TnpscTnpsc Current Affairs

29th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

29th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 29th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. 2020ஆம் ஆண்டுக்கான தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது பெற்ற பிரிக் S V சரஸ்வதியுடன் தொடர்புடையது எது?

அ) அரசியல்வாதி

ஆ) செவிலியர் 

இ) காவல்

ஈ) அறிவியலாளர்

  • இராணுவ செவிலியர் சேவைகளின் துணை இயக்குநர் ஜெனரல் -பிரிக் S V சரஸ்வதிக்கு தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது -2020 வழங்கப்பட்டுள்ளது. தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது என்பது தன்னலமற்ற சேவைக்காக செவிலியர்களுக்கு வழங்கப்படும் ஒரு மிகவுயர்ந்த தேசிய விருதாகும்.
  • படையினர் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நர்சிங்கில் அவர் செய்த குறிப்பிடத்தக்க சேவைக்காக, அவருக்கு பொது அதிகாரி கமாண்டிங்-இன்-சீஃப் பாராட்டு (2005), ஐக்கிய நாடுகள் பதக்கம் (MONOC) (2007) மற்றும் இராணுவத் தலைவர் பாராட்டு (2015) ஆகியன வழங்கப்பட்டது.

2. 2021ஆம் ஆண்டின் “Freedom on the Net” அறிக்கையில், முதல் இடத்தில் உள்ள நாடு எது?

அ) நோர்வே

ஆ) ஐஸ்லாந்து 

இ) ஜெர்மனி

ஈ) பின்லாந்து

  • ஆண்டுதோறும் வெளியிடப்படும் “இணையத்தில் சுதந்திரம்” அறிக்கை அமெரிக்க சிந்தனைக்குழுவான பிரீடம் ஹவுஸால் வெளியிடப்பட்டது. இவ்வாண்டுக்கான (2021) அறிக்கையின்படி, ஐஸ்லாந்து தரவரிசையில் முதலிடத்தைப்பிடித்தது.
  • எஸ்டோனியா மற்றும் இணைய அணுகலை மனித உரிமையாக அறிவித்த உலகின் முதல் நாடான கோஸ்டாரிகா ஆகியவை இரண்டாம் இடத்தைப் பிடித்தன. மியான்மர் மற்றும் பெலாரஸில் நிகழ்ந்த இணைய முடக்கம், தொடர்ச்சியாக 11ஆவது ஆண்டாக ஆன்லைன் உரிமைகள் உலகளவில் குறைந்துவிட்டதைக் காட்டுகிறது.

3. ‘இந்தியாவில் நகர்ப்புற திட்டமிடல் திறனில் சீர்திருத்தங்கள்’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) ப்ளூம்பெர்க் இந்தியா

ஆ) NITI ஆயோக் 

இ) உலக வங்கி

ஈ) யுனிசெஃப்

  • இந்தியாவில் நகர்ப்புற திட்டமிடல் திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை NITI ஆயோக் சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிக்கைக்கு, “இந்தியாவில் நகர்ப்புற திட்டமிடல் திறனில் சீர்திருத்தங்கள்” என்று பெயரிடப்பட்டது.
  • இந்த அறிக்கை NITI ஆயோக், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் நகர்ப்புற மற்றும் பிராந்திய திட்டமிடல் துறையில் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்டுள்ளது. இது 9 மாத காலப்பகுதியில் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் முடிவை அளிக்கிறது. இந்தியாவில், நகர்ப்புற திட்டமிடல் திறன் மதிப்புச் சங்கிலியில் உள்ள தடைகளைத் தீர்க்க இந்த அறிக்கை பல்வேறு பரிந்துரைகளைத் தருகிறது.

4. உலக காண்டாமிருக நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) செப்டம்பர் 22 

ஆ) செப்டம்பர் 23

இ) செப்டம்பர் 24

ஈ) செப்டம்பர் 25

  • காண்டாமிருகம் அழிவின் விளிம்பிலுள்ள ஓர் உயிரினமாகும். அவற்றை காப்பதற்கான முயற்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்ட, உலக காண்டாமிருக நாள், கடந்த 2010ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் செப்.22 அன்று கொண்டாடப்படுகிறது. இந்திய காண்டாமிருகம் என்றும் அழைக்கப்படும் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகத்தை IUCN அழிவாய்ப்பு நிலையிலுள்ள இனமாக பட்டியலிடுகிறது.

5. சமீப செய்திகளில் இடம்பெற்ற ‘நீலப்புரட்சி’யுடன் தொடர்புடைய தயாரிப்பு எது?

அ) நறுமணப் பயிர்கள் 

ஆ) தோட்டக்கலை பயிர்கள்

இ) பால் பொருட்கள்

ஈ) கோழிப் பொருட்கள்

  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சரான ஜிதேந்திர சிங், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்காக ஜம்மு – காஷ்மீருக்கான ஒருங்கிணைந்த நறுமணப்பால் தொழில்முனைவு திட்டத்தை முன்மொழிந்தார்.
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் CSIRமூலம் ஏற்கனவே தொடங்கப்பட்ட அரோமா இயக்கத்துடன் இவற்றைத்திறம்பட ஒருங்கிணைக்க முடியும் என்று பரிந்துரைத்தார். “லாவெண்டர் அல்லது நீலப்புரட்சி” என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது “அரோமா இயக்கம்” ஐரோப்பாவைச் சேர்ந்த பயிரை ஜம்மு – காஷ்மீரின் டோடா, கிஷ்ட்வார் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் CSIR-lllM அறிமுகப்படுத்தியுள்ளன.

6. மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் தொடர்பான உரிமைகளை உறுதிசெய்வதற்கான சட்ட ஆணையை வழங்குகிற சட்டம் எது?

அ) மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951

ஆ) மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016 

இ) தேர்தல் விதிகளின் நடத்தை, 1961

ஈ) தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) சட்டம், 2003

  • மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016 ஆனது மாற்றுத்திறன் கொண்டவர்கள் அனைத்து வாக்குச்சாவடிகளையும் அணுகுவதை உறுதிசெய்வதற்கான சட்ட ஆணையை வழங்குகிறது. தேர்தல் செயல் முறை தொடர்பான அனைத்து தகவல்களும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவை மற்றும் பயன்படுத்தக்கூடியவையாகும்.
  • இந்திய தேர்தல் ஆணையமானது சமீபத்தில் ‘அணுகக்கூடிய தேர்தல்க -ள் 2021’ பற்றிய ஒரு மெய்நிகர் தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்தது. நம்நாட்டில் சுமார் 77.4 லட்சம் மாற்றுத்திறனாளிகள் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களாக உள்ளனர்.

7. எந்த நாட்டோடு இணைந்து, ‘ரேபிட் டிரைடென்ட் – 2021’ என்ற இராணுவப் பயிற்சியை NATO தொடங்கியுள்ளது?

அ) உக்ரைன் 

ஆ) சூடான்

இ) நார்வே

ஈ) தான்சானியா

  • 2021 செப்டம்பர் 20 அன்று உக்ரைன், அமெரிக்கா மற்றும் பிற நேட்டோ படைகளுடன் கூட்டு இராணுவப் பயிற்சிகளைத் தொடங்கியது. அதே வேளையில், அண்டை நாடுகளான ரஷ்யாவும் பெலாரஸும் மிகப்பெரிய அளவிலான பயிற்சிகளை நடத்தின, இது மேற்குலகின் விழிப்புணர்வை தூண்டும் விதமாக உள்ளது. இந்தப் பயிற்சி அக்டோபர்.1 வரை தொடரும்.

8. ஜஸ்டின் ட்ரூடோ, 3ஆவது முறையாக எந்த நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்?

அ) ஆஸ்திரேலியா

ஆ) நியூசிலாந்து

இ) ஜெர்மனி

ஈ) கனடா 

  • கனடாவின் லிபரல் கட்சித்தலைவரான ஜஸ்டின் ட்ரூடோ மூன்றாவது முறையாக அந்த நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2015 முதல் ஆட்சியில் இருந்து வருகிறார். 6 ஆண்டுகளில் 3 தேர்தல்களில் அவர் வெற்றிபெற்றுள்ளார்.

9. விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) குறித்து எந்த நாட்டுடன் இந்தியா முறையாக பேச்சுவார்த்தை நடத்தியது?

அ) அமெரிக்கா

ஆ) சீனா

இ) பிரேசில்

ஈ) UAE 

  • ஐக்கிய அரபு அமீரகமானது (UAE) 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் 3ஆவது பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது. வர்த்தக மதிப்பு தற்போது $59 பில்லியன் டாலர்களாக உள்ளது.
  • UAE, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியாவின் 2ஆவது பெரிய ஏற்றுமதி இடமாக உள்ளது. சமீபத்தில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகியவை ஒரு விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை முறையாக தொடங்கின.

10.பின்வரும் எந்த நோக்கத்தை அடைய “முதலீட்டாளர்கள் மற்றும் வணிகங்களுக்கான தேசிய ஒற்றைச்சாளர அமைப்பு” தொடங்கப்ப -ட்டுள்ளது?

அ) ஒப்புதல் மற்றும் அனுமதிக்கான ஒற்றைச்சாளரம் 

ஆ) வரி தள்ளுபடி கோருதல்

இ) GST தரவு உள்ளீடு

ஈ) குறைதீர்பு

  • இந்திய அரசு சமீபத்தில் “முதலீட்டாளர்கள் மற்றும் வணிகங்களுக்கான தேசிய ஒற்றைச் சாளர அமைப்பை” அறிமுகப்படுத்தியுள்ளது.
  • முதலீட்டாளர்களுக்கான ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகளை வழங்கும் ஒரே இடமாக தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு திகழும். 18 மத்திய துறைகள் மற்றும் 9 மாநிலங்களுக்கான ஒப்புதல்களை இந்தத் தளம் தற்போது வழங்கிவரும் நிலையில், இன்னுமொரு 14 மத்திய துறைகள் மற்றும் 5 மாநிலங்கள் 2021 டிசம்பருக்குள் இணைக்கப்படும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக எஸ்.கே. ஹல்தர் நியமனம்:

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக, ம‌த்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக உள்ள‌ எஸ்.கே. ஹல்தர் நியமிக்க‌ப்பட்டுள்ளார். கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய அரசு கடந்த 2018 ஜூன்.1 அன்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது.

மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவரே இந்த ஆணையத்தின் தற்காலிக ஆணையராக செயல்பட்டு வந்தார். இதனால் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பரில் தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.

ம‌த்திய நீர்வள ஆணையத்தின் தலைவரான‌ எஸ் கே ஹல்தர் கடந்த ஜனவரியில் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இவரது ப‌தவிக்காலம் வரும் 30 ஆம் தேதியுடன் நிறைவடைவதால் காவிரி மேலாண் ஆணையத்துக்கு முழு நேரத் தலைவரை நியமிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வந்த‌து. இந்நிலையில் நேற்று மத்திய பணியாளர் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக சவுமித்ரா குமார் ஹல்தர் நியமிக்க‌ப்படுகிறார். 5 ஆண்டுகளுக்கு அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை இவர் தலைவராக செயல்படுவார்.

இவர்வரும் நவ.30 பணியில் இருந்து ஓய்வுபெற்றாலும், ஆணையத்தின் தலைவராக நீடிப்பார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. பூச்சித் தொல்லை, பருவநிலை மாற்றத்தை தாங்கி வளரும் – நெல், கோதுமை, தானியம் உட்பட 35 புதிய பயிர் வகைகள் அறிமுகம் : பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

பூச்சித் தொல்லை, பருவநிலை மாற்றத்தை தாங்கி வளரும், ஊட் டச்சத்து நிறைந்த நெல், கோதுமை, சிறுதானியங்கள் உள்ளிட்ட 35 புதிய பயிர் வகைகளை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். பூச்சித் தொல்லை, பருவ நிலையை தாங்கி வளரும், ஊட்டச் சத்து நிறைந்த 35 புதிய பயிர் வகைகளை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆர்) உருவாக்கியுள்ளது. நெல், கோதுமை, சோயாபீன், சோளம் உள்ளிட்ட இந்த பயிர் வகைகளின் அறிமுக விழா காணொலி வாயி லாக நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று புதிய பயிர்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது அவர் பேசியதாவது:

பருவநிலை மாற்றம், புதிய வகை பூச்சிகள், புதிய நோய்கள், தொற்று நோய்கள் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகின்றன. இதன் காரணமாக மனிதர்கள், கால்நடைகள், பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. இந்த சவால்களை எதிர்கொள்ள அறிவியல் ஆராய்ச்சி அவசியமாகிறது.

அறிவியல், அரசு, சமூகம் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இத்தகைய சவால்களை சமாளிக்க முடியும். நாடு முழுவதும் பூச்சிகளால் பயிர் சாகுபடி கடுமையாக பாதிக்கப் படுகிறது. பல்வேறு மாநிலங்களில் வெட்டுக்கிளி தீராத பிரச்சினையாக நீடிக்கிறது. இதன்காரணமாக விவ சாயிகள் பேரிழப்பை சந்திக்கின்றனர். இதை தடுக்க விவசாயிகளும் விஞ்ஞானிக -ளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

கடந்த 7 ஆண்டுகளாக வேளாண் துறையில் நவீன தொழில்நுட்பங் கள் புகுத்தப்பட்டு வருகின்றன. அதேநேரம் நமது பழங்கால வேளாண் மரபுகளும் கண்டிப்புடன் பின்பற்றப்படுகின்றன.

அந்த வகையில் பூச்சிகளை எதிர்த்து, பருவநிலை மாற்றங் களை தாங்கி வளரும் 35 புதிய பயிர் வகைகள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளன. இவை விவசாயி களுக்கு அதிக மகசூலை அளிக்கும். அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவு தானியங்களாகவும் இருக்கும். வேளாண்மையில் புதுமைகளை கடைபிடிக்க விவசாயிகள் தயங்கக்கூடாது.

தேவைக்கு ஏற்ற பயிர் வகைகளை விளைவித்து, அவற்றை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய வேண்டும். பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த 100 பாசன திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம்.

இதுவரை 11 கோடி மண் வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 2 கோடி கிசான் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள் ளன. குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது. வானிலை நிலவரம் குறித்து விவசாயி களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுகிறது. விவசாயி களுக்கு வங்கிக் கடன் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

புதிய நெல் வகைகள் காணொலி நிகழ்ச்சியின்போது, ராய்பூரில் உள்ள தேசிய உயிர் வாழ்வு நெருக்கடி மேலாண்மை நிறுவனத்தில் புதிதாக கட்டப் பட்ட வளாகத்தை பிரதமர் திறந்து வைத்தார். வேளாண் பல்கலைக்கழகங்களுக்கான பசுமை வளாக விருதையும் அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசும்போது, “விவசாயிகள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக பி எம் கிசான் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது” என்றார். இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் ஏ கே சிங் பேசும்போது, “இந்த நெல் வகைகளுக்கு குறைந்த அளவு தண்ணீர் போதுமானது. ஊட்டச்சத்து நிறைந்த அதிக மகசூல் கிடைக்கும்” என்றார்.

3. ஈரோடு தமிழன்பன் உள்ளிட்ட 10 அறிஞர்களுக்கு – ‘கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள்’ அறிவிப்பு :

ஈரோடு தமிழன்பன் உள்ளிட்ட 10 தமிழ் அறிஞர்களுக்கு ‘கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள்’ அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்ட அறிவிப்பு: மத்திய செம்மொழித் தமிழாய்வுநிறுவனத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது சொந்த நிதியிலிருந்து ரூ. ஒரு கோடி வழங்கி,‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழாய்வு அறக்கட் டளை’யை நிறுவினார்.

ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அதன்படி, தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் உள்ளிட்டவையில் சிறந்த பங்களிப்பை வழங்கிய அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’வழங்கப்படுகிறது. அதனுடன், இந்தியாவிலேயே அதிக தொகையாக ரூ.10 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும், கருணாநிதியின் உருவச்சிலையும் வழங்கப்படும். முதல்முறையாக, பின்லாந்து நாட்டு அறிஞர் பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா-வுக்கு 2010-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் வழங்கப்பட்டது

இந்நிலையில், ‘கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ 2010முதல் 2019-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலினால் அமைக்கப்பட்ட விருது தேர்வுக் குழுவினரால் 10 ஆண்டுகளுக்கும் சேர்த்து 10 அறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 2020, 2021, 2022-ம்ஆண்டுகளுக்கான ‘கருணாநிதிசெம்மொழித் தமிழ் விருது’களுக்கான முன்மொழிவுகளைப் பெறவிளம்பரம் வெளியிட ஆட்சிக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்குரிய விருது,மாநில அளவிலான தமிழ்மொழி சார்ந்த விழாவில் விரைவில் வழங்கப்படவுள்ளது. மேலும் 2020, 2021 மற்றும் 2022 ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

4. காஞ்சிபுரம் மாவட்டம் – ஒரகடத்தில் ரூ.450 கோடியில் : மருத்துவ சாதனங்கள் உற்பத்தி பூங்கா : முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் ரூ.450 கோடியில் மருத்துவ சாதனங்கள் உற்பத்திப் பூங்கா அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொழிற்பூங்காக்களும், குறிப்பிட்ட தொழில்களுக்கான சிறப்புப் பூங்காக்களும் சிப்காட் நிறுவ னம் மூலம் அமைக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், இந்த நிதியாண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் சிப்காட் நிறுவனம் மூலம் மருத்துவ சாதனங்கள் உற்பத்திப் பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்தப் பூங்காவில், உட்கட்ட மைப்பு வசதிகள் ஏற்படுத்த நிதியுதவி வேண்டி, மத்திய அரசின் மருந்தியல் துறைக்கு தமிழக அரசு சார்பில் கருத்துரு அனுப்பப்பட்டது. தமிழக அரசின் இந்தக் கோரிக்கையை ஏற்று, தற்போது தேசிய அளவில் நான்கு மருத்துவ சாதனங்கள் உற்பத்திப் பூங்காக்களை அமைக்க, மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு நிதியுதவி

இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசத்தை தொடர்ந்து, தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் மருத்துவ சாதனங்கள் உற்பத்திப் பூங்கா அமையும். இங்கு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற் படுத்த, அதிகபட்சமாக ரூ.100 கோடி நிதியுதவியை மத்திய அரசு வழங்கும்.

ஒரகடம் சிப்காட் தொழிற் பூங்காவில் 350 ஏக்கர் பரப்பில், சுமார் ரூ.450 கோடி திட்ட மதிப்பில், அடிப்படைக் கட்டமைப்புகள், ஆய்வுக் கூடங்கள், முன்னோடி மாதிரி மையம், திறன் மேம்பாட்டு மையம் முதலியவற்றை உள்ளடக்கி, ஒரே குடையின்கீழ் பல்வேறு வசதிகள் கொண்ட பூங்காவாக இது அமையும். மருத்துவத் துறையின் தேவைகளை நிறைவேற்றும் வகையில், வெண்டிலேட்டர்கள், பி.பி. திரைகள் , பேஸ்மேக்கர்கள், அறுவைசிகிச்சை உபகரணங்கள், கண் மற்றும் பல் உள்வைப்புகள் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தப் பூங்கா அமையும்.

10 ஆயிரம் பேருக்கு வேலை இது ரூ.3,500 கோடி முதலீடுகளை ஈர்ப்பதுடன், 10,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை வழங்கும். மருத்துவ சாதனங்கள் உற்பத்திக்கென பிரத்தியேகமாக அமைக்கப்படும் இந்தப் பூங்கா, சர்வதேச தரத்தில், அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் சிப்காட் நிறுவனத்தால் உருவாக்கப்படும். மேலும், மருத்துவ சாதனங்கள் உற்பத்தியிலும் உலக அளவில் முக்கியமான உற்பத்தி மையமாக இது உருவாகும். இவ்வாறு முதல்வர் தெரிவித் துள்ளார்.

5. சென்னை எழும்பூரில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் : முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்து பார்வையிட்டார்

சென்னை எழும்பூரில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். சென்னை எழும்பூரில் உள்ளபாரம்பரியம் மிக்க பழைய காவல்ஆணையரக அலுவலகம், தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 24 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 2 தளங்களாக உள்ள இக்கட்டிடத்தின் தரைதளத்தில் காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், சீருடைகள், வாத்திய இசைக் கருவிகள், காவல் துறையின் சாதனைகள், மீட்டெடுக்கப்பட்ட சிலைகள், கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம், வெடிகுண்டுகள், குண்டுகளை கண்டெடுக்க உதவும் கருவிகள்,மாதிரி சிறைச்சாலை ஆகியவையும், முதல் தளத்தில் பல்வேறு வகையான துப்பாக்கிகள், வாள்மற்றும் தோட்டாக்களும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

மேலும், காவல் துறையில் சிறப்பாக பணி செய்தவர்களுக்கு வழங்கப்படும் பதக்கங்கள், முக்கிய வரலாற்று ஆவணங்கள், காவல் துறை தொடர்பாக அக்காலத்தில் இயற்றப்பட்ட அதிமுக்கிய அறிவிப்புகள், ஆங்கிலேயர் காலத்து காவல்துறையினர் பயன்படுத்திய ஆயுதங்கள், தமிழக காவல் துறையின் தொடக்க கால சீருடைகள், பெல்ட்,மோப்ப நாய் படைகளின் புகைப்படங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தித் தொகுப்புகள், காவல் ஆணையர் அலுவலக அறையில் இருந்த பழமையான பொருட்கள், அணிவகுப்பு சின்னங்கள், கம்பியில்லா தொலைதொடர்பு கருவிகள், காவல் துறை சேவை பதக்கங்கள், கலைப்பொருட்கள் ஆகியவையும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்த காவல் அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். அருங்காட்சியகத்தை பார்வையிட வந்த பள்ளி மாணவ, மாணவிகளிடம் முதல்வர் கலந்துரையாடி, இனிப்புகளை வழங்கினார். பொதுமக்கள் நாளை (செப்.30)வரை கட்டணமின்றி அருங்காட்சியகத்தைப் பார்வையிடலாம். அக்.1-ம் தேதி முதல் குறைந்த அளவில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த நிகழ்ச்சியில், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்,தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் ஏ.கே.விஸ்வநாதன், தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியக இயக்குநர் அ.அமல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

6. மூத்த குடிமக்களுக்கான நாட்டின் முதல் இலவச உதவி எண் : 14567

மூத்த குடிமக்களுக்கான நாட்டின் முதல் இலவச உதவி எண் : 14567 வெளியிடப்பட்டுள்ளது. இது மூத்த குடிமக்களுக்குத் தேவையான தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் இலவசமாக வழங்குகிறது. 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 20 சதவீதம் பேர் அதாவது 300 மில்லியனுக்கும் மேற்பட்டோர் மூத்த குடிமக்களாக இருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளுக்கான தேவை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளையும், சவால்களையும் நிவர்த்தி செய்வதற்கு நாடு முழுவதுமான இலவச உதவி மைய எண் – 14567ஐ வெளியிட்டுள்ளது. இது முதியோர் உதவி எண் என அழைக்கப்படுகிறது. ஓய்வூதிய விஷயங்கள், சட்ட விஷயங்கள், உணர்வுப்பூர்வமான ஆதரவு போன்ற தகவல்களும், வழிகாட்டுதல்களும் இந்த உதவி எண் மூலம் இலவசமாக வழங்கப்படுகின்றன. துஷ்பிரயோக பிரச்சினைகள் இருந்தாலும், இந்த உதவி மையம் தலையிடுகிறது. வீடுகள் இன்றி தவிக்கும் முதியோரையும் இந்த உதவி மையம் மீட்கிறது.

அனைத்து குடிமக்களுக்கும் தேவையான தகவல்களையும், அன்றாட பிரச்னைகளுக்கான வழிகாட்டுதல்களையும் வழங்குவதே இந்த முதியோர் உதவி எண்ணின் நோக்கமாகும். .டாடா அறக்கட்டளை அமைப்பின் முயற்சியில், விஜயவாஹினி அறக்கட்டளையுடன் இணைந்து தெலங்கானா அரசு ஒத்துழைப்புடன் ஐதராபாத்தில் உள்ள முதியோர்களுக்கு உதவ கடந்த 2017ஆம் ஆண்டு இந்த முதியோர் உதவி மைய எண் தொடங்கப்பட்டது. இன்று, இந்த முதியோர் உதவி எண்ணை நாடு முழுவதும் செயல்படுத்த டாடா அறக்கட்டளையும், என்எஸ்இ அறக்கட்டளையும் மத்திய அரசுடன் தொழில்நுட்பப் பங்குதாரராக இணைந்துள்ளது.

7. லட்சுமி தேவி உருவம் பொறித்ததங்கக் கட்டிகளை வெளியிடுகிறது பிரிட்டன்

ஹிந்து கடவுளான லட்சுமி தேவி உருவம் பொறித்த தங்கக் கட்டிகளை பிரிட்டன் ராயல் நாணய வாா்ப்பகம் வெளியிட இருக்கிறது. தீபாவளிப் பண்டிகையின்போது இந்த தங்கக் கட்டிகள் விற்பனைக்கு வரவுள்ளன. ராயல் நாணய வாா்ப்பகம் பிரிட்டன் அரசு நிறுவனமாகும். அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தங்கக் கட்டிகளை ஏற்றுமதி செய்யும் இந்த நிறுவனம் 1,100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் பாரம்பரியத்தைக் கொண்டது. பிரிட்டன் அரசு நாணய வாா்ப்பகம் ஹிந்து கடவுள் உருவம் பொறித்த தங்கக் கட்டிகள் வெளியிடுவது இதுவே முதல்முறையாகும். பிரிட்டன் காா்டிஃப் நகரில் உள்ள ஸ்வாமி நாரயண் கோயிலுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இந்த பிரத்யேக தங்கக் கட்டிகளை பிரிட்டன் ராயல் நாணய வாா்ப்பகம் வெளியிட இருக்கிறது.

இதனை பிரிட்டன் ராயல் மிண்ட் வடிவமைப்பாளா் எம்மா நோபிள் வடிவமைத்துள்ளாா். லட்சுமி உருவம் பொறித்த ஒவ்வொரு தங்கக்கட்டியும் 20 கிராம் எடை கொண்டவை. இதன் விலை உள்ளூரில் ஒரு தங்கக் கட்டிக்கு 1,080 பவுண்ட் (சுமாா் ரூ.1.08 லட்சம்) நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல தரப்பட்ட நாடுகளின் கலாசாரத்தை கௌரவிக்கும் வகையிலும், கலாசார ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் இந்த தங்கக் கட்டிகளை வெளியிடுவதாக பிரிட்டன் ராயல் நாணய வாா்ப்பகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்த வாா்ப்பகத்தின் நாணயங்கள் பிரிவு இயக்குநா் ஆண்ட்ரூ டிக்கி கூறுகையில், ‘தீபாவளிப் பண்டிகையின்போது தங்கத்தைப் பரிசளிப்பது பாரம்பரியமாகவும், உயா்ந்ததாகவும் கருதப்படுகிறது. இந்த ஆண்டு அழகு மற்றும் பாரம்பரியத்துடன் தங்கக் கட்டியை வெளியிடத் தீா்மானித்தோம். அதில் ஹிந்துக்களின் செல்வக் கடவுள் இடம் பெறுவதும் சரியான தோ்வாக இருக்கும் என முடிவு செய்தோம். இதனை எங்கள் வலைதளம் வழியாக வாங்க முடியும். இந்த நாணயம் ‘ஓம்’ என்ற பிரணவச் சொல் பொறித்து வடிவமைக்கப்பட்ட பிரத்யேகப் பெட்டியில் வைத்து வழங்கப்படும்’ என்றாா்.

8. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு 3 தேசிய விருதுகள்

தேசிய உயா்கல்வித் திட்டத்தின் கீழ் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய போட்டிகளில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு பசுமை மற்றும் தூய்மையான வளாகம் உள்பட 3 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய அளவில் தோட்டக்கலை, வனவியல் மற்றும் மத்திய, மாநில வேளாண் பல்கலைக்கழகங்களுக்கு தேசிய உயா்கல்வித் திட்டத்தின் கீழ் பசுமை மற்றும் தூய்மை வளாக போட்டி இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் சாா்பில் 2020 அக்டோபரில் நடத்தப்பட்டது. இதில் வீணாக தூக்கி எரியப்படும் பொருள்களை மறுசுழற்சி செய்து கையாளுதல், தினசரி மின் தேவைகளுக்கு புதுப்பிக்கல்ல ஆற்றல் மூலங்களை பயன்படுத்துதல், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை வாங்குதல் ஆகியவற்றில் பல்கலைக்கழகங்களின் ஈடுபாடு ஆகியவை மதிப்பீடு செய்யப்பட்டது.

மேலும் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள தோட்டத்தின் பரப்பளவு, கழிவு மேலாண்மை, நீா்ப் பாதுகாப்பு, ஆற்றல் சேமிப்பு நடைமுறைகள், பாடங்கள், திட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுற்றுச்சூழல் அக்கறை குறித்த பட்டறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இதில் மாநில மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பங்கேற்று 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதற்கு ரொக்கப் பரிசாக ரூ.8 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தவிர தேசிய அளவில் நடைபெற்ற வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் முதுகலை படிப்பிற்கான ஊக்கத்தொகைக்கான போட்டித் தோ்வில் தேசிய அளவில் தோட்டக்கலை வனவியல் பிரிவு, வேளாண் பொறியியல் துறையில் அதிக மாணவா்கள் தோ்ச்சி பெற்று இரண்டு துறை மாணவா்களும் 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளனா். 20க்கும் மேற்பட்ட மாணவா்கள் தோ்ச்சிப் பெற்று சாதனைப் படைத்துள்ளனா்.

இந்நிலையில், புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மாநில வேளாண் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா் கூட்டத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கான தேசிய விருதுகளை துணைவேந்தா் நீ.குமாரிடம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத் தலைவா் திரிலோச்சன் மொஹபத்ரா வழங்கினாா். முன்னதாக பசுமை மற்றும் தூய்மையான வளாக விருதுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தோ்வு செய்யப்பட்ட விவரத்தை பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா் என்று பல்கலைக்கழக நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9. இயற்கை சீற்றங்களின்போது உதவ 350 மாவட்டங்களில் பேரிடர் நண்பர் குழு: அமித்ஷா அறிவிப்பு

இயற்கை பேரிடர்களின்போது உடனடியாக சென்று முதல் கட்ட மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக, நாடு முழுவதும் 350 மாவட்டங்களில் ‘பேரிடர் நண்பர்கள் குழு’வை ஒன்றிய அரசு ஏற்படுத்த உள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் 17வது தொடக்க விழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: நாட்டில் எந்த இடத்தில் இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டாலும், முதல் ஆளாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காகவும், உதவிகள் செய்வதற்காகவும் நாடு முழுவதும் 350 மாவட்டங்களில், ‘பேரிடர் நண்பர்கள் குழு’ அமைக்கப்படும். இவர்களுக்கு ‘ஆப்த மித்ரா’ திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்படும். கொரோனாவை எதிர்த்து மற்ற நாடுகளை விட, 130 கோடி மக்கள்தொகையை கொண்ட இந்தியா சிறந்த முறையில் போராடியது.

பெருந்தொற்று காலத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பணி பாராட்டுக்குரியது. கொரோனா காலத்தில் சில பகுதிகளில் புயல் பாதிப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் சிறந்த திட்டமிடுதல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஒரு ஆக்சிஜன் உற்பத்தி ஆலை கூட சேதமாகவில்லை. அதே போன்று மருத்துவமனையில் மின் தடையும் ஏற்படவில்லை. ‘ஆப்த மித்ரா’ திட்டத்தை சோதனை முயற்சியாக 25 மாநிலங்களில் உள்ள 30 மாவட்டங்களில் வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளோம். இதனால், இந்த திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்படுகிறது. இயற்கை பேரிடர்களின் போது மக்களை உடனடியாக காப்பாற்றுவது தொடர்பாக அந்தந்த பகுதிகளை சேர்ந்த மக்களுக்கே இத்திட்டத்தில் பயிற்சி அளிக்கப்படும். பேரிடர் காலங்களில் ஒருவர் கூட உயிரிழக்க கூடாது என்பதே ஒன்றிய அரசின் இலக்கு. இவ்வாறு அவர் கூறினார்.

1. Brig S V Saraswati, who received the National Florence Nightingale Award 2020, is associated with which profession?

A) Politician

B) Nurse 

C) Police

D) Scientist

  • Deputy Director General of Military Nursing Service (MNS) –Brig S V Saraswati has been presented with the National Florence Nightingale Award 2020. National Florence Nightingale Award is the highest national distinction given to nurses for selfless devotion and professionalism.
  • For her significant service in nursing to the soldiers and their families, she had been awarded General Officer Commanding–in–Chief Commendation (2005), United Nations Medal (MONOC) (2007) and Chief of the Army Staff Commendation (2015).

2. Which country ranked first in the annual “Freedom on the Net” report 2021?

A) Norway

B) Iceland 

C) Germany

D) Finland

  • The annual “Freedom on the Net” report was released by the US think–tank Freedom House. As per the report of this year’s edition, Iceland topped the ranking, followed by Estonia and Costa Rica, the world’s first country to declare internet access a human right.
  • Internet shutdowns in Myanmar and Belarus show that online rights declined globally for the 11th year in a row.

3. Which institution released a report titled ‘Reforms in Urban Planning Capacity in India’?

A) Bloomberg India

B) NITI Aayog 

C) World Bank

D) UNICEF

  • NITI Aayog has recently launched a report on measures to ramp up urban planning capacity in India. The report was titled ‘Reforms in Urban Planning Capacity in India’. The report has been developed by NITI Aayog, in consultation with concerned ministries and experts in the domain of urban and regional planning.
  • It presents a result of the deliberations and consultations conducted over a period of 9 months. The report makes several recommendations to solve the bottlenecks in the value chain of urban planning capacity in India.

4. When is the World Rhino Day celebrated across the world?

A) September 22 

B) September 23

C) September 24

D) September 25

  • The rhinoceros is critically endangered and is on the verge of extinction. To highlight the significance of the efforts to be made to save them, World Rhino Day is celebrated on September 22, from 2010.
  • The IUCN lists the one–horned rhino, also known as the Indian rhinoceros, as a vulnerable species.

5. ‘Purple Revolution’, which was seen in the news recently, is associated with which product?

A) Aromatic Crops 

B) Horticulture Crops

C) Dairy Products

D) Poultry Products

  • Union Minister of State (IC) Science & Technology Dr Jitendra Singh has recently proposed Integrated Aroma Dairy Entrepreneurship for Jammu & Kashmir to promote the income of farmers.
  • The Animal Husbandry and Dairy resources of the UT can be integrated with Aroma Mission, which has already been launched in J&K by CSIR under the aegis of Union Ministry of Science & Technology. The Aroma Mission, also called as “Lavender or Purple Revolution”. The CSIR–lllM are laudable introduced the crop native to Europe, in the districts of Doda, Kishtwar and Rajouri in J&K.

6. Which act provides for a legal mandate to ensure rights related to elections, to persons with disabilities?

A) The Representation of the people Act, 1951

B) Rights of Persons with Disabilities Act, 2016 

C) The Conduct of Election Rules, 1961

D) The Election Laws (Amendment) Act, 2003

  • The Rights of persons with disabilities Act 2016 provides for a legal mandate to ensure all polling stations to be made accessible for persons with disabilities. All material related to the electoral process are easily understandable and usable by them.
  • The Election Commission of India (ECI) recently organised a virtual national conference on ‘Accessible Elections 2021’. About 77.4 lakh persons with disabilities (PwDs) are registered voters in our country.

7. With which country NATO has begun conducting Rapid Trident–2021 military exercise?

A) Ukraine 

B) Sudan

C) Norway

D) Tanzania

  • Ukraine began joint military exercises with the United States and other NATO forces on September 20, 2021. This military exercise is being conducted at that time during which neighbouring countries Russia and Belarus were conducting large–scale exercises, which aroused the vigilance of the West. The Rapid Trident 2021 exercise will continue until October 1.

8. Justin Trudeau, has been elected as the Prime Minister of which country, for the third time?

A) Australia

B) New Zealand

C) Germany

D) Canada 

  • Justin Trudeau – the Liberal party leader of Canada has been elected as the Prime Minister of the country for the third time. He has been in power since 2015 and has won 3 elections in a term of 6 years.

9. With which country, India formally launched negotiation on Comprehensive Economic Partnership Agreement (CEPA)?

A) USA

B) China

C) Brazil

D) UAE 

  • The United Arab Emirates (UAE) is India’s 3rd largest trading partner in terms of value in 2019 and 2020 and the trade value is presently valued close to USD 59 billion. It is also India’s 2nd largest export destination after the USA.
  • Recently, India and UAE have formally launched negotiation on a Comprehensive Economic Partnership Agreement (CEPA), which is expected to increase the bilateral trade between the two countries to USD 100 billion in 5 years.

10. “National single–window system for investors and businesses” has been launched to achieve which of the following objectives?

A) Single window for approval and clearance 

B) Claim of Tax Rebate

C) GST Data Entry

D) Grievance Redressal

  • The Government of India has recently launched the “National single–window system for investors and businesses”. This portal is designed to act as a single point of contact for obtaining all approval and clearance for business enterprises and investors.
  • This would enhance Ease of Doing Business, transparency, and accountability. Presently, approvals across 18 central departments and nine states have been onboarded to the portal and another 14 departments would be onboarded by December 2021.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!