29th & 30th November 2020 Current Affairs in Tamil & English

29th & 30th November 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. மூன்றாம் பாலினத்தவர்கள் பாலின அடையாள (gender identity) சான்றிதழை விண்ணப்பிப்பதற்காக ஒரு வலைதளத்தைத் தொடங்கியுள்ள நடுவண் அமைச்சகம் எது?

அ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

ஆ. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

இ. உள்துறை அமைச்சகம்

ஈ. சட்டம் மற்றும் நீதி அமைச்சகம்

 • மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சரான தாவர்சந்த் கெலாட், திருநங்கைகளுக்கான தேசிய இணையதளத்தையும், குஜராத் மாநிலத்தின் வதோதராவில், “Garima Greh: A Shelter Home for Transgender Persons” என்ற மூன்றாம் பாலினத்தவர்களுக்கான விடுதியையும் தொடங்கிவைத்தார்.
 • இந்தப்புதிய இணையதளத்தின் வாயிலாக மூன்றாம் பாலினத்தவர்கள், சான்றுகள் மற்றும் அடையாள அட்டைகளுக்கு டிஜிட்டல் முறையில் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் சுலபமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் அனைத்தும் உரிய நேரத்தில் சரி பார்க்கப்பட்டு காலதாமதமின்றி வழங்கப்படும். அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்களை டிஜிட்டல் முறையிலேயே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

2. ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பில் அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்டுள்ள திரைப்படம் எது?

அ. தி டிஸிபிள்

ஆ. சகுந்தலா தேவி

இ. ஜல்லிக்கட்டு

ஈ. சபாக்

 • லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய மலையாள திரைப்படமான ‘ஜல்லிக்கட்டு’, 2021ஆம் ஆண்டின் 93ஆவது ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பில் அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது, ஆஸ்கர் விருதுக்கு பட்டியலிடப்பட்ட மூன்றாவது மலையாள திரைப்படமாகும்.
 • இந்தத் திரைப்படம், எழுத்தாளர் S ஹரீஷின் ‘மாவோயிஸ்ட்’ என்ற கதையை தழுவி எடுக்கப்பட்டதாகும். தற்போது வரை, லகான், மதர் இந்தியா மற்றும் சலாம் பம்பாய்! ஆகிய மூன்று இந்திய படங்கள் மட்டுமே ஆஸ்கர் விருதை வென்றுள்ளன.

3. தொலைத்தொடர்புத்துறையின் சமீபத்திய அறிவிப்பின்படி, 2021 ஜனவரி முதல் தரைவழி தொலைபேசி இணைப்பிலிருந்து அலைபேசிக்கு அழைப்புகள் மேற்கொள்ளும்போது, கீழ்க்காணும் எந்த எண்ணை அலைபேசி எண்ணின் முன்னொட்டாக கொடுக்கவேண்டும்?

அ. 9

ஆ. 2

இ. 3

ஈ. 0

 • போதுமான எண் வளங்களை தொலைபேசி மற்றும் அலைபேசி சேவைகளுக்கு வழங்கும் விதமாக, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு தொலைத்தொடர்பு துறை புதிய முடிவொன்றை எடுத்துள்ளது.
 • இதன்படி, 2021 ஜன.15’லிருந்து தொலைபேசியிலிருந்து அலைபேசிக்கு செய்யப்படும் அழைப்புகளின் போது ‘0’ அழுத்த வேண்டும். தொடர்புகொள்ளவேண்டிய அலைபேசி எண்ணை அழுத்துவதற்கு முன்னர் தொலைபேசியில் சுழியத்தை அழுத்தி, அதன்பின்னர் அழைக்க வேண்டும்.

4. அதன் நூற்றாண்டில் `100 நினைவு நாணயம் பெற்ற இந்தியாவின் மூன்றாவது பல்கலைக்கழகம் எது?

அ. மெட்ராஸ் பல்கலைக்கழகம்

ஆ. லக்னோ பல்கலைக்கழகம்

இ. கொல்கத்தா பல்கலைக்கழகம்

ஈ. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்

 • உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஓர் அரச பல்கலைக்கழகமான லக்னோ பல்கலைக்கழகம் அதன் நூற்றாண்டில் `100 நினைவு நாணயம் பெற்ற இந்தியாவின் மூன்றாவது பல்கலைக்கழகமாக ஆனது. இதற்கு முன்பு மைசூர் பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்கள் மட்டுமே இந்தக் கெளரவத்தை பெற்றிருந்தன. பிரதமர், அப்பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பு அஞ்சல் தலை மற்றும் `100 மதிப்புடைய நினைவு நாணயத்தை வெளியிட்டார்

5. புதிதாக நிறுவப்பட்ட UMANG விருதுகளில், கீழ்க்காணும் எந்த அமைப்புக்கு பிளாட்டினம் கூட்டாண்மை விருது வழங்கப்பட்டது?

அ. ESIC

ஆ. EPFO

இ. LIC

ஈ. GIC

 • UMANG செயலி தொடங்கி மூன்று ஆண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிகழ்ச்சியில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் இரவிசங்கர் பிரசாத் புதிதாக நிறுவப்பட்ட UMANG விருதுகளை அறிமுகப்படுத்தினார். கடந்த ஆறு மாதங்களில், சராசரி பரிவர்த்தனைகளின் அடிப்படையில் நடுவண் மற்றும் மாநிலத் துறைகளுக்கு விருதுகள் வழங்கப்படும். UMANG செயலியில் 25 இலட்சத்துக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளை பதிவுசெய்ததற்காக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (EPFO) ‘பிளாட்டினம் கூட்டாண்மை விருது’ வழங்கப்பட்டுள்ளது.

6. கங்கா அதிவிரைவு நெடுஞ்சாலை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள மாநில அரசு எது?

அ. உத்தரகண்ட்

ஆ. உத்தர பிரதேசம்

இ. பீகார்

ஈ. ஜார்க்கண்ட்

 • `36,402 கோடி மதிப்புள்ள 594 கிமீ நீள கங்கா அதிவேக நெடுஞ்சாலை திட்டத்திற்கு உத்தர பிரதேச மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத்திட்டத்தில், ஹரித்வாரிலிருந்து அலகாபாத் வரை கங்கை ஆற்றின் குறுக்கே இந்த அதிவிரைவு நெடுஞ்சாலை இயங்கும். இந்த அதிவிரைவு நெடுஞ்சாலையை மாவட்ட வாரியாக சீரமைக்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. உத்தர பிரதேச மாநில அதி விரைவு நெடுஞ்சாலை தொழிற்துறை மேம்பாட்டு ஆணையம் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும்.

7. ‘கட்டுடல் இந்தியா பள்ளி வாரம்’ ஆனது, எந்த மாதத்தில்வரும் வாரத்தில் கொண்டாடப்படுகிறது?

அ. செப்டம்பர்

ஆ. அக்டோபர்

இ. நவம்பர்

ஈ. டிசம்பர்

 • பள்ளி குழந்தைகளுக்கு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதற்காக, ‘கட்டுடல் இந்தியா பள்ளி வாரம்’ திட்டமானது கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது. பள்ளிகள், தங்களை, ‘கட்டுடல் இந்தியா’ இணையதளத்தில் பதிவுசெய்த பிறகு, டிசம்பர் மாதத்தில் ஒரு வாரத்தைத் தேர்ந்தெடுக்கும். பின், விளையாட்டு அமைச்சகத்தால் பட்டியலிடப்பட்ட செயற்பாடுகளை குழந்தைகள் பின்பற்றும். கடந்த ஆண்டு, இந்த நிகழ்ச்சியில், 15000’க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றன.

8. வேளாண் அமைச்சரால் திறக்கப்பட்ட NAFED’இன் புதிய வகை உழவர் உற்பத்தி அமைப்பு எது?

அ. மூங்கில் FPO

ஆ. தேன் FPO

இ. பட்டு FPO

ஈ. இரப்பர் FPO

 • தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் தேன் உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்பை மத்திய உழவு & உழவர்கள் நலன் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கிவைத்தார். இந்த அமைப்பு, சிறு உழவர்களின் வருவாயை உயர்த்தும் லட்சியத்தை அடைய உதவும். ‘10,000 விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளின் உருவாக்கம் மற்றும் ஊக்குவிப்பு’ என்னும் திட்டத்தின்கீழ், தேன் விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

9. “சூரிய ஒளிமின்னழுத்த மின்னுற்பத்தி நிலையம் 1.5 MW” என்று பெயரிடப்பட்ட மிகப்பெரிய சூரிய மின்னுற்பத்தி திட்டம் நிறுவப்பட்டுள்ள இடம் எது?

அ. ஜம்மு & காஷ்மீர்

ஆ. லடாக்

இ. இராஜஸ்தான்

ஈ. அருணாச்சல பிரதேசம்

 • லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லேவில், அதிக உயரத்தில் அமைந்த மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தித் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் லே இந்திய வான்படை நிலையத்தில் நிறுவப்பட்டு உள்ளது. “சூரிய ஒளிமின்னழுத்த மின்னுற்பத்தி 1.5 மெகாவாட்” என்ற பெயரில் `122 கோடி மதிப்புள்ள இந்தத் திட்டம், இந்திய அரசின், ‘இந்தியாவில் தயாரிப்போம் – Make in India’ என்ற முன்னெடுப்பின்கீழ் கருத்துருவாக்கம் செய்யப்பட்டது.

10. உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி வானூர்தி நிலையம் ____ என மறுபெயரிடப்படவுள்ளது?

அ. புருஷோத்தம் ஸ்ரீ இராம் வானூர்தி நிலையம்

ஆ. ஸ்ரீ இராம் வானூர்தி நிலையம்

இ. மரியாதை புருஷோத்தம் ஸ்ரீ இராம் வானூர்தி நிலையம்

ஈ. அயோத்தி நரேஷ் ஸ்ரீ இராம் வானூர்தி நிலையம்

 • உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச மாநில அமைச்சரவை, அயோத்தி வானூர்தி நிலையத்திற்கு மரியாதை புருஷோத்தம் ஸ்ரீ இராம் வானூர்தி நிலையம் என மறுபெயரிடுவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான முன்மொழிவு, அம்மாநிலத்தின் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பின், இந்திய அரசின் உள்நாட்டு வான் போக்குவ -ரத்து அமைச்சகத்திற்கு அனுப்பப்படும்.

1. Which Union Ministry has launched a portal for transgender persons to apply gender identity certificate?

[A] Ministry of Women and Child Development

[B] Ministry of Social Justice and Empowerment

[C] Ministry of Home Affairs

[D] Ministry of Law and Justice

 • The Ministry of Social Justice and Empowerment has recently launched a portal that will enable transgender persons to apply online for certification of their self–perceived gender identity. Transgender persons can upload declaration of their gender identity, which will be the basis for their identity certificates to be issued by the district magistrate. The Minister opened ‘Garima Greh: A Shelter Home for Transgender Persons’ in Gujarat.

2. Which Film is India’s official entry for the Academy Awards?

[A] The Disciple

[B] Shakuntala Devi

[C] Jallikattu

[D] Chhapaak

 • Malayalam film Jallikattu, directed by Lijo Jose Pellissery, has been selected as India’s official entry for the 93rd Academy Awards, 2021. It is also the third Malayalam film to be shortlisted for the Oscar Award. This film is based on writer S. Hareesh’s acclaimed story titled ‘Maoist’. As of now, only three Indian films Lagaan, Mother India and Salaam Bombay! have won the coveted award.

3. As per the recent notification from Department of Telecom, calls from landline to mobile should be prefixed with which number, from January 2021?

[A] 9

[B] 2

[C] 3

[D] 0

 • The Department of Telecommunications has taken a new decision accepting the recommendation of the Telecommunications Regulatory Authority to provide adequate number of resources for telephone and mobile services. Accordingly, ‘0’ should be pressed during calls made from landline phone to mobile from Jan.15, 2021. Before dialing the mobile number to be contacted, press ‘Zero’ on the landline phone and then call.

4. Which is the third University in India to have a commemorative coin of Rs 100 issued on its centenary year?

[A] University of Lucknow

[B] University of Madras

[C] University of Kolkata

[D] Jawaharlal Nehru University

 • University of Lucknow, a public University in Uttar Pradesh, became the third University in India to have a commemorative coin of Rs 100 issued on its centenary year. Prior to this, only Mysore University and Banaras Hindu University had received the honour.
 • Prime Minister attended the celebration of Centennial Foundation Day of the University virtually and released special stamp and Rs 100 coin.

5. Which organisation was awarded the Platinum Partner Award in the newly instituted UMANG Awards?

[A] ESIC

[B] EPFO

[C] LIC

[D] GIC

 • UMANG App has completed three years since its launch. On the occasion, Minister for Electronics and Information Technology, Ravi Shankar Prasad launched the newly instituted UMANG Awards. The awards will be presented for Departments of Centre and States, based on average transactions in the past six months.
 • Employees’ Provident Fund Organisation (EPFO) has been conferred with Platinum Partner Award for registering more than 25 lakh transactions on UMANG App.

6. Which Indian state has approved the Ganga Expressway project?

[A] Uttarakhand

[B] Uttar Pradesh

[C] Bihar

[D] Jharkhand

 • The Uttar Pradesh government has approved the 594–km Ganga Expressway project worth Rs 36,402 crore. The project will have Expressway running along the river Ganga from Haridwar to Allahabad. The state Cabinet also approved a district–wise alignment of the Expressway. The Uttar Pradesh Expressways Industrial Development Authority will implement the project.

7. ‘Fit India School Week’ is celebrated in a week of which month?

[A] September

[B] October

[C] November

[D] December

 • The ‘Fit India School’ week program was launched in November last year, to inculcate the awareness of physical activity and sports to school children. The schools, after registering themselves on the ‘Fit India’ website, will select a week in the month of December. It will then make the children follow the activities listed by the Sports Ministry for the program. Last year, over 15000 schools participated in the program.

8. Which new type of Farmer Produce Organisation (FPO) of NAFED has been inaugurated by the Agricultural Minister?

[A] Bamboo FPO

[B] Honey FPO

[C] Silk FPO

[D] Rubber FPO

 • The Honey FPO Programme of National Agricultural Cooperative Marketing Federation of India Ltd. (NAFED) has been inaugurated by Minister of Agriculture and Farmers’ Welfare Narendra Singh Tomar. Beekeeping will be promoted as an occupation for unemployed women and tribal populations, through these Honey FPOs. A new Central Sector Scheme for Formation & Promotion of new 10,000 FPOs was launched and 2200 FPO clusters for 2020–21 are already allocated.

9. Where has the largest Solar Power Project at a highest altitude named as “Provision of Solar Photo Voltaic Powerplant 1.5 MW” been established?

[A] Jammu & Kashmir

[B] Ladakh

[C] Rajasthan

[D] Arunachal Pradesh

 • Leh, in the Union Territory of Ladakh gets the largest Solar Power Project at a highest altitude. The project has been established at the Leh Indian Air Force (IAF) Station. The Rs.122 crores worth Project named “Provision of Solar Photo Voltaic Powerplant 1.5 MW” was conceptualised under the ‘Make in India’ initiative of the Government of India.

10. Ayodhya Airort in Uttar Pradesh is set to be renamed as ______?

[A] Purushottam Sri Ram Airport

[B] Sri Ram Airport

[C] Maryada Purushottam Sri Ram Airport

[D] Ayodhya Naresh Sri Ram Airport

 • Uttar Pradesh Cabinet led by Chief Minister Yogi Adityanath, cleared the proposal to rename the Ayodhya airport as Maryada Purushottam Sri Ram Airport, Ayodhya, Uttar Pradesh.
 • The proposal for the same will be sent to the Ministry of Civil Aviation, Govt of India after it is passed by the state Assembly.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *