TnpscTnpsc Current Affairs

2nd & 3rd April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

2nd & 3rd April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 2nd & 3rd April 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. நடப்பு 2022இல் கத்தாரில் நடைபெறக்கூடிய FIFA உலகக்கோப்பைப் போட்டிகளின் அதிகாரப்பூர்வ வழங்கு –நராக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய நிறுவனம் எது?

அ) டாடா

ஆ) பேடியெம்

இ) BYJU’ஸ் 

ஈ) சொமேடோ

  • இந்திய கல்விசார் தொழில்நுட்ப நிறுவனமான BYJU’ஸ். 2022இல் கத்தாரில் நடக்கும் FIFA உலகக்கோப்பைப் போட்டிகளின் அதிகாரப்பூர்வ வழங்குநராக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 FIFA உலகக்கோப்பையானது 2022 நவ.21 முதல் டிச.18 வரை கத்தாரில் நடைபெறவுள்ளது.

2. ‘சுரக்ஷா கவாச்–2’ என்பது இந்திய இராணுவம் மற்றும் பின்வரும் எந்த மாநிலத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டுப் பாதுகாப்புப் பயிற்சியாகும்?

அ) தமிழ்நாடு

ஆ) தெலுங்கானா

இ) குஜராத்

ஈ) மகாராஷ்டிரா 

  • ‘சுரக்ஷா கவாச்–2’ என்பது புனேவிலுள்ள லுல்லா நகரில் இந்திய இராணுவம் மற்றும் மகாராஷ்டிரா காவல்துறை ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கூட்டு பாதுகாப்பு பயிற்சியாகும். புனேவில் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்ள ராணுவமும் காவல்துறையும் மேற்கொண்ட நடைமுறைகளை ஒருங்கிணைப்பதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.

3. செர்தார் பெர்டிமுகமெடோவ் என்பவர் கீழ்காணும் எந்த நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்?

அ) துர்க்மெனிஸ்தான் 

ஆ) ஈரான்

இ) பாகிஸ்தான்

ஈ) ஆப்கானிஸ்தான்

  • துர்க்மெனிஸ்தான் அதிபர் தேர்தலில் நாற்பது வயதான செர்தார் பெர்டிமுகமடோவ் வெற்றி பெற்றுள்ளார். அவர் அந்நாட்டுத்தலைவரின் மகனாவார். சமீபத்தில் நடந்த தேர்தலில், பெர்டிமுகமடோவ் 72.97% வாக்குகளைப் பெற்று அவரது தந்தை குர்பங்குலிக்கை அடுத்து பதவி ஏற்றார் என மத்திய தேர்லாணையம் தெரிவித்துள்ளது.

4. தோட்டக்கலைப்பயிர்களின் பரப்பளவு மற்றும் உற்பத்தி குறித்த 2020–21–இன் இறுதி மதிப்பீடுகளின்படி, 2020–21–இல் அவற்றின் மொத்த உற்பத்தி என்ன?

அ) 134.60 மில்லியன் டன்

ஆ) 234.60 மில்லியன் டன்

இ) 334.60 மில்லியன் டன் 

ஈ) 434.60 மில்லியன் டன்

  • வேளாண்மை மற்றும் உழவர்கள் நலத்துறையானது 2020–21ஆம் ஆண்டிற்கான இறுதி மதிப்பீடுகளையும், 2021–22ஆம் ஆண்டுக்கான முதலாவது முன்கூட்டிய மதிப்பீடுகளையும் பல்வேறு தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பளவு மற்றும் உற்பத்தியையும் வெளியிட்டது.
  • 2020–21ஆம் ஆண்டில் மொத்த தோட்டக்கலை உற்பத்தி 334.60 மில்லியன் டன்னாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2019–20இல் எட்டப்பட்டதைவிட சுமார் 4.4% அதிகமாகும்.
  • பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தி முறையே 102.48 மில்லியன் டன் மற்றும் 200.45 மில்லியன் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2021–22இல் மொத்த தோட்டக் கலை உற்பத்தி 2020–21–ஐவிட 333.3 மில்லியன் டன் (0.4% குறைவு) என மதிப்பிடப்பட்டுள்ளது.

5. குறைகடத்தி சில்லுகள் உற்பத்திக்கு $52 பில்லியன் டாலர்களை மானியமாக வழங்குவதற்கான மசோதாவுக்கு அண்மையில் ஒப்புதல் அளித்த நாடு எது?

அ) ரஷ்யா

ஆ) அமெரிக்கா 

இ) இங்கிலாந்து

ஈ) ஜெர்மனி

  • குறைகடத்தி சில்லுகள் உற்பத்திக்கு $52 பில்லியன் டாலர்களை மானியமாக வழங்குவதற்கான மசோதா ஒன்றுக்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது.
  • “மாநாடு” எனப்படும் ஒரு முறையான செயல்முறையைத் தொடங்க, இச்சட்டம் பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்பட்டது.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஜிங்கிங் ஜ்ரி: வாழும் வேர்ப்பாலங்கள்’ அமைந்துள்ள மாநிலம் எது?

அ) அஸ்ஸாம்

ஆ) சிக்கிம்

இ) மேகாலயா 

ஈ) ஜம்மு–காஷ்மீர்

  • “ஜிங்கியெங் ஜ்ரி: வாழும் வேர்ப்பாலங்கள் – மேகாலயா மாநிலத்தின் கலாசார நிலப்பரப்புகள்” UNESCO உலக பாரம்பரிய தள தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • இந்த வேர்ப்பாலங்கள் பல அழிவின் விளிம்பிலிருக்கும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு வாழ்விடமாக உள்ளன. ஆற்றின் இருபுறமும் நடப்பட்ட அத்திமரங்களின் உயிருள்ள வேர்களைப் பயன்படுத்தி, மேகாலயாவின் பழங்குடியினரால் கட்டப்பட்டவையாகும் இப்பாலங்கள்.

7. ‘2030ஆம் ஆண்டை நோக்கி இந்திய வேளாண்மை’ என்ற நூலை NITI ஆயோக் ஆனது எந்த நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டது?

அ) UNEP

ஆ) FAO 

இ) NABARD

ஈ) ICAR

  • மத்திய உழவு மற்றும் உழவர்கள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ‘2030ஆம் ஆண்டிற்கான இந்திய உழவு: உழவர்களின் வருமானம், ஊட்டச்சத்து பாதுகாப்பு & நிலையான உணவு மற்றும் பண்ணை அமைப்புகளை மேம்படுத்துவதற்கான பாதைகள்’ என்ற தலைப்பிலான நூலை வெளியிட்டார்.
  • NITI ஆயோக் மற்றும் விவசாயம் மற்றும் விவசாயிகள் நல, மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வள அமைச்சகங்களின் பேச்சுவார்த்தையின் விளைவுகளை இந்த நூல் எடுத்துக்கூறுகிறது. ஐநாவின் உணவு மற்றும் உழவு அமைப்பின் (FAO) ஆதரவின்கீழ் இந்நூல் உருவாக்கப்பெற்றதாகும்.

8. அழிவின் விளிம்பிலிருக்கும் ஆலிவ் ரிட்லி ஆமைகளின் கூடுகளுக்குப் பெயர் பெற்ற ருஷிகுல்யா கடற்கரை அமைந்துள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) ஒடிஸா 

இ) மகாராஷ்டிரா

ஈ) ஆந்திர பிரதேசம்

  • அண்மையில், 1,14,305 ஆலிவ் ரிட்லி ஆமைகள் கூடு கட்டுவதற்காக ருஷிகுல்யா ஆற்றின் முகத்துவாரத்திற்கு வந்து சாதனைபடைத்தன. ருசிகுல்யா கடற்கரையானது ஒடிஸாவின் கஞ்சம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

9. அரசு மின்–சந்தை (GeM) தளத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) யார்?

அ) நந்தன் நிலேகனி

ஆ) P K சிங் 

இ) அமிதாப் காந்த்

ஈ) இரமேஷ் சந்த்

  • அனைத்து மத்திய அரசு அமைச்சகங்கள் & துறைகளின் சரக்குகள் மற்றும் சேவைகளை இணைவழியில் பெறுவதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு அரசு மின்னணு சந்தை (GeM) வலைத்தளம் தொடங்கப்பட்டது.
  • இந்தத் தளம், இந்த நிதியாண்டில் `1 இலட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாக GeM–இன் தலைமைச் செயல் அதிகாரி அறிவித்தார். GeM, உலகளவில் முதல் ஐந்து மின்–அரசு கொள்முதல் அமைப்புகளுள் ஒன்றாகும்.
  • இந்தத் தளத்திலிருந்து வாங்கும் முதல் 4 மாநிலங்கள் – உத்தரபிரதேசம், தில்லி, குஜராத் & மத்தியபிரதேசம் ஆகும்.

10. சீனாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ள சாலமன் தீவுகள் அமைந்துள்ள பெருங்கடல்/கடல் எது?

அ) அட்லாண்டிக் பெருங்கடல்

ஆ) பசிபிக் பெருங்கடல் 

இ) இந்திய பெருங்கடல்

ஈ) அரபிக்கடல்

  • தென்–பசிபிக் பகுதியிலுள்ள 100க்கணக்கான தீவுகளைக் கொண்ட சாலமன் தீவுகள், சீனாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதை உறுதிப்படுத்தியுள்ளது.
  • ஊடக அறிக்கைகளின்படி, ஆஸ்திரேலியாவின் வடக்கே உள்ள இத்தீவில் சீன இராணுவ தளம் அமைக்கப்படலாம். இந்த நடவடிக்கை அண்டை நாடான ஆஸ்திரேலியா & இந்தோ–பசிபிக் பகுதியில் உள்ள மற்ற மேற்கத்திய நட்பு நாடுகளிடையே கவலையைத் தூண்டியுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. GST வசூல் இதுவரை இல்லாத புதிய உச்சம்: மார்ச்சில் `1.42 இலட்சம் கோடி

GST வசூல் இதுவரை இல்லாத அளவு கடந்த மார்ச் மாதத்தில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

தொடர்ந்து 8ஆவது மாதமாக GST வரி வருவாய் 1 லட்சம் கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது. தொடர்ந்து 6ஆவது மாதமாக `1.30 இலட்சம் கோடிக்கும் அதிகமாகச் சென்றுள்ளது. இந்த நிலையில், இதுவரை இல்லாத அளவு GST வசூலில் இந்த மார்ச் மாதம் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் `1,42,095 கோடி GST வசூலாகியுள்ளது.

அதிகபட்ச மாதாந்திர GST வருவாயாக கடந்த ஜனவரி மாதம் `1,40,986 கோடி வசூலானது. இந்த ஆண்டு மார்ச் மாதம் வசூலான GST, கடந்த ஆண்டு மார்ச் மாத GST வசூலைவிட 15 சதவீதமும், கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாத GST வசூலைவிட 46 சதவீதமும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

2. சொத்து வரி உயர்வு ஏன்? எத்தனை சதவீதம் உயர்ந்துள்ளது? – தமிழ்நாடு அரசு

கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட விலைவாசி உயர்வு, பணியாளர்களின் ஊதிய உயர்வு, பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை தேவை மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி பராமரிப்பு செய்தல் போன்றவற்றிற்கு தேவைப்படும் கூடுதல் செலவீனம் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், அடித்தட்டு மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும் சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15ஆவது நிதி ஆணையமானது, தமது அறிக்கையில் 2022-2023ஆம் ஆண்டு முதல், உள்ளாட்சி அமைப்புகள், ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மானியம் பெறுவதற்கான தகுதியைப் பெறும்பொருட்டு, 2021 – 2022ஆம் ஆண்டில், சொத்துவரி தள வீதங்களை (Floor rates) அறிவிக்கை செய்ய வேண்டும் எனவும், மற்றும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டு தோறும் சொத்து வரி வீதத்தை உயர்த்திட வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதித்துள்ளது.

> மேலும், மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் 20 மற்றும் அம்ரூத் 20 ஆகிய திட்டங்களிலும் இதே நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது

> பெருநகர சென்னை மாநகராட்சியின் பிரதான பகுதியில் (Core city) 1998ஆம் ஆண்டிலும், பெருநகர சென்னை மாநகராட்சியுடன் புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர நகர்ப்புர உள்ளாட்சிகளில் 2008ஆம் ஆண்டிலும், சொத்து வரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்டது.

> கடந்த ஜூலை 2013ஆம் ஆண்டு, சொத்து வரி பொது சீராய்வு மேற்கொள்வது தொடர்பாக, அரசாணை வெளியிடப்பட்டு, பின்னர் நவம்பர் 2019ஆம் ஆண்டில் நிறுத்தி வைக்கப்பட்டு சொத்து வரி சீராய்வு மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்க குழுவும் அமைக்கப்பட்டது.

> இக்குழு, தற்போது அளித்துள்ள அறிக்கையில், சொத்து வரி சீராய்வு செய்வதற்கான பரிந்துரைகள் வழங்குவதற்கு முன்னர், சந்தை மதிப்பு குறியீடு (Market Rate), பணவீக்கம் (Inflation), செலவு பணவீக்க குறியீடு (Cost Inflation Rate), மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) போன்ற காரணிகள் பரிசீலிக்கப்பட்டுள்ளது.

மொத்த விற்பனை விலை குறியீடானது (Wholesale Price Index) நாட்டின் பண வீக்கத்தை குறிப்பிடும் முக்கிய காரணியாக அமைந்துள்ளது. மொத்த விற்பனை விலை குறியீடு உயர்வை பரிசீலிக்கும் போது 1998 முதல் 2022 வரை பண வீக்கம் 297 மடங்காகவும், 2008 முதல் 2022 வரை 1.79 மடங்காகவும் உயர்ந்துள்ளது.

மேற்கண்டவாறு பொருளாதார குறியீடுகள் உயர்ந்துள்ள நிலையில் சொத்து வரியில் பல ஆண்டுகளாக எந்த உயர்வும் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகளின் மொத்த வருவாயில் சொந்த வருவாயின் பங்கு பெருமளவு குறைந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செலவீனம் பலமடங்கு உயர்ந்துள்ளது.

> மேற்குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில் தமிழகத்திலுள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் கீழ்க்கண்டவாறு சொத்து வரி சீராய்வு செய்யலாம் என பரிந்துரைக்கப்பட்ட குழுவின் அறிக்கையானது அரசால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

i. 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.

ii. 601 முதல் 1200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.

iii. 1201 முதல் 1800 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.

iv. 1800 சதுர அடிக்கு அதிகமாக பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு100 சதவீதம் சொத்துவரி உயர்வு செய்யப்படவுள்ளது.

v. தற்போது உள்ள சொத்து வரியில், வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டடங்களுக்கு 75 சதவீதமும் உயர்த்தப்படுகிறது.

> (i) அதேபோன்று, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இதர 20 மாநகராட்சிகளில், சொத்து மதிப்பு உயர்வு 2022-23ஆம் நிதியாண்டில் உயர்த்தப்பட உள்ளது. சொத்து மதிப்பு உயர்வு குறித்த குழுவின் அறிக்கையின்படி, சென்னையின் பிரதான நகரப் பகுதியில் 600 சதுர அடிக்கு குறைவாக உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதமும், சென்னையோடு 2011ல் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில் 25 சதவீதம் உயர்த்திடவும். மேலும், சென்னையின் பிரதான நகரப் பகுதிகளில் உள்ள 600-1200 சதுர அடிபரப்பளவுள்ள குடியிருப்புகட்டடங்களுக்கு 75 சதவீதம், 1201-1800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்புகட்டடங்களுக்கு 100 சதவீதம், 1801 சதுர அடிக்கு மேல் பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கான சொத்து வரி 150 சதவீதம் உயர்த்தவும், சென்னையோடு 2011-ல் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில், 600-1200 சதுர அடிபரப்பளவுள்ள குடியிருப்புகட்டடங்களுக்கு 50 சதவீதம், 1201-1800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்புகட்டடங்களுக்கு 75 சதவீதம், 1801 சதுர அடிக்கு மேல் பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கான சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தவும்,

(ii) சென்னையின் பிரதான நகரப் பகுதிகளில் வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 150 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய கட்டடங்களுக்கு 100 சதவீதமும், சென்னையோடு 2011-ல் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில் உள்ள வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 சதவீதம், தொழில் மற்றும் கல்வி நிலையங்களுக்கு 75 சதவீதம், சொத்து வரியினை உயர்த்தவும் குழு பரிந்துரைத்துள்ளது. மேற்படி மாநகராட்சிகளின் சொத்து வரி உயர்வு தொடர்பான குழுவின் பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டு, அதனை செயல்படுத்திட சம்பந்தப்பட்ட மாநகராட்சியின் மாமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

> இதற்கு முந்தைய சொத்து வரி சீராய்வுகளின் போது, குடியிருப்புகளின் பரப்பளவிற்கு ஏற்றவாறு தனித்தனியாக பிரித்து சொத்து வரி சீராய்வு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆனால் தற்போதைய சீராய்வு அடித்தட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் குடியிருப்புகளின் பரப்பளவை 4 வகைகளாக பிரித்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 1200 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள கட்டடங்கள், பெருநகர சென்னை மாநகராட்சியின் பிரதான (Core city) பகுதியில் 6240 சதவீதமும் ஆகவும், பெருநகர சென்னை மாநகராட்சியின் பிற பகுதிகள், மாநிலத்தின் பிற 20 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 88 சதவீதமும் அமைந்துள்ளது. ஆகவே, பெரும்பாலான மக்கள் 1200 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவுள்ள வீடுகளில் வசிப்பாதல் இந்த வரி உயர்வு பெருமளவு பாதிப்பினை ஏற்படுத்தாது.

> கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட விலைவாசி உயர்வு, பணியாளர்களின் ஊதிய உயர்வு, பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை தேவை மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி பராமரிப்பு செய்தல் போன்றவற்றிற்கு தேவைப்படும் கூடுதல் செலவீனம் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், அடித்தட்டு மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும் சொத்து வரி சீராய்வு செய்யப்படுகிறது.

> தற்போது சொத்து வரி சீராய்வு, 2022-2023-ஆம் ஆண்டிற்கான முதலாம் அரையாண்டு முதல் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. தற்போது, தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நடைமுறையில் உள்ள சொத்து வரியானது, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநகரங்கள் மற்றும் நகரங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக உள்ளது.

சென்னை மாநகராட்சியில், 600 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடத்திற்கு தற்போது விதிக்கப்படும் குறைந்தபட்ச சொத்துவரி `810 ஆகும். சீராய்விற்குப் பிறகு, இது, `1215 ஆக உயரும். ஆனால், இதே பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டடத்திற்கு, மும்பையில் `2,157 ஆகவும், பெங்களூருவில் `3.464 ஆகவும், கொல்கத்தாவில் `3,510 ஆகவும் மற்றும் புனேவில் `3,924ஆகவும் உள்ளது.

சென்னை மாநகராட்சியில், 600 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடத்திற்கு தற்போது விதிக்கப்படும் அதிகபட்ச சொத்துவரி `3,240 ஆகும். சீராய்விற்குப் பிறகு. இது, `4.860 ஆக உயரும். ஆனால், இதே பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டடத்திற்கு, பெங்களூருவில் `8.660 ஆகவும், கொல்கத்தாவில் `15,984 ஆகவும், புனேவில் `17,112 ஆகவும்மற்றும் மும்பையில் `84,583 ஆகவும் உள்ளது.

கோயம்புத்தூர் மாநகராட்சியில், 600 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடத்திற்கு தற்போது விதிக்கப்படும் குறைந்தபட்ச சொத்துவரி `204 ஆகும். சீராய்விற்குப் பிறகு, இது, `255 ஆக உயரும். ஆனால், இதே பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டடத்திற்கு, லக்னோவில் `648 ஆகவும், இந்தூரில் ` 1324 ஆகவும் மற்றும் அகமதாபாத்தில் `2.103 ஆகவும் உள்ளது.

கோயம்புத்தூர் மாநகராட்சியில், 600 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடத்திற்கு தற்போது விதிக்கப்படும் அதிகபட்ச சொத்துவரி `972 ஆகும். சீராய்விற்குப் பிறகு, இது, `1215 ஆக உயரும். ஆனால், இதே பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டடத்திற்கு, லக்னோவில் `2,160 ஆகவும், இந்தூரில் `2,520 ஆகவும் மற்றும் அகமதாபாத்தில் `5,609ஆகவும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. அல் ரிஹ்லா

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் ஆட்டங்களில் பயன்படுத்தப்படவிருக்கும் கால்பந்து தோகாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

‘அல் ரிஹ்லா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பந்தை, ‘அடிடாஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக தொடர்ந்து 14-ஆவது முறையாக அந்த நிறுவனம் தயாரித்துள்ள பந்து இது. ‘அல் ரிஹ்லா’ என்ற இந்த அரபு மொழிச் சொல்லின் பொருள், ‘பயணம்’ என்பதாகும்.

4. 6,000 இந்திய பொருள்களுக்கு வரி ரத்து

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கையொப்பமானது.

இந்த ஒப்பந்தத்தின்மூலமாக இந்தியாவின் ஆயத்த ஆடைகள், தோல் பொருள்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட 6,000 பொருள்கள் ஆஸ்திரேலியாவின் சந்தைகளுக்கு வரியின்றி சென்றடையவுள்ளன.

5. ‘நெசவு-2022’ கைத்தறி கண்காட்சியை மத்திய அமைச்சர் சென்னையில் தொடங்கிவைத்தார்

இந்திய கைத்தறித் தயாரிப்புகள் மற்றும் கைவினைத் திறனை ஊக்குவிக்கும் முயற்சியில், நெசவாளர்களின் கைவினைப் பொருட்களைக்கொண்ட, “நெசவு-2022” கைத்தறி கண்காட்சியை மத்திய குடிசைத் தொழில் கழகம் நடத்துகிறது.

2022 ஏப்ரல் 2 முதல் 12 வரை, சென்னையில் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.

1. Which Indian company has been named as an official sponsor of the FIFA World Cup Qatar 2022?

A) TATA

B) Paytm

C) BYJU’s 

D) Zomato

  • Indian Ed–tech company BYJU’S has been named as an official sponsor of the FIFA World Cup Qatar 2022. The 2022 FIFA World Cup is scheduled to take place in Qatar from 21 November to 18 December, 2022.

2. ‘Suraksha Kavach 2’ is a Joint Security Exercise organised by Indian Army and which state?

A) Tamil Nadu

B) Telangana

C) Gujarat

D) Maharashtra 

  • Suraksha Kavach 2, a Joint Security Exercise was organised between Indian Army and Maharashtra Police at Lullanagar, Pune. The aim of the exercise was to harmonize the procedures undertaken by Army and Police to counter any likely terrorist actions in Pune.

3. Serdar Berdymukhamedov has won the Presidential Election of which country?

A) Turkmenistan 

B) Iran

C) Pakistan

D) Afghanistan

  • 40–year–old Serdar Berdymukhamedov has won the Presidential Election of Turkmenistan. He is the son of the country’s leader. Berdymukhamedov secured 72.97% of votes in the recently held election and succeeded his father Gurbanguly, as per the Central Election Commission.

4. As per the Final Estimates of 2020–21 of Area and Production of Horticultural Crops, what was the total production in 2020–21?

A) 134.60 million Tonne

B) 234.60 million Tonne

C) 334.60 million Tonne 

D) 434.60 million Tonne

  • The Department of Agriculture and Farmers Welfare released the Final Estimates of 2020–21 and First Advance Estimates of 2021–22 of Area and Production of various Horticultural Crops. Total Horticulture production in 2020–21 is estimated to a record 334.60 million Tonne, an increase of about 4.4% over that achieved in 2019–20.
  • Production of Fruits and Vegetables is estimated to be 102.48 million Tonne and 200.45 million Tonne respectively. Total Horticulture production in 2021–22 is estimated to be 333.3 million Tonne, (decrease of 0.4%) over 2020–21.

5. Which country recently approved a bill to provide USD 52 billion in subsidies for semiconductor chips manufacturing?

A) Russia

B) USA 

C) UK

D) Germany

  • The US Senate approved a bill to provide USD 52 billion in subsidies for semiconductor chips manufacturing. The legislation was sent to the House of Representatives, to launch a formal process known as a “conference”.

6. ‘Jingkieng Jri: Living Root Bridges’, which were seen in the news recently, are situated in which state?

A) Assam

B) Sikkim

C) Meghalaya 

D) Jammu and Kashmir

  • “Jingkieng Jri: Living Root Bridge Cultural Landscapes of Meghalaya” has been included in the UNESCO World Heritage Site tentative list.
  • The Living Root bridges are home to several critically endangered species of flora and fauna. They were built by the indigenous people of Meghalaya, using the living roots of Ficus trees planted on both sides of a river.

7. ‘Indian Agriculture towards 2030’ book was launched by NITI Aayog along with which institution?

A) UNEP

B) FAO 

C) NABARD

D) ICAR

  • Union Minister of Agriculture and Farmers’ Welfare Narendra Singh Tomar released a book titled Indian Agriculture towards 2030: Pathways for Enhancing Farmers’ Income, Nutritional Security and Sustainable Food and Farm Systems.
  • The book captures the outcomes of the dialogue by NITI Aayog and the Ministries of Agriculture and Farmers’ Welfare; and Fisheries, Animal Husbandry and Dairying, and facilitated by Food and Agriculture Organization (FAO) of the UN.

8. Rushikulya beach, which is known for mass nesting of endangered Olive Ridley turtles, is located in which state?

A) Tamil Nadu

B) Odisha 

C) Maharashtra

D) Andhra Pradesh

  • Recently, a record 1,14,305 Olive Ridley turtles arrived at the Rushikulya river mouth for their annual mass nesting. The Rushikulya beach is located in Odisha’s Ganjam district.

9. Who is the Chief Executive Officer (CEO) of Government e–Market (GeM) portal?

A) Nandan Nilekani

B) P K Singh 

C) Amitabh Kant

D) Ramesh Chand

  • The Government e–Market (GeM) portal was launched in 2016, for online purchases of goods and services by all the central government ministries and departments. The Chief Executive Officer (CEO) of GeM announced that the portal has crossed Rs 1 lakh crore during this fiscal year. GeM is among the top five e–public procurement systems globally. The top four states that are buying from the portal are Uttar Pradesh, Delhi, Gujarat, and Madhya Pradesh.

10. Solomon Islands, which has drafted a security deal with China, is located in which Ocean/Sea?

A) Atlantic Ocean

B) Pacific Ocean 

C) Indian Ocean

D) Arabian Sea

  • Solomon Islands, a country of hundreds of islands in the South–Pacific, has confirmed that it is drafting a security deal with China.
  • As per media reports, a Chinese military base could potentially be set up on the island to Australia’s north. This step has triggered concern in neighbouring Australia and other Western allies in the Indo–Pacific.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!