TnpscTnpsc Current Affairs

30th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

30th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 30th December 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

30th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. ‘G20 அறிவியல் பணிக்குழு செயலகம்’ என அறிவிக்கப்பட்டுள்ள நிறுவனம் எது?

அ. ஐஐடி மெட்ராஸ்

ஆ. ஐஐடி பாம்பே

இ. ஐஐடி தில்லி

ஈ. IISc பெங்களூரு

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. IISc பெங்களூரு

  • பெங்களூருவில் அமைந்துள்ள இந்திய அறிவியல் கழகமானது (IISc) அறிவியல்–20 (S20)–க்கான செயலகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது G20இன் குழுக்களுள் ஒன்றாகும். G20 கூட்டமைப்பானது இந்தியாவின் தலைமையின் கீழ் உள்ளது. மேலும் 2023ஆம் ஆண்டில் S20இன் கருப்பொருள் “Disruptive Science for Innovative and Sustainable Development” ஆகும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவாதங்கள் நடைபெறவுள்ளன.

2. தமிழ்நாட்டில் நகர்ப்புற சேவைகளை மேம்படுத்துவதற்காக கீழ்க்காணும் எந்த நிறுவனத்துடனான $125 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது?

அ. ஆசிய வளர்ச்சி வங்கி

ஆ. ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி

இ. உலக வங்கி

ஈ. உலக பொருளாதார மன்றம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. ஆசிய வளர்ச்சி வங்கி

  • தமிழ்நாட்டின் மூன்று நகரங்களில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில், கழிவுநீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு, கழிவுநீர் அகற்றுதல் மற்றும் குடிநீர் விநியோக முறைகளை உருவாக்குவதற்காக நடுவணரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் `1,040 கோடி மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. தமிழ்நாடு நகர்ப்புற முதலீட்டு திட்டத்திற்கான மூன்றாவது தொகுப்பு கடன் ஒப்பந்தம் இதுவாகும்.
  • தமிழ்நாட்டில் தொழிற்துறை முக்கியத்துவம் வாய்ந்த பத்து நகரங்களில் குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்றுதல் ஆகியவற்றின் கட்டமைப்புக்காக 2018இல் ஆசிய வளர்ச்சி வங்கியால் $500 மில்லியன் டாலர் மதிப்பிலான பல தொகுப்பு நிதி வசதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் மூன்றாவது மற்றும் கடைசி தொகுப்பாக இந்த ஒப்பந்தம் கையழுத்தாகியுள்ளது. இந்தத் தொகுப்பில் கோயம்புத்தூர், மதுரை, தூத்துக்குடி ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

3. இணைய விளையாட்டுக்கள் தொடர்பான விஷயங்களுக்கான நடுவண் அமைச்சகம் எது?

அ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ. நிதி அமைச்சகம்

இ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

  • இணையவழி விளையாட்டுகளை நிர்வகிக்கும் பொறுப்பு நடுவண் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இணையவழி விளையாட்டுகள் பிரிவானது நடுவண் இளையோர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் விளையாட்டுத்துறையிடம் இருந்தது. இந்தியாவின் இணையவழி விளையாட்டுகள் சந்தை தற்போது $2.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது; 2027ஆம் ஆண்டுக்குள் அது $8.6 பில்லியன் டாலர் மதிப்புடையதாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4. இந்தியாவின் மொழிப்பன்முகத்தன்மையை வரைபடமாக்குவதற்காக கூகுளால் நிதியுதவி செய்யப்படும் டிஜிட்டல் திட்டத்தின் பெயர் என்ன?

அ. பாரத் திட்டம்

ஆ. வாணி திட்டம்

இ. கலைமகள் திட்டம்

ஈ. இனிமை திட்டம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. வாணி திட்டம்

  • இந்திய அறிவியல் கழகம் (IISc), ARTPARK (AI and Robotics Technology Park) மற்றும் கூகுள் ஆகியவை ‘வாணி திட்டம்’ என்ற முன்முனைவுக்காக ஒன்றிணைந்துள்ளன. இந்த டிஜிட்டல் திட்டம், 773 மாவட்டங்களின் சுமார் ஒரு மில்லியன் மக்களின் பேச்சுத் தொகுப்புகளைச் சேகரித்து இந்தியாவின் மொழிப்பன்முகத்தன்மையை வரைபடம் ஆக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டமானது 150,000 மணிநேர பேச்சைப் பதிவுசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது; இதில் ஒருபகுதி உள்ளூர் வரிவடிவத்தில் படியெடுக்கப்படும். தானியங்கி பேச்சு உணரி, பேச்சு–பேச்சு மொழிபெயர்ப்பு மற்றும் இயல்பான மொழி புரிதல் ஆகியவற்றின் வளர்ச்சியை அதிகரிப்பதே இதன் குறிக்கோள் ஆகும்.

5. ‘தக்ஷ்’ என்பது கீழ்க்காணும் எந்த நிறுவனத்தால் பராமரிக்கப்படும் கொடுப்பனவுகள் மோசடி குறித்து புகார்களைப் பெறும் தொகுதியாகும்?

அ. SEBI

ஆ. NITI ஆயோக்

இ. இந்திய ரிசர்வ் வங்கி

ஈ. பாரத வங்கி

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. இந்திய ரிசர்வ் வங்கி

  • ‘தக்ஷ்’ என்பது இந்திய ரிசர்வ் வங்கியால் பராமரிக்கப்படும் மேம்பட்ட மேற்பார்வை மேலாண்மை அமைப்பாகும். ரிசர்வ் வங்கி சமீபத்தில் 2023 ஜன.01 அன்று கொடுப்பனவுகள் மோசடி குறித்து புகார்களைப் பெறும் தொகுதியை ‘தக்ஷுக்கு’ மாற்றுவதாக அறிவித்தது. இந்த நடவடிக்கை புகாரளித்தலை ஒழுங்குபடுத்துதல், செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் கொடுப்பனவுகள் மோசடி மேலாண்மை செயல்முறையை தானியங்குபடுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

6. இந்தியாவின் ஆறாவது ‘வந்தே பாரத்’ இரயிலானது நாக்பூருக்கும் கீழ்க்காணும் எந்த நகரத்திற்கும் இடையே இயக்கப்படுகிறது?

அ. பிலாஸ்பூர்

ஆ. மதுரை

இ. போபால்

ஈ. பெங்களூரு

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. பிலாஸ்பூர்

  • பிலாஸ்பூர் (சத்தீஸ்கர்) – நாக்பூர் (மகாராஷ்டிரா) இடையே இந்தியாவின் ஆறாவது ‘வந்தே பாரத்’ விரைவு இரயிலை பிரதமர் நரேந்திர மோதி கொடியசைத்துத் தொடக்கிவைத்தார். இது தென்கிழக்கு மத்திய இரயில்வேயால் (SECR) இயக்கப்படும். ‘வந்தே பாரத்’ விரைவு இரயில் அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீட்டர் வேகம் வரை இயங்கக்கூடியது. இது பயணிகளுக்கான மேம்பட்ட பயண வகுப்புகளைக் கொண்டுள்ளது. நாக்பூர் மெட்ரோவின் முதல் கட்டத்தையும் பிரதமர் மோதி அப்போது தொடக்கிவைத்தார்.

7. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) முதல் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

அ. மேரி கோம்

ஆ. P T உஷா

இ. அஞ்சு பாபி ஜார்ஜ்

ஈ. கர்ணம் மல்லேஸ்வரி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. P T உஷா

  • இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) முதல் பெண் தலைவராக பழம்பெரும் தடகள வீராங்கனை P T உஷா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் பலமுறை தங்கப்பதக்கம் வென்றுள்ளார். கடந்த 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸ் 400 மீ தடையோட்டம் இறுதிப்போட்டியில் நான்காமிடத்தைப் பிடித்தவர் அவர். 58 வயதான அவர் வாக்கெடுப்பில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி L நாகேஸ்வர இராவ் மேற்பார்வையில் தேர்தல் நடைபெற்றது. 95 ஆண்டுகால வரலாற்றில் IOA–க்கு தலைமை தாங்கிய முதல் ஒலிம்பியனும் முதல் சர்வதேச பதக்கம் வென்றவரும் இவர் ஆவார்.

8. ‘முசிறிஸ் பைனாலே’ என்ற கலை நிகழ்வை ஏற்பாடு செய்த மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. ஒடிஸா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கேரளா

  • கொச்சி முசிறிஸ் பைனாலேயின் ஐந்தாவது பதிப்பை கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தொடக்கி வைத்தார். “In Our Views Flow Ink and Fire” என்ற கருப்பொருளின்கீழ் இது நடத்தப்படும். இந்தக் கலை நிகழ்வின் நான்கு மாத கால கொண்டாட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 40 வெவ்வேறு நாடுகளைச்சேர்ந்த தொண்ணூறு கலைஞர்களின் இருநூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய கலைப்படைப்புகளை இது காட்சிப்படுத்துகிறது.

9. 2030ஆம் ஆண்டுக்குள் கரிமத்தின் தீவிரத்தைக் குறைப்பதில் இந்தியாவின் இலக்கு சதவீதம் என்ன?

அ. 20%

ஆ. 45%

இ. 55%

ஈ. 95%

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 45%

  • புதைபடிவஞ்சாராத எரிசக்தி மூலங்களின் பயன்பாட்டைக் கட்டாயப்படுத்தவும், இந்தியாவில் உள்நாட்டு கரிமச் சந்தையை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்ட எரிசக்தி பாதுகாப்பு (திருத்தம்) மசோதாவை மாநிலங்களவை நிறைவேற்றியது. இது 2030ஆம் ஆண்டுக்குள் கரிமத்தின் தீவிரத்தைக் குறைப்பதில் இந்தியாவின் இலக்கான 45 சதவீதத்தை அடைய இந்தியாவிற்கு உதவும். இந்த இலக்கு சதவீதம் இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளின் (Nationally Determined Contributions) ஒருபகுதியாக உள்ளது.

10. யாருக்கு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி தேசிய சிறப்புத்துவ விருது வழங்கப்பட்டுள்ளது?

அ. நரேந்திர மோதி

ஆ. இராஜ்நாத் சிங்

இ. M வெங்கையா

ஈ. பியூஷ் கோயல்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. M வெங்கையா

  • முன்னாள் துணைக்குடியரசுத்தலைவர் வெங்கையாவுக்கு 25ஆவது ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி தேசிய விருது (SIES) வழங்கப்பட்டுள்ளது. பிற பிரிவுகளில் விருது பெற்றவர்களில் கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், தொழிலதிபர் இரத்தன் டாடா, இருதயநோய் நிபுணர் மற்றும் ‘பத்ம விபூஷன்’ விருதுபெற்ற டாக்டர் மார்த்தாண்ட வர்மா சங்கரன் வலியநாதன், இந்திய அரசின் அறிவியல் ஆலோசகர் அஜய் சூத் மற்றும் பிரபல ஹரிகதா கலைஞர் விசாகா ஹரி ஆகியோர் அடங்குவர்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. நிலத்தடியில் பெட்ரோலியத்தைக் கண்டறிவதற்கு பயனுள்ள தரவுப்பகுப்பாய்வு அணுகுமுறையை உருவாக்கி உள்ளனர் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள்.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள், நிலத்தடி பாறை அமைப்பை வகைப்படுத்தி பெட்ரோலியம்-ஹைட்ரோகார்பன் கையிருப்பு வளத்தைக் கண்டறியக்கூடிய புள்ளி விவர அணுகுமுறையை உருவாக்கியுள்ளனர். மேல் அஸ்ஸாம் படுகையில் திப்பம் மணற்கல் அமைந்துள்ள பகுதியில் ஹைட்ரோகார்பன் செறிவூட்டல் மண்டலங்கள் தொடர்பான மிக முக்கிய தகவல்களை வழங்குவதில் இந்த முறை வெற்றிகரமாக அமைந்துள்ளது.

2. திருச்சியில் ஒலிம்பிக் அகாதெமி.

ஒலிம்பிக்போன்ற பன்னாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் வாய்ப்பை ஏற்படுத்தவும், இளைஞர்களுக்கு உலகத்தரம்வாய்ந்த பயிற்சிகளை வழங்கவும் திருச்சியில் ஒலிம்பிக் அகாதெமி உருவாக்கப்படவுள்ளது. உலகத்தோடு தமிழ்நாடு போட்டியிட இந்த அகாதெமி பெரும் துணையாக இருக்கும்.

3. ‘கால்பந்து அரசன்’ பீலே மறைவு.

பிரேசில் ‘கால்பந்து அரசன்’ பீலே (82) 29-12-2022 அன்று காலமானார். உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரேஸிலுக்கு 3 முறை சாம்பியன் பட்டம் (1958, 1962, 1970) வென்று தந்த பீலே, கடந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

சர்வதேச அரங்கில் பிரேஸிலுக்காக 14 ஆண்டுகள் 92 ஆட்டங்களில் களம்கண்ட பீலே, அதில் மொத்தமாக 77 கோல்கள் அடித்திருக்கிறார். அதுவே லீக் போட்டிகள் உள்பட சீனியர் கேரியரை மொத்தமாக கணக்கில்கொண்டால் 700 ஆட்டங்களில் 655 கோல்கள் அடித்து அசத்தியிருக்கிறார். கால்பந்து ஜாம்பவானான பீலே, கடந்த 1958ஆம் ஆண்டு சுவீடனில் நடைபெற்ற போட்டியின்மூலம் உலகக்கோப்பை கால்பந்தில் அறிமுகமானார். அப்போது 17 வயதையே எட்டியிருந்த அவர், உலகக்கோப்பை போட்டியில் களம்கண்ட மிக இளவயது வீரர் என்ற சாதனையை படைத்தார். கால்பந்திலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, பிரேசில் விளையாட்டுத்துறை அமைச்சராக 1995 முதல் 98 வரை பொறுப்பு வகித்திருந்தார்.

4. சீட் பெல்ட் அணியாததால் 16,397 பேரும், ஹெல்மெட் அணியாததால் 46,593 பேரும் உயிரிழப்பு.

கடந்த 2021ஆம் ஆண்டு சீட் பெல்ட் அணியாமல் 4 சக்கர வாகனங்களை ஓட்டியதால் 16,397 பேரும், ஹெல்மெட் அணியாததால் 46,593 பேரும் சாலை விபத்தில் உயிரிழந்ததாக மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள ‘இந்திய சாலைகளில் சாலை விபத்துகள்-2021’ என்னும் ஆண்டறிக்கையில், கடந்த ஆண்டு 4,12,432 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 1,53,972 பேர் உயிரிழந்தனர். 3,84,448 பேர் காயமடைந்தனர்.

சாலை விபத்து உயிரிழப்பில் முதல் நான்கு இடங்களில் உள்ள மாநிலங்கள் (சதவீதத்தில்)

  1. உத்தர பிரதேசம் – 15.2%
  2. தமிழ்நாடு – 9.4%
  3. மகாராஷ்டிரம் – 7.3%
  4. இராஜஸ்தான் – 6.8%

30th December 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which institution has been named as ‘G20 Science working group’s secretariat’?

A. IIT Madras

B. IIT Bombay

C. IIT Delhi

D. IISc Bengaluru

Answer & Explanation

Answer: D. IISc Bengaluru

  • The Indian Institute of Science (IISc) has been named as the secretariat for science 20 (S20), one of the G20’s groupings. The G20 is being presided over by India and the theme of the S20 in 2023 is ‘Disruptive Science for Innovative and Sustainable Development’.  Discussions will take place throughout the year in various regions of India.

2. India signed USD 125 million loan deal with which institution to improve urban services in Tamil Nadu?

A. Asian Development Bank

B. Asian Infrastructure Investment Bank

C. World Bank

D. World Economic Forum

Answer & Explanation

Answer: A. Asian Development Bank

  • The Government of India and Asian Development Bank (ADB) signed a USD 125 million loan to improve urban services in Tamil Nadu. Tamil Nadu Urban Flagship Investment Program seeks to develop climate–resilient sewage collection and treatment, and drainage and water supply systems in three cities in the state. This is the third and the last tranche of the USD 500 million multi–tranche financing facility (MFF) for the Program approved by ADB in 2018.

3. Which Union Ministry has been approved as the nodal ministry for matters relating to online gaming?

A. Ministry of Electronics and IT

B. Ministry of Finance

C. Ministry of Science and Technology

D. Ministry of Home Affairs

Answer & Explanation

Answer: A. Ministry of Electronics and IT

  • The Ministry of Electronics and Information Technology (MeitY) has been appointed as the nodal ministry for matters relating to online gaming with monetary risks. The Ministry of Youth Affairs and Sports (MYAS) has been tasked with regulating esports (video games not involving money). India’s gaming market is currently estimated at USD 2.6 billion and expected to be worth USD 8.6 billion by 2027.

4. What is the name of the digital project funded by Google to map the language diversity of India?

A. Project Bharat

B. Project Vaani

C. Project Kalaimagal

D. Project Inimai

Answer & Explanation

Answer: B. Project Vaani

  • The Indian Institute of Sciences (IISc), ARTPARK (AI and Robotics Technology Park) and Google have partnered together for ‘Project Vaani’ Initiative. The digital project aims to map the language diversity of India by collecting speech sets of about a million people across 773 districts. The project aims to record over 150,000 hours of speech, part of which will be transcribed in local scripts. The goal is to boost development of automatic speech recognition, speech to speech translation and natural language understanding.

5. ‘Daksh’ is the payments fraud reporting module maintained by which institution?

A. SEBI

B. NITI Aayog

C. Reserve Bank of India

D. State Bank of India

Answer & Explanation

Answer: C. Reserve Bank of India

  • Daksh is the advanced supervisory management system maintained by the Reserve Bank of India (RBI). RBI recently announced that it is migrating the payments fraud reporting module to Daksh on January 1, 2023. The move aims to streamline reporting, enhance efficiency and automate the payments fraud management process.

6. India’s sixth Vande Bharat train was inaugurated between Nagpur and which city?

A. Bilaspur

B. Madurai

C. Bhopal

D. Bengaluru

Answer & Explanation

Answer: A. Bilaspur

  • Prime Minister Narendra Modi flagged off India’s sixth Vande Bharat Express between Bilaspur (Chattisgarh)–Nagpur (Maharashtra) route. It will be operated by the Southeast Central Railways (SECR). The Vande Bharat Express can run up to a maximum speed of 160 kmph and has travel classes with better passenger amenities. The Prime Minister also launched phase–I of the Nagpur Metro.

7. Who has been selected as the first woman president of Indian Olympic Association (IOA)?

A. Mary Kom

B. P T Usha

C. Anju Bobby George

D. Karnam Malleswari

Answer & Explanation

Answer: B. P T Usha

  • Legendary athlete PT Usha was elected as the first woman president of Indian Olympic Association (IOA). She is a multiple Asian Games gold medalist and fourth place finisher in the 1984 Los Angeles Olympics 400m hurdles final. The 58–year–old athlete was declared elected unopposed for the top post in the polls. The elections were held under the supervision of Supreme Court–appointed retired SC judge L Nageswara Rao. She became the first Olympian and first international medallist to head the IOA in its 95–year history.

8. Which state organised the ‘Muziris Biennale’ art event?

A. Tamil Nadu

B. Kerala

C. Andhra Pradesh

D. Odisha

Answer & Explanation

Answer: B. Kerala

  • Kerala Chief Minister Pinarayi Vijayan inaugurated the fifth edition of Kochi Muziris Biennale. The Biennale will be hosted on the theme ‘In Our Views Flow Ink and Fire’. The four–month–long celebration of art is scheduled to see several discussions, performances and film screenings. The biennale showcases more than 200 main artworks of 90 artists from about 40 different countries.

9. What is the target of India in reducing carbon intensity by 2030?

A. 20%

B. 45%

C. 55%

D. 95%

Answer & Explanation

Answer: B. 45%

  • The Rajya Sabha passed the Energy Conservation (Amendment) Bill, to mandate non–fossil sources of energy and establish a domestic carbon market in India. This will help India achieve its target of reducing India’s carbon intensity by 45 per cent by 2030. This goal is part of India’s updated Nationally Determined Contributions (NDC).

10. Who has been conferred with the Sri Chandrasekharendra Saraswathi National Eminence Award (SIES)?

A. Narendra Modi

B. Rajnath Singh

C. M Venkaiah

D. Piyush Goyal

Answer & Explanation

Answer: C. M Venkaiah

  • Former Vice President Venkaiah Naidu has been conferred with the 25th Sri Chandrasekarendra Saraswathi National Eminence Award (SIES). Awardees in other categories include the Governor of Kerala Arif Mohammed Khan, industrialist Ratan Tata, cardiologist and Padma Vibhushan awardee Dr Marthanda Varma Sankaran Valianathan, Scientific Advisor to the Government of India Ajay Sood and famous Harikatha artiste Vishakha Hari.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!