TnpscTnpsc Current Affairs

28th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

28th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 28th October 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

28th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. ‘முன்னுரிமைகொண்ட பூஞ்சை நோய்க்கிருமிகளின் பட்டியலை’ வெளியிட்ட நிறுவனம் எது?

அ. UNEP

ஆ. WHO

இ. UNFCCC

ஈ. NASA

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. WHO

  • ஊடுருவல் பூஞ்சை நோயின் அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக, உலக நலவாழ்வு அமைப்பு (WHO) அண்மையில் முன்னுரிமைகொண்ட பூஞ்சை நோய்க்கிருமிகளின் பட்டியலை வெளியிட்டது. முன்னுரிமை கொண்ட பூஞ்சை நோய்க்கிருமிகளின் பட்டியல் 19 பொதுவான பூஞ்சை நோய்க்கிருமிகளை மூன்று முன்னுரிமை கொண்ட அடுக்குகளாக வகைப்படுத்துகிறது. கிரிப்டோகாக்கஸ் நியோஃபார்மன்ஸ், அஸ்பெர்கிலஸ் ஃபுமிகேடஸ், கேண்டிடா அல்பிகான்ஸ் மற்றும் கேண்டிடா ஆரிஸ் முதலான நான்கு பூஞ்சை நோய்க்கிருமிகளைக் கொண்ட ‘முதன்மை குழு’ மிகவும் ஆபத்துடையதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

2. COVID தொற்றுக்கு எதிராக முதல் ‘உள்ளிழுக்கக்கூடிய தடுப்பூசி’யை அறிமுகப்படுத்திய நாடு எது?

அ. இந்தியா

ஆ. சீனா

இ. ஜப்பான்

ஈ. அமெரிக்கா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சீனா

  • உள்ளிழுக்கக்கூடிய COVID–19 தடுப்பூசியை சீனா தனது மக்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளது. ஷாங்காய் நகர நிர்வாகத்தின் கூற்றுப்படி, ஏற்கெனவே தடுப்பூசி போட்டவர்களுக்கு இத்தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் இலவசமாக வழங்கப்படும். இது இதழ்கள் வழியாக சுவாசிக்கப்படும் வகையிலான அமைப்பைக் கொண்டுள்ளது. ‘ஊசியிலா’ தடுப்பூசிகள் நலிவடைந்த சுகாதார அமைப்புகளைக்கொண்ட நாடுகளில் தடுப்பூசி விகிதங்களை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3. இந்தியா, சமீபத்தில், எப்பிராந்திய கூட்டமைப்புடனான உறவின் 30ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது?

அ. SAARC

ஆ. ASEAN

இ. G20

ஈ. G8

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ASEAN

  • வேளாண்மை மற்றும் வனத்துறை தொடர்பான ஏழாவது ஆசியான்–இந்தியா அமைச்சர்கள் கூட்டமானது நடுவண் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் நடைபெற்றது. ஆசியான்–இந்தியா உறவுகளின் 30ஆம் ஆண்டு விழாவும் அந்தக் கூட்டத்தில் கொண்டாடப்பட்டது. ஆசியான்–இந்தியா கூட்டுறவின் (ஆண்டு 2021–2025) நடுத்தர கால செயல்திட்டத்தின்கீழ் செயல்பாடுகளின் முன்னேற்றம் மதிப்பாய்வு செய்யப்பட்டது. புருனே தாருஸ்ஸலாம், கம்போடியா, இந்தோனேசியா, லாவோ பிடிஆர், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் வேளாண் அமைச்சர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

4. பன்னாட்டு உள்நாட்டு வான்போக்குவரத்து அமைப்பின் விமானப் போக்குவரத்துக் குழுவின் (ATC) தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. Dr ஷெபாலி ஜுனேஜா

ஆ. விவேக் ஜோஹ்ரி

இ. சுபைர் ரியாஸ் கமிலி

ஈ. அர்ச்சனா பாண்டே திவாரி

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. Dr ஷெபாலி ஜுனேஜா

  • பன்னாட்டு உள்நாட்டு வான்போக்குவரத்து அமைப்பின் விமானப் போக்குவரத்துக் குழுவின் (ATC) தலைவராக Dr ஷெஃபாலி ஜுனேஜா நியமிக்கப்பட்டார். 28 ஆண்டுகளுக்குப்பின், இந்தியா, குழுவின் தலைவராக உள்ளது. மேலும் இந்தியா இதுவரை இரண்டு முறை மட்டுமே ATC–க்கு தலைமை தாங்கியுள்ளது. ATC என்பது ஐநா சபையின் ஒரு சிறப்பு நிறுவனமாகும். இது வான்போக்குவரத்து விஷயங்களில் கவுன்சிலின் ஆலோசனை அமைப்பாக உள்ளது.

5. கீழ்க்காணும் எந்த நாட்டின் அறிவியலாளர், பன்னாட்டு விண்வெளி கூட்டமைப்பின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளர்?

அ. சீனா

ஆ. இந்தியா

இ. உக்ரைன்

ஈ. வங்காளதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இந்தியா

  • ISROஇன் மூத்த அறிவியலாளர் Dr AK அனில் குமார், பாரிஸில் நடைபெற்ற சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின் (IAF) வருடாந்திர மாநாட்டின் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச விண்வெளி கூட்டமைப்பு 72 நாடுகளில் 433 உறுப்பினர்களைக்கொண்ட உலகின் முன்னணி விண்வெளி ஆலோசனை அமைப்பாகும். IAF அமைதியான நோக்கங்களுக்காக விண்வெளி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் அறிவியல் தகவல்களை பரப்புவதை அது ஆதரிக்கிறது.

6. மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் MyGovஇன் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. இறையன்பு, இஆப

ஆ. ஆகாஷ் திரிபாதி, இஆப

இ. உதய சந்திரன், இஆப

ஈ. அமீர் சுபானி, இஆப

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஆகாஷ் திரிபாதி, இஆப

  • மத்திய பிரதேச கேடரின் 1998ஆம் ஆண்டுத் தொகுதி இஆப அதிகாரியான ஆகாஷ் திரிபாதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் MyGovஇன் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ளார். துணை தேர்தல் ஆணையராக மூத்த அதிகாரி அஜை பாது நியமிக்கப்பட்டுள்ளார். பல்வேறு சேவைகளை சேர்ந்த 35 அரசு ஊழியர்கள் நடுவணரசின் பல்வேறு துறைகளில் இணைச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

7. “Mind the Gap. Leave No One and No Place Behind” என்பது அக்டோபரில் கொண்டாடப்படும் எந்தச் சிறப்பு நாளின் கருப்பொருளாகும்?

அ. உலக வாழ்விட நாள்

ஆ. உலக சகோதரத்துவ நாள்

இ. உலக புலம்பெயர்ந்தோர் நாள்

ஈ. உலக குழந்தைகள் நாள்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. உலக வாழ்விட நாள்

  • உலக வாழ்விட நாளானது அக்டோபர் மாதத்தின் முதல் திங்களன்று அனுசரிக்கப்படுகிறது; இது நகர்ப்புற அக்டோபர் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்த ஆண்டு இது அக்.3 அன்று வந்தது. “Mind the Gap. Leave No One and No Place Behind” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில் வந்த உலக வாழ்விட நாளுக்கானக் கருப்பொருளாகும். உலக வாழ்விட நாளானது முதன்முதலில் கடந்த 1986ஆம் ஆண்டின்போது கென்யாவின் நைரோபியில், “Shelter is my right” என்ற கருப்பொருளின்கீழ் கொண்டாடப்பட்டது.

8. ஆண்டுதோறும், ‘சர்வதேச அகிம்சை நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. அக்டோபர்.01

ஆ. அக்டோபர்.02

இ. அக்டோபர்.03

ஈ. அக்டோபர்.04

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. அக்டோபர்.02

  • ஒவ்வோர் ஆண்டும் அக்.2ஆம் தேதி சர்வதேச அகிம்சை நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்தச்சிறப்பு நாள் ‘மகாத்மா’ காந்தியடிகளின் பிறந்தநாளைக் குறிக்கிறது. இந்த நாளின் முக்கிய நோக்கம் அகிம்சை பற்றிய விழிப்புணர்வை பரப்புவதாகும். 2007ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை (UNGA) சர்வதேச அகிம்சை நாளை நினைவுகூரும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த ஆண்டு, “Say No to Violence” என்ற முழக்கத்தை ஐநா தெரிந்தெடுத்துள்ளது.

9. ‘ஆப்டிமஸ்’ என்பது எந்த நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட முன்மாதிரி எந்திர மனிதனாகும்?

அ. கூகிள்

ஆ. ஆப்பிள்

இ. டெஸ்லா

ஈ. மெட்டா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. டெஸ்லா

  • டெஸ்லா தலைமைச் செயலதிகாரி எலான் மஸ்க், செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மற்றும் உணரிகளை அதன் மகிழுந்துகளின் தன்னியக்க இயக்கி உதவி அம்சங்களுடன் பகிர்ந்துகொள்ளும், ‘ஆப்டிமஸ்’ என்ற முன் மாதிரி ரோபோவை அறிமுகப்படுத்தினார். ‘ஆப்டிமஸ்’ ஆனது மில்லியன் கணக்கில் உற்பத்திசெய்யும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 2.3kWh மின்கலத்தைக் கொண்டுள்ளது. டெஸ்லா SoCஇல் இயங்கும் இது Wi–Fi மற்றும் LTE இணைப்பைக் கொண்டுள்ளது.

10. பாரத்ஸ்கில்ஸ் கருத்துக்களமானது கீழ்க்காணும் எந்த நடுவண் அமைச்சகத்தின்கீழ் தொடங்கப்பட்டது?

அ. கல்வி அமைச்சகம்

ஆ. திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம்

இ. MSME அமைச்சகம்

ஈ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம்

  • தலைமைப் பயிற்சி இயக்குநரகமானது ‘பாரத்ஸ்கில்ஸ் கருத்துக்களத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய அம்சம் திறன் கற்றோர்க்கான நூல்கள், குறிப்புகள், காணொளிகள், வினா வங்கி ஆகியவற்றைப் பகிர அனுமதிக்கிறது. இது தலைமைப் பயிற்சி இயக்குநரகத்தால் உருவாக்கப்பட்ட ‘பாரத்ஸ்கில்ஸ்’ கற்றல் தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இது திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின்கீழ் உள்ள ஒரு தலைமை அமைப்பாகும். இது தேசிய அளவில் உள்ள தொழிற்பயிற்சித் திட்டங்களை ஒருங்கிணைப்பதற்காக உள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள் 

1. சிங்கப்பூர்-இந்திய கடல்சார் இருநாட்டு கூட்டு நடவடிக்கை ‘சிம்பெக்ஸ்-2022’

இந்திய கடற்படை 29ஆவது சிங்கப்பூர்-இந்திய கடல்சார் இருநாட்டு கூட்டு நடவடிக்கை ‘சிம்பெக்ஸ்-2022’ஐ விசாகப்பட்டினத்தில் அக்.26-30 வரை நடத்துகிறது. ‘சிம்பெக்ஸ்-2022’ 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூர் குடியரசின் கடற்படையைச் சேர்ந்த RSS ஸ்டால்வார்ட் என்ற போர்க்கப்பலும், RSS விஜிலென்ஸ் என்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான கப்பலும் இந்த கூட்டு நடவடிக்கையில் கலந்து கொள்வதற்காக கடந்த 2022 அக்.25 அன்று விசாகப்பட்டினத்திற்கு வந்தடைந்தது. இந்த கூட்டு நடவடிக்கையில் திறன்மிக்க நிபுணர்கள் குழு இருநாட்டு கடற்படை சார்ந்த முக்கிய முடிவுகள் தொடர்பான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. கடந்த 1994 ஆம் ஆண்டு, ‘சிம்பெக்ஸ்’ கூட்டு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அப்போது சிங்க ராஜா கூட்டு நடவடிக்கை என்று அழைக்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தக் கூட்டு நடவடிக்கையில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இதன் நோக்கமானது இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆகும்.

2. 2-ஆவது நாடு

சர்வதேச கிரிக்கெட்டில் இருபால் கிரிக்கெட்டர்களுக்கும் சம ஊதியம் வழங்கும் நாடுகளின் வரிசையில் 2ஆவதாக இணைகிறது இந்தியா. அத்தகைய முதல் நாடாக நியூஸிலாந்து இந்த ஆண்டில் ஏற்கெனவே முந்திக்கொண்டது. ஆஸ்திரேலியாவும் சம ஊதிய முறையை அமல்படுத்த பரிசீலித்து வருகிறது.

28th October 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which institution released a ‘List of Priority fungal pathogens’?

A. UNEP

B. WHO

C. UNFCCC

D. NASA

Answer & Explanation

Answer: B. WHO

  • The World Health Organization (WHO) recently released a list of priority fungal pathogens, in response to the rising threat of invasive fungal disease. The priority list classifies 19 of the most common fungal pathogens into three priority tiers. The most dangerous is the ‘critical group’, which contains just four fungal pathogens: Cryptococcus neoformans, Aspergillus fumigatus, Candida albicans and Candida auris.

2. Which country has launched the first ‘Inhalable Vaccine’ against COVID?

A. India

B. China

C. Japan

D. USA

Answer & Explanation

Answer: B. China

  • China has started dispensing an inhalable COVID–19 vaccine to its people. According to the Shanghai city administration, the free booster dose of the vaccine is being made available to those who have already had vaccinations. It comprises of a mist that is breathed in via the lips. The ‘needle–free’ vaccines are expected to increase vaccination rates in countries with weak health systems.

3. India recently marked 30th anniversary of relations with which regional bloc?

A. SAARC

B. ASEAN

C. G20

D. G8

Answer & Explanation

Answer: B. ASEAN

  • The 7th ASEAN–India Ministerial Meeting on Agriculture and Forestry was held under the co–chairmanship of Union Agriculture Minister Narendra Singh Tomar. The meeting also welcomed the 30th anniversary of ASEAN–India relations. The progress in activities under the Medium–Term Action Plan of ASEAN–India Cooperation (Year 2021–2025) was reviewed. Agriculture Ministers of Brunei Darussalam, Cambodia, Indonesia, Lao PDR, Malaysia, Myanmar, Philippines, Singapore, Thailand, and Vietnam also participated in the meeting.

4. Who has been appointed as the chairperson of the Air Transport Committee (ATC) of the International Civil Aviation Organization (ICAO)?

A. Dr Shefali Juneja

B. Vivek Johri

C. Zubair Riaz Kamili

D. Archana Pandey Tiwari

Answer & Explanation

Answer: A. Dr Shefali Juneja

  • Dr Shefali Juneja was named the chairperson of the Air Transport Committee (ATC) of the International Civil Aviation Organization (ICAO). India will chair the committee after 28 years and India has chaired the ATC only twice so far. The ATC is a specialized agency of the United Nations and an advisory body of the Council on air transport matters.

5. Which country’s scientist has been elected as the Vice President of the International Astronautical Federation (IAF)?

A. China

B. India

C. Ukraine

D. Bangladesh

Answer & Explanation

Answer: B. India

  • Dr. A K Anil Kumar, Senior Scientist in ISRO is elected as the Vice President of the International Astronautical Federation (IAF), during its Annual Conference held in Paris. International Astronautical Federation (IAF) is the world’s leading space advocacy body with 433 members in 72 countries. IAF encourages development of astronautics for peaceful purposes and supports dissemination of scientific information.

6. Who has been appointed as the CEO of MyGov, Ministry of Electronics and IT?

A. Irai Anbu, IAS

B. Akash Tripathi, IAS

C. Udhaya Chandran, IAS

D. Amir Subhani, IAS

Answer & Explanation

Answer: B. Akash Tripathi, IAS

  • Akash Tripathi, a 1998 batch IAS officer of Madhya Pradesh cadre, has been appointed as the Chief Executive Officer (CEO), MyGov, Ministry of Electronics & Information Technology. Senior bureaucrat Ajay Bhadoo has been appointed as the Deputy Election Commissioner. As many as 35 civil servants from different services have been appointed as joint secretaries in various union government departments.

7. ‘Mind the Gap. Leave No One and No Place Behind’ is the theme of which special day celebrated in October?

A. World Habitat Day

B. World Brotherhood Day

C. World Migrants Day

D. World Children Day

Answer & Explanation

Answer: A. World Habitat Day

  • World Habitat Day is observed on the first Monday of October, which marks the beginning of Urban October. This year it falls on October 3 and World Habitat Day 2022 is observed under the theme ‘Mind the Gap. Leave No One and No Place Behind’. World Habitat Day was first celebrated in 1986 in Nairobi, Kenya, with the theme ‘Shelter is my right’.

8. When is the ‘International Day of Non–Violence’ observed across the world?

A. October.01

B. October.02

C. October.03

D. October.04

Answer & Explanation

Answer: B. October.02

  • Every year, on 2 October, the International Day of Non–Violence is observed across the world. This special day marks the birth anniversary of Mahatma Gandhi. The main objective of this day is to spread awareness about the idea of non–violence. In 2007, the United Nations General Assembly (UNGA) passed the resolution to commemorate the International Day of Non–Violence. This year, the UN has selected the slogan of ‘Say No to Violence’.

9. ‘Optimus’ is the prototype humanoid robot, launched by which company?

A. Google

B. Apple

C. Tesla

D. Meta

Answer & Explanation

Answer: C. Tesla

  • Tesla CEO Elon Musk presented a prototype humanoid robot named ‘Optimus’ that shares artificial intelligence software and sensors with its cars’ Autopilot driver assistance features. The Optimus robot is designed for mass production in millions of units. It carries a 2.3kWh battery pack, runs on a Tesla SoC, and contains Wi–Fi and LTE connectivity.

10. Bharatskills Forum was launched under which Union Ministry?

A. Ministry of Education

B. Ministry of Skill Development and Entrepreneurship

C. Ministry of MSME

D. Ministry of Commerce and Industry

Answer & Explanation

Answer: B. Ministry of Skill Development and Entrepreneurship

  • The Directorate General of Training (DGT) has launched Bharatskills Forum, a new feature allows sharing of books, notes, videos, question bank for skill learners. It has been added to the Bharatskills learning platform developed by DGT. It is the apex organisation under the Ministry of Skill Development and Entrepreneurship (MSDE) for coordination at national level for vocational training programmes.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!