணிப்பூர் மாநில அரசாங்கமும் இணைந்து Zeliangrong United Front (ZUF) உடனான செயல்பாடு நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ZUF என்பது மணிப்பூரைச் சார்ந்த நாகா ஆயுதக்குழுவாகும்; இது ஜெலியங்ரோன் நாகா பழங்குடியினருக்கு தனி மாநிலம் கோரி போராடி வருகிறது. இந்த ஒப்பந்தம் ஆயுதமேந்திய போராளிகளுக்கு மறுவாழ்வினையும் மீள்குடியேற்றத்தையும் கோரும் வகையில் அமைந்துள்ளது.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற மங்தேச்சு நீர்மின்னுற்பத்தித் திட்டம், இந்தியாவால் கீழ்க்காணும் எந்த நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது?

அ. நேபாளம்

ஆ. வங்காளதேசம்

இ. பூடான்

ஈ. மாலத்தீவுகள்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. பூடான்

  • இந்தியாவின் உதவியுடன் உருவாக்கப்பட்ட 720 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட மங்தேச்சு நீர்மின்சாரத் திட்டம் சமீபத்தில் பூடானில் உள்ள டுரூக் கிரீன் பவர் கார்பரேஷனிடம் ஒப்படைக்கப்பட்டது. இத்திட்டத்தோடு சேர்த்து மொத்தம் நான்கு பிரம்மாண்ட நீர் மின்னுற்பத்தித் திட்டங்களை இந்தியாவும் பூடானும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன. இத்திட்டத்தின் தொடக்கமானது பூடானின் மின்னாற்றல் உற்பத்தித் திறனை 44 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

4. ‘நகர நிதி தரவரிசை–2022’ஐ வெளியிட்ட நடுவண் அமைச்சகம் எது?

அ. வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

ஆ. நிதி அமைச்சகம்

இ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்

ஈ. MSME அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

  • நடுவண் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் சமீபத்தில் நகரங்களின் நிதி செயல்திறன் மற்றும் அழகுபடுத்தலின் அடிப்படையில் புதிய தரவரிசை முறைக்கான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டார்.
  • ‘நகர நிதி செயல்திறன் தரவரிசை–2022’ ஆனது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வலிமையின் அடிப்படையில் வளங்களைத் திரட்டுதல், செலவினச் செயல்பாடுகள் மற்றும் நிதி நிர்வாக முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்து வெகுமதி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நகரங்கள் மற்றும் குடும்புகளின் அழகான, புதுமையான மற்றும் உள்ளடக்கிய பொது வெளிகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை அங்கீகரிப்பதே ‘நகர அழகுபடுத்துதல் போட்டி’ என்ற முனைவின் நோக்கமாகும்.

5. தேசிய மொபைல் கண்காணிப்பு மென்பொருள் என்பது எந்த நடுவண் அமைச்சகத்தின் முனைவாகும்?

அ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஆ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்

இ. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்

ஈ. பாதுகாப்பு அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

  • தேசிய மொபைல் கண்காணிப்பு மென்பொருள் (National Mobile Monitoring Software – NMMS) செயலி என்பது கடந்த 2021ஆம் ஆண்டில் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் தொடங்கப்பட்டதாகும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் வருகையை டிஜிட்டல் முறையில் பதிவுசெய்வது 2023 ஜனவரி.01 முதல் நடைமுறைக்கு வரும். வருகைப்பதிவானது தேசிய மொபைல் கண்காணிப்பு மென்பொருளின் திறன்பேசி செயலிமூலம் பெறப்படும்.

6. கடல் அலைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கக்கூடிய, ‘ஓஷன் வேவ் எனர்ஜி கன்வெர்ட்டரை’ உருவாக்கியுள்ள நிறுவனம் எது?

அ. ஐஐடி மெட்ராஸ்

ஆ. ஐஐடி பம்பாய்

இ. ஐஐடி தில்லி

ஈ. NIT வாரங்கல்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. ஐஐடி மெட்ராஸ்

  • இந்திய தொழில்நுட்பக் கழகம்–மெட்ராஸின் (IIT மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள் கடல் அலைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கக்கூடிய ‘Ocean Wave Energy Converter’ஐ உருவாக்கியுள்ளனர். தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்ட கடற்கரையிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் இந்தச் சாதனம் நிறுவப்பட்டது. அடுத்த மூன்று ஆண்டுகளில் கடல் அலைகளில் இருந்து 1 மெகாவாட் (MW) மின்சாரத்தை உற்பத்தி செய்வதை இந்தச் சாதனம் தனது இலக்காகக் கொண்டுள்ளது.

7. ஹகுடோ–R லேண்டர் என்பது கீழ்க்காணும் எந்த நாட்டின் முதல் நிலவு ஆய்வுப் பணியாகும்?

அ. தென் கொரியா

ஆ. ஜப்பான்

இ. சிங்கப்பூர்

ஈ. ஐக்கிய அரபு அமீரகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஜப்பான்

  • ஜப்பானிய துளிர் நிறுவனமான ஐஸ்பேஸ் இங்க், ஸ்பேஸ்X உதவியுடன் அந்த நாட்டின் முதல் நிலவு ஆய்வுப் பணியை ஏவியது. ஸ்பேஸ்X ஃபால்கன்–9 ஏவுகணைமூலம் இரண்டு ஆய்வூர்திகள் மற்றும் தாங்குசுமைகளை ஜப்பானிய நிலவு தரையிறங்கி ஏற்றிச்சென்றது. நிலவில் தரையிறங்கிய முதல் வணிக விண்கலமாகவும் இது அமைந்தது. ஹகுடோ–R லேண்டரின் ஏவுதல் முதலில் 2022 நவம்பரின் இறுதியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

8. சுற்றுலா அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட 24×7 இயங்கும் பன்மொழி சுற்றுலாத் தகவல்–உதவி மையத்தின் சுருக்கக் குறியீடு என்ன?

அ. 1091

ஆ. 1098

இ. 1363

ஈ. 1585

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. 1363

  • சுற்றுலா அமைச்சகமானது 1800111363 என்ற இலவச எண்ணில் அல்லது 1363 என்ற சுருக்கக்குறியீட்டில் 24×7 இயங்கும் பன்மொழி சுற்றுலாத் தகவல்–உதவி மையத்தை அமைத்துள்ளது. இந்த உதவி மையம் பத்து சர்வதேச மொழிகள் (ஜெர்மானியம், பிரெஞ்சு, ஸ்பானியம், இத்தாலியம், போர்த்துகீசியம், ரஷியம், சீனம், ஜப்பானியம், கொரிய மற்றும் அரபு) உட்பட 12 மொழிகளில் அமைக்கப்பட்டுள்ளது. ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகியவை உள்நாட்டுப் பயணிகளுக்கும் பிற 10 மொழிகள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தியாவில் பயணம் செய்வது மற்றும் இந்தியாவில் பயணம் செய்யும் போது துன்பத்தில் இருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுதல் தொடர்பான தகவல்களை வழங்குகின்றன.

9. கீழ்க்காணும் யாரின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர்.13ஆம் தேதியன்று புதுச்சேரியில் நினைவு நாணயத்தையும் அஞ்சல் தலையையும் பிரதமர் மோதி வெளியிட்டார்?

அ. ‘மகாகவி’ சுப்ரமணிய பாரதியார்

ஆ. ஸ்ரீ அரவிந்தர்

இ. கோபால கிருஷ்ண கோகலே

ஈ. அன்னி பெசன்ட்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஸ்ரீ அரவிந்தர்

  • பிரதமர் நரேந்திர மோதி டிசம்பர்.13 அன்று ஸ்ரீ அரவிந்தரின் 150ஆவது பிறந்தநாளை நினைவுகூரும் நிகழ்ச்சியில் மெய்நிகராகப் பங்கேற்றார். புதுச்சேரி கம்பன் கலைச் சங்கத்தில் விடுதலை அமுதப் பெருவிழா என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ அரவிந்தரின் நினைவாக ஒரு நினைவு நாணயமும் அஞ்சல் தலையையும் பிரதமர் மோதி வெளியிட்டார். ஸ்ரீ அரவிந்தர் ஓர் இந்திய தேசியவாதி ஆவார். ‘வந்தே மாதரம்’ போன்ற செய்தித்தாள்களின் ஆசிரியராகவும் அவர் இருந்தார். பின்னர் ஆன்மீக சீர்திருத்தவாதியாக மாறி புதுச்சேரியில் அரவிந்தர் ஆசிரமத்தை நிறுவினார்.

10. 2022 டிசம்பர் நிலவரப்படி, அதிக அகலக்கற்றை இணையப் பயனர்களைக் கொண்ட நாடு எது?

அ. சீனா

ஆ. அமெரிக்கா

இ. இந்தியா

ஈ. இந்தோனேசியா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. இந்தியா

  • எண்ணூறு மில்லியனுக்கும் அதிகமான அகலக்கற்றை இணையப் பயனர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய இணையவசதிகொண்ட நாடு இந்தியா என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் இராஜீவ் சந்திரசேகர் அறிவித்தார். ‘பாரதத்தை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல்’ என்ற கருப்பொருளின்கீழ் நடைபெற்ற ‘இந்திய இணைய ஆளுமை மன்றம்–2022’இன்போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இது ஐநா இணைய ஆளுகை மன்றத்துடன் (UN–IGF) தொடர்புடைய ஒரு முனைவாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 3D அச்சுமுறையில் உருவாக்கப்பட்ட முதலாவது ஈரடுக்கு குடியிருப்பு கட்டிடத்தை அகமதாபாதில் இராணுவம் திறந்துள்ளது.

அகமதாபாத்தின் காண்ட் பகுதியில் 3D அச்சு முறையில் இராணுவ வீர்ர்களுக்காக உருவாக்கப்பட்ட ஈரடுக்கு குடியிருப்புக் கட்டிடத்தை (தரைதளம் மற்றும் முதல்தளம்) இராணுவம் 2022 டிசம்பர்.28 அன்று திறந்துள்ளது. மிக்காப் தனியார் நிறுவனத்துடன் இணைந்து இராணுவ பொறியியல் சேவை அமைப்பு 3D விரைவுக் கட்டுமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தக் கட்டிடத்தைக் கட்டியுள்ளது.

2. நடுவண் உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா எல்லைப் பாதுகாப்பு படையினருக்கான ‘பிரஹாரி’ என்ற திறன்பேசி செயலியை அறிமுகம் செய்தார்.

நடுவண் உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷா எல்லைப் பாதுகாப்பு படையினருக்கான ‘பிரஹாரி’ என்ற திறன்பேசி செயலியை அறிமுகம் செய்துவைத்தார். எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கான இந்த ‘பிரஹாரி’ செயலி மூலம் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தங்குமிடங்கள் மற்றும் மருத்துவ வசதிகளை எளிதில் தெரிந்துகொள்ள முடியும். குறைதீர்ப்பு நடைமுறைகளை இதன்மூலம் தெரிந்துகொள்ளமுடியும் என்பதுடன் எல்லைப் பாதுகாப்புப் படைவீரர்களுக்கான நலத்திட்டங்களையும் இந்தச் செயலியின்மூலம் அறிந்துகொள்ள முடியும்.

3. நடுவண் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ், ‘இணைய விளையாட்டுகள்’.

இணையவழி விளையாட்டுகளை நிர்வகிக்கும் பொறுப்பு நடுவண் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இணையவழி விளையாட்டுகள் பிரிவானது நடுவண் இளையோர் நலன்-விளையாட்டு அமைச்சகத்தின்கீழ் இயங்கி வரும் விளையாட்டுத் துறையிடம் இருந்தது.

4. தமிழக நகர்ப்புற சேவை மேம்பாடு ஆசிய வளர்ச்சி வங்கியுடன் நடுவண் அரசு `1,040 கோடி கடன் ஒப்பந்தம்.

தமிழ்நாட்டில் மதுரை, கோயம்புத்தூர், தூத்துக்குடி போன்ற நகரங்களில் வெள்ளத்தடுப்பு, குடிநீர், கழிவுநீர் சேவைகளை மேம்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கியுடன் `1,040 கோடி கடனுக்கான ஒப்பந்தத்தில் நடுவண் அரசு கையொப்பமிட்டது.

பருவநிலை மாற்றத்தால் தமிழ்நாட்டு நகரங்களில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், கழிவுநீர் சேகரிப்பு, சுத்திகரிப்பு, கழிவுநீர், மழைநீர் அகற்றல், குடிநீர் விநியோக முறைகளை உருவாக்கி மேம்படுத்துவதற்காக நடுவண் அரசு இந்தக் கடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

முதற்கட்டமாக சென்னை, திருநெல்வேலி, இராஜபாளையம், திருச்சிராப்பள்ளி, வேலூர் போன்ற நகரங்களுக்கு `1,157 கோடிக்கான ($169 மில்லியன் டாலர்) கடன் ஒப்பந்தம் கடந்த 2018 நவ.16ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. முதல் இருதவணைக்குப் பின்னர் தற்போது கடைசி தவணையாக இந்த ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. இதில் கோயம்புத்தூர், மதுரை, தூத்துக்குடி ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

5. நீலகிரி வரையாடு திட்டம்: தமிழ்நாடு அரசு உத்தரவு.

நீலகிரி வரையாடு திட்டத்தை ஏற்படுத்தி தமிழ்நாடு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஆணையை சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு பிறப்பித்துள்ளார்.

அவர் பிறப்பித்த ஆணை: தமிழ்நாட்டின் மாநில விலங்காக நீலகிரி வரையாடு விளங்குகிறது. இதனைக் காக்கவும், அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் இந்தியாவிலேயே முதல்முறையாக நீலகிரி வரையாடு திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத்திட்டம் `25.14 கோடி செலவில் 2027ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும்.

கணக்கெடுப்புப் பணி: நீலகிரி வரையாடு திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. குறிப்பாக, ஆண்டுக்கு இருமுறை ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, ஒலிபெருக்கி கருவிகளை பொருத்தி தொடர்ந்து காத்தல், பழைய வாழ்விடங்களில் மீண்டும் வரையாடுகளை அறிமுகம் செய்வது, நோய் பாதிக்கப்பட்ட வரையாடுக்கு சிகிச்சையளிப்பது, சோலை புல்வெளிகளை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், வரையாடுகளின் முக்கியத்துவத்தை அனைத்துத் தரப்பினருக்கும் உணர்த்தும் வகையில், ஆண்டுதோறும் அக்.7 அன்று வரையாடு நாள் எனக் கடைப்பிடிக்கப்படும்.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி: உலகளாவிய இயற்கைப் பாதுகாப்பு நிதி அறிக்கையின்படி, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 3,122 வரையாடுகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியே அவற்றின் வாழ்விடமாக உள்ளன. தமிழ்நாடு அரசின் இத்திட்டத்தின்மூலமாக, வரையாடுகளின் உண்மையான வாழ்விடங்கள் மீட்கப்படும்.

6. ஆதார்போன்று தமிழ்நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் ‘மக்கள் ஐடி’ – விரிவான தகவல்.

ஆதார் எண்போல் தமிழ்நாட்டில் வசிக்கும் அனைவருக்கும், ‘மக்கள் ஐடி’ என்ற பெயரில் 10 முதல் 12 இலக்க எண் வழங்க தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது. தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து குடும்பங்களின் தரவுகளைக் கொண்டு ஒருங்கிணைந்த மாநில குடும்பத் தரவுதளத்தை தயார் செய்ய தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது. இது தொடர்பான பணியை தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின்கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு மின்னாளுகை முகமை செய்யவுள்ளது. இதில் அனைத்து துறைகளின் தரவுகளையும் ஒருங்கிணைந்து இந்தத் தரவு தளம் உருவாக்கப்படவுள்ளது. இதன்படி பொது விநியோகம், முதல்வர் காப்பீட்டுத் திட்டம், வருவாய், கல்வி, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், கருவூலம், சுகாதாரம் பல்வேறு துறைகளிடம் உள்ள தரவுகளை ஒருங்கிணைத்து இந்தத் தரவுத் தளம் உருவாக்கப்படவுள்ளது.

குறிப்பாக, இதில் ஆதார் எண்போல் ஒவ்வொரு குடிமகனு/ளுக்கும் ‘மக்கள் ஐடி’ என்ற பெயரில் 10 முதல் 12 இலக்க எண் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு குடிமக்களுக்கும் தனித்துவமான ‘மக்கள் ஐடி’ வழங்கப்படும். இது 10 முதல் 12 இலக்க எண்கள் கொண்டதாக இருக்கும். இதன்மூலம் அனைத்து சேவைகளையும் இந்த ஒரு எண்மூலம் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

28th & 29th December 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. What is the name of new scheme announced under station redevelopment drive of Ministry of Railways?

A. Atmarirbhar Bharat Station Scheme

B. Amrit Bharat Station Scheme

C. Bharat Rail Station Scheme

D. Atal Station Scheme

Answer & Explanation

Answer: B. Amrit Bharat Station Scheme

  • The Ministry of Railways has formulated a new scheme to modernise over 1,000 small stations over the coming years. Amrit Bharat Station Scheme is a part of its station redevelopment drive. The key features of the proposed stations include provisions for roof top plazas, longer platforms, ballast–less tracks, and 5G connectivity.

2. Home Affairs Ministry and which state signed cessation of operations agreement with ZUF armed group?

A. Manipur

B. Assam

C. Arunachal Pradesh

D. Sikkim

Answer & Explanation

Answer: A. Manipur

  • The Union government and the Manipur government have signed a cessation of operations agreement with the Zeliangrong United Front (ZUF). ZUF is a Manipur–based Naga armed group, which has been demanding a separate State for the Zeliangrong Naga tribe. The agreement seeks rehabilitation and re–settlement of the armed cadres.

3. Mangdechhu Hydroelectric Power Project, which was seen in the news, was handed over by India to which country?

A. Nepal

B. Bangladesh

C. Bhutan

D. Maldives

Answer & Explanation

Answer: C. Bhutan

  • India–assisted 720 Megawatts Mangdechhu Hydroelectric Power Project has been recently handed to Druk Green Power Corporation (DGPC) in Bhutan. With this project, India and Bhutan have successfully completed four mega hydroelectric power projects. The commissioning of the project has increased Bhutan’s Electrical Power Generation Capacity by 44 per cent.

4. Which Union Ministry launched the ‘City Finance Rankings 2022’?

A. Ministry of Housing and Urban Affairs

B. Ministry of Finance

C. Ministry of Corporate Affairs

D. Ministry of MSME

Answer & Explanation

Answer: A. Ministry of Housing and Urban Affairs

  • Union Minister of Housing and Urban Affairs has recently released the draft guidelines for a new ranking system of cities based on their financial performance and beautification. The ‘City Finance Rankings 2022’ aims to evaluate and reward urban local bodies on the basis of their strength across resource mobilisation, expenditure performance and fiscal governance systems. The ‘City Beauty Competition’ initiative aims to recognise efforts made by the cities and wards towards creating beautiful, innovative and inclusive public spaces.

5. The ‘National Mobile Monitoring System (NMMS)’ is an initiative of which Union Ministry?

A. Ministry of Rural Development

B. Ministry of Housing and Urban Development

C. Ministry of Agriculture and Farmers Welfare

D. Ministry of Defence

Answer & Explanation

Answer: A. Ministry of Rural Development

  • National Mobile Monitoring Software (NMMS) App was launched by the Ministry of Rural Development in 2021. Digitally capturing the attendance of workers employed under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGREGS) has been made universal from January 1, 2023.  The attendance is captured through National Mobile Monitoring Software (NMMS) mobile application.

6. Which institution developed an ‘Ocean Wave Energy Converter’ that can generate electricity from sea waves?

A. IIT Madras

B. IIT Bombay

C. IIT Delhi

D. NIT Warangal

Answer & Explanation

Answer: A. IIT Madras

  • Indian Institute of Technology Madras (IIT Madras) Researchers have developed an ‘Ocean Wave Energy Converter’ that can generate electricity from sea waves. The Device was deployed at a location about 6 KM off the coast of Tuticorin, Tamil Nadu. The device targets generating 1MW of power from ocean waves in the next three years.

7. Hakuto–R lander is the first–ever moon Mission of which country?

A. South Korea

B. Japan

C. Singapore

D. UAE

Answer & Explanation

Answer: B. Japan

  • A Japanese start–up ispace Inc launched the country’s first–ever Moon mission with the help of SpaceX. A Japanese lunar lander carrying two rovers and payload lifted off via a SpaceX Falcon 9 rocket. It also became the first commercial spacecraft to land on the moon. The launch of Hakuto–R lander was originally scheduled for late November 2022.

8. What is the short code of the 24×7 Multilingual Tourist Info–Helpline set up by the Ministry of Tourism?

A. 1091

B. 1098

C. 1363

D. 1585

Answer & Explanation

Answer: C. 1363

  • The Ministry of Tourism has set up a 24×7 Multi–Lingual Tourist Info–Helpline on the toll free number 1800111363 or on a short code 1363. The helpline has been set up in 12 Languages including 10 international languages (German, French, Spanish, Italian, Portuguese, Russian, Chinese, Japanese, Korean, and Arabic), Hindi and English for domestic and foreign tourists to provide information relating to Travel in India and guidance to tourists in distress while travelling in India.

9. Prime Minister released a commemorative coin and stamp on which leader’s 150th birth anniversary on 13th December at Puducherry?

A. ‘Mahakavi’ Subramanya Bharathiyar

B. Sri Aurobindo

C. Gopala Krishna Gokhale

D. Annie Besant

Answer & Explanation

Answer: B. Sri Aurobindo

  • Prime Minister Narendra Modi virtually participated in a programme commemorating Sri Aurobindo’s 150th birth anniversary, on 13th December. The programme is being held in Kamban Kalai Sangam, Puducherry, under the aegis of Azadi ka Amrit Mahotsav. The Prime Minister also released a commemorative coin and postal stamp in honour of Sri Aurobindo. He was an Indian nationalist and editor of newspapers such as Vande Mataram. He later became a spiritual reformer and established Aurobindo Ashram in Puducherry.

10. Which country has the highest number of broadband users, as of December 2022?

A. China

B. USA

C. India

D. Indonesia

Answer & Explanation

Answer: C. India

  • The Minister of State for Electronics & Information Technology Rajeev Chandrasekhar announced that India is the largest connected nation in the world today with more than 800 million broadband users. The announcement was made during ‘India Internet Governance Forum 2022’, held on the theme ‘Leveraging Techade for Empowering Bharat’. It is an initiative associated with the UN Internet Governance Forum (UN–IGF).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!