TnpscTnpsc Current Affairs

2nd November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

2nd November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 2nd November 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?

அ) மும்பை

ஆ) கொல்கத்தா

இ) புது தில்லி

ஈ) புனே 

  • வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் என்பது நடுவண் புவி அறிவியல் அமைச்சகத்தின்கீழ் உள்ள ஒரு தன்னாட்சி நிறுவனமாகும். இது புனேவில் அமைந்துள்ளது. தில்லி – என்சிஆர் பகுதியில் காற்றின் தர அளவீடு மற்றும் நிர்வாகத்திற்காக, தற்போதுள்ள ‘காற்றின் தர ஆரம்ப எச்சரிக்கை அமைப்பை’ மேம்படுத்தும் நோக்கத்துடன், இந்த நிறுவனம் புதிய ‘முடிவு ஆதரவு அமைப்பை’ உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

2. UNESCO’இன் 2021 – தற்காப்புக் கலைக் கல்விப் பரிசை வென்ற குங் ஃபூ கன்னியாஸ்திரிகள் சார்ந்த பௌத்த வம்சம் எது?

அ) துருக்பா 

ஆ) நிங்மா

இ) காக்யு

ஈ) சாக்யா

  • பௌத்த மதத்தின் துருக்பா வம்சத்தைச் சார்ந்த உலகப் புகழ்பெற்ற குங் ஃபூ கன்னியாஸ்திரிகள் தங்கள் துணிச்சலான சேவைகளுக்காக UNESCO சர்வதேச தற்காப்புக்கலை மையத்தின் 2021ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க தற்காப்புக்கலைக்கல்விப்பரிசை வென்றுள்ளனர். தற்காப்புக் கலைகள்மூலம், இளம் பெண்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளவும், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும், அவர்களின் சமூகங்களில் தலைமைப் பாத்திரங்களை ஏற்கவும் துருக்பா வம்ச கன்னியாஸ்திரிகள் வல்லமையளிக்கிறார்கள்.

3. இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானந்தாங்கிக்கப்பலின் பெயர் என்ன?

அ) அர்ஜுன்

ஆ) விக்ராந்த் 

இ) கட்டபொம்மன்

ஈ) பாரதி

  • இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானந்தாங்கிப்போர்க்கப்பலான விக்ராந்த், 2022 ஆகஸ்டு மாதத்திற்குள் இந்திய கடற்படையில் சேர்க்கப்படவுள்ள இந்தக் கப்பலின் 2ஆம் கட்ட சோதனைகள் சமீபத்தில் தொடங்கின. இப்போர்க்கப்பல், MiG-29K போர் விமானங்கள், Kamov-31 ஹெலிகாப்டர்கள், MH-60R ஆகியவற்றை இயக்கும்.

4. கேரளாவில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையானது பின்வரும் எந்த மாநிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது?

அ) தமிழ்நாடு 

ஆ) கர்நாடகா

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) தெலுங்கானா

  • கேரள மாநிலத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையானது தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது, கேரளாவில் இவ்வாறு பாயும் திசையில் வாழும் இலட்சக்கணக்கான மக்களுக்கு அச்சுறுத்தலாகவும், தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் 2 லட்சம் ஹெக்டேருக்கு மேல் பாசன வசதி வழங்கி வருவதாலும் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணையில் நவம்பர்.10ஆம் தேதி வரை அதிகபட்ச நீர்மட்டம் 139.50 அடியாக இருக்க வேண்டும் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் உற்பத்தியாகி கேரளத்தில்பாயும் பெரியாற்றின் மேற்பகுதியில் இவ்வணை அமைந்துள்ளது.

5. போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் தேசிய நிதியம், பின்வரும் எந்த மத்திய அமைச்சகத்துடன் தொடர்புடையது?

அ) உள்துறை அமைச்சகம்

ஆ) சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம் 

இ) பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

ஈ) சட்டம் & நீதி அமைச்சகம்

  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் தேசிய நிதியத்தை போதை ஒழிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தப் பயன்படுத்தலாம் என்று அண்மையில் பரிந்துரைத்துள்ளது. 1985ஆம் ஆண்டு போதைப்பொருள் மருந்துகள் மற்றும் மனநோய் பொருட்கள் சட்டத்தின் விதியின்படி இந்த நிதியம் உருவாக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு `23 கோடியாகும்.
  • இந்நிதியானது போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுதற்கும், அடிமையானவர்களை மறுவாழ்வு செய்வதற்கும், போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கும் பயன்படுத்தப்படும் எனச் சட்டம் கூறுகிறது. இதன் நிதியானது காவல்துறை நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படு -த்தப்படுவதால், போதைப்பழக்க ஒழிப்பையும் இதனோடு சேர்த்துக் கொள்ள நடுவண் அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.

6. ‘ஆபரேஷன் ரெட் ரோஸ்’ என்பது சட்டவிரோத மதுவுக்கு எதிராக, எந்த மாநிலத்தில் செயல்படுத்தப்படுகிற ஒரு திட்டமாகும்?

அ) தமிழ்நாடு

ஆ) புது தில்லி

இ) பஞ்சாப் 

ஈ) இராஜஸ்தான்

  • பஞ்சாபின் கலால் துறை 2020ஆம் ஆண்டில் ‘ஆபரேஷன் ரெட் ரோஸ்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது சட்டவிரோத மதுபான வர்த்தகம் மற்றும் கலால் தொடர்பான குற்றங்களைத் தடுக்கிறது.
  • சமீபகாலமாக, குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (ஜிபிஎஸ்) தொழில்நுட்பம் போன்ற துல்லியமான கண்காணிப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக மதுபானம் கடத்தப்படுவதை இது தடுத்து வருகிறது.

7. “ஆப்ஸ்கேல் அகாடமி” என்பது MeitY ஸ்டார்ட்அப் ஹப்புடன் இணைந்து பின்வரும் எத்தொழில்நுட்ப நிறுவனத்தால் எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாகும்?

அ) யாஹூ

ஆ) முகநூல்

இ) ட்விட்டர்

ஈ) கூகிள் 

  • தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், MeitY ஸ்டார்ட்அப் ஹப் உடன் இணைந்து, ‘Appscale Academy’ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது உயர் தர செயலிகளை உருவாக்குவதற்கு இந்திய துளிர் நிறுவனங்களுக்கு உதவுவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. கூகுளின் இந்த முன்முயற்சி ஆனது, இந்தியாவிலுள்ள தொடக்க மற்றும் இடைநிலை துளிர் நிறுவன -ங்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் மற்றும் கேமிங், கல்வி, சமூக பாதிப்பு, சுகாதாரப் பாதுகாப்பு போன்ற களங்களில் செயலிகளை உருவாக்க அவர்களுக்கு ஆதரவளிக்கும்.

8. ஐநா பொதுச்சபையானது 2021ஆம் ஆண்டை எந்த ஆண்டாக அறிவித்துள்ளது?

அ) பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச ஆண்டு

ஆ) சர்வதேச சுகாதார ஆண்டு

இ) COVID’ஐ எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச ஆண்டு

ஈ) பழங்கள் மற்றும் காய்கறிகளின் சர்வதேச ஆண்டு 

  • ஐநா பொதுச்சபையானது நடப்பு 2021ஆம் ஆண்டை பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான சர்வதேச ஆண்டாக அறிவித்துள்ளது, உணவு மற்றும் உழவு அமைப்பு (FAO), இந்த ஆண்டைக் கொண்டாடுவதற்கான முதன்மை நிறுவனமாக உள்ளது. இந்த ஆண்டு மனித ஊட்டச்சத்திலும், உணவுப் பாதுகாப்பிலும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் பங்கு பற்றிய விழிப்புணர்வை பரப்ப ஐநா முயற்சி செய்கிறது.

9. குஷாக்ரா ராவத் மற்றும் ஸ்ரீஹரி நடராஜ் ஆகியோருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ) மட்டைப்பந்து

ஆ) கோல்ப்

இ) வில்வித்தை

ஈ) நீர்சார் விளையாட்டுக்கள் 

  • தில்லியைச் சேர்ந்த குஷாக்ரா ராவத் மற்றும் கர்நாடகாவின் ஸ்ரீஹரி நடராஜ் ஆகியோர் 74ஆம் சீனியர் தேசிய அக்வாடிக் சாம்பியன்ஷிப்பில் முறையே 400மீ பிரீஸ்டைல் மற்றும் 100மீ பேக்ஸ்ட்ரோக் போட்டிகளில் புதிய தேசிய சாதனைகளை படைத்துள்ளனர். குஷக்ரா ராவத் 3:53.68 வினாடிகளில் புதிய சாதனையை படைத்துள்ளார். அதே நேரத்தில் ஸ்ரீஹரி நடராஜ் 100மீ பேக் ஸ்ட்ரோக்கை 55.10 வினாடிகளில் முடித்தார்.

10. போதைப்பொருள் & குற்றங்களுக்கான ஐநா அலுவலகத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

அ) ஆஸ்திரியா 

ஆ) அமெரிக்கா

இ) ஜெர்மனி

ஈ) ஹங்கேரி

  • போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐநா அலுவலகம் (UNODC) கடந்த 1997ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவின் வியன்னாவை தலைமையிடமாகக்கொண்டு நிறுவப்பட்டது. பாதுகாப்பு அவையின் பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் நிர்வாக இயக்குநரகத்துடன் இணைந்து தரவு வெளிப்படுத்தல் கட்டமைப்பை (DDF) அறிமுகப்படுத்தியதை அடுத்து, இந்நிறுவனம் சமீபத்திய செய்திகளில் இடம்பெற்றது.
  • DDF என்பது பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைகளுக்காக வெளிநாட்டு குற்றவியல் நீதி அதிகாரிகளின் தரவு கோரிக்கைகளைக் கையாளவும் பதிலளிக்கவும் உருவாக்கப்பட்ட நடைமுறைகளை விவரிக்கும் ஒரு கருவியாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சேதி தெரியுமா?

அக்.23: தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் சமூக நீதி சரியான முறையில் அமல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க சமூக நீதி கண்காணிப்புக் குழுவை தமிழக அரசு அமைத்தது.

அக்.23: தமிழக ரேஷன் கடைகளில் ‘கற்பகம்’ என்கிற பெயரில் பனை வெல்லம் விற்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

அக்.24: பிகாரின் ஜெய்நகர் – நேபாளம் குர்தா வரையிலான ரயில் இணைப்புப் பாதையை நேபாள அரசிடம் இந்திய அரசு ஒப்படைத்தது.

அக்.25: இந்திய சினிமா கலைஞர் களுக்கு வழங்கப்படும் உயரிய தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது.

அக்.26: ஐபிஎல் கிரிக்கெட்டில் அகமதாபாத் மற்றும் லக்னோ நகரங்களை மையமாகக் கொண்டு இரு புதிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் IPL அணிகளின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது.

அக்.27: நிலம் விட்டு நிலம் பாயும் ‘அக்னி-5’ என்ற ஏவுகணை ஒடிஷா மாநிலம் கலாம் தீவிலிருந்து வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

அக்.28: விழுப்புரம் மாவட்டம் முதலியார்குப்பத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியது.

அக்.29: பேரியம் கலந்து தயாரிக்கப்படும் பட்டாசுகளைத் தயாரிக்கவும் விற்கவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

அக்.29: இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.

அக்.30: ஆண்டுதோறும் ஜூலை 18 அன்று தமிழ்நாடு தினம் கொண்டாட விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார்.

2. சென்னையில் வானிலை ஆய்வு மையத்தின் புதிய ரேடார் செயல்படத் தொடங்கியது

சென்னையில் வானிலை ஆய்வு மையத்தின் புதிய ரேடார் பள்ளிக்கரணையில் நேற்று செயல்படத் தொடங்கியது.

மழை மேகங்களின் தன்மை, நகர்வு, மழை அளவு போன்றவற்றை ரேடார் மூலம் கிடைக்கும் தரவுகள் மூலம் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து வருகிறது. ரேடார்களில் இருந்து செலுத்தப்படும் மின் காந்த அலைகள் மூலமாகக் கிடைக்கும் தரவுகளைக் கொண்டு, குறுகியகால வானிலை முன்னறிவிப்பு, நிகழ்நேர மழை நிலவரம் போன்றவற்றை ஆய்வு மையத்தால் வழங்க முடியும்.

இது தொடர்பான ரேடார் படங்கள் http://www.imdchennai.gov.in/ என்ற இணையதளம் மூலம் வழங்கப்படுகின்றன. இணையதள சேவை மற்றும் சமூக ஊடங்கள் வருகையால், வானிலை ஆய்வு மையம் வெளியிடும் ரேடார் படங்களை, தன்னார்வ அடிப்படையில் வானிலையைக் கணிக்கும் ஆர்வலர்கள் பயன்படுத்தி, வானிலை நிலவரங்களை முகநூல், ட்விட்டர், யூடியூப் போன்றவற்றில் வெளியிடத் தொடங்கினர். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், இணையதளத்தில் ரேடார் படங்களை மக்களே நேரடியாகப் பார்வையிட்டு, நிகழ்நேரவானிலையை தெரிந்துகொள் வதில் ஆர்வம் காட்டினர்.

பழுதடைந்த ரேடார்

சென்னை துறைமுகக் கட்டிடத்தில் செயல்பட்டு வந்த ரேடார் 2018-ல் பழுதடைந்தது. அதற்கான உதிரி பாகங்கள் கிடைக்காததால், பழுது நீக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மக்கள் நேரடியாக நிகழ்நேர மழை நிலவரத்தை அறியமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ் பாலச்சந்திரனிடம் கூறியதாவது: பழுதாகியுள்ள ரேடார் விரைவில் சீரமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வரும். இதற்கிடையில், பள்ளிக்கரணையில் உள்ள இந்திய பெருங்கடல் சார் தொழில்நுட்ப நிறுவன (NIOT) வளாகத்தில் புதிய ரேடார் நிறுவப்பட்டுள்ளது. இது நேற்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. அதன் படங்கள் தற்போது வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. அவற்றைப் பொதுமக்கள் பார்வையிடலாம்.

பழைய ரேடார் பழுதால் வானிலை கணிப்பில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. ஸ்ரீஹரிகோட்டா, திருவனந்தபுரத்தில் இயங்கும் ISRO ரேடார்கள், காரைக்காலில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மைய ரேடார் ஆகியவற்றின் தரவுகளைப் பயன்படுத்தி வருகிறோம்.

நிகழ்நேர மழை நிலவரக் கணிப்பு ரேடார் தரவுகள் அடிப்படையில் மட்டுமின்றி, செயற்கைக்கோள் புகைப்படம், பலூன் மூலம் பறக்க விடப்படும் கருவி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் கிடைக்கும் தரவுகள் அடிப்படையில்தான் கணிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

3. அக்.31 – தேசிய ஒற்றுமை நாள்

4. காஷ்மீர் தால் ஏரியில் மிதக்கும் திறந்தவெளி திரையரங்கம் தொடக்கம்

காஷ்மீரின் தால் ஏரியில் இருக்கும் படகு வீடுகள் உலகப் புகழ்பெற்றவை. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் படகு வீடுகளில் தங்கி இயற்கை அழகை ரசிக்க தவறுவதில்லை. இந்நிலையில் தால் ஏரியில் உள்ள ஒரு படகு வீட்டில் திறந்தவெளி திரையரங்கை உருவாக்கியுள்ளனர். காஷ்மீரிலேயே முதன் முதலாக அமைக்கப்பட்ட மிதக்கும் திறந்தவெளி திரையரங்கம் இதுதான். ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலர் அருண் குமார் மேத்தா அண்மையில் இதை தொடங்கி வைத்தார். முதல் நாளில் இந்திப்படமான காஷ்மீர் கி காளி திரைப்படம் சுற்றுலாப் பயணிகளுக்கா -கவும், தால் ஏரி பகுதி மக்களுக்காகவும் திரையிடப்பட்டது.

5. இல்லம் தேடி கல்வி திட்டம்: சிறப்புப் பணி அதிகாரியாக கே இளம் பகவத் நியமனம்

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சிறப்புப் பணி அதிகாரியாக கே இளம் பகவத் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

6. கடலுக்கடியில் 6,000 மீட்டர் ஆழத்தில் கனிம ஆய்வு

இந்தியப் பெருங்கடலுக்கு அடியில் 6,000 மீ ஆழத்தில் கனிம ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள அமைச்சா் ஜிதேந்திர சிங், சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த தேசிய கடல்வளத் துறை தொழில்நுட்பக் கழகத்துக்கு சொந்தமான ‘சாகர் நிதி’ எனும் கப்பலை பார்வையிட்டார். அப்போது கப்பலின் தொழில்நுட்ப வசதிகளை அவர் ஆய்வு செய்தார். ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு மனிதர்களை அழைத்துச் செல்வதற்காக உருவாக்கப்பட்ட ‘மத்யாஸா’ என்ற கலன், அக் கப்பலில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அதனையும் மத்திய அமைச்சர் ஆய்வு செய்தார்.

7. டேபிள் டென்னிஸ்: சத்தியன்/தேசாய் இணை சாம்பியன்

டுனீசியாவில் நடைபெற்ற உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜி சத்தியன் / ஹர்மீத் தேசாய் இணை சாம்பியன் பட்டம் வென்றது. இது இந்த இணையின் முதல் சர்வதேச புரோ டூர் பட்டமாகும்.

இறுதிச்சுற்றில் சத்தியன்/ஹர்மீத் இணை 11-9, 4-11, 11-9, 11-6 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் இமானுவல் லெபெசான்/அலெக்ஸாண்ட்ரே காசின் இணையை தோற்கடித்தது.

8. சிட்டி யூனியன் வங்கிக்கு வரி வசூலிக்க அனுமதி

மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் மற்றும் மறைமுக வரிகள் வாரியத்தின் வரிகளை வசூலிக்க, சிட்டி யூனியன் வங்கிக்கு ரிசர்வ் வங்கி அங்கீகாரம் வழங்கி உள்ளது.

இதன்படி, மறைமுக வரிகள் வாரியத்தின் ஜி எஸ் டி – சுங்க வரி உட்பட, பல்வேறு மறைமுக வரிகளையும், நேரடி வரிகள் வாரியத்தின் வருமான வரியையும் சிட்டி யூனியன் வங்கி வாடிக்கையாளர்கள், அதன் வங்கி கிளைகளில் செலுத்தலாம்.

9. நவ.1 – உலக தாவர உணவு நாள்

10. INS விசாகப்பட்டினம் போர்க்கப்பல் நவ.18இல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு:

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர்க்கப்பல் நவ.18 அன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. மும்பை மஸகான் கப்பல்கட்டும் தளத்தில் முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் INS விசாகப்பட்டினம் போர்க்கப்பல் தயாரிக்கப்பட்டு உள்ளது. 7,300 டன் எடை, 163 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 300 வீரர்கள் பணியாற்றுவார்கள்.

வான் இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், போர்க்கப்பல்களை தாக்கும் ஏவுகணைகள், நீர்மூழ்கிகளை தாக்கும் ஏவுகணைகள் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த போர்க்கப்பலால் ஒரே நேரத்தில் 32 வான் இலக்குகளை தாக்கி அழிக்க முடியும். அணு ஆயுத தாக்குதல், உயிரி ரசாயன தாக்குதல்களை சமாளிக்கும் தொழில்நுட்பங்கள் உள்ளன. 2 ஹெலிகாப்டர்களும் கப்பலில் நிறுத்தப்பட்டிருக்கும்.

நவ.18 அன்று மும்பையில் நடைபெறும் விழாவில் INS விசாகப்பட்டினம் போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விழாவுக்கு தலைமையேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர்க்கப்பலை தொடர்ந்து இந்த மாத இறுதியில் ஐஎன்எஸ் வேலா நீர்மூழ்கி கப்பல், கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது. புதிய போர்க்கப்பல், நீர்மூழ்கியால் கடற்படையின் பலம் மேலும் அதிகரிக்கும் என்று பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

11. கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் நமாமி கங்கை திட்டம்

ஒரு மணி நேரத்தில் அதிக எண்ணிக்கையில், கையால் எழுதப்பட்ட குறிப்புகளின் படங்கள் பதிவிடப்பட்டதற்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் கங்கை தூய்மைக்கான தேசியத் திட்டம் (நமாமி கங்கை) இடம்பிடித்துள்ளது.

கங்கை நதித் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது. அதையொட்டி, கங்கை தூய்மைக்கான தேசியத் திட்டத்தின்கீழ் சாதனை முயற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, கங்கை குறித்து கையால் எழுதப்பட்ட குறிப்புகளின் படங்களை ஒரு மணி நேரத்தில் ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் பதிவிட ஏற்பாடு செய்யப்பட்டது.

அதில் பெரும்பாலானோர் கலந்துகொண்டு, கையால் எழுதப்பட்ட குறிப்புகளின் படங்களைப் பதிவிட்டனர். ஒரு மணி நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான படங்கள் பதிவிடப்பட்டதை கின்னஸ் அமைப்பு உலக சாதனையாக அறிவித்து சான்றிதழை வழங்கியது.

1. Where is the Institute of Tropical Meteorology located?

A) Mumbai

B) Kolkata

C) New Delhi

D) Pune 

  • The Institute of Tropical Meteorology (IITM) is an autonomous institution under the Union Ministry of Earth Science, and is located at Pune. The institution has developed and launched a new ‘Decision Support System’ (DSS) aimed to enhance the existing ‘Air Quality Early Warning System’, for airquality measurement and management in Delhi.

2. Kung Fu Nuns, who won the Martial Arts Education Prize 2021 from the UNESCO, belong to which lineage of Buddhism?

A) Drukpa 

B) Nyingma

C) Kagyu

D) Sakya

  • The world–renowned Kung Fu Nuns of the Drukpa order of Buddhism has won the prestigious Martial Arts Education Prize 2021 from the UNESCO International Centre for Martial Arts for their brave acts of service. Through martial arts, the Drukpa nuns empower young girls to defend themselves, build confidence, and take on leadership roles in their communities.

3. What is the name of India’s first indigenous aircraft carrier?

A) Arjun

B) Vikrant 

C) Kattabomman

D) Bharathi

  • India’s first indigenous aircraft carrier (IAC) Vikrant has recently begun its second phase of sea trails, ahead of its planned induction into the Indian Navy by August 2022. The warship will operate MiG–29K fighter jets, Kamov–31 helicopters, MH–60R multi–role helicopters.

4. Mullaperiyar dam, located in Kerala, is in control of which state?

A) Tamil Nadu 

B) Karnataka

C) Andhra Pradesh

D) Telangana

  • The Mullaperiyar dam is located in the state of Kerala and is in control of Tamil Nadu. There has been a long dispute since it presents a threat to lakhs living downstream in Kerala and it irrigates over 2 lakh hectares in five districts of Tamil Nadu. Recently, the Supreme Court directed that the maximum water level in Mullaperiyar dam should be 139.50 ft until November 10. The dam is located in the upper region of the river Periyar, which originates in Tamil Nadu and flows into Kerala.

5. ‘National Fund to Control Drug Abuse’ is associated with which Union Ministry?

A) Ministry of Home Affairs

B) Ministry of Social Justice and Empowerment 

C) Ministry of Women and Child Development

D) Ministry of Law and Justice

  • The Social Justice and Empowerment Ministry has recently recommended that the National Fund to Control Drug Abuse may be used to carry out de–addiction programmes. The fund was created in accordance with a provision of the Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985, has a nominal corpus of ₹23 crore.
  • The Act states that the fund would be used to combat illicit trafficking of narcotics, rehabilitating addicts, and preventing drug abuse. As the fund is being used only for policing activities, the Ministry proposed to add de–addiction to it.

6. ‘Operation Red Rose’ is an anti–illicit liquor campaign, being implemented in which state?

A) Tamil Nadu

B) New Delhi

C) Punjab 

D) Rajasthan

  • Punjab’s Excise Department launched ‘Operation Red Rose’ in 2020, to curb illicit liquor trading and nail excise–related crimes. Recently, it has been using precise tracking and monitoring systems like Global Positioning System (GPS) technology, to check illicit distillation and smuggling of liquor.

7. “Appscale Academy” is an initiative by which tech giant, in association with the MeitY Startup Hub?

A) Yahoo

B) Facebook

C) Twitter

D) Google 

  • The tech major Google has partnered with MeitY Startup Hub, to launch “Appscale Academy”, which aims to help Indian startups to create high–quality apps. The initiative of Google would specifically cater to the needs to local – early to mid–stage startups in India and support them to create applications in domains like gaming, education, social impact, health care etc.

8. The United Nations General Assembly has designated the year 2021 as?

A) International Year Against Terrorism

B) International Year of Health Care

C) International Year to fight COVID

D) International Year of Fruits and Vegetables 

  • The United Nations General Assembly has declared the year 2021 as the International Year of Fruits and Vegetables, with Food and Agriculture Organization (FAO) as the lead agency to celebrate this year, along with other relevant organizations. This year seeks to spread awareness on the role played by fruits and vegetables in human nutrition, and in food security.

9. Kushagra Rawat and Srihari Nataraj are associated with which sport?

A) Cricket

B) Golf

C) Archery

D) Aquatics 

  • Kushagra Rawat of Delhi and Srihari Nataraj of Karnataka are Indian Aquatic champions, who have created new national records in 400m freestyle and 100 backstroke events respectively at the 74th Senior National Aquatic Championships.
  • Kushagra Rawat has created a new record of 3:53.68 seconds, while Srihari Nataraj finished in 55.10 seconds in 100 m back stroke.

10. Where is the headquarters of the United Nations Office on Drugs and Crime?

A) Austria 

B) USA

C) Germany

D) Hungary

  • The United Nations Office on Drugs and Crime (UNODC) was established in the year 1997 with its headquarters as Vienna, Austria. The institution is in news recently, as it has launched Data Disclosure Framework (DDF) in association with the Security Council Counter–Terrorism Committee Executive Directorate.
  • The DDF is a tool which describes the practices developed to handle and respond to the data requests from foreign criminal justice authorities for counter–terrorism investigations.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!