TnpscTnpsc Current Affairs

29th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

29th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 29th November 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

29th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. CITES COP19 ஆனது அண்மையில் எந்த விலங்கின் நிலை தரமிறக்கும் திட்டத்தை ஏற்றுக்கொண்டது?

அ. இமயமலை காட்டெருமை

ஆ. இந்திய மெல்லோட்டு ஆமை

இ. தெற்கத்திய வெண் காண்டாமிருகங்கள்

ஈ. கானமயில்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. தெற்கத்திய வெண் காண்டாமிருகங்கள்

  • CITES COP19 ஆனது அண்மையில் தெற்கத்திய வெண் காண்டாமிருகங்களின் நிலையை பின்னிணைப்பு–Iஇலிருந்து பின்னிணைப்பு–IIக்கு தரமதிப்புக்குறைக்கும் திட்டத்தை ஏற்றுக்கொண்டது. போட்ஸ்வானா மற்றும் நமீபியாவின் கோரிக்கையை ஏற்று COP19 இதனை ஆதரித்தது. பின்னிணைப்பு–Iஇல் பட்டியலிடப்பட்டுள்ள காட்டு விலங்கினங்கள், ‘அழிவின் விளிம்பில்’ உள்ளவையாகும்.

2. தங்கமயில் விருதை வென்ற, ‘I have Electric Dreams’ என்பது எந்த மொழியில் தயாரிக்கப்பட்ட திரைப்படமாகும்?

அ. ஆங்கிலம்

ஆ. சீனம்

இ. ஸ்பானியம்

ஈ. ஜெர்மானியம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ஸ்பானியம்

  • இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) 53ஆவது பதிப்பு அண்மையில் நிறைவடைந்தது. வாலண்டினா மாரல் இயக்கிய ஸ்பானிய திரைப்படமான, ‘ஐ ஹேவ் எலக்ட்ரிக் டிரீம்ஸ்’ ‘தங்கமயில்’ விருதை வென்றது. நோ எண்ட் படத்தின் நடிகரான வஹித் மொபசேரி சிறந்த நடிகருக்கான (ஆண்) ‘வெள்ளிமயில்’ விருதும், ஐ ஹேவ் எலக்ட்ரிக் டிரீம்ஸ் திரைப்படத்தின் முன்னணி நடிகையான டேனிலா மரின் நவரோ சிறந்த நடிகருக்கான (பெண்) ‘வெள்ளி மயில்’ விருதும் பெற்றார். ஈரானிய எழுத்தாளரும் இயக்குநருமான நாடர் சேய்வர் சிறந்த இயக்குநருக்கான ‘வெள்ளி மயில்’ விருதை நோ எண்ட் திரைப்படத்திற்காக பெற்றார். பிரான்ஸ், இந்த ஆண்டுக்கான, ‘சிறப்புக்கவனம்’ பெற்ற நாடாக இருந்தது.

3. சாத்தியம்மிகு லித்தியம் இருப்புக்களை மதிப்பிடுவதற்காக, இந்தியா, கீழ்க்காணும் எந்நாட்டிற்கு குழுவொன்றை அனுப்பியுள்ளது?

அ. ஆஸ்திரேலியா

ஆ. பிரேஸில்

இ. அர்ஜென்டினா

ஈ. எகிப்து

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. அர்ஜென்டினா

  • அர்ஜென்டினாவில் சாத்தியம் நிறைந்த லித்தியம் படிவுகள் மற்றும் சாத்தியம்மிகு கையகப்படுத்தல் வாய்ப்புகளை மதிப்பிடுவதற்காக இந்தியா மூன்று புவியியலாளர்கள் குழுவை அர்ஜென்டினாவிற்கு அனுப்பியுள்ளது. மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் கார்ப்பரேஷன் லிட் (MECL), KABIL (கனிஜ் பிதேஷ் இந்தியா லிட்) மற்றும் இந்திய புவியியல் ஆய்வு (GSI) ஆகியவற்றிலிருந்து தலா ஒரு புவியியலாளர் இக்குழுவில் உள்ளனர். இந்தியாவில் லித்தியம் சார்ந்த எந்தவொரு வளமும் இல்லாத காரணத்தினால் அந்தக்கனிமம் முதன்மையாக இறக்குமதி செய்யப்படுகிறது. மின்–வாகனங்களில் பயன்படுத்தப்படும் மறுவூட்டம் செய்யக்கூடிய மின்கலங்களில் லித்தியம் முக்கிய அங்கமாக பயன்படுத்தப்படுகிறது.

4. கீழ்க்காணும் எந்த நாட்டின் அதிபர், இந்தியக் குடியரசு நாள் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்?

அ. ஐக்கிய அரபு அமீரகம்

ஆ. எகிப்து

இ. ஆஸ்திரேலியா

ஈ. ஜப்பான்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. எகிப்து

  • 2023ஆம் ஆண்டு குடியரசு நாளில் முதன்மை விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல்–சிசியை இந்தியா அழைத்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியக் குடியரசு நாள் விழாவில் எகிப்து அதிபர் ஒருவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வது இதுவே முதல்முறையாகும். இந்தியாவின் தலைமையின்கீழ் G20 உச்சிமாநாட்டிற்கு வருகைதரும் ஒன்பது நாடுகளில் எகிப்தும் ஒன்றாகும். இருநாடுகளும் இந்த ஆண்டில் தங்களது தூதரக உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றன.

5. கீழ்க்காணும் எந்த நகரத்தின் அருங்காட்சியக மறுசீரமைப்புத் திட்டத்திற்கு UNESCOஇல், ‘சிறப்புத்துவத்திற்கான விருது’ வழங்கப்பட்டுள்ளது?

அ. பெங்களூரு

ஆ. மும்பை

இ. கொச்சின்

ஈ. பனாஜி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மும்பை

  • மும்பையைச் சார்ந்த சத்திரபதி சிவாஜி மகாராஜா வாஸ்து சங்கராலயாவுக்கு ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (UNESCO) ‘ஆசிய–பசிபிக் கலாச்சார பாரம்பரியப் பாதுகாப்புக்கான விருதுகள்–2022’இல் ‘சிறப்புத்துவத்திற்கான விருது’ வழங்கப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள கோல்கொண்டாவைச் சேர்ந்த ஸ்டெப்வெல்ஸுக்கு ‘தனிச்சிறப்பு’ விருதும், டோமகொண்டா கோட்டை, தெலுங்கானா மற்றும் பைகுல்லா நிலையம், மும்பைக்கு ‘சிறப்பு மதிப்பு’ விருதும் வழங்கப்பட்டது.

6. ‘SVAMITVA’ திட்டத்தைச் செயல்படுத்துகிற நடுவண் அமைச்சகம் எது?

அ. உழவு மற்றும் உழவர்கள் நல அமைச்சகம்

ஆ. பஞ்சாயத்து இராஜ் அமைச்சகம்

இ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஈ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. பஞ்சாயத்து இராஜ் அமைச்சகம்

  • பஞ்சாயத்து இராஜ் அமைச்சகம், ‘SVAMITVA’ என்ற சொத்துக்கணக்கெடுப்பு திட்டத்தைச் செயல்படுத்துகிறது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்த, ‘SVAMITVA’ திட்டம் மற்றும் கிராமப்புற திட்டமிடல் குறித்த தேசிய மாநாட்டின் போது, ‘SVAMITVA’ திட்டம்குறித்த நிபுணர் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது. ‘SVAMITVA’ என்ற திட்டத்தின் நோக்கங்களை முழுமையாய் உணர்வதற்காக மாநிலங்கள் பின்பற்றக்கூடிய வழிகாட்டும் கொள்கைகளை இது வழங்குகிறது. இந்திய அரசின் முன்னாள் செயலாளர் பி கே அகர்வால் தலைமையில் 2022 பிப்ரவரியில் இதற்கான நிபுணர் குழு உருவாக்கப்பட்டது.

7. திடீரென தட்டம்மை நோய் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள மெட்ரோ நகரம் எது?

அ. சென்னை

ஆ. மும்பை

இ. புது தில்லி

ஈ. கொல்கத்தா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மும்பை

  • மும்பையில் நிலவும் தட்டம்மை நோய் பரவலைக் கட்டுப்படுத்தவும், அதை மதிப்பிடவுமாக ஓர் உயர்மட்ட பல்துறைக் குழுவை நடுவணரசு மும்பைக்கு அனுப்பியுள்ளது. மும்பையின் குடிமை அமைப்பான பிரகன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் ஆனது கோவந்தியில் 15 ஐயத்திற்கிடமான தட்டம்மை பாதிப்புகளைக் கண்டறிந்துள்ளது. தட்டம்மை என்பது வைரஸால் ஏற்படும் ஒரு தொற்றுநோயாகும்; இது சுவாசக்குழாயைப் பாதித்து பின்னர் உடல் முழுவதும் பரவும் நோயாக மாறுகிறது.

8. 2022 – அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Basic Sciences for Sustainable Development

ஆ. Growth and World Peace

இ. Science and Society

ஈ. Learning and Teaching

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. Basic Sciences for Sustainable Development

  • அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் நாளானது ஆண்டுதோறும் நவ.10 அன்று அனுசரிக்கப்படுகிறது. சமூகத்திற்கும் நமது அன்றாட வாழ்விற்கும் அறிவியல் எவ்வளவு முக்கியம் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும். “Basic Sciences for Sustainable Development” என்பது இந்த ஆண்டு (2022) அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் நாளுக்கானக் கருப்பொருளாகும்.

9. 2023–24இல், ‘கேலோ இந்தியா தேசிய பல்கலைக்கழக விளையாட்டுகளை’ நடத்தும் மாநிலம் எது?

அ. கர்நாடகா

ஆ. ஒடிஸா

இ. உத்தர பிரதேசம்

ஈ. மேற்கு வங்காளம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. உத்தர பிரதேசம்

  • உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னௌ, கோரக்பூர், வாரணாசி மற்றும் நொய்டா ஆகிய 4 நகரங்களில் 2023–24இல் கேலோ இந்தியா தேசிய பல்கலைக்கழக விளையாட்டுகள் நடத்தப்படவுள்ளன. ஒடிஸா மற்றும் கர்நாடகாவுக்குப் பிறகு, உத்தர பிரதேசம் முதல்முறையாக தேசிய பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளை நடத்துகிறது. தேசிய பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் 26 வயதுக்குட்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள். 12 முன்னாள் விளையாட்டு வீரர்களை பயிற்சியாளர்களாக அரசு நியமித்துள்ளது.

10. அண்மையில், 2ஆவது BIMSTEC வேளாண்துறை அமைச்சர்கள் கூட்டத்தை நடத்திய நாடு எது?

அ. இலங்கை

ஆ. இந்தியா

இ. மாலத்தீவுகள்

ஈ. தைவான்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இந்தியா

  • நடுவண் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் பல்வேறு துறைசார்ந்த தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பின் வேளாண்துறை அமைச்சர்கள் நிலையிலான இரண்டாவது கூட்டத்தை இந்தியா நடத்தியது. இந்தக் கூட்டத்தில் பூடான், வங்காளதேசம், நேபாளம், மியான்மர், இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளின் வேளாண்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகிறார் P T உஷா!

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை P T உஷா (58) தேர்வாக உள்ளார். தலைவர் தேர்தலுக்கு P T உஷா மட்டுமே வேட்புமனுத் தாக்கல்செய்துள்ள நிலையில், போட்டியின்றி தலைவராகத் தேர்வாகவுள்ளார். இவர் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பெறவுள்ளார். ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை குவித்துள்ள P T உஷா, கடந்த 1984இல் நடந்த ஒலிம்பிக்கில் 400 மீ போட்டியில் 4ஆவது இடம்பெற்று இந்தியாவுக்குப் பெருமைசேர்த்தார்.

2. 13,210 அரசுப்பள்ளிகளில் ‘வானவில் மன்றம்’

‘எங்கும் அறிவியல்-யாவும் கணிதம்’ என்பதை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டில் 13,210 அரசுப்பள்ளிகளில் ‘வானவில் மன்றம்’ திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின், திருச்சியில் தொடக்கிவைத்தார்.

திருச்சி காட்டூர், பாப்பாக்குறிச்சி ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவின் ஒருபகுதியாக, 100 நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயிற்சியளிக்க செல்லும் தன்னார்வலர்களையும் முதலமைச்சர் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

அரசுப்பள்ளிகளில் 6 வகுப்பு முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர், மாணவிகளிடையே அறிவியல் மற்றும் கணிதம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துதல், மாணவர்களிடம் இயல்பாகவே உள்ள படைப்பாற்றல் ஆர்வத்தை வளர்த்தெடுத்தல், புதுமைகளைக் காணும் மனப்பாங்கை வளர்த்தெடுத்தல், தமக்கான மொழியில் அறிவியல் மொழி பழகுதல், அன்றாட வாழ்க்கையிலுள்ள அறிவியலை உணர்தல், சமூகவியல், இலக்கியத்துடனான அறிவியலைப் புரிந்துகொள்ளுதல் ஆகியவையே இந்தத் திட்டத்தின் நோக்கங்களாகும். இந்தத் திட்டத்திற்கு 710 கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

710 கருத்தாளர்களுக்கும் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு நடமாடும் அறிவியல் மற்றும் கணித பரிசோதனை ஏதுவாளர்களாக செயல்படுவர். மாணவர்களுக்கு எளிய அறிவியல் பரிசோதனைகளுக்கான கருவிகளையும் உடன் எடுத்து வருவர். இவர்கள் பள்ளிதோறும் சென்று ஆசிரியர்கள் துணையோடு மாணவர்களுக்கு அறிவியல் பரிசோத -னைகளை செய்து காட்டுவர். அறிவியல் மற்றும் கணித வல்லுநர்களுடன் இணையவழி கலந்துரையாடலுக்கும் ஏற்பாடுகள் செய்யப்படும். இதன்மூலம் சக ஆசிரியர்களுடனான துறைசார்ந்த உரையாடலுக்கு வாய்ப்பு ஏற்படும்.

நவீன தொழிநுட்பங்களையும் கணிதம் சார்ந்த புதிய உத்திகளையும் அறிந்துகொள்வதுடன் அவற்றை வகுப்புகளில் மாணவர்களிடத்தில் பகிர்ந்துகொள்ளவும் இந்தக் கலந்துரையாடல் உதவும். இந்தத் திட்டமானது மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இந்தத்திட்டத்துக்காக `25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 25 இலட்சம் மாணவர், மாணவிகள் பயன்பெறுகின்றனர்.

3. 75% இந்தியர்களுக்கு கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தம்

இந்தியாவில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோருக்குக் கட்டுப்பாடற்ற அளவில் இரத்தவழுத்தம் இருப்பதாக லான்செட் மருத்துவ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களின் இரத்த அழுத்தக் கட்டுப்பாடு தொடர்பாக கடந்த 2001ஆம் ஆண்டு முதல் வெளியான 51 ஆய்வறிக்கைகளை லான்செட் குழு ஆராய்ந்தது. அது தொடர்பான அறிக்கை லான்செட் பிராந்திய இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் பெண்கள் ஆண்களை விட சிறப்பாகச் செயல்படுவதாக 21 ஆய்வறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் முறையாகச் செயல்படுவதில்லை என ஆறு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. டிச.01இல் அறிமுகமாகிறது டிஜிட்டல் ரூபாய்!

டிஜிட்டல் ரூபாய் வருகின்ற டிச.01 முதல் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2022 மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின்போது ரிசர்வ் வங்கிமூலம் டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் என்று நடுவண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இந்நிலையில், டிஜிட்டல் ரூபாய் வெளியீடு குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது.

தற்போது புழக்கத்திலுள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாயும் சில்லறைப் பணப்பரிவர்த்தனைகளுக் -காக டிச.01ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் ‘e`-R’ என்ற குறியீடு டிஜிட்டல் ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக SBI, ICICI, YES வங்கி, IDFC பர்ஸ்ட் ஆகிய நான்கு வங்கிகளில் அறிமுகமாகிறது. விரைவில் பரோடா வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, HDFC வங்கி, கொடாக் மகேந்திரா வங்கியும் இணையவுள்ளன. மும்பை, தில்லி, பெங்களூரு, புவனேசுவரம் நகரங்களில் டிச.01ஆம் தேதியும், ஆமதாபாத், கௌகாத்தி, இந்தூர், லக்னௌ, பாட்னா, சிம்லாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. இதன்மூலம் நாளை மறுநாள் முதல் `1, `2, `5, `10, `20, `50, `100, `200, `500, `2000 மதிப்பிலான டிஜிட்டல் கரன்சிகள் புழக்கத்திற்கு வரவுள்ளன.

5. குரங்கு அம்மைக்குப் புதிய பெயர்

குரங்கம்மைக்கு ‘M-அம்மை’ என்று உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. தொடக்கத்தில் குரங்குகள் இடையே பரவிய அந்நோய், தற்போது மனிதர்களிடையே, அதிலும் ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாகப்பரவும் நிலையில், குரங்கு அம்மை என்ற பெயர் கருப்பினத்தவர்களை இழிவுபடுத்தக் கூடும் என்பதால் புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது.

29th November 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. CITES COP19 has recently accepted the proposal to downgrade the status of which animal?

A. Himalayan Yak

B. Indian Soft Turtle

C. Southern white rhinos

D. Great Indian Bustard

Answer & Explanation

Answer: C. Southern white rhinos

  • CITES COP19 has recently accepted the proposal to downgrade the status of southern white rhinos from Appendix I to Appendix II. The COP–19 accepted the proposal by Botswana and Namibia to degrade the status. Wild animal species listed in Appendix I include those threatened with extinction.

2. ‘I have Electric Dreams’, which won the Golden Peacock Award, is a movie made in which language?

A. English

B. Chinese

C. Spanish

D. German

Answer & Explanation

Answer: C. Spanish

  • The 53rd edition of the International Film Festival of India (IFFI) concluded recently. Spanish film ‘I have electric dreams’ directed by Valentina Maurel won the Golden Peacock award. Vahid Mobasseri, the lead actor of No End, was honoured with Silver Peacock for Best Actor (Male), while Daniela Marin Navarro, lead Actor of Best Film I Have Electric Dreams was honoured with Silver Peacock for Best Actor (Female). Iranian writer and director Nader Saeivar got Silver Peacock for Best Director for No End. France was the ‘Spotlight’ country this year.

3. India has sent a team to which country to assess potential lithium deposits?

A. Australia

B. Brazil

C. Argentina

D. Egypt

Answer & Explanation

Answer: C. Argentina

  • India has sent a team of three geologists to Argentina to assess potential lithium deposits and possible acquisition opportunities in the country. The team comprises of one geologist each from Mineral Exploration Corporation Ltd (MECL), KABIL (Khanij Bidesh India Ltd) and the Geological Survey of India (GSI). India does not have any lithium resource and the mineral is primarily imported. Lithium is the key component of rechargeable batteries used in EVs.

4. Which country’s President has been named as the Chief Guest at Republic Day celebrations?

A. UAE

B. Egypt

C. Australia

D. Japan

Answer & Explanation

Answer: B. Egypt

  • India has invited Egyptian President Abdel Fattah Al Sisi as the chief guest on Republic Day 2023, as per the Ministry of External Affairs. This would be the first time that an Egyptian president would be the chief guest at the Indian Republic Day celebrations. Egypt is one of the nine guest countries to the G20 summit under India’s presidency. Both countries are celebrating the 75th anniversary of diplomatic relations this year.

5. Which city’s museum restoration project has been conferred with ‘Award of Excellence’ at UNESCO?

A. Bengaluru

B. Mumbai

C. Cochin

D. Panaji

Answer & Explanation

Answer: B. Mumbai

  • Chhatrapati Shivaji Maharaj Vastu Sangrahalaya (CSMVS) of Mumbai was conferred with the ‘Award of Excellence’ at the United Nations Educational, Scientific and Cultural Organisation (UNESCO) Asia–Pacific Awards for Cultural Heritage Conservation–2022. The Award of Distinction is given to Stepwells of Golconda, Hyderabad while the award of Merit – Domakonda Fort, Telangana, and Byculla Station, Mumbai.

6. Which Union Ministry implements the ‘SVAMITVA’ scheme?

A. Ministry of Agriculture and Farmers Welfare

B. Ministry of Panchayati Raj

C. Ministry of Rural Development

D. Ministry of Science and Technology

Answer & Explanation

Answer: B. Ministry of Panchayati Raj

  • Ministry of Panchayati Raj implements the property survey Scheme ‘SVAMITVA’. The Report of Expert Committee on SVAMITVA Scheme was released during the National Conference on SVAMITVA Scheme and Rural Planning held at Bhopal, Madhya Pradesh. It provides the guiding principles that states may adopt in order to realize the objectives of the SVAMITVA Scheme holistically.  The Expert Committee was formed in February, 2022 under the Chairmanship of B. K. Agarwal, Former Secretary to the Government of India.

7. Which metro city has reported a sudden outbreak of Measles?

A. Chennai

B. Mumbai

C. New Delhi

D. Kolkata

Answer & Explanation

Answer: B. Mumbai

  • The Central Government has deputed a high–level multi–disciplinary team to Mumbai to assess the situation and manage the measles outbreak in the city. Mumbai’s civic body– Brihanmumbai Municipal Corporation detected 15 suspected cases of measles in Govandi. Measles is a contagious disease caused by a virus, which infects the respiratory tract and then spreads throughout the body.

8. What is the theme of ‘World Science Day for Peace and Development’ 2022?

A. Basic Sciences for Sustainable Development

B. Growth and World Peace

C. Science and Society

D. Learning and Teaching

Answer & Explanation

Answer: A. Basic Sciences for Sustainable Development

  • World Science Day for Peace and Development is observed annually on November 10. It aims to create awareness on how important science is to society and in our everyday life. ‘Basic Sciences for Sustainable Development’ is the focus of this year’s World Science Day for Peace and Development.

9. Which state is the host of ‘Khelo India National University games’ in 2023–24?

A. Karnataka

B. Odisha

C. Uttar Pradesh

D. West Bengal

Answer & Explanation

Answer: C. Uttar Pradesh

  • Uttar Pradesh will host the Khelo India National University games in 2023–24in four cities of the state namely Lucknow, Gorakhpur, Varanasi and Noida. After Odisha and Karnataka, Uttar Pradesh is hosting the National University Games for the first time. Athletes below 26 years will participate in the National University Games. The government also appointed 12 former athletes as coaches in different disciplines.

10. Which country recently hosted the 2nd BIMSTEC Agriculture Ministers meeting?

A. Sri Lanka

B. India

C. Maldives

D. Taiwan

Answer & Explanation

Answer: B. India

  • India hosted the 2nd BIMSTEC Agriculture Ministers meeting under the chairmanship of Union Agriculture Minister Narendra Singh Tomar, in New Delhi. Agriculture Ministers of Bhutan, Bangladesh, Nepal, Myanmar, Sri Lanka, and Thailand participated in the meeting. BIMSTEC stands for Bay of Bengal Initiative for Multi–Sectoral Technical and Economic Cooperation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!