Tnpsc

31st October 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. ஆண்டுதோறும் உலக தகவல் வளர்ச்சி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. அக்டோபர் 21

ஆ. அக்டோபர் 22

இ. அக்டோபர் 24

ஈ. அக்டோபர் 25

  • ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர்.24 அன்று ஐக்கிய நாடுகள் அவையால் உலக தகவல் வளர்ச்சி நாள் கொண்டாடப்படுகிறது. இது தொடர்பான தீர்மானம், கடந்த 1972ஆம் ஆண்டில் ஐநா பொதுச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பன்னாட்டுச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்நாள் வலியுறுத்துகிறது. தகவல்களின் பரவலை மேம்படுத்துவதற்கும், பொதுக்கருத்தை அணிதிரட்டுவதற்கும் குறிப்பாக இளையோரிடையே வளர்ச்சியின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதற்கு இது ஆணையிடுகிறது.

2. நடப்பாண்டின் (2020) விழிப்புநிலை & ஊழல் எதிர்ப்பு தொடர்பான தேசிய மாநாட்டின் கருப்பொருள் என்ன?

அ. Healthy India, Powerful India

ஆ. Vigilant India, Prosperous India

இ. Nation towards Anti-corruption

ஈ. Corruption free India

  • “விழிப்புநிலை இந்தியா, செழிப்பான இந்தியா” என்ற தலைப்பில் அக்டோபர் 27 முதல் விழிப்புநிலை மற்றும் ஊழல் தடுப்பு தொடர்பான தேசிய மாநாடு நடைபெற்றது. காணொலிக்காட்சிமூலம் நடந்தேறிய இந்த மாநாட்டை இந்தியப்பிரதமர் தொடங்கிவைத்தார்.
  • மூன்று நாள் நடைபெற்ற இம்மாநாட்டை நடுவண் புலனாய்வுப்பிரிவு (CBI) ஏற்பாடு செய்திருந்தது. இது கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது.

3. ‘மோலேவ்’ என்ற சூறாவளியானது அண்மையில் எந்தக் கடற்புற நாட்டைத் தாக்கியது?

அ. இலங்கை

ஆ. தென்னாப்பிரிக்கா

இ. கியூபா

ஈ. பிலிப்பைன்ஸ்

  • அதிவேகமாக நகர்ந்துவரும், ‘மோலேவ்’ என்ற சூறாவளி பிலிப்பைன்ஸின் தெற்கு மாகாணங்களைத் தாக்கியுள்ளது. இதனால் அந்நாட்டின் கிராமங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
  • இச்சூறாவளி தென்சீனக்கடலை நோக்கி மணிக்கு 125 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. பள்ளிகள் மற்றும் அரசு கட்டிடங்களுக்கு சுமார் 25,000 மக்கள் இதன் காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர்.

4. நான்கு நாள் தளபதிகள் மாநாட்டை நடத்திய பாதுகாப்புப் படை எது?

அ. இந்தியக் கடற்படை

ஆ. இந்திய வான் படை

இ. இந்தியக் கடலோரக் காவல்படை

ஈ. இந்திய இராணுவம்

  • இந்திய ராணுவம், 2020 அக்.26-29 வரையிலான 4 நாட்களுக்கு தளபதிகள் மாநாட்டை நடத்தியது. இம்மாநாட்டின்போது, அனைத்து உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் மனிதவள பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இது, கொள்கை வகுத்தல் & தீர்மான நிறைவேற்றலுக்காக நடத்தப்படும் ஒரு நிகழ்வு ஆகும். இதன் தொடக்கவுரையை மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிகழ்த்தினார்.

5. No Mask, No Service” என்ற கொள்கையை அண்மையில் ஏற்றுக்கொண்ட நாடு எது?

அ. பாகிஸ்தான்

ஆ. சீனா

இ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஈ. வங்கதேசம்

  • COVID-19 கொள்ளைநோய் பரவலைக் கட்டுப்படுத்துதற்காக வங்கதேச அரசு, “முகமறைப்பு இல்லை, சேவை இல்லை” என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டது. இப்புதிய விதிமுறைப்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், சந்தைப்புறங்கள் மற்றும் பிற வழிபாட்டுத்தலங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். மேலும், முகக்கவசம் அணியாத யாதொருவருக்கும் பொது மற்றும் தனியார் அலுவலகங்கள் சேவை வழங்காது.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, சிந்து இணைவு மண்டலம் (ISZ) என்பது காணப்படுகிற மாநிலம் (அ) யூனியன் பிரதேசம் எது?

அ. அஸ்ஸாம்

ஆ. சிக்கிம்

இ. உத்தரகண்ட்

ஈ. லடாக்

  • டேராடூனில் உள்ள வாடியா இமாலய புவியியல் நிறுவனத்தைச் (WIHG) சார்ந்த அறிவியலாளர்கள் குழு அண்மையில் நடத்திய ஆய்வின்படி, லடாக் பிராந்தியத்தில் உள்ள சிந்து இணைவு மண்டலம் (Indus Suture Zone – ISZ) புவி ஒட்டுக்குரிய செயலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்திய மற்றும் ஆசிய தட்டுகள் இணைந்த இம்மண்டலம் இன்றுவரை பிணைந்த மண்டலமாக கருதப்படுகிறது.
  • WIHG என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின்கீழ் ஒரு தன்னாட்சி நிறுவனம். இந்த ஆய்வு அண்மையில், ‘டெக்னோபிசிக்ஸ்’ இதழில் வெளியிடப்பட்டது.

7. ‘மஞ்சள் தூசி’ என்ற மர்மமான மேகம் குறித்து தனது குடிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நாடு எது?

அ. பிலிப்பைன்ஸ்

ஆ. ஜப்பான்

இ. வட கொரியா

ஈ. இந்தியா

  • ‘மஞ்சள் தூசி – Yellow Dust’ என்ற மர்மமான கொண்டலுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்குமாறு வட கொரியாவின் அதிகாரிகள் அந்நாட்டு குடிகளை வலியுறுத்தியுள்ளனர். அந்நாட்டு அதிகாரிகளின் கூற்றுப்படி, சீனாவிலிருந்து வீசும் இந்த, ‘மஞ்சள் தூசி’ SARS CoV-2’ஐ கொண்டு வரக்கூடும். வட கொரிய நாட்டில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படும் இந்தத் தூசிப் புயலுடன் தொடர்புகொள்வதைத் தவிர்ப்பதற்காக அந்நாடு தனது குடிகளை வீட்டுக்குள்ளிருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

8. பன்னாட்டுப் பயணிகளுக்காக, எந்த வானூர்தி நிலையத்தில் முதன்முறையாக, ‘இ-போர்டிங் வசதி’ தொடங்கப்பட்டுள்ளது?

அ. மும்பை பன்னாட்டு வானூர்தி நிலையம்

ஆ. ஹைதராபாத் பன்னாட்டு வானூர்தி நிலையம்

இ. தில்லி பன்னாட்டு வானூர்தி நிலையம்

ஈ. கொச்சின் பன்னாட்டு வானூர்தி நிலையம்

  • ஹைதராபாத் பன்னாட்டு வானூர்தி நிலையமானது உள்நாட்டு பயணிகளுக்காக கூடுதலாக தொடுதலற்ற ‘இ-போர்டிங் வசதி’யை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவிலிருந்து பிறநாடுகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு தொடுதலற்ற ‘இ-போர்டிங் வசதி’யை அறிமுகப்படுத்திய நாட்டின் முதல் வானூர்தி நிலையமாக இது திகழ்கிறது. இது, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் முறையிலான தீர்வை இதற்கு பயன்படுத்துகிறது. இதைப்பயன்படுத்தி, பயணிகள், அனைத்து வரிசைகளையும் காத்திருக்கும் நேரத்தையும் தவிர்க்கலாம்.

9. எந்த நாட்டுடனான அடிப்படை பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (BECA) இந்தியா கையெழுத்திட்டுள்ளது?

அ. ரஷ்யா

ஆ. பிரான்ஸ்

இ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஈ. பிரேசில்

  • இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடைபெற்ற மூன்றாவது 2 + 2 பேச்சுவார்த்தைகளின் போது, அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் அல்லது BECA கையெழுத்தானது.
  • இந்த ஒப்பந்தம், இந்தியாவுக்கு வகைப்படுத்தப்பட்ட புவியிடம்சார் தரவு மற்றும் அமெரிக்காவிலிருந்து குறிப்பிடத்தக்க இராணுவ பயன்பாடுகளைக் கொண்ட முக்கியமான தகவல்களுக்கான அணுகலை வழங்குகிறது. இது ஒரு நீண்டகால பேச்சுவார்த்தைக்குப் பின்னான பாதுகாப்பு ஒப்பந்தமாகும்.

10. கப்பல் அமைச்சகமானது இந்தியாவின் எந்த முதன்மை துறைமுகத்தில், ‘நேரடி துறைமுக நுழைவு வசதி’யை (Direct Port Entry) தொடங்கியுள்ளது?

அ. வ உ சிதம்பரனார் துறைமுகம்

ஆ. கொச்சின் துறைமுகம்

இ. புதிய மங்களூரு துறைமுகம்

ஈ. பாரதீப் துறைமுகம்

  • தூத்துக்குடியிலுள்ள வ உ சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்கு கொள்கலன்களை நேரடியாக கொண்டு செல்லும், ‘நேரடி துறைமுக நுழைவு வசதி’யை (Direct Port Entry), மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. இது சரக்குகளின் போக்குவரத்தை விரைவுபடுத்துதல் மற்றும் சரக்கு போக்குவரத்து செலவைக் குறைத்தல் ஆகியவற்றுக்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக உள்ளது.
  • பன்னாட்டு வணிகத்தில் கப்பல் சரக்கு போக்குவரத்து தொழிலில் போட்டித்தன்மையை மேம்படுத்தவும் செயல்திறனை அதிகரிக்கவும், காலவிரையத்தைக் குறைக்கவும், குறைவான கட்டணச்செலவு ஆகிய -வற்றை இந்த வசதி தருவதுடன் ஏற்றுமதியாளர்கள் வணிகம் மேற்கொள்வதை எளிதாக்குவதை அதிகரிக்க இது உதவிகரமாக இருக்கும். நடுவண் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின், ‘கடல்சார் தொலைநோக்கு 2030’ கொள்கைக்கு இணங்க இது உள்ளது.

1. When is the World Development Information Day celebrated every year?

[A] October 21

[B] October 22

[C] October 24

[D] October 25

  • Every year, October 24 is celebrated as the World Development Information Day by the United Nations. The resolution in this regard was adopted by the UN General Assembly in 1972. The day lays stress on the need to strengthen international cooperation to solve international problems. It mandates to improve the dissemination of information and the mobilization of public opinion, particularly among young people to find solutions for problems of development.

2. What is the theme of this year’s National Conference on Vigilance and Anti–Corruption?

[A] Healthy India, Powerful India

[B] Vigilant India, Prosperous India

[C] Nation towards Anti–corruption

[D] Corruption free India

  • National Conference on Vigilance and Anti–Corruption would be held from October 27 on the theme “Vigilant India, Prosperous India”. The conference is to be inaugurated by the Prime Minister of India, through video conferencing. The three–day conference is organized by the Central Bureau of Investigation (CBI). This is a part of the Vigilance Awareness week.

3. The typhoon ‘Molave’ has hit which coastal country recently?

[A] Sri Lanka

[B] South Africa

[C] Cuba

[D] Philippines

  • A fast–moving cyclone named Molave has hit the southern provinces of the Philippines. It has resulted in heavy flood in rural villages of the country. The typhoon was blowing towards the South China Sea with sustained winds of 125 kilometres per hour. Nearly 25,000 villagers were displaced from the villages taking shelters in schools and Government buildings.

4. Which defence force would hold a four–day commanders’ conference in October 2020?

[A] Indian Navy

[B] Indian Air Force

[C] Indian Coastal Guard

[D] Indian Army

  • The Indian Army would hold a 4–day commanders’ conference from October 26th to 29th, 2020. During the conference, all strategic and human resource issues would be discussed. It is an ape biannual event that is held for policy formulation and decision making. The Union Defence Minister would deliver the inaugural address.

5. Which country has recently adopted the “No Mask, No Service” policy?

[A] Pakistan

[B] China

[C] USA

[D] Bangladesh

  • The Government of Bangladesh has adopted the “No Mask, No Service” policy in order to contain the spread of COVID–19 disease. As per the new regulation, wearing mask at all public and private institutions, market places and other places of worship is compulsory. Also, no public and private offices will serve anyone who is not wearing a mask.

6. The Indus Suture Zone (ISZ), which was seen in news recently, is found in which state/UT?

[A] Assam

[B] Sikkim

[C] Uttarakhand

[D] Ladakh

  • As per a recent study conducted by a group of scientists from Wadia Institute of Himalayan Geology (WIHG), Dehradun, the Indus Suture Zone (ISZ) in the Ladakh region, has been found to be tectonically active. The zone, where the Indian and Asian Plates are joined, has been till date considered as a locked zone. WIHG is an autonomous institute under the Department of Science and Technology. The study has been published recently in the journal ‘Technophysics’.

7. Which country has issued warning to its citizens about a mysterious cloud of ‘Yellow dust’?

[A] Philippines

[B] Japan

[C] North Korea

[D] India

  • The authorities of North Korea have urged the citizens to avoid contact with a mysterious cloud of ‘yellow dust’. As per the authorities, the yellow dust blowing in from China could bring SARS CoV–2 with it. The country has directed its citizens to remain indoor to avoid contact with the dust storm, which is expected to land in the country.

8. Which airport is the first to launch ‘e–boarding facility’ for international passengers?

[A] Mumbai International Airport

[B] Hyderabad International Airport

[C] Delhi International Airport

[D] Cochin International Airport

  • Hyderabad International Airport has introduced contactless e–boarding facilities for international flyers, in addition to domestic passengers. It has become the 1st airport in the country to introduce contactless e–boarding for passengers flying out of India. It uses an indigenously developed digital solution, using which passengers can avoid all queues & waiting time.

9. India signed Basic Exchange and Cooperation Agreement (BECA) with which country?

[A] Russia

[B] France

[C] United States of America

[D] Brazil

  • During the third edition of the 2+2 talks held between India and the United States, the Basic Exchange and Cooperation Agreement or BECA was signed. The agreement gives India access to classified geo–spatial data as well as critical information having significant military applications from the United States. This is a long–negotiated defence pact.

10. Shipping Ministry inaugurated ‘Direct Port Entry Facility’ at which major port?

[A] V O Chidambaranar Port

[B] Cochin Port

[C] New Mangalore Port

[D] Paradip Port

  • Union Minister of State for Shipping Mansukh Mandaviya inaugurated the ‘Direct Port Entry (DPE) facility’ of V.O. Chidambaranar Port Trust, Tamil Nadu. ‘Direct Port Entry (DPE)’ will help in increasing Ease of Doing Business for the exporters. The facility is expected to lower tariff cost and improve the competitiveness of shipper in the international trade. This will also align it on the lines of ‘Maritime Vision 2030’ of Ministry of Shipping.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!