TnpscTnpsc Current Affairs

2nd & 3rd July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

2nd & 3rd July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 2nd & 3rd July 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. உத்தவ் தாக்கரே பதவி விலகிய பிறகு, மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றவர் யார்?

அ. தேவேந்திர பட்னாவிஸ்

ஆ. ஏக்நாத் ஷிண்டே 

இ. சுனில் பிரபு

ஈ. சரத் பவார்

  • மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சராக சிவசேனை கட்சியின் தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல் அமைச்சராக பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிசும் பதவியேற்றனர். மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அவர்களுக்கு பதவிப்பிரமாணமும், இரகசியக்காப்புப்பிரமாணமும் செய்து வைத்தார். இதற்கு முன்னதாக உட்கட்சிப் பூசலால் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பதவி விலகினார்.

2. ‘PSLV Orbital Experimental Module (POEM)’ என்பதுடன் தொடர்புடைய நிறுவனம் எது?

அ. DRDO

ஆ. ISRO 

இ. HAL

ஈ. BHEL

  • PSLV Orbital Experimental Module (POEM) என்பது ISROஇன் முனைய செயற்கைக்கோள் ஏவுகலத்தின் (PSLV) இறுதிக்கட்டத்தைப் பயன்படுத்தி சுற்றுப்பாதையில் சோதனைகளைச் செய்யப் பயன்படும் ஒரு பணித்தளமாகும். PSLV ஏவுகலத்தில், முதல் 3 நிலைகள் மீண்டும் கடலில் விழும் மற்றும் இறுதி நிலை (PS4) செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் செலுத்திய பிறகு, விண்வெளிக்குப்பையாக நிறைவுறும். POEM ஆனது அணுகுமுறை நிலைப்படு -த்தலுக்கான வழிசெலுத்தல் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பைக் கொண்டுள்ளது.

3. இந்தியாவில், ‘தேர்தல் பத்திரங்களை’ வெளியிடும் ஒரே நிறுவனம் எது?

அ. RBI

ஆ. SBI 

இ. NITI ஆயோக்

ஈ. CBDT

  • ஜூலை.1 முதல் அங்கீகரிக்கப்பட்ட SBI கிளைகள்மூலம் 21ஆவது கட்ட தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்ய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. பாரதி வங்கி (SBI) மட்டுமே அதன் 29 அங்கீகரிக்கப்பட்ட கிளைகள்மூலம் தேர்தல் பத்திரங்களை வெளியிடுவதற்கும் பணமாக்குவதற்கும் அங்கீகரிக்கப்பட்ட ஒரே நிறுவனமாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் வட்டியில்லாதவையாயகும்; அவை 15 நாட்களுக்குள் வங்கிக்கணக்குமூலம் கட்சியால் நிதியாக்கப்படும்.

4. 2022 ஜூலையில், கீழ்க்காணும் எந்நிறுவனத்தை, ‘சர்வதேச அமைப்பாக’ வகைப்படுத்த நடுவணமைச்சரவை ஒப்புதலளித்தது?

அ. பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணி

ஆ. BIMSTEC

இ. பேரிடர் தாங்கக்கூடிய உட்கட்டமைப்புக்கான கூட்டணி 

ஈ. ஒரே சூரியன் ஒரே உலகம் ஒரே மின் கட்டமைப்பு

  • பேரிடர் தாங்கும் உட்கட்டமைப்புக்கான கூட்டணியை (CDRI) ‘சர்வதேச அமைப்பாக’ வகைப்படுத்துவதற்கு நடுவண் அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது. 1947ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் (சலுகைகள் மற்றும் தடைகள்) சட்டத்தின் பிரிவு-3இன்கீழ் விதிவிலக்குகள் மற்றும் சலுகைகளை வழங்குவதற்காக, CDRI உடனான தலைமையக ஒப்பந்தத் -தில் கையெழுத்திடவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

5. ‘தானியங்கி பறக்கும் பிரிவு தொழில்நுட்ப செயல்விளக்க விமானத்தை’ சோதனை செய்த இந்திய அமைப்பு எது?

அ. DRDO 

ஆ. NSIL

இ. துருவா ஸ்பேஸ்

ஈ. பிக்ஸ்ஸல் ஸ்பேஸ்

  • தானியங்கி பறக்கும் பிரிவு தொழில்நுட்ப செயல்விளக்க விமானத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) கர்நாடக மாநிலத்தின் சித்ரதுர்காவில் உள்ள வான்சோதனை தளத்தில் முதல்முறையாக வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கக்கூடிய இந்த விமானத்தின் புறப்பாடு, பறக்கும் வழி, தரையிறங்குதல் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் துல்லியமாக அமைந்தது. வருங்காலத்தில் தயாரிக்கப்படும் ஆளில்லா விமானங்களுக்கான முக்கிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் இந்தச் சோதனை ஓட்டம் மாபெரும் சாதனை எனக் கருதப்படுகிறது.

6. 1995-இல் ‘Internet Explorer’ உலாவியை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?

அ. ஆப்பிள்

ஆ. IBM

இ. மைக்ரோசாப்ட் 

ஈ. யாஹூ

  • மைக்ரோசாப்ட் 27 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் தனித்துவமான இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவி சேவையை நிறுத்தியது. இது 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பழைமையான உலாவிகளில் ஒன்றாகும். மைக்ரோசாப்ட் அதன் பயனர்களை அதன் நவீன ‘எட்ஜ்’ உலாவிக்கு மாறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது, அதே வேளையில் பழைய உலாவியின் மெய்நிகர் பதிப்பு பயனர்களுக்குக் கிடைக்கும் எனவும் அது தெரிவித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டில், ‘குரோம்’ ஆனது 70%-க்கும் அதிகமான சந்தைப்பங்கைக்கொண்ட உலகின் மிகவும் பிரபலமான மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படும் உலாவியாக மாறி தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

7. 2022 – பாலைவனமாதல் மற்றும் வறட்சியை எதிர்த்துப் போராடுவதற்கான உலக நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Reduced Harmful Activities.

ஆ. Rising up from Drought Together. 

இ. Healthy Soil; Healthy Earth.

ஈ. Degradation to Restoration.

  • பாலைவனமாதல் மற்றும் வறட்சியை எதிர்த்துப் போராடுவதற்கான உலக நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.17 அன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. பாலைவனமாக்குதலை எதிர்த்து சீரழிந்த நிலத்தை நலமிகு அல்லது வளமிகு மண்ணாக மாற்றுவதில் இந்த நாள் கவனஞ்செலுத்துகிறது. பாலைவனமாதல் மற்றும் வறட்சியை எதிர்த்துப்போராடுவதற்கான உலக நாளின் (2022) கருப்பொருள் – “Rising up from Drought Together.

8. இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. நீதிபதி இரஞ்சனா பிரகாஷ் தேசாய்

 ஆ. நீதிபதி அஜய் குமார் சிக்ரி

இ. நீதிபதி சதாசிவம்

ஈ. நீதிபதி Y சந்திரசூட்

  • இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இரஞ்சனா பிரகாஷ் தேசாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2021 நவம்பரில் பதவியைவிட்டு வெளியேறிய ஓய்வுபெற்ற நீதிபதி சி கே பிரசாத்துக்குப் பதிலாக அவர் நியமிக்கப்பட்டார். நீதிபதி இரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஜம்மு-காஷ்மீர் எல்லை நிர்ணய ஆணையத்தின் தலைவராகவும், மகாராஷ்டிர மாநில அரசின் வழக்கறிஞராகவும், பம்பாய் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் இதற்கு முன் பணியாற்றியுள்ளார்.

9. ஆண்டுதோறும், உலக அரிவாள் செல் சோகை நோய் குறித்த விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜூன்.19 

ஆ. ஜூன்.23

இ. ஜூன்.30

ஈ. ஜூலை.03

  • ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.19 அன்று, அரிவாள் செல் சோகை நோய்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஐநா பொதுச் சபையால் உலக அரிவாள் செல் சோகை நோய் குறித்த விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அரிவாள் செல் சோகை என்பது மரபுவழி கோளாற்றால் ஏற்படும் ஒரு நோயாகும். இந்நோயினால் சிவப்பு இரத்த அணுக்கள் தந்து சாதாரண இருகவிழ் வடிவிற்கு பதிலாக அரிவாள் வடிவமாக மாறும்.

10. குஸ்டாவோ பெட்ரோ என்பார் கீழ்க்காணும் எந்த நாட்டின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி அதிபராவார்?

அ. பிரான்ஸ்

ஆ. கொலம்பியா 

இ. தாய்லாந்து

ஈ. வட கொரியா

  • கொலம்பியாவின் அதிபர் தேர்தலில் முன்னாள் கிளர்ச்சியாளர் குஸ்டாவோ பெட்ரோ பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று நாட்டின் முதல் இடதுசாரி அதிபராக பதவியேற்கவுள்ளார். கடந்த ஆண்டு பெருவில் பெற்ற வெற்றிகள் மற்றும் இந்த ஆண்டு சிலி மற்றும் ஹோண்டுராஸ் வெற்றிகள்மூலம் தென்னமெரிக்க அரசியல் இடதுசாரி அரசியல் பக்கம் சென்றுள்ளது. தொற்றுநோய்காலத்தின்போது ஊழல், தேக்கநிலை, அதிகரித்த வரிவிதிப்பு மற்றும் புதிய சுகாதார சீர்திருத்தத்திற்கு எதிராக அரசிற்கு எதிரான போராட்டங்களை கொலம்பியா கண்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்தியாவுக்கு `13,834 கோடி கடன்: உலக வங்கி ஒப்புதல்

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மற்றும் தனியார் முதலீட்டுக்காக இந்தியாவுக்கு $1.75 பில்லியன் டாலர் (சுமார் `13,834 கோடி) கடனளிக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக உலக வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சுகாதாரத்துக்கு $1 பில்லியன் டாலர், தனியார் முதலீட்டுக்கு $750 மில்லியன் டாலர் என இந்தியாவுக்கு $1.75 பில்லியன் டாலர் கடனளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் சுகாதாரத்துக்கு அளிக்கப்படும் கடன், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் உட்கட்டமைப்பு திட்டத்துக்கு உதவும். இந்தியாவில் உள்ள பொது சுகாதார உட்கட்டமைப்பை மேம்படுத்த இந்தக் கடன் தொகை பயன்படுத்தப்படும்.

சுகாதாரத்துக்கான 1 பில்லியன் டாலரில் 500 மில்லியன் டாலர்மூலம் தமிழ்நாடு, கேரளம், ஆந்திர பிரதேசம், ஒடிஸா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மேகாலயம் ஆகிய ஏழு மாநிலங்கள் பலனடைய முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. ஜூன் மாத GST வருவாய் `1.44 இலட்சம் கோடி

2022 ஜூன் மாதத்தில் சரக்குகள்-சேவைகள் வரி (GST) வருவாய் `1,44,616 கோடியாக இருந்ததென நடுவண் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டு ஜூன் மாத வருவாயுடன் (`92,800 கோடி) ஒப்பிடுகையில் 56 சதவீத அதிகரிப்பாகும். GST மாதாந்திர வருவாய் `1.4 இலட்சம் கோடியைக் கடப்பது இது 5-ஆவது முறையாகும். முக்கியமாக, கடந்த மார்ச்சில் இருந்து தொடர்ந்து 4 மாதங்களாக GST வருவாய் `1.4 இலட்சம் கோடிக்கு அதிகமாகவே உள்ளது.

வரலாற்றிலேயே அதிகபட்சமாக கடந்த ஏப்ரலில் GST வருவாய் `1.68 இலட்சம் கோடியாக இருந்தது. ஜூன் மாத வருவாயான `1.44 இலட்சம் கோடியானது இரண்டாவது அதிகபட்சமாகும். அதில் நடுவண் சரக்கு-சேவை வரியாக (CGST) `25,306 கோடியும், மாநில சரக்கு-சேவை வரியாக (SGST) `32,406 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரியாக (IGST) `75,887 கோடியும் வசூலாகியுள்ளது. செஸ் வரியாக `11,018 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ஜூனுடன் ஒப்பிடுகையில், கடந்த மாதத்தில் பொருள்கள் இறக்குமதி வாயிலான வருவாய் 55 சதவீதமும், உள்நாட்டு பணப்பரிவர்த்தனை வாயிலான வருவாய் 56 சதவீதமும் அதிகரித்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2021-22 நிதியாண்டின் முதல் காலாண்டில் சராசரி GST வருவாயானது `1.10 இலட்சம் கோடியாக இருந்த நிலையில், நடப்பு 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டில் சராசரி வருவாய் `1.51 இலட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதார மீட்சி, வரி ஏய்ப்பில் ஈடுபடுவோர்மீது நடவடிக்கை உள்ளிட்டவை காரணமாக GST வருவாய் அதிகரித்துள்ளதாகவும் நடுவண் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நடப்பாண்டில் GST வருவாய்

ஜனவரி – `1.40 இலட்சம் கோடி

பிப்ரவரி – `1.33 இலட்சம் கோடி

மார்ச் – `1.42 இலட்சம் கோடி

ஏப்ரல் – `1.68 இலட்சம் கோடி

மே – `1.41 இலட்சம் கோடி

ஜூன் – `1.44 இலட்சம் கோடி

3. தங்கம் இறக்குமதி மீதான வரி 15%-ஆக அதிகரிப்பு

நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் வகையில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 15 சதவீதமாக அதிகரிப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் கூறியது:

இந்தியா அதிக அளவில் தங்கத்தை உற்பத்தி செய்வது கிடையாது. எனவே, தங்கத்தின் இறக்குமதி நாட்டின் செலாவணி கையிருப்பில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

தங்கத்தின் தேவை மாற்றமில்லாமல் உள்ளது. எனவே, அதனை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது இறக்குமதி செய்ய விரும்பினால் அதற்கு அதிக விலை கொடுக்கவேண்டும். இதன்மூலம் நாட்டுக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு வருவாய் கிடைக்கும். அதிகரித்துவரும் நடப்பு கணக்கு பற்றாக்குறை இடைவெளியை கட்டுப்படுத்தும் வகையில் தங்கம் இறக்குமதி மீதான வரி 10.75 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த வரி விகித மாற்றம் ஜூன் 30-லிருந்து அமல்படுத்தப்படுகிறது என்றார் அவர். கடந்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீதமாக இருந்த நடப்பு கணக்கு பற்றாக்குறை நிகழ் 2022-23-ஆம் நிதியாண்டில் 3 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4. `25,600 கோடியில் செமிகண்டக்டர் உயர் தொழில்நுட்பப்பூங்கா: தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாட்டில் `25,600 கோடியில் செமிகண்டக்டர் உயர்தொழில்நுட்பப்பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு அரசுக்கும், சிங்கப்பூரின் IGSSV கூட்டாண்மை நிறுவனத்துக்கும் இடையே கையொப்பமானது. இந்த நிறுவனமானது, அடுத்த 5 ஆண்டுகளில் செமிகண்டக்டர் உயர்தொழில்நுட்பப் பூங்காவுக்கான திட்டத்தில் `25,600 கோடி முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் 1,500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும். IGSSV நிறுவனமானது, ‘புராஜெக்ட் சூரியா’ என்ற பெயரில் செமிகண்டக்டர் தொழில்நுட்பத் திட்டத்தை நிறுவவுள்ளது.

5. மாநில அணை பாதுகாப்பு அமைப்பு உருவாக்கம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

அணை பாதுகாப்புச் சட்டம் 2021-இன்படி, மாநில அணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி தமிழ்நாடு அரசு ஆணையிட்டது.

இதுதொடர்பாக தமிழ்நாட்டு அரசிதழில் வெளியிடப்பட்ட ஆணை:

நடுவண் அணை பாதுகாப்புச் சட்டத்தின் 11-ஆவது பிரிவின்படி, மாநில அணை பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதன்படி, மாநில அணை பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இந்த அமைப்பின் தலைவராக தலைமைப்பொறியாளர் (பொது) இருப்பார். உறுப்பினர்களாக, நீர்வளத்துறை தலைமைப்பொறியாளர், சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி மண்டல நீர்வளத் துறை தலைமைப்பொறியாளர்கள், மின்வாரிய தலைமைப் பொறியாளர் (நீர்மின் சக்தி), மத்திய எரிசக்தி ஆணையத்தின் தலைமைப் பொறியாளர், மேல் பவானி அணைகளின் தலைமைப் பொறியாளர், வீடூர் அணையின் தலைமைப் பொறியாளர், சென்னை ஐஐடி இயக்குநர் (அணை வடிவமைப்பு), அண்ணா பல்கலைக்கழக நீர்வளமையப்பிரிவின் இயக்குநர், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் அணை வடிவமைப்புப் பிரிவு இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.

6. கரோனாவுக்கு ஆயுஷ் சிகிச்சை முறை தொகுப்பு: NITI ஆயோக் வெளியீடு

கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தல் மற்றும் மேலாண்மையில் ஆயுஷ் அடிப்படையிலான சிகிச்சை முறையில் நாடு முழுக்க பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பின்பற்றப்பட்டு தீர்வுகாணப்பட்ட ‘கரோனா நோய்த்தொற்று மேலாண்மை: ஆயுஷ் சிகிச்சை முறை’ தொகுப்பை NITI ஆயோக் வெளியிட்டது.

ஆயுர்வேதம், யோகா, மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகிய மருத்துவங்கள் ஒருங்கிணைத்திருப்பது ஆயுஷ் அடிப்படை சிகிச்சை.

தமிழ்நாட்டில் COVID நோய்த்தொற்றுக்காலக்கட்டத்தில் வழங்கப்பட்ட கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் போன்றவை மூலம் நோய்த்தடுப்பு முறைகள் சிறப்பாக செயல்பட்டதுபற்றி தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சான்றுகள் அடிப்படையிலான ஆயுஷ் சேவைகளை நவீன முறையுடன் ஒருங்கிணைப்பது இந்தியாவின் சுகாதார அமைப்பை கணிசமாக வலுப்படுத்தும் எனவும் NITI ஆயோக் வெளியிட்ட இந்தத் தொகுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. Who has sworn in as the new Chief Minister of Maharashtra, after the resignation of Uddhav Thackeray?

A. Devendra Fadnavis

B. Eknath Shinde 

C. Sunil Prabhu

D. Sharad Pawar

  • Shiv Sena rebel leader Eknath Shinde sworn in as Maharashtra CM while BJP leader Devendra Fadnavis sworn in as the deputy chief minister. Maharashtra Governor Bhagat Singh Koshyari administered the oath of office and secrecy to the leaders. This was preceded by the resignation of the former CM Uddhav Thakarey amidst an internal party rebellion.

2. ‘PSLV Orbital Experimental Module (POEM)’ is associated with which organisation?

A. DRDO

B. ISRO 

C. HAL

D. BHEL

  • The PSLV Orbital Experimental Module is a platform which is used to perform in–orbit experiments using the final stage of ISRO’s Polar Satellite Launch Vehicle (PSLV). In the PSLV rocket, first three stages fall back into the ocean and the final stage (PS4) ends up as space junk, after launching the satellite into orbit. POEM has a Navigation Guidance and Control (NGC) system for attitude stabilisation.

3. Which is the only institution in India to issue “Electoral bonds”?

A. RBI B. SBI 🗹

C. NITI Aayog D. CBDT

  • The government has approved the issuance of 21st phase of sale of electoral bonds through authorised SBI branches from July 1. State Bank of India (SBI) is the only authorised institution to issue and encash Electoral Bonds through its 29 Authorized Branches.
  • The Electoral bonds are interest–free bearer instruments, which can be encashed by the party through a Bank account within 15 days.

4. The Union Cabinet approved the categorization of which institution as an ‘International Organization’, in July 2022?

A. International Solar Alliance

B. BIMSTEC

C. Coalition for Disaster Resilient Infrastructure 

D. One Sun One World One Grid

  • The Union Cabinet approved the categorization of Coalition for Disaster Resilient Infrastructure (CDRI) as an ‘International Organization’. The cabinet also approved signing of the Headquarters Agreement (HQA) with CDRI, for grant of exemptions and privileges under Section–3 of the United Nations (Privileges & Immunities) Act, 1947.

5. Which Indian organisation carried out the maiden flight test of ‘Autonomous flying wing technology demonstrator’?

A. DRDO 

B. NSIL

C. Dhruva Airspace

D. Pixxel Space

  • Defence Research and Development Organisation (DRDO) carried out the maiden flight test of the ‘autonomous flying wing technology demonstrator’ in Karnataka. The test, carried out from the Aeronautical Test Range in Chitradurga, Karnataka is being seen as an important milestone towards developing unmanned aircraft technology in India.

6. Which company launched ‘Internet Explorer (IE) browser’ in 1995?

A. Apple

B. IBM

C. Microsoft 

D. Yahoo

  • Microsoft has shut down its iconic Internet Explorer (IE) browser after 27 years. It was one of the oldest browsers launched in the year 1995. Microsoft has asked its users to switch to its modern Edge browser, while the virtual version of the older browser will be available to users. In 2022, Chrome is the most popular and widely used browser in the world with over 70 % market share.

7. What is the theme of the ‘World Day to Combat Desertification and Drought’ 2022?

A. Reduced Harmful Activities.

B. Rising up from Drought Together. 

C. Healthy Soil; Healthy Earth.

D. Degradation to Restoration.

  • World Day to Combat Desertification and Drought is marked every year on 17 June across the world. The day focuses on turning degraded land into healthy or fertile soil to combat desertification. The theme for World Day to Combat Desertification and Drought is – Rising up from drought together.

8. Who has been appointed as the Chairperson of the Press Council of India?

A. Justice Ranjana Prakash Desai 

B. Justice Ajay Kumar Sikri

C. Justice Sadasivam

D. Justice Y Chandrachud

  • Former Supreme Court Judge Justice Ranjana Prakash Desai has been nominated as Chairperson of the Press Council of India. She replaced the retired Justice CK Prasad who vacated office in November 2021. Justice Desai has also served as the chairman of the Delimitation Commission on Jammu and Kashmir, Public prosecutor for the state of Maharashtra and as a Judge on the Bombay High Court.

9. When is the ‘World Sickle Cell Awareness Day’ observed every year?

A. June.19 

B. June.23

C. June.30

D. July.03

  • Every year on the 19th of June, the World Sickle Cell Day (SCD) event is conducted by the United Nations General Assembly to raise awareness of sickle cell disease. Sickle cell anaemia is a group of inherited disorders that cause red blood cells to become sickle in shape instead of normal biconcave shape.

10. Gustavo Petro is the newly elected leftist President of which country?

A. France

B. Colombia 

C. Thailand

D. North Korea

  • Former rebel fighter Gustavo Petro secured majority of votes in the Colombia’s presidential election and is set to become the first leftist President of the country. A shift of South American politics to the left has been observed with the victories in Peru last year, and in Chile and Honduras this year. During the pandemic, Colombia saw anti–establishment protests against corruption, stagnancy, increased taxation and a new health care reform.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!