Tnpsc

2nd September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

2nd September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 2nd September 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘இந்தியா SIZE’ ஆய்வுடன் தொடர்புடைய அமைச்சகம் எது?

அ) ஜவுளி அமைச்சகம் 

ஆ) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

இ) உள்துறை அமைச்சகம்

ஈ) பாதுகாப்பு அமைச்சகம்

  • புது தில்லியில் அமைந்துள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனமானது (NIFT), நடுவண் ஜவுளி அமைச்சகத்தின்கீழ் உள்ள ஒரு நிறுவனம் ஆகும். அந்நிறுவனம், “இந்தியா SIZE” என்ற ஓர் ஆய்வை மேற்கொள்கிறது.
  • இது, இந்திய மக்களுக்கான ஒரு விரிவான உடலளவு விளக்கப்படத்தை உருவாக்கும் ஒரு விரிவான உடற்கூற்றளவைசார் ஆய்வாகும். இந்தத் தரவுகளின்மூலம் இந்திய மக்களுக்கேற்ற பணிச்சூழலியல் ரீதியாக வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளை உருவாக்க முடியும்.

2. பிரெஞ்சு மேம்பாட்டு நிறுவனமான ‘AFD’இன் ஆதரவுடன், பின்வரும் எந்த இந்திய மாநிலம், பல்லுயிர் பாதுகாப்புத் திட்டத்தை மேற்கொண்டுள்ளது?

அ) கர்நாடகா

ஆ) இராஜஸ்தான் 

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) கோவா

  • இராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்கு மாவட்டங்களில் பிரெஞ்சு வளர்ச்சி நிறுவனமான Agence Francaise de Developpement (AFD) ஆதரவுடன் பல்லுயிர் பாதுகாப்புத் திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இராஜஸ்தான் வனவியல் மற்றும் உயிரிமேம்பாட்டுத் திட்டமானது ஏற்கனவே மாநில அரசின் ஒப்புதலைப் பெற்றிருந்தது. ஏறக்குறைய 1200 சுய-உதவிக் குழுக்களின் உதவியுடன், கிராமங்களில் சூழல்-சுற்றுலா மற்றும் பிற நிலையான வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக்கொண்டுள்ளது. இத்திட்டத்தின் ஒருபகுதியாக பரத்பூரில் ஒரு பல்லுயிர் பூங்காவும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

3. இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலை அமைக்கப்பட உள்ள இடம் எது?

அ) மும்பை

ஆ) சென்னை

இ) மதுரா 

ஈ) டிக்பாய்

  • இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமும் எண்ணெய் நிறுவனமுமான IOCL, நாட்டின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலையை மதுராவில் அமைக்கவுள்ளது. மதுராவின் தாஜ் டிரபீசியம் மண்டலத்திற்கு அருகாமையில் இருப்பதால், அவ்விடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், நாட்டில் எண்ணெய் & எரிவாயு துறையில் பசுமை கைட்ரஜனை அறிமுகப்படுத்தவுள்ளது.

4. அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற சத்தியன் ஞானசேகரனுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ) டென்னிஸ்

ஆ) டேபிள் டென்னிஸ் 

இ) பூப்பந்து

ஈ) குத்துச்சண்டை

  • ITTF செக் சர்வதேச ஓப்பனில், ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வெல்ல இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சத்தியன் ஞானசேகரன் 4-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றார். 28 வயதான அவர், உலக தர வரிசையில் 39ஆவது இடத்தில் உள்ளார். கடந்த வாரம், புடாபெஸ்டில் நடந்த WTT’இல், கலப்பு இரட்டையர் பட்டத்தை வெல்வதற்காக அவர் மணிகா பத்ராவுடன் இணைந்து விளையாடினார்.

5. மலபார்-21 கடற்படை பயிற்சியில் எத்தனை நாடுகள் பங்கேற்கின்றன?

அ) 2

ஆ) 4 

இ) 6

ஈ) 8

  • இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் & ஆஸ்திரேலியாவின் கடற்படைகள் (QUAD) மலபார்-21 என்ற கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்கின்றன. இந்த நான்கு நாடுகளும் கடந்த 2020 முதல் மலபார் பயிற்சியின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன. இந்த ஆண்டின் மலபார் பயிற்சி பசிபிக் தீவான குவாமில் நடைபெறுகிறது. கடற்படைகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும், கடல்சார் பாதுகாப்பில் பொதுவான புரிதலை உருவாக்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

6. மொராக்கோவுடனான தூதரக உறவை துண்டித்துள்ள நாடு எது?

அ) அல்ஜீரியா 

ஆ) இந்தியா

இ) பிரான்ஸ்

ஈ) பாகிஸ்தான்

  • அல்ஜீரியாவின் வெளியுறவு அமைச்சர் ராம்தேன் லாமாம்ரா தனது நாடு பகைமை நடவடிக்கைகளால் மொராக்கோவுடனான அரசியல் ரீதியான உறவுகளை முறித்துக்கொண்டதாக அறிவித்தார்.
  • வட ஆப்பிரிக்க போட்டியாளர்களிடையே பலமாதங்களாக எழுந்த பதற்றத்தைத்தொடர்ந்து இம்முடிவெடுக்கப்பட்டுள்ளது. அல்ஜீரியாவிற்கும் மொராக்கோவிற்கும் இடையிலான எல்லை, 1994ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டுள்ளது. மொராக்கோ தனது நாட்டின் ஒருபகுதியாகக் கருதும் மேலை சகாராவுக்கு விடுதலைக்கோரும் பொலிசாரியோ இயக்கத்தை அல்ஜீரியா ஆதரித்து வருகிறது.

7. இந்திய கடலோர காவல்படையின் அடிப்படையில், ‘விக்ரஹா’ என்றால் என்ன?

அ) கடலோர ரோந்துக்கப்பல் 

ஆ) குரூஸ் ஏவுகணை

இ) கடலோர ஹெலிகாப்டர்

ஈ) கடலோர டிரோன்

  • கடல் ரோந்துக் கப்பல்கள் வரிசையில் ஏழாவதான இந்திய கடலோரக் காவல்படை கப்பலான ‘விக்ரஹா’வை ஆகஸ்ட்.28 அன்று இந்திய கடலோரக் காவல்படையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் இணைத்து வைத்தார்.
  • ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டிணத்தை மையமாகக் கொண்டு செயல்படவிருக்கும் இந்தக்கப்பல், கடலோரக்காவல் படையின் கிழக்கு கடல்பகுதியில் பணியாற்றும். லார்சன் & டூப்ரோ ஷிப் பில்டிங் லிமிடெட் நிறுவனத்தால் இக்கப்பல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

8. காலநிலை மாற்றம் தொடர்பான அரசாங்கங்களுக்கிடையிலான குழுவின் தலைமையிடம் உள்ள இடம் எது?

அ) சுவிச்சர்லாந்து 

ஆ) இந்தியா

இ) நியூயார்க்

ஈ) ஜெர்மனி

  • காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கிடையிலான குழு (IPCC) சுவிச்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்ட ஐநா அவையின் ஓர் அமைப்பாகும். பருவநிலை மாற்றம் குறித்த ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை (AR6) ஐபிசிசியால் “AR6 காலநிலை மாற்றம் 2021: இயற்பியல் அறிவியல் அடிப்படை” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டு உள்ளது. காலநிலை அமைப்புகள் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த சமீபத்திய கண்டுபிடிப்புகளை இந்த அறிக்கை அளிக்கிறது. உலக வெப்ப நிலை அடுத்த 2 தசாப்தங்களில் 1.5 டிகிரியை தாண்டும் என இந்த அறிக்கை கூறுகிறது.

9. எந்த இந்திய மாநிலத்தின் 17ஆவது ஆளுநராக இல கணேசன் பதவியேற்றார்?

அ) தெலுங்கானா

ஆ) மணிப்பூர் 

இ) அஸ்ஸாம்

ஈ) மேற்கு வங்கம்

  • முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் இல கணேசன், மணிப்பூர் மாநிலத்தின் 17ஆவது ஆளுநராக இம்பாலில் பதவியேற்றார். மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி பிவி சஞ்சய் குமார், இல கணேசனுக்கு பதவிப்பிரமாணமும் இரகசியக்காப்புப்பிரமாணமும் செய்துவைத்தார்.

10. எந்த மாநிலத்தில் கடல்சார் ஆய்வுகள் குறித்த புதிய திறன் நிறுவனத்தை அமைக்கவுள்ளதாக நடுவண் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது?

அ) உத்தர பிரதேசம்

ஆ) இமாச்சல பிரதேசம்

இ) கேரளா

ஈ) அஸ்ஸாம் 

  • மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், சென்னை இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின்கீழ் அஸ்ஸாமில் உள்ள கௌகாத்தியில் கடல்சார் ஆய்வுக்கான திறன் நிறுவனத்தை நிறுவுவதாக அறிவித்தார்.
  • கௌகாத்தியில் உள்ள பாண்டுவில் ஒரு புதிய ‘கப்பல் பழுதுபார்க்கும் வசதியை’ அமைப்பதற்காக இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் மற்றும் ஹூக்லி கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்துக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
  • இதற்கான தொழில்நுட்ப ஆதரவை ஐஐடி மெட்ராஸ் வழங்கும். 2023 ஆகஸ்டுக்குள் இது முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்லிப்வே எனப்படும் இந்த வசதி அஸ்ஸாம் மாநில அரசால் வழங்கப்பட்ட 3.67 ஏக்கர் நிலத்தில் உருவாக்கப்படவுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. குடிசை மாற்று வாரியத்தின் பெயர் மாற்றம்:

குடிசைப்பகுதி மாற்று வாரியமானது இனி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமாக பெயர்மாற்றம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் குடிசை மாற்று வாரியம் 1970ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

2. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை: வழிகாட்டுதல்களுடன் அரசாணை வெளியீடு

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: பள்ளிப்படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு என அனைத்தையும் முழுவதுமாக தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும். இதர மொழிகளை பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் முன்னுரிமை கிடையாது.

ஒன்றாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை பள்ளிக்குச் செல்லாமல் நேரடியாக பத்தாம் வகுப்பு தேர்வினை எழுதி தேர்ச்சிபெற்ற தனித் தேர்வர்கள் மற்றும் பிற மாநிலங்களில் தமிழ் அல்லாமல் இதர மொழியினை பயிற்றுமொழியாக கொண்டு பயின்று பின்பு இந்த மாநிலத்தில் நேரடியாகச் சேரும் வகுப்பிலிருந்து பள்ளி இறுதி வகுப்புகள் வரை தமிழ் வழியில் பயின்றவர்கள் இந்த முன்னுரிமைக்கு தகுதியுடையவர்கள் அல்லர்.

சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரிபார்த்த பின்னரே 20 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் பணிநியமனம் செய்யப்படுவர். தமிழ் வழியில் கல்வி பயின்ற்கான சான்றிதழ்களில், மாணவர்களின் பெயர், பயின்ற பள்ளி, கல்லூரி, கல்வி நிறுவனங்களின் பெயர், முகவரி, வகுப்புகள், சான்றிதழ் வழங்கிய அதிகாரி ஆகிய விவரங்கள் அடங்கிய விரைவு தகவல் குறியீட்டினை (QR) இடம்பெறச்செய்வதுடன் அச்சான்றிதழ்களை இ-சேவை மையங்கள்மூலம் வழங்குவதற்கு பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகள் உரிய ஆணைகளை வெளியிடும்.

தமிழ் இலக்கியத்தில் கல்வித் தகுதித் தகுதி பெற்றவர்களை மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் பாடத்துக்கான ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். தமிழ் பாடத்திலும் மாறுபட்ட வேறு ஒரு பாடத்திலும் பட்டம் பெற்றவர்களை தமிழ் ஆசிரியர்களாக நியமனம் செய்யக்கூடாது என்பதற்கான திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகள் நடவடிக்கை மேற்கொள்ளும்.

மேற்கண்ட சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ள 20% முன்னுரிமை இட ஒதுக்கீடானது நேரடி பணி நியமனத்துக்கான ஒவ்வொரு தெரிவு நிலையிலும் (முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் இதரநிலைகள்) பதவி வாரியாக பின்பற்றப்பட வேண்டும் என தலைமைச்செயலாளர் வெ இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. ஓராண்டில் 3,208 குழந்தைத் திருமணங்கள் நிறுத்தம்

தமிழ்நாட்டில் ஓராண்டில் மட்டும் 3,208 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக சமூகநலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு ஜூலை வரையில் 16,281 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் 3,208 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. குழந்தைத் திருமணத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளித்திடும் வகையில், கடந்த நிதியாண்டில் 1,021 பெண் குழந்தைகளுக்கு மாதம் தலா ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று மாதங்கள் தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

4. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் தலைமைப் பொறுப்பு நிறைவு

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் தலைமைப் பொறுப்பு நிறைவடைந்துள்ளது. இதில், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சில சர்வதேச விவகாரங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆகஸ்ட் மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை அந்த மாதம் 1ஆம் தேதி இந்தியா ஏற்றது. அதில், கடல்சார் பாதுகாப்பு, ஐநா அமைதிகாப்புப் படை, பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய தலைப்புகளில் முக்கியக் கூட்டங்களை இந்தியா நடத்தியது. இந்தியா தலைமையிலான கடைசிக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வெளியுறவுத் துறைச் செயலர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், 3 முக்கிய தீர்மானங்களுக்கான நீட்டிப்புக்கும் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும், லெபனான், மாலி, சோமாலியா ஆகிய நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவதற்கு ஐநா அளித்து வரும் ஆதரவை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பான தீர்மானத்தில், ஆப்கானிஸ்தான் பிராந்தியமானது மற்ற நாடுகளை அச்சுறுத்துவதற்கோ, பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கவோ, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கவோ பயன்படுத்தப்படக் கூடாது.

ஆப்கானிஸ்தான் மக்கள் எந்நேரத்திலும் நாட்டைவிட்டு வெளியேறலாம் என்றும், அவர்களது பயணம் தடுக்கப்படமாட்டாது என்றும் தலிபான்கள் ஆகஸ்ட் 27ஆம் தேதி உறுதியளித்துள்ளனர். வாக்குறுதிகள் அனைத்தையும் தலிபான்கள் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்துக்கு இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட 13 நாடுகள் ஆதரவளித்தன. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான சீனா, ரஷியா ஆகியவை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா கடந்த ஜனவரி 1ஆம் தேதிமுதல் தற்காலிக உறுப்பினராக இருந்துவருகிறது. மொத்தம் 15 உறுப்பினர்க
-ளைக் கொண்ட இந்தக் கவுன்சிலில், நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகளுடன் இந்தியா உள்ளிட்ட 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக உள்ளன. இந்தியாவின் இரண்டு ஆண்டு தற்காலிக உறுப்பினர் பதவி, வரும் 2022ஆம் ஆண்டில் நிறைவடையும்.

5. லடாக் யூனியன் பிரதேச விலங்காக பனிச் சிறுத்தை அறிவிப்பு

லடாக் யூனியன் பிரதேச விலங்காக பனிச்சிறுத்தை, பறவையாக கருப்புக்கழுத்து கொக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அந்த யூனியன் பிரதேச அரசு புதன்கிழமை வெளியிட்டது.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. அந்த மாநிலத்தையும் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. இந்த நிலையில், லடாக் யூனியன் பிரதேசத்துக்கான விலங்கு மற்றும் பறவை அறிவிக்கப்பட்டுள்ளன.

யூனியன் பிரதேசத்தின் வனம், சுற்றுச்சூழல் துறை தலைமைச்செயலர் பவண் கோத்வால் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

முன்பு ஜம்மு-காஷ்மீர் மாநிலமாக இருந்தபோது மாநில விலங்காக காஷ்மீர் மான், பறவையாக கருப்புக் கழுத்து கொக்கு இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மாநிலம் இப்போது இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டதையடுத்து, தனக்கான விலங்கு மற்றும் பறவையை லடாக் யூனியன் பிரதேச நிா்வாகம் அறிவித்துள்ளது.

இந்த விலங்கும், பறவையும் அரிய வகையைச்சேர்ந்தவையாகும். இதில் காஷ்மீர் மான், காஷ்மீர் பகுதியில் மட்டுமே காணப்படுகிறது. கருப்புக் கழுத்து கொக்கு கிழக்கு லடாக்கில் அதிகம் உள்ளது. பனிச்சிறுத்தைகள் லடாக் பகுதியில் 200 முதல் 300 வரையிலான எண்ணிக்கையில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

6. ரஷியாவில் கூட்டு ராணுவப் பயிற்சி: இந்தியா பங்கேற்பு

ரஷியாவில் 17 நாடுகள் இணைந்து மேற்கொள்ளவுள்ள கூட்டு ராணுவப் பயிற்சியில் இந்தியா பங்கேற்கவுள்ளது. ரஷியாவில் உள்ள நீஸ்நி நகரில் செப்டம்பர் 3 முதல் 16ஆம் தேதி வரை ‘சபாட்’ கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் இந்தியா, ரஷியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மியான்மர், மலேசியா, மங்கோலியா, ஆர்மீனியா, செர்பியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கவுள்ளன.

இந்தக் கூட்டுப் பயிற்சியில் இந்திய இராணுவ வீரர்கள் சுமார் 200 பேர் பங்கேற்கவுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் நாகா படைப்பிரி
-வைச் சேர்ந்தவர்கள். இப்பயிற்சி பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளி -ல் கவனம் செலுத்தும். இதில் பங்கேற்கும் நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உறவையும், அவை ஒன்றிணைந்து செயல்படுவதையும் மேம்படுத்துவதுதான் இந்தப் பயிற்சியின் நோக்கம்.

1. ‘Kunming Declaration’, which was seen in the news recently, is associated with which country?

A) China 

B) Japan

C) USA

D) South Korea

  • China has recently submitted a “zero draft” of the ‘Kunming Declaration’ to the United Nations. The declaration includes the key Chinese Communist Party concept of “ecological civilisation”. The document also calls on parties to focus biodiversity protection in decision–making and recognise the importance of conservation in protecting human health. The COP 15 biodiversity talks are due to take place in October 2021.

2. BH–series, which was making news recently, is associated with which sector?

A) Textile

B) Automobile 

C) Artificial Intelligence

D) Financial Inclusion

  • Ministry of Road Transport and Highways has introduced a new registration mark for new vehicles named “Bharat series (BH–series)”.
  • A vehicle bearing this registration mark shall not require the assignment of a new registration mark when the owner of the vehicle shifts from one State to another. This new registration has been announced to facilitate seamless transfer of vehicles and to cater to vehicle owners who frequently shift their bases in India.

3. BRICS Nations have recently opposed the Carbon border tax, proposed by which association?

A) EU 

B) NATO

C) OPEC

D) G20

  • BRICS Nations namely Brazil, Russia, China, and South Africa, have joined India in opposing the Carbon border tax, proposed by the European Union’s (EU). The 27–member EU recently decided to levy a border tax on the import of carbon–intensive goods, which will be enforced from 2026 onwards. India along with other BRICS participants have objected to the proposal in the New Delhi statement of the five–nation group.

4. Which year is to be celebrated as the International Year of Millets under the leadership of India?

A) 2022

B) 2023 

C) 2024

D) 2025

  • The union minister for Agriculture and Farmers Welfare, Narendra Singh Tomar launched the National Food and Nutrition Campaign for the farmers. The Campaign is organized by the Indian Council of Agricultural Research (ICAR). The Budget for Agriculture has been increased to ₹1.23 lakh crore, this year. 2023 will be celebrated as the International Year of Millets under the leadership of India.

5. Mudumalai and Anamalai Tiger Reserve, which received the global elite tag for best tiger conservation practices, are located in which districts?

A) Nilgiri & Coimbatore 

B) Nilgiri & Tiruppur

C) Tiruppur & Erode

D) Tenkasi & Theni

  • Anamalai Tiger Reserve located at Pollachi near Coimbatore, one of the largest landscapes in the south of Palghat Gap with 4000 sq km of protected area, and the Mudumalai Tiger Reserve in the Nilgiris, a bio–diversity hotspot of the Western Ghats has now earned a global elite tag in tiger conservation. They are located in Tamil Nadu. It is the Conservation Assured Tiger Standards (CATS) status, a conservation tool for best practices and standards to manage tigers.
  • Only 14 reserves made the cut including Parambikulam in Kerala, Bandipur in Karnataka, and Manas, Kaziranga and Orang in Assam, for the accreditation exercise by India’s National Tiger Conservation Authority under CATS. Well–known reserves like Corbett, Ranthambore and Bandhavgarh did not get the tag.

6. Who has been appointed as the next Ambassador of India to Germany?

A) Manpreet Vohra

B) Ajay Bisaria

C) Harish Parvathaneni 

D) Jawed Ashraf

  • Harish Parvathaneni, an Indian Foreign Service officer of the 1990 batch, has been appointed as the next Ambassador of India to Germany. He is presently serving as an additional secretary in the MEA’s headquarters in Delhi.

7. Which date is observed as Women’s Equality Day?

A) August 26 

B) August 27

C) August 28

D) August 29

  • United States is commemorating the 101st year of Women’s Equality Day. On August 26, the day is largely commemorated in the United States to honour American women gaining the constitutional right to vote. The United States Congress established August 26 as “Women’s Equality Day” in 1971, and it was approved in 1973.
  • Women’s Equality Day draws attention to women’s ongoing struggles towards gaining full equality.

8. How many gold medals did India win at the World Archery Youth Championships?

A) One

B) Two

C) Three 

D) Four

  • India has won 3 gold medals in Archery Championships. The Indian contingent won 15 medals at the World Archery Youth Championships. The 2021 World Archery Youth Championships was held in Wroclaw in Poland. Out of the 15 medals, India has won three gold medals in the compound cadet women’s and men’s and mixed team events.
  • The women’s team defeated Turkey 228–216 in the final match to win a gold medal.

9. What is India’s rank in the global coronavirus innovation rankings for countries?

A) 20

B) 32 

C) 42

D) 62

  • India fell six spots to the 32nd place in the global coronavirus innovation rankings for countries, as per a report prepared by StartupBlink in association with Health Innovation Exchange, UNAIDS. The report features the top–ranked 40 countries and 100 cities in the world based on innovative solutions developed to face the pandemic.

10. ‘AREAS’ is an initiative associated with which Union Ministry?

A) Ministry of Power

B) Ministry of New & Renewable Energy 

C) Ministry of Housing and Urban Affairs

D) Ministry of Agriculture and Farmers Welfare

  • The Association of Renewable Energy of States (AREAS) is an initiative of the Ministry of New & Renewable Energy (MNRE). It was formed as a Society in the year 2014 by MNRE. The Association of Renewable Energy of States (AREAS) recently celebrated its 7th Foundation Day.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!