TnpscTnpsc Current Affairs

31st October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

31st October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 31st October 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

31st October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. தனிநபர் பைங்குடில் வாயு வெளியேற்றத்தில் அதிக பங்களிப்பை வழங்கும் நாடு எது?

அ. சீனா

ஆ. அமெரிக்கா

இ. ரஷ்யா

ஈ. இந்தியா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. அமெரிக்கா

  • “Emissions Gap Report 2022: The Closing Window” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) வெளியிட்டது. இந்தியாவின் தனிநபர் பைங்குடில் வாயு வெளியேற்றம் 2.4 tCO2e (டன் கரியமிலவாயுவுக்குச் சமம்) ஆக உள்ளது. இது கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்த உலக சராசரியான 6.3 tCO2eஐ விட மிகக்குறைவாகும். அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்த வெளியேற்றம் அதிக அளவாக 14 tCO2e என்ற அளவில் உள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து ரஷ்யாவும் (13 tCO2e) சீனாவும் (9.7 tCO2e) உள்ளன.

2. ‘2022 அக்டோபருக்கான பண்டகச் சந்தைகள் கண்ணோட்ட அறிக்கையை’ வெளியிட்ட நிறுவனம் எது?

அ. பன்னாட்டு செலாவணி நிதியம்

ஆ. உலக வங்கி

இ. உலக பொருளாதார மன்றம்

ஈ. இந்திய ரிசர்வ் வங்கி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. உலக வங்கி

  • 2022 அக்டோபர் மாதத்திற்கான பண்டகச் சந்தைகள் கண்ணோட்ட அறிக்கையை உலக வங்கி அண்மையில் வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, அடுத்த ஈராண்டுகளில் உலகளவில் எரிசக்தி விலைகள் குறையும், ஆனால் இதுவரை இருந்துவரும் சராசரியைவிட அது அதிகமாக இருக்கும். எதிர்வரும் 2023ஆம் ஆண்டில் எரிசக்தி விலை 11 சதவீதமும், 2024இல் 12 சதவீதமும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

3. ‘கருடா VII’ என்பது இந்திய வான்படையும் கீழ்க்காணும் எந்த நாடும் இணைந்து நடத்தும் ஓர் இருதரப்புப் பயிற்சி ஆகும்?

அ. இலங்கை

ஆ. பிரான்ஸ்

இ. ஜப்பான்

ஈ. ஆஸ்திரேலியா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. பிரான்ஸ்

  • இந்திய வான்படை மற்றும் பிரெஞ்சு வான் மற்றும் விண்வெளிப்படை ஆகியவை ஜோத்பூரில் உள்ள விமானப்படை நிலையத்தில், ‘கருடா VII’ என்ற இருதரப்புப் பயிற்சியில் பங்கேற்கின்றன. இந்தப் பயிற்சியில், இந்தியா வான் படையானது Su–30 MKI, இரபேல், LCA தேஜாஸ் மற்றும் ஜாகுவார் போர் விமானங்கள் மற்றும் இலகுரக போர் உலங்கூர்தி மற்றும் Mi–17 உலங்கூர்திகளுடன் பங்கேற்கிறது. இது ‘கருடா’ என்னும் இந்த இருதரப்புப் பயிற்சியின் ஏழாவது பதிப்பாகும்.

4. 2022 – இந்திய விண்வெளி மாநாடு நடத்தப்படும் நகரம் எது?

அ. பெங்களூரு

ஆ. மும்பை

இ. புது தில்லி

ஈ. ஹைதராபாத்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. புது தில்லி

  • சாட்காம் தொழிற்துறை சங்கமானது (SIA இந்தியா) புது தில்லியில் மூன்று நாள் நடைபெறும் இந்திய விண்வெளி மாநாடு, 2022ஐ ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டின் கருப்பொருள், “Leveraging Space to Power Next–Gen Communication & Businesses” என்பதாகும். இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO), பாதுகாப்பு அமைச்சகம், NITI ஆயோக், இன்–ஸ்பேஸ், நியூ ஸ்பேஸ் இந்தியா லிட் (NSIL) மற்றும் தொலைத்தொடர்புத்துறை ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெற்ற இம்மாநாட்டில் 30 நாடுகளைச் சேர்ந்த பேச்சாளர்கள் பங்கேற்றனர்.

5. புலம்பெயர்வு மற்றும் போக்குவரவு தொடர்பான உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து தலைமை வகித்த நாடு எது?

அ. இந்தியா

ஆ. ஆஸ்திரேலியா

இ. பிரான்ஸ்

ஈ. சீனா

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. இந்தியா

  • பிரஸ்ஸல்ஸில் புலம்பெயர்வு மற்றும் போக்குவரவு தொடர்பாக நடைபெற்ற ஆறாவது உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து தலைமைதாங்கின. பாதுகாப்பான, சீரான மற்றும் வழமையான குடியேற்றத்தை மேம்படுத்துவது தொடர்பான சிக்கல்கள்குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பார்வையர்களாக அழைக்கப்பட்ட பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாடுகளின் தூதரகப்பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தமது தூதரக உறவுகளின் 60 ஆண்டுகளைக்கொண்டாடின.

6. IFSCAஆல் அமைக்கப்பட்ட, நிலையான நிதிகுறித்த நிபுணர்கள் குழுவின் தலைவர் யார்?

அ. அஜய் தியாகி

ஆ. விரல் ஆச்சார்யா

இ. உர்ஜித் படேல்

ஈ. CK மிஸ்ரா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. CK மிஸ்ரா

  • பன்னாட்டு நிதியியல் சேவை மையங்கள் ஆணையம் (IFSCA) ‘நிலையான நிதிகுறித்த நிபுணர்களின் குழு’வை அமைத்தது. இந்திய அரசின் முன்னாள் செயலரான இக்குழுவின் தலைவர் CK மிஸ்ரா அதன் இறுதி அறிக்கையை IFSCA தலைவரிடம் சமர்ப்பித்தார். தன்னார்வ கரிமச்சந்தையை உருவாக்குதல், மாறுதல் பிணைப்புகளுக்கான கட்டமைப்பு, இடர்நீக்கு வழிமுறைகளை செயல்படுத்துதல் மற்றும் பசுமை நிதியியல் தொழில்நுட்பத்திற்கான ஒழுங்குமுறைக் களத்தை மேம்படுத்தல் ஆகியவை அந்தக்குழுவின் சில முக்கியமான பரிந்துரைகளுள் அடங்கும். நிலையான கடன் வழங்குவதற்காக பிரத்யேக MSME தளத்தை அமைக்கவும் அக்குழு முன்மொழிகிறது.

7. 2022இல் இந்திய தேர்தல் ஆணையத்தின், ‘தேசிய முகமாக’ அறிவிக்கப்பட்ட நடிகர் யார்?

அ. பங்கஜ் திரிபாதி

ஆ. ‘ஜெயம்’ இரவி

இ. மனோஜ் பாஜ்பாய்

ஈ. ஹரிஷ் கல்யாண்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. பங்கஜ் திரிபாதி

  • இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின், ‘தேசிய முகமாக’ நடிகர் பங்கஜ் திரிபாதி அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான, ‘நியூட்டன்’ திரைப்படத்தில், அவர் தேசிய விருதை வென்றார். CRPF அதிகாரியாக அத்திரைப்படத்தில் நடித்த அவர் சத்தீஸ்கர் காடுகளில் தேர்தல்களை நடத்தும் பணியில் ஈடுபடும் வேடத்தில் நடித்தார்.

8. 2022 அக்டோபரில், பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணியின் ஐந்தாவது கூட்டத்தை நடத்திய நாடு எது?

அ. வங்காளதேசம்

ஆ. இந்தியா

இ. நேபாளம்

ஈ. தாய்லாந்து

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இந்தியா

  • பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணியின் ஐந்தாவது கூட்டம் 2022 அக்.17–20 வரை புது தில்லியில் இந்தியாவால் நடத்தப்பட்டது. நடுவண் எரிசக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் RK சிங், பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணியின் ஐந்தாவது கூட்டத்தை தொடங்கிவைத்தார். பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணியின் பேரவைத்தலைவர் பதவியை இந்தியா தற்போது கொண்டுள்ளது. இந்த ஐந்தாவது கூட்டம் மூன்று முக்கியமான பிரச்சினைகளில் பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணியின் முனைவுகள்பற்றி விவாதிக்கும்; அவை ஆற்றல் அணுகல், ஆற்றல் பாதுகாப்பு மற்றும் ஆற்றல் மாற்றம் ஆகும்.

9. 2022ஆம் ஆண்டிற்கான சாஸ்த்ரா இராமானுஜன் பரிசைப் பெற்றவர் யார்?

அ. K சிவன்

ஆ. சதீஷ் ரெட்டி

இ. யுங்கிங் டாங்

ஈ. டெஸ்ஸி தாமஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. யுங்கிங் டாங்

  • 2022ஆம் ஆண்டிற்கான சாஸ்த்ரா இராமானுஜன் பரிசு, அமெரிக்காவின் பெர்க்லியில் அமைந்துள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் உதவிப்பேராசிரியரான யுன்கிங் டாங்கிற்கு வழங்கப்படும். பரிசுக்குழுவின் கூற்றுப்படி, விருது பெற்றவரின் படைப்புகள் அதிநவீன நுட்பங்களின் குறிப்பிடத்தக்க கலவையைக் காட்டுகின்றன. $10,000 மதிப்பு மிக்க இவ்விருது சண்முகா கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதெமியால் (SASTRA) கடந்த 2005ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த விருது ஆண்டுதோறும் 32 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய கணிதத்துறையில் பங்களிக்கும் நபருக்கு வழங்கப்படுகிறது.

10. ‘SFURTI’ திட்டத்தைச் செயல்படுத்துகிற நடுவண் அமைச்சகம் எது?

அ. கலாச்சார அமைச்சகம்

ஆ. MSME அமைச்சகம்

இ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

ஈ. நிதியமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. MSME அமைச்சகம்

  • SFURTI (Scheme of Fund for Regeneration of Traditional Industries – பாரம்பரிய தொழில்களின் மீட்டுருவாக்கம் செய்வற்கான நிதித் திட்டம்) ஆனது நடுவண் MSME அமைச்சகத்தால் கடந்த 2005ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது நாடு முழுவதும் தொழிற்துறை தொகுதிகளின் மேம்பாட்டை வளர்த்தெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. காதி மற்றும் கிராமப்புறத்தொழில்கள் ஆணையமானது (KVIC) காதி மற்றும் கிராமப்புறத்தொழில்கள் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கான மைய முகமையாக உள்ளது. விடுதலை அமுதப்பெருவிழாவை நினைவுகூரும் வகையில், முதன்முறையாக, தில்லி ஹாட்டில் அண்மையில் ‘SFURTI விழா’ கொண்டாடப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 31-10-2022: தேசிய ஒற்றுமை நாள்.

2. உலகக் கோப்பை: ஸ்பெயின் சாம்பியன்

இந்தியாவில் நடைபெற்ற 17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி, நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. இறுதி ஆட்டத்தில் அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி, 2ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

நைஜீரியா 3ஆம் இடம்: இப்போட்டியில், 3ஆவது இடத்துக்காக நடைபெற்ற ஆட்டத்தில் நைஜீரியா ‘பெனால்டி ஷூட் ஔட்’ வாய்ப்பில் ஜெர்மனியை வீழ்த்தியது. முன்னதாக இரு அணிகளும் மோதிய ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிரா ஆக, வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில், நைஜீரியா 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

31st October 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which country is the highest contributor of per capita greenhouse gas emissions?

A. China

B. USA

C. Russia

D. India

Answer & Explanation

Answer: B. USA

  • The “Emissions Gap Report 2022: The Closing Window” was released by the United Nations Environment Programme (UNEP). India’s per capita greenhouse gas emissions were at 2.4 tCO2e (tonne carbon dioxide equivalent), which is far below the world average of 6.3 tCO2e in 2020. The US contributed the highest emissions of 14 tCO2e, followed by 13 tCO2e in Russia and 9.7 tCO2e in China.

2. Which institution released the ‘Commodity Markets Outlook report for October 2022’?

A. International Monetary Fund

B. World Bank

C. World Economic Forum

D. Reserve Bank of India

Answer & Explanation

Answer: B. World Bank

  • The World Bank has recently released the ‘Commodity Markets Outlook report for October 2022’. As per the report, Global energy prices will ease in the next couple of years but remain higher than the historic average. The report also noted that Energy prices are expected to fall by 11 per cent in 2023 and 12 per cent in 2024.

3. ‘Garuda VII’ is a bilateral exercise conducted by the Air Force of India and which country?

A. Sri Lanka

B. France

C. Japan

D. Australia

Answer & Explanation

Answer: B. France

  • Indian Air Force (IAF) and French Air and Space Force (FASF) are participating in a bilateral exercise, named ‘Garuda VIl’ at Air Force Station Jodhpur. In this exercise, the IAF is participating with Su–30 MKI, Rafale, LCA Tejas and Jaguar fighter aircraft, as well as the Light Combat Helicopter (LCH) and Mi–17 helicopters. This is the seventh edition of the bilateral exercise.

4. Which city is the host of the ‘India Space Congress – 2022’?

A. Bengaluru

B. Mumbai

C. New Delhi

D. Hyderabad

Answer & Explanation

Answer: C. New Delhi

  • The SatCom Industry Association (SIAIndia) has organised a three–day India Space Congress, ISC 2022, in New Delhi. The theme of ISC 2022 is ‘Leveraging Space to Power Next–Gen Communication & Businesses’.  Speakers from 30 countries participated in the event, which is supported by the Indian Space Research Organisation (ISRO), Ministry of Defence, Niti Aayog, In–Space, New Space India Ltd (NSIL) and the Department of Telecommunication.

5. Which country co–chaired the High–Level Dialogue on Migration and Mobility (HLDMM), with the European Union?

A. India

B. Australia

C. France

D. China

Answer & Explanation

Answer: A. India

  • India and the European Union co–chaired the 6th High–Level Dialogue on Migration and Mobility (HLDMM) in Brussels. Talks were held on issues related to the promotion of safe, orderly, and regular migration. The HLDMM was attended by representatives of the Diplomatic Missions of EU Member States in Brussels who were invited as Observers. India and EU celebrate 60 years of diplomatic ties.

6. Who is the head of the ‘Committee of Experts on Sustainable Finance’, set up by IFSCA?

A. Ajay Tyagi

B. Viral Acharya

C. Urjit Patel

D. CK Mishra

Answer & Explanation

Answer: D. CK Mishra

  • International Financial Services Centres Authority (IFSCA) constituted the ‘Committee of Experts on Sustainable Finance’. Headed by C.K. Mishra, Former Secretary to Government of India, submitted its final report to Chairperson, IFSCA. Some important recommendations include developing a voluntary carbon market, framework for transition bonds, enabling de–risking mechanisms and promoting regulatory sandbox for green Fintech. The committee also proposes to set up a dedicated MSME platform for sustainable lending.

7. Which Bollywood actor has been declared as the ‘National Icon’ of Election Commission of India (ECI) in 2022?

A. Pankaj Tripathi

B. ‘Jayam’ Ravi

C. Manoj Bajpayee

D. Harish Kalyan

Answer & Explanation

Answer: A. Pankaj Tripathi

  • Actor Pankaj Tripathi has been declared as the ‘National Icon’ of the Election Commission of India (ECI) for creating awareness amongst voters along with ECI. In the 2017 film Newton, for which he won the National Award, he played a role of CRPF officer, who was tasked with conducting elections in the jungles of Chhattisgarh, faced by conficts.

8. Which country is the host of the International Solar Alliance’s Fifth Assembly in October 2022?

A. Bangladesh

B. India

C. Nepal

D. Thailand

Answer & Explanation

Answer: B. India

  • International Solar Alliance’s Fifth Assembly is to be hosted by India in New Delhi on October 17–20, 2022. Union Minister for Power and New and Renewable Energy RK Singh unveiled the curtain raiser to the Fifth Assembly of ISA. India holds the office of the President of the ISA Assembly. The Fifth Assembly will deliberate on key initiatives of ISA on three critical issues: energy access, energy security, and energy transition.

9. Who is the recipient of the ‘SASTRA Ramanujan Prize for 2022’?

A. K Sivan

B. Satheesh Reddy

C. Yunqing Tang

D. Tessy Thomas

Answer & Explanation

Answer: C. Yunqing Tang

  • The SASTRA Ramanujan Prize for 2022 will be awarded to Yunqing Tang, Assistant Professor with the University of California, Berkeley, USA. As per the prize committee, the awardee’s works display a remarkable combination of sophisticated techniques. The USD 10,000 –award was instituted by the Shanmugha Arts, Science, and Technology & Research Academy (SASTRA) in 2005. It is presented annually to individuals aged 32 and below, who contribute in the field of mathematics, influenced by Srinivasa Ramanjuan.

10. Which Union Ministry implements the ‘SFURTI’ scheme?

A. Ministry of Culture

B. Ministry of MSME

C. Ministry of Commerce and Industry

D. Ministry of Finance

Answer & Explanation

Answer: B. Ministry of MSME

  • SFURTI (Scheme of Fund for Regeneration of Traditional Industries) was launched by the Union Ministry of MSME in the year 2005. It aims to promote Cluster development across the country. Khadi and Village Industries Commission (KVIC) is the nodal Agency for promotion of Cluster development for Khadi as well as for Village Industry products. The SFURTI Mela was recently celebrated in Dilli Haat, for the first time, commemorating Azadi Ka Amrit Mahotsav.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!