TnpscTnpsc Current Affairs

29th & 30th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

29th & 30th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 29th & 30th September 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

29th & 30th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. எந்த மாநிலத்திற்கு, 2022ஆம் ஆண்டுக்கான, ‘ஆயுஷ்மான் உத்கிரிஷ்டா விருது’ வழங்கப்பட்டுள்ளது?

அ. ஆந்திர பிரதேசம்

ஆ. உத்தர பிரதேசம்

இ. கர்நாடகா

ஈ. ஹிமாச்சல பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. உத்தர பிரதேசம்

  • சுகாதார வசதி பதிவேட்டில் பல்வேறு சுகாதார வசதிகளை சேர்த்ததற்காக உத்தர பிரதேச மாநிலத்திற்கு 2022ஆம் ஆண்டுக்கான, ‘ஆயுஷ்மான் உத்கிரிஷ்டா விருது’ வழங்கப்பட்டுள்ளது. தேசிய சுகாதார வசதி பதிவேட்டில் 28,728 சுகாதார வசதிகள் சேர்க்கப்பட்டு நாட்டிலேயே சிறப்பாக செயல்படும் மாநிலமாக அது திகழ்கிறது. கிட்டத்தட்ட 2 கோடி ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்குகளுடன் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கை (ABHA) உருவாக்குவதில் இது இரண்டாவது சிறந்த மாநிலமாக விளங்குகிறது.

2. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் (HAL) ஒருங்கிணைந்த கிரையோஜெனிக் எஞ்சின் உற்பத்தி வசதி திறக்கப்பட்ட நகரம் எது?

அ. திருவனந்தபுரம்

ஆ. பெங்களூரு

இ. சிம்லா

ஈ. ஹைதராபாத்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. பெங்களூரு

  • பெங்களூருவில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் (HAL) ஒருங்கிணைந்த கிரையோஜெனிக் எஞ்சின் உற்பத்தி வசதியை இந்தியக்குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைத்தார். இந்திய ஏவுகலங்களுக்கான கிரையோஜெனிக் (CE20) மற்றும் செமி கிரையோஜெனிக் (SE2000) எஞ்சின்களை தயாரிப்பதற்கான எழுபதுக்கும் மேற்பட்ட உயர்தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் சோதனை வசதிகள் இந்த வசதியில் இடம்பெற்றுள்ளன. கடந்த 2013ஆம் ஆண்டில், HALஇல் கிரையோஜெனிக் எஞ்சின் தொகுதிகளை உற்பத்தி செய்வதற்கான வசதியை அமைப்பதற்காக ISROஉடன் HAL ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

3. மாநிலத்தின், ‘பழங்குடியினரின் கலைக்களஞ்சியத்தை’ வெளியிட்டுள்ள மாநிலம் எது?

அ. மத்திய பிரதேசம்

ஆ. ஜார்கண்ட்

இ. ஒடிஸா

ஈ. மேற்கு வங்கம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ஒடிஸா

  • ஒடிஸா மாநிலத்தில், ‘பழங்குடியினரின் கலைக்களஞ்சியத்தை’ ஒடிஸா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் வெளியிட்டார். இந்தக் கலைக்களஞ்சியத்தின் ஐந்து தொகுதிகள், பட்டியலினத்தோர் (SC) மற்றும் பழங்குடியினர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCSTRTI) மற்றும் ஒடிஸா மாநில பழங்குடி அருங்காட்சியகம் ஆகியவற்றால் வெளியிடப்பட்டது. 3800 பக்கங்கள் மற்றும் 418 ஆய்வுக்கட்டுரைகளைக் கொண்ட இத்திருத்தப்பட்ட தொகுதிகளில், அனைத்து 62 பழங்குடி சமூகங்கள் மற்றும் 13 குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களைப்பற்றி உள்ளது. இந்த நூல் கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு ஒரு களஞ்சியமாக இருக்கும்.

4. அண்மையில், 2022 டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்ட, ‘PMGKAY’ என்றால் என்ன?

அ. உடல்நலக் காப்பீட்டுத் திட்டம்

ஆ. இலவச உணவு தானியங்கள் திட்டம்

இ. MSME மானியத் திட்டம்

ஈ. இலவச LPG எரிவாயு உருளை திட்டம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இலவச உணவு தானியங்கள் திட்டம்

  • வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள மக்களுக்கான (BPL) இலவச உணவு–தானியத் திட்டத்தை 2022 டிசம்பர்.31 வரை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க நடுவணரசு முடிவுசெய்துள்ளது. இது பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனாவின் (PMGKAY) ஏழாம் கட்டமாகும். இதனால் நடுவணரசுக்கு கூடுதலாக `44,762 கோடி செலவாகும்.

5. இந்தியாவின் முதல் எண்ம கல்வியறிவுபெற்ற பஞ்சாயத்தான, ‘புல்லம்பாறை’ அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளம்

இ. தெலுங்கானா

ஈ. பஞ்சாப்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கேரளம்

  • திருவனந்தபுரத்தில் உள்ள ‘புல்லம்பாறை’ என்னும் சிற்றூர் கேரளாவின் முதல் டிஜிட்டல் கல்வியறிவுபெற்ற கிராமப் பஞ்சாயத்தாக ஆனது. புல்லம்பாறையில் உள்ளோர் அனைவரும் முழு டிஜிட்டல் கல்வியறிவைப்பெற்றதை அடுத்து டிஜிட்டல் கல்வியறிவுபெற்ற நாட்டின் முதல் கிராமப்பஞ்சாயத்தாக அது ஆனது. அப்பஞ்சாயத்தில் உள்ள சமூகத்தின் மிகவும் பின்தங்கிய பிரிவினருக்கு டிஜிட்டல் கல்வியை வழங்குவதற்காக, ‘டிஜி புல்லம்பாறை’ திட்டம் 2021 ஆக.15 அன்று தொடங்கப்பட்டது. கல்லூரிகள், குடும்பஸ்ரீ பிரிவுகள் மற்றும் பிற சுயவுதவி குழுக்களின் தன்னார்வலர்களின் உதவியுடன் இது நடத்தப்பட்டது.

6. 2022இல் வரும், உலக தற்கொலைத் தடுப்பு நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. செப்டம்பர்.05

ஆ. செப்டம்பர்.10

இ. செப்டம்பர்.15

ஈ. செப்டம்பர்.20

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. செப்டம்பர்.10

  • உலக தற்கொலை தடுப்பு நாள் செப்.10 அன்று அனுசரிக்கப்படுகிறது. உலக நலவாழ்வு அமைப்பின் கூற்றுப்படி, ஓர் ஆண்டுக்கு 703,000 பேர் உலகம் முழுவதும் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான உலக தற்கொலைத் தடுப்பு நாளுக்கான முப்பெரும் கருப்பொருளாக, “Creating Hope through Action” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள், அரசு மற்றும் பொதுமக்களிடையே தற்கொலைகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.

7. 2022ஆம் ஆண்டில் இரண்டாவது இந்தியா–ஜப்பான் 2+2 பேச்சுவார்த்தையை நடத்தும் நகரம் எது?

அ. புது தில்லி

ஆ. டோக்கியோ

இ. காந்தி நகர்

ஈ. ஒசாகா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. டோக்கியோ

  • இரண்டாவது இந்தியா–ஜப்பான் 2+2 பேச்சுவார்த்தையானது அண்மையில் டோக்கியோவில் நடைபெற்றது. இதில், பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் Dr ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இரு நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்கும் அதேவேளையில், இந்தியா–ஜப்பான் உறவுகளை மிகவும் வலுவானதாக மாற்றுவதற்கான தங்கள் தீர்மானத்தை இருதரப்பும் மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டன.

8. ‘Prevention and Management of Osteoarthritis’ என்பது செப்.8 அன்று கடைப்பிடிக்கப்பட்ட எந்த நாளின் கருப் பொருளாகும்?

அ. உலக ஆயுஷ் நாள்

ஆ. உலக பிசியோதெரபி நாள்

இ. உலக எலும்புநல நாள்

ஈ. உலக எலும்பியல் நாள்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. உலக பிசியோதெரபி நாள்

  • 1996ஆம் ஆண்டு செப்.8ஆம் தேதி முதன்முதலாக உலக பிசியோதெரபி நாள் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1951ஆம் ஆண்டு இந்நாளில் உலக பிசியோதெரபி நிறுவப்பட்டது. இந்த நாள் பிசியோதெரபி சமூகங்களின் ஒற்றுமை மற்றும் கூட்டாண்மையை மதிக்கிறது. “Prevention & Management of Osteoarthritis” என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

9. மனித உரிமைகளுக்கான ஐநா உயராணையராக நியமிக்கப்பட்ட வோல்கர் டர்க் சார்ந்த நாடு எது?

அ. துருக்கி

ஆ. ஆஸ்திரியா

இ. அமெரிக்கா

ஈ. ஐக்கிய இராச்சியம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. அமெரிக்கா

  • ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகளுக்கான புதிய உயராணையராக ஆஸ்திரிய தூதர் வோல்கர் டர்க் நியமிக்கப்படுவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஒப்புதல் அளித்துள்ளது. அவர் முன்னாள் உயர் ஆணையர் மைக்கேல் பச்லெட்டுக்குப் பதிலாக இப்பதவிக்கு வந்துள்ளார். வோல்கர் டர்க், மலேசியா, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, குவைத் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஐநா அகதிகள் அமைப்பில் பணியாற்றியுள்ளார்.

10. மினிட்மேன் III என்ற கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்த நாடு எது?

அ. ஜப்பான்

ஆ. அமெரிக்கா

இ. இஸ்ரேல்

ஈ. பிரான்ஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. அமெரிக்கா

  • கலிபோர்னியாவில் அமைந்துள்ள வாண்டன்பெர்க் விண்வெளிப்படைத்தளத்திலிருந்து அமெரிக்க வான்படையின் ஆயுதமேந்தாத, ‘மினிட்மேன் III’ என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைப் பரிசோதனை செய்தது. ICBM சோதனை ஏவுதல் திட்டத்தின் நோக்கம் அமெரிக்க அணுவாற்றல் படைகளின் தயார்நிலையை நிரூபிப்பதாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. முப்படைகளின் தலைமைத் தளபதியாக அனில் செளஹான் நியமனம்

முப்படைகளின் தலைமைத்தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் அனில் சௌஹான் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், நாட்டின் இராணுவ விவகாரத்துறை செயலாளராகவும் அனில் சௌஹான் பொறுப்பு வகிப்பார் எனவும் நடுவணரசு குறிப்பிட்டுள்ளது.

இந்திய இராணுவத்தின் கிழக்குப் பிரிவுக்கு தளபதியாக இருந்த அனுபவம்கொண்ட அனில் சௌஹான், ஜம்மு -காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் பதற்றமான சூழல்களில் திறம்பட பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சுமார் 40 ஆண்டுகள் வரை இராணுவத்தில் பணியாற்றி லெப்டினென்ட் ஜெனரலாக அனில் சௌஹான் ஓய்வுபெற்றவர். முப்படைகளின் தலைமைத் தளபதியாக இருந்த பிபின் இராவத் நீலகிரியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து தற்போது புதிய தலைமைத்தளபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

2. புதிய அட்டர்னி ஜெனரல் ஆர் வெங்கடரமணி

இந்தியாவின் புதிய அட்டர்னி ஜெனரலாக மூத்த வழக்குரைஞர் ஆர் வெங்கடரமணி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய அட்டர்னி ஜெனரல் கே கே வேணுகோபாலின் பதவிக்காலம் வரும் 30 அன்று நிறைவடையவுள்ள நிலையில், புதிய அட்டர்னி ஜெனரலாக ஆர் வெங்கடரமணியை நியமித்து குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டார். இவர் பதவியேற்கும் நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்கு நடுவணரசின் அட்டர்னி ஜெனரலாக பதவி வகிப்பார்.

3. இளம் வல்லுநர்களுக்கான புத்தாய்வுத் திட்டம்: முதல்வர் தொடக்கிவைத்தார்

இளம் வல்லுநர்களுக்கான ஈராண்டு புத்தாய்வுத்திட்டத்தினை முதல்வர் முக ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு தனது அனைத்துத் துறைகளிலும் சிறந்த நல்லாட்சியை வழங்கிட பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியின் ஒருபகுதியாக, தமிழ்நாடு அரசு ஈராண்டுகால, “தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத்திட்டத்தை (2022-2024)” அறிமுகப்படுத்தியுள்ளது. திறன்மிகு இளைஞர்களின் ஆற்றலையும், திறமையையும் பயன்படுத்தி, நிர்வாகச்செயல்முறைகளின் செயல்திறனை மேம்படுத்தி, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் சேவை வழங்கலை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இப்புத்தாய்வுத் திட்டத்தின்கீழ், தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் கலந்துகொள்ளும் இளம் வல்லுநர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக `65,000/- மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை மேற்கொள்வதற்கான பயணச்செலவு, கைப்பேசி மற்றும் தரவு பயன்பாடுபோன்ற செலவினத்திற்காக மாதம் `10,000/- கூடுதல் தொகையாக வழங்கப்படும்.

ஈராண்டு புத்தாய்வுத் திட்டத்தை திருப்திகரமாக நிறைவுசெய்யும் வல்லுநர்களுக்கு, பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனம் பொதுக்கொள்கை மற்றும் மேலாண்மையில் முதுகலை சான்றிதழ் (Post Graduate Certificate in Public Policy and Management) வழங்கும். இதுதவிர, ஏற்கனவே முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச தகுதித்தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தின்மூலம் முனைவர் பட்டப்படிப்பு மேற்கொள்வதற்கு வாய்ப்பும் வழங்கப்படும்.

4. சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு

நடப்பு 2022-23ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத்திட்டம் உள்ளிட்ட சில சிறுசேமிப்புத்திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை நடுவணரசு உயர்த்தியுள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் தொடர்பான விவரங்களை நடுவண் நிதியமைச்சகம் வெளியிட்டது.

அதன்படி, சில சிறுசேமிப்புத்திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத்திட்டத்துக்குரிய வட்டி விகிதம் 7.4 சதவீதத்தில் இருந்து 7.6 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் நிலைய 3 ஆண்டுகால வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் 5.5 சதவீதத்திலிருந்து 5.8 சதவீதமாகவும், ஈராண்டு கால வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் 5.5 சதவீதத்திலிருந்து 5.7 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

வருங்கால வைப்புநிதித்திட்டம் (7.1%), தேசிய சேமிப்புத்திட்டம் (6.8%), ஓராண்டு கால வைப்புத்தொகைத்திட்டம் (5.5 சதவீதம்), பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத்திட்டம் (7.6 சதவீதம்) ஆகியவற்றுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

கடன் இலக்கு குறைப்பு: நடுவணரசின் வரி வருவாய் அதிகரித்துள்ள நிலையில், நடப்பு நிதியாண்டில் கடன் வாங்குவதற்கான இலக்கைச் சுமார் `10,000 கோடி வரை அரசு குறைத்துள்ளது. அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரையிலான 2ஆவது அரையாண்டில் சந்தையில் இருந்து `5.92 லட்சம் கோடி கடன்பெறவுள்ளதாக நடுவணரசு அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக `14.31 இலட்சம் கோடி கடன்பெறவுள்ளதாக பட்ஜெட்டில் நடுவணரசு அறிவித்திருந்தது. அதை தற்போது `14.21 இலட்சம் கோடியாக நடுவணரசு குறைத்துள்ளது.

கடந்த 17ஆம் தேதி வரை நடுவணரசின் நேரடி வரி வருவாய் 30 சதவீதம் அதிகரித்து `8.36 இலட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

29th & 30th September 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which state has been awarded ‘Ayushmann Utkrishta award 2022’?

A. Andhra Pradesh

B. Uttar Pradesh

C. Karnataka

D. Himachal Pradesh

Answer & Explanation

Answer: B. Uttar Pradesh

  • Uttar Pradesh has been awarded Ayushmann Utkrishta award 2022 for adding various health facilities to health facility register. It is the best performing state in the country with 28728 Health facilities added to National health facility register. It is also the second–best State in creating Ayushmann Bharat health account (ABHA) with almost 2 crores ABH Accounts.

2. The Integrated Cryogenic Engine Manufacturing Facility of Hindustan Aeronautics Limited (HAL) was inaugurated in which city?

A. Thiruvananthapuram

B. Bengaluru

C. Shimla

D. Hyderabad

Answer & Explanation

Answer: B. Bengaluru

  • President of India Droupadi Murmu inaugurated the Integrated Cryogenic Engine Manufacturing Facility of Hindustan Aeronautics Limited (HAL) in Bengaluru. The facility houses over 70 hi–tech equipment and testing facilities for manufacturing cryogenic (CE20) and semi–cryogenic (SE2000) engines of Indian rockets.  In 2013, HAL signed an MoU with ISRO for setting up the facility for manufacturing cryogenic engine modules at HAL.

3. Which state has released the ‘Encyclopedia of Tribes’ of the state?

A. Madhya Pradesh

B. Jharkhand

C. Odisha

D. West Bengal

Answer & Explanation

Answer: C. Odisha

  • Odisha Chief Minister Naveen Patnaik released the ‘Encyclopedia of Tribes in Odisha’. The five volumes of the encyclopedia were published by Scheduled Castes and Scheduled Tribes Research and Training Institute (SCSTRTI) and Odisha State Tribal Museum. The edited volumes contain 3800 pages and 418 research articles covering all 62 tribal communities and 13 particularly vulnerable tribal groups. The book will be a repository for academicians, researchers and policy makers.

4. What is PMGKAY, which was recently extended till December 2022?

A. Health Insurance Scheme

B. Free foodgrains Scheme

C. MSME Subsidy Scheme

D. Free LPG Cylinder Scheme

Answer & Explanation

Answer: B. Free foodgrains Scheme

  • The Central Government has decided to extend the free food–grain scheme for those below the poverty line (BPL), for another three months till December 31, 2022. This will be the seventh phase of the Pradhan Mantri Garib Kalyan Anna Yojana (PMGKAY) which will cost the Centre an additional Rs 44,762 crore.

5. Pullampara, India’s is the first digitally literate panchayat, is located in which state?

A. Tamil Nadu

B. Kerala

C. Telangana

D. Punjab

Answer & Explanation

Answer: B. Kerala

  • Pullampara in Thiruvananthapuram has become the first digitally literate gram panchayat in Kerala. Pullampara became the first panchayat in the country to attain full digital literacy among its residents. The ‘Digi Pullampara’ project was launched on August 15, 2021 to impart digital education to the most underprivileged sections of society in the panchayat. It was run with the assistance of volunteers from colleges, Kudumbashree units and other self–help groups.

6. What is the theme of the ‘World Suicide Prevention Day’ 2022?

A. September.05

B. September.10

C. September.15

D. September.20

Answer & Explanation

Answer: B. September.10

  • World Suicide Prevention Day is observed on September 10. According to the World Health Organization, an estimated 703,000 people a year take their life around the world. ‘Creating Hope through Action’ has been the triennial theme for World Suicide Prevention Day from 2021 to 2023. It aims to raise awareness on preventing suicides among organisations, the government and the public.

7. Which city is the host of second India–Japan 2+2 Dialogue in 2022?

A. New Delhi

B. Tokyo

C. Gandhi Nagar

D. Osaka

Answer & Explanation

Answer: B. Tokyo

  • The second India–Japan 2+2 Dialogue was recently in Tokyo. It was attended by Defence Minister Rajnath Singh and External Affairs Minister Dr S Jaishankar along with their counterparts. Both sides re–affirmed their resolve to make India–Japan ties more robust and complementary, while respecting sovereignty and territorial integrity of nations.

8. ‘Prevention and Management of Osteoarthritis’ is the theme of which day observed on September 8?

A. World Ayush Day

B. World Physiotherapy Day

C. World Bone Health Day

D. World Orthopaedic Day

Answer & Explanation

Answer: B. World Physiotherapy Day

  • September 8 is observed as World Physiotherapy Day in 1996. World Physiotherapy was established on this day in 1951. The day honours the togetherness and unity of the physiotherapy communities. This was celebrated on the theme of ‘Prevention and Management of Osteoarthritis’.

9. Volker Turk, who was appointed as the UN High Commissioner for Human Rights, is from which country?

A. Turkey

B. Austria

C. USA

D. UK

Answer & Explanation

Answer: B. Austria

  • The United Nations General Assembly has approved the appointment of Austrian diplomat Volker Turk as the new UN High Commissioner for Human Rights. He replaces former Commissioner Michelle Bachelet. Volker Turk had previously served with the UN refugee agency in various countries including Malaysia, the Democratic Republic of Congo, and Kuwait.

10. Which country tested the Minuteman III intercontinental ballistic missile?

A. Japan

B. USA

C. Israel

D. France

Answer & Explanation

Answer: B. USA

  • The US Air Force launched an unarmed Minuteman III intercontinental ballistic missile test at Vandenberg Space Force Base in California. The purpose of the ICBM test launch program is to demonstrate the readiness of US nuclear forces.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!