Tnpsc

29th & 30th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

29th & 30th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 29th & 30th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

29th & 30th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற, இணையதளமான ‘ISIபீடியா’ என்பதுடன் தொடர்புடைய துறை எது?

அ) நலம்

ஆ) பருவநிலை மாற்றம்

இ) சமயம்

ஈ) விளையாட்டு

 • பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கம் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் போட்ஸ்டாம் நிறுவனத்தின் தலைமையிலான பன்னாட்டு ஆராய்ச்சியாளர்கள் குழு, ‘ISIபீடியா’ என்றவொரு இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அணுகக்கூடிய தரவு, வரைபடங்கள் மற்றும் கோட்டுருக்கள் மற்றும் உலகளாவிய ஆய்வுகளிலிருந்து பெறப்ப ட்ட நாடு அளவிலான தகவல்களை வழங்குகிறது. காலநிலை தாக்க அறிவியலை பொதுமக்கள் அணுகுமாறு செய்வதைத் தவிர, பகுப்பாய்வுக -ள்பற்றிய நுண்ணறிவையும் இது வழங்குகிறது.

2. CSIR-மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பானது PIVA என்ற கருவியை உருவாக்கியுள்ளது. அது எதன் மதிப்பை அளவிடுகிறது?

அ) பாஸ்பரஸ்

ஆ) ஐயோடின்

இ) அம்மோனியம்

ஈ) மேற்கூறிய எதுவும் இல்லை

 • அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பானது Precision Iodine Value Analyzer தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. PIVA என்பது ஐயோடின் மதிப்பை அளவிடுவ -தற்கான ஒரு கருவியாகும். இது, தாவர எண்ணெய்களில், நிறைவுறாத அளவை அளவிடும். உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த உணவு சோதனை உபகரணத்திற்கு இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் (FSSAI) அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. பின்வரும் எந்தச்சட்டத்தின்கீழ் NAFED பதிவு செய்யப்பட்டுள்ளது?

அ) நிறுவனங்கள் சட்டம்

ஆ) வங்கி ஒழுங்குமுறை சட்டம்

இ) கூட்டுறவு சங்கங்கள் சட்டம்

ஈ) NABARD சட்டம்

 • இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிட் (NAFED) கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருட்களின் கூட்டுறவு சந்தைப்படுத்தலை ஊக்குவிப்பதற்காக இது நிறுவப்பட்டுள்ளது. அண்மையில், NAFED “NAFED செறிவூட்டப்பட்ட தவிட்டெண்ணெயை” அறிமுகப்படுத்தியது.
 • இது, இவ்வெண்ணெயின் இறக்குமதியை வெகுவாகாக் குறைப்பதோடு, ஆத்ம நிர்பார் பாரத் முன்னெடுப்புக்கு ஓர் உத்வேகத்தை அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

4. பைன் தீவு பனிப்பாறை அமைந்துள்ள இடம் எது?

அ) இமயமலை

ஆ) ஆல்ப்ஸ்

இ) அண்டார்டிகா

ஈ) கிரீன்லாந்து

 • பைன் தீவு பனிப்பாறை என்பது அண்டார்டிகாவின் மிகப்பெரிய பனி நீரோடைகளுள் ஒன்றாகும். மேலும் அது அப்பகுதியில் வேகமாக உருகி வரும் பனியடுக்குகளுள் ஒன்றாகவும் உள்ளது. வாஷிங்டன் பல்கலை மற்றும் பிரிட்டிஷ் அண்டார்டிக் ஆய்வு ஆகியவற்றின் ஓர் அண்மைய ஆய்வின்படி, பைன் தீவு பனிப்பாறையின் பனி அடுக்குகள் விரைவாக உடைந்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது முழுமையாக உருகினால் உலகின் கடல் மட்டங்களில் 0.5 மீ உயர்வு ஏற்படக்கூடும்.

5. விவாடெக் தொழில்நுட்ப மாநாட்டை நடத்திய நாடு எது?

அ) பிரான்ஸ்

ஆ) சீனா

இ) இந்தியா

ஈ) ரஷ்யா

 • ‘விவாடெக்’ என்பது ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு தொழில்நுட்ப மாநாடு ஆகும். அது பிரான்ஸின் பாரிஸில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2016 முதல் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்தியப் பிரதமர் மோடி, 2021 விவாடெக் மாநாட்டில் சிறப்புரையாற்றினார். அங்கு, தொழில்நுட்ப முன்னணியில் இந்தியா மற்றும் பிரான்ஸின் நெருங்கிய தொடர்பை அவர் எடுத்துரைத்தார்.

6. சில்வர்லைன் என்பது பின்வரும் எந்த மாநிலத்தின் முதன்மை இரயில் திட்டமாகும்?

அ) கர்நாடகா

ஆ) கேரளா

இ) மத்திய பிரதேசம்

ஈ) உத்தர பிரதேசம்

 • பகுதியளவு அதிவேக இரயில் திட்டமான சில்வர்லைன் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு கேரள மாநில அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. `63,940 கோடி செலவிலான இத்திட்டம், கேரளத்தின் வட மற்றும் தென்பகுதிகளை இரயில் மூலம் இணைத்து பயண நேரத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 • இது, சமீபத்திய காலங்களில் அம்மாநிலத்தில் நிகழ்த்தப்படும் மிகப்பெரிய உட்கட்டமைப்பு திட்டங்களுள் ஒன்றாகும்.

7. சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற, ‘இன்டர்ஸ்டெல்லர் பவுண்டரி எக்ஸ்ப்ளோரர் (IBEX) செயற்கைக்கோளை’ ஏவிய விண்வெளி நிறுவனம் எது?

அ) NASA

ஆ) ESA

இ) ISRO

ஈ) JAXA

 • NASA’இன் புவியைச் சுற்றிவரும் இன்டர்ஸ்டெல்லர் பவுண்டரி எக்ஸ்ப் -ளோரர் (IBEX) செயற்கைக்கோளிலிருந்து பெறப்பட்ட தரவைப்பயன்படுத்தி முதன்முறையாக பரிதிசார்கோளத்தின் எல்லையை அறிவியலாளர்கள் வரைபடமாக்கியுள்ளனர். இது சூரியனும் விண்மீன் வளிகளும் எவ்வாறு தொடர்புகொள்கின்றன என்பதற்கான சிறந்த புரிதலை வழங்கும். இந்தப்பகுதியின் முப்பரிமாண வரைபடம் பரிதிசார்கோளம் என்று அழைக்கப்படுகிறது.

8. போலந்து ஓப்பன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை யார்?

அ) சாக்ஷி மாலிக்

ஆ) கவிதா தேவி

இ) பபிதா குமாரி

ஈ) வினேஷ் போகத்

 • வார்சாவில் நடந்த போலந்து ஓப்பனில் இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகத், 53 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார். இதற்கு முன்னர் மேட்டியோ பெல்லிகோன் நிகழ்வு (மார்ச்) மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் (ஏப்ரல்) ஆகியவற்றில் அவர் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.
 • இறுதிப்போட்டியில், 8-0 என்ற புள்ளிக்கணக்கில் உக்ரைனின் கிறிஸ்டியானா பெரெசாவுக்கு எதிராக வினேஷ் வெற்றிபெற்றார். இந்த வெற்றி, அவரை டோக்கியோ ஒலிம்பிக்கில் முதலிடத்திற்கு கொண்டுசெல்லும்.

9. பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான உலக நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) ஜூன்.17

ஆ) ஜூன்.18

இ) ஜூன்.19

ஈ) ஜூன்.20

 • பாலைவனமயமாதலை தடுப்பதற்காக பன்னாட்டளவில் மேற்கொள்ளப் -படும் முயற்சிகள்குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜூன்.17 அன்று பாலைவனமயமாதல் மற்றும் வறட்சிக்கு எதிரான உலக நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
 • வலுவான சமுதாய ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்புமூலம் நிலச்சீரழிவை தடுக்கமுடியும் என்பதை அனைவருக்கும் நினைவூட்டுவதற்கான ஒரு தனிப்பட்ட தருணமாக இந்நாள் அமைந்துள்ளது. “Restoration.Land.Reco -very: We build back better with healthy land” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

10. சர்வதேச ‘குடும்பத்திற்கு பணமனுப்புதல்’ நாள் கடைப்பிடிக்கப்ப -டும் தேதி எது?

அ) ஜூன்.15

ஆ) ஜூன்.16

இ) ஜூன்.17

ஈ) ஜூன்.18

 • சர்வதேச ‘குடும்பத்திற்கு பணமனுப்புதல்’ நாளானது உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.16 அன்று கொண்டாடப்படுகிறது.
 • “Recovery and resilience through digital and financial inclusion” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும். தனி நபர்கள் அல்லது கூட்டு செயற்பாடுகள்மூலம் பணமனுப்புவதன் தாக்கத் -தை அதிகரிக்கக்கூடிய வழிகளைக்கண்டறிய அரசாங்கங்கள், தனியா -ர்துறை நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு சமூகங்கள் ஆகியவற்றுக்கு இந்நாள் அழைப்புவிடுக்கிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட, கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அக்னி இரக ஏவுகணைகளில் அதிநவீன, மேம்பட்ட வகையாக அக்னி பிரைம் ஏவுகணை விளங்குகிறது. 1000 கிமீ முதல் 2000 கிமீ தூரம்வரையுள்ள இலக்குகளை எட்டும் திறனை இந்த ஏவுகணை பெற்றுள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கிய இந்த ஏவுகணை, ஒடிஸா மாநிலத்தின் பாலேசுவரம் அருகே உள்ள APJ அப்துல் கலாம் தீவிலிருந்து விண்ணில் ஏவி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. கிழக்குக் கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு தொலைதூரத் தொடர்பு நிலையங்கள் மற்றும் ரேடார் நிலைய -ங்களின்மூலம் ஏவுகணை கண்காணிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பயணித்து இந்த ஏவுகணை மிகத்துல்லியமாக இலக்கைத் தாக்கியது.

2. 5 லட்சம் வெளிநாட்டு பயணிகளுக்கு இலவச விசா

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்தியாவுக்கு வருகை தரும் 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவு இசைவு இலவசமாக வழங்கப்படும். அடுத்த ஆண்டு மார்ச்.31 வரை செயல்படுத்த -ப்படவுள்ள இந்தத் திட்டத்தின்கீழ், முதல் ஐந்து இலட்சம் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மட்டும் கட்டணமின்றி நுழைவு இசைவு வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின்மூலமாக இந்தியாவுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்தத் திட்டத்துக்காக `100 கோடி ஒதுக்கப்படவுள்ளது. பதிவுசெய்யப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகளுக்கு `1 இலட்சம் வரையும், சுற்றுலாத்துறை சார்ந்த மற்ற தொழிலாளர்களுக்கு `10 லட்சம் வரையும் 100% உத்தரவாதத்துடன் கடன் வழங்கப்படும்.

3. இந்திய வீராங்கனை ராஹி சர்னோபாத் தங்கம் வென்றார்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி குரோஷியாவில் உள்ள ஒசிஜெக் நகரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 25 மீ பிஸ்டல் பந்தயத்தில் இறுதிச்சுற்றில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ள இந்திய வீராங்கனையான மராட்டியத்தைச்சேர்ந்த ராஹி சர்னோபாத் 39 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். இந்தப் போட்டியில், இந்தியா வெல்லும் முதல் தங்கம் இதுவாகும். ஏற்கனவே இந்தியா ஒரு வெள்ளியும், 2 வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளது.

4. புதிய சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு நியமனம்

தமிழ்நாடு காவல்துறை சட்டம் – ஒழுங்கு DGP திரிபாதி ஓய்வுபெறுவதால், புதிய சட்டம் – ஒழுங்கு டிஜிபியைத் தேர்வு செய்யும் பணி சில நாட்களாக நடந்து வந்தது. இந்நிலையில், UPSC’இலிருந்து வந்த பட்டியல் அடிப்படை -யில் புதிய சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபுவை நியமித்து அரசு அறிவித்துள்ளது.

தமிழகக் காவல்துறையில் உயரிய பதவி, சட்டம்- ஒழுங்கு டிஜிபி பதவி. தீயணைப்புத் துறை, சிபிசிஐடி, சீருடைப் பணியாளர் தேர்வாணையம், சிறைத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை என பல டிஜிபிக்கள் பதவியில் இருந்தாலும் அனைத்திற்கும் தலையாயப் பதவி சட்டம்- ஒழுங்கு டிஜிபி அல்லது காவல்துறை தலைமை இயக்குநர் பதவி. இதை ஹெட் ஆஃப் தி போலீஸ் ஃபோர்ஸ் (HOPF) என்றும் அழைக்கிறார்கள்.

இந்தப் பதவிக்கு வரும் IPS அதிகாரியை தமிழ்நாடு அரசு நேரடியாகத் தேர்வுசெய்தாலும் அதற்கான பட்டியலை மத்திய அரசு தேர்வாணையத் -துக்கு (UPSC) சமர்ப்பித்து அவர்கள் அளிக்கும் பட்டியலிலிருந்தே ஒருவ -ரைத் தேர்வு செய்ய முடியும். இது உச்சநீதிமன்ற உத்தரவு. அப்படித் தேர்வு செய்யப்படுபவர் அடுத்த 2 ஆண்டுகளுக்குக் கட்டாயம் பதவியில் இருப்பார்.

புதிய சட்டம் – ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு 1987ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. தற்போது ரயில்வே டிஜிபியாகப் பதவி வகிக்கிறார். காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி சட்டம் – ஒழுங்கு பிரிவிலும் அதிக அனுபவம் உள்ளவராவார். அவர், ‘நீங்களும் ஐபிஎஸ் அதிகாரி ஆகலாம்’, ‘சாதிக்க ஆசைப்படு’, ‘உடலினை உறுதிசெய்ய’ உள்ளிட்ட 10’க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

1. ‘ISIpedia’, the online portal seen in the news recently, is associated with which field?

A) Health

B) Climate Change

C) Religion

D) Sports

 • A team of International Researchers led by the Potsdam Institute for Climate Impact Research have launched the online portal ‘ISIpedia’.
 • It provides accessible data, in maps and graphs, and country–level information derived from global studies. Besides providing climate impact science accessible to public, the portal also provides an insight into the analyses.

2. CSIR–Central Scientific Instruments Organisation developed PIVA, is an instrument to measure which value?

A) Phosphorus

B) Iodine

C) Ammonium

D) None of the above

 • Council of Scientific and Industrial Research–Central Scientific Instruments Organisation (CSIR–CSIO) has developed and transferred the technology of Precision Iodine Value Analyzer (PIVA).
 • PIVA is an instrument for the measurement of the Iodine value, which measures the degree of unsaturation in vegetable oils. This indigenous food testing equipment was recognized by Food Safety and Standards Authority of India (FSSAI).

3. NAFED is registered under which of the following Acts?

A) Companies Act

B) Banking Regulation Act

C) Co–operative Societies Act

D) NABARD Act

 • The National Agricultural Cooperative Marketing Federation of India Ltd (NAFED) is registered under the Co–operative Societies Act and is established to promote the cooperative marketing of agricultural produce. Recently, NAFED has launched “Nafed Fortified Rice Bran Oil ”.
 • This is expected to significantly reduce India’s dependence on imported edible oil and would provide an impetus to the Atma Nirbhar Bharat initiative.

4. Where is the Pine Island Glacier located?

A) The Himalayas

B) The Alps

C) Antarctica

D) Greenland

 • The Pine Island Glacier is one of the largest ice streams in Antarctica and is the fastest melting ice shelves in the region. As per a recent study by the Washington University and British Antarctic Survey, the ice shelves of Pine Island Glacier are reported to rapidly break down. It is expected to collapse faster than previously expected timeline. Its complete melting could result in 0.5 meters rise in global sea levels.

5. Which country played host to VivaTech technology conference?

A) France

B) China

C) India

D) Russia

 • VivaTech is an annual technology conference which is organised in Paris, France. This conference has been organised since 2016 and is dedicated to innovations and startups across the globe.
 • Prime Minister of India Narendra Modi delivered the keynote address at this year’s VivaTech conference, where he highlighted the close association of India and France on the technology front.

6. SilverLine, is a flagship rail project of which state?

A) Karnataka

B) Kerala

C) Madhya Pradesh

D) Uttar Pradesh

 • The state government of Kerala has recently approved for commencing land acquisition to SilverLine project, which is a semi high–speed railway project. Proposed at a cost of Rs.63,940 crore, the project aims to connect the northern and southern part of Kerala by rail and reduce the travel time. This is one of the biggest infra projects of recent times in the state.

7. ‘Interstellar Boundary Explorer (IBEX) satellite’, which is seen in the news recently, was launched by which space agency?

A) NASA

B) ESA

C) ISRO

D) JAXA

 • Scientists have used data from NASA’s Earth–orbiting Interstellar Boundary Explorer (IBEX) satellite to map the boundary of the heliosphere for the first time. This will give a better understanding of how solar and interstellar winds interact. A three–dimensional map of the region called the heliosphere.

8. Which Indian wrestler has clinched gold medal in the Poland Open Tournament?

A) Sakshi Malik

B) Kavita Devi

C) Babita Kumari

D) Vinesh Phogat

 • Indian wrestler Vinesh Phogat has clinched the 53kg gold medal at the Poland Open in Warsaw. It is the third title of the season for the 26–year–old wrestler, who had previously won gold medals at the Matteo Pellicone event (March) and Asian Championship (April).
 • Vinesh won the final match against Ukraine’s Khrystyna Bereza 8–0. The victory would make her the top seed at the Tokyo Olympics.

9. The World Day to Combat desertification and drought 2021 is observed on which date?

A) 17th June

B) 18th June

C) 19th June

D) 20th June

 • The World Day to Combat Desertification and Drought is observed every year on 17th of June to promote public awareness of international efforts to combat desertification.
 • The day is a unique moment to remind everyone that land degradation neutrality is achievable through problem solving, strong community involvement and co–operation at all levels.

10. When ‘International Day of Family Remittances’ celebrated every year?

A) June.15

B) June.16

C) June.17

D) June.18

 • ‘International Day of Family Remittances’ is celebrated on June 16, every year across the world. This year, the International Day is observed with the theme of “Recovery and resilience through digital and financial inclusion”. This day also calls upongovernments, private sector companies and the civil society, to maximize the impact of remittances through individuals.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Turnoff the Ad Blocker to view the content