Tnpsc

29th & 30th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

29th & 30th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 29th & 30th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

 

29th & 30th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. COVID நெருக்கடிக்கு தீர்வுகாண இளையோர்களை ஈடுபடுத்த இந்தியாவும் UNICEFஉம் தொடங்கிய திட்டத்தின் பெயர் என்ன?

அ) Covid Warrior

ஆ) Young Warrior

இ) COVID Champion

ஈ) Tackle the Crisis

  • இளையோர் விவகாரங்கள் அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், ஐநா சிறார்கள் நிதியம் (UNICEF) மற்றும் அதன் கூட்டாளர் அமைப்பான YuWaah & அவர்களது பங்காளர்களும் #YoungWarrior என்ற தேசிய அளவிலான திட்டத்தைத் தொடங்கினர்.
  • தற்போது நடைபெற்றுவரும் COVID-19 நெருக்கடிக்கு தீர்வுகாண நாடு முழுவதும் இளையோர்களை ஈடுபடுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் தவறான தகவல்களைக் கண்டறிவதற்கான பயிற்சி, தடுப்பூசி மற்றும் மனநல ஆதரவு போன்றவற்றுக்கான பதிவை ஊக்குவித்தல் ஆகியவை அடங்கும்.

2. அண்மையில் காலமான சுந்தர்லால் பகுகுணா என்பவர் ___?

அ) விளையாட்டு வீரர்

ஆ) சூழலியலாளர்

இ) தொழிலதிபர்

ஈ) பொருளாதார வல்லுநர்

  • மூத்த சூழலியலாளரும், ‘பத்ம விபூஷன்’ விருதாளருமான சுந்தர்லால் பகுகுணா (94) சமீபத்தில் காலமானார். 1973ஆம் ஆண்டு மரங்களைக் பாதுகாக்க உத்தரகண்ட் சமோலி பகுதியில் பெண்கள் முன்னெடுத்த ‘சிப்கோ’ இயக்கத்தை தொடங்கிவைத்தவர்.

3. 2021 மேயில் நடைபெற்ற BRICS வானியல் பணிக்குழு (BAWG) கூட்டத்தை நடத்திய நாடு எது?

அ) இந்தியா

ஆ) ரஷியா

இ) தென்னாப்பிரிக்கா

ஈ) பிரேஸில்

  • மே 19 & 20 ஆகிய தேதிகளில் இணையவழியில் BRICS வானியல் பணிக்குழுவின் (BAWG) ஏழாவது கூட்டத்தை இந்தியா நடத்தியது. இக் கூட்டத்தின்போது, பங்கேற்பாளர்கள் அனைவரும் இந்தப் பகுதியில் ஒரு முதன்மை திட்டத்தை உருவாக்க ஒப்புக்கொண்டனர். உறுப்பு நாடுகளிலுள்ள தொலைநோக்கிகளை ஒரு வலையமைப்பில் கொண்டுவந்து பிராந்திய தரவு வலையமைப்பை உருவாக்குவதற்கும் அப்பணிக்குழு பரிந்துரைத்தது.

4. உலக பேச்சுவார்த்தை மற்றும் வளர்ச்சிக்கான கலாச்சாரப் பன்மு -கத்தன்மை நாள் (World Day for Cultural Diversity for Dialogue and Development) கடைப்பிடிக்கப்படும் தேதி எது?

அ) மே 21

ஆ) மே 22

இ) மே 23

ஈ) மே 24

  • பல்வேறு கலாசாரங்களுக்கிடையிலான இடைவெளியை இணைக்கும் வகையில், ஆண்டுதோறும் மே.21 அன்று உலக உரையாடல் மற்றும் வளர்ச்சிக்கான கலாச்சாரப் பன்முகத்தன்மை நாள் கடைப்பிடிக்கப்படுகி -றது. இது, கலாச்சார பன்முகத்தன்மையின் மதிப்பை புரிந்துகொள்ளவும் எப்படி ஒன்றிணைந்து வாழவேண்டுமென்பதை கற்றுக்கொள்ளவும் உதவுவதற்கான ஒரு நல்வாய்ப்பாக உள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் பமீனிலுள்ள புத்தர் சிலைகளை சேதப்படுத்தியதன் விளைவாக இந்நாள் உருவாக்கப்பட்டது.

5. நடப்பாண்டில் (2021) வரும் உயிரியல் பன்முகத்தன்மைக்கான பன்னாட்டு நாளின் கருப்பொருள் என்ன?

அ) We’re part of the solution

ஆ) Our solutions are in Nature

இ) Strategic Plan on Biodiversity

ஈ) Ecosystem Restoration Ahead

  • பன்னாட்டளவில் உயிரியல் பல்வகைமைபற்றிய புரிதல் மற்றும் விழிப்பு -ணர்வை அதிகரிக்கும் நோக்கில் ஒவ்வோர் ஆண்டும் மே.22 அன்று பன்னாட்டு உயிரியல் பல்வகைமை நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. “We’re part of the solution” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.

6. முதல் அதிகாரப்பூர்வ பன்னாட்டு தேயிலை நாளின் அனுசரிப்பை குறிக்கும் ஆண்டு எது?

அ) 1948

ஆ) 2017

இ) 2020

ஈ) 2021

  • முதலாவது பன்னாட்டு தேயிலை நாளானது, “Harnessing benefits for all from field to cup” என்னும் கருப்பொருளின்கீழ் 2020 மே.21 அன்று கடைப்பிடிக்கப்பட்டது. தேயிலை சாகுபடியை வேலைவாய்ப்பு மற்றும் வருவாயின் மூலாதாரமாக கொண்டிருக்கும் நாடுகளை இந்த நாள் ஒருங்கிணைக்கிறது.
  • கடந்த 2019ஆம் ஆண்டு, இந்தியா, அரசாங்கங்களுக்கு இடையேயான FAO குழுவில் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில், ஐநா பொது அவை, மே 21’ஐ பன்னாட்டு தேயிலை நாளாக அறிவித்தது.

7. துரோணாச்சார்யா விருதுபெற்ற முதல் பயிற்சியாளரான பரத்வாஜ் அண்மையில் காலமானார். அவர் சார்ந்த விளையாட்டு எது?

அ) டேபிள் டென்னிஸ்

ஆ) குத்துச்சண்டை

இ) பளு தூக்குதல்

ஈ) டென்னிஸ்

  • குத்துச்சண்டையில் இந்தியாவின் முதலாவது துரோணாச்சார்யா விருது பெற்ற பயிற்சியாளரான O P பரத்வாஜ் (82) சமீபத்தில் காலமானார்.
  • 1985ஆம் ஆண்டில் அவர் துரோணாச்சார்யா விருதை வென்றார். 1968 – 1989ஆம் ஆண்டு வரை அவர் இந்தியாவின் தேசிய குத்துச்சண்டை பயிற்சியாளராக இருந்தார். மேலும் இந்திய குத்துச்சண்டை அணியின் தேர்வாளராகவும் பணியாற்றியுள்ளார். அவரது பயிற்சிகாலத்தில் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையா -ட்டு, தெற்காசிய விளையாட்டு உள்பட பல்வேறு சர்வதேச போட்டிகளி -ல் நிறைய பதக்கம் வென்றுள்ளனர்.

8. எந்த இந்திய விமான நிறுவனத்தின் பயணிகள் சேவை பிரிவு வழங்குநரான SITA, சமீபத்தில் ஒரு பெரிய சைபர் தாக்குதலை எதிர்கொண்டது?

அ) IndiGo

ஆ) Go First

இ) SpiceJet

ஈ) Air India

  • ஏர் இந்தியா விமான நிறுவன இணையதள சர்வரான SITA அமைப்பில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதலில், கடந்த 2011 ஆக.11 முதல் 2021 பிப்.2 வரையிலான உலக அளவிலான 45 இலட்சம் பயணிகளின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் கசிந்துள்ளன என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. SITA சர்வர், சுவிச்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவை மையமாக வைத்து செயல்படுகிறது.

9. காட்டுத்தீக்காக அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற ஜெரேனியா மலைத்தொடர் அமைந்துள்ள நாடு எது?

அ) இத்தாலி

ஆ) பிரான்ஸ்

இ) கிரேக்கம்

ஈ) பிலிப்பைன்ஸ்

  • கிரேக்கத்தின் தெற்கில் அமைந்துள்ள ஜெரேனியா மலைத்தொடரில் பயங்கர காட்டுத்தீ பரவியது. கிரேக்க தலைநகரான ஏதென்ஸ் நகரத்தில் இருந்து 90 கிமீ தூரத்தில் இந்தப் பகுதி அமைந்துள்ளது. பல தீயணைப்பு வீரர்கள் இந்தக் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வறண்ட வானிலை, பலத்த காற்று மற்றும் அதிக வெப்பநிலை ஆகியவ -ற்றால் இந்தக் காட்டுத்தீ ஏற்படுகிறது.

10.உலகளாவிய நலவாழ்வு உச்சிமாநாட்டை எந்நாடும் ஐரோப்பிய ஆணையமும் இணைந்து நடத்தின?

அ) இத்தாலி

ஆ) ஜெர்மனி

இ) ஐக்கியப் பேரரசு

ஈ) பிரான்ஸ்

  • உலகளாவிய நலவாழ்வு உச்சிமாநாட்டை அதன் G20 தலைமைப் பொறுப்பின் ஒருபகுதியாக ஐரோப்பிய ஆணையமும் இத்தாலியும் இணைந்து நடத்தின. COVID-19 கருவிகள் முடுக்கிக்கான அணுகல் (ACT) குறித்த தலைவர்களின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய இவ்வுச்சிமாநாட்டின் முடிவில், ரோம் பேரறிவிப்பு வெளியிடப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் டி எம் காளியண்ணன் காலமானார்!

இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களுள் ஒருவரான, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சார்ந்த டி எம் காளியண்ணன் (101) காலமானார்.

கல்லூரிக் காலத்திலேயே விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் காட்டினார். காந்திய வழியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர், 1938’இல் இந்திய தேசிய இளைஞர் காங்கிரஸ் உறுப்பினரானார். தமிழ் ஜில்லா மாணவர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி, அரசியல் செயல்பாடுகளில் ஏராளமான மாணவர்களைப் பங்கேற்கச் செய்தார். மகாத்மா காந்தி நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார்.

அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்: சுதந்திரம் பெற்ற பின்னர் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்க இந்திய அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்தப்பட்டது. 1948ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் இருந்து அப்போதைய மக்களவைக்கு அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களாக 40 பேர் தேர்வுசெய்யப்பட்டனர். அவர்களில் ஒருவராக டி எம் காளியண் -ணனும் தேர்வானார். ஜவகர்லால் நேரு, அம்பேத்கர், டாக்டர் ராஜேந்திர பிரசாத், வல்லபாய் பட்டேல், இராஜாஜி, காமராஜர் போன்ற பல்வேறு தலைவர்களுடன் இணைந்து அவர் பணியாற்றியுள்ளார். பெரும் தலைவ -ர்கள் இவரை ‘அரசியல் யாத்திரீகன்’ எனச் செல்லமாக அழைப்பதுண்டு.

கண்ணகிக்கு கோட்டம்: தமிழ் இலக்கியத்திலும் ஆன்மிகத்திலும் நாட்டம் கொண்டிருந்த இவர் திருச்செங்கோட்டில் கண்ணகிக்குக்கோட்டம் அமை -த்தார். மதுரையை எரித்த கண்ணகி திருச்செங்கோடு மலையிலிருந்து தெய்வமாகி தேவலோகம் சென்றதாகக் கருதப்படுகிறது. அதற்காகவே டி எம் காளியண்ணன், கண்ணகியின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் இந்தக்கோட்டத்தை உருவாக்கினார். 1959ஆம் ஆண்டுமுதல் திருச்செங்கோடு நகரில் கண்ணகி விழா 60 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

வைரவிழா விருது:

டி எம் காளியண்ணனின் தன்னலமற்ற சேவையை அங்கீகரிக்கும் வகையில், தமிழக அரசும், பல்வேறு சமூக அமைப்புகளும் அவருக்கு விருதுகளை வழங்கியுள்ளன. தமிழக சட்டப்பேரவையின் 60 ஆண்டுகள் நிறைவையொட்டி, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அப்போதைய குடியரசுத்தலைவரான பிரணப் முகர்ஜியால் வைரவிழா விருது அவருக்கு வழங்கப்பட்டது.

2. கருப்புப் பூஞ்சை மருந்துக்கு வரி விலக்கு: GST கவுன்சில்

கருப்புப்பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக இறக்குமதி செய்யப்படு -ம் மருந்துக்கு வரிவிலக்கு அளிக்க GST கவுன்சில் முடிவுசெய்துள்ளது. எனினும், கரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகளுக்கான வரிவிகிதத்தில் GST கவுன்சில் மாற்றம் செய்யவில்லை. தற்போது அவற்றுக்கு 5 சதவீதம் GST வரி விதிக்கப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் GST (சரக்கு & சேவை வரி) கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

3. சிரியாவின் அதிபராக பஷார் ஆசாத் 4-வது முறையாகத் தேர்வு

சிரியாவின் அதிபராக பஷார் அல் ஆசாத் நான்காவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பஷாரின் வெற்றி குறித்து சிரிய அரசின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கம், “சிரிய அதிபர் தேர்தலில் பஷார் அல் ஆசாத் 95.1% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்” என்று பதிவிட்டுள்ளது.

4. கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு `10 இலட்சம் வைப்பு நிதி: பிரதமர் மோடி அறிவிப்பு

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பள்ளி படிப்புச் செலவை PM கேர்ஸ் நிதிமூலம் அரசே ஏற்கும் என்று தெரிவித்த பிரதமர் மோடி, அவர்களுக்கு `10 லட்சம் வைப்பு நிதியாக செலுத்தப்படும் என்றார். பிரதமராக மோடி பதவியேற்று ஏழாவது ஆண்டு விழாவையொட்டி, கரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை அவர் அறிவித்தார்.

இதுதொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின் விவரம்: கரோனா தொற்றால் பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையுமோ, சட்ட ரீதியிலான பாதுகாவலர், தத்தெடுத்தவர்கள் ஆகியோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயதாகும்போது `10 இலட்சம் வைப்பு நிதியாக அளிக்கப்படும்.

இதில் இருந்து அடுத்த ஐந்து ஆண்டுகள் அவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக கிடைக்கும். இதை அவர்களின் மேற்படிப்புக்காக பயன்படுத் -தி கொள்ளலாம். அவர்களுக்கு 23 வயதாகும்போது மொத்த தொகையை -யும் அவர்களின் படிப்பு அல்லது சொந்த தேவைக்காக எடுத்துக் கொள்ள -லாம்.

பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வீட்டருகே இருக்கும் கேந்திரிய வித்யாலயா அல்லது தனியார் பள்ளியில் சேர்க்கை அளிக்கப்படும். 11-18 வயதுடைய குழந்தைகளுக்கு சைனிக்பள்ளி, நவோதயா பள்ளி போன்ற மத்திய அரசின் உறைவிடப் பள்ளிகளில் சோ்க்கை அளிக்கப்படும்.

பாதுகாவலர் அல்லது குடும்ப மேற்பார்வையிலிருக்கும் குழந்தைகளுக்கு அருகேயுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இடமளிக்கப்படும். தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் இதுபோன்ற குழந்தைகளுக்கு கல்வி உரிமைச்சட்டத்தின்கீழ் ஏற்படும் கல்விச்செலவை மத்திய அரசு வழங்கும். அவர்களின் உயர்கல்விக்குத் தேவையான கல்விக்கடன் பெற்றுத்தந்து அதற்கான வட்டித்தொகையை மத்திய அரசே ஏற்கும்.

அவா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு உதவித் தொகைகளும் கிடைக்க வகை செய்யப்படும். இதுபோன்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் பிரதமரின் `5 இலட்சம் மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் வழங்கப்படும். 18 வயதுவரை அதற்கான ஆண்டுத்தொகையை மத்திய அரசு செலுத்தும். இவை அனைத்துக்கும் PM கேர்ஸ் குழந்தைகள் நிதித்திட்டத்தில் இருந்து நிதி வழங்கப்படும்.

___

கரோனா தொற்று பாதிப்பால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளு -க்கு `5 லட்சம் வைப்பு நிதியாக வழங்கப்படும். உடனடியாக `3 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரோனா தொற்று பாதிப்பால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தலா `5 லட்சம் வைப்புத்தொகை வழங்கப்படும். 18 வயது நிறைவடையும்போது அந்தத்தொகை வட்டியுடன் வழங்கப்படும்.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள், விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கிடம். பட்டப்படிப்பு வரையிலான கல்வி, விடுதிக்கட்டணம் உள்ளிட்ட செலவினங்களை அரசே ஏற்கும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் நிவாரண உதவிகளை வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

5. CRPF தலைவருக்கு என்ஐஏ இயக்குநராக கூடுதல் பொறுப்பு

மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) தலைமை இயக்குநர் குல்தீப் சிங்குக்கு கூடுதலாக தேசியப் புலனாய்வு அமைப்பின் (NIA) தலைமை இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: NIA தலைமை இயக்குநராக இருக்கும் Y C மோடி, மே.31ஆம் தேதியுடன் ஓய்வுறுகிறார். இதைத்தொடர்ந்து, அந்தப்பொறுப்பை CRPF தலைமை இயக்குநர் குல்தீப் சிங்குக்கு கூடுதலாகக் கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அல்லது தேசியப் புலனாய்வு அமைப்புக்கு புதிய இயக்குநர் நியமிக்கப்படும் வரை NIA இயக்குர் பதவியை குல்தீப் சிங் கூடுதலாகக் கவனித்துக் கொள்வார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. மாநிலத் தேர்தல் ஆணையராக வெ பழனிக்குமார் நியமனம்

தமிழ்நாடு மாநிலத்தேர்தல் ஆணையராக வெ பழனிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக ஆளுநரால், வெ பழனிக்குமார், இ ஆ ப (ஓய்வு) அவர்கள் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அப்பதவியில் பொறுப்பேற்கும் நாளிலிருந்து ஈராண்டு காலம் அப்பதவியினை வகிப்பார். அவ்வாறே அவ்வாணை தமிழ்நாடு சிறப்பு அரசிதழில் 29.05.2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1. What is the name of the campaign launched by India and UNICEF to engage young people address Covid crisis?

A) COVID Warrior

B) Young Warrior

C) COVID Champion

D) Tackle the Crisis

  • The Ministry of Youth Affairs, the Ministry of Health and Family Welfare, the United Nations Children’s Fund (UNICEF) and its partner organisation YuWaah, as well their partners, has launched a pan–India campaign called #YoungWarrior. It aims to engage young people across the country to address the ongoing COVID–19 crisis. The campaign includes training in tools to detect misinformation; encourage registration for vaccination and mental health support etc.

2. Sunderlal Bahuguna, who passed away recently, was a famous …………?

A) Sportsperson

B) Environmentalist

C) Businessperson

D) Economist

  • Veteran environmentalist and Padma Vibhushan awardee Sunderlal Bahuguna, recently passed away at the age of 94. He was regarded as the pioneer of the Chipko movement which was a Gandhian form of protest against deforestation by locals in the Himalayan region. The first action of the movement took place in April 1973 in a village in Uttarakhand.

3. Which country played host to the meeting of BRICS Astronomy Working Group (BAWG), held in May 2021?

A) India

B) Russia

C) South Africa

D) Brazil

  • India hosted the seventh meeting of BRICS Astronomy Working Group (BAWG) on online mode from May 19 and 20. In the BAWG meeting, the participants agreed to develop a flagship project in this area. The Working Group also recommended networking of telescopes in member countries and creating a regional data network.

4. When is the World Day for Cultural Diversity for Dialogue and Development celebrated every year?

A) May 21

B) May 22

C) May 23

D) May 24

  • The World Day for Cultural Diversity for Dialogue and Development is observed every year on May 21 to bridge the gap between different cultures. The day is an opportunity to help communities understand the value of cultural diversity and learn how to |live together in harmony. This day was created as a result of the destruction of the Buddha statues of Bamiyan in Afghanistan in 2001.

5. What is the theme of the ‘International Day for Biological Diversity, 2021’?

A) We’re part of the solution

B) Our solutions are in Nature

C) Strategic Plan on Biodiversity

D) Ecosystem Restoration Ahead

  • The International Day for Biological Diversity is observed every year on 22nd May to increase under standing and awareness about biodiversity issues on a global scale. The 2021 theme for International Day for Biological Diversity is “We’re part of the solution”.

6. Which year has marked the first official observance of the International Tea Day?

A) 1948

B) 2017

C) 2020

D) 2021

  • The 1st Observance of the International Tea Day under the theme “Harnessing benefits for all from field to cup” was held on 21 May 2020. The Day brings together the countries where tea cultivation is an important source of jobs and incomes.
  • Last year, the United Nations General Assembly has designated May 21 as International Tea Day on the basis of the proposal moved by India at the FAO Intergovernmental Group.

7. O. P. Bhardwaj, who passed away recently, was the First Dronacharya awardee Coach of which sports?

A) Table Tennis

B) Boxing

C) Weight Lifting

D) Tennis

  • O P Bhardwaj, India’s first Dronacharya awardee coach in boxing, passed away at the age of 82. The veteran coach won the Dronacharya Award in 1985. Bhardwaj was India’s national boxing coach from 1968 to 1989 and also served as a national selector. Under his coaching stint, India boxers won medals at the Asian Games, the Commonwealth Games and the South Asian Games.

8. SITA, the passenger service system provider of which Indian airlines, faced a massive cyberattack recently?

A) IndiGo

B) Go First

C) SpiceJet

D) Air India

  • Air India’s passenger service system provider SITA faced a massive cyberattack recently, leading to leak of the personal data of a certain number of passengers. SITA is based at Geneva, Switzerland. Data of 4.5 million passengers across the world has been was registered between August 11, 2011, and February 3, 2021, has been affected due to the cyberattack on SITA.

9. Geraneia mountain range, which was making news recently for massive forest–fires, is located in which country?

A) Italy

B) France

C) Greece

D) Philippines

  • One of the biggest forest fires has hit Greece, in the Geraneia mountain range. Over two hundred of firefighters have battled the forest fire west of Greece’s capital Athens. Greece has been facing violent forest fires every summer, which is fanned by dry weather, strong winds and high temperatures.

10. Global Health Summit has been co–hosted by which country and the European Commission?

A) Italy

B) Germany

C) UK

D) France

  • The Global Health Summit was co–hosted by the European Commission and Italy as part of its G20 presidency. The Rome Declaration was released at the end of the Summit, which reaffirmed leaders’ support for the Access to COVID–19 Tools (ACT) Accelerator.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!