TnpscTnpsc Current Affairs

29th & 30th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

29th & 30th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 29th & 30th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

January Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. பொது பார்மோசா USD பத்திரங்களை வெளியிடும் முதல் இந்திய அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கி எது?

அ) பஞ்சாப் நேஷனல் வங்கி

ஆ) பாரத ஸ்டேட் வங்கி 

இ) கனரா வங்கி

ஈ) HDFC வங்கி

  • பாரத ஸ்டேட் வங்கி ஐந்து ஆண்டுகளுக்கு “Regulation S” பார்மோசா பத்திரங்கள்மூலம் $300 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. பொது பார்மோசா பத்திரங்களை வெளியிடும் முதல் இந்திய அட்டவணைப்படுத்தப்பட்ட வணிகவங்கி இதுவாகும்.
  • இந்தப் பத்திரங்கள் ஐந்தாண்டுகால அமெரிக்க கருவூல குறிப்புகளுக்கு எதிராக தரப்படுத்தப்பட்டுள்ளன.

2. அந்நிய செலாவணி நெருக்கடியைக் சமாளிப்பதற்காக, இந்தியா, அண்மையில் எந்த நாட்டிற்கு $900 மில்லியன் மதிப்பிலான கடனை வழங்கியது?

அ) நேபாளம்

ஆ) இலங்கை 

இ) ஆப்கானிஸ்தான்

ஈ) வெனிசுலா

  • இந்தியா இலங்கைக்கு அதன் குறைந்துவிட்ட அந்நிய செலவாணிகளை கட்டியெழுப்புவதற்கும் உணவு இறக்கு -மதிக்குமாக $900 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனை அறிவித்துள்ளது.
  • சரக்குகளை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து $1 பில்லியன் டாலர்கள் கடனைப்பெற இலங்கை பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இறக்குமதிக்காக செலுத்தவேண்டிய டாலர்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் கிட்டத்தட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

3. 2022 ஜனவரி நிலவரப்படி, எட்டுப்பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் குறைந்தபட்சம் எத்தனை வளிப் பைகளைக் (airbag) கொண்டிருக்க வேண்டும்?

அ) ஒன்று

ஆ) இரண்டு 

இ) நான்கு

ஈ) ஆறு

  • 2019 ஜூலை.1ஆம் தேதி முதல் அனைத்து பயணிகள் வாகனங்களுக்கும் ஓட்டுநருக்கான வளிப்பை (driver air bag) கட்டாயமாக்கப்பட்டது. 2022 ஜனவரி மாதம் முதல் அனைத்து வாகனங்களிலும் இரண்டு வளிப்பைகள் (ஓட்டுநர் மற்றும் முன்வரிசையில் பயணிப்போர்) கட்டாய -மாக்கப்பட்டுள்ளது. சாலைப் போக்குவரத்து அமைச்சகம் சமீபத்தில் குறைந்தபட்சம் 6 வளிப்பைகளை கொண்டிருப் -பதற்கான வரைவு அறிவிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • எட்டுப் பயணிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு இது கட்டாயம். ‘முன் மற்றும் பக்கவாட்டு விபத்துகளின்’ தாக்கத்தைக் குறைப்பதே இதன் நோக்கம்.

4. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ‘இராணுவ நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) ஜனவரி 15 

ஆ) ஜனவரி 20

இ) ஜனவரி 25

ஈ) ஜனவரி 30

  • ஜெனரல் FR ராய் புச்சரைத் தொடர்ந்து இந்திய இராணுவத்தின் முதல் இந்தியத் தலைமைத் தளபதியாக ஜெனரல் KM கரியப்பா (பின்னர் பீல்ட் மார்ஷல் ஆனார்) பதவியேற்ற நாளைக் குறிக்கும் வகையில், ஜன.15ஆம் தேதி ஆண்டுதோறும் இராணுவ நாளாகக் கொண்டாடப்படுகிறது.

5. ‘புலிகள் பாதுகாப்பு தொடர்பான ஆசிய அமைச்சர்கள் மாநாட்டை’ ஏற்பாடு செய்துள்ள நாடு எது?

அ) இந்தியா

ஆ) மலேசியா 

இ) UK

ஈ) இலங்கை

  • மலேசிய அரசாங்கமும் குளோபல் டைகர் போரமும் (GTF) இணைந்து புலிகள் பாதுகாப்பு தொடர்பான 4ஆவது ஆசிய அமைச்சர்கள் மாநாட்டை ஏற்பாடு செய்தன. புலிகள் பாதுகாப்பு மாநாட்டில் இந்தியாவின் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பூபேந்தர் யாதவ் இந்தியாவின் அறிக்கையை வழங்கினார்.
  • இரஷ்யாவில் நடைபெறும் உலகளாவிய புலிகள் உச்சி மாநாட்டிற்கான புது தில்லி பிரகடனத்தை இறுதி செய்ய புலிகள் உள்ள நாடுகளுக்கு இந்தியா உதவும்.

6. ‘கொய்லா தர்பன்’ இணையதளத்தை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?

அ) எஃகு அமைச்சகம்

ஆ) நிலக்கரி அமைச்சகம் 

இ) மின்சார அமைச்சகம்

ஈ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

  • நிலக்கரி துறை தொடர்பான முக்கிய செயல்திறன் குறிகா -ட்டிகளுக்காக “Koyla Darpan” என்ற இணையதளத்தை மத்திய நிலக்கரி அமைச்சகம் அறிமுகப்படுத்தியது.
  • தற்போது, நிலக்கரி/பழுப்பு நிலக்கரி உற்பத்தி, அனல்மின் நிலையங்களில் நிலக்கரி இருப்புநிலை, உட்கட்டமைப்பு திட்டங்கள், தொகுதிகள் ஒதுக்கீடு, முக்கிய நிலக்கரிச் சுரங்கங்களின் கண்காணிப்பு மற்றும் நிலக்கரி விலை உள்ளிட்ட 9 குறிகாட்டிகள் இந்தத்தளத்தில் உள்ளன.

7. ஆயிஷா மாலிக், எந்த நாட்டின் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி ஆனார்?

அ) இஸ்ரேல்

ஆ) பாகிஸ்தான் 

இ) ஆப்கானிஸ்தான்

ஈ) பங்களாதேஷ்

  • பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியா -க உயர்நீதிமன்ற நீதிபதி ஆயிஷா மாலிக் நியமிக்கப்பட்டு உள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு முதல் லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் நீதிபதி ஆயிஷா மாலிக்கின் பதவி உயர்வுக்கு பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி ஒப்புதல் அளித்தார்.
  • அவர் 2031 ஜூனில் பணி ஓய்வு பெறும் வரை உச்சநீதி மன்ற நீதிபதியாகப் பணியாற்றுவார்.

8. 2021ஆம் ஆண்டுக்கான தேசிய துளிர்நிறுவன விருதின் வெற்றியாளர்களுள் ஒருவரான ‘ரெபோஸ்’ உடன் சார்ந்த துறை எது?

அ) ஆற்றல் விநியோகம் 

ஆ) மருத்துவத் துறையில் புத்தாக்கம்

இ) நிதியியல் தொழில்நுட்பம்

ஈ) திறன் மேம்பாடு

  • வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் சிறந்த 46 இந்திய துளிர் நிறுவனங்களை அறிவித்து அவர்களுக்கு தேசிய துளிர் நிறுவன விருதுகளை வழங்கியது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மெய்நிகர் கூட்டத்தில் 150 தொழில்முனைவோர் தங்கள் கொள்கை பரிந்துரைகளை வழங்கினர். புனேவைச் சார்ந்த ‘Repos’, ‘ஆற்றல் விநியோகப்பிரிவில்’, எரிபொருளை வீட்டுக்கு வீடு விநியோகம் செய்ததற்காக இந்த விருதை வென்றது.

9. BHELஆல் கட்டப்பட்ட ‘நிலக்கரியிலிருந்து மெத்தனால் எடுக்கும் இந்தியாவின் முதல் ஆலை’ அமைந்துள்ள இடம் எது?

அ) சென்னை

ஆ) மும்பை

இ) ஹைதராபாத் 

ஈ) கொச்சி

  • மத்திய கனரக தொழிற்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே, BHELஆல் கட்டப்பட்ட ‘நிலக்கரியிலிருந்து மெத்த -னால் எடுக்கும் இந்தியாவின் முதல் ஆலை’யை (CTM) ஹைதராபாத்தில் திறந்து வைத்தார்.
  • இந்த 0.25 TPD (ஒரு நாளைக்கு டன்கள்) திறன்கொண்ட CTM ஆலை BHELஆல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்ப -ட்டு, மேம்படுத்தப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. இது அதிக சாம்பல் கலந்த இந்திய நிலக்கரியிலிருந்து 99 சதவீதத்திற்கும் அதிகமான தூய்மையுடன் மெத்தனாலை உற்பத்தி செய்கிறது.

10. இந்திய ஓப்பன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அறிமுக போட்டியில் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் யார்?

அ) K ஸ்ரீகாந்த்

ஆ) லக்ஷ்யா சென் 

இ) P காஷ்யப்

ஈ) சாய் பிரனீத்

  • இறுதிப்போட்டியில் நடப்பு உலக சாம்பியனான லோ கீன் யூவை தோற்கடித்ததன்மூலம், இந்திய ஓப்பன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை அறிமுகப்போட்டியில் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை லக்ஷ்யா சென் பெற்றார்.
  • BWF சுற்றுப்பயணத்தில் இது லக்ஷ்யாவின் முதல் ‘சூப்பர் 500’ பட்டமாகும். முன்னதாக 2021 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் வெண்கலம் வென்றிருந்தார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பிரமோஸ் ஏவுகணைகள் முதல் முறையாக ஏற்றுமதி: `2,800 கோடிக்கு வாங்குகிறது பிலிப்பின்ஸ்

அதிநவீன பிரமோஸ் ஏவுகணைகளை முதல்முறையாக இந்தியா ஏற்றுமதி செய்யவுள்ளது. சுமார் `2,800 கோடிக்கு பிரமோஸ் ஏவுகணைகளை பிலிப்பின்ஸ் கொள்முதல் செய்யவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையொப்பமானது.

இந்தியா-ரஷியா கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் பிரமோஸ் ஏவுகணைகளைத் தயாரித்து வருகிறது. அந்த ஏவுகணைகள் ஒலியைவிட அதிக வேகத்தில் பயணிக்கக் கூடியவையாகும். தரையில் இருந்து மட்டுமில்லாமல் நீர்மூழ்கிக்கப்பல்கள், கப்பல்கள், விமானங்கள் ஆகியவற்றில் இருந்தும் பிரமோஸ் ஏவுகணைகளை ஏவ முடியும்.

இந்நிலையில், கப்பல்களைத்தாக்கி அழிக்கக்கூடிய பிரமோஸ் ஏவுகணைகளை சுமார் `2,800 கோடிக்கு பிலிப்பின்ஸ் கடற்படை வாங்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்கீழ் செயல்படும் பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஏவுகணைகளைத் தயாரித்து வழங்கவுள்ளது.

பிரமோஸ்-ஒரு பார்வை…

இந்தியா-ரஷியா கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்டது பிரமோஸ் ஏவுகணை.

சூப்பர்சானிக் ரக பிரமோஸ் ஏவுகணைகளை தரையில் இருந்து மட்டுமன்றி கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்களிலிருந்தும் செலுத்த முடியும்.

பிரமோஸ் ஏவுகணைகள் இந்தியாவின் முப்படையிலும் ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளன. 400 கிலோமீட்டர் தொலைவு இலக்கு வரை தாக்கும் மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணையை 2020, செப்டம்பரில் இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது.

2. புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக டாக்டர் வி ஆனந்த நாகேஸ்வரன் நியமனம்

டாக்டர் வி ஆனந்த நாகேஸ்வரன் மத்திய நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில் அப்பதவிக்கு தற்போது நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

2019 முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் பகுதிநேர உறுப்பினராகப் பணியாற்றியுள்ள ஆனந்த நாகேஸ்வரன் ஆமதாபாத்திலுள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்.

3. 30-01-2022 – ‘மகாத்மா’ காந்தியடிகளின் 75ஆவது நினைவு நாள்.

4. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 44 ஆண்டு ஏக்கம் தீர்ந்தது: ஆஷ்லி பார்டி சாம்பியன்

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், உள்ளூர் நட்சத்திரம் ஆஷ்லி பார்டி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இத்தொடரில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஆஸ்திரேலிய வீராங்கனை கோப்பையை முத்தமிட்டது, அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் டேனியலி கோலின்சுடன் (28 வயது, 30வது ரேங்க்) நேற்று மோதிய நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி (25 வயது), தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக புள்ளிகளைக் குவித்து 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டில் ஆக்ரோஷமாக விளையாடி பதிலடி கொடுத கோலின்ஸ், ஒரு கட்டத்தில் 5-1 என முன்னிலை வகித்ததால், அந்த செட்டை மிக எளிதாக வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், உள்ளூர் ரசிகர்களின் ஆரவார ஆதரவுடன் உற்சாகமாக விளையாடிய ஆஷ்லி அடுத்தடுத்து கோலின்சின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து முன்னேறி 5-5 என சமநிலையை எட்டினார். கோலின்சும் விட்டுக் கொடுக்காமல் போராடியதால் ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது.

அதில் பதற்றமின்றி அமர்க்களமாக விளையாடிய ஆஷ்லி 6-3, 7-6 (7-2) என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி சாம்ம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 27 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் ஒரு செட்டில் கூட தோற்காமல் கோப்பையை முத்தமிட்டுள்ள ஆஷ்லி, 44 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸி. ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் உள்ளூர் வீராங்கனை என்ற பெருமையை தட்டிச் சென்றார். சொந்த மண்ணில் நடக்கும் கிராண்ட் ஸ்லாம் தொடரில் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்திருக்கும் இந்த வெற்றியை ஆஸி. மக்கள் மகிழ்ச்சியுடன் உற்சாகம் பொங்கக் கொண்டாடி வருகின்றனர்.

* தொழில்முறை கிரிக்கெட் வீராங்கனையாகும் முயற்சியில் 2014ம் ஆண்டில் டென்னிசில் இருந்து விலகியிருந்த ஆஷ்லி, தற்போது மகளிர் டென்னிசில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக இருப்பதுடன் ஆஸி. ஓபனையும் வென்று மகத்தான சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 1978ல் ஆஸி. ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை கிறிஸ்டைன் ஓ நீல், நேற்று ஆஷ்லிக்கு கோப்பையை வழங்கி பாராட்டினார்.

* ஆஷ்லி வென்ற 3வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது. முன்னதாக, 2019ல் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தையும் கடந்த ஆண்டு விம்பிள்டன் பட்டத்தையும் அவர் வென்றிருந்தார்.

* மார்சிங்கோ அசத்தல்

ஆஸ்திரேலிய ஓபன் சிறுமியர் ஜூனியர் பிரிவில் குரோஷியா வீராங்கனை பெத்ரா மார்சிங்கோ (16 வயது, நம்பர் 1) சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் சோபியா கோஸ்டுலாஸுடன் (16 வயது, பெல்ஜியம், 8வது ரேங்க்) நேற்று மோதிய மார்சிங்கோ 7-5, 6-1 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 1 மணி, 16 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

* புரூனோ அமர்க்களம்

ஆஸி. ஓபன் ஜூனியர் சிறுவர் பிரிவில் அமெரிக்காவின் புரூனோ குஸுஹரா (17 வயது, நம்பர் 1) சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக்குடன் (4வது ரேங்க்) மோதிய புரூனோ 7-6 (7-4), 6-7 (6-8), 7-5 என்ற செட் கணக்கில் 3 மணி, 43 நிமிடம் கடுமையாகப் போராடி கோப்பையை தட்டிச் சென்றார்.

* நடாலுடன் இன்று மெட்வதேவ் மோதல்

ஆஸ்திரேலிய ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இன்று ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடாலுடன் (35 வயது, 6வது ரேங்க்) ரஷ்யாவின் டேனியல் மெட்வதேவ் (25 வயது, 2வது ரேங்க்) மோதுகிறார். கிராண்ட் ஸ்லாம் வேட்டையில் ரோஜர் பெடரர் (சுவிஸ்), நோவாக் ஜோகோவிச் (செர்பியா) ஆகியோருடன் சமநிலை வகிக்கும் நடால் (தலா 20 சாம்பியன் பட்டங்கள்), மெட்வதேவை வீழ்த்தி மகத்தான சாதனை படைப்பாரா என்பதே டென்னிஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதே சமயம், கடந்த ஆண்டு யுஎஸ் ஓபன் பைனலில் ஜோகோவிச்சை வீழ்த்தி அதிர்ச்சி அளித்த மெட்வதேவ் தொடர்ச்சியாக 2வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குவதால் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

* இருவரும் இதுவரை 4 முறை மோதியுள்ளதில் நடால் 3 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறார்.

* 2019 யுஎஸ் ஓபன் பைனலில் மெட்வதேவுடன் மோதிய நடால் 5 செட்கள் கடுமையாகப் போராடி பட்டம் வென்றார்.

* 2020 ஏடிபி பைனல்ஸ் தொடரில் நடாலுக்கு எதிராக நேர் செட்களில் மெட்வதேவ் வெற்றி பெற்றார்.

1. Which is the first Indian scheduled commercial bank to issue public Formosa USD bonds?

A) Punjab National Bank

B) State Bank of India 

C) Canara Bank

D) HDFC Bank

  • State Bank of India (SBI) has raised $300 million through “Regulation S” Formosa Bonds for five years. It is the first Indian scheduled commercial bank to issue public Formosa Bonds. The bonds have been benchmarked against five–year US Treasury notes.

2. India recently granted $900 mn loan to which country to tackle forex crisis?

A) Nepal

B) Sri Lanka 

C) Afghanistan

D) Venezuela

  • India has announced a USD 900 million loan to Sri Lanka to build up its depleted foreign reserves and for food imports, Sri Lanka is also negotiating a USD one billion loan from India to import goods from the country. There has been a shortage of almost all essential commodities in the island nation, due to a shortage of dollars to pay for the imports.

3. As of January 2022, what is the minimum number of airbags compulsory for vehicles carrying up to eight passengers?

A) One

B) Two 

C) Four

D) Six

  • A driver airbag was made compulsory for all passenger vehicles since July 1, 2019. Dual airbags (driver and passenger in front row) became mandatory on all vehicles from January 2022. Road Transport ministry recently approved a draft notification to make a minimum of six airbags compulsory for vehicles carrying up to eight passengers. The aim is to minimise the impact of “frontal and lateral collisions”.

4. When is the ‘Army Day’ observed every year in India?

A) January 15 

B) January 20

C) January 25

D) January 30

  • January 15 has been celebrated as Army Day every year, to mark the day General KM Cariappa (who later became Field Marshal) took over as the first Indian Commander–in–Chief of the Indian Army from Gen F R Roy Bucher.

5. Which country has organised the ‘Asia Ministerial Conference on Tiger Conservation’?

A) India

B) Malaysia 

C) UK

D) Sri Lanka

  • Government of Malaysia and Global Tiger Forum (GTF) jointly organised the 4th Asia Ministerial Conference on Tiger Conservation. India’s Union Minister of Environment, Forest and Climate Change Bhupender Yadav delivered India’s statement at the Conference on Tiger Conservation.
  • India will facilitate Tiger Range Countries towards finalisation of New Delhi declaration for Global Tiger Summit to be held in Russia.

6. Which Union Ministry launched the “Koyla Darpan” portal?

A) Ministry of Steel

B) Ministry of Coal 

C) Ministry of Power

D) Ministry of Rural Development

  • Union Ministry of Coal launched the “Koyla Darpan” portal, to Key Performance Indicators (KPIs) related to the Coal Sector. At present, the portal has 9 KPIs including Coal/Lignite Production, Status of Coal Stock in Thermal Power Plants, Infrastructure Projects, Allocation of Blocks, Monitoring of Major Coal Mines and Coal Price.

7. Ayesha Malik became the first–ever woman judge of the Supreme Court of which country?

A) Israel

B) Pakistan 

C) Afghanistan

D) Bangladesh

  • High Court Justice Ayesha Malik has been appointed as Pakistan’s first–ever woman judge of the Supreme Court. Pakistan President Arif Alvi gave his approval to the elevation of the Judge, who was serving as Lahore High Court Justice since 2012. She will now work as a Supreme Court Judge until her superannuation in June 2031.

8. Repos, one of the winners of the National Startup Award 2021, is associated with which field?

A) Energy Distribution 

B) Health Innovation

C) Fintech

D) Skill Development

  • Ministry of Commerce and Industry named the top 46 Indian startups and presented them National Startup Award 2021. 150 entrepreneurs presented their policy recommendations at the virtual gathering presided by PM Narendra Modi.
  • Pune–based Repos won this award in the Energy distribution category, for their door–to–door delivery of fuel.

9. Where is India’s first BHEL–built ‘coal to methanol’ pilot plant located?

A) Chennai

B) Mumbai

C) Hyderabad 

D) Kochi

  • Union Minister for Heavy Industries Mahendra Nath Pandey inaugurated India’s first BHEL–built ‘coal to methanol’ (CTM) pilot plant at Hyderabad. This 0.25 TPD (tonnes per day) capacity CTM pilot plant has been indigenously designed, developed and installed by BHEL. It is producing methanol with purity of more than 99 per cent from high–ash Indian coal.

10. Who is the first Indian to win an Indian Open men’s singles title on debut?

A) K Srikanth

B) Lakshya Sen 

C) P Kashyap

D) Sai Praneeth

  • Lakshya Sen became the first Indian to win an Indian Open men’s singles title on debut as he defeated the reigning world champion Loh Kean Yew in the final. This is Lakshya’s first Super 500 title on the BWF tour. He had earlier won bronze in the 2021 World Championships.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!