TnpscTnpsc Current Affairs

2nd November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

2nd November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 2nd November 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

2nd November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. 2022 – இந்தியா கெம் மாநாட்டை நடத்தும் நகரம் எது?

அ. பெங்களூரு

ஆ. புது தில்லி

இ. ஹைதராபாத்

ஈ. சென்னை

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. புது தில்லி

  • நடுவண் இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, “Vision 2030: Chemicals and Petrochemicals Build India” என்ற கருப்பொருளுடன் புது தில்லியின் பிரகதி மைதானத்தில் 2022 – இந்தியா கெம் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்திய வணிகம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்புடன் (FICCI) இணைந்து இந்தியா கெம்மின் பன்னிரண்டாவது பதிப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. 2021–22ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் இரசாயனங்கள் ஏற்றுமதி $29,296 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.

2. கிரீன்ஃபீல்ட் எலக்ட்ரானிக்ஸ் மேனுஃபேக்ச்சரிங் கிளஸ்டர் அமைக்கப்படவுள்ள இரஞ்சன்காவ்ன் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. குஜராத்

இ. அஸ்ஸாம்

ஈ. அருணாச்சல பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. மகாராஷ்டிரா

  • நடுவண் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது மகாராஷ்டிர மாநிலத்தில் புனேவுக்கு அருகிலுள்ள இரஞ்சன்காவ்ன் 3ஆம் கட்டத்தில் அமைக்கப்படவுள்ள கிரீன்ஃபீல்ட் மின்னணு உற்பத்தித் தொகுதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இத்தொகுப்பின் திட்டச்செலவு `492.85 கோடியாகும். நொய்டா, திருப்பதி, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் மின்னணு உற்பத்தித் தொகுதிகள் உள்ளன. அங்கு பல்வேறு தேசிய நிறுவனங்கள் மற்றும் இந்திய துளிர் நிறுவல்கள் தங்கள் அலகுகளை நிறுவியுள்ளன.

3. யாரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ‘தேசிய ஒற்றுமை நாள்’ அனுசரிக்கப்படுகிறது?

அ. ‘மகாத்மா’ காந்தியடிகள்

ஆ. சர்தார் வல்லபாய் படேல்

இ. சுபாஷ் சந்திர போஸ்

ஈ. B R அம்பேத்கர்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சர்தார் வல்லபாய் படேல்

  • சர்தார்வல்லபாய் படேலின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ‘தேசிய ஒற்றுமை நாள்’ அனுசரிக்கப்படுகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய படேல், 550–க்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தானங்களை ஒன்றிணைப்பதற்கான தனது முயற்சிகளுக்காக, ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இவ்வாண்டு சர்தார் வல்லபாய் படேலின் 147ஆவது ஆண்டு பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

4. இந்திய ரிசர்வ் வங்கி அதன் சோதனை கட்டத்தில் எந்த வகையான ‘நடுவண் வங்கி டிஜிட்டல் நாணயத்தை’ வெளியிட்டுள்ளது?

அ. சில்லறை விற்பனை

ஆ. மொத்த விற்பனை

இ. பண்டம்

ஈ. கிரிப்டோகரன்சி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மொத்த விற்பனை

  • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) மொத்த விற்பனைப் பிரிவினருக்காக, நடுவண் வங்கி ஆதரவுடைய ‘எண்ம ரூபாய்’க்கான முன்னோடித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘நடுவண் வங்கியின் எண்ம நாணயத்தின் செயல்பாடு–மொத்த விற்பனை (இ `–W) சோதனைமுறை’ என்ற அறிவிப்பில் RBI இதனை அறிவித்துள்ளது. பாரதி வங்கி, பரோடா வங்கி, இந்திய யூனியன் வங்கி, HDFC வங்கி, ICICI வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, YES வங்கி, IDFC ஃபர்ஸ்ட் பேங்க் மற்றும் HSBC ஆகிய ஒன்பது வங்கிகள் இதற்காக தேர்வுசெய்யப்பட்டுள்ளன.

5. தனது விண்வெளி நிலையத்திற்காக, ‘மெங்டியான்’ என்ற ஆய்வகத்தொகுதியை ஏவியுள்ள நாடு எது?

அ. ரஷ்யா

ஆ. அமெரிக்கா

இ. சீனா

ஈ. இஸ்ரேல்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. சீனா

  • சீனா தற்போது கட்டப்பட்டுவரும் விண்வெளி நிலையத்தின் ஒருபகுதியாக, ‘மெங்டியான்’ என்ற ஆய்வகத் தொகுதியை அண்மையில் ஏவியது. இந்த இரண்டாவது ஆய்வகக்கூறு, லாங் மார்ச்–5B Y4 கொண்டு ஏவப்பட்டது. மேலும் இது நுண் புவியீர்ப்பு விசையை ஆயவும் திரவ இயற்பியல், பொருண்ம அறிவியல், எரிப்பு அறிவியல் மற்றும் அடிப்படை இயற்பியல் ஆகியவற்றில் சோதனைகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படும். உயிரியல் மற்றும் விண்வெளி வாழ்க்கை அறிவியலில் கவனம் செலுத்திய, ‘வென்டியன்’ ஆய்வகக்கலம் இதற்குமுன் அனுப்பப்பட்டது.

6. 2022 – உலக மனநல நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Leaving None Behind

ஆ. Make mental health for all a global priority

இ. Accessible Mental Health

ஈ. Sustainable Mental Health

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. Make mental health for all a global priority

  • உலகம் முழுவதும் மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் அக்.10ஆம் தேதி அன்று ‘உலக மனநல நாள்’ அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும், உலக நலவாழ்வு அமைப்பு (WHO) உலக மனநல நாளிற்கான உலகளாவிய பிரச்சாரத்தை ஏற்பாடு செய்து வருகிறது. “Make mental health for all a global priority” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில் வரும் உலக மனநல நாளிற்கானக் கருப்பொருளாகும்.

7. 21 வயதை அடையும்முன் மணம் செய்துகொண்ட சிறுமிகள் அதிகமுள்ள மாநிலம் எது?

அ. பீகார்

ஆ. மேற்கு வங்காளம்

இ. இராஜஸ்தான்

ஈ. ஹரியானா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மேற்கு வங்காளம்

  • நடுவண் உள்துறை அமைச்சகத்தின் சமீபத்திய மக்கள்தொகை மாதிரி கணக்கெடுப்பின்படி, மேற்கு வங்காளத்தில் 54.9% சிறுமிகள் 21 வயதுக்கு முன்பே மணம் செய்து கொள்கிறார்கள். ஜார்கண்டில், தேசிய சராசரியான 29.5%க்கு எதிராக 54.6%ஆக உள்ளது. மாதிரி பதிவு அமைப்பின் புள்ளிவிவர அறிக்கையின்படி, ஜார்கண்ட் மாநிலத்தில் திருமண வயதை அடைவதற்கு முன்பே திருமணம் செய்து கொள்ளும் சிறுமிகளின் சதவீதம் 5.8ஆக உள்ளது. தேசிய அளவில் இது 1.9 சதவீதமாகவும், கேரளாவில் 0.0 ஆகவும் உள்ளது.

8. விண்மீனிடை விண்கற்கள் IM1 மற்றும் IM2 ஆகியவற்றைக் கண்டறிந்த நாடு எது?

அ. சீனா

ஆ. ரஷ்யா

இ. அமெரிக்கா

ஈ. இஸ்ரேல்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. அமெரிக்கா

  • ஹார்வர்ட் பல்கலைக்கழக வானியல் இயற்பியலாளர்களின் புதிய ஆராய்ச்சியின்படி, முதல் மற்றும் இரண்டாவது விண்மீனிடை விண்கற்களான IM1 மற்றும் IM2 ஆகிய இரண்டும் பொருண்ம வலிமையில் வெளிப்புறமாக உள்ளன. மேலும் இவை சூப்பர்நோவா வெடிப்புகளினால் தோன்றியிருக்கலாம். IM1 ஆனது கடந்த 2014ஆம் ஆண்டில் அமெரிக்க அரசாங்க உணரிகளால் கண்டறியப்பட்டது; கடந்த 2019ஆம் ஆண்டில் விண்மீன்களுக்கிடையேயான பொருண்மமாக அது அடையாளம் காணப்பட்டு நடப்பு 2022இல் உறுதிப்படுத்தப்பட்டது. இரண்டாவது விண்மீன் இடை விண்கல்லான IM2 ஆனது NASAஇன் NEO ஆய்வுகளுக்கான மையத்தின் எரிகோள அட்டவணையில் இருந்த தரவுகளின்மூலம் அடையாளம் காணப்பட்டது.

9. “Our time is now—our rights, our future” என்பது அக்டோபர்.11 அன்று கொண்டாடப்படும் எந்தச் சிறப்பு நாளின் கருப் பொருளாகும்?

அ. சர்வதேச பெண் குழந்தைகள் நாள்

ஆ. சர்வதேச சிறுபான்மையினர் நாள்

இ. சர்வதேச அகதிகள் நாள்

ஈ. சர்வதேச மூன்றாம் பாலினத்தோர் நாள்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. சர்வதேச பெண் குழந்தைகள் நாள்

  • சர்வதேச பெண் குழந்தைகள் நாளானது கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் அக்.11 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்டது. இவ்வாண்டு (2022) சர்வதேச பெண் குழந்தைகள் நாளின் 10ஆம் ஆண்டு கடைப்பிடிப்பாகும். “Our time is now—our rights, our future” என்பது இந்த ஆண்டு பெண் குழந்தைகளுக்கான சர்வதேச நாளுக்கானக் கருப்பொருளாகும்.

10. சமத்துவமின்மையைக் குறைப்பதற்கான உறுதிப்பாடு குறித்த 2022ஆம் ஆண்டுக்கான குறியீட்டில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?

அ. 113

ஆ. 123

இ. 133

ஈ. 143

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 123

  • சமத்துவமின்மையைக் குறைப்பதற்கான உறுதிப்பாடு குறித்த 2022ஆம் ஆண்டுக்கான குறியீட்டில், இந்தியா, ஆறு இடங்கள் முன்னேறியுள்ளது. 161 நாடுகளில் இந்தியா 123ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தக் குறியீட்டை ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனலும் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் இன்டர்நேஷனலும் இணைந்து தயாரித்துள்ளன. பொதுச்சேவைகள் (சுகாதாரம், கல்வி மற்றும் சமூக பாதுகாப்பு), வரிவிதிப்பு மற்றும் தொழிலாளர் உரிமைகள் ஆகிய மூன்று பகுதிகளில் இது அரசாங்க கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை அளவிடுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இரண்டாவது முறையாக GST வசூல் `1.50 இலட்சம் கோடியைக் கடந்தது!

நாடு முழுவதும் இரண்டாவது முறையாக GST வசூல் `1.50 இலட்சம் கோடியை கடந்துள்ளதாக நடுவண் அரசு தெரிவித்துள்ளது. 2022 ஏப்ரல் வசூலான GST வசூலுக்கு அடுத்தபடியான அதிகபட்சம் அக்டோபர் மாத GST வசூல் ஆகும். தொடர்ந்து 8ஆவது மாதமாக `1.40 லட்சம் கோடிக்கும் அதிகமாக GST வசூலாகியுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. GST வசூல் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக `1.68 லட்சம் கோடி வசூலானது. கடந்த ஆண்டு அக்டோபரில் `1.30 லட்சம் கோடிக்கு மேல் GST வசூலானது.

அக்டோபர் 2022இல் வசூலான மொத்த GST `1,51,718 கோடி, இதில் மத்திய GST `26,039 கோடி, மாநில GST `33,396 கோடி, ஒருங்கிணைந்த GST `81,778 கோடி (சரக்குகள் இறக்குமதிமூலம் வசூலான `37,297 கோடி உள்பட) செஸ் `10,505 கோடி (சரக்கு இறக்குமதிமூலம் வசூலான `825 கோடி உள்ளடங்கியது) ஆகும். அக்டோபர் மாதத்தில் தமிழ்நாட்டில் GST வசூல் 25 சதவீதம் அதிகரித்து `9,540 ஆகவும், புதுச்சேரியில் GST வரி வசூல் 34% அதிகரித்து `204 கோடி என நடுவணரசு தகவல் தெரிவித்துள்ளது.

2nd November 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which city is the host of the ‘India Chem 2022’ Conference?

A. Bengaluru

B. New Delhi

C. Hyderabad

D. Chennai

Answer & Explanation

Answer: B. New Delhi

  • Union Minister of Chemicals and Fertilizers Dr Mansukh Mandaviya inaugurated the India Chem 2022 at Pragati Maidan, New Delhi with the theme ‘Vision 2030: Chemicals and Petrochemicals Build India’. The 12th edition of INDIA CHEM was organised in association with the Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI). India’s export of chemicals for 2021–22 has hit a record at USD 29,296 Million.

2. Ranjangaon, where the greenfield Electronics Manufacturing Cluster (EMC) is to be set up, is in which state?

A. Maharashtra

B. Gujarat

C. Assam

D. Arunachal Pradesh

Answer & Explanation

Answer: A. Maharashtra

  • The Ministry of Electronics and IT has approved the greenfield Electronics Manufacturing Cluster (EMC) to be set up in Ranjangaon Phase III, near Pune in Maharashtra. The project cost of the Cluster is Rs 492.85 crores. There are EMCs in Noida, Tirupati, Karnataka and Tamil Nadu, where multi–national companies and Indian start–ups have set up their units.

3. ‘National Unity Day’ is observed to commemorate the birth anniversary of which leader?

A. Mahatma Gandhi

B. Sardar Vallabhbhai Patel

C. Subhash Chandra Bose

D. B R Ambedkar

Answer & Explanation

Answer: B. Sardar Vallabhbhai Patel

  • ‘National Unity Day or Rashtriya Ekta Diwas’ is observed to commemorate the birth anniversary Sardar Vallabhbhai Patel. Patel, who served as the first Home Minister of India after Independence, is also known as the ‘The Iron Man of India’ for his efforts for the unification of over 550 princely states. This year marks the 147th anniversary of Sardar Vallabhbhai Patel.

4. RBI has launched which type of Central Bank Digital Currency in its pilot phase?

A. Retail

B. Wholesale

C. Commodity

D. Cryptocurrency

Answer & Explanation

Answer: B. Wholesale

  • The Reserve Bank of India (RBI) has launched the pilot for a central–bank–backed digital rupee for the wholesale segment. RBI announced this in a statement on ‘Operationalisation of Central Bank Digital Currency–Wholesale (e ₹–W) Pilot’. The nine banks selected for the pilot are State Bank of India, Bank of Baroda, Union Bank of India, HDFC Bank, ICICI Bank, Kotak Mahindra Bank, Yes Bank, IDFC First Bank and HSBC.

5. Which country launched the lab module named ‘Mengtian’ for its space station?

A. Russia

B. USA

C. China

D. Israel

Answer & Explanation

Answer: C. China

  • China recently launched a lab module called Mengtian to be part of its space station currently under construction. The second lab component was launched by Long March–5B Y4 and will be used for studying microgravity and carrying out experiments in fluid physics, materials science, combustion science and fundamental physics. Wentian lab which was sent earlier focused on biological and space life sciences.

6. What is the theme of the ‘World Mental Health Day 2022’?

A. Leaving None Behind

B. Make mental health for all a global priority

C. Accessible Mental Health

D. Sustainable Mental Health

Answer & Explanation

Answer: B. Make mental health for all a global priority

  • ‘World Mental Health Day’ is marked every year on October 10 to raise awareness about mental health around the world. Every year since 2013, the World Health Organization (WHO) has organized a global campaign for World Mental Health Day. The theme for World Mental Health Day 2022 is ‘Make mental health for all a global priority’.

7. Which state has the highest number of girls who got married before attaining the age of 21?

A. Bihar

B. West Bengal

C. Rajasthan

D. Haryana

Answer & Explanation

Answer: B. West Bengal

  • According to the latest demographic sample survey by the Union Home Ministry, 54.9% of girls are married in West Bengal before attaining the age of 21 years. In Jharkhand, the figure is 54.6% as against the national average of 29.5%. As per the Sample Registration System (SRS) Statistical Report, the percentage of girls getting married before attaining majority is as high as 5.8 in Jharkhand. While the percentage is 1.9 at the national level and it is at 0.0 in Kerala.

8. Which country detected the Interstellar meteors IM1 and IM2?

A. China

B. Russia

C. USA

D. Israel

Answer & Explanation

Answer: C. USA

  • According to new research by Harvard University astrophysicists, both the first and second interstellar meteors, IM1 and IM2, are outliers in material strength and may have originated in supernova explosions. IM1 was detected by U.S. government sensors in 2014, identified as interstellar object candidate in 2019, and was confirmed in 2022. The second interstellar meteor, IM2 was identified in data from the NASA’s Center for NEO Studies (CNEOS) fireball catalog.

9. ‘Our time is now—our rights, our future’ is the theme of which special day celebrated on October 11?

A. International Day of the Girl Child

B. International Day of Minorities

C. International Day of Refugees

D. International Day of Trans–persons

Answer & Explanation

Answer: A. International Day of the Girl Child

  • International Day of the Girl Child is observed on October 11 every year across the world since 2012, when it was declared by the United Nations. This year commemorates the 10th anniversary of the International Day of the Girl. The theme of International Day of the Girl Child this year is ‘Our time is now—our rights, our future’.

10. What is India’s rank in Commitment to Reducing Inequality Index (CRII) 2022?

A. 113

B. 123

C. 133

D. 143

Answer & Explanation

Answer: B. 123

  • India has moved up six places in the Commitment to Reducing Inequality Index (CRII) 2022. India has been ranked 123 out of 161 countries in the Commitment to Reducing Inequality Index (CRII) 2022. It has been prepared by Oxfam International and Development Finance International. It measures government policies and actions in three areas: public services (health, education, and social protection), taxation, and workers’ rights.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!