TnpscTnpsc Current Affairs

28th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

28th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 28th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. 2022 – பிரிட்ஸ்கர் பரிசை வென்றவர் யார்?

அ) டிபெடோ பிரான்சிஸ் கெரே 

ஆ) அன்னே லாகடன்

இ) ஜீன் பிலிப் வாசல்

ஈ) அரத இசோசாகி

  • பிரிட்ஸ்கர் பரிசை வழங்கும் ஹயாத் அறக்கட்டளை, நடப்பு 2022ஆம் ஆண்டுக்கான பரிசின் வெற்றியாளராக டிபெடோ பிரான்சிஸ் கெரேவை அறிவித்துள்ளது.
  • இது கட்டடக்கலைக்கான உலகின் மிக முக்கியமான விருதாக பார்க்கப்படுகிறது. புர்கினா பாசோவில் பிறந்த டிபெடோ பிரான்சிஸ் கெரே, ‘பிரிட்ஸ்கர்’ பரிசைப் பெற்ற முதல் ஆப்பிரிக்க கட்டடக் கலைஞராவார்.

2. 2022 – உலக மகிழ்ச்சி அறிக்கையில் இந்தியாவின் தரநிலை என்ன?

அ) 123

ஆ) 136 

இ) 141

ஈ) 146

  • 2022 – ஐநா உலக மகிழ்ச்சி அறிக்கையில், இந்தியா 136ஆவது இடத்தில் உள்ளது. இது பட்டியலின் இறுதியில் இருந்து பத்தாவது இடமாகும். ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு மகிழ்ச்சி நாளை முன்னிட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 146 நாடுகள்கொண்ட இப்பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 5ஆம் ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.

3. உலகளாவிய கோதுமை உற்பத்தியில் இந்தியாவின் தரநிலை என்ன?

அ) முதலாவது

ஆ) இரண்டாவது 

இ) மூன்றாவது

ஈ) நான்காவது

  • கோதுமை உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது. இந்த நிதியாண்டில் இந்தியா 7 மில்லியன் டன் கோதுமையை ஏற்றுமதி செய்து சாதிக்கவுள்ளது.
  • மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின்படி, உலகளாவிய விலைகளின் ஏற்றம் சந்தைப் பங்கைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. பிப்ரவரி மாத இறுதிவரை, இந்தியா 6.6 மில்லியன் டன் கோதுமையை ஏற்றுமதி செய்துள்ளது.

4. ‘கின்சல் – Kinzhal’ என்னும் மீவுயர் அதிர்வெண் கொண்ட எறிகணை சார்ந்த நாடு எது?

அ) உக்ரைன்

ஆ) ரஷ்யா 

இ) அமெரிக்கா

ஈ) வட கொரியா

  • மேற்கு உக்ரைனில் உள்ள ஒரு பெரிய நிலத்தடி ஆயுதக் கிடங்கை ரஷ்ய ராணுவம் மீவுயர் அதிர்வெண்கொண்ட எறிகணையை ஏவி அழித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ‘கின்சல்’ அல்லது ‘டேகர்’ என்றழைக்கப்படும் இந்த எறிகணை இப்போரில் முதல் முறையாக ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்டது.

5. கார்பன்–நடுநிலை வேளாண் முறைகளை அறிமுகம் செய்த முதல் இந்திய மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா 

இ) பஞ்சாப்

ஈ) இராஜஸ்தான்

  • தெரிவுசெய்யப்பட்ட இடங்களில் கரிம–நடுநிலை உழவு முறைகளை அறிமுகப்படுத்திய நாட்டின் முதல் மாநிலமாக கேரளா மாறவுள்ளது. இந்தத் திட்டத்திற்காக மாநில அரசு 2022–23 பட்ஜெட்டில் `6 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. முதற்கட்டமாக 13 பண்ணைகளில் இந்த கரிம–நடுநிலை வேளாண் முறை செயல்படுத்தப்படும்.

6. தேசிய இ–விதான் செயலியை (NeVA) செயல்படுத்திய நாட்டின் முதல் மாநில சட்டமன்றம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) நாகாலாந்து 

இ) மேற்கு வங்காளம்

ஈ) தெலுங்கானா

  • தேசிய இ–விதான் செயலி திட்டத்தைச் செயல்படுத்தும் நாட்டின் முதல் மாநில சட்டமன்றம் நாகாலாந்து ஆகும்.
  • 60 உறுப்பினர்கள் கொண்ட இந்தச் சட்டசபையில் உள்ள ஒவ்வொரு மேசையிலும் ஒரு டேப்லெட் அல்லது மின் நூல் இடம்பெற்றிருக்கும். மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தின் மேற்பார்வையில், ‘NeV’ செயல்படுகிறது.

7. சொஜிலா கணவாயானது, பின்வரும் எந்த மாநிலம் / UT–ஐ நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது?

அ) ஹிமாச்சல பிரதேசம்

ஆ) லடாக் 

இ) சிக்கிம்

ஈ) அஸ்ஸாம்

  • சொஜிலா கணவாயானது ஸ்ரீநகர்–கார்கில்–லே சாலையி –ல் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும் லடாக்கிற்கும் இடையே இணைப்பை வழங்குகிறது. இது லடாக்கை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது.
  • எல்லைப்புற சாலைகள் அமைப்பால் (BRO) இக்கணவாய் திறக்கப்பட்டுள்ளது. இக்கணவாய் 11,650 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பொதுவாக ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாத இறுதியில் மூடப்பட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் நடுப் பகுதியில் இக்கணவாய் திறக்கப்படுகிறது.

8. ‘சுஜலாம் 2.0’ பரப்புரையின் முக்கிய நோக்கம் என்ன?

அ) நிலத்தடி நீர் பாதுகாப்பு

ஆ) கழிவுநீர் மேலாண்மை 

இ) மழைநீர் மேலாண்மை

ஈ) வெள்ளநீர் மேலாண்மை

  • கழிவுநீர் மேலாண்மைக்கான ‘சுஜலாம் 2.0’ பரப்புரையை மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் தொடங்கிவைத்தார். இந்தாண்டு உலக நீர் நாளுக்கானக் கருப்பொருள், “நிலத்தடிநீர்: கண்ணுக்கு தெரியாததை காணச்செய்வது”.
  • மக்கள் பங்களிப்பின்மூலம் கழிவுநீர் மேலாண்மையை மேற்கொள்வதுதான் இப்பிரசாரத்தின் நோக்கம். இந்தப் பிரச்சாரம்மூலம் பொதுமக்கள், பஞ்சாயத்துக்கள், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளை கழிவுநீர் மேலாண்மைக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

9. வானிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த அமைப்பு எது?

அ) ISRO

ஆ) DRDO 

இ) HAL

ஈ) BHEL

  • அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வானில் இருந்து வான் இலக்கைத் தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. நீட்டிக்கப்பட்ட ஏவுகணை அதன் இலக்கை துல்லியமாகத் தாக்கியது.

10. 2022இல், ‘BIMSTEC உச்சிமாநாட்டை’ நடத்தும் நாடு எது?

அ) இந்தியா

ஆ) இலங்கை 

இ) பாகிஸ்தான்

ஈ) வங்காளதேசம்

  • வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு (BIMSTEC) உச்சிமாநாடு நடப்பாண்டில் இலங்கையால் நடத்தப்படுகிறது. BIMSTEC சாசனம் & போக்குவரத்து இணைப்புக்கான BIMSTEC மாஸ்டர் திட்டம் ஆகியவை இலங்கை உச்சிமாநாட்டின் போது கையெழுத்திடப்படவுள்ளன.
  • BIMSTEC அமைப்பு 1997–இல் நிறுவப்பட்டது. மேலும் இது வாங்காளதேசம், பூடான், இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு உறுப்பு நாடுகளை உள்ளடக்கியதாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: மே 1-இல் அமலாக வாய்ப்பு

இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிகழாண்டு மே 1 முதல் அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபை எக்ஸ்போ கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சியில் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் கலந்துகொண்டு பேசியதாவது:

தற்போது இந்தியா-யுஏஇ இடையிலான வர்த்தகத்தின் மதிப்பு 60 பில்லியன் டாலர் (சுமார் `4.50 லட்சம் கோடி). இதனை அடுத்த 5 ஆண்டுகளில் 100 பில்லியன் டாலராக (சுமார் 7.60 லட்சம் கோடி) அதிகரிக்கும் நோக்கில், கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா, யுஏஇ இடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையொப்பானது.

இந்த ஒப்பந்தம் தொடர்பான விரிவான தகவல்கள் பொது வெளியில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தம் தொடர்பான ஆவணப் பணிகள், சுங்க அறிவிக்கைகளை விரைந்து முடிக்க முயற்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஒப்பந்தத்தை நிகழாண்டு மே 1 முதல் அமல்படுத்த முடியும் என்று நம்புகிறோம். இதன்மூலம் யுஏஇ சந்தைக்கு ஜவுளி, வேளாண்மை, ரத்தினம் மற்றும் ஆபரணங்கள் போன்ற துறைகளின் 6,090 சரக்குப் பொருள்களை வரிகளின்றி இந்திய வர்த்தகர் ஏற்றுமதி செய்யமுடியும்.

தற்போது இந்தியாவிலிருந்து 26 பில்லியன் டாலர் (சுமார் `2 லட்சம் கோடி) மதிப்பிலான சரக்குகள் யுஏஇக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், சிஇபிஏ ஒப்பந்தம் அமலுக்கு வரும் நாளிலிருந்து யுஏஇக்கு ஏற்றுமதி செய்யப்படும் 90% சரக்குகளுக்கு முழுமையான வரிவிலக்குக் கிடைக்கும். எஞ்சிய 9.5% சரக்குகளுக்கு அடுத்த 5-10 ஆண்டுகளில் வரிவிலக்குக் கிடைக்கும்.

2. சுவிஸ் ஓபன் பாட்மின்டன்: சிந்து ‘சாம்பியன்’

சுவிஸ் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.

சுவிட்சர்லாந்தின் பசல் நகரில், சுவிஸ் ஓபன் ‘சூப்பர் 300’ பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சிந்து, தாய்லாந்தின் புசானன் மோதினர். முதல் செட்டை 21-16 எனக் கைப்பற்றிய சிந்து, இரண்டாவது செட்டை 21-8 என வென்றார்.

மொத்தம் 49 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சிந்து 21-16, 21-8 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக கோப்பை வென்றார்.

3. மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரண மாதிரிகளை தேர்வு செய்ய புதிய திட்டம்: நடப்பாண்டில் `9.50 கோடி நிதி ஒதுக்கீடு

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்களின் மாதிரிகளை தேர்வு செய்ய புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தைச் செயல்படுத்த நடப்பாண்டில் `9.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர். இவர்களில் உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆண்டுதோறும் சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் உள்ளிட்ட 24 வகையான உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு வழங்கப்படும் உதவி உபகரணங்கள் குறிப்பிட்ட மாதிரிகளில் மட்டுமே வடிவமைக்கப்பட்டிருக்கு -ம். இதனால், மாற்றுத்திறனாளிகள் குறிப்பிட்ட மாதிரியை -த்தான் பெறவேண்டிய நிலை உள்ளது. இவற்றுக்கு மாற்றாக, மாற்றுத்திறனாளிகள் மாதிரிகளை தேர்வு செய்ய புதிய திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனடிப்படையில், தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகள் தேர்வு செய்யும் உபகரணங்களின் மாதிரிகளுக்கும் மானியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள், காதுக்குப் பின்னால் அணியும் காதொலிக் கருவிகள் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் ஆகிய ஐந்து வகையான உபகரணங்களை மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்ய அனுமதியளிக்கப்பட் -டுள்ளது. இதன்மூலம், தாங்கள் விரும்பிய உபகரணங்களை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த `9.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

4. சமூக வலைதளங்களை கண்காணிக்க இஸ்ரேல் தொழில்நுட்பம்: தமிழக காவல் துறையின் சைபர் க்ரைம் பிரிவில் அறிமுகம்

தமிழக காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவில், சமூக வலைதளங்களைக் கண்காணிக்க இஸ்ரேல் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கொலை, கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், வங்கி மோசடி, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மோசடிகள், போலி கணக்கு மூலம் மோசடி செய்தல், சமூக வலைதளங்களில் போலி செய்திகளைப் பரவவிடுதல், அவதூறு பரப்புதல், இணையதளம்மூலம் பெண்கள், குழந்தைகளை மன ரீதியில் துன்புறுத்துதல், ஆன்லைன் மோசடி, வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துகளைப் பதிவிடுதல் உள்ளிட்ட சைபர் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, 2020-ம் ஆண்டில்தமிழகத்தில் சைபர் குற்றங்கள்இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. எனவே,சைபர் குற்றங்களைத் தடுக்கவும்,நடந்த குற்றங்களில் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்யவும் காவல் துறையினர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதன் ஒருபகுதியாக, இணைய குற்ற வழக்குகளில் விரைவாக துப்புதுலக்கும் வகையில் தமிழகத்தில் முதல்முறையாக சென்னை வேப்பேரியில் அதிநவீன சைபர் தடய ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. இது விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

அதேபோல, வாட்ஸ்-அப், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களைக் கண்காணிக்க இஸ்ரேல் தொழில்நுட்பம் போலீஸாரின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை காவளதுறக்கு இத்தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

1. Who is the winner of 2022 Pritzker Prize?

A) Diebedo Francis Kere 

B) Anne Lacaton

C) Jean Philippe Vassal

D) Arata Isozaki

  • Hyatt Foundation, which sponsors the Pritzker Prize, announced the winner of the 2022 Prize, to Diébédo Francis Kéré. It is the world’s most important award for architecture. Born in Burkina Faso, Francis Kéré is the first African architect to be awarded a Pritzker Prize.
  • His studio is based in Berlin, Germany. He is known for sustainable architecture including Gando Primary School.

2. What is the rank of India in the World Happiness Report 2022?

A) 123

B) 136 

C) 141

D) 146

  • In the UN World Happiness Report 2022, India is ranked 136th, at tenth place from the bottom of the list. The report has been launched ahead of the UN International Day of Happiness. Finland topped the chart of 146 countries, for the fifth year in a row.

3. What is India’s rank in the global production of wheat?

A) First

B) Second 

C) Third

D) Fourth

  • India is the world’s second biggest producer of Wheat, only after China. India is set to export a record 7 million tonnes of wheat this financial year. The rally in global prices gives an opportunity to gain market share, as per the Ministry of Consumer Affairs, Food and Public Distribution. By the end of February, India had exported 6.6 million tonnes of wheat.

4. ‘Kinzhal’ is the name of the hypersonic ballistic missile of which country?

A) Ukraine

B) Russia 

C) USA

D) North Korea

  • The Defence Ministry of Russia announced that Russia’s military has fired a hypersonic ballistic missile and destroyed a big underground arms depot in western Ukraine. Kinzhal, or Dagger, ballistic missile has been used for the first time in this war by Russia.

5. Which is the first Indian state to introduce carbon–neutral farming methods?

A) Tamil Nadu

B) Kerala 

C) Punjab

D) Rajasthan

  • Kerala is set to become the first State in the country to introduce carbon–neutral farming methods in selected locations. The state government has allocated Rs 6 crore in the 2022–23 Budget for the project. In the first phase, carbon–neutral farming will be implemented in 13 farms.

6. Which is the first State Assembly in the country to implement the National e–Vidhan Application (NeVA)?

A) Tamil Nadu

B) Nagaland 

C) West Bengal

D) Telangana

  • Nagaland is the first State Assembly in the country to implement the National e–Vidhan Application (NeVA) programme. The Assembly Secretariat attached a tablet or e–book on each table in the 60 members’ assembly. NeVa works under the supervision of Union Ministry of Parliamentary Affairs.

7. Zojila Pass, connects which Indian state/UT with the rest of the country?

A) Himachal Pradesh

B) Ladakh 

C) Sikkim

D) Assam

  • Zojila Pass provides link between Kashmir Valley and Ladakh on Srinagar–Kargil–Leh Road, which connects Ladakh to the rest of the country. The strategic pass has been opened by the Border Road Organisation (BRO). It is located at an altitude of 11,650 feet. The pass normally closes by end–November every year and opened around mid–April the following year.

8. What is the main objective of the ‘Sujalam 2.0 Campaign’?

A) Groundwater Conservation

B) Greywater Management 

C) Rainwater Management

D) Flood Management

  • Jal Shakti Minister Gajendra Singh Shekhawat has recently launched the Sujalam 2.0 campaign for Greywater management. Greywater is wastewater from non–toilet plumbing systems. The theme for this year’s campaign is Groundwater: making the invisible visible.
  • Under the Campaign, government will mobilize Communities, Panchayats, Schools to undertake greywater management.

9. Which organisation successfully test fired the surface–to–surface BrahMos supersonic cruise missile?

A) ISRO

B) DRDO 

C) HAL

D) BHEL

  • Defence Research and Development Organisation (DRDO) successfully test fired the surface–to–surface BrahMos supersonic cruise missile in the Andaman and Nicobar Islands. The extended range missile hit its target with pinpoint accuracy.

10. Which country is the host of the ‘BIMSTEC Summit’ in 2022?

A) India

B) Sri Lanka 

C) Pakistan

D) Bangladesh

  • The Bay of Bengal Initiative for Multi–Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC) Summit is hosted by Sri Lanka in 2022. BIMSTEC Charter and BIMSTEC Master plan for Transport Connectivity are proposed to be signed during the Sri Lanka Summit. BIMSTEC was established in 1997, and it comprises seven member states Bangladesh, Bhutan, India, Nepal, Sri Lanka, Myanmar and Thailand.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!