Tnpsc

28th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

28th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 28th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

28th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. உலக அறிவுசார் சொத்து நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) ஏப்ரல் 25

ஆ) ஏப்ரல் 26

இ) ஏப்ரல் 27

ஈ) ஏப்ரல் 28

  • உலக அறிவுசார் சொத்து நாளானது ஆண்டுதோறும் ஏப்ரல்.26 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • உலக அறிவுசார் சொத்து அமைப்பானது (WIPO) கடந்த 2000ஆம் ஆண்டில் “காப்புரிமைகள், பதிப்புரிமை, வணிக முத்திரைகள் மற்றும் வடிவமைப்புகள் ஆகியவை அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், “படைப்பாற்றலையும் உலகெங்குமுள்ள சமூகங்களின் வளர்ச்சிக்கு படைப்பாளிகள் மற்றும் புத்தகாக்குநர்கள் அளித்த பங்களிப்புகளை கொண்டாடுவதற்காகவுமாக” இந்நாளை உருவாக்கியது. நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கானக் கருப்பொருள் – “IP and SMEs: Taking your ideas to market”.

2. அண்மைய NASA திட்டம் குறித்து, ‘MOXIE’இல் உள்ள ‘M’ எதைக் குறிக்கின்றது?

அ) Maintained

ஆ) Minimum

இ) Maximum

ஈ) Mars

  • NASA’இன் பெர்ஸிவெரன்ஸ் ஊர்தி அதன் MOXIE (Mars Oxygen In-Situ Resource Utilization Experiment) சாதானத்தைப் பயன்படுத்தி செவ்வாய் கிரகத்தில் ஆக்ஸிஜனை பிரித்தெடுத்துள்ளது. செவ்வாய் கோளின் வளி மண்டலத்திலிருந்த கரியமிலவாயுவிலிருந்து ஐந்து கிராம் ஆக்ஸிஜனை MOXIE உற்பத்தி செய்துள்ளது. 5 கிராம் என்பது மனிதன் சராசரியாக 10 நிமிடங்களில் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் அளவு.
  • செவ்வாயின் வளிமண்டலம் 96 சதவீதம் கரியமிலவாயுவாலேயே நிறைந்துள்ளது. ஆக்சிஜன் 0.13% மட்டுமே உள்ளது. கரியமிலவாயுவை உட்கவர்ந்து அதிலிருந்து உயிர்வளியை உருவாக்குவதே MOXIE’இன் வேலையாகும்.

3. IEA அறிக்கையின்படி, நடப்பு 2021ஆம் ஆண்டில், இந்தியாவில், CO2 உமிழ்வின் சதவீதம், கடந்த 2020ஆம் ஆண்டை ஒப்பிடும்போது எத்தனை சதவீதம் அதிகமாக இருக்கும்?

அ) 1.4%

ஆ) 5.4%

இ) 10.4%

ஈ) 20%

  • பன்னாட்டு எரிசக்தி முகமை (IEA) தனது சமீபத்திய அறிக்கையில், நடப்பு 2021ஆம் ஆண்டில், இந்தியாவில், கரியமில வாயு (CO2) உமிழ்வு 1.4% அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளது. அது, 2020ஆம் ஆண்டில் உமி -ழப்பட்ட 30 மில்லியன் டன் கரியமில வாயுவை விட 1.4% அதிகமாகும். மேலும், நிலக்கரி அடிப்படையிலான மின்னுற்பத்தியில் எதிர்பார்க்கப்படு -ம் அதிகரிப்பு மற்ற மூலங்களிலிருந்து கிடைக்கும் உற்பத்தியை விட 3 மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் அவ்வறிக்கை கூறியுள்ளது.

4. COVID-19’இன் தாக்கத்திற்கு எதிரான இளையோரின் யோசனைகளுக்கு நிதியளிப்பதை நோக்கமாகக்கொண்ட, WHO’ஆல் ஆதரிக்கப்படும் திட்டத்தின் பெயர் என்ன?

அ) Global Youth Mobilization

ஆ) World COVID Response Program

இ) World Health Programme

ஈ) Global Economy Recover Programme

  • “Global Youth Mobilization” என்பது COVID-19 தொற்றுநோயின் தாக்கத் -திற்கு எதிரான இளையோர்களின் யோசனைகளுக்கு நிதியளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கு உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐநா அறக்கட்டளை ஆகியவை துணைபுரிகின்றன.
  • இதற்கு UNICEF, USAID, UNFPA, ஐரோப்பிய ஆணையம், சேல்ஸ் போர்ஸ், FIFA மற்றும் உலக நாடுகளின் தலைவர்களும் அரசாங்கங்களும் ஆதரிக்கின்றன.

5. ஆக்ஸிஜன் தணிக்கைக் குழுவை உருவாக்கியுள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ) கேரளா

ஆ) மகாராஷ்டிரா

இ) கோவா

ஈ) தில்லி

  • தில்லி முழுவதுமுள்ள மருத்துவமனைகளில் மருத்துவ ஆக்ஸிஜனின் கடுமையான பற்றாக்குறையை அடுத்து, தில்லி அரசு 24 பேர்கொண்ட ஆக்ஸிஜன் தணிக்கைக் குழுவை அமைத்துள்ளது. இக்குழு, ஆக்ஸிஜன் இருப்பு மற்றும் அவற்றின் பயன்பாடு ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்கும். ஆக்ஸிஜன் அனைவருக்கும் உகந்த முறையில் கிடைப்பதையும் இந்தக் குழு உறுதிசெய்யும்.

6. SHIELDS என்ற பெயரில் திட்டமொன்றை தொடங்கியுள்ள விண்வெளி நிறுவனம் எது?

அ) NASA

ஆ) ISRO

இ) ESA

ஈ) ROSCOSMOS

  • அமெரிக்க விண்வெளி முகமையான NASA, அண்மையில் SHIELDS (Spatial Heterodyne Interferometric Emission Line Dynamics Spectrometer) என்ற பெயரில் ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது. சூரிய மண்டலத்திற்குள் நகர்ந்து வந்த விண்மீனிடை துகள்களின் ஒளியை ஆராய்வதே இதன் நோக்கமாகும். மெக்ஸிகோவிலிருந்து NASA பிளாக் பிராண்ட் IX ஆய்வு ஏவுகலத்தைப் பயன்படுத்தி இத்திட்டம் ஏவப்பட்டது.

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “CODEX ALIMENTARIUS” என்பதுடன் தொடர்புடைய துறை எது?

அ) இராணுவ கொள்முதல்

ஆ) பருவநிலை மாற்றம்

இ) உணவு தரநிலைகள்

ஈ) செயற்கை நுண்ணறிவு

  • “CODEX ALIMENTARIUS” பன்னாட்டு உணவுத் தரநிலைகளும் வழிகாட்டுதல்களும் சர்வதேச உணவு வர்த்தகத்தின் பாதுகாப்பு மற்றும் தரத்திற்கு பங்களிக்கின்றன. 1963’இல் நிறுவப்பட்ட இத்தரநிலைகளை, இடர் மதிப்பீட்டு அமைப்புகள் அல்லது FAO மற்றும் WHOஆல் ஏற்பாடு செய்யப்பட்ட ஆலோசனை நிறுவனங்கள் வழங்கின.
  • அண்மையில், “CODEX ALIMENTARIUS” ஆணையத்தின்கீழ் நிறுவப்ப -ட்ட மசாலா மற்றும் சமையல் மூலிகைகள்பற்றிய CODEX குழுவின் ஐந்தாவது அமர்வு மெய்நிகராக நடத்தப்பட்டது. ஏப்.20 முதல் ஏப்ரல்.29 வரை இது நடைபெறுகிறது.

8. டிராக்கோமாவை ஒழித்ததற்காக உலக நல்வாழ்வு அமைப்பிடம் இருந்து சான்றுபெற்ற நாடு எது?

அ) காம்பியா

ஆ) ஜிம்பாப்வே

இ) தென்னாப்பிரிக்கா

ஈ) சாட்

  • பொதுநலச்சிக்கலான கண்ணிமை நோயை ஒழித்ததற்காக உலக நல வாழ்வு அமைப்பிடம் இருந்து அண்மையில் காம்பியா சான்றிதழ் பெற்றது. இதன்மூலம், இந்த மைல்கல்லை எட்டிய உலக நல வாழ்வு அமைப்பின் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள 2ஆவது நாடாக காம்பியா ஆனது.
  • புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களுக்காக 2021 முதல் 2030 வரையிலான செயல்திட்டத்தை WHO அறிமுகப்படுத்தியது. கோட் டி ஐவோயர் நாடு இந்தச் சாதனையை அடைந்த முதல் நாடாகும்.

9. KRI நங்கலா-402 என்னும் எந்த நாட்டின் நீர்மூழ்கிக்கப்பலைத் தேடும்பணியில் இந்திய கடற்படை இணைந்துள்ளது?

அ) நேபாளம்

ஆ) இலங்கை

இ) இந்தோனேசியா

ஈ) ஜப்பான்

  • இந்தோனேசிய நீர்மூழ்கிக்கப்பலான KRI நங்கலா-402 அதன் 53 பேர் கொண்ட குழுவினருடன் அண்மையில் திடீரென காணாமல் போனது, அதனை தேடி மீட்கும் நடவடிக்கையில் இந்திய கடற்படை அண்மையில் இணைந்துள்ளது. பாலி தீவுக்கு வடக்கே இந்நீர்மூழ்கி காணாமல்போன பிறகு, இந்தோனேசியா இந்தியாவின் உதவியைக் கோரியது.
  • மீட்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக இந்திய கடற்படையின் ஆழ்கடல் நீர்மூழ்கு மீட்புக்கப்பல் விசாகப்பட்டினத்திலிருந்து புறப்பட்டது.

10. இந்திய பெண்கள் ஏழு தங்கங்களை வென்ற உலக இளைஞர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்ட நாடு எது?

அ) ரஷியா

ஆ) போலந்து

இ) உக்ரைன்

ஈ) பிரான்ஸ்

  • போலந்தின் கீல்ஸில் நடைபெற்ற உலக இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் 7 தங்கப் பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனையை உருவாக்கினர்.
  • இறுதிப்போட்டியாளர்களான கிதிகா, நெளரம் பாபிரோஜிசனா சானு, பூனம், விங்கா, அருந்ததி செளத்ரி, டி சனாமாச்சா சானு மற்றும் அல்பியா பதான் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். மேலும் மூன்று இந்திய குத்துச்சண்டை வீரர்களும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தொலைத்தொடர்பு சேவை வழங்குவது தொடர்பாக BSNL-இந்தியன் வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம்

தொலைத்தொடர்பு சேவை வழங்குவது தொடர்பாக பாரத் சஞ்சார் நிகம் நிறுவனம் (BSNL) மற்றும் இந்தியன் வங்கி ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியன் வங்கிக்கு குறைந்த விலையில் தொலைத்தொடர்பு இணையதள சேவையை வழங்குவதற்காக, அந்த வங்கியுடன் BSNL நிறுவனம் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

2. இந்தியப்பெண் அறிவியலாளருக்கு சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு விருது

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட இந்தியப் பெண் விஞ்ஞானி கிரிதி கரந்த், சர்வதேச அமைப்பால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் உள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக சர்வதேச விஞ்ஞானிகளுடன் இணைந்து ‘வைல்ட் எலமண்ட்ஸ்’ அறக்கட்டளை அமைப்பு செயல்பட்டு வருகிறது. மனித உலகம், தாவர உலகம், விலங்குலகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பாதுகாப்பதற்கு இந்த அமைப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

அந்த அமைப்பு கிரிதி கரந்துக்கு ‘வன புத்தாக்க அறிவியலாளர்’ விருதை வழங்கியுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் இந்தியப் பெண் கிரிதி கரந்த் என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரைச் சேர்ந்த உயிரியல் அறிவியலாளரான கிரிதி கரந்த், வனப் பாதுகாப்பு ஆய்வு மையத்தின் தலைமை அறிவியலாளராகவும் உள்ளார். அமெரிக்கா, பிரிட்டன், கென்யா, கொலம்பியா, ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த அறிவியலாளர்கள் சிலருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இவ்விருதைப் பெறுவோருக்கு ஆராய்ச்சிப்பணிகளுக்காக ஈராண்டுகட்கு `75 இலட்சத்தை அந்த அமைப்பு வழங்கவுள்ளது. வனப்பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கு இந்த விருது உதவும் என்று கிரிதி கரந்த் தெரிவித்துள்ளார்.

3. அமெரிக்க நீதி துறையில் இந்திய பெண்மணி!

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வனிதா குப்தாவை அமெரிக்காவின் இணை அட்டர்னி ஜெனரலாக நியமிக்க, பார்லிமென்டின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. வனிதா குப்தா, சமூக உரிமைகள் தொடர்பான விஷயத்தில், அமெரிக்காவில் தலைச்சிறந்த வழக்கறிஞராக இருந்து வருகிறார். ஒபாமா அதிபராக இருந்தபோது, உதவி அட்டர்னி ஜெனரலாக பணியாற்றியும் உள்ளார். தற்போது, ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அதிபராக பதவியேற்ற பின், நீதித் துறையில் மூன்றாவது உயரிய பதவியான, இணை அட்டர்னி ஜெனரலாக, வனிதா குப்தா பதவி ஏற்கிறார்.

அவரது நியமனத்தை உறுதிசெய்வதற்காக, பார்லிமென்டின் செனட் சபை -யில் ஓட்டெடுப்பு நடந்தது. மொத்தம், 100 உறுப்பினர்கள் உள்ள செனட் சபையில், ஜனநாயகக்கட்சி மற்றும் குடியரசு கட்சிக்கு தலா, 50 உறுப்பினர் -கள் உள்ளனர். குடியரசு கட்சியின் லிசா முர்கோவ்ஸி ஆதரித்து ஓட்டளித் -ததால், 51 – 49 என்ற ஓட்டு விகிதத்தில், வனிதா குப்தா நியமனத்துக்கு, செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

1. When is World Intellectual Property day celebrated?

A) April 25

B) April 26

C) April 27

D) April 28

  • World Intellectual Property Day is observed annually on 26 April.The event was established by the World Intellectual Property Organization in 2000 to “raise awareness of how patents, copyright, trademarks and designs impact on daily life” and “to celebrate creativity, and the contribution made by creators and innovators to the development of societies across the globe”. The theme for this year’s World Intellectual Property Day is “IP and SMEs: Taking your ideas to market”.

2. With reference to a recent NASA project, what does “M” in MOXIE stand for?

A) Maintained

B) Minimum

C) Maximum

D) Mars

  • NASA’s Perseverance mission has extracted oxygen on the Mars planet, using its MOXIE (i.e) Mars Oxygen In-Situ Resource Utilization Experiment. MOXIE has produced 5 grams of oxygen from carbon dioxide in the Martian atmosphere, which is enough for an astronaut to breathe for 10 minutes.
  • On Mars, carbon dioxide makes up 96% of the gas in its atmosphere while Oxygen is only 0.13%. MOXIE intakes CO2 and produces O2 from it.

3. As per IEA report, by what percentage of the CO2 emissions in India in 2021 will be higher than that of 2020?

A) 1.4%

B) 5.4%

C) 10.4%

D) 20%

  • The International Energy Agency (IEA) in its recent report has stated that the carbon di oxide (CO2) emissions in India for the year 2021 would be 1.4% more that that in the year 2020 (i.e) 30 million tonnes more than the year 2020. Also, the report has stated that the expected rise in coal-based electricity generation would be 3 times more than the generation from other sources.

4. What is the name of the programme which is backed by WHO, that aims to fund young people’s ideas to combat COVID-19‘s impact?

A) Global Youth Mobilization

B) World COVID Response Program

C) World Health Programme

D) Global Economy Recover Programme

  • “Global youth mobilization” aims to fund young people’s ideas to combat the impact of COVID-19 pandemic, in various communities.
  • This is supported by the World Health Organization and United Nations Foundation. It is also backed by UNICEF, USAID, UNFPA, European Commission, Salesforce, FIFA and Heads of State and Governments from around the world.

5. Which state / UT has recently formed an Oxygen audit committee?

A) Kerala

B) Maharashtra

C) Goa

D) Delhi

  • The Government of Delhi has formed a 24-member oxygen audit committee, in wake of the acute shortage of medical oxygen in hospitals across Delhi. The committee would be monitoring the oxygen stocks and their consumption continuously. It would also ensure that the utilization of oxygen is rational and optimal.

6. Which space agency has launched a mission named SHIELDS?

A) NASA

B) ISRO

C) ESA

D) ROSCOSMOS

  • The American Space Agency – NASA has recently launched a mission named – SHIELDS (Spatial Heterodyne Interferometric Emission Line Dynamics Spectrometer). This mission aims to study light from interstellar particles which have drifted into the solar system.
  • The mission was launched using a NASA black Brant IX sounding rocket from Mexico.

7. “CODEX ALIMENTARIUS” which was making news recently, is associated with which field?

A) Defence Procurement

B) Climate Change

C) Food Standards

D) Artificial Intelligence

  • The ‘CODEX ALIMENTARIUS’ international food standards and guidelines contribute to the safety and quality of international food trade. Founded in 1963, the standards are provided by risk assessment bodies or consultations organized by FAO and WHO.
  • Recently, the fifth session of the Codex Committee on Spices and Culinary Herbs (CCSCH) established under Codex Alimentarius Commission (CAC) was inaugurated virtually. It is taking place from April 20 to April 29 virtually with over 300 participants.

8. Which country has been validated by the World Health Organization (WHO) for having eliminated trachoma?

A) Zambia

B) Zimbabwe

C) South Africa

D) Chad

  • The World Health Organization (WHO) has recently validated Gambia for having eliminated trachoma as a public health problem. With this, Gambia became the second country in WHO’s African Region to achieve this milestone.
  • World Health Organization launched the 2021–2030 road map for neglected tropical diseases. Côte d’Ivoire was the 1st to achieve this feat.

9. KRI Nanggala-402, is a submarine of which country, in search of which the Indian Navy has joined the rescue operation?

A) Nepal

B) Sri Lanka

C) Indonesia

D) Japan

  • The Indian Navy has recently joined the rescue operation for an Indonesian submarine KRI Nanggala-402 and its 53-member crew that went missing.
  • After its 44-year-old submarine went missing while conducting a torpedo drill north of the island of Bali, Indonesia had sought assistance from India. Indian Navy’s Deep-Submergence Rescue Vessel left from Visakhapatnam as a part of the rescue operation.

10. World Youth Boxing Championships, where Indian women won 7 gold medals, were organised in which country?

A) Russia

B) Poland

C) Ukraine

D) France

  • In the World Youth Boxing Championships held in Kielce, Poland, Indian women boxers created history with seven gold medals. All the women finalists Gitika, Naorem Babyrojisana Chanu, Poonam, Vinka, Arundhati Choudhary, T Sanamacha Chanu and Alfiya Pathan finished on the top of the podium. Three other Indian boxers also won bronze medals.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!