TnpscTnpsc Current Affairs

30th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

30th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 30th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. காலின்ஸ் அகராதியின்படி ‘2021ஆம் ஆண்டின் சொல்’ என்ன?

அ) கிரிப்டோ-கரன்ஸி

ஆ) பிட்காயின்

இ) NFT 

ஈ) டி-ஃபை

 • காலின்ஸ் அகராதி ‘NFT’ (Non-fungible Token என்பதன் சுருக்கம்) என்ற சொல்லை 2021ஆம் ஆண்டின் சொல்லாகத் தேர்ந்தெடுத்துள்ளது. காலின்ஸின் கூற்றுப்படி, இந்தச்சொல்லின் பயன்பாடு 11,000 சதவீதம் அதிகரித்துள்ளது. மில்லியன் கணக்கான டாலர்களுக்கு விற்கக்கூடிய டிஜிட்டல் டோக்கன்களில் ஆர்வம் உயர்ந்து வருவதை இது காட்டுகிறது.

2. வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பதற்காக, ‘மோட்டார் வாகன வரி (திருத்த) மசோதா-2021’ஐ நிறைவேற்றியுள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) ஆந்திர பிரதேசம் 

இ) தெலுங்கானா

ஈ) ஒடிஸா

 • ஆந்திர பிரதேச மாநில சட்டமன்றம், வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பதற்காக AP மோட்டார் வாகன வரி (திருத்தம்) மசோதா – 2021’ஐ நிறைவேற்றியுள்ளது. மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் தவிர அனைத்து வாகனங்களுக்கும் பசுமை வரி விதிக்கப்படவுள்ளது.

3. காலநிலை மாற்றத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக -ளுக்கு உதவுவதற்காக €1.2 பில்லியன் நிதியுதவியை அறிவித்து உள்ள நாடு எது?

அ) பிரான்ஸ்

ஆ) ஜெர்மனி 

இ) இத்தாலி

ஈ) UK

 • காலநிலை மாற்றத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கும் தூய எரிசக்தியில் ஒத்துழைப்பு நல்குவதற்கும் ஜெர்மனி €1.2 பில்லியனுக்கும் அதிகமான (சுமார் `10,025 கோடி) புதிய வாக்குறு -திகளை அறிவித்துள்ளது. 1990ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2045 ஆம் ஆண்டிற்குள் காலநிலை நடுநிலையை எய்தவும், எரிசக்தி மற்றும் தொழிற்துறைகளில் உமிழ்வுகளை 77 & 58% குறைக்கவும் ஜெர்மனி தனது இலக்கை அறிவித்துள்ளது. உலகளாவிய பைங்குடில் வாயுவில் இந்தியாவும் ஜெர்மனியும் கிட்டத்தட்ட 9% பங்கைக் கொண்டுள்ளன.

4. தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வை உறுதிசெய்வதற்கான மின்னணு & தகவல் தொழினுட்ப அமைச்சகத்தின் முதல் PPP முயற்சியின் பெயரென்ன?

அ) சைபர் சுரக்ஷித் பாரத் முன்னெடுப்பு 

ஆ) சுரக்ஷித் பாரத்; ஸ்வஸ்த் பாரத்

இ) சுரக்ஷித் CISO’க்கள்

ஈ) பாதுகாப்பான CISOகள்

 • ‘சைபர் சுரக்ஷித் பாரத் முன்னெடுப்பு’ என்பது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முதல் PPP முயற்சியாகும். இது 2018 ஜனவரியில் தொடங்கப்பட்டது. இது தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 • MeITY’இன் கீழுள்ள தேசிய மின்-ஆளுகைப் பிரிவு, தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகள் (CISO’க்கள்) மற்றும் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள், மத்திய மற்றும் மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றின் முன்னணி தகவல் தொழில் நுட்ப அதிகாரிகளுக்கு 6 நாள் பயிற்சித் திட்டத்தை நடத்துகிறது.

5. எந்தத் தலைவரின் நினைவு நாள், ‘மகாபரிநிர்வான் திவாஸ்’ என அனுசரிக்கப்படுகிறது?

அ) Dr B R அம்பேத்கர் 

ஆ) சர்தார் வல்லபாய் படேல்

இ) ஜோதிராவ் பூலே

ஈ) தயானந்த சரஸ்வதி

 • பாபாசாகேப் டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் நினைவு நாள் ஒவ்வோர் ஆண்டும் டிச.6 அன்று ‘மகாபரிநிர்வான் திவாஸ்’ என அனுசரிக்கப்படுகி -றது. மும்பையில் அமைந்துள்ள அவரது நினைவிடமான சைத்ய பூமியில் அவரது ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கூடினர். இந்த ஆண்டு, இந்திய பிரதமர் மோடி காணொளிக்காட்சிமூலம் சைத்ய பூமிக்கு வந்திருந்த ஆதரவாளர்களோடு உரையாடுகிறார்.

6. Lunar Polar Exploration Mission (LUPEX) என்பது நிலவிற்கான ஒரு கூட்டுத் திட்டமாகும். இதில் எந்த இரு நாடுகள் உள்ளன?

அ) இந்தியா-இஸ்ரேல்

ஆ) இந்தியா-பிரான்ஸ்

இ) இந்தியா-ஜப்பான் 

ஈ) இந்தியா-ரஷ்யா

 • நிலவின் துருவப்பகுதியை ஆராய்வதற்காக, இந்திய மற்றும் ஜப்பானிய விண்வெளி முகமைகள் இணைந்து நிலவுக்கான ஒரு திட்டத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளன. Lunar Polar Exploration Mission (LUPEX) என அழைக்கப்படும் இந்தத் திட்டம், இந்திய நிலவு தரையிறங்கி மற்றும் ஜப்பானிய ஆய்வூர்தி ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
 • ஜப்பானிய விண்வெளி ஆய்வுநிறுவனம் (JAXA) சிட்னி உரையாடலின் போது இந்தத் திட்டம் குறித்து வெளிப்படுத்தியது.

7. நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் ‘சிறந்த பொது போக்குவரத்து அமைப்புகொண்ட நகரத்திற்கான’ விருதை வென்ற நகரம் எது?

அ) மும்பை

ஆ) சூரத் 

இ) காந்திநகர்

ஈ) லக்னோ

 • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் 2021ஆம் ஆண்டின் நகர்ப்புற போக்குவரவு இந்தியா (UMI) மாநாட்டின் 14ஆவது பதிப்பை நடத்தியது. ‘சிறந்த பொது போக்குவரத்து அமைப்புகொண்ட நகரத்திற்கான’ விருதை சூரத் நகரம் வென்றது.
 • மேலும், ‘கொச்சி’ மிகவும் நிலையான போக்குவரத்து அமைப்புகொண்ட நகரமாக மதிப்பிடப்பட்டது. UMI மாநாட்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விருதுகளை வழங்கினார். நாக்பூரின் மெட்ரோ இரயிலுடன் கூடிய பன்முறை ஒருங்கிணைப்பும் தில்லியின் மெட்ரோவும் விருதுகளை வென்றன.

8. சமீப செய்திகளில் இடம்பெற்ற சங்கப் குப்தாவுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ) சதுரங்கம் 

ஆ) கால்பந்து

இ) டேபிள் டென்னிஸ்

ஈ) நீச்சல்

 • நாக்பூரைச் சேர்ந்த 18 வயதான சங்கல்ப் குப்தா, இந்தியாவின் 71ஆவது கிராண்ட்மாஸ்டர் ஆனார். அரண்ஞ்செலோவாக்கில் நடந்த GM Ask 3 ரவுண்ட்-ராபின் நிகழ்வில் மூன்றாவது மற்றும் இறுதி விதிமுறையை நிறைவுசெய்த பிறகு அவர் இச்சாதனையை அடைந்தார். தேவைப்பட்ட மூன்று GM நெறிமுறைகளையும் 24 நாட்களில் தொடர்ந்து விளையாடி சங்கல்ப் குப்தா வாங்கினார்.

9. சட்ட அளவியல் (அடைக்கப்பட்ட பொருட்கள்) விதிகள் – 2011’இல் திருத்தங்களை அறிவித்த மத்திய அமைச்சகம் எது?

அ) உள்துறை அமைச்சகம்

ஆ) நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் 

இ) உழவு மற்றும் உழவர்கள் நல அமைச்சகம்

ஈ) உணவு பதப்படுத்தும் தொழிலகங்கள் அமைச்சகம்

 • நடுவண் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகமானது சட்ட அளவியல் (அடைக்கப்பட்ட பொருட்கள்) விதிகள் – 2011’இல் திருத்தம் செய்துள்ளது. இத்திருத்தங்கள் 2022 ஏப்ரல்.1 முதல் நடைமுறைக்கு வரும்.
 • அடைக்கப்பட்ட பொருட்களின் அலகு விற்பனை விலையைக் குறிக்கும் புதிய விதிமுறை சேர்க்கப்பட்டுள்ளது. விளக்கப்படம் ஏதுமின்றி MRP குறித்த தகவலை வழங்குவது, அனைத்து வரிகளையும் உள்ளடக்கி இந்திய நாணய மதிப்பில் (`) MRP’ஐ தெரிவிப்பது உள்ளிட்டவை இந்தத் திருத்தங்களுள் அடங்கும்.

10. UNESCO கிரியேட்டிவ் சிட்டிஸ் நெட்வொர்க்கின் (UCCN) ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நகரம் எது?

அ) புனே

ஆ) கொச்சின்

இ) ஸ்ரீநகர் 

ஈ) கொல்கத்தா

 • ஐநா கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO) ஸ்ரீநகரை UNESCO கிரியேட்டிவ் சிட்டிஸ் நெட்வொர்க்கின் (UCCN) ஒருபகுதியாக அறிவித்துள்ளது. மும்பை, சென்னை, ஹைதராபாத், வாரணாசி மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களுக்குப் பிறகு, இந்த பெருமையைப் பெறும் ஆறாவது இந்திய நகரமாக ஸ்ரீநகர் உள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் தலைநகரமான இந்த நகரம், உலகெங்கிலும் உள்ள 295 கிரியேட்டிவ் சிட்டிஸ் வலையமைப்பிற்குள் நுழைந்துள்ளது.

1. What is the ‘Word of the year 2021’ as per Collins Dictionary?

A) Crypto–currency

B) Bitcoin

C) NFT 

D) De–Fi

 • Collins Dictionary has chosen the term ‘NFT’ (short for non–fungible token), as its word of the year 2021. As per Collins, the word’s usage increased 11,000 percent. There has been a surging interest in the digital tokens that can sell for millions of dollars.

2. Which state has passed ‘Motor Vehicles Taxation (Amendment) Bill 2021’, to levy a green tax on vehicles?

A) Tamil Nadu

B) Andhra Pradesh 

C) Telangana

D) Odisha

 • The Andhra Pradesh State Assembly has passed the AP Motor Vehicles Taxation (Amendment) Bill 2021 to levy green tax on vehicles. The Green tax will soon be imposed on all vehicles, barring motorcycles and auto–rickshaws.

3. Which country has announced more than EUR 1.2 billion to aid India’s fight against climate change?

A) France

B) Germany 

C) Italy

D) UK

 • Germany has announced new commitments for more than EUR 1.2 billion (approx. INR 10,025 crore) to aid India’s fight against climate change and for cooperation on clean energy. Germany has announced its target to reach climate neutrality by 2045 and emissions reductions in the energy and industry sectors by 77 and 58%, compared to 1990. India and Germany account for nearly 9% of global greenhouse gas.

4. What is the name of the first PPP initiative of Ministry of Electronics and IT, to ensure awareness about cybercrime for Chief Information Security Officers?

A) Cyber Surakshit Bharat initiative 

B) Surakshit Bharat; Swasth Bharat

C) Surakshit CISOs

D) Safest CISOs

 • ‘Cyber Surakshit Bharat initiative’ is the first PPP initiative of Ministry of Electronics and IT, which was launched in January 2018. It aims to ensure awareness about cybercrime for Chief Information Security Officers.
 • The National e–Governance Division under MeITY is conducting a six–day Deep Dive Training program for Chief Information Security Officers (CISOs) and frontline IT officials from various Ministries & Departments, organisations from Central and State Governments, PSUs, banks, etc.

5. The Death Anniversary of which leader is observed as ‘Mahaparinirvan Divas’?

A) Dr BR Ambedkar 

B) Sardar Vallabhbhai Patel

C) Jyotirao Phule

D) Dayananda Saraswati

 • The death anniversary of Babasaheb Dr BR Ambedkar is observed as has been observed as ‘Mahaparinirvan Divas’, on December 6 every year. Millions of his followers gather at his resting place Chaitya Bhumi, located in Mumbai to pay tributes. This year, Prime Minister of India Narendra Modi is addressing the followers at Chaitya Bhumi through video conference.

6. Lunar Polar Exploration Mission (LUPEX) is a joint mission to the Moon, involves which two countries?

A) India–Israel

B) India–France

C) India–Japan 

D) India–Russia

 • The Indian and Japanese space agencies are planning to launch a joint mission to the Moon, aiming to explore the Moon’s polar region. The mission, which will be known as Lunar Polar Exploration Mission (LUPEX), will comprise of an Indian lunar lander and a Japanese rover. Japan Aerospace Exploration Agency (JAXA) revealed this mission at the Sydney Dialogue.

7. Which city has won Urban Affairs Ministry’s award for the city with the best public transport system?

A) Mumbai

B) Surat 

C) Gandhinagar

D) Lucknow

 • Union Housing and Urban Affairs Ministry presented the 14th edition of Urban Mobility India (UMI) Conference 2021. Surat won the award for the city with the best public transport system, and Kochi was judged the city with most sustainable transport system. The awards were presented by Housing and Urban Affairs Minister Hardeep Singh Puri at Urban Mobility India conference. Nagpur’s multi–modal integration with Metro rail, Delhi’s Metro also won awards.

8. Sankalp Gupta, who is seen in the news recently, is associated with which sport?

A) Chess 

B) Soccer

C) Table Tennis

D) Swimming

 • Sankalp Gupta from Nagpur, who is 18 years old has become the 71st Grandmaster of India. He achieved this feat after completing third and final norm at the GM Ask 3 round–robin event in Arandjelovac. Three required GM norms were acquired by Sankalp Gupta in a record time of 24 days, by playing three back–to–back tournaments.

9. Which Union Ministry announced amendments in the Legal Metrology (Packaged Commodities) Rules 2011?

A) Ministry of Home Affairs

B) Ministry of Consumer Affairs 

C) Ministry of Agriculture and Farmers Welfare

D) Ministry of Food Processing Industries

 • Ministry of Consumer Affairs, Food & Public Distribution has amended the Legal Metrology (Packaged Commodities) Rules 2011. The amendments will come into effect from 1st April, 2022.
 • A new provision has been introduced to indicate the unit sale price on pre packed commodities. The provision of declarations of MRP has been simplified by removing illustration and making the mandatory declaration of MRP in Indian currency inclusive of all taxes.

10. Which city has been designated as a part of UNESCO Creative Cities Network (UCCN)?

A) Pune

B) Cochin

C) Srinagar 

D) Kolkata

 • The United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO) designated Srinagar as a part of UNESCO Creative Cities Network (UCCN). After Mumbai, Chennai, Hyderabad, Varanasi and Jaipur, Srinagar is the sixth Indian city to achieve this honour. The capital city of Jammu and Kashmir has also entered the club of 295 creative cities network across the world.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button