TnpscTnpsc Current Affairs

29th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

29th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 29th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘முக்கியமந்திரி பார்க் சௌந்தர்யகரன்’ திட்டத்தைச் செயல்படுத்துகிற இந்திய மாநிலம்/UT எது?

அ) உத்தர பிரதேசம்

ஆ) புது தில்லி 

இ) மத்திய பிரதேசம்

ஈ) குஜராத்

  • ‘முக்கியமந்திரி பார்க் சௌந்தர்யகரன்’ திட்டம் புது தில்லி அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் ஒருபகுதியாக, தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசிய தலைநகரத்தில் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் உள்ள 17 நகர்ப்புறக் காடுகளை, ‘உலகத்தரம்வாய்ந்த’ காடுகளாக மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

2. 2022 – ஏபெல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

அ) டென்னிஸ் பார்னெல் சல்லிவன் 

ஆ) கர்டிஸ் டி. மெக்முல்லன்

இ) வில்லியம் பிரவுடர்

ஈ) ஹால் அபெல்சன்

  • நடப்பு 2022ஆம் ஆண்டிற்கான ‘ஏபெல்’ பரிசு பேராசிரியர் டென்னிஸ் பார்னெல் சல்லிவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது சிறந்த கணிதவியலாளர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த விருது 2002–இல் நார்வே அரசாங்கத்தால் நிறுவப்பட்டது.
  • பேராசிரியர் சல்லிவனுக்கு, “இயற்கணிதம், வடிவியல் மற்றும் இயக்கவியல் அம்சங்களில் இடவியலில் அவர் செய்த பங்களிப்புகளுக்காக” அப்பரிசு வழங்கப்பட்டது.

3. ‘AquaMAP’ தண்ணீர் மேலாண்மை மற்றும் கொள்கை மையத்தைத் தொடங்கியுள்ள நிறுவனம் எது?

அ) ஐஐடி மெட்ராஸ் 

ஆ) IISc பெங்களூரு

இ) ஐஐடி காரக்பூர்

ஈ) ஐஐடி தில்லி

  • மெட்ராஸ் – இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) ‘AquaMAP’ என்ற நீர் மேலாண்மை மற்றும் கொள்கை மையத்தைத் திறந்து வைத்து அதன் வலைதளத்தையும் தொடங்கியது. ‘AquaMAP’ என்பது ஒரு தேசிய நீர் மையமாகும். மேலும், இத்திட்டம் ரீதியாக IIT மெட்ராஸ் IIT தார்வாட் உடன் இணைந்துள்ளது.
  • திறமையான தண்ணீர் மேலாண்மை நடைமுறைகளை வடிவமைத்து மேம்படுத்துவதன்மூலம் தண்ணீர் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதை இந்த மையம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

4. ‘Lamitiye – 2022’ என்பது இந்தியாவிற்கும் பின்வரும் எந்த நாட்டிற்கும் இடையிலான ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?

அ) இலங்கை

ஆ) மாலத்தீவுகள்

இ) செஷல்ஸ் 

ஈ) மடகாஸ்கர்

  • ‘Lamitiye – 2022’ என்பது இந்திய இராணுவம் மற்றும் செஷல்ஸ் பாதுகாப்புப் படைகளுக்கு இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியின் ஒன்பதாவது பதிப்பாகும். மார்ச் 22 முதல் 31 வரை செஷல்ஸ் பாதுகாப்பு அகாதமியில் நடத்தப்படும் இந்தப் பயிற்சிக்காக இந்திய இராணுவக்குழு செஷல்ஸ் சென்றடைந்தது.

5. இந்திய தூர்வாரல் கழகமானது எந்த நிறுவனத்துடன் இணைந்து முதலாவது உள்நாட்டு தூர்வாரும் கப்பலை உருவாக்கியுள்ளது?

அ) கொச்சி கப்பல்கட்டும் நிறுவனம் 

ஆ) மசகான் கப்பல்கட்டும் நிறுவனம்

இ) கோவா கப்பல்கட்டுந்தளம்

ஈ) கார்டன் ரீச் கப்பல் கட்டுநர்கள் & பொறியாளர்கள்

  • இந்திய தூர்வாரல் கழகமமும் கொச்சின் கப்பல்கட்டும் நிறுவனமும் முதலாவது உள்நாட்டு தூர்வாரும் கப்பலை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்தக் கப்பலின் விலை சுமார் `920 கோடியாகும்.
  • இதுவே இந்தியாவில் கட்டப்படுகிற மிகப்பெரிய மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட தூர்வரும் கப்பல் ஆகும்.

6. கிவோலேடியோ தேசியப்பூங்கா அமைந்துள்ள இந்திய மாநிலம்/UT எது?

அ) இராஜஸ்தான் 

ஆ) பஞ்சாப்

இ) மத்திய பிரதேசம்

ஈ) மகாராஷ்டிரா

  • கிவோலாடியோ தேசியப் பூங்கா இராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சமீபத்தில், ஆபிரிக்காவின் ‘போமா கேப்சரிங் டெக்னிக்’ கொண்ட ஒரு பரிசோதனை இப்பூங்காவில் மேற்கொள்ளப்பட்டது.
  • 450 கிமீ தொலைவில் அமைந்துள்ள முகுந்தரா ஹில்ஸ் புலிகள் காப்பகத்தில், இரையின் தளத்தை மேம்படுத்தவும் புள்ளிமான்களைப் பிடிக்கவும் இடமாற்றம் செய்யவும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

7. சமீபத்தில் புவிசார் குறியீடு பெற்ற, ‘நரசிங்கம்பேட்டை நாகஸ்வரம்’ சார்ந்த மாநிலம் எது?

அ) தமிழ்நாடு 

ஆ) கேரளம்

இ) கர்நாடகா

ஈ) மேற்கு வங்காளம்

  • தமிழ்நாட்டின், ‘நரசிங்கப்பேட்டை நாகஸ்வரம்’ ஆனது ‘பதினைந்தாம் வகுப்பு இசைக்கருவி’ என்ற பிரிவின்கீழ் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. தஞ்சாவூரில் அமைந்துள்ள நரசிங்கம்பேட்டை கிராமத்தில் இந்தக் கருவி கையால் தயாரிக்கப்படுகிறது. ஒரு வகை கருங்காலி மரம் தேர்வு செய்யப்பட்டு இது உருவாக்கப்படுகிறது.
  • நாணல் எனப்படும் ஒரு வகை தாவரத்தின் இலைகளில் இருந்து இதன் பன்னைமூடி தயாரிக்கப்படுகிறது.

8. 2022 – உலக காடுகள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ) Forests & Sustainable Production and Consumption 

ஆ) World’s Terrestrial Biodiversity

இ) Role of Forest in Achieving SDGs

ஈ) Trees – Pathway to Susutainability

  • புவியில் உயிர்களை நிலைநிறுத்துவதில் காடுகளின் பங்கு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்குடன் ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.21 அன்று உலக காடுகள் நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • Forests & Sustainable Production and Consumption” என்பது 2022ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் ஆகும். ஐநா அவையின் கூற்றுப்படி, 80% பல்லுயிர் பெருக்கத்தில் 60,000–க்கும் மேற்பட்ட மர வகைகளுடன் உலகின் காடுகள் பங்களித்து வருகின்றன.

9. ‘Hwasong–17’ எனப் பெயரிடப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சமீபத்தில் பரிசோதனை செய்த நாடு எது?

அ) சீனா

ஆ) வட கொரியா 

இ) ஐக்கிய அரபு அமீரகம்

ஈ) இஸ்ரேல்

  • கடந்த 2017ஆம் ஆண்டு முதல் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை, ‘Hwasong–17’ என்ற பெயரில் பரிசோதனை செய்துள்ளதாக வடகொரியா உறுதிசெய்து உள்ளது. ‘Hwasong–17’ ஆனது அதிகபட்சமாக 6,248.5 கிமீ உயரத்தில் 1,090 கிமீட்டர் தூரம் பறந்து இலக்கைத் தாக்கியது. ‘Hwasong–17’ ஆனது உலகின் மிகப்பெரிய கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எனக் கூறப்படு –கிறது. கடந்த 2017 நவம்பரில் பரிசோதனை செய்யப்பட்ட ‘Hwasong–15’, சுமார் 4,475 கிமீட்டர் உயரத்தை எட்டியது மற்றும் 950 கிமீகளைக் கடந்தது.

10. 2022–இந்திய காசநோய் அறிக்கையின்படி, 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் காசநோய் பாதிப்பு % என்ன?

அ) 2%

ஆ) 5%

இ) 9%

ஈ) 19% 

  • ‘2022 – இந்திய காசநோய் அறிக்கை’ சமீபத்தில் மத்திய சுகாதார அமைச்சரால் வெளியிடப்பட்டது.
  • இவ்வறிக்கையின்படி, கடந்தாண்டுகளை ஒப்பிடும்போது 2021ஆம் ஆண்டில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட மொத்த காசநோயாளிகளின் எண்ணிக்கை 19 இலட்சமாகும்.
  • 2020–இல் இந்த எண்ணிக்கை 16 இலட்சமாக இருந்தது. இந்தியாவில் 2019–2020–க்கு இடையில் காசநோயால் ஏற்படும் இறப்பு விகிதம் 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழகத்தில் 2 புதிய வணிக வளாகங்கள்: அரசு – அரபு நிறுவனம் `3,500 கோடிக்கு ஒப்பந்தம்

அரபு நாடுகளில் மிகப்பெரிய வணிக வளாகங்களை நடத்தி வரும் லுலு நிறுவனம், தமிழகத்திலும் 2 புதிய வணிக வளாகங்களை கட்டமைக்கவுள்ளது. இதற்காக `3,500 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் அபுதாபியில் முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பமானது.

2. 94-ஆவது ஆஸ்கர் விருதுப்பட்டியல்!

சிறந்த திரைப்படம் – கோடா

சிறந்த அந்நியமொழித் திரைப்படம் – டிரைவ் மை காா் (ஜப்பான்)

சிறந்த இயக்குநர் – ஜேன் கேம்பியன் (The Power of the Dog)

சிறந்த நடிகர் – வில் ஸ்மித் (கிங் ரிச்சர்டு)

சிறந்த நடிகை – ஜெசிகா சேஸ்டெயின் (தி ஐஸ் ஆப் டேம்மி பேயி)

சிறந்த குணச்சித்திர நடிகர் – ட்ரோய் கோட்சர் (கோடா)

சிறந்த குணச்சித்திர நடிகை – அரியானா டிபோஸ் (வெஸ்ட் சைடு ஸ்டோரி)

சிறந்த அனிமேஷன் திரைப்படம் – என்கேன்டோ (ஜரீத் புஷ், பைரன் ஹோவர்டு, கிளார்க் ஸ்பென்சர்)

சிறந்த அனிமேஷன் குறும்படம் – தி விண்ட்ஷீல்டு வைப்பர் (ஆல்பர்டோ மியால்கோ, லியோ சான்செஸ்)

சிறந்த ஆவணப்படம் – சம்மர் ஆப் சோல் (அமீர் தாம்ப்சன், ஜோசப் படேல்)

சிறந்த ஆவணக்குறும்படம் – தி குயின் ஆப் பேஸ்கட்பால் (பென் பிரவுட்புட்)

சிறந்த அசல் திரைக்கதை – பெல்பாஸ்ட் (கென்னத் பிரனாக்)

சிறந்த தழுவல் திரைக்கதை – கோடா (சியான் ஹெடர்)

சிறந்த பாடல் – “நோ டைம் டு டை” (பில்லி ஐலிஷ், பினியஸ் ஓ கானல்)

சிறந்த ஒளிப்பதிவு – டியூன் (கிரேக் பிரேசர்)

சிறந்த படத்தொகுப்பு – டியூன் (ஜோ வாக்கர்)

சிறந்த கலை வடிவமைப்பு – டியூன் (பாட்ரிஸ் வெர்மெட்)

சிறந்த விஷுவல் எபெக்ட் – டியூன்

சிறந்த ஒலித்தொகுப்பு – டியூன் (மேக் ரூத், மார்க் மங்கினி)

சிறந்த பின்னணி இசை – டியூன் (ஹான்ஸ் ஜிம்மர்)

சிறந்த ஆடை வடிவமைப்பு – குரூவெல்லா (ஜெனி பீவன்)

சிறந்த ஒப்பனை, கூந்தல் அலங்காரம் – தி ஐஸ் ஆப் டேம்மி பேயி (லிண்டா டோட்ஸ், ஸ்டீபனி இங்ரம், ஜஸ்டின் ராலே)

3. சேதி தெரியுமா?

மார்ச்.21: மணிப்பூர் முதல்வராக வீரேன்சிங் இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றார். அவருக்கு ஆளுநர் இல. கணேசன் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

மார்ச்.22: மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மார்ச்.23: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வழக்கறிஞர்கள் N மாலா, S செளந்தர் ஆகியோரைப் புதிய நீதிபதிகளாக நியமித்துக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.

மார்ச்.23: உத்தரகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றார். அவருக்கு ஆளுநர் குர்மிட் சிங் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

மார்ச்.24: தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு க ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்ட பிறகு துபாயில் நடைபெறும் சர்வதேச தொழில் கண்காட்சியில் பங்கேற்க முதன் முறையாக வெளிநாடு சென்றார்.

மார்ச்.25: உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக மீண்டும் பொறுப்பேற்றார். அவருக்கு ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

மார்ச்.25: மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட் -டதற்குப் போட்டியாக கர்நாடக சட்டப்பேரவையில் ஆதரவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மார்ச்.27: நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் 50 ஓவர் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 3 வெற்றி, 4 தோல்விகளுடன் இந்திய அணி வெளியேறியது.

4. தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்கு ‘181’ இயங்குவது எப்படி? – ஒரு தெளிவுப்பார்வை

எதற்காக, எப்போது அறிமுகமானது? – ‘181’ என்பது மகளிருக்கான உதவி எண். இது கட்டணமில்லா தொலை பேசி எண். இது முதன்முதலில் தலைநகர் தில்லியில்தான் தொடங்கப்பட்டது.

மத்திய அரசு ‘நிர்பயா நிதி’ என்ற நிதியை ஏற்படுத்தியது. இந்த நிதி ஒதுக்கீட்டின்கீழ்தான் மகளிருக்கான உதவி எண் ‘181’ தொடங்கப்பட்டது. இந்தச்சேவை அந்தந்த மாநில போலீஸாரின் உதவியுடன் ‘Safe City’ திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 2018 டிசம்பர் 10 முதல் இச்சேவை செயல்படுகிறது.

இணையதளத்திலும் புகார்…

‘181’ என்ற எண்ணை அழைத்துப் புகார் சொல்ல இயலாத நேரத்தில் https://tn181whl.org/tamil/ என்ற இணையதளத் -திற்குச் சென்று அங்குள்ள அரட்டை சேவையைப் பயன்படுத்தியோ இ-பார்ம் பயன்படுத்தியோ புகார் அளிக்கலாம். 24 மணி நேரமும் இயங்கக் கூடிய டோல் பிரீ எண்ணைப் பற்றி அறிந்துகொள்வதோடு அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம்.

1. Which Indian state/UT implements the ‘Mukhyamantri Park Saundaryakaran Yojana’?

A) Uttar Pradesh

B) New Delhi 

C) Madhya Pradesh

D) Gujarat

  • Mukhyamantri Park Saundaryakaran Yojana is a scheme being implemented by the Government of Delhi. As part of the scheme, the Delhi chief minister Arvind Kejriwal directed officials to transform 17 city forests in the national capital in an area of about 3000 acres to ‘World–Class level’ Forests.

2. Who has been awarded the ‘Abel Prize 2022’?

A) Dennis Parnell Sullivan 

B) Curtis T. McMullen

C) William Browder

D) Hal Abelson

  • The Abel Prize for the year 2022 has been awarded to Professor Dennis Parnell Sullivan. It is awarded annually to outstanding mathematicians. The award was established by the Norwegian Government in 2002.
  • Professor Sullivan was awarded the prize “For his contributions to topology, in particular its algebraic, geometric and dynamical aspects.”

3. Which institution has inaugurated ‘AquaMAP’ Water Management and Policy Centre?

A) IIT Madras 

B) IISc Bengaluru

C) IIT Kharagpur

D) IIT Delhi

  • The Indian Institute of Technology (IIT) Madras has inaugurated AquaMAP Water Management and Policy Centre and also launched its website. AquaMAP is a national water centre and IIT Madras is collaborating with IIT Dharwad in the project.
  • The Centre aims at providing solutions for water problems by designing and evolving smart and optimal water management practices.

4. ‘Lamitiye 2022’ is the Joint Military Exercise between India and which country?

A) Sri Lanka

B) Maldives

C) Seychelles 

D) Madagascar

  • ‘Lamitiye 2022’ is the ninth edition of the Joint Military Exercise between the Indian Army and Seychelles Defence Forces (SDF). The Indian Army contingent arrived in Seychelles for the exercise, to be conducted at the Seychelles Defence Academy (SDA) from March 22 to 31.

5. Dredging Corporation of India (DCI) has partnered with which company to build the first indigenous dredger?

A) Cochin Shipyard Limited 

B) Mazagon Dock Ship builders

C) Goa Shipyard

D) Garden Reach Ship builders & Engineers

  • The Dredging Corporation of India (DCI) and Cochin Shipyard Limited (CSL) signed an agreement to build the first indigenous dredger.
  • The vessel will cost around Rs 920 crore. This is the largest and technologically advanced dredger to have even been built in India.

6. Keoladeo National Park is located in which Indian state/UT?

A) Rajasthan 

B) Punjab

C) Madhya Pradesh

D) Maharashtra

  • Keoladeo National Park is located in Rajasthan’s Bharatpur district. Recently, an experiment with Africa’s ‘Boma Capturing Technique’ was undertaken in the park. The technique is used for capturing and translocating spotted deer, which will improve the prey base in Mukundara Hills Tiger Reserve, situated 450 km away.

7. ‘Narasingampettai Nagaswaram’, which got the GI Tag recently, is from which Indian state?

A) Tamil Nadu

B) Kerala

C) Karnataka

D) West Bengal

  • The ‘Narasingampettai Nagaswaram’ from Tamil Nadu has earned the Geographical Indication (GI) tag under ‘musical instruments of class 15’. The instrument is handmade in Narasingapettai village in Thanjavur, unlike the other machine–made ones.
  • A type of Ebony wood is chosen, which is 200 years old and does not absorb moisture. The reeds are made from the leaves of a locally grown plant named Naanal (Bamboo).

8. What is the theme of the ‘International Day of Forests 2022’?

A) Forests and Sustainable Production and Consumption 🗹

B) World’s Terrestrial Biodiversity

C) Role of Forest in Achieving SDGs

D) Trees – Pathway to Susutainability

  • International Day of Forests on March 21 is observed every year with the aim to increase awareness about the role of forests in sustaining lives on this planet. The theme for 2022 is ‘Forests and Sustainable Production and Consumption’. As per the United Nations, forests are home to about 80 per cent of the world’s terrestrial biodiversity, with more than 60,000 tree species.

9. Which country recently test–fired the intercontinental ballistic missile named Hwasong–17?

A) China

B) North Korea 

C) UAE

D) Israel

  • North Korea has confirmed that it has test–fired its first intercontinental ballistic missile (ICBM) since 2017 named ‘Hwasong–17’. Hwasong–17 flew 1,090 km at a maximum altitude of 6,248.5 km and hit a target. Hwasong–17 is claimed to be the largest ICBM in the world. Hwasong–15, which was tested in November 2017 reached an altitude of about 4,475 km and covered 950 km.

10. What is the per centage rise in Tuberculosis (TB) cases in India in 2021, as per India TB Report 2022?

A) 2%

B) 5%

C) 9%

D) 19% 

  • The ‘India TB Report 2022’ was recently released by the union health minister. As per the report, India reported a sharp 19 per cent rise in tuberculosis cases in 2021 over the previous year. The total number of incident TB patients notified during 2021 were around 19 lakhs as opposed to that of 16 lakhs in 2020. There has been an increase in the mortality rate due to TB between 2019 and 2020 by 11 per cent in India.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!