Tnpsc

28th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

28th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 28th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

28th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. DBTமூலம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நிதியுதவி வழங்க உள்ள மத்திய அமைச்சகம் எது?

அ) உள்துறை அமைச்சகம்

ஆ) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

இ) சட்டம் மற்றும் நீதி அமைச்சகம்

ஈ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

  • திருநங்கைகளுக்கு `1,500 நிதியுதவி வழங்க மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. பயனாளிகள், தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனத்தில் பதிவுசெய்தபிறகு, நேரடி பயன் பரிமாற்ற -த்தின்மூலம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

2. எந்தத் திட்டத்தின்கீழ், AIIMS நிறுவனங்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்கின்றது?

அ) பிரதமர் ஜன் ஆரோக்கியா யோஜனா

ஆ) பிரதமர் ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா

இ) பிரதமர் வயா வந்தனா திட்டம்

ஈ) பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா

  • நாட்டில் மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் ஏற்படும் பற்றாக்குறையைத் தீர்க்கவும், மருத்துவக்கல்வியை மேம்படுத்தவும் கடந்த 2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா திட்டத்தை நடுவணரசு அறிவித்தது. இதன்படி இந்தியாவில் புதிதாக 22 AIIMS மருத்துவமனைகளை நிறுவ அனுமதி அளிக்கப்பட்டதோடு, அவற்றில் போபால், புவனேசுவர், ஜோத்பூர், பட்னா, ராய்பூர், ரிஷிகேஷ் ஆகிய ஆறு இடங்களில் மருத்துவமனைகள் முழுவதும் இயங்கத்தொடங்கிவிட்டன.
  • மேலும் ஏழு AIIMS மருத்துவமனைகளில் புற நோயாளிகள் பிரிவும், MBBS வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன. ஐந்து மருத்துவமனைகளில் MBBS வகுப்புகள் மட்டும் நடைபெற்று வருகின்றன.

3. 2021 மே வரை, ‘Open Skies’ ஒப்பந்தத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் எண்ணிக்கை என்ன?

அ) 4

ஆ) 14

இ) 24

ஈ) 34

  • ‘Open Skies’ ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்கீழ், 34 உறுப்புநாடுகள் தரவுகளைச் சேகரிப்பதற்காக, ஒருவருக்கொருவர் தங்களது பிராந்தியங் -களில் நிராயுதபாணியாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட முடியும்.
  • 1992’இல் கையெழுத்திடப்பட்டு 2002’இல் நடைமுறைக்கு வந்த ‘Open Skies’ ஒப்பந்தத்திலிருந்து விலக, ரஷ்யாவின் நாடாளுமன்றம் சமீபத்தில் வாக்களித்தது. கடந்த ஆண்டு, அமெரிக்க முன்னாள் அதிபரான டிரம்பின் நிர்வாகமும் இதிலிருந்து விலகுவதாக அறிவித்தது.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஆம்போடெரிசின் B என்பது எந்த நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்தாகும்?

அ) டெங்கு

ஆ) நிமோனியா

இ) COVID-19

ஈ) கருப்புப்பூஞ்சை

  • ஆம்போடெரிசின் B தயாரிப்பதற்கான ஐந்து மருந்து நிறுவனங்களின் விண்ணப்பத்திற்கு இந்திய தலைமை மருந்துக்கட்டுப்பாட்டாளர் அலுவ -லகம் ஒப்புதல் அளித்துள்ளது. பூஞ்சை எதிர்ப்பு மருந்தான இது, கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சையளிக்கப்பயன்படுகிறது. தொற்றுநோய்கள் சட்டத்தின் விதிகளின்கீழ், மத்திய அரசு கருப்புப் பூஞ்சையை ஓர் அறிவி -க்கத்தக்க நோயாக அறிவித்துள்ளது. பல்வேறு மாநிலங்களைச் சார்ந்தோர் கருப்புப்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5. இந்திய துணைக்கண்டத்தின் ஜூன்-செப்டம்பர் வரையிலான முதன்மை மழைக்காலமானது, எந்தப்பருவகாலமாக குறிப்பிடப்படுகி -றது?

அ) தென்மேற்கு பருவமழை

ஆ) வடகிழக்கு பருவமழை

இ) மழைக்காலம்

ஈ) இலையுதிர் காலம்

  • இந்திய துணைக்கண்டத்தின் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான முதன்மை மழைக்காலம், ‘தென்மேற்கு பருவமழை’க்காலம் என்று குறிப்பிடப்படுகிறது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் வழியாக தென்மேற்கு பருவமழை வந்துவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அது வெகுவிரைவில் இந்திய நிலப்பரப்பை எட்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

6. இந்திய அளவில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு உற்பத்தியில் முதல் இடம் வகிக்கிற மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) ஆந்திர பிரதேசம்

இ) ஒடிஸா

ஈ) கர்நாடகா

  • இந்திய அளவில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு உற்பத்தியில் ஒடிஸா மாநிலம் முதலிடம் வகிக்கிறது. அண்மையில், செப்டம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் அறுவடை செய்யப்படும் குளிர்கால பயிரான ஊதா சர்க்கரை வள்ளிக்கிழங்கை விவசாய குழுவொன்று கோடைகாலத்தில் வெற்றிகரமாக பயிரிட்டுள்ளது.
  • மத்திய கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, ஊதா சர்க்கரை வள்ளிக்கிழங்கில், 100 கிராமுக்கு 90 மில்லிகிராம் அளவுக்கும் அதிகமாக அந்தோசயினின் உள்ளது.

7. பிறபொருளெதிரி கண்டறிதல் அடிப்படையிலான ‘DIPCOVAN’ என்னும் கருவியை உருவாக்கியுள்ள அமைப்பு எது?

அ) ISRO

ஆ) DRDO

இ) HAL

ஈ) BHEL

  • DRDO என்று அழைக்கப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆய்வகமான உடலியல் மற்றும் சார்பு அறிவியலுக்கான பாதுகாப்பு நிறுவனம், DIPCOVAN என்ற பிறபொருளெதிரி கண்டறி கருவியை உருவாக்கியுள்ளது. SARS-CoV-2 வைரஸின் எதிர்ப்புப் பொருட்கள் மற்றும் புரதங்களை 97 சதவீத அதிக நுண்ணறிவுடனும், 99 சதவீதம் துல்லியத்துடனும் DIPCOVANஆல் கண்டறிய முடியும்.
  • ‘DIPAS-VDx COVID 19 IgG Antibody Microwell ELISA’ என்பதன் சுருக்கமே DIPCOVAN.

8. நடப்பாண்டில் (2021) வரும் உலக தேனீ நாளுக்கான கருப் பொருள் என்ன?

அ) Bee hives Matter

ஆ) Bees and Nature

இ) Conserve the Bee Habitat

ஈ) Bee engaged – Build Back Better for Bees

  • ஆண்டுதோறும் மே.20 அன்று ஐநா அவையால் உலக தேனீ நாள் உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், மகரந்தச் சேர்க்கை வகிக்கும் பங்குகுறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. “Bee engaged – Build Back Better for Bees” என்பது நடப்பாண்டில் (2021) வரும் உலக தேனீ நாளுக்கான கருப்பொருளாகும்.

9. நடப்பாண்டின் (2021) G7 சுகாதார அமைச்சர்கள் கூட்டமானது எங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது?

அ) IIT மெட்ராஸ்

ஆ) MIT

இ) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

ஈ) அண்ணா பல்கலைக்கழகம்

  • நடப்பாண்டுக்கான (2021) G7 சுகாதார அமைச்சர்கள் கூட்டமானது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஜூன்.3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது உலகத்தலைவர்களை ஒரு பொது மேடையில் கொண்டுவருவதை நோக்கமாகக்கொண்டுள்ளது.
  • உலகளாவிய நலவாழ்வுப் பாதுகாப்பு, தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனைகள் போன்ற பிரச்சனைகள் இதன்சமயம் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் மெய்நிகராக பங்கேற்க, இந்தியா அழைக்கப்பட்டுள்ளது.

10. இந்தியாவில் கண்டறியப்பட்ட, நோயெதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பதால் ஏற்படுவதும், கருப்பு பூஞ்சையைவிட ஆபத்தானதுமான புதிய தொற்று எது?

அ) அடர் பூஞ்சை

ஆ) சாம்பல் பூஞ்சை

இ) சிவப்பு பூஞ்சை

ஈ) வெள்ளை பூஞ்சை

  • நோயெதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பதால் ஏற்படுவதும், கருப்பு பூஞ்சையைவிட ஆபத்தானதுமான வெள்ளை பூஞ்சை தொற்றேற்பட்டதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு COVID எதிர்மறை கண்டறியப்படுகிறது; ஆனால், CT ஸ்கேன்மூலம் மட்டுமே இப்பூஞ்சை தொற்றை கண்டறிய முடியும். நுரையீரல், நகங்கள், தோல், வயிறு, சிறுநீரகம் போன்றவற்றை இப்பூஞ்சை பாதிக்கிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பொறியியல் படிப்புகளை இனி தமிழ் உள்ளிட்ட எட்டு மொழிகளில் படிக்கலாம்: AICTE தகவல்

பொறியியல் படிப்புகளை தமிழ் உள்பட எட்டு மொழிகளில் படிக்க அகில இந்திய தொழில்நுட்பக்கல்விக்கவுன்சில் (AICTE) ஒப்புதல் வழங்கியுள்ளது.

2. கரோனா 2ஆவது தாக்கத்தால் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலை: ரிசர்வ் வங்கி அறிக்கை

இந்திய பொருளாதாரத்தில், கரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட அளவுக்கு தற்போது பாதிப்பு ஏற்படவில்லை; இருப்பினும் நிச்சயமற்ற நிலை நிலவுகிறது என்று ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2020-21ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவல், இந்திய பொருளாதாரத்தில் மாறாத வடுவை ஏற்படுத்திவிட்டது. 2021-21-ஆம் நிதியாண்டின் தொடக்கத்திலேயே கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவத் தொடங்கிவிட்டது. இது, நிகழ் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10.5 சதவீதமாக அதிகரிக்கும் என்ற ரிசர்வ் வங்கியின் கணிப்பில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவத் தொடங்கியதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு தொடங்கியது பரவலைக் கட்டுப்படுத்த உதவியது. கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக நாடுகள் தனித்தனியாக போராடுவதைக் காட்டிலும், சர்வதேச அளவில் கூட்டாக முயற்சி செய்தால் மட்டுமே பலன்கள் கூடுதலாகக் கிடைக்கும்.

இந்திய பொருளாதாரத்தில் கரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட அளவுக்கு இரண்டாவது அலையின்போது பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது. மேலும், இரண்டாவது அலையை முடிவுக்கு கொண்டு வருவதைப் பொருத்தே நாட்டின் பொருளாதார வளா்ச்சியை தீா்மானிக்க முடியும். நாட்டின் பொருளாதாரம் மெல்ல வளா்ச்சிப் பாதையை நோக்கி செல்கிறது. இந்த நேரத்தில், எதிா்கால திடீா் செலவுகளை சமாளிக்கும் வகையில் வருவாயை சேமிக்க வேண்டும்.

சரக்கு-சேவை வரி தொடா்ந்து 7-ஆவது முறையாக ஏப்ரல் மாதத்தில் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இது, உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் நல்ல நிலையில் செயல்படுவதைக் காட்டுகிறது. பணப்புழக்கம் அதிகரிப்பு: கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவலால், மக்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை முன்னெச்சரிக்கையாக பாதுகாத்து வைத்தனா். இதனால், சராசரியைக் காட்டிலும் கடந்த ஆண்டு (2020-21) பணப்புழக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக, 2020 மாா்ச் 31 நிலவரப்படி, ரூ.500, ரூ.2,000 நோட்டுகளில் 83.4 சதவீதம் புழக்கத்தில் இருந்தது. இது, 2021 மாா்ச்சில் 85.7 சதவீதமாக அதிகரித்தது.

ஆகவே, அரசின் கருவூலத்தில் போதிய அளவில் ரூபாய் நோட்டுகள் இருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நடப்பு நிதியாண்டில் பணப்புழக்கம் சீரான அளவில் இருக்கவும் ரிசா்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும். வங்கிகளுக்கு அறிவுறுத்தல்: வங்கிகள் தங்களது வாராக் கடன் விவரங்களைக் கண்காணிக்க வேண்டும். கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவல் காரணமாக ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்வதற்கு வங்கிகள் தங்கள் மூலதனத்தின் ஒரு பகுதியை கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு வங்கிக் கடன் தவணைக்கான வட்டியை ரத்து செய்ததால், வங்கிகளுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும் அதற்கு முன்பாகவே வங்கிகளின் நிலைமை நல்ல நிலையில் இருந்தது.

உணவுப் பொருள் விநியோகம்: கடந்த ஆண்டு தேசிய அளவிலான பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு உணவுப் பொருள்கள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, அவற்றின் விலையும் உயா்ந்தது. பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற உணவுப் பொருள்கள் விற்பனையில் விநியோகத்துக்கும் தேவைக்கும் இடையேயான சீரற்ற நிலை தொடா்ந்து நீடிக்க வாய்ப்புள்ளது. நிகழாண்டில் உணவு தானியங்களின் உற்பத்தி அதிகரித்தால், அவற்றின் விலை சற்று குறைய வாயப்புள்ளது.

கச்சா எண்ணெய் விலை: கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் நாடுகள் அதன் உற்பத்தியைக் குறைத்துள்ளன. எரிபொருள்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. இதனால், அதன் விலை அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. அமெரிக்காவின் வெளிநாட்டு வர்த்தக பிரிவு இயக்குநராக இந்திய அமெரிக்கர் நியமனம்

அமெரிக்காவின் வெளிநாட்டு வர்த்தக சேவைகள் பிரிவின் இயக்குநராக இந்திய-அமெரிக்கரான அருண் வெங்கட்ராமனை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் நியமித்துள்ளார். அமெரிக்க வர்த்தக அமைச்சகத்தின் சர்வதேச சந்தைகள் துறைகளுக்கான இணை அமைச்சராகவும் அவரை அதிபர் பைடன் நியமித்துள்ளார்.

1. Which Union Ministry is set to give a financial assistance to transgender persons through DBT?

A) Ministry of Home Affairs

B) Ministry of Social Justice and Empowerment

C) Ministry of Law and Justice

D) Ministry of Rural Development

  • The Social Justice and Empowerment Ministry is set to provide a one–time financial assistance of Rs 1,500 to transgender persons. After the beneficiaries register with the National Institute of Social Defence, the immediate assistance would be given to the Trans gender persons through direct benefit transfer.

2. Under which scheme, the Central government approves to set up AIIMS institutes?

A) PM Jan Arogya Yojana

B) PM Swasthya Suraksha Yojana

C) PM Vaya Vandana Yojana

D) PM Matru Vandana Yojana

  • The Central government has approved setting up 22 new All India Institute of Medical Sciences (AIIMS) so far under Pradhan Mantri Swasthya Suraksha Yojana (PMSSY).
  • The Union Health Ministry announced that under the 22 institutes so far, six AIIMS at Bhopal, Bhubaneswar, Jodhpur, Patna, Raipur and Rishikesh are already fully functional and in another seven AIIMS, OPD facility and MBBS classes have started.

3. As of May 2021, how many countries are members of the Open Skies Treaty?

A) 4

B) 14

C) 24

D) 34

  • Under the terms of the Open Skies Treaty, 34 members can conduct unarmed observation flights over each other’s territories to collect data. Russia’s parliament has recently voted to withdraw from the Open Skies Treaty, which was signed in 1992 and came into force in 2002. Last year, US former President Trump administration said the U.S. would leave the accord.

4. Amphotericin B, which was making news recently, is a drug used to treat which disease?

A) Dengue

B) Pneumonia

C) COVID–19

D) Mucormycosis

  • The Drugs Controller General of India (DCGI) has cleared applications from five pharmaceutical companies to manufacture Amphotericin B. It is an anti–fungal drug, used to treat Mucormycosis or black fungus. The central government has declared mucormycosis as a notifiable disease under the provisions of the Epidemic Diseases Act. Several states are also witnessing increasing cases affected by Black fungus.

5. The principal rainy season for the Indian subcontinent, June to September, is referred to as which season?

A) South–west Monsoon

B) North–east Monsoon

C) Rainy Season

D) Autumn Season

  • The principal rainy season for the Indian subcontinent, June to September, is referred to as the ‘Southwest Monsoon’ period. The India Meteorological Department announced that the Southwest Monsoon has arrived over the Andaman and Nicobar Islands, which is an indication that it will reach the mainland soon.

6. Which state leads in sweet potato production across India?

A) Tamil Nadu

B) Andhra Pradesh

C) Odisha

D) Karnataka

  • Odisha state leads in production of sweet potatoes across the country. Recently a group of farmers has successfully grown purple sweet potatoes in summer, which is a winter crop harvested in September and March. According to the Central Tuber Crops Research Institute (CTCRI), purple sweet potatoes have a high anthocyanin content of 90 milligrams per hundred grams.

7. DIPCOVAN, is an antibody detection–based kit developed by which organisation?

A) ISRO

B) DRDO

C) HAL

D) BHEL

  • The Defence Research and Development Organisation (DRDO) has developed an antibody detection–based kit, named the DIPCOVAN. It stands for ‘DIPAS–VDx COVID 19 IgG Antibody Microwell ELISA’. The kit can be used for sero–surveillance for detecting the presence of Covid antibodies amongst the people. The kit can detect spike as well as nucleocapsid (S&N) proteins of the SARS–CoV–2 virus.

8. What is the theme for World Bee Day 2021?

A) Bee hives Matter

B) Bees and Nature

C) Conserve the Bee Habitat

D) Bee engaged – Build Back Better for Bees

  • Every year, the World Bee Day is celebrated across the world on 20th May, by the United Nations. This day aims to raise awareness among the people on the role played by the pollinator. This year’s theme for the World Bee Day is “Bee engaged – Build Back Better for Bees”.

9. Where is the 2021 G7 Health Ministers’ Meeting scheduled to be held?

A) IIT Madras

B) MIT

C) Oxford University

D) Anna University

  • The 2021 G7 Health Ministers’ Meeting scheduled to be held at Oxford University on June 3 and 4. It aims to bring the world leaders on a common platform to agree on life–saving actions. Issues like global health security, clinical trials of vaccines etc are expected to be discussed in this forum. India has been invited as a guest, to join virtually in the event.

10. What is the new infection diagnosed in India, which is caused due to low immunity and is more adverse than black fungus?

A) Dark Fungus

B) Grey Fungus

C) Red Fungus

D) White Fungus

  • India has reported cases of White Fungus infections, which is caused due to low immunity or if people come in contact with bodies containing these fungi. Affected patients are diagnosed Covid negative, but the fungal infection can be detected only by a CT scan. The fungus affects lungs, nails, skin, stomach, kidney etc.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!