TnpscTnpsc Current Affairs

30th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

30th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 30th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘பாரத பாக்ய விதாதா’ விழா நடைபெறும் இடம் எது?

அ) மும்பை

ஆ) புது தில்லி 

இ) லக்னௌ

ஈ) அகமதாபாத்

  • ‘பாரத பாக்ய விதாதா’ என்ற தலைப்பில் 10 நாள் நடக்கும் ‘செங்கோட்டை திருவிழா’ புது தில்லியில் அமைந்துள்ள செங்கோட்டையில் அண்மையில் தொடங்கியது. மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இவ்விழாவை தொடங்கிவைத்தார்.
  • இந்தத் திருவிழா, ‘அமுதப்பெருவிழாவின்’ ஒருபகுதியாக கலாச்சார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டை விழா இந்தியாவின் அனைத்துப் பகுதி கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் நினைவுப்படுத்தும் ஒரு விழாவாகும்.

2. ‘ஆண்டின் ஆளுநர்’ விருதை வென்ற மரியோ மார்செல், எந்த நாட்டு மத்திய வங்கியின் ஆளுநராக இருந்தார்?

அ) சிலி 

ஆ) ஆஸ்திரேலியா

இ) ஜெர்மனி

ஈ) வெனிசுலா

  • மத்திய வங்கிக்குழுவும் அதன் தலையங்க ஆலோசனைக் குழுவும் அண்மையில் மத்திய வங்கி விருதுகளின் 9ஆம் பதிப்பை (2022) வெளியிட்டன. சிலி நாட்டின் மரியோ மார்செல், ‘நடப்பாண்டுக்கான (2022) சிறந்த ஆளுநர்’ விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ‘Banco Central de Chile’ என்பது சிலியின் மத்திய வங்கியின் பெயர்.

3. ரிசர்வ் வங்கியின் புத்தாக்க மையத்தின் (RBIH) முதல் தலைவர் யார்?

அ) சேனாபதி கிரிஸ் கோபாலகிருஷ்ணன் 

ஆ) உர்ஜித் படேல்

இ) அபிஜீத் பானர்ஜி

ஈ) விரல் ஆச்சார்யா

  • இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஆளுநர் சக்திகாந்த தாஸ் பெங்களூருவில் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) புத்தாக்க மையத்தை (RBIH) திறந்து வைத்தார். 100 கோடி ஆரம்ப மூலதனப்பங்களிப்புடன், நிதிசார் புத்தாக்கங்களை ஊக்கு –விக்கவும், வளர்த்தெடுக்கவும் இது அமைக்கப்பட்டுள்ளது.
  • சேனாபதி கிரிஸ் கோபாலகிருஷ்ணன் இதன் முதலாவது தலைவர் ஆவார். மேலும் தொழிற்துறை மற்றும் கல்வித் துறையைச்சேர்ந்தோரும் இதில் உறுப்பென உள்ளனர்.

4. கனிஜ் பிதேஷ் இந்தியா லிட் (KABIL) என்பது எந்தப் பொருளின் விநியோகத்தை உறுதிசெய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கூட்டு நிறுவனமாகும்?

அ) பெட்ரோலியம்

ஆ) கச்சா எண்ணெய்

இ) முதன்மை கனிமங்கள்

ஈ) மருத்துவப்பொருள்

  • கனிஜ் பிதேஷ் இந்தியா லிட் (KABIL) என்பது தேசிய அலுமினியம் நிறுவனம் (NALCO), ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனம் (HCL) மற்றும் மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் கம்பெனி லிமிடெட் (MECL) ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாகும்.
  • சமீபத்தில், சுரங்கத்துறை ஒத்துழைப்புக்கான முதன்மை புரிந்துணர்வு ஒப்பந்தம், கனிஜ் பிதேஷ் இந்தியா லிமிடெட் (KABIL) மற்றும் ஆஸ்திரேலியாவின் முதன்மை கனிம வசதி அலுவலகம் இடையே கையெழுத்தானது.

5. ‘2022 – பஸ்ஸா சர்வதேச சாம்பியன்ஷிப் உலக பாரா தடகள கிராண்ட்பிரிக்ஸ்’ நடைபெறும் இடம் எது?

அ) புது தில்லி

ஆ) துபாய் 

இ) சென்னை

ஈ) கொழும்பு

  • 13ஆவது பாஸ்ஸா சர்வதேச சாம்பியன்ஷிப் உலக பாரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் – 2022 துபாயில் தொடங்கியது. பாராலிம்பியன் தரம்பிர் தலைமையிலான 29 பேர் கொண்ட இந்திய அணி, 43 நாடுகளைச் சேர்ந்த சுமார் 500 பாரா விளையாட்டு வீரர்களுடன் இந்தப் போட்டியில் பங்கேற்கிறது.

6. 2022 – ஆல் இங்கிலாந்து ஓப்பன் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் 2ஆமிடத்தை வென்ற இந்தியர் யார்?

அ) K ஸ்ரீகாந்த்

ஆ) P V சிந்து

இ) லக்ஷ்யா சென் 

ஈ) சாய்னா நேவால்

  • ஆல் இங்கிலாந்து ஓப்பன் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் – 2022இல் இந்திய டென்னிஸ் வீரர் லக்ஷ்யா சென் 2ஆம் இடத்தைப் பெற்றார். பர்மிங்காமில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், உலகின் நம்பர்–1 விக்டர் ஆக்சல்சென் லக்ஷ்யா சென்னை வீழ்த்தினார்.
  • மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் யமகுச்சி அகானே சாம்பியன் பட்டம் வென்றார். ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தோனேஷியா சாம்பியன் பட்டம் வென்றது. மகளிர் இரட்டையர் பட்டம் மற்றும் கலப்பு இரட்டையர் பட்டத்தை ஜப்பான் வென்றது.

7. மதிப்புமிக்க, ‘ஸ்போர்ட்ஸ் ஐகான்’ விருதை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர் யார்?

அ) சுரேஷ் ரெய்னா 

ஆ) M S தோனி

இ) சச்சின் டெண்டுல்கர்

ஈ) விராட் கோலி

  • முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, மாலத்தீவு விளையாட்டு விருதுகள் 2022இல் மதிப்புமிக்க ‘ஸ்போர்ட்ஸ் ஐகான்’ விருதைப் பெற்றார்.

8. 2022 – ‘இந்தியாவை மாற்றும் பெண்கள்’ விருதுகள், எத்தனை பெண் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டது?

அ) 10

ஆ) 50

இ) 75 

ஈ) 100

  • Women Transforming India (WTI) – இந்தியாவை மாற்றும் பெண்கள்’ விருதுகளின் ஐந்தாவது பதிப்பை NITI ஆயோக் நடத்தியது. நாட்டின் 75ஆவது ஆண்டு விடுதலையைக் கொண்டாடும் விடுதலையின் அமுதப்பெருவிழாவின் ஒரு பகுதியாக, 75 பெண் சாதனையாளர்களுக்கு இந்த ஆண்டுக்கான (2022) விருதுகள் வழங்கப்பட்டன.

9. ‘WINGS INDIA–2022’ மாநாட்டை நடத்தும் நகரம் எது?

அ) புது தில்லி

ஆ) மும்பை

இ) ஹைதராபாத் 

ஈ) புனே

  • சிவில் வான் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (FICCI) ஆகியவை இணைந்து ‘WINGS INDIA – 2022’ என்னும் ஆசியாவின் மிகப்பெரிய வான் போக்குவரத்து தொடர்பான நிகழ்ச்சியை ஹைதராபாத்தில் நடத்தின.
  • புதிய வணிகங்களை கையகப்படுத்தல், முதலீடுகள், கொள்கை உருவாக்கம் மற்றும் பிராந்திய இணைப்பு ஆகியவற்றில் இது கவனஞ்செலுத்தியது.
  • வான்போக்குவரத்து மையமாக ஐதராபாத் இருப்பதால் அங்கு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நாட்டின் 75ஆவது ஆண்டின் சுதந்திரத்தைக் கொண்டாடும் விடுதலையின் அமுதப் பெருவிழாவின் ஒருபகுதியாக, “இந்தியா@75: விமானத் தொழிலுக்கான புதிய தொடுவானம்” என்பது இந்த நிகழ்வின் கருப்பொருளாக இருந்தது.

10. உலகின் முதல் வனவுயிரி பாதுகாப்புப் பத்திரத்தை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) உலக வங்கி 

ஆ) ஐநா சுற்றுச்சூழல் திட்டம்

இ) உலக பொருளாதார மன்றம்

ஈ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

  • வனவுயிரிகள் பாதுகாப்புப் பத்திரம் எனப் பெயரிடப்பட்ட உலகின் முதல் வனவுயிரிகள் பத்திரத்தை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இரண்டு தென்னாப்பிரிக்க காப்புப் பகுதிகளான அட்டோ யானைகள் தேசியப்பூங்கா மற்றும் கிரேட் ஃபிஷ் ரிவர் நேச்சர் ரிசர்வ் ஆகியவற்றிற்காக $150 மில்லியன் டாலர்கள் செலவிடப்படும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 5ஆவது BIMSTEC உச்சிமாநாடு

BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) அமைப்பின் 5ஆவது உச்சிமாநாடு அந்த அமைப்புக்கு தற்போது தலைமைப் பொறுப்புவகிக்கும் இலங்கை தலைமையில் நடந்தது.

பிரதமர் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில், மூன்று BIMSTEC ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. (i) குற்ற விவகாரங்களில் பரஸ்பர சட்ட உதவிக்கான BIMSTEC உடன்படிக்கை: (ii) இராஜ்ஜிய பயிற்சித்துறையில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான புரிந்துண -ர்வு ஒப்பந்தம் மற்றும் (iii) BIMSTEC தொழில்நுட்ப மாற்ற வசதிக்கான அமைப்பு.

உறுப்பு நாடுகளின் தற்போதைய முன்னுரிமைகளை பிரதிபலிக்கும் விதமாக, “மறுமலர்ச்சி அடையக்கூடிய பிராந்தியம், வளமான பொருளாதாரம், ஆரோக்கியமான மக்கள்” என்பதே இந்த மாநாட்டின் மையக்கருத்தாகும்.

2. நீர் மேலாண்மை: தமிழ்நாட்டுக்கு 6 தேசிய விருதுகள்

மத்திய அரசின் நீர் மேலாண்மைத் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழ்நாட்டுக்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் தில்லியில் நடைபெற்ற விழாவில் இந்த விருதுகளை மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வழங்கினார்.

நீர் மேலாண்மையில் மக்களையும் பல்வேறு தரப்பினரையும் முழுமையாக ஈடுபடுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், தேசிய நீர் விருதுகளை மத்திய அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவித்தது. தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பயனுள்ள நீர் மேலாண்மை நடைமுறைக -ளைப் பின்பற்றுபவர்களை ஊக்குவிக்கவும் இந்த விருது வழங்கப்படுகிறது.

இதில் சிறந்த மாநிலம், மாவட்டம், ஊராட்சி, பள்ளிகள், தனியார் நிறுவனம், தொழிற்சாலைகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட 11 பிரிவுகளில் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் 57 தேசிய நீர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

நீர்மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களை ஜல் சக்தித் துறையின் சிறப்புக் குழு, மாநில வாரியாக நேரில் கள ஆய்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது.

தமிழ்நாடு 3-ஆம் இடம்: நிகழாண்டு மூன்றாவது தேசிய நீர் விருதுகள் வழங்கும் விழா தில்லி விஞ்ஞான் பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய மாநிலங்களின் பட்டியலில் உத்தர பிரதேச மாநிலம் முதலிடம் பிடித்தது.

இரண்டாம் இடத்தை இராஜஸ்தான் மாநிலம் பெற்றது. மூன்றாமிடத்தை தமிழ்நாடு பிடித்தது. 2020-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இரண்டாவது தேசிய நீர் விருதில், தமிழகம் முதலாவது இடத்தைப் பிடித்திருந்தது.

காவேரிப்பட்டினம் பள்ளிக்கு முதல் பரிசு:

நீர் மேலாண்மையில் சிறந்த பள்ளிகள் பிரிவில் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. புதுச்சேரி மணப்பட்டு அரசுப் பள்ளி மூன்றாமிடம் பெற்றது.

செங்கல்பட்டு, மதுரைக்கு பரிசு: சிறந்த ஊராட்சி பிரிவில் (தென்மண்டல அளவில்) செங்கல்பட்டு மாவட்டம் வெள்ளப் புதூர் ஊராட்சி இரண்டாம் பரிசு பெற்றது. சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புப் பிரிவில் மதுரை மாநகராட்சிக்கு 3-ஆவது பரிசு கிடைத்தது.

சிறந்த தொழில் பிரிவில் ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்துக்கு இரண்டாவது பரிசும், சிறந்த தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரிவில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்துக்கு 2-ஆவது இடத்துக்கான பரிசும் வழங்கப்பட்டது.

3. 3 மின் திட்டப் பணிகளில் இந்தியாவுடன் இலங்கை அரசு ஒப்பந்தம்: சீன நிறுவனத்துக்கு வழங்கிய பணிகள் ரத்து

இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள 3 தீவுகளில் மரபுசாரா மின்னுற்பத்தி திட்டங்கள் மேற்கொள்ள சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் அதனை ரத்து செய்த இலங்கை அரசு, அப்பணிகளை இந்திய நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் உள்ள நைனா தீவு, நெடுந்தீவு மற்றும் அனலைத் தீவு உள்ளிட்ட பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நிறைவேற்ற சீனாவைச் சேர்ந்த சினோசோர்-எடெக்வின் என்ற நிறுவனத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.

இது ஆசிய வளர்ச்சி வங்கி ஆதரவுடன் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் நடக்கும் மிகப்பெரிய மின்னுற்பத்தி திட்டமாகும்.

4. போதைப் பொருள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’

தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ என்ற சிறப்பு நடவடிக்கை ஒரு மாதத்துக்கு தொடங்கப்பட்டுள்ளது.

மார்ச் 28 முதல் ஏப்.27 வரை

கடந்த 2021 டிசம்பர் முதல் கடந்த ஜனவரி வரை நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையின் தொடர்ச்சியாக, இந்த மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல்.27 வரை ஒரு மாதம் ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ நடத்தப்படவுள்ளது. இதன்மூலம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்காபோன்ற போதைப்பொருட்கள் விற்கப்படுவ
-தைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

5. `400 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள ‘சென்ட்ரல் ஸ்கொயர்’

சென்னை மத்திய ரயில் நிலையம் எதிரே போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் `400 கோடி செலவில் ‘சென்ட்ரல் ஸ்கொயர்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தத் திட்டத்தின்கீழ் சென்னை சென்ட்ரல், மெட்ரோ இரயில் நிலையம், ரிப்பன் பில்டிங், இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, பூங்கா நகர் இரயில் நிலையம் ஆகியவற்றை இணைத்து ஒரே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

1. Which is the venue of the ‘Bharat Bhagya Vidhata’ festival?

A) Mumbai

B) New Delhi 

C) Lucknow

D) Ahmedabad

  • The ten–day mega Red Fort Festival titled ‘Bharat Bhagya Vidhata’ commenced recently at Red Fort in New Delhi. Union Women and Child Development Minister Smriti Irani inaugurated the festival. The Red Fort mega festival is being organised as part of Azadi ka Amrit Mahotsav by Ministry of Culture. The Red Fort festival is to commemorate the heritage of the country and culture of every part of India.

2. Mario Marcel, who won the ‘Governor of the year’ award, was the Governor which country’s Central Bank?

A) Chile 

B) Australia

C) Germany

D) Venezuela

  • The Central Banking team and its editorial advisory panel recently unveiled its ninth edition of Central Banking Awards (2022). Chile’s Mario Marcel has been named for the Governor of the year award. Banco Central de Chile is the name of the central bank of Chile.

3. Who is the first Chairperson of the ‘Reserve Bank Innovation Hub (RBIH)’?

A) Senapathy Kris Gopalakrishnan 

B) Urjit Patel

C) Abhijeet Banerjee

D) Viral Acharya

  • RBI Governor Shaktikanta Das inaugurated the Reserve Bank Innovation Hub (RBIH) in Bengaluru. It has been set up to encourage and nurture financial innovation, with an initial capital contribution of Rs 100 crore. Senapathy (Kris) Gopalakrishnan is the first Chairperson while it has eminent persons from industry and academia as members.

4. Khanij Bidesh India Ltd. (KABIL) is a Joint venture Company formed to ensure critical supply of which Product?

A) Petroleum

B) Crude Oil

C) Critical Minerals 

D) Medical Products

  • Khanij Bidesh India Ltd. (KABIL) is a Joint venture Company of three Public Sector Enterprises namely, National Aluminium Company Ltd. (NALCO), Hindustan Copper Ltd. (HCL) and Mineral Exploration Company Ltd. (MECL).
  • Recently, an MoU was signed on cooperation in the critical mining sector which was signed by Khanij Bidesh India Ltd. (KABIL) and Australia’s Critical Mineral Facilitation Office.

5. Which is the venue of International Championships World Para Athletics Grand Prix 2022’?

A) New Delhi B) Dubai 🗹

C) Chennai D) Colombo

  • The 13th Fazza International Championships World Para Athletics Grand Prix has commenced in Dubai. A 29–member Indian team, led by Paralympian Dharambir, will take part in the tournament, along with around 500 para–athletes from 43 nations.

6. Which Indian won second place in the All–England Open Badminton Championship – 2022?

A) K Srikanth

B) P V Sindhu

C) Lakshya Sen 

D) Saina Nehwal

  • Indian Tennis player Lakshya Sen won second place in the All–England Open Badminton Championship 2022. World No.1 Viktor Axelsen defeated Lakshya Sen in the men’s singles final match held in Birmingham. Women’s singles title was clinched by Japan’s Yamaguchi Akane. Men’s doubles title was won by Indonesia. Women’s doubles title and Mixed doubles title are won by Japan.

7. Which Indian cricketer has been presented the prestigious ‘Sports Icon’ award?

A) Suresh Raina 🗹

B) M S Dhoni

C) Sachin Tendulkar

D) Virat Kohli

  • Former India cricketer Suresh Raina was felicitated with the prestigious ‘Sports Icon’ award at the Maldives Sports Awards 2022.

8. The Women Transforming India (WTI) Awards 2022 were conferred on how many women achievers?

A) 10

B) 50

C) 75 

D) 100

  • NITI Aayog organized the fifth edition of the Women Transforming India (WTI) Awards in March 2022. As part of the Azadi ka Amrit Mahotsav, the WTI Awards were conferred on 75 women achievers to celebrate their contribution towards a ‘Sashakt Aur Samarth Bharat’.
  • The 75 awardees were chosen on the basis of nominations received on NITI Aayog’s Women Entrepreneurship Platform (WEP), and through shortlisting by a search–and–select committee.

9. Which city is the host of ‘WINGS INDIA 2022’ Conference?

A) New Delhi

B) Mumbai

C) Hyderabad 

D) Pune

  • Ministry of Civil Aviation (MOCA) and FICCI are jointly organizing WINGS INDIA 2022 – Asia’s largest event on Civil Aviation. It focuses on new business acquisition, investments, policy formation and regional connectivity. Hyderabad, also called as the hub of Aviation, is the host of the event.
  • As part of the country’ Azadi Ka Amrit Mahotsav (AKAM), the theme of the event is “India@75: New Horizon for Aviation Industry”.

10. Which institution issued the world’s 1st Wildlife Conservation Bond?

A) World Bank

B) UN Environment Program

C) World Economic Forum

D) International Monetary Fund

  • The World Bank has issued the world’s first wildlife bond named as the Wildlife Conservation Bond (WCB). The USD150 million will be spent on two South African reserves, the Addo Elephant National Park (AENP) and the Great Fish River Nature Reserve (GFRNR).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!