Tnpsc

31st August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

31st August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 31st August 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. நடப்பாண்டுக்கான (2021) காசநோய் தடுப்புக் கூட்டுக் குழுவின் தலைவராக பொறுப்பேற்ற நாடு எது?

அ) ஐக்கிய இராச்சியம்

ஆ) ஆஸ்திரேலியா

இ) இந்தியா 

ஈ) வங்காளதேசம்

  • மத்திய சுகாதாரம் & குடும்பநல அமைச்சர் மன்சுக் மாண்டவியா, காச நோய் தடுப்புக்கூட்டுக்குழுவின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். 2024ஆம் ஆண்டு வரை அமைச்சர் இந்தப்பொறுப்பை வகிப்பார்.
  • ஐநா’இன் காசநோய் இலக்கை 2022ஆம் ஆண்டிற்குள் அடையவும், 2030ஆம் ஆண்டிற்குள் காசநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் மைல்கல் தருணத்தை அடையவும், காசநோய் தடுப்புக்கூட்டுச்செயலகம், கூட்டாளிகள் மற்றும் காசநோய் சமூகத்தின் முயற்சிகளை அவர் முன்னெடுத்துச் செல்வார்.

2. “Accelerating India: 7 Years of Modi Government” என்ற நூலின் ஆசிரியர்/தொகுப்பாசிரியர் யார்?

அ) K J அல்போன்ஸ் 

ஆ) கும்மனம் இராஜசேகரன்

இ) A P அப்துல்லாகுட்டி

ஈ) A N இராதாகிருஷ்ணன்

  • முன்னாள் மத்திய அமைச்சர் K J அல்போன்ஸ், “இந்தியாவை முன்னேற்றுதல்: நரேந்திர மோடி அரசின் 7 ஆண்டுகள்” என்ற தமது நூலை பிரதமர் மோடியிடம் வழங்கினார்.
  • இந்திய நிர்வாகத்தின் 25 துறைகள் குறித்த இந்த நூலில், 28 புகழ்மிக்க எழுத்தாளர்களின் 25 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இது மோடி அரசின் சாதனைகளின் ஆவணமாகும்.

3. பெண்கள் தொழில்முனைவு தளம் என்பது கீழ்காணும் எந்த நிறுவனத்தின் முன்னெடுப்பாகும்?

அ) NITI ஆயோக் 

ஆ) ஐநா பெண்கள் அமைப்பு

இ) மகளிர் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

ஈ) NASSCOM

  • நாடு முழுவதும் உள்ள பெண்கள் தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் NITI ஆயோக்கும், CISCOஉம் மகளிர் தொழில் முனைவு தளத்தின் அடுத்த கட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
  • WEP Nxt எனப்பெயரிடப்பட்டுள்ள இத்தளம், சிஸ்கோவின் தொழினுட்பம் மற்றும் பணி அனுபவத்தால் நாடு முழுவதுமுள்ள பெண்களால் நடத்தப்ப -டும் வர்த்தகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவிகரமாக இருக்கும். இந்தத் தளம் NITI ஆயோக்மூலம் கடந்த 2018 மார்ச்.8 அன்று முறையாக தொடங்கப்பட்டது.

4. “Shared Destiny-2021” என்ற பாதுகாப்புப் பயிற்சியை நடத்த திட்டமிட்டுள்ள நாடு எது?

அ) சீனா 

ஆ) தாய்லாந்து

இ) பாகிஸ்தான்

ஈ) மங்கோலியா

  • சீனா, பாகிஸ்தான், மங்கோலியா மற்றும் தாய்லாந்தின் ராணுவத்தினர் “Shared Destiny-2021” பாதுகாப்புப் பயிற்சி என்ற பெயரில் பன்னாட்டு அமைதிகாக்கும் பயிற்சியில் பங்கேற்பதாகக் கூறப்படுகிறது. இப்பயிற்சி அடுத்த மாதம் சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தில் மக்கள் விடுதலை ராணுவத்தால் நடத்தப்படவுள்ளது. இந்த நான்கு நாடுகளும் பங்கேற்கும் முதல் பன்னாட்டு அமைதிகாக்கும் நேரடிப்பயிற்சி இது ஆகும். இந்தப் பாதுகாப்பு பயிற்சி சீனாவில் செப்.6-15 வரை நடைபெற உள்ளது.

5. ‘கொடுப்பனவு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதித்திட்டம்’ என்பது எந்த நிறுவனத்தின் முன்னெடுப்பாகும்?

அ) NPCI

ஆ) RBI 

இ) NASSCOM

ஈ) DSCI

  • ‘கொடுப்பனவு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதித்திட்டம்’ என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் முயற்சியாகும். இது `345 கோடி மதிப்பில் தொடங்கப் பட்ட திட்டமாகும். ஆண்டுதோறும் 30 லட்சம் புதிய டச் பாயிண்டுகளை அடுக்கு-3 முதல் அடுக்கு-6 வரையிலான மையங்களில் டிஜிட்டல் கொடுப்பனவுகளுக்காக உருவாக்க வேண்டும் என்பது இதன் நோக்கம் ஆகும். 1ஆவது மற்றும் 2ஆவது மையங்களில் PM SV நிதி திட்டத்தின் கீழ் உள்ள வீதியோர விற்பனையாளர்களுக்கு விற்பனை முனையங்களில் (POS) உட்கட்டமைப்பை விரிவுபடுத்தும் திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் விரிவுபடுத்தியுள்ளது.

6. அண்மையில் தென்சீனக்கடலில், எந்த நாட்டுடன் இணைந்து, இந்திய கடற்படை, பயிற்சியொன்றை நடத்தியது?

அ) பிலிப்பைன்ஸ் 

ஆ) மலேசியா

இ) தாய்லாந்து

ஈ) இந்தோனேசியா

  • இந்திய கடற்படை மற்றும் பிலிப்பைன்ஸ் கடற்படை இடையே, பிலிப்பைன்ஸ் கடல்பகுதியில், கடல்சார் கூட்டு பயிற்சி நடக்கிறது. இதில் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ரன்விஜய், ஐஎன்எஸ் கோரா ஆகிய 2 போர்க்கப்பல்கள் பங்கேற்கின்றன.
  • மேற்கு பசிபிக் கடல்பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்த 2 போர்க்கப்பல்களும், பிலிப்பைன்சு கடற்படையின் BRP ஆன்டனியோ லுனா என்ற போர்க்கப்பலுடன், மேற்கு பிலிப்பைன்ஸ் கடல்பகுதியில் கடல்சார் கூட்டு பயிற்சியில் ஈடுபடுகின்றன. இதன்மூலம் பிலிப்பைன்ஸ் கடற்படையுடன் இருதரப்பு உறவுகள் ஒருங்கிணைக்கப்படும்.

7. மாநிலத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் பூங்காக்களை மீட்டு உருவாக்கம் செய்வதற்காக `300 கோடி நிதி ஒதுக்கியுள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு 

ஆ) கேரளா

இ) மத்திய பிரதேசம்

ஈ) கர்நாடகா

  • தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் பூங்காக்கள் மீட்கப்பட்டு, `300 கோடி மதிப்பீட்டில் அதன் வசதிகள் மேம்படுத்தப்படும். மேலும், `100 கோடி செலவில் நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்பு திட்டத்தை அரசு செயல்படுத்தும்.
  • இந்தத் திட்டமானது நகர்ப்புற ஏழைகளை பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், மழைநீர் வடிகால்கள், சாலைகள், கட்டடங்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு புத்துயிர் அளித்தல்போன்ற பொதுச்சொத்துக்களை உருவாக்குதல் மற்றும் பராமரிப்பதில் ஈடுபடவைப்பதன்மூலம் வேலை வாய்ப்பை வழங்குகிறது. நகர்ப்புற நிர்வாக அமைச்சர் KN நேரு, “நமக்கு நாமே” திட்டத்திற்கு, `300 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளார். இத்திட்டத்தின்கீழ், பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகளிலும் நீர்நிலைகள் மீட்கப்பட்டு அங்கு புதிய பூங்காக்கள் அமைக்கப்படும்.

8. 2021 – பாதுகாப்பான நகரங்கள் குறியீட்டின்படி, அறுபது உலக நகரங்களுள், உலகின் பாதுகாப்பான நகரமாக தேர்வு செய்யப்பட்ட நகரம் எது?

அ) டோக்கியோ

ஆ) சிட்னி

இ) ஹாங்காங்

ஈ) கோபன்ஹேகன் 

  • டென்மார்க் நாட்டின் தலைநகரமான கோபன்ஹேகன், அறுபது உலக நகரங்களுள் உலகின் பாதுகாப்பான நகரமாக பெயரிடப்பட்டுள்ளது. கோபன்ஹேகன், நூற்றுக்கு 82.4 மதிப்பெண்களைப்பெற்றது. இந்த நகரம், நகர்ப்புற பாதுகாப்பை அளவிடும் EIU குறியீட்டின் நான்காவது பதிப்பில் முன்னிலை வகிக்கிறது. யங்கோன் 39.5 மதிப்பெண்ணுடன் குறியீட்டின் கடனிலையில் உள்ளது. புது தில்லி 56.1 மதிப்பெண்ணுடன் 48ஆவது இடத்திலும், மும்பை 54.4 மதிப்பெண்ணுடன் ஐம்பதாவது இடத்திலும் உள்ளது. இந்தக்குறியீடு முதன்முதலில் 2015ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 2021ஆம் ஆண்டில், நகரங்கள் டிஜிட்டல், சுகாதாரம், உட்கட்டமைப்பு, தனிப்பட்ட மற்றும் சுற்றுசூழல் உள்ளிட்ட 76 பாதுகாப்பு அம்சங்களின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டன.

9. “கார்பன் வெளியேற்றமற்ற போக்குவரத்துக்கான அமைப்பினை” கீழ்காணும் எந்த நிறுவனத்துடன் இணைந்து NITI ஆயோக் அறிமுகப்படுத்தியுள்ளது?

அ) சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியம்

ஆ) உலக பொருளாதார மன்றம்

இ) உலக வளங்கள் நிறுவனம் 

ஈ) பன்னாட்டு வளர்ச்சி மையம்

  • இந்தியாவில் கார்பன் வெளியேற்றம் இல்லாத போக்குவரத்துக்கான அமைப்பை நிதிஆயோக் மற்றும் உலக வளங்கள் இந்திய மையம் (WRI) ஆகியவை கூட்டாக இணைந்து தொடங்கியுள்ளன. ஆசியாவுக்கான NDC-போக்குவரத்து முயற்சித் திட்டத்தின் (NDC-TIA) ஒருபகுதியாக இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
  • ஆசியாவின் போக்குவரத்துத் துறையில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. NDC-TIA என்பது கார்பன் வெளியேற்றமில்லா போக்குவரத்துக்கான ஒருங்கிணைந்த விரிவான அணுகுமுறையை ஊக்குவிக்கும் கூட்டுத் திட்டமாகும். இதில் சீனா, இந்தியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் உள்ளன.

10. நக்சலியத்தை எதிர்த்து சுக்மா மாவட்டத்தில் உருவாக்கப்பட்டு உள்ள 32 பெண் ஊழியர்களைக்கொண்ட படைக்கு பெயர் என்ன?

அ) துர்கா ஃபைட்டர் 

ஆ) பத்ரா ஃபைட்டர்

இ) நாரி ஃபைட்டர்

ஈ) தேவி ஃபைட்டர்

  • நக்சல்களால் பாதிப்படைந்த சுக்மா மாவட்டத்தில் நக்சலிசத்தை எதிர்த்து 32 பெண் ஊழியர்கள் அடங்கிய ‘துர்கா ஃபைட்டர்’ என்ற பெயரிலான படை அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தப்படை உருவாக்கப்பட்டதன் பின்னணியில் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பத எண்ணம் உள்ளது. இந்தப் படைப்பிரிவில் உள்ளோர்க்கு ஒரு மாதகாலத்திற்கு கமாண்டோ பணிக்கான பயிற்சி அளிக்கப்படும். ஆஷா சென், இந்த ‘துர்கா ஃபைட்டரின்’ தலைவராக இருப்பார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பாராலிம்பிக்கில் இந்தியா பதக்க மழை: ஒரே நாளில் 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம்

டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஒரே நாளில் 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 5 பதக்கங்கள் கிடைத்தன. இதையடுத்து இந்த பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு இதுவரை கிடைத்த பதக்கங்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. 2016 ரியோ பாராலிம்பிக்கில் 4 பதக்கங்கள் கிடைத்ததே அதிகபட்சமாக இருந்த நிலையில், தற்போது இந்த பாராலிம்பிக்கில் இந்திய போட்டியாளர்கள் புதிய உச்சத்தை எட்டியுள்ளனர். இப்பதக்க எண்ணிக்கை இன்னும் உயர வாய்ப்புள்ளது.

துப்பாக்கி சுடுதல்: மகளிருக்கான துப்பாக்கி சுடுதலில் (ஆர்-2) 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டான்டிங் எஸ்ஹெச்1-இல் அவனி லெகாரா (19) தங்கம் வென்றார். பாராலிம்பிக்கில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். பாராலிம்பிக்கில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற 4ஆவது போட்டியாளார் அவனியாவார்.

அவர் வென்றதே பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கமாகும். அவருக்கு இது முதல் பாராலிம்பிக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

ஈட்டி எறிதல்: ஆடவர் ஈட்டி எறிதலில் ‘எப்64’ பிரிவில் சுமித் அன்டில் (23) உலக சாதனையை 3 முறை முறியடித்து தங்கம் வென்றார். மற்றொரு பிரிவான ‘எப்46’இல் தேவேந்திர ஜஜ்ஜரியா (40) வெள்ளியும், சுந்தர் சிங் குர்ஜர் (25) வெண்கலமும் வென்றனர். சுமித் அன்டில் தனது முதல் பாராலிம்பிக்கிலேயே தங்கம் வென்றுள்ளார். ஏற்கெனவே 2 முறை தங்கம் வென்ற ஜஜ்ஜரியாவுக்கு இந்த வெள்ளி இது 3ஆவது பதக்கம்.

ரியோ பாராலிம்பிக்கிலேயே களம்கண்ட சுந்தர் சிங், போட்டிக்காக ரிப்போர்டிங் செய்வதில் தாமதமானதால் அப்போது தகுதிநீக்கம் செய்யப்பட்டார். தற்போது வெண்கலம் வென்று அதை ஈடு செய்துள்ளார். இத்துடன் பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு 3 தங்கம் உள்பட 7 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

வட்டு எறிதல்: ஆடவர் வட்டு எறிதலில் ‘எப்56’ பிரிவில் யோகேஷ் கதுனியா (24) வெள்ளி வென்றார். பாராலிம்பிக்கிற்காக பயிற்சியாளரே இல்லாத நிலையில் ஓராண்டாகத் தயாராகி சளைக்காமல் பதக்கம் வென்றுள்ளார் யோகேஷ். 2019 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றதன்மூலம் டோக்கியோ பாராலிம்பிக்கிற்கு தகுதி பெற்றிருந்தார்.

2. வங்க எழுத்தாளர் புத்ததேவ் குஹா காலமானார்

புகழ்பெற்ற வங்கமொழி எழுத்தாளரான புத்ததேவ் குஹா (85) சமீபத்தில் காலமானார். ‘மதுகரி’, ‘ஜங்கல்மஹால்’, ‘சோரோய்பேடி’ உள்ளிட்ட பல சிறந்த வங்கமொழி நூல்களின் ஆசிரியராவார் அவர். இயற்கை மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்த புத்ததேவ் குஹா தனது படைப்புகளுக்காக ஆனந்த புரஸ்கார், சிரோமண் புரஸ்கார் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

3. குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 3 தங்கம் உள்பட 9 பதக்கம்

துபையில் நடைபெற்ற ஆசிய இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியா 3 தங்கம், 6 வெள்ளி என 9 பதக்கங்கள் வென்றது.

ஆடவருக்கான இறுதிச்சுற்றில் 51 கிலோ பிரிவில் விஷ்வாமித்ர சோங்தம் 4-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் குஸிபோயேவ் அஹ்மத்ஜோனை வென்றார். 80 கிலோ பிரிவில் விஷால் 5-0 என்ற கணக்கில் கிர்ஜிஸ்தானின் அக்மதோவ் சன்ஸாரை வீழ்த்தினார். மகளிருக்கான 54 கிலோ பிரிவில் நேஹா 3-2 என்ற கணக்கில் கஜகஸ்தானின் ஐஷாகுல் யலுபயேவாவை தோற்கடித்தார். எனினும், ஆடவர் பிரிவில் விஷ்வநாத் சுரேஷ் (48 கிலோ), வன்ஷாஜ் (63.5 கிலோ), ஜெய்தீப் ராவத் (71 கிலோ) ஆகியோரும், மகளிர் பிரிவில் நிவேதிதா (48 கிலோ), தமன்னா (50 கிலோ), சிம்ரன் (52 கிலோ) ஆகியோரும் இறுதிச்சுற்றில் தோல்விகண்டு வெள்ளி பெற்றனர்.

1. Which country took charge as the Chair of Stop TB Partnership Board in 2021?

A) UK

B) Australia

C) India 

D) Bangladesh

  • Union Minister for Health and Family Welfare Mansukh Mandaviya took over charge as the Chairperson of Stop TB Partnership Board. The Minister will hold the responsibility with immediate effect until 2024. He will lead the efforts of the Stop TB Partnership Secretariat, partners, and the TB community at large, towards reaching the UN TB targets by 2022, a milestone moment in the effort to end TB by 2030.

2. Who is the author/editor of the book titled ‘Accelerating India: 7 Years of Modi Government’?

A) K J Alphons 

B) Kummanam Rajasekharan

C) A P Abdullakutty

D) A N Radhakrishnan

  • Former Union Minister, K J Alphons has released a book titled ‘Accelerating India: 7 Years of Modi Government’. He has recently presented his book to the Prime Minister Narendra Modi.
  • 28 eminent authors have contributed 25 essays in the book on 25 sectors of Indian governance. This is a documentation of achievements of the Modi Government.

3. Women Entrepreneurship Platform is the initiative of which institution?

A) NITI Aayog 

B) UN Women

C) Women and Child Development Ministry

D) NASSCOM

  • The NITI Aayog and the US–based tech giant Cisco launched the next phase of the Women Entrepreneurship Platform.
  • The next phase has been titled ‘WEP Nxt’, and it will leverage Cisco’s technology and experience, to enable more women–owned businesses across the country. The platform was formally launched on 8 March 2018 by NITI Aayog.

4. “Shared Destiny–2021” Defence Exercise is scheduled to be held in which country?

A) China 

B) Thailand

C) Pakistan

D) Mongolia

  • The militaries of China, Pakistan, Mongolia and Thailand are said to take part in a multinational peacekeeping exercise named “Shared Destiny–2021” Defence Exercise. The Exercise is set to be organised by the People’s Liberation Army in China’s central Henan province next month.
  • The four countries will take part in the first multinational peacekeeping live exercise “Shared Destiny–2021”. The Defence exercise is to be held in China from September 6–15.

5. ‘Payments Infrastructure Development Fund’ scheme is the initiative of which institution?

A) NPCI

B) RBI 

C) NASSCOM

D) DSCI

  • ‘Payments Infrastructure Development Fund’ scheme is the initiative of the Reserve Bank of India (RBI). It was launched with a corpus of Rs 345 crore, with an aim to create 30 lakh new touch points every year for digital payments in tier–3 to tier–6 centres.
  • Reserve Bank has recently extended the scheme for encouraging deployment of Point of Sale (PoS) infrastructure to street vendors covered under the PM SVANidhi programme in tier 1 and 2 centres.

6. Recently, with which country India has conducted naval exercise in the South China Sea?

A) Philippines 

B) Malaysia

C) Thailand

D) Indonesia

  • Two ships of the Indian Navy, namely INS Ranvijay and INS Kora, on deployment to the Western Pacific, carried out a Maritime Partnership Exercise with BRP Antonio Luna of the Philippine Navy in the West Philippine Sea.
  • Both navies remain committed to further strengthening bilateral collaboration in the maritime domain towards a collective aim of ensuring a stable, peaceful and prosperous Indo–Pacific.

7. Which state has allocated Rs 300 crore for the restoration of Water bodies and parks in the state?

A) Tamil Nadu 

B) Kerala

C) Madhya Pradesh

D) Karnataka

  • Water bodies and parks in urban local bodies in Tamil Nadu will be restored and amenities upgraded at an estimated cost of Rs 300 crore. Also, the government would implement the urban wage employment programme to improve the livelihood of the urban poor at a cost of Rs 100 crore.
  • The scheme aims at providing employment to the urban poor by engaging them in the creation and maintenance of public assets like parks, play fields, storm water drains, roads, buildings and rejuvenation of water bodies. Municipal Administration Minister K.N. Nehru has announced an allocation of ₹300 crore for the Namakku Naame scheme. Under the scheme, water bodies will be restored in all Municipal Corporations, including the Greater Chennai Corporation, and new parks will be set up.

8. Which city has been named as the world’s safest city from among 60 global cities, in Safe Cities Index 2021?

A) Tokyo

B) Sydney

C) Hong Kong

D) Copenhagen 

  • Denmark’s capital city, Copenhagen, has been named as the world’s safest city from among 60 global cities, in Safe Cities Index 2021, released by the Economist Intelligence Unit (EIU). Copenhagen scored 82.4 out of 100. Yangon is at the bottom of the index with a score of 39.5. New Delhi is placed at 48th position with a score of 56.1, while Mumbai is at 50th place with a score of 54.4.
  • The Index was first released in the year 2015. In 2021, cities are ranked based on 76 indicators of security across five broad pillars, which are digital, health, infrastructure, personal and environmental.

9. With which organization, NITI Aayog jointly launched the ‘Forum for Decarbonizing Transport’ in India?

A) Environmental Defense Fund

B) World Economic Forum

C) World Resources Institute 

D) Centre for Global Development

  • NITI Aayog and World Resources Institute (WRI), India, jointly launched the ‘Forum for Decarbonizing Transport’ in India as part of the NDC–Transport Initiative for Asia (NDC–TIA) project. NITI Aayog is the implementing partner for India. The project aims at bringing down the peak level of GHG emissions (transport sector) in Asia.
  • The NDC Transport Initiative for Asia (TIA 2020–2023) is a joint programme of seven organizations that will engage China, India, and Vietnam in promoting a comprehensive approach to decarbonizing transport in their respective countries.

10. What is the name of the force comprising of 32 female staff that has been constituted to combat Naxalism in the Sukma district?

A) Durga Fighter 

B) Badra Fighter

C) Nari Fighter

D) Devi Fighter

  • A ‘Durga Fighter’ force comprising 32 female staff has been constituted to combat Naxalism in the Naxal–affected Sukma district. The idea behind an all–women force is to promote gender equality. They will be trained for commando duty for a month. Asha Sen will be the captain of Durga Fighter.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!