TnpscTnpsc Current Affairs

29th & 30th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

29th & 30th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 29th & 30th October 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

29th & 30th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. ‘இந்தியாவின் வேலைவாய்ப்புக் கண்ணோட்டம்’ என்ற அறிக்கையை வெளியிடுகிற நிறுவனம் எது?

அ. NITI ஆயோக்

ஆ. தேசிய புள்ளியியல் அலுவலகம்

இ. தொழிலாளர் பணியகம்

ஈ. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. தேசிய புள்ளியியல் அலுவலகம்

  • புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய புள்ளியியல் அலுவலகமானது (NSO), இந்தியாவின் வேலைவாய்ப்புக் கண்ணோட்டம் குறித்த செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை 2017 செப்டம்பர் முதல் 2022 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கியது. இது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதித் (EPF) திட்டம், ஊழியர்களின் மாநிலக் காப்பீட்டுத்திட்டம் (ESI) மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆகியவற்றின் பயனாளிகளின் எண்ணிக்கையைப் பற்றிய தகவல்களைப் பயன்படுத்துகிறது. அறிக்கையின்படி, 5,81,56,630 புதிய பயனாளிகள் EPF திட்டத்தில் இணைந்துள்ளனர்.

2. NASAஇன் சமீபத்திய திட்டமான, ‘டிராகன்பிளை’ கீழ்க்காணும் எந்தக்கோளை ஆய்வதற்காக தொடங்கப்பட்டது?

அ. செவ்வாய்

ஆ. வியாழன்

இ. சனி

ஈ. வெள்ளி

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. சனி

  • NASAஇன் டிராகன்பிளை சுற்றகவூர்தியானது 2034ஆம் ஆண்டில் சனியின் நிலவான டைட்டனில் உள்ள செல்க் கிரேட்டர் பகுதியை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. காசினி விண்கலம் அதன் பதிமூன்றாண்டுகால சனி அமைப்பு ஆராய்ச்சியின் பலனாக சில ரேடார் படங்களை அனுப்பியுள்ளது. ‘டிராகன்பிளை’ வெளிப்புற சூரிய குடும்பத்தில் உள்ள ஒரு வான்பொருளை ஆயும் உலகின் முதல் பறக்கும் எந்திரமாகவும் உள்ளது.

3. SIMBEX என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெறும் கடல்சார் இருதரப்பு பயிற்சியாகும்?

அ. இலங்கை

ஆ. ஸ்வீடன்

இ. சுவிட்சர்லாந்து

ஈ. சிங்கப்பூர்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. சிங்கப்பூர்

  • விசாகப்பட்டினத்தில் நடைபெறும் சிங்கப்பூர்–இந்தியா கடல்சார் இருதரப்பு பயிற்சியில் (SIMBEX) இந்தியா மற்றும் சிங்கப்பூர் கடற்படைகள் பங்கேற்கின்றன. இந்திய கடற்படையானது SIMBEX–2022இன் 29ஆவது பதிப்பை இரு கட்டங்களாக நடத்துகிறது. விசாகப்பட்டினத்தில் துறைமுகம் கட்டமும் வங்காள விரிகுடாவில் கடல் கட்டமும் என இரு கட்டங்களாக நடைபெறும். கடந்த 1994இல் தொடங்கிய SIMBEX பயிற்சிகள் ஆரம்பத்தில், ‘லயன் கிங்’ என்று அழைக்கப்பட்டது.

4. இந்திய வான்படைக்கு போக்குவரத்து விமானம் தயாரிக்கும் வசதி அமைக்கப்படவுள்ள நகரம் எது?

அ. ஹைதராபாத்

ஆ. வதோதரா

இ. காந்தி நகரம்

ஈ. பெங்களூரு

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. வதோதரா

  • வதோதராவில் இந்திய வான்படைக்கு போக்குவரத்து விமானங்கள் தயாரிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஏர்பஸ் டிஃபென்ஸ் மற்றும் ஸ்பேஸ் எஸ்ஏ நிறுவனத்திடமிருந்து வாங்கப்படும் 56 C–295MW போக்குவரத்து விமானங்களில் 40 வதோதராவில் உள்ள புதிய வசதியில் தயாரிக்கப்படும். C–295 விமானம் ஐரோப்பாவிற்கு வெளியே தயாரிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். அவை இந்தியாவில் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) மற்றும் TASL தலைமையிலான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ஆகியவற்றின் டாடா கூட்டமைப்புமூலம் தயாரிக்கப்படும்.

5. ஏவியேஷன் அனலிட்டிக்ஸ் நிறுவனமான, ‘Official Airline Guide (OAG)’இன்படி, (2022 அக்டோபர் நிலவரப்படி) உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையம் எது?

அ. ஹார்ட்ஸ்ஃபீல்ட்–ஜாக்சன் அட்லாண்டா பன்னாட்டு வானூர்தி நிலையம்

ஆ. துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்

இ. டோக்கியோ பன்னாட்டு வானூர்தி நிலையம்

ஈ. இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம், தில்லி

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. ஹார்ட்ஸ்ஃபீல்ட்–ஜாக்சன் அட்லாண்டா பன்னாட்டு வானூர்தி நிலையம்

  • ஏவியேஷன் அனலிட்டிக்ஸ் நிறுவனமான, ‘Official Airline Guide (OAG)’இன் அறிக்கையின்படி, தில்லியில் உள்ள இந்திராகாந்தி பன்னாட்டு வானூர்தி நிலையமானது இருக்கை திறன் மற்றும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வானூர்திகளின் வருகைப்போக்கு ஆகியவற்றின் அடிப்படையில், பத்தாவது பரபரப்பான விமான நிலையமாகும். 2019 அக்டோபரில் அது 14ஆவது இடத்தில் இருந்து. 2022 அக்டோபர் நிலவரப்படி உலகின் பரபரப்பான விமான நிலையம் ஹார்ட்ஸ்ஃபீல்ட்–ஜாக்சன் அட்லாண்டா பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். அது 47,47,367 பயணிகளுக்கு சேவை செய்துள்ளது. துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் இரண்டாமிடத்தையும், டோக்கியோ பன்னாட்டு வானூர்தி நிலையம் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளது.

6. தொலைதூர கிராமங்களின் வளர்ச்சிக்காக, ‘கிராம சேவை’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய பொதுத்துறை வங்கி எது?

அ. கனரா வங்கி

ஆ. பாரத வங்கி

இ. பஞ்சாப் தேசிய வங்கி

ஈ. பரோடா வங்கி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. பாரத வங்கி

  • காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாரத வங்கி 4ஆவது கட்ட, ‘SBI கிராம சேவை’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தமிழ்நாடு, ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உள்ள முன்னேற விழையும் மாவட்டங்களின் முப்பது தொலைதூர கிராமங்களை தத்தெடுப்பதாக SBI அறிவித்துள்ளது. கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டமைப்புபோன்ற துறைகளில் வங்கி தீவிரமாக ஈடுபடவுள்ளது.

7. தனது மாநிலத்தின் காவல்துறைக்காக, ‘சத்ய நிஷ்தா’ என்ற செயலியை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஹிமாச்சல பிரதேசம்

இ. அஸ்ஸாம்

ஈ. கர்நாடகா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஹிமாச்சல பிரதேசம்

  • ஹிமாச்சல பிரதேச மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர், மாநிலத்தின் காவல்துறைக்கான, ‘சத்ய நிஷ்தா’ என்ற செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார். இந்தச் செயலியானது, குற்றவாளிகளின் தரவுத்தளத்தை தயார்செய்யவும், மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களின்கீழ் நடைபெறும் பல்வேறு குற்றங்களை ஆயவும் காவல் துறைக்கு உதவும். இது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வெளிநாட்டவர்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் பற்றிய தகவல்களின் தரவுத்தளமாக விளங்கும்.

8. 2022 – உலக ஆசிரியர் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Teaching Importance of Sustainability

ஆ. Teaching Equality

இ. The change of education begins with teachers

ஈ. Leaving No one Behind

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. The change of education begins with teachers

  • உலகம் முழுவதும் அக்.5 அன்று ‘உலக ஆசிரியர் நாள்’ கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்களின் பங்களிப்புகளுக்கு நன்றிபாராட்டும் வகையில் இது அனுசரிக்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டு உலக ஆசிரியர் தினத்தின் கருப்பொருள் “The change of education begins with teachers” என்பதாகும். 1994இல், UNESCO அக்.5ஆம் தேதியை உலக ஆசிரியர் நாளாக அறிவித்தது. கடந்த 1966ஆம் ஆண்டு இதே நாளில், ஆசிரியர்களின் நிலைகுறித்த UNESCO பரிந்துரையை பன்னாட்டு அரசுகளுக்கிடையேயான கூட்டம் ஏற்றுக்கொண்டது.

9. 2026 – காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளை நடத்தும் நாடு எது?

அ. இந்தியா

ஆ. இலங்கை

இ. ஆஸ்திரேலியா

ஈ. ஐக்கிய அரபு அமீரகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ஆஸ்திரேலியா

  • காமன்வெல்த் விளையாட்டுக் கூட்டமைப்பு (CGF) மற்றும் காமன்வெல்த் விளையாட்டு ஆஸ்திரேலியா ஆகியவை விக்டோரியா 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான விளையாட்டுத் திட்டத்தை வெளியிட்டன. இது 20 விளையாட்டுகளையும் 26 துறைகளையும் கொண்டுள்ளது; இதில் ஒன்பது முழுமையாக ஒருங்கிணைந்த பாரா விளையாட்டுகளும் அடங்கும். பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியிலிருந்து சர்ச்சைக்குரிய வகையில் கைவிடப்பட்ட துப்பாக்கி சுடுதல், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக இந்தியாவின் வலிமையான விளையாட்டாக துப்பாக்கி சுடுதல் உள்ளது.

10. 2021–22ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய சீனி உற்பத்தியாளராகவும் நுகர்வோராகவும் இருந்த நாடு எது?

அ. இந்தியா

ஆ. சீனா

இ. ஈரான்

ஈ. இஸ்ரேல்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. இந்தியா

  • 2021–22ஆம் ஆண்டில், உலகின் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தியாளராகவும் நுகர்வோராகவும் மற்றும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய சர்க்கரை ஏற்றுமதியாளராகவும் இந்தியா உள்ளது. செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த 2021–22 சந்தைப்படுத்தல் ஆண்டில் இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 57% உயர்ந்து 109.8 இலட்சம் டன்னாக இருந்தது. இதன்மூலம் நாட்டிற்கு சுமார் `40,000 கோடி மதிப்பிலான அந்நிய செலாவணி வரத்து ஏற்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 29-10-2022 – உலக பக்கவாத நாள்.

2. 30-10-2022 – ‘பசும்பொன்’ முத்துராமலிங்கத் தேவரின் 115ஆம் பிறந்தநாள்.

3. கிராம சபையை கண்காணிக்க புதிய மென்பொருள்

கிராமசபைக் கூட்ட நிகழ்வுகளைக் கண்காணிக்க, ‘நம்ம கிராம சபை’ என்ற பெயரில் மென்பொருள் உருவாக்கப்பட் -டுள்ளது. இதுதொடர்பாக ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஒவ்வோர் ஆண்டும் நவ.1-ஆம் தேதி உள்ளாட்சிகள் தினமாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, வரும் நவ.1 உள்ளாட்சிகள் நாள் கொண்டாடப்பட உள்ளது. இந்தத் தினத்தையொட்டி, கிராமசபைக் கூட்டங்கள், கண்காட்சிகள் போன்ற நிகழ்வுகள் நடத்தப்படும். மேலும், சிறந்த ஊழியா்களை அங்கீகரிப்பது, கலந்துரையாடல்கள் போன்ற நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

கண்காணிப்பு: கிராமசபைக் கூட்ட நிகழ்வுகளை உடனுக்குடன் கண்காணிக்கும் வகையில், ‘நம்ம கிராம சபை’ என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி கணினி, கைப்பேசி ஆகியவற்றின் வழியே கிராமசபை நிகழ்வுகளை கண்காணிக்கலாம். உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் ஊரகப்பகுதி மக்கள் உள்பட அனைவரும் கலந்துகொண்டு விவாதத்தில் பங்கேற்க வேண்டுமென அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

29th & 30th October 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which institution releases the ‘Employment Outlook of India’ Report?

A. NITI Aayog

B. National Statistical Office

C. Labour Bureau

D. Employees Provident Fund Organisation

Answer & Explanation

Answer: B. National Statistical Office

  • The National Statistical Office (NSO), Ministry of Statistics and Programme Implementation has released the press note on Employment Outlook of India. The report covers the period from September 2017 to August 2022. It uses information on number of subscribers of Employees’ Provident Fund (EPF) Scheme, the Employees’ State Insurance (ESI) Scheme and the National Pension Scheme (NPS). As per the report, 5,81,56,630 new subscribers joined the EPF Scheme.

2. ‘Dragonfly’, the recent project of NASA, was launched to explore which planet?

A. Mars

B. Jupiter

C. Saturn

D. Venus

Answer & Explanation

Answer: C. Saturn

  • NASA’s Dragonfly rotorcraft is scheduled to reach the Selk Crater region on Saturn’s moon Titan in the year 2034. Cassini spacecraft has sent some radar images of the area during its 13 years of exploring the Saturn system. Dragonfly is also the first flying machine for a world in the outer solar system.

3. SIMBEX is a Maritime Bilateral Exercise held between India and which country?

A. Sri Lanka

B. Sweden

C. Switzerland

D. Singapore

Answer & Explanation

Answer: D. Singapore

  • The Navies of India and Singapore are participating in the Singapore–India Maritime Bilateral Exercise (SIMBEX) at Visakhapatnam. The Indian Navy is hosting the 29th edition of SIMBEX–2022 in two phases – Harbour Phase at Visakhapatnam followed by the Sea Phase in Bay of Bengal. SIMBEX series of exercises began in 1994 and were initially known as Exercise Lion King.

4. A transport aircraft manufacturing facility for the Indian Air Force is set to come up in which city?

A. Hyderabad

B. Vadodara

C. Gandhi Nagar

D. Bengaluru

Answer & Explanation

Answer: B. Vadodara

  • The government announced that a transport aircraft manufacturing facility for the Indian Air Force will come up in Vadodara. 40 of the 56 C–295MW transport aircraft being procured from Airbus Defence and Space SA will be manufactured at the new facility in Vadodara.
  • This is for the first time, the C–295 aircraft will be manufactured outside of Europe. They will be manufactured in India by Tata consortium of Tata Advanced Systems Limited (TASL) and Tata Consultancy Services (TCS) led by TASL.

5. Which is the busiest airport in the world (as of October 2022), as per the Aviation analytics company ‘Official Airline Guide (OAG)’?

A. Hartsfield–Jackson Atlanta International Airport

B. Dubai International Airport

C. Tokyo International Airport

D. Indira Gandhi International Airport, Delhi

Answer & Explanation

Answer: A. Hartsfield–Jackson Atlanta International Airport

  • As per the report of the Aviation analytics company Official Airline Guide (OAG), Indira Gandhi International Airport, Delhi is the 10th busiest airport in the world in terms of seat capacity and frequency of domestic and international flights as of October 2022. Delhi airport improved from its 14th position in October 2019. The busiest airport in the world as of October 2022 is Hartsfield–Jackson Atlanta International Airport which serviced 47,47,367 seats. Dubai International is second, followed by Tokyo International Airport.

6. Which public sector bank launched ‘Gram Seva’ program for development of remote villages?

A. Canara Bank

B. State Bank of India

C. Punjab National Bank

D. Bank of Baroda

Answer & Explanation

Answer: B. State Bank of India

  • On the occasion of Gandhi Jayanti, the State Bank of India launched the 4th phase of the ‘SBI Gram Seva’ program. The bank announced that it will adopt 30 remote villages across Aspirational Districts in Haryana, Gujarat, Maharashtra, Punjab, Tamil Nadu, and West Bengal. The bank would take active intervention in areas like education, healthcare, livelihoods, and infrastructure.

7. Which state launched the ‘Satya Nishtha’ application for the state police?

A. Tamil Nadu

B. Himachal Pradesh

C. Assam

D. Karnataka

Answer & Explanation

Answer: B. Himachal Pradesh

  • Himachal Pradesh Chief Minister Jai Ram Thakur launched the ‘Satya Nishtha’ application for the state police. The application will help police prepare a database of criminals and study various offences that take place under different police stations in the district. It is a database of information on migrant labourers, foreigners and suspicious persons.

8. What is the theme of the ‘World Teachers Day 2022’?

A. Teaching Importance of Sustainability

B. Teaching Equality

C. The change of education begins with teachers

D. Leaving No one Behind

Answer & Explanation

Answer: C. The change of education begins with teachers

  • October 5 is celebrated as ‘World Teachers Day’ around the world. It is observed to express gratitude for the contributions of teachers. The theme for World Teachers’ Day 2022 is “The change of education begins with teachers”. In 1994, UNESCO proclaimed October 5 as World Teachers’ Day. On this day in 1966, the intergovernmental meeting accepted the UNESCO Recommendation on the Status of Teachers.

9. Which country is the host of the Commonwealth Games 2026?

A. India

B. Sri Lanka

C. Australia

D. UAE

Answer & Explanation

Answer: C. Australia

  • The Commonwealth Games Federation (CGF) and the Commonwealth Games Australia unveiled the sport programme for the Victoria 2026 CWG. It features 20 sports and 26 disciplines, including nine fully integrated para sports. Shooting, which was controversially dropped from the Birmingham CWG, is included in the 2026 edition in Victoria, Australia. Shooting has been the strongest sport of India recently.

10. Which country is the world’s largest producer and consumer of sugar in 2021–22?

A. India

B. China

C. Iran

D. Israel

Answer & Explanation

Answer: A. India

  • In 2021–22, India is the world’s largest producer and consumer of sugar as well as the world’s second largest exporter of sugar. India’s sugar exports rose 57 per cent to 109.8 lakh tonnes during 2021–22 marketing year which ended September. This resulted in foreign currency inflow worth about Rs 40,000 crore into the country.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!