TnpscTnpsc Current Affairs

2nd & 3rd October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

2nd & 3rd October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 2nd & 3rd October 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. எந்தத் தெற்கு பசிபிக் பெருங்கடல் நாடு சமீபத்தில் காலநிலை மாற்றம் குறித்து பன்னாட்டு நீதிமன்றத்தை நாடியது?

அ) பிஜி

ஆ) ஆஸ்திரேலியா

இ) வனுவாட்டு 

ஈ) பப்புவா நியூ கினி

  • தென் பசிபிக் பெருங்கடல் நாடான 80 தீவுகளைக் கொண்ட வனுவாட்டு, சமீபத்தில் காலநிலை மாற்றத்தின் விளைவுகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டிய தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினரின் உரிமைகள் குறித்த கருத்தை வெளியிட பன்னாட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்தத் தீவு நாடுகளில் கடல் மட்டம் மற்றும் வழக்கமான புயல்களை அதிகரித்து வருகின்றன. வனுவாட்டு சுமார் 280,000 மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. ஐநா பொதுச்சபை (UNGA) மூலம் இந்த முயற்சியை வனுவாட்டு அமைக்கவுள்ளது.

2. இந்தியாவில், “டிஜிட்டல் ஸ்கை” தளத்தை இயக்குகிற நிறுவனம் எது?

அ) NITI ஆயோக்

ஆ) இந்திய ரிசர்வ் வங்கி

இ) சிவில் வான்போக்குவரத்து இயக்குநரகம் 

ஈ) தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

  • “டிஜிட்டல் ஸ்கை” தளம் இந்தியாவில் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் மூலம் இயக்கப்படுகிறது. சமீபத்தில், உள்நாட்டு விமானப்போக்குவரத்து அமைச்சகம், இந்தியாவில் டிரோன் நடவடிக்கைகளுக்காக பிரத்யேகமா -க ஒரு வான்வெளி வரைபடத்தை வெளியிட்டது. இந்த வரைபடத்தை “டிஜிட்டல் ஸ்கை” தளத்தைப் பயன்படுத்தி அணுகலாம். இந்த வரைபடத் -தின்படி, டிரோன் செயல்பாடுகளுக்காக வான்வெளி பச்சை, சிவப்பு மற்றும் மஞ்சள் மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

3. வங்கிகளுடனான வைப்பு குறித்த அறிக்கையை, அவ்வப்போது வெளியிடப்படுகிற அமைப்பு எது?

அ) டிஐசிஜிசி

ஆ) ஆர் பி ஐ 

இ) நிதி அமைச்சகம்

ஈ) ஐபிஏ

  • வங்கிகளுடனான வைப்பு குறித்த அறிக்கை இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது. இது, 2019-20ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 2020-21ஆம் நிதியாண்டில், வங்கி வைப்பு, ஆண்டுக்கு 11.9% அதிகரித்துள்ளது என்று கூறுகிறது. இதற்கு காரணம் CASA (நடப்பு கணக்கு – சேமிப்புக் கணக்கு வைப்பு) வளர்ச்சியாகும். மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், கர்நாடகா ஆகியவை இந்தியாவின் மொத்த வங்கி வைப்புத் தொகையில் 1/3 பங்கு என அறிக்கை கூறுகிறது.

4. PFRDA’ஆல் எந்தத் தேதியில் தேசிய ஓய்வூதிய அமைப்பு திவாஸ் அனுசரிக்கப்படுகிறது?

அ) அக்டோபர்.1 

ஆ) அக்டோபர்.2

இ) அக்டோபர்.3

ஈ) அக்டோபர்.4

  • ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது (PFRDA) அக்.1ஆம் தேதியை தேசிய ஓய்வூதிய அமைப்பு திவாஸாக கொண்டாட முன்மொழிந்துள்ளது. இது ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியத் திட்டத்தை ஊக்குவிப்பதற்கான PFRDA’இன் ஒருபகுதியாகும்.
  • #npsdiwas என்ற தலைப்பில் ஒரு பரப்புரை சமூக ஊடகங்களில் விளம்ப -ரப்படுத்தப்படுகிறது. PFRDA என்பது மத்திய நிதியமைச்சகத்தின்கீழ் உள்ள ஒரு சட்டரீதியான மற்றும் ஒழுங்குமுறை அமைப்பாகும். அதன் தற்போதைய தலைவர் சுப்ரதிம் பாண்டியோபாத்யாய் ஆவார்.

5. முதல் இமாலய திரைப்பட விழாவை நடத்திய இந்திய மாநிலம் / UT எது?

அ) லடாக் 

ஆ) உத்தரகாண்ட்

இ) சிக்கிம்

ஈ) ஜம்மு காஷ்மீர்

  • முதலாவது இமாலய திரைப்பட விழாவை லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே நகரத்தில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் தொடங்கிவைத்தார். இந்தியாவின் 75 ஆண்டுகள் சுதந்திரத்தை கொண்டாடும் விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக செப்.24 முதல் 28 வரை இந்த ஐந்து நாள் திரைப்பட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் திரைப்பட விழாக்கள் இயக்குநரகத்துடன் இணைந்து லடாக் யூனியன் பிரதேச நிர்வாகம் இதை நடத்துகிறது. இது லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சிலுடன் இணைந்து நடத்தப்படுகிறது.

6. பிரீடம் ஹவுஸால் தொடர்ச்சியாக ஏழாவது ஆண்டாக இணைய சுதந்திரத்திற்கான மோசமான சூழல் உள்ள நாடாக அறிவிக்கப்பட்டு உள்ள நாடு எது?

அ) சீனா 

ஆ) வட கொரியா

இ) சிரியா

ஈ) ஈராக்

  • அமெரிக்காவைச்சார்ந்த இலாப நோக்கற்ற நிறுவனமான பிரீடம் ஹவுஸ் சமீபத்தில் இணைய சுதந்திரம், டிஜிட்டல் உரிமைகள், தகவல் சுதந்திரம் மற்றும் இணைய அணுகல் உரிமை ஆகியவை அடங்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, இணைய சுதந்திரமானது உலகளவில் தொடர்ச்சியாக 11ஆவது ஆண்டாக குறைந்துள்ளது.
  • மியான்மர், பெலாரஸ் & உகாண்டாவில் மிகப்பெரிய சேதம் நிகழ்த்தும் விளைவுகள் காணப்பட்டன. தொடர்ச்சியாக 7ஆம் ஆண்டாக இணைய சுதந்திரத்திற்கான மோசமான சூழல் உடைய நாடாக சீன நாடு தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற அபிஷேக் வர்மாவுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ) டென்னிஸ்

ஆ) பூப்பந்து

இ) வில்வித்தை 

ஈ) மட்டைப்பந்து

  • மும்முறை உலகக்கோப்பையில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியாவின் ‘காம்பவுண்ட்’ வில்வித்தை வீரர் அபிஷேக் வர்மா உலக வில்வித்தை விளையாட்டு வீரர்களின் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உலக வில்வித்தை சாம்பியனான ரஷ்யாவின் நடாலியா அவ்தீவா மற்றும் இந்தியாவின் அபிஷேக் வர்மா ஆகியோர் நான்கு ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • 32 வயதான அபிஷேக் வர்மா, ‘அர்ஜுனா’ விருது பெற்றவராவார். இந்த ஆண்டு தொடக்கத்தில் போலந்து (2015) மற்றும் பாரிஸில் நடந்த உலகக்கோப்பையில் அவர் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஜோதி சுரேகா வென்னம் உடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ) டென்னிஸ்

ஆ) ஸ்குவாஷ்

இ) வில்வித்தை 

ஈ) துப்பாக்கிச்சுடுதல்

  • யாங்டனில் நடைபெற்று வரும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் ‘காம்பவுண்ட்’ பிரிவு போட்டியில் ஜோதி சுரேகா வென்னம் வெள்ளி வென்றுள்ளார். இறுதிப்போட்டியில், உலகின் 3ஆம் நிலையிலுள்ள கொலம்பியாவின் சாரா லோபஸால் அவர் தோற்கடிக்கப்பட்டார். முன்னதாக, உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய பெண்கள் மற்றும் கலப்பு கூட்டு அணிகள் வெள்ளிகளை வென்றன. இந்திய பெண்கள் அணியில் ஜோதி, முஸ்கான் கிரார் மற்றும் பிரியா குர்ஜார் ஆகியோர் அடங்குவர்.

9. நியூயார்க்கில் நடைபெற்ற தகவல் மற்றும் ஜனநாயகத்திற்கான உச்சிமாநாட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியவர் யார்?

அ) நரேந்திர மோடி

ஆ) அனுராக் தாக்கூர் 

இ) பியூஷ் கோயல்

ஈ) நிர்மலா சீதாராமன்

  • ஐநா பொதுச்சபை கூட்டத்தையொட்டி நியூயார்க்கில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தகவல் மற்றும் ஜனநாயகத்திற்கான உச்சிமாநாட்டில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் உரையாற்றினார். ‘தகவல் மற்றும் ஜனநாயகத்திற்கான சர்வதேச கூட்டணி’ நியூயார்க்கில் கடந்த 2019ஆம் ஆண்டு செப்.26 அன்று தொடங்கப்பட்டது. இது கருத்து மற்றும் கருத்து சுதந்திரம் மற்றும் இலவச, பன்மை மற்றும் நம்பகமான தகவல்களுக்கான அணுகலை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இக்கூட்டாண்மையில் இன்றுவரை 43 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

10. வங்காள விரிகுடாவில் உருவான 3ஆவது செப்டம்பர் புயலின் சூறாவளியின் பெயர் என்ன?

அ) கிசா

ஆ) குலாப் 

இ) ஜீனா

ஈ) குணா

  • குலாப் சூறாவளி, ஆந்திர பிரதேச மாநிலத்தில் கரையைக் கடந்தது. ஆந்திரா மற்றும் ஒடிசா இடையேயான நிலப்பரப்பை அது தாக்கியது. யாஸ் புயல், ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலம் முழுவதும் அழிவை ஏற்படுத்திய நான்கு மாதங்களுக்குப் பிறகு, தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர பிரதேச கடற்கரையில் மற்றொரு சூறாவளி உருவானது.
  • 21ஆம் நூற்றாண்டில், இரண்டு வெப்பமண்டல சூறாவளிகள் – தயே (2018) மற்றும் பியார் (2005) – வங்காள விரிகுடாவில் இருந்து இந்திய கிழக்கு கடற்கரையில் கரையை கடந்தது. செப்டம்பர் மாதத்தில் கரையைக் கடந்த ‘குலாப்’ புயல் இதுபோன்ற மூன்றாவது புயலாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. அக்.1 – தன்னார்வ இரத்த தான நாள்

கருப்பொருள்: உயிர்க்காக்கும் உதிரதானம்.

2. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி விருது அறிவிப்பு

சென்னை புத்தகக் கண்காட்சியை நடத்தும் பபாசி வழங்கும் 2021ஆம் ஆண்டிற்கான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி விருது வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பபாசி வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

2007-ல் 30ஆவது சென்னை புத்தகக் காட்சியை துவக்கிவைத்த, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தம் சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயை பபாசியிடம் வழங்கி, ஆண்டுதோறும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும் ஒரு பிறமொழி எழுத்தாளருக்கும் ஒரு ஆங்கில மொழி எழுத்தாளருக்கும் தலா ஒரு லட்சம் வீதம் பொற்கிழியும், விருதும் வழங்கக் கூறினார்கள். அதற்காக பபாசியால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையில் இருந்து, கவிதை, புனைவிலக்கியம், உரைநடை, நாடகம் ஆகியவற்றில் சிறந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் எழுதும் சிறந்த 2 பேருக்கும் ஆண்டுதோறும் விருது மற்றும் `1 லட்சம் பணமும் அளித்துக் கவுரவித்து வருகிறது. அதன்படி 2007ல் இருந்து இதுவரை 84 எழுத்தாளர்களுக்கு 84 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான விருதாளர்களை அதற்காக அமைக்கப்பெற்ற குழு தேர்வு செய்துள்ளது. தேர்வுபெற்ற விருதாளர்கள் பட்டியலை பபாசியின் தலைவர் ஆர்.எஸ் சண்முகம் அவர்கள் அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக நடைபெறாமல் நின்றுவிட்ட 2020ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவும் 2021ஆம் ஆண்டுக்கான விழாவுடன் இணைந்து நடைபெறும். விழா குறித்த தேதி மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று பபாசி தலைவர் அறிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு விருது பெறும் விருதாளர்கள்:

1. அபி – கவிதை

2. இராசேந்திர சோழன் – புனைவிலக்கியம்

3. எஸ் ராமகிருஷ்ணன் – உரைநடை

4. வெளி ரங்கராஜன் – நாடகம்

5. மருதநாயகம் – ஆங்கிலம்

6. நதித் சாகியா – பிற இந்திய மொழி (காஷ்மீரி)

3. 3,200 ஆண்டுகளுக்கு முந்தைய பொருநை நாகரிகம்; ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் அகழாய்வு நிறைவு: 2,000’க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்கள் கண்டெடுப்பு

ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும்கொற்கையில், 3,200 ஆண்டுகளுக்கு முந்தைய ‘பொருநைநாகரிகத்தை’ வெளிக்கொணர்ந்த அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்தன. இதில், 2,000-க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தமிழக தொல்லியல் துறை சார்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி கரையில் உள்ள ஆதிச்சநல்லூர், சிவகளையில் 2-ம் கட்டமாகவும், பாண்டியர்களின் துறைமுக நகரான கொற்கையில் முதல் கட்டமாகவும் கடந்த 7 மாதங்களாக அகழாய்வுப் பணி நடைபெற்றது. நேற்று முன்தினம் பணி நிறைவுபெற்றது. ஆதிச்சநல்லூரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு, அகழாய்வுநடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கொற்கையில் 1,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. குறிப்பாக, 9 அடுக்குகள் கொண்ட திரவப்பொருட்களை வடிகட்டும் குழாய், சங்க இலக்கியத்தில் கூறப்படும் 29 அடுக்குகள் கொண்ட செங்கல் கட்டுமான அமைப்பு, இரண்டடுக்கு கொள்கலன், சங்கு அறுக்கும் தொழிற்கூடம், தமிழ் பிராமி எழுத்துகள், குறியீடுகள், சங்குகள், சங்கு வளையல்கள், வண்ண பாசிமணிகள், பானைகள், ரோம் மற்றும் சீன நாட்டுப் பானை ஓடுகள், சுடுமண் உருவபொம்மைகள் எனஏராளமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சிவகளையில் பரம்பு, பேட்மா நகரம், மூலக்கரை ஆகிய 3 இடங்களில் 18 குழிகளும், பராக்கிரமபாண்டி திரடு, ஆவாரங்காடு திரடு, பொட்டல் திரடு, செக்கடி ஆகிய நான்கு இடங்களில் வாழ்விடப் பகுதிகளை கண்டறிவதற்காக 8 குழிகளும் அமைக்கப்பட்டன. பரம்பு பகுதியில் 400’க்கும் மேற்பட்ட பொருட்களும், வாழ்விடப் பகுதிகளில் 300’க்கும் மேற்பட்ட பொருட்கள் & 48 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

குழந்தைகள் விளையாடும் வட்ட சில்கள், பெண்கள் அணியும் காதணிகள், சதுரங்க காய்கள், நூல் நூற்கப் பயன்படும் தக்களி, சுடுமண்ணால் செய்யப்பட்ட முத்திரைகள், சுடுமண் பந்து, சுடுமண்சக்கரம், நுண்கற்கால கருவிகள், பட்டை தீட்டும் கற்கள், எலும்புகளால் ஆன கூர்முனைக் கருவிகள், அம்மி குழவி, கண்ணாடி வளையல்கள், சங்கு வளையல்கள், பாசிமணிகள், சீன நாட்டு நாணயம், காப்பர் குழாய், சீன பானை ஓடுகள், வாள், கத்தி என ஏராளமான பொருட்கள் கிடைத்தன. ஆவாரங்காடு திரட்டில் சுடாத செங்கல்லால் அமைக்கப்பட்ட கட்டுமானம், பராக்கிரமபாண்டி திரட்டில் செங்கல்லால் கட்டப்பட்ட கழிவுநீர் வடிகால் என பல முக்கியத்துவம் வாய்ந்த தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மூலக்கரை பகுதியில் கல்வட்டங்கள் கிடைத்தன.

சிவகளையில் கிடைத்த முதுமக்கள் தாழியில் இருந்து எடுக்கப்பட்ட நெல்மணிகளை ஆய்வு மேற்கொண்டதில், அவற்றின் வயது 3,200 ஆண்டுகள் என்றும், தாமிரபரணிக்கரை ‘பொருநை நாகரிகத்தின்’ வயது 3,200 ஆண்டுகள் என்றும், தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார். இதை பெருமைப்படுத்தும் விதமாக திருநெல்வேலியில் `15 கோடி மதிப்பில் ‘பொருநைஅருங்காட்சியகம்’ அமைக்கப்படும். அங்கு, ஆதிச்ச நல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார். சிவகளையில் மூன்றாம் கட்ட அகழாய்வும், கொற்கையில் கடல்சார் ஆய்வும் அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ளன.

4. செப்டம்பரில் `1.17 லட்சம் கோடி GST வசூல்: 5 மாதங்களில இல்லாத உயர்வு

கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த GST வருவாயாக `1,17,010 கோடி வசூலாகி உள்ளது. இது கடந்த 5 மாதங்களில் இல்லாத அதிக வசூலாகும். தொடர்ந்து 3 மாதங்களாக ஒரு லட்சம் கோடிக்கு மேல் GST வசூலாகியுள்ளது. இது தொடா்பாக நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

செப்டம்பர் மாதத்தில் மொத்தம் `1,17,010 கோடி GST வசூலாகி உள்ளது. இதில் மத்திய GSTயாக `20,578 கோடி, மாநில GSTயாக `26,767 கோடி, ஒருங்கிணைந்த GST ஆக `60,911 கோடி (இறக்குமதி பொருள்கள் மீது வசூலிக்கப்பட்ட `29,555 கோடி உள்பட) & கூடுதல் (செஸ்) வரியாக `8,754 கோடியும் (இறக்குமதி பொருள்களுக்கா -க வசூலிக்கப்பட்ட `623 கோடி உள்பட) வசூலாகியுள்ளது.

செப்டம்பர் மாத வருவாய் கடந்த ஆண்டு இதே காலத்தில் கிடைத்த GST வருவாயைவிட 23% அதிகமாகும். கடந்தாண்டு இதேமாதத்தில் கிடைத்ததைவிட, இந்த மாதத்தில் பொருள்கள்மூலம் கிடைக்கும் வருவாய் 30% அதிகம் & உள்நாட்டு பரிவர்த்தனைமூலம் கிடைக்கும் வருவாய் (சேவை இறக்குமதி உள்பட) 20% அதிகமாகும். செப்டம்பர் 2019-இல் `91,916 கோடி வருவாய் கிடைத்த நிலையில் 2020 செப்டம்பரிலேயே அதைவிட 4% அதிக வருவாய் கிடைத்தது.

நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில், மாதாந்திர மொத்த GST வசூல் சராசரி `1.15 லட்சம் கோடி. இது ஆண்டின் முதல் காலாண்டில் கிடைத்த மாதாந்திர வசூலான `1.10 லட்சம் கோடியைவிட 5% அதிகமாகும். இது நாட்டின் பொருளாதாரம் வேகமாக எழுச்சி பெற்றுவருவதை தெளிவாக உணர்த்துகிறது.

பொருளாதார வளர்ச்சியுடன், வரி ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கைகள், குறிப்பாக போலி ரசீது தயாரிப்பவார்களுக்கு எதிரான நடவடிக்கை GST வசூல் அதிகரிப்புக்கு காரணமாகியுள்ளது. வருவாய்க்கான இந்தச் சாதகமான போக்கு தொடர்வதுடன் ஆண்டின் இரண்டாவது அரை ஆண்டில் கூடுதல் வருவாய் கிடைக்கச் செய்யும். மாநிலங்களின் GST வருவாய்ப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கான இழப்பீடாக `22 ஆயிரம் கோடியையும் மத்திய அரசு விடுவித்துள்ளது.

தமிழ்நாட்டின் GST வருவாய் கடந்த ஆண்டு செப்டம்பரில் `6,454 கோடி இருந்த நிலையில் இந்த ஆண்டு செப்டம்பரில் 21% அதிகரித்து `7,842 கோடி வசூலாகியுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

5. தமிழகத்துக்கு `1,112 கோடி கடன்: உலக வங்கி ஒப்புதல்

தமிழகத்துக்கு `1,112 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை நகரை பருவநிலை மாற்றங்களுக்கு உகந்த அதிக பசுமை நிறைந்ததாகவும், வாழ்வதற்குத் தகுதியுள்ள வகையிலும் உலகத் தரத்திலான நகரமாக உருவாக்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு உதவும் வகையிலும் இந்தக் கடனை வழங்க ஒப்புதல் அளித்திருப்பதாக உலக வங்கி அதன் செயல் இயக்குநர்கள் குழுவிடம் தெரிவித்தது.

இதுதவிர, மேகாலய மாநிலத்தில் சுகாதார சேவைகளைத் தரம் உயர்த்தவும், கரோனா பாதிப்பு உள்ளிட்ட அவசரகால மருத்துவத் தேவைகளைக் கையாளும் வகையில் மாநிலத்தின் திறனை மேம்படுத்தும் வகையிலான திட்டத்துக்காக அந்த மாநிலத்துக்கு `296 கோடி கடன் வழங்கவும் உலக வங்கி ஒப்புதல் அளித்திருக்கிறது.

இதுதொடர்பாக உலக வங்கி தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுமார் ஒரு கோடி மக்கள்தொகையுடன் இந்தியாவில் நான்காவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநகரமாக சென்னை உள்ளது. மாநிலத்தின் பொருளாதார மையமாக விளங்கும் சென்னை, இயற்கைப்பேரிடர், பருவநிலைமாற்ற பாதிப்புகளால் அதிகம் பாதிப்புறக்கூடிய நகரமாகவும் உள்ளது.

இத்தகைய சூழலில் ‘சென்னை நகர கூட்டுறவு: நிலைத்த நகர்ப்புற சேவைகள் திட்டம்’ என்ற திட்டத்தின்கீழ் `1,112 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்திருப்பது, நகரின் சேவைத் துறைகளின் நிதி நிலையை மேம்படுத்த உதவும் என்பதோடு, குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அகற்றுதல், போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகிய 4 முக்கிய நகர்ப்புற சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் உதவும். மேகாலயத்துக்கு வழங்கப்பட இருக்கும் கடன்மூலம், அந்த மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களும் பயன்பெறும். அதோடு, மாநிலத்தின் ஆரம்ப சுகாதார மையம் மற்றும் இரண்டாம் நிலை சுகாதார மைய ஊழியர்கள், அவர்களுடைய மேலாண்மைத் திறன் மற்றும் சிகிச்சையளிக்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்திக்கொள்ளவும் உதவும். குறிப்பாக, மாநில மருத்துவ சுகாதார சேவைகளை பெண்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள இந்தத் திட்டம் உதவும்.

மேகாலயத்தில் 5 வயதுக்குள்பட்ட இறப்பு விகிதம் 2019-20-ஆம் ஆண்டில் 1,000 பிறப்புகளுக்கு 40 உயிரிழப்புகள் என்ற விகிதத்தில் இருந்தது. இது முந்தைய 2015-16-ஆம் ஆண்டு கணக்கெடுப்பைக் காட்டிலும் சற்று கூடுதலாகும். இந்த விவகாரத்தில் மாநிலத்தின் ஒருசில மாவட்டங்கள் சிறப்பாக செயல்பட்டபோதும், கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் இடையேயான வேறுபாடு தொடர்கிறது.

பெரும்பாலான சுகாதாரக் குறியீடுகளில் நகர்ப்புறங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. அதே நேரம், தொற்றும் தன்மை அல்லாத உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் புற்றுநோய் பாதிப்புகள் மேகலாயத்தில் அதிகரித்துக் காணப்படுகின்றன என்று உலக வங்கி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. பாதுகாப்பு தொழில்துறைக்கான கூட்டு செயற்குழு: இந்தியா – அமெரிக்கா முடிவு

இந்தியா மற்றும் அமெரிக்க பாதுகாப்புத் தொழில்துறைகள் தொடர்பான கூட்டு செயற்குழுவை அமைக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவ -து: கடந்த ஐந்து நாள்களாக தில்லியில் நடைபெற்று வந்த இந்திய – அமெரிக்க தொழில்துறை பாதுகாப்பு மாநாடு நிறைவடைந்தது.

பாதுகாப்பு தொடா்பான தளவாடங்கள் மற்றும் மென்பொருள்களை உருவாக்கி வரும் இருநாட்டு நிறுவனங்கள், தங்களிடையே முக்கியத்து -வம் வாய்ந்த இரகசியத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கான வரையறைகளை உருவாக்கும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்பட்டது.

பாதுகாப்பு உற்பத்தியில இந்திய தனியார் நிறுவனங்களும் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களிடம் ராணுவ ரகசியத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கான நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று முன்னணி அமெரிக்க பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் வலியுறுத்தி வந்தன. அதனை நிறைவு செய்வதற்காக நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், இதுதொடர்பான கூட்டு செயற்குழுவை அமைக்க கொள்கை ரீதியில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

அந்தக் குழு அவ்வப்போது சந்தித்து, அதிநவீன தொழில்நுட்பங்களை பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் தங்களிடையே பரிமாறிக் கொள்வதற்கான கொள்கைகளையும் நடைமுறைகளையும் நிர்ணயிக்கும் என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

7. ஜல் ஜீவன் செயலி: பிரதமர் மோடி இன்று அறிமுகம்

ஜல் ஜீவன் செயலியை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்தார். இதன்மூலம் இந்தியாவில் செயல்படுத்தப்படும் குடிநீர் விநியோகத் திட்டம் மேலும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதுடன், அதன் மூலம் பயனடைபவர்களுக்கும் போதிய விழிப்புணர்வு கிடைக்கும்.

ஜல் ஜீவன் இயக்க கிராம பஞ்சாயத்துகள் மற்றும் பானி சமிதிகளுடன் (நீர் வழங்கும் குழுக்கள்) காணொலி முறையில் கலந்துரையாடுகிறர். மேலும், உலகின் எந்தப் பகுதியில் இருக்கும் தனிநபர்களும் நிறுவனங்களும் இந்தியாவில் குடிநீர் விநியோகத் திட்டத்துக்கு நிதியதவி அளிக்கும் ராஷ்ட்ரீய ஜல் ஜீவன் கோஷ் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான தண்ணீரை குழாய் மூலம் வழங்க 2019 ஆகஸ்ட் 15-இல் ஜல் ஜீவன் இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது 3.23 கோடி (17%) கிராமப்புற வீடுகளுக்கு மட்டுமே குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது.

கடந்த ஈராண்டுகளில், கரோனா தொற்றுநோய் நெருக்கடி இருந்த போதிலும் சுமார் 8.26 கோடி (43%) கிராமப்புற குடும்பங்கள் தங்கள் வீடுகளில் குழாய் வழி தண்ணீர் விநியோகத்தைப் பெற்றுள்ளன.

8. ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: மானு பாக்கருக்கு தங்கம்; இஷா, கேன்மேட், ருத்ராங்ஷுக்கு வெள்ளி

ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை மானு பாக்கர் தங்கம் வென்றார்.

இஷா சிங், கேன்மட் செகான், ஆடவர் பிரிவில் ருத்ராங்ஷ் பட்டீல் ஆகியோர் வெள்ளி வென்றனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட இளம் வீராங்கனை மானு பாக்கர் எந்தப் பதக்கமும் வெல்லாமல் ஏமாற்றத்தை தந்தார். இது இந்திய தரப்புக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பெரு நாட்டு தலைநகர் லீமாவில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பையில் மகளிர் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். மற்றொரு வீராங்கனையான இஷா சிங் 240 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆடவர் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் 250 புள்ளிகளை குவித்து வெள்ளி வென்றார் ருத்ராங்ஷ் சிங்.

அமெரிக்க வீரர் வில்லியம் ஷானர் தங்கம் வென்றார். மகளிர் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் ரமிதா 229.1 புள்ளிகள் உடன் வெண்கலம் வென்றார். மகளிர் ஸ்கீட் பிரிவில் நட்சத்திர இளம் வீராங்கனை கேன்மட் செகான் வெள்ளி வென்றார், பர்த் மகிஜா, தனுஷ் ஆகியோர் முறையே 7, 8ஆம் இடங்களைப் பெற்றனர்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு நடைபெறும் இப்போட்டியில் 32 நாடுகளைச் சேர்ந்த 370 பேர் பங்கேற்றுள்ளனர்.

9. ஆசிய டேபிள் டென்னிஸ்: இந்தியாவுக்கு வெண்கலம்

ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்று வரலாறு படைத்தது இந்திய ஆடவர் அணி. கத்தார் நாட்டு தலைநகர் தோகாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஆடவர் பிரிவு அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் வலுவான கொரியாவுடன் மோதியது இந்தியா. இதில் இந்திய அணி 0-3 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தது. எனினும் அரையிறுதிக்கு தகுதிபெற்ற நிலையில் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.

இந்திய வீரர் சத்யன் 5-11, 12-10, 8-11, 5-11 என்ற கேம் கணக்கில் கொரியவீரர் ஹூஜின் ஜங்கிடம் தோல்வியடைந்தார். மற்றொரு வீரரான சரத் கமல் 7-11, 15-13, 8-11, 11-6, 1-9 என்ற கேம் கணக்கில் கொரியாவின் லீ சாங்ஸுவிடம் தோல்வியடைந்தார். ஹர்மீத் தேசாய் 11-4, 9-11, 8-11, 11-6, 13-11 என்ற கேம் கணக்கில் சியுங்மின் சோவிடம் தோல்வியடைந்தார். முன்னதாக காலிறுதியில் ஈரான் அணியை 3-1 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது இந்தியா.

கடந்த 1976ஆம் ஆண்டுக்கு பின் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வெல்லும் இரண்டாவது பதக்கம் இதுவாகும்.

மகளிர் அணி 5ஆம் இடம்: 5 முதல் 10 இடங்களுக்கான போட்டியில் இந்திய மகளிர் அணி 3-1 என்ற புள்ளிக்கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தி 5-ஆம் இடத்தைப் பெற்றது. சுதிர்தா முகர்ஜி, ஸ்ரீஜா அகுலா, ஆகியோர் ஒற்றையர் ஆட்டங்களில் வென்றனர். அர்ச்சனா கமத் போராடி தோல்வியடைந்தார்.

10. முதியோர் நல மருத்துவர் VS நடராஜனுக்கு தேசிய விருது

முதியோர் நல மருத்துவ சேவைகளை சிறப்புற மேற்கொண்டு வருவதற் -காக முதியோர் நல மருத்துவ நிபுணர் டாக்டர் வி எஸ் நடராஜனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. தில்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ‘வயோஷ்ரேஷ்தா சமான்’ என்ற அவ்விருதை வி எஸ் நடராஜனுக்கு வழங்கி கௌரவித்தார்.

மத்திய அரசின் சமூக நீதித்துறை மற்றும் அதிகாரம் அளித்தல் துறை சார்பில் ஒவ்வோர் ஆண்டும் உலக முதியோர் தினமான அக்.1ஆம் தேதி முதியோர் நலனுக்கு சிறப்பான சேவையாற்றுபவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதன்படி நிகழாண்டில் 13 தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. அதில், முதியோர் நல சிகிச்சைகளை விரிவாக மேற்கொண்டமைக்காக வி எஸ் நடராஜன் முதியோர் நல அறக்கட்டளைக்கும் விருது வழங்கப்பட்டது.

‘வருமுன் காப்போம்’ என்ற தலைப்பில் பல சொற்பொழிவுகள் மற்றும் முதியோர் நல மருத்துவ முகாம்களை நடத்தியதுடன், சுமார் 1,853 முதியோர்களுக்கு இலவசமாக நிமோனியா தடுப்பூசியும் அந்த அறக்கட்டளை சார்பில் செலுத்தப்பட்டுள்ளது.

11. மகிளா சக்தி கேந்திரா திட்டம் திரும்பப்பெறப்பட்டது புதிய இரண்டு திட்டங்கள் அறிமுகம்: சமூகநலத்துறை இயக்குநர் சுற்றறிக்கை

மகிளா சக்தி கேந்திரா திட்டம் திரும்பப் பெறப்பட்டு அதற்கு பதிலாக சம்பல் மற்றும் சமர்த்தியா என்ற புதிய இரண்டு திட்டங்கள் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சமூகநலத்துறை இயக்குநர் டி ரத்னா அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவரனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மகிளா சக்தி கேந்திரா திட்டம் செப்.30ஆம் தேதி வரை மட்டுமே நீட்டிக்கப்பட்டது. இந்த திட்டம் திரும்பப்பெறப்பட்டு அதற்கு பதிலாக புதிய திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து 31.8.2021 அன்று அகமதாபாத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இதில், மகிளா சக்தி கேந்திரா திட்டத்தை இரண்டாக பிரித்து பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் திட்டங்களை கொண்ட சம்பல் திட்டம் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் திடங்களை கொண்ட சமர்த்தியா திட்டம் என்ற இரண்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. மகிளா சக்தி கேந்திரா திட்டத்திற்கு பதிலாக பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் சமர்த்தியா திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு 2024ம் ஆண்டு வரை அமலில் இருக்கும். மேலும், கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட புதிய திட்டத்தின் முக்கிய கூறுகளாக, பெண்களை மேம்படுத்துவதற்கான தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவிலான மையங்கள் அமைக்க வேண்டும்.

சுகாதாரம், பாலினம் மற்றும் ஊட்டச்சத்து, நிதி, கல்வியறிவு, திறன் மேம்பாடு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். நிர்வாகப் பணிக்கான ஊழியர்களை திட்டங்களை செயல்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். மற்ற அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் திட்டங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். வன்முறை மற்றும் துயரங்களை எதிர்கொள்ளும் பெண்களுக்கு குறைதீர்ப்பை விரைவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் இதன்மூலம் செயல்பாட்டிற்கு வரும்.

மகிளா சக்தி கேந்திரா குழுவின் ஆட்சேர்ப்பு அதிகாரி என்ற வகையில் கலெக்டர்கள் அவரவர் மாவட்டங்களில் உள்ள இந்த குழுவின் ஊழியர்களை அவர்களது பணியில் இருந்து உடனே விடுவிக்க வேண்டும். மேலும், அதற்கான கோப்புகள் மற்றும் ஆவணங்களை அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

12. 2021 அக்.2 – ‘மகாத்மா’ காந்தியடிகளின் 153ஆவது பிறந்தநாள்.

13. உலக விண்வெளி வாரம்

ஒவ்வோர் ஆண்டும் அக்.4 முதல் 10ஆம் தேதி வரை உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுகிறது.

14. காந்தி பிறந்தநாளையொட்டி – லடாக்கில் பறக்கவிடப்பட்ட உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி:

மகாத்மா காந்தி பிறந்தநாளை ஒட்டி, முழுக்க முழுக்க கதர் துணியால் நெய்யப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய அளவிலான தேசியக் கொடி லடாக்கில் நேற்று பறக்கவிடப்பட்டது. தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 153ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, இந்திய இராணுவத்தின் பொறியாளர்களால் கதர் துணியால் நெய்யப்பட்ட மிகப்பெரிய தேசியக்கொடி, லடாக்கின் லே பகுதியில் பறக்கவிடப்பட்டது.

225 மீ நீளமும், 150 மீ அகலமும் கொண்ட இக்கொடிதான், உலகின் மிகப் பெரிய தேசியக்கொடியாகும். இக்கொடியின் மொத்த எடை 1000 கிலோ.

லடாக் துணைநிலை ஆளுநர் ஆர் கே மாத்தூர் இந்த தேசியக் கொடியை திறந்து வைத்தார். இந்திய இராணுவத்தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவனே முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

15. மத்திய அரசின் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின்மூலம் எனது சகோதரிகளுக்கு தேவையான குடிநீர் கிடைத்துள்ளது: வெள்ளேரி ஊராட்சி மன்றத் தலைவருடனான கலந்துரையாடலில் பிரதமர் மோடி பெருமிதம்

‘ஜல் ஜீவன்’ திட்டத்தின்மூலம் எனது சகோதரிகளுக்கு அவர்கள் வெகு காலமாக எதிர்பார்த்திருந்த, தேவையான குடிநீர் கிடைத்துள்ளது என பிரதமர் மோடி பெருமையுடன் தெரிவித்தார். மத்திய அரசின் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின்கீழ், இந்தியாவில் 100% குடிநீர் இணைப்பு கொடுத்துள்ள 5 ஊராட்சிகளைத் தேர்வு செய்து, அந்த கிராம மக்களிடம் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட ஐந்து ஊராட்சிகளில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த வெள்ளேரி ஊராட்சியும் அடங்கும். மத்திய அரசின் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின்கீழ் வெள்ளேரி ஊராட்சியில் உள்ள 412 வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு, 100 சதவீதம் குடிநீர் தேவையை பூர்த்திசெய்த ஊராட்சியாக திகழ்கிறது.

16. இலட்சத்தீவில் ‘மகாத்மா’ காந்தியின் முதல் சிலை: இராஜ்நாத் சிங் திறந்துவைத்தார்

இலட்சத்தீவில் ‘மகாத்மா’ காந்தியின் முதல்சிலையை பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் திறந்துவைத்தார். இதுவே நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்களை நினைவுகூரும் விதமாக லட்சத்தீவில் திறக்கப்பட்ட முதல் சிலையாகும். இரு நாள் பயணமாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலட்சத்தீவு சென்றார்.

17. இலங்கை இந்திய ராணுவம் கூட்டுப் பயிற்சி

இந்தியா இலங்கை ராணுவங்களுக்கு இடையேயான கூட்டுப் பயிற்சி, இலங்கை அம்பாறை பகுதியில் உள்ள போர்ப் பயிற்சிப் பள்ளியில் அக்.4 முதல் 15 வரையில் நடைபெறவுள்ளது.

இருநாட்டு ராணுவங்கள் இடையே நெருங்கிய உறவை ஏற்படுத்துவதுட -ன், இருதரப்பு போர் ஆயத்த நிலையை வலுப்படுத்துவதோடு, தீவிரவாத மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் சிறந்த அணுகுமுறையை பரிமாறிக் கொள்வதே இந்தக் கூட்டுப் பயிற்சியின் நோக்கமாகும்.

சர்வதேச பயங்கரவாத எதிர்ப்புச் சூழலில் இருநாட்டு ராணுவத்தினருக்கு இடையே இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 7ஆவது மித்ரா சக்தி கூட்டுப் பயிற்சி 2019’இல் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

18. அலிபாக் வெள்ளை வெங்காயத்துக்கு புவிசார் குறியீடு

மகாராஷ்டிர, ராய்கட் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அலிபாக் வெள்ளை வெங்காயத்துக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வெள்ளை வெங்காயத்தின் வர்த்தகம் அதிகரிக்கக்கூடும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில், ‘மருத்துவ குணம்கொண்ட வெள்ளை வெங்காயம் இருதய நோய்களுக்கும் உடலில் கொழுப்புச் சத்தைக் கட்டுப்படுத்துவதிலும் இன்சுலின் சுரக்க வைப்பதிலும் பயன்படுவதாக 1883ஆம் ஆண்டு அரசு குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அலிபாக் வெள்ளை வெங்காயத்துக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக மாநில வேளாண் துறையும் கொங்கண் வேளாண் பல்கலைக்கழகமும் விண்ணப்பத்தை 2019, ஜனவரி 15ஆம் தேதி சமர்ப்பித்தன. வெள்ளை வெங்காயம் பயிரிடுவதால் ஏக்கருக்கு சுமார் `2 இலட்சம் வருவாய் கிடைக்கும்’ என்றனர்.

1. Which South Pacific Ocean country recently moved International Court of Justice, regarding Climate change?

A) Fiji

B) Australia

C) Vanuatu 

D) Papua New Guinea

  • Vanuatu, a South Pacific Ocean nation made up of 80 islands, has recently moved the International Court of Justice to issue an opinion on the rights of present and future generations to be protected from the effects of climate change.
  • A dozen Pacific Island nations are facing rising sea levels and more regular storms. Vanuatu has a population of around 280,000. Vanuatu is set to route the initiative through the United Nations General Assembly.

2. Which entity operates “Digital Sky” Platform in India?

A) NITI Aayog

B) Reserve Bank of India

C) Directorate General of Civil Aviation 

D) Ministry of Information Technology

  • The “Digital Sky” Platform is operated by Directorate General of Civil Aviation (DCGA) in India. Recently, the Union Ministry of Civil Aviation has come out with a airspace map, exclusively for drone operations in India. This map can be accessed using the “Digital Sky” Platform. As per the map, air space is bifurcated into green, red and yellow zones for drone operations.

3. The Report on Deposits with Banks, is periodically released by which organization?

A) DICGC

B) RBI 

C) Ministry of Finance

D) IBA

  • The Report on Deposits with Banks is released by the Reserve Bank of India, which states that Bank deposits have grown by 11.9% year-on-year during FY 2020-21 compared to FY 2019-20. This is on account of growth in CASA (Current Account – Savings Account deposits).
  • The report states that Maharashtra, UP and Karnataka constitute for 1/3rd total bank deposits in India.

4. National Pension System Diwas is set to be observed by PFRDA on which date?

A) October.1 

B) October.2

C) October.3

D) October.4

  • Pension Fund Regulatory and Development Authority (PFRDA) has proposed to celebrate October 1 as National Pension System (NPS) Diwas. This is a part of a campaign of PFRDA to promote pension and retirement planning.
  • A campaign titled #npsdiwas is being promoted in social media. PFRDA is a statutory and regulatory body under the Union Ministry of Finance, whose present chairperson is Supratim Bandyopadhyay.

5. Which Indian state/UT hosted the ‘First Himalayan Film Festival’?

A) Ladakh

B) Uttarakhand

C) Sikkim

D) Jammu and Kashmir

  • The 5-day ‘First Himalayan Film Festival’ has been inaugurated recently at Leh in the Union Territory of Ladakh by Minister for Information and Broadcasting, Anurag Thakur.
  • The five-day festival is being held from September 24-28, 2021 as a part of the Azadi Ka Amrit Mahotsav celebrations. The festival is being organised by the administration of UT of Ladakh in collaboration with the Directorate of Film Festivals, Ministry of Information and Broadcasting. It is being hosted in collaboration with the Ladakh Autonomous Hill Development Council, Leh.

6. Which country was ranked as worst environment for Internet freedom for the seventh year in a row by Freedom House?

A) China 

B) North Korea

C) Syria

D) Iraq

  • U.S.-based not-for-profit entity Freedom House recently released a report on Internet freedom, a term that includes digital rights, freedom of information, and the right to Internet access.
  • As per the report, Internet Freedom has declined for the 11th year in a row worldwide. The greatest damaging effects were found in Myanmar, Belarus, and Uganda. China was ranked as the worst environment for Internet freedom for the seventh year in a row.

7. Abhishek Verma, who was seen in the news recently, is associated with which sports?

A) Tennis

B) Badminton

C) Archery 

D) Cricket

  • India’s 3-time World Cup gold medal-winning compound archer Abhishek Verma has been elected to World Archery’s athletes’ committee. Reigning World Archery Champion Natalia Avdeeva of Russia and Abhishek Verma of India have been elected for a four-year term. 32-year-old Abhishek Verma, an Arjuna awardee, has won gold medals in the World Cups in Poland (2015) and Paris earlier this year.

8. Jyothi Surekha Vennam, who was seen in the news recently, is associated with which sports?

A) Tennis

B) Squash

C) Archery 

D) Shooting

  • Jyothi Surekha Vennam has bagged a silver medal in the women’s compound event at the ongoing World Archery Championship in Yankton. She was defeated by world number three Sara Lopez of Colombia in the final clash.
  • Earlier, the Indian women’s and mixed compound teams won silver medals in the World Championships. India women’s team comprised of Jyothi, Muskan Kirar and Priya Gurjar.

9. Who represented India in the Summit for Information and Democracy held at New York?

A) Narendra Modi

B) Anurag Thakur 

C) Piyush Goyal

D) Nirmala Sitharaman

  • Union Minister for Information and Broadcasting Anurag Thakur addressed the Summit for Information and Democracy on the sidelines of the UNGA organised in New York. He participated in the discussion, by joining from Leh, Ladakh.
  • The ‘International Partnership for Information and Democracy’ was launched in New York on Sept.26 2019. It aims to promote freedom of opinion and expression and access to free, pluralistic and reliable information. The partnership has been signed by 43 States, till date.

10. What is the name of the third ever September cyclone which developed in the Bay of Bengal?

A) Giza

B) Gulab 

C) Gina

D) Guna

  • The Bill & Melinda Gates Foundation announced Phumzile Mlambo–Ngcuka, former United Nations under–secretary–general and executive director of UN Women, as the winner of the 2021 Global Goalkeeper Award. Fairooz Faizah Beether of Bangladesh has been chosen for the 2021 Changemaker Award for her work promoting good health and well–being.
  • The 2021 Progress Award recognizes Jenifer Colpas of Colombia for her work to improve access to clean water and sanitation. The 2021 Campaign Award, recognizes Satta Sheriff of Liberia for her work to promote gender equality.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!