TnpscTnpsc Current Affairs

30th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

30th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 30th November 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

30th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. ‘சமன்வை–2022’ என்ற மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப்பயிற்சியை நடத்துகிற ஆயுதப்படை எது?

அ. இந்திய இராணுவம்

ஆ. இந்திய கடற்படை

இ. இந்திய வான்படை

ஈ. இந்திய கடலோர காவல்படை

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. இந்திய வான்படை

  • ஆக்ராவில் உள்ள வான்படை தளத்தில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணத்திற்கு வருடாந்திர கூட்டுப் பயிற்சியான ‘சமன்வை–2022’ நவ.28–30 வரை நடைபெறவுள்ளது. இது நிறுவனம் சார்ந்த பேரிடர் மேலாண்மை கட்டடைமப்புகளின் திறன் மற்றும் அவசரகால நடவடிக்கைகள்பற்றி மதிப்பீடு செய்வதை நோக்கமாகக்கொண்டது. மேலும், பேரிடர் மேலாண்மைகுறித்த கருத்தரங்கும் வான்படை விமானங்களின் காட்சி விளக்கங்களும் இதில் இடம்பெறும். இந்தப் பயிற்சியின்போது ஆசியான் நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள்.

2. ‘நை சேத்னா’ என்ற பரப்புரைத் திட்டத்தைத் தொடங்கிய நடுவண் அமைச்சகம் எது?

அ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஆ. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

இ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

ஈ. MSME அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

  • நடுவண் ஊரக வளர்ச்சி அமைச்சகமானது ‘நை சேத்னா’ என்ற பெயரில் ஒருமாதகாலம் நீளும் பரப்புரைத் திட்டத்தை மக்கள் பங்கேற்பு இயக்கமாகத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய உதவும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடுவண் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 2022 நவ.25 அன்று பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாளின்போது இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

3. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச்சட்டத்தை மறுசீரமைப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?

அ. அமர்ஜீத் சின்ஹா

ஆ. A K சிக்ரி

இ. இரஞ்சன் கோகோய்

ஈ. V V இரமணா

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. அமர்ஜீத் சின்ஹா

  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தின் (MNREGA) கீழ் தேவைப்படும் கட்டமைப்பு & பிற சீர்திருத்தங்களை பரிந்துரைப்பதற்காக முன்னாள் ஊரக வளர்ச்சி செயலர் அமர்ஜீத் சின்ஹா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் தேவைப்படும் மாநிலங்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதன்மூலம் பிராந்திய ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தக் குழு பரிந்துரைக்கவுள்ளது.

4. ‘மனநலம் மற்றும் சமூகப்பாதுகாப்புக் கொள்கையை’ அறிமுகப்படுத்திய முதல் வடகிழக்கு மாநிலம் எது?

அ. அஸ்ஸாம்

ஆ. மேகாலயா

இ. சிக்கிம்

ஈ. மணிப்பூர்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மேகாலயா

  • மேகாலயா மாநிலமானது வடகிழக்கில் முதல் மாநிலமாகவும், இந்தியாவில் மூன்றாவது மாநிலமாகவும், ‘மனநலம் மற்றும் சமூகப்பாதுகாப்புக் கொள்கையை’க் கொண்டுள்ளது. ஒட்டுமொத்த மனநலம் & நலவாழ்வை மேம்படுத்துதல் மற்றும் பொருத்தமான அணுகல் மற்றும் பராமரிப்பு வழிகளை எளிதாக்குவது இந்தக் கொள்கையின் நோக்கமாகும். இந்தக் கொள்கையானது சரியான மனநலம் (குறிப்பாக குழந்தைகள், இளம்பருவத்தினர் மற்றும் இளையோர்) பேணப்படுவதில் கவனம் செலுத்துவதை உறுதி செய்யும் என்று மேகாலயா மாநில முதலமைச்சர் கான்ராட் K சங்மா தெரிவித்தார்.

5. ‘சர்வதேச போர்த்துகீசிய மொழி பேசுவோர் (லூசோபோன்) திருவிழா’ நடத்தப்படும் மாநிலம் எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. கோவா

இ. குஜராத்

ஈ. அஸ்ஸாம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கோவா

  • இந்திய கலாசார உறவுகள் கவுன்சில் மற்றும் கோவா மாநில அரசாங்கத்துடன் இணைந்து வெளியுறவு அமைச்சகம் ‘சர்வதேச போர்த்துகீசிய மொழி பேசுவோர் (லூசோபோன்) திருவிழா’வை நடத்துகிறது. லூசோபோன்கள் என்பது போர்த்துகீசிய மொழியை பூர்வீகமாகவோ அல்லது இரண்டாம் மொழியாகவோ பேசும் மக்களைக் குறிக்கின்றது. இவ்விழாவின் ஒருபகுதியாக, லூசோபோன் இசை குறித்த பயிலரங்கங்கள், கோவா கட்டடக்கலை கண்காட்சிகள், கோவா கைவினைப்பொருட்கள் மற்றும் கோவா மரச்சாமான்கள், உணவு மற்றும் பானங்கள் திருவிழா ஆகியவை ஏற்பாடு செய்யப்படுகின்றன.

6. அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட, ‘Pseudohelice annamalai’ என்பது சார்ந்த இனம் எது?

அ. ஆமை

ஆ. சிலந்தி

இ. நண்டு

ஈ. வண்ணத்துப்பூச்சி

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. நண்டு

  • வளம்நிறை தமிழ்நாட்டின் வெள்ளாற்றின் முகத்துவாரம் அருகேயுள்ள சதுப்புநிலத்தில் புதிய வகை ‘கழிமுக நண்டு’ இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கல்வி & ஆராய்ச்சி சார்ந்த அதன் 100 ஆண்டுகால சேவையை அங்கீகரிப்பதற்காக இந்த இனத்திற்கு, ‘Pseudohelice annamalai’ என்று பெயரிடப்பட்டுள்ளது. Pseudohelice என்ற இந்த இனம் முதல்முறையாக இங்குதான் கண்டறியப்பட்டுள்ளது. அதிக அலையிடைப் பகுதிகளிலிருந்து இது சேகரிக்கப்பட்டது. ‘Pseudohelice annamalai’ இணமானது அடர் ஊதா நிறத்தில் இருந்து அடர் சாம்பல் நிறம் வரை வேறுபட்ட நிறங்களில் காணப்படுகிறது.

7. 2022 – உலக பயன்மை (Usability) நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Our Health

ஆ. Make things easier

இ. Better Design

ஈ. Inclusivity

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. Our Health

  • ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தில் வரும் இரண்டாவது வியாழனன்று, உலகம் முழுவதும் உலக பயன்மை நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள், ‘Make things easier’ நாள் என்றும் அழைக்கப்படுகிறது. ‘பயன்மை’ என்பது ஒரு நபர் ஒரு பொருளை எவ்வளவு திறமையாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்த முடியும் என்பதை மதிப்பிடும் தரமாகும். 2022ஆம் ஆண்டில் வரும் உலக பயன்மை நாளுக்கானக் கருப்பொருள், “Our Health” என்பதாகும்.

8. சுவிச்சர்லாந்து சுற்றுலாத்துறையால், ‘நட்புத்தூதராக’ நியமிக்கப்பட்டுள்ள இந்திய விளையாட்டு வீரர் யார்?

அ. P V சிந்து

ஆ. நீரஜ் சோப்ரா

இ. மேரி கோம்

ஈ. விராட் கோலி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நீரஜ் சோப்ரா

  • ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ராவை, ‘நட்புத்தூதராக’ சுவிச்சர்லாந்து சுற்றுலாத் துறை நியமித்துள்ளது. ஒரு ‘நட்புத்தூதராக’ அவர் சுவிச்சர்லாந்தின் சாகசம் நிறைந்த சுற்றுலாத்தலங்களை இந்தியப் பயணிகளுக்கு காட்சிப்படுத்துவார் மற்றும் விளம்பரப்படுத்துவார்.

9. 2022 – இந்திய வேளாண் வணிக விருதுகளில் ‘சிறந்த மாநிலம்’ பிரிவில் விருதுபெற்ற மாநிலம் எது?

அ. கர்நாடகா

ஆ. ஒடிஸா

இ. ஹரியானா

ஈ. மேற்கு வங்காளம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ஹரியானா

  • கொள்கைகள், திட்டங்கள், உற்பத்தி, உள்ளீடுகள், தொழில்நுட்பங்கள், சந்தைப்படுத்தல், மதிப்புக்கூட்டல், உட் கட்டமைப்பு மற்றும் வேளாண்துறையில் ஏற்றுமதி ஆகிய துறைகளில் பங்களித்ததற்காக ஹரியானாவுக்கு, ‘சிறந்த மாநிலம்’ என்ற பிரிவில் 2022 – இந்திய வேளாண் வணிக விருது வழங்கப்பட்டுள்ளது. மீன்வள அமைச்சகத்தின் கீழ் ஹைதராபாத்தில் உள்ள தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்திற்கு, ‘சிறந்த வேளாண் வணிக’ விருதுக்கான 2022 – இந்திய வேளாண் வணிக விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய சர்வதேச வேளாண் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி – 2022 ஆனது இந்திய உணவு மற்றும் உழவு சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.

10. 2022 – தேசிய கல்வி நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Changing Course, Transforming Education

ஆ. Education and Scientific Research

இ. Shaping Country’s Education System

ஈ. Culture and Education

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. Changing Course, Transforming Education

  • இந்தியாவின் முதல் கல்வியமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் kaடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் நவ.11ஆம் தேதி தேசிய கல்வி நாள் கொண்டாடப்படுகிறது. ஆசாத், நாட்டின் கல்வி முறையை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார் மற்றும் UGC, AICTE மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களை அமைப்பதில் பங்களித்தார். “Changing Course, Transforming Education” என்பது இந்த ஆண்டு (2022) தேசிய கல்வி நாளுக்கானக் கருப்பொருள் ஆகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள் 

1. அருங்காட்சியகம் மற்றும் பூங்கா!

அரியலூர் மாவட்டத்திலுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகமும், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் புதைபடிவப் பூங்காவும் அமைக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சியின்போது கிடைக்கப்பெறும் புதைபடிவங்களை காட்சிப்படுத்துவதற்காக வாரணவாசி என்ற கிராமத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.

2. பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் சிப்காட் சார்பில் முதல் தொழிற்பூங்கா

பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழிற்பூங்காவை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், அங்கு அமையவுள்ள தனியார் காலணி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்துக்கும், கோத்தாரி பீனிக்ஸ் அக்கார்டு நிறுவனத்துக்கும் `1,700 கோடி மதிப்பில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், தைவான்நாட்டைச் சேர்ந்த 10 தொகுப்பு நிறுவனங்களுடன், `740 கோடி முதலீட்டில், 4,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

3. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இந்தியாவின் மிகப்பெரிய ஐபோன் தயாரிப்பு ஆலை

இந்தியாவில் பாக்ஸ்கான், பெகட்ரான், விஸ்ட்ரான் ஆகிய நிறுவனங்கள் புதிய ஐபோன்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஐபோன் தயாரிப்பு பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியாவில் ஐபோன் தயாரிப்பை 2 ஆண்டுகளில் 4 மடங்காக அதிகரிக்க பாக்ஸ்கான் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி, நாட்டிலேயே மிகப்பெரிய ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை ஓசூரில் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கான கட்டுமானப் பணிகளை டாடா குழுமம் மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.

30th November 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. ‘Samanvay 2022’ is a Humanitarian Assistance and Disaster Relief (HADR) Exercise organised by which armed force?

A. Indian Army

B. Indian Navy

C. Indian Air Force

D. Indian Coast Guard

Answer & Explanation

Answer: C. Indian Air Force

  • Indian Air Force conducted the Annual Joint Humanitarian Assistance and Disaster Relief (HADR) Exercise ‘Samanvay 2022’ at Air Force Station Agra. With this exercise, the Indian Air Force aims to assess the efficacy of institutional disaster management structures and contingency measures. The exercise witnessed participation by representatives from the ASEAN countries.

2. Which Union Ministry launched the ‘Nai Chetna’ campaign?

A. Ministry of Rural Development

B. Ministry of Health and Family Welfare

C. Ministry of Women and Child Development

D. Ministry of MSME

Answer & Explanation

Answer: A. Ministry of Rural Development

  • The Union Ministry of Rural Development launched the month–long campaign named ‘Nai Chetna’, as a people’s movement. The campaign is launched by the Ministry of Rural Development to make women, especially in rural areas, aware of their rights and mechanism available to help redress their grievances. It was launched on the International Day for the Elimination of Violence against Women on 25th November 2022.

3. Who is the head of the panel set up to revamp Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA)?

A. Amarjeet Sinha

B. A K Sikri

C. Ranjan Gogoi

D. V V Ramana

Answer & Explanation

Answer: A. Amarjeet Sinha

  • A panel headed by former Rural Development Secretary Amarjeet Sinha, has been set up to recommend structural and other reforms required under Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA). The panel is to suggest measures to reduce regional imbalance by offering more opportunities to the most deserving states.

4. Which is the first north–eastern state to launch its ‘Mental Health and Social Care Policy’?

A. Assam

B. Meghalaya

C. Sikkim

D. Manipur

Answer & Explanation

Answer: B. Meghalaya

  • Meghalaya has become the first state in the Northeast and the third state in India to have ‘Mental Health and Social Care Policy’. The vision of the policy is to promote overall mental health and well–being and facilitate appropriate access and care pathways. Chief Minister Conrad K Sangma informed that this policy will ensure proper attention to mental health, especially for children, adolescents, and youths.

5. Which state is the host of ‘International Lusophone Festival’?

A. Maharashtra

B. Goa

C. Gujarat

D. Assam

Answer & Explanation

Answer: B. Goa

  • Ministry of External Affairs is organising the ‘International Lusophone Festival’ in partnership with the Indian Council of Cultural Relations and the Goa government. Lusophones are people that speak Portuguese as a native or as a common second language.  As part of the festival, workshops on Lusophone music, exhibitions of Goan architecture, Goan handicrafts and Goa furniture, Food and Spirits Festival are being organised.

6. ‘Pseudohelice annamalai’, which was recently discovered, belongs to which species?

A. Turtle

B. Spider

C. Crab

D. Butterfly

Answer & Explanation

Answer: C. Crab

  • Researchers have discovered a new species of estuarine crab at the mangroves near the Vellar River estuary in Tamil Nadu. The species has been named Pseudohelice annamalai in recognition of Annamalai University’s 100 years of service in education and research. This is the first ever record of this genus, Pseudohelice, collected from high intertidal areas. Pseudohelice annamalai is distinguished by dark purple to dark grey colouring.

7. What is the theme of the ‘World Usability Day’ 2022?

A. Our Health

B. Make things easier

C. Better Design

D. Inclusivity

Answer & Explanation

Answer: A. Our Health

  • Every year on the second Thursday of November, the world observes World Usability Day. It is also known as ‘Make Things Easier’ day. ‘Usability’ is a quality that evaluates how efficiently and effectively a person can use a product. The theme of World Usability Day 2022 is “Our Health”.

8. Which Indian sportsperson has been appointed as the ‘Friendship Ambassador’ by the Switzerland Tourism?

A. P V Sindhu

B. Neeraj Chopra

C. Mary Kom

D. Virat Kohli

Answer & Explanation

Answer: B. Neeraj Chopra

  • Switzerland Tourism has appointed Olympic Gold medalist Neeraj Chopra as the ‘Friendship Ambassador’. In his new role, the javelin thrower will showcase and promote the adventurous outdoors of Switzerland to Indian travellers.

9. Which state has been conferred the India Agribusiness Award–2022 in the category of “Best State”?

A. Karnataka

B. Odisha

C. Haryana

D. West Bengal

Answer & Explanation

Answer: C. Haryana

  • Haryana has been conferred with the India Agribusiness Award–2022 in the category of ‘Best State’ for its contribution in the areas of policies, programmes, production, inputs, technologies, marketing, value addition, infrastructure and exports in the agriculture sector. National Fisheries Development Board (NFDB), Hyderabad, under Ministry of Fisheries, has been awarded the ‘India Agribusiness Awards 2022’ for the best Agribusiness Award. The India International Agro Trade and Technology Fair 2022 was organised by the Indian Chamber of Food and Agriculture (ICFA).

10. What is the theme of ‘National Education Day 2022’?

A. Changing Course, Transforming Education

B. Education and Scientific Research

C. Shaping Country’s Education System

D. Culture and Education

Answer & Explanation

Answer: A. Changing Course, Transforming Education

  • The National Education Day is being celebrated on November 11 every year since 2008 to commemorate the birth anniversary of the first Education Minister Maulana Abul Kalam Azad. Azad played a significant role in shaping the country’s education system and contributed to set up several academic institutes UGC, AICTE and other bodies. This year the theme is ‘Changing Course, Transforming Education’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!