TnpscTnpsc Current Affairs

2nd August 2022 Tnpsc Current Affairs in Tamil & English

2nd August 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 2nd August 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

2nd August 2022 Tnpsc Current Affairs in Tamil

1. தேசிய பங்குச்சந்தையின் (NSE) புதிய MD மற்றும் CEO–ஆக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. ஆஷிஷ் சௌகான் 

ஆ. K V காமத்

இ. உர்ஜித் படேல்

ஈ. அருந்ததி பட்டாச்சார்யா

  • தேசிய பங்குச்சந்தையின் (NSE) புதிய MD மற்றும் CEO–ஆக ஆஷிஷ் சௌஹானை சந்தை ஒழுங்காற்றுநரான SEBI நியமித்துள்ளது. ஆஷிஷ் சௌகான் தற்போது மும்பை பங்குச்சந்தையின் (BSE) MD மற்றும் CEOஆக உள்ளார். BSE மற்றும் அதன் துணை நிறுவனமான Central Depository Services Ltd., (CDSL), அவரது தலைமையின்கீழ் வெற்றிகரமான IPO–க்களை அறிமுகப்படுத்தியது.

2. கைவினைக் கிராமத் திட்டம் என்பது எந்த நடுவண் அமைச்சகத்தின் முனைவாகும்?

அ. நடுவண் கலாச்சார அமைச்சகம்

ஆ. நடுவண் ஜவுளி அமைச்சகம் 

இ. நடுவண் உள்துறை அமைச்சகம்

ஈ. நடுவண் MSME அமைச்சகம்

  • கைவினைஞர்களின் நிலைத்த வாழ்வாதாரமாக கைவினைப் பொருட்களை மேம்படுத்துவதை, ‘தி கிராஃப்ட்ஸ் வில்லேஜ் திட்டம்’ நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ‘சுற்றுலாவுடன் ஜவுளியை இணைப்பதற்கான’ நடுவண் ஜவுளி அமைச்சகத்தின் முனைவாகும். இது கைவினைக் குழுக்களுக்கு உட்கட்டமைப்பு ஆதரவை வழங்குவதன் மூலம் கைவினை மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் எட்டுக் கைவினைக் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
  • அவை திருப்பதி (ஆந்திர பிரதேசம்), வதாஜ் (குஜராத்), நைனி (உத்தர பிரதேசம்), இரகுராஜ்பூர் (ஒடிஸா), அனேகுண்டி (கர்நாடகா), மாமல்லபுரம் (தமிழ்நாடு), தாஜ் கஞ்ச் (உத்தர பிரதேசம்) மற்றும் அமர் (இராஜஸ்தான்) ஆகும்.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘சபஹர் துறைமுகம்’ அமைந்துள்ள நாடு எது?

அ. ஆப்கானிஸ்தான்

ஆ. நேபாளம்

இ. ஈரான் 

ஈ. கஜகஸ்தான்

  • சபஹர் துறைமுகம் ஈரானில் அமைந்துள்ள ஓர் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமாகும்; இது மத்திய ஆசிய பிராந்தியத்திற்கான வணிக போக்குவரத்து மையமாகும். இந்தியாவிற்கும் மத்திய ஆசியாவிற்கும் இடையே சரக்குப்போக்குவரத்தை சிக்கனமாக்குவதற்கான இந்திய தொலைநோக்குத்திட்டமான பன்னாட்டு வடக்கு தெற்கு போக்குவரத்து வழித்தடத்தின் (INSTC) தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் ‘சபஹர் நாள்’ கொண்டாடப்படுகிறது.
  • ‘சபஹர் நாளை’ முன்னிட்டு, நடுவண் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துகள் அமைச்சகம், இந்திய போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் (IPGL) உடன் இணைந்து, சபஹர் மேம்பாட்டுத் திட்டத்தில் பங்கேற்பதற்காக மும்பையில் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தது.

4. இந்தியா–ஓமன் கூட்டு இராணுவப் பயிற்சியான, ‘அல் நஜா’ நடத்தப்படுகிற மாநிலம் எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. இராஜஸ்தான் 

இ. சிக்கிம்

ஈ. ஆந்திர பிரதேசம்

  • இந்திய இராணுவமும் ஓமன் ராயல் ஆர்மியும் இணைந்து சமீபத்தில் இந்தியாவின் இராஜஸ்தானில் 13 நாள் கூட்டு இராணுவப் பயிற்சியை தொடங்கின. இந்தியா–ஓமன் கூட்டு இராணுவப் பயிற்சியின் நான்காவது பதிப்பு, ‘அல் நஜா’ பயங்கரவாத எதிர்ப்பு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் கவனஞ்செலுத்துகிறது.

5. இந்தியாவில் குரங்கம்மை நோய் நிலைமையை கண்காணிப்பதற்காக நடுவணரசால் சமீபத்தில் அமைக்கப்பட்ட பணிக்குழுவின் தலைவர் யார்?

அ. அமிதாப் காந்த்

ஆ. V K பால் 

இ. மன்சுக் மாண்டவியா

ஈ. பாரதி பவார்

  • இந்தியாவில் குரங்கம்மை நோயின் தாக்கத்தைக் கண்காணிக்க நடுவணரசு தனிப்படை அமைத்துள்ளது. இது NITI ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் V K பால் தலைமையில் உள்ளது. இந்தப்பணிக்குழுவில் நடுவண் சுகாதார அமைச்சகம், மருந்து மற்றும் உயிரித் தொழில்நுட்ப செயலாளரும் இடம்பெற்றுள்ளார். நோய் கண்டறிதல் வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் நோய்க்கு எதிரான தடுப்பூசியை ஆராய்வது குறித்து இது அரசுக்கு ஆலோசனை வழங்கும். இந்தியாவில் இதுவரை நான்கு குரங்கம்மை பாதிப்பு (கேரளாவில் மூன்று, தில்லியில் ஒன்று) பதிவாகியுள்ளன.

6. ஒவ்வோர் ஆண்டும், ‘நெல்சன் மண்டேலா நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜூலை.14

ஆ. ஜூலை.18 

இ. ஜூலை.19

ஈ. ஜூலை.25

  • ‘நெல்சன் மண்டேலா நாள்’ ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.18ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையானது கடந்த 2009ஆம் ஆண்டில் ஜூலை.18ஆம் தேதியை நெல்சன் மண்டேலா நாளாக அறிவித்தது. தென் ஆப்பிரிக்காவில் முழுமையான மக்களாட்சித் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் நெல்சன் மண்டேலா ஆவார்.

7. தேசிய மின்னாளுகை சேவை வழங்கல் மதிப்பீட்டில் கீழ்க்காணும் எந்த நடுவணமைச்சகத்தின் இணையதளம் முதலிடத்தைப் பிடித்துள்ளது?

அ. உள்துறை அமைச்சகம் 

ஆ. கலாச்சார அமைச்சகம்

இ. பாதுகாப்பு அமைச்சகம்

ஈ. நிதி அமைச்சகம்

  • தேசிய மின்னாளுகை சேவை வழங்கல் மதிப்பீட்டில் உள்துறை அமைச்சகத்தின் இணையதளம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 2021ஆம் ஆண்டில் அதன் அறிவுப்பங்காளர்களான NASSCOM மற்றும் KPMG உடன் இணைந்து நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறை ஆகியவற்றின்மூலம் நடத்தப்பட்ட நடுவணரசின் அமைச்சகங்களின் இணையதளங்களின் சேவை வழங்கல் மதிப்பீட்டில் ‘டிஜிட்டல் போலீஸ்’ இணையதளம் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

8. அண்மையில் அமைக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) குறித்த உயரதிகாரம்கொண்ட குழுவின் தலைவர் யார்?

அ. இரமேஷ் சந்த்

ஆ. அமிதாப் காந்த்

இ. M S சுவாமிநாதன்

ஈ. சஞ்சை அகர்வால் 

  • நடுவணரசு முன்னாள் வேளாண்மை துறை செயலாளர் சஞ்சை அகர்வால் தலைமையில் உயரதிகாரம்கொண்ட குழுவை அமைத்துள்ளது. அக்குழுவானது குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) பொறிமுறையை மிகவும் பயனுள்ள மற்றும் வெளிப்படையானதாகக் கருதுகிறது. மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை அரசாங்கம் ரத்து செய்த எட்டு மாதங்களுக்குப் பிறகு இது அமைக்கப்பட்டது. இக்குழுவில் NITI ஆயோக் உறுப்பினர் இரமேஷ் சந்த் மற்றும் IFFCO, ICAR–இன் பிரதிநிதிகள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, சிக்கிம் மற்றும் ஒடிஸாவின் பிரதிநிதிகள் உள்ளனர்.

9. ‘J C டேனியல் விருது’ என்பது எந்த மொழியில் திரைத்துறையில் வழங்கப்படும் உயரிய விருதாகும்?

அ. தமிழ்

ஆ. மலையாளம் 

இ. மராத்தி

ஈ. கன்னடம்

  • பிரபல திரைப்பட இயக்குநர் K P குமரனுக்கு கடந்த 2021ஆம் ஆண்டுக்கான ‘J C டேனியல் விருது’ வழங்கப்பட்டது. இது மலையாள திரைத்துறையின் மிகவுயரிய விருதாகும். கலாசார விவகாரங்கள் துறையின்கீழ் இயங்கும் இலாப நோக்கற்ற நிறுவனமான கேரள மாநில சலசித்ரா அகாதெமியால் ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது.

10. 2021–இல் இந்தியாவுக்குப் பணமனுப்புவதில் முதலிடம் வகிக்கிற நாடு எது?

அ. ஐக்கிய அரபு அமீரகம்

ஆ. அமெரிக்கா 

இ. சிங்கப்பூர்

ஈ. கனடா

  • இந்திய ரிசர்வ் வங்கியின் அண்மைய ஆய்வின்படி, மொத்தப் பணப்பரிமாற்றத்தில் 23 சதவீத பங்கைக்கொண்டு, இந்தியாவின் பணப்பரிவர்த்தனையின் முதன்மையான நாடாக ஐக்கிய அரபு அமீரகத்தை ஐக்கிய அமெரிக்க நாடுகள் விஞ்சியுள்ளது. 2021ஆம் ஆண்டில் 4.6% வளர்ச்சியுடன் $87 பில்லியன் டாலர்களைப் பெற்றதால், இந்தியா உலகின் மிகப்பெரிய பெறுநராக உள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்   

1. காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமைகிறது சென்னையின் 2ஆவது விமான நிலையம்

காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமையவுள்ளது. உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்ததும் அதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கும் என்று மத்திய இணை அமைச்சர் வி கே சிங் தெரிவித்தார்.

மேலும், உடான் திட்டத்தின்கீழ் மண்டலங்களை இணைக்கும் வகையில் தமிழ்நாட்டில் நெய்வேலி, தஞ்சாவூர், இராமநாதபுரம் மற்றும் வேலூர் ஆகிய 4 விமான நிலையங்களை புதுப்பித்து தரமுயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க ஏற்கெனவே 4,971 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. சுமார் `60 ஆயிரம் கோடியில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 73 கிமீ தொலைவில் அமைந்துள்ள பரந்தூருக்கு 2 மணி நேரத்தில் சென்றுவிடலாம். காஞ்சிபுரத்தில் இருந்து 15 கிமீ சென்னை – பெங்களூரு 6 வழிச்சாலையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் பரந்தூர் அமைந்துள்ளது.

2. ஜூலை GST வருவாய் `1.49 லட்சம் கோடி: தமிழ்நாட்டில் `8,449 கோடி வசூல்

நாட்டில் கடந்த ஜூலை மாத சரக்கு மற்றும் சேவை வரியாக (GST) `1,48,995 கோடி வசூலாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் `8,449 கோடி GST வசூலானது.

இது தொடர்பாக நடுவண் நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் GST அமல்படுத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் GST வசூல் புதிய உச்சத்தை தொட்டது. அந்த மாதம் `1,67,540 கோடி GST வசூலானது.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் `1,48,995 கோடி GST வசூலானது. இது GST அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து வசூலான இரண்டாவது அதிகபட்ச வருவாய் ஆகும். கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜூலை மாதம் சரக்குகள் இறக்குமதிமூலம் கிடைத்த வருவாய் 48 சதவீதம் அதிகமாகவும், உள்நாட்டு பரிவர்த்தனை (சேவைகள் இறக்குமதி உள்பட) மூலம் கிடைத்த வருவாய் 22 சதவீதம் அதிகமாகவும் இருந்தன.

GST வசூலில் நடுவண் GST, மாநில GST, ஒருங்கிணைந்த GST, செஸ் வரி ஆகியவை அடங்கும். அதன் விவரம் பட்டியலில் வருமாறு: ஜூலை GST `1,48,995 கோடி; நடுவண் GST `25,751 கோடி; மாநில GST `32,807 கோடி; ஒருங்கிணைந்த GST `79,518 கோடி (சரக்கு இறக்குமதி மூலம் வசூலான `41,420 கோடியும் அடங்கும்)

செஸ் `10,920 கோடி (சரக்கு இறக்குமதிமூலம் வசூலான `995 கோடியும் அடங்கும்)

தமிழ்நாட்டில் 34% அதிகரிப்பு: கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாட்டில் `6,302 கோடி GST வசூலானது. இது நிகழாண்டு ஜூலை மாதம் 34% அதிகரித்து `8,449 கோடி (சரக்குகள் இறக்குமதி மீதான GSTஐ சேர்க்காமல்) வசூலாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம் அதிக GST வசூலான மாநிலங்களில் மகாராட்டிரம், கர்நாடகம், குஜராத்தை தொடர்ந்து தமிழ்நாட்டி 4ஆவது இடத்தில் உள்ளது.

2nd August 2022 Tnpsc Current Affairs in English

1. Who has been named as the new MD and CEO of the National Stock Exchange (NSE)?

A. Ashish Chauhan 

B. K V Kamath

C. Urjit Patel

D. Arundhati Bhattacharya

  • Market regulator SEBI has named Ashish Chauhan as the new MD and CEO of the National Stock Exchange (NSE). Ashish Chauhan is currently the MD and CEO of Bombay Stock Exchange (BSE). BSE and its subsidiary CDSL, launched successful IPOs under his leadership.

2. ‘The Crafts Village scheme’ is an initiative of which Union Ministry?

A. Union Ministry of Culture

B. Union Ministry of Textiles 

C. Union Ministry of Home Affairs

D. Union Ministry of MSME

  • ‘The Crafts Village scheme’ aims to develop handicrafts as a sustainable livelihood option for artisans in the clusters. It is an initiative of Union Textiles Ministry for ‘Linking Textile with Tourism’. It aims to promote craft and tourism by providing infrastructure support to handicraft clusters. Eight craft villages are selected under the scheme.
  • They are Tirupati (Andhra Pradesh), Vadaj (Gujarat), Naini (Uttar Pradesh), Raghurajpur (Odisha), Anegundi (Karnataka), Mahabalipuram (Tamil Nadu), Taj Ganj (Uttar Pradesh) and Amer (Rajasthan).

3. ‘Chabahar Port’, which was seen in the news, is located in which country?

A. Afghanistan

B. Nepal

C. Iran 

D. Kazakhstan

  • The Chabahar Port is a strategic port located in Iran is the commercial transit centre for the Central Asian region. ‘Chabahar Day’ is celebrated to mark the beginning of International North South Transport Corridor (INSTC) – an Indian vision to economise movement of cargo between India and Central Asia.
  • On the occasion of ‘Chabahar Day’, Union Ports, Shipping & Waterways Ministry along with the Indian Ports Global Ltd. (IPGL) which was formed to participate in Chabahar development project, organized a conference in Mumbai.

4. Which state is the venue of the India–Oman joint military drill ‘AL NAJAH’?

A. Maharashtra

B. Rajasthan 

C. Sikkim

D. Andhra Pradesh

  • Indian Army and Royal Army of Oman have recently started their 13–day joint military exercise in Rajasthan, India. The 4th edition of India–Oman joint military drill ‘AL NAJAH’ focuses on Counter Terrorism, Regional Security and Peace Keeping Operations.

5. Who is the head of the task force recently set up by the Central govt to monitor monkeypox situation in India?

A. Amitabh Kant

B. V K Paul 

C. Mansukh Mandaviya

D. Bharati Pawar

  • The Central Government has established a task force to monitor monkey–pox situation in India. It is headed by Dr VK Paul, member (Health), NITI Aayog. The task force also includes Secretary, Union Health Ministry, Pharma and Biotech. It will advise the government on expanding diagnostic facilities and investigating vaccination against the disease. India has reported four Monkeypox cases so far, three cases in Kerala and one in Delhi.

6. When is the ‘Nelson Mandela Day’ observed every year?

A. July.14

B. July.18 

C. July.19

D. July.25

  • ‘Nelson Mandela Day’ is observed on July 18 every year. The United Nations (UN) had declared July 18 as Nelson Mandela Day to honour the leader in 2009. Nelson Mandela was a South African anti–apartheid activist who served as the first President from 1994 to 1999.  He was the first black head of state and the first elected President in a fully democratic election in South Africa.

7. Which Union Ministry’s website has been ranked first in the National e–Governance Service Delivery Assessment?

A. Ministry of Home Affairs 

B. Ministry of Culture

C. Ministry of Defence

D. Ministry of Finance

  • The website of the Ministry of Home Affairs (MHA) has been ranked first in the National e–Governance Service Delivery Assessment. The Digital Police portal was ranked second in the service delivery assessment of websites of central government ministries, conducted by the Department of Administrative Reforms and Public Grievances (DARPG) in association with its knowledge partners NASSCOM and KPMG in 2021.

8. Who is the head of the high–powered panel on minimum support price (MSP), which was recently set up?

A. Ramesh Chand

B. Amitabh Kant

C. M S Swaminathan

D. Sanjay Agarwal 

  • The Central Government has constituted a high–powered panel under the chairmanship of former agriculture secretary Sanjay Agarwal. The panel seeks to the minimum support price (MSP) mechanism more effective and transparent. It was set up eight months after the government repealed the three controversial farm Acts. The panel includes NITI Aayog member Ramesh Chand, and representatives from IFFCO, ICAR, along with representatives from Karnataka, Andhra Pradesh, Sikkim, and Odisha.

9. ‘JC Daniel Award’ is the highest award in cinema in which language?

A. Tamil

B. Malayalam 

C. Marathi

D. Kannada

  • Renowned filmmaker KP Kumaran was awarded the 2021 JC Daniel Award. It is Kerala’s highest award in Malayalam cinema. The award is presented annually by the Kerala State Chalachitra Academy, a non–profit institution under the Department of Cultural Affairs.

10. Which country is the top source of India’s remittances in 2021?

A. UAE

B. USA 

C. Singapore

D. Canada

  • As per a recent survey of the Reserve Bank of India, the US surpassed the UAE as the top source country of India’s remittances, accounting for 23% of total remittances. India is by far the world’s largest recipient of remittances, as it received $87 billion in 2021 with a growth of 4.6%.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!