TnpscTnpsc Current Affairs

30th & 31th August 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

30th & 31th August 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 30th & 31th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

30th & 31th August 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. புளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின்படி, அண்மையில் உலகின் மூன்றாவது செல்வந்தரான இந்திய வணிகர் யார்?

அ. முகேஷ் அம்பானி

ஆ. கௌதம் அதானி

இ. சைரஸ் பூனவல்லா

ஈ. இராதாகிஷன் தமானி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கௌதம் அதானி

  • இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி அண்மையில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய செல்வந்தர் ஆனார். இந்த ஆண்டு தனது நிகர சொத்து மதிப்பில் அதிகரிப்பைக்கண்ட உலகின் 10 பணக்காரர்களுள் இவரும் ஒருவராவார். $137.4 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன், அதானி இந்த ஆண்டு மட்டும் $60.9 பில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளார். முதல் ஐந்நூற்றுவர் பட்டியலில் இந்தியாவிலிருந்து 18 செல்வந்தர்கள் இடம்பெற்றுள்ளனர்.

2. ‘இந்தியா @100’ என்ற அறிக்கையை வெளியிட்ட நிறுவனம்/கவுன்சில் எது?

அ. NITI ஆயோக்

ஆ. பொருளாதார ஆலோசனைக் குழு

இ. பயன்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சில்

ஈ. கொள்கை ஆராய்ச்சி மையம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. பொருளாதார ஆலோசனைக் குழு

  • ‘இந்தியா@100’ என்ற போட்டித்தன்மை பெருந்திட்டத்தை பிரதம அமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழு வெளியிட்டது. அக்குழுவின் தலைவராக Dr பிபேக் தெப்ராய் இருந்தார். 2047–ஆம் ஆண்டுக்குள் அதிக வருவாய் ஈட்டக்கூடிய நாடாக இந்தியாவை திகழச்செய்வதற்கான வழிவகைகள் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டித்தன்மை பெருந்திட்டம் என்பது போட்டித்தன்மைக்கான நிறுவனமான EAC–PM மற்றும் ஹார்வர்ட் வணிகப் பள்ளியின் Dr கிறிஸ்டியன் கெட்டல்ஸ் ஆகியோரின் கூட்டு முனைவாகும்.

3. ‘இராஜீவ் காந்தி கிராமப்புற ஒலிம்பிக் போட்டிகளை’த் தொடங்கியுள்ள இந்திய மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. அஸ்ஸாம்

ஆ. இராஜஸ்தான்

இ. சத்தீஸ்கர்

ஈ. தெலுங்கானா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இராஜஸ்தான்

  • இராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், ஜோத்பூரில் ஒரு மாத காலம் நடைபெறும் இராஜீவ்காந்தி கிராமப்புற ஒலிம்பிக் போட்டிகளை தொடங்கிவைத்தார். இக்கிராமப்புற ஒலிம்பிக்கில் இராஜஸ்தான் முழுவதுமுள்ள 44,000 கிராமங்களும் 30 இலட்சம் பேரும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பங்கேற்கும் 30 இலட்சம் பேரில் 9 இலட்சம் பேர் பெண்களாவர். இதில் இடம்பெறும் விளையாட்டுகளில் கைப்பந்து, ஹாக்கி, டென்னிஸ் பால் கிரிக்கெட் மற்றும் கோ–கோ ஆகியவை அடங்கும்.

4. ‘பல்லுயிர்களைக் காப்பதற்கான ஐநா கூட்டத்தொடரை’ நடத்திய நகரம் எது?

அ. நியூயார்க்

ஆ. பாரிஸ்

இ. ரோம்

ஈ. டோக்கியோ

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. நியூயார்க்

  • நியூயார்க்கில் உள்ள ஐநா அவையின் தலைமையகத்தில், ‘பல்லுயிர்களைக் காப்பதற்கான ஐநா அமர்வு’ நடந்தது. இருப்பினும், ஐநா–இன் உறுப்புநாடுகள் இரண்டு வார காலம் நீண்ட இந்தப் பேச்சுவார்த்தையை, ஆழ்கடல்களில் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தம் ஏதுமின்றி முடித்துக்கொண்டன. அது வளர்ந்துவரும் சுற்றுச் சூழல் மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் ஓர் ஒப்பந்தமாகும்.

5. நூறாண்டுக்குப் பிறகு தனக்கென 2ஆவது இரயில் நிலையம் கிடைக்கப்பெற்ற மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. அருணாச்சல பிரதேசம்

ஆ. நாகாலாந்து

இ. அஸ்ஸாம்

ஈ. மிசோரம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நாகாலாந்து

  • நூறாண்டுக்குப்பிறகு நாகாலாந்து மாநிலத்திற்கு இரண்டாவது இரயில் நிலையம் கிடைத்துள்ளது. ஷோகுவி ரயில் நிலையத்திலிருந்து டோனி போலோ விரைவு இரயிலை அம்மாநில முதலமைச்சர் நெய்பியு ரியோ கொடியசைத்து தொடங்கிவைத்தார். அஸ்ஸாமின் கௌகாத்தி மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள நஹர்லாகுன் இடையே தினமும் இந்த இரயில் இயக்கப்படும். நாகாலந்தின் முதல் இரயில் நிலையமான திமாபூர் இரயில் நிலையம் கடந்த 1903ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

6. லாங்யா ஹெனிபா வைரஸ் அல்லது ‘LayV’ என்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நாடு எது?

அ. இத்தாலி

ஆ. இஸ்ரேல்

இ. சீனா

ஈ. இந்தியா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. சீனா

  • சீனாவின் இரு கிழக்கு மாகாணங்களில் லாங்யா ஹெனிபா என்ற விலங்கினத்தில் இருந்து மனிதர்க்குப் பரவும் புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வகை ஹெனிபா வைரஸ் லாங்யா ஹெனிபாவைரஸ் அல்லது ‘LayV’ என்றும் அழைக்கப்படுகிறது. அறிவியலாளர்களின் கூற்றுப்படி, இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து மனித இனத்திற்குப் பரவுகிறது; அதே வேளையில் இந்தக் குறிப்பிட்ட வைரஸ் ஒரு மனிதரிடத்தில் இருந்து மற்றொரு மனிதனுக்கு பரவுவதாக இதுவரை அறியப்படவில்லை.

7. கால்நடைகளில் காணப்படும் தோல் கழலை நோய்க்கு உள்நாட்டிலேயே தடுப்பூசியொன்றை உருவாக்கியுள்ள நிறுவனம் எது?

அ. NIV

ஆ. ICAR

இ. IISc

ஈ. NABARD

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ICAR

  • இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகத்தின் (ICAR) உழவு ஆராய்ச்சி அமைப்பின் இரு நிறுவனங்கள், கால்நடைகளில் காணப்படும் தோல் கழலை நோய்க்கு உள்நாட்டிலேயே தடுப்பூசியொன்றை உருவாக்கியுள்ளன. கடந்த சில மாதங்களாக இந்த நோய் பல மாநிலங்களில் பரவிவந்தது. LSD தடுப்பூசியான ‘Lumpi–ProVacInd’ஐ வணிகரீதியாக விற்பனை செய்ய நடுவணரசு திட்டமிட்டுள்ளது. இந்த நோய் காரணமாக இராஜஸ்தானில் 2000 கால்நடைகள் இறந்துள்ளன. அதைத்தொடர்ந்து குஜராத் மற்றும் பஞ்சாப் முதலான மாநிலங்களில் இதன் பாதிப்பு காணப்பட்டது.

8. இந்தியாவில், ‘அரிசி செறிவூட்டலை’ மேற்கொள்கின்ற நடுவண் அமைச்சகம் எது?

அ. வேளாண் அமைச்சகம்

ஆ. நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு வழங்கல் அமைச்சகம்

இ. சட்டம் மற்றும் நீதி அமைச்சகம்

ஈ. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு வழங்கல் அமைச்சகம்

  • நடுவண் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு வழங்கல் அமைச்சகத்தின் கூற்றுப்படி, 24 மாநிலங்களில் உள்ள 151 மாவட்டங்கள் பொது வழங்கல் முறையின்கீழ் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கி வருகின்றன. 2022 ஏப்ரல் மாதம் முதல் இரண்டாம் கட்டமாக பொது வழங்கல் முறையின்கீழ் சுமார் 6.83 இலட்சம் டன் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளது என்று அரசாங்கம் கூறியுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவைகள் (ICDS) மற்றும் பிரதம மந்திரி போஷான் சக்தி நிர்மானின் (PM POSHAN) கீழ் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதற்காக இதன் முதல் கட்டம் கடந்த 2021 அக்டோபரில் தொடங்கியது.

9. ‘பூரண சுயராஜ்யம்’ என்ற கொள்கை மற்றும் ‘வந்தே மாதரம்’ என்ற நாளிதழுடன் தொடர்புடைய இந்தியத் தலைவர் யார்?

அ. சுபாஷ் சந்திர போஸ்

ஆ. அரவிந்த கோஷ்

இ. பாலகங்காதர திலகர்

ஈ. தாதாபாய் நௌரோஜி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. அரவிந்த கோஷ்

  • 1930ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸின் பிரகடனத்திற்கு 20 ஆண்டுகளுக்கும் முன்பாக, ‘பூரண சுயராஜ்யம்’ என்ற கொள்கையை முதன்முதலில் பரப்பியவர் அரவிந்த கோஷ் ஆவார். அவரது 150ஆவது பிறந்தநாள் அண்மையில் கொண்டாடப்பட்டது. அரவிந்தர், கடந்த 1872 ஆகஸ்ட்.15இல் அரவிந்த கோஷ் என்ற பெயரில் பிறந்தார்.
  • அவர் ஒரு தத்துவஞானி, கவிஞர், பத்திரிகையாளர் மற்றும் புரட்சியாளராவார். அவர் தனது செய்தித்தாளான, ‘வந்தே மாதரத்தில்’ முழுமையான விடுதலை பற்றிய எண்ணத்தை வெளிப்படுத்தினார். மேலும் அந்த இலக்கை அடைய ஒத்துழையாமை, செயலறு எதிர்ப்பு மற்றும் சுதேசி பொருட்களின் பயன்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய அணுகுமுறையை அவர் உருவாக்கினார்.

10. தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்ட, ‘பதங்’ அமைந்துள்ள நாடு எது?

அ. ஜப்பான்

ஆ. இந்தியா

இ. சிங்கப்பூர்

ஈ. நேபாளம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. சிங்கப்பூர்

  • சிங்கப்பூர் அதன் இருநூறாண்டு பழமையான பசுமைவெளியான ‘பதங்’கை அதன் எழுபத்தைந்தாவது தேசிய நினைவுச்சின்னமாக அறிவித்தது. அந்நகர அரசு அதன் 57ஆவது தேசிய நாளைக்கொண்டாடுகிறது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கடந்த 1943ஆம் ஆண்டு தனது ‘தில்லி சலோ’ முழக்கத்தை வழங்கிய தளம் ‘பதங்’ ஆகும். சிங்கப்பூரின் தேசிய நினைவுச்சின்னங்களின் பட்டியலில் பசுமைவெளியாக இருந்த இடம்பிடித்த முதல் தளம் ‘பதங்’ ஆகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பல்லுயிர் பாதுகாப்புத் துறையில் இந்தியா – நேபாளம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

வனங்கள், வனவுயிரிகள், சுற்றுச்சூழல், பல்லுயிர் பாதுகாப்பு, வழித்தடங்கள் மற்றும் ஒன்றோடொன்று இணைக்கும் பகுதிகளை மீட்டெடுப்பது உள்ளிட்ட பருவநிலை மாற்றம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி விரிவுபடுத்துவது, இருநாடுகளுக்கிடையே அறிவு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வது என்ற கண்ணோட்டத்துடன் நேபாள அரசுடன் பல்லுயிர் பாதுகாப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் முன்மொழிவுக்குப்  நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2.  செப். 5–இல் தமிழக அரசின் 3 கல்வித் திட்டங்கள் தொடக்க விழா

சென்னையில், ‘புதுமைப்பெண்’, ‘தகைசால் பள்ளிகள்’, ‘மாதிரிப்பள்ளிகள்’ ஆகிய மூன்று திட்டங்களுக்கான தொடக்க விழா (செப்.5) நடைபெறவுள்ளது.

அவற்றின் விவரம்:

1. தமிழக அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டத்தின்கீழ், அரசுப்பள்ளியில் படித்த அனைத்து மாணவிகளுக்கும் உயர்கல்வி உதவித்தொகையாக மாதம் `1,000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம்.

2. சிறந்த பள்ளிகள் – தில்லியைப் போலவே, தமிழக அரசும் மாநகராட்சி, நகராட்சிப்பகுதிகளில் அதிநவீன 26 ‘தகைசால் பள்ளிகளை’ அறிமுகப்படுத்துகிறது. தொலைநோக்குப்பார்வையுடன் வலுவான அடித்தளத்தையும், கற்றலின் தேவைகளையும் பூர்த்திசெய்யும் வகையில் மேம்படுத்தப்பட்டதாக இப்பள்ளிகள் அமைக்கப்படுகின்றன.

3. தமிழகத்தில் ஏற்கெனவே கடந்த 2021 அக்டோபர் மாதம் தொழிற்முறை படிப்புகளை வழங்கும் 10 ஸ்டீம் (விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கலை, மருத்துவம்) ‘மாதிரிப்பள்ளிகள்’ தொடங்கப்பட்டுள்ளன. மேலும் 15 இடங்களில் `125 கோடியில் இந்த மாதிரிப்பள்ளிகள் தொடங்கப்படுகின்றன.

3. INS விக்ராந்த் போர்க்கப்பல்: செப். 2–இல் அர்ப்பணிக்கிறார் பிரதமர்

முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதலாவது விமானந்தாங்கி போர்க் கப்பலான INS விக்ராந்தை பிரதமர் நரேந்திர மோடி செப்.2–ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்: போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் வடிவமைக்கப்பட்டு, கொச்சி கப்பல்கட்டும் தளத்தால் கட்டப்பட்ட இந்தக் கப்பல், அதிநவீன தானியங்கி வசதிகளைக் கொண்டுள்ளது. இந்திய கடற்படை வரலாற்றிலேயே உள்நாட்டில் கட்டப்பட்ட மிகப்பெரிய கப்பல் INS விக்ராந்த் ஆகும். இதன்மூலம் இந்திய கடற்படையின் பலம் மேலும் அதிகரிக்கும்.

4. பிரபல பொருளாதார நிபுணர் அபிஜித் சென் காலமானார்

பிரபல பொருளாதார நிபுணரும், திட்டக்குழு முன்னாள் உறுப்பினருமான அபிஜித் சென் (72) 29–08–2022 அன்று காலமானார். பொருளாதாரப் பேராசியராக நாற்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர் அபிஜித் சென். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 2004 முதல் 2014 வரை திட்டக்குழு உறுப்பினராக அபிஜித் சென் பதவி வகித்தார். இவருடைய சிறந்த பொதுச் சேவையைப் பாராட்டி 2010–ஆம் ஆண்டு அவருக்கு ‘பத்ம பூஷண்’ விருது வழங்கப்பட்டது.

30th & 31th August 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which Indian business person recently became the third–richest person in the world, as per the Bloomberg Billionaire Index?

A. Mukesh Ambani

B. Gautam Adani

C. Cyrus Poonawalla

D. Radhakishan Damani

Answer & Explanation

Answer: B. Gautam Adani

  • Indian Business tycoon Gautam Adani recently became the third–richest person in the world. He is also the only one among the world’s 10 wealthiest people to have seen his net worth increase this year. With a net worth of USD 137.4 billion, Adani has gained USD 60.9 billion this year, more than any other billionaire on the top 500 list. India had 18 billionaires in the top 500 list.

2. Which institution/ council released the ‘Competitiveness Roadmap for India@100’ Report?

A. NITI Aayog

B. Economic Advisory Council

C. National Council of Applied Economic Research

D. Centre for Policy Research

Answer & Explanation

Answer: B. Economic Advisory Council

  • Economic Advisory Council (EAC) to Prime Minister released the Competitiveness Roadmap for India@100. The document is a roadmap for India towards the centennial year and to guide India to become a higher–income country by 2047. The Competitiveness Roadmap is a collaborative endeavor between EAC–PM, the Institute for Competitiveness and Dr. Christian Ketels from Harvard Business School.

3. Which Indian state/UT has inaugurated the ‘Rajiv Gandhi Rural Olympic Games’?

A. Assam

B. Rajasthan

C. Chhattisgarh

D. Telangana

Answer & Explanation

Answer: B. Rajasthan

  • Rajasthan Chief Minister Ashok Gehlot inaugurated a month–long Rajiv Gandhi Rural Olympic Games in Jodhpur. The Village Olympics is expected to see the participation of 44,000 villages across Rajasthan and 30 lakh people. Out of the 30 lakh participants, 9 lakhs are women. The Games include volleyball, hockey, tennis ball cricket and Kho Kho.

4. Which city hosted the ‘UN session to save Biodiversity’?

A. New York

B. Paris

C. Rome

D. Tokyo

Answer & Explanation

Answer: A. New York

  • The ‘UN session to save Biodiversity’ was held at the United Nations headquarters in New York. However, the UN member states ended two weeks of negotiations without a treaty to protect biodiversity in the high seas. It is an agreement that would have addressed growing environmental and economic challenges.

5. Which state/UT got its second railway station after a gap of 100 years?

A. Arunachal Pradesh

B. Nagaland

C. Assam

D. Mizoram

Answer & Explanation

Answer: B. Nagaland

  • Nagaland got its second railway station, after a gap of 100 years. The Donyi Polo Express from Shokhuvi Railway Station was flagged off by the state’s Chief Minister Neiphiu Rio. The train will run between Guwahati in Assam and Naharlagun in Arunachal Pradesh on a daily basis. The first railway station was set up at Dimapur Railway Station in 1903.

6. Langya Henipa virus or the LayV, a new virus, has been discovered in which country?

A. Italy

B. Israel

C. China

D. India

Answer & Explanation

Answer: C. China

  • Langya Henipa virus, a new zoonotic virus has been discovered in China’s two eastern provinces. This new type of Henipavirus is also being called Langya Henipavirus or the LayV. According to scientists, the virus can be transmitted from animals to humans while human–to–human transmission of the virus has not been reported.

7. Which institution has developed an indigenous vaccine for Lumpy Skin Disease in cattle?

A. NIV

B. ICAR

C. IISc

D. NABARD

Answer & Explanation

Answer: B. ICAR

  • Two institutes of agricultural research body, the Indian Council of Agricultural Research (ICAR), have developed an indigenous vaccine for Lumpy Skin Disease in cattle. The disease has recently spread across many states in the last few months. The Centre has planned to commercialise this homologous live–attenuated LSD vaccine ‘Lumpi–ProVacInd’. Rajasthan has reported over 2000 deaths of cattle, followed by Gujarat and Punjab.

8. ‘Rice Fortification’ in India is implemented through which Ministry?

A. Ministry of Agriculture

B. Ministry of Consumer Affairs and Food Distribution

C. Ministry of Law and Justice

D. Ministry of Health and Family Welfare

Answer & Explanation

Answer: B. Ministry of Consumer Affairs and Food Distribution

  • As per the Ministry of Consumer Affairs and Food Distribution, as many as 151 districts in 24 states have already lifted fortified rice under the Public Distribution System (PDS). The government said nearly 6.83 lakh tonnes of fortified rice has been distributed under the Public Distribution System (PDS) in the second phase from April 2022. The first phase began in October 2021, to distribute fortified rice through Integrated Child Development Services (ICDS) and Pradhan Mantri Poshan Shakti Nirman (PM POSHAN).

9. Which Indian leader is associated with the ‘Purna Swaraj’ idea and ‘Bande Mataram’ newspaper?

A. Subhash Chandra Bose

B. Aurobindo Ghosh

C. Bal Gangadhar Tilak

D. Dadabhai Naoroji

Answer & Explanation

Answer: B. Aurobindo Ghosh

  • Aurobindo Ghosh was the first proponent of ‘Purna Swaraj’ more than 20 years before the Indian National Congress’ declaration in 1930. The 150th year of his birth anniversary was celebrated recently. Sri Aurobindo was born as Aurobindo Ghosh on August 15, 1872. He was a philosopher, poet, journalist and revolutionary. He wrote about the idea of complete independence in his newspaper Bande Mataram, and developed an approach to achieve that goal that included non–cooperation, passive resistance and use of swadeshi goods.

10. Padang, which was announced as a national monument, is located in which country?

A. Japan

B. India

C. Singapore

D. Nepal

Answer & Explanation

Answer: C. Singapore

  • Singapore declared its 200–year–old green and open space Padang, as its 75th national monument, as the city–state celebrates its 57th National Day. Padang is the site from where Netaji Subhas Chandra Bose gave his ‘Delhi Chalo’ slogan in 1943. Padang is also the first green and open space on Singapore’s list of national monuments, the highest form of recognition for a site’s significance.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!