3rd & 4th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

3rd & 4th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 3rd & 4th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

3rd & 4th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. “உலக பொருளாதார கண்ணோட்ட” அறிக்கையை வெளியிடுகிற நிறுவனம் எது?

அ) உலக வங்கி

ஆ) ஆசிய வளர்ச்சி வங்கி

இ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

ஈ) ஐநா வளர்ச்சித் திட்டம்

 • “உலக பொருளாதார கண்ணோட்டம்” என்பது பன்னாட்டுச் செலவாணி நிதியத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஒரு முதன்மை அறிக்கை -யாகும். இந்த ஆண்டுக்கான (2021) அறிக்கை ஏப்.6ஆம் தேதி அன்று வெளியிடப்படவுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் படிப்படியாக மீளும் பாதையிலிருப்பதாக பன்னாட்டுச்செலவாணி நிதியம் அறிவித்துள்ளது.

2. பின்வரும் இந்தியாவின் எந்த முதன்மை அறிவியல் ஆலோசகரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது?

அ) B P கனுங்கோ

ஆ) K விஜய் ராகவன்

இ) N S விஸ்வநாதன்

ஈ) R காந்தி

 • K விஜயராகவனுக்கு இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரா -க ஓராண்டு பதவிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பணியாளர் அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின்படி, அமைச்சரவையின் நியமனக்குழு இப்பதவி நீட்டிப்புக்கு ஒப்புதல் அளித்தது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை தொடர்பான விஷயங்களில் பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு அவர் பாரபட்சமற்ற ஆலோசனைகளை வழங்குகிறார்.

3. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘எவர் கிவன்’ என்றால் என்ன?

அ) COVID தடுப்பூசி

ஆ) சரக்குக்கப்பல்

இ) சீர்வேக ஏவுகணை

ஈ) ஐ.நா. தீர்மானம்

 • எகிப்தின் சூயஸ் அருகேயுள்ள சூயஸ் கால்வாயில் சமீபத்தில், MV எவர் கிவன் என்ற ஒரு சரக்குக்கப்பல் சிக்கிய. இது கால்வாயின் குறுக்கே சிக்கிக்கொண்டதால், நீர்வழிப்பாதையை கடந்து செல்ல வேண்டிய 150’ க்கும் மேற்பட்ட கப்பல்கள் தடைபட்டன.
 • ‘எவர் கிவன்’ என்ற இக்கப்பல், ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் சரக்குகளை ஏற்றிச்சென்றது. சூயஸ் கால்வாய் என்பது ஒரு குறுகிய, மனிதனால் உருவாக்கப்பட்ட கால்வாயாகும். இது ஆப்பிரிக்க கண்டத்தை சினாய் தீபகற்பத்திலிருந்து பிரிக்கிறது.

4. மாநிலத்தின் மிகவுயர்ந்த கெளரவமான மகாராஷ்டிர பூஷண் விருதை வென்ற இந்திய புகழ்பெற்ற பாடகர் யார்?

அ) S P பாலசுப்பிரமணியம்

ஆ) ஆஷா போஸ்லே

இ) லதா மங்கேஷ்கர்

ஈ) முகேஷ் சந்த்

 • புகழ்பெற்ற பாடகி ஆஷா போஸ்லே 2020ஆம் ஆண்டிற்கான மகாராஷ் டிர பூஷண் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. இது, அம்மாநில அரசின் மிகவுயர்ந்த கெளரவமாகும். முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான குழு இந்த முடிவை எடுத்தது. அம்மாநிலத்தைச் சார்ந்த புகழ்பெற்ற நபர்களின் சிறப்பான சாதனைகளை அங்கீகரிப்பதற்காக இவ்விருது, கடந்த 1996ஆம் ஆண்டில் மகாராஷ்டிர மாநில அரசால் நிறுவப்பட்டது.

5. 2020ஆம் ஆண்டிற்கான EY தொழில்முனைவோராக தேர்ந்தெ -டுக்கப்பட்டவர் யார்?

அ) ஹரிஷ் மரிவாலா

ஆ) பிரதாப் சந்திர ரெட்டி

இ) பைஜு இரவீந்திரன்

ஈ) பேயூஷ் பன்சால்

 • நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான மேரிகோவின் தலைவர் ஹரிஷ் மரிவாலா, 2020ஆம் ஆண்டிற்கான EY தொழில்முனைவோராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அப்பலோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ் லிமிடெட் நிறுவனரும் நிர்வாகத்தலைவருமான பிரதாப் சந்திர ரெட்டிக்கு வாழ்நா -ள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. வணிக மாற்றத்திற்காக பைஜு இரவீந்திரனுக்கும், துளிர் நிறுவன பிரிவில் லென்ஸ்கார்ட்டின் பியூஷ் பன்சாலுக்கும் விருது வழங்கப்பட்டது.

6. ‘DIKSHA’ வலைத்தளத்துடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ) கல்வி அமைச்சகம்

ஆ) தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம்

இ) திறன் மேம்பாட்டு அமைச்சகம்

ஈ) வேளாண் அமைச்சகம்

 • CBSE பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உருவாக்கிய 100+ காமிக் நூல்களை மத்திய கல்வி அமைச்சர் இரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ வெளியிட்டார். NCERT பாடப்புத்தகங்களின் தலைப்புகளுடன் ஒத்திருக்கும் இந்த காமிக்ஸ் நூலை, ‘DIKSHA’ வலைத்தளத்திலோ அல்லது DIKSHA செயலி வழியாகவோ அணுகலாம்.
 • வாட்ஸ்அப் சாட்போட் மூலமாகவும் அவற்றை அணுகலாம். ‘DIKSHA’ ஒரு இணையவழி கற்றல் வலைத்தளமாகும்.

7. பின்வரும் எந்த அறிவியலாளரின் கண்டுபிடிப்பை நினைவுகூரும் வகையில், இந்தியாவில், ஆண்டுதோறும் தேசிய அறிவியல் நாள் அனுசரிக்கப்படுகிறது?

அ) சர் சி வி இராமன்

ஆ) சர் ஐசக் நியூட்டன்

இ) அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்

ஈ) லூயி பாஸ்டர்

 • ‘இராமன் விளைவு’ கண்டுபிடிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி.28ஆம் தேதி இந்தியாவில் தேசிய அறிவியல் நாள் அனுசரிக்கப்படுகிறது. அதே நாளில், CV ராமன் ‘இராமன் விளைவு’ கண்டுபிடிப்பை அறிவித்தார். அவருக்கு, கடந்த 1930’இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. “Future of Science and Technology and Innovation: Impact on Education Skills and Work” என்பது நடப்பாண்டு வரும் (2021) தேசிய அறிவியல் நாளுக்கான கருப்பொருளாகும்.

8. புவியிணக்க இடைச்சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட வேண்டிய இந்தியாவின் முதல் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளின் பெயர் என்ன?

அ) RISAT 11

ஆ) GISAT 1

இ) GSAT 7

ஈ) INSAT 11

 • GISAT-1 என்பது இந்தியாவின் முதல் புவி கண்காணிப்பு செயற்கைக் கோளாகும். இது புவியிணக்க இடைச்சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது. GSLV-F10 ஏவுகலத்தைப்பயன்படுத்தி GISAT-1 ஏவப்பட உள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) தெரிவித்துள்ளது. 2,268 கிலோ எடைகொண்ட இந்தச் செயற்கைக்கோள், இந்த ஆண்டு ஏப்.18 அன்று ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

9. சூயஸ் கால்வாயில் ஏற்பட்ட தடையைக் கையாள நான்கு அம்ச உத்தியை மேற்கொண்ட மத்திய அமைச்சகம் எது?

அ) பெட்ரோலிய அமைச்சகம்

ஆ) வணிகம் & தொழிற்துறை அமைச்சகம்

இ) கனரக தொழிற்சாலைகள் அமைச்சகம்

ஈ) வெளிவிவகார அமைச்சகம்

 • சூயஸ் கால்வாயில் ஏற்பட்ட தடையைக் கையாளுவதற்காக மத்திய வணிக அமைச்சகம் 4 அம்ச உத்தியை வகுத்தது. இது துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் பிற பங்குதார -ர்களுடனான ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தது. அரசாங்க மதிப்பீட்டின் படி, ஒரு வாரகாலத்திற்குள் அந்தத் தடை ஒழிக்கப்படும்.

10. சமீபத்தில், ‘ஷாஹீன் 1A’ என்ற அணுவாற்றல் திறன்கொண்ட ஏவுகணையை ஏவிய நாடு எது?

அ) பாகிஸ்தான்

ஆ) ஆப்கானிஸ்தான்

இ) ஐக்கிய அரபு அமீரகம்

ஈ) இஸ்ரேல்

 • பாகிஸ்தான், ஷாஹீன்-1A என்ற அணுசக்தி திறன்கொண்ட ஏவுகணை -யை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. அதிநவீன மேம்பட்ட வழிகாட்டுதல் அமைப்புடன் 900 கிமீட்டர் தூரம் வரை செல்லும் திறன் கொண்டதாகும் இந்த ஏவுகணை. கடந்த பிப்ரவரியில், 290 கிமீ தூரம் வரை செல்லும் திறன்கொண்ட முதல் எறிகணையை பாகிஸ்தான் வெ -ற்றிகரமாக சோதனை செய்தது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பொதுத் துறை நிறுவனங்கள் தேர்வு வாரியத்தின் தலைவராக மல்லிகா ஸ்ரீநிவாசன் நியமனம்

டாஃபே நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான மல்லிகா ஸ்ரீநிவாசன் பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வு வாரியத்தி -ன் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தனியார் துறையைச் சார்ந்த தொழிலதிபர் ஒருவர் பிஇஎஸ்பி வாரியத்தின் தலைவராக நியமனம் செய்யப்படுவது இதுவே முதல் முறை. இதுகுறித்து மத்திய பணியாளர் நல அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தனியார் துறையைச்சார்ந்த தொழிலதிபரான மல்லிகா ஸ்ரீநிவாசன் பிஇஎஸ்பி வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்துக்கு அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதலை வழங்கியுள்ளது. இவர் அப்பதவியில் மூன்றாண்டு காலத்துக்கு இருப்பார் என அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2. மார்ச் மாத GST வசூல் `1.23 லட்சம் கோடியாக உயர்வு

கடந்த மார்ச் மாதம் `1.23 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஆறாவது மாதமாக GST வசூல் `1 லட்சம் கோடியை கடந்துள்ளது. மேலும், GST வரிவிதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது முதல், 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் வசூலாகியிருப்பதே அதிகபட்ச தொகையாகும். இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த மார்ச் மாதம் வசூலான மொத்த GST `1,23,902 கோடி. இது கடந்த ஆண்டு இதே மார்ச் மாதத்தை ஒப்பிடுகையில் 27% அதிகமாகும்.

தொடர்ந்து ஐந்து மாதங்களாக GST வருவாய் உயர்ந்து வரும் நிலை மார்ச் மாதமும் நீடித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் வசூலான மொத்த GST `1,23,902 கோடி. இதில் மத்திய GST `22,973 கோடி; மாநில GST `29,329 கோடி; ஒருங்கிணைந்த GST `62,842 கோடி. `8,757 கோடி செஸ் வரி வசூலாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வசூலான GST, கடந்தாண்டு பிப்ரவரியில் வசூலான GSTஉடன் ஒப்பிடுகையில் 7% அதிகம். ஆனால், கடந்த மார்ச், 27 சதவீதம் அதிகமான GST வசூலாகியுள்ளது.

3. புவி ஆய்வுக்கான GISAT செயற்கைக்கோள்: ஏப்.18-ல் விண்ணில் செலுத்த ISRO முடிவு

தொழில்நுட்பக் கோளாறால் தள்ளிவைக்கப்பட்ட GISAT செயற்கைக் கோள், GSLV F10 ராக்கெட்மூலம் ஏப்.18ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. புவி கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிகளுக்காக GISAT-1 என்ற அதிநவீன ‘ஜியோ இமேஜிங்’ செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தயாரித்தது.

GSLV F10 ராக்கெட்

இந்தச் செயற்கைக்கோளை GSLV F10 ராக்கெட் மூலம் ஹரிகோட்டா -வில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த ஆண்டு மார்ச் 5ஆம் தேதி விண்ணில் செலுத்த ISRO திட்டமிட்டது. இந்நிலையில் திடீர் தொழில்நுட்பக் கோளாறால் GSLV ராக்கெட் ஏவுதல் தேதிகுறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, மார்ச் 28ஆம் தேதி விண்
-ணில் ஏவ ISRO திட்டமிட்டது. ஆனால், சில தொழில்நுட்ப பணிகள் இன்னும் முடிவடையாததால் ஏப்ரல்.18ஆம் தேதி விண்ணில்செலுத்த ISRO முடிவு செய்துள்ளது.

GISAT 2,268 கிலோ கிராம் எடைகொண்டது. இதன் ஆயுட்காலம் ஏழு ஆண்டுகள். இதிலுள்ள ஐந்து விதமான 3D கேமராக்கள் மற்றும் தொலைநோக்கி மூலம் புவிப்பரப்பை துல்லியமாக படம் எடுக்கவும், பார்க்கவும் முடியும். மேலும், வானிலை நிலவரங்களை தொடர்ந்து கண்காணித்து புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக் -கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளவும் உதவும்.

4. மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் அடையாள சின்னமாக தேர்வு:

தமிழகம் முழுவதும் வரும் 6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அனைத்து மாற்றுத் திறனாளிகளும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இந்த சூழலில், சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான வீல் சேரில் அமர்ந்து வாள் சண்டை போடும் விளையாட்டு வீரர் நூர்தீனை சென்னை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள சின்னமாக தேர்தல் ஆணையம் தேர்வு செய்துள்ளது. இவர், மாற்றுத் திறனாளிகள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளார்.

5. ராணுவத்தின் மேற்கு பிரிவு தளபதியாக மஞ்சிந்தர் சிங் பொறுப்பேற்பு

ராணுவத்தின் மேற்கு பிரிவு தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மஞ்சிந்தர் சிங், ஹரியாணா மாநிலம் சந்திமந்திரில் உள்ள தலைமயகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவிடமான வீர் சம்ரிதியில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மஞ்சிந்தர் சிங், பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் உள்ள சைனிக் பள்ளி மற்றும் உத்தராகண்டின் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி மையத்தில் (ஐஎம்ஏ) பயின்றவர் ஆவார். இவர் கடந்த 1986-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி, 19 மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் முதன் முதலாக பணியில் சேர்ந்தார். கடந்த 34 ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

நாட்டுக்காக ஆற்றிய சிறப்பான பணிக்காக, இவருக்கு யூத் சேவா மெடல் (2015) மற்றும் வஷிஸ்ட் சேவா மெடல் (2019) ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன.

1. Which institution releases the annual flagship report “World Economic Outlook”?

A) World Bank

B) Asian Development Bank

C) International Monetary Fund

D) United Nations Development Program

 • “World Economic Outlook” is the annual flagship report released by the International Monetary Fund. This year, the report is to be released on April 6. The International Monetary Fund has announced that India’s economy is on the path of gradual recovery.

2. Who is the Principal Scientific Advisor of India, whose term has been extended?

A) B P Kanungo

B) K Vijay Raghavan

C) N S Viswanathan

D) R Gandhi

 • K VijayRaghavan has been given a one–year extension as the principal scientific advisor to the Government of India. As per the order issued by the Personnel Ministry, the Appointments Committee of the Cabinet approved the extension as the PSA for a period of one year. He provides objective advice to the Prime minister and Cabinet on matters related to science, technology and innovation.

3. What is ‘Ever Given’, that was making news recently?

A) COVID Vaccine

B) Cargo Ship

C) Cruise missile

D) UN resolution

 • A skyscraper–sized cargo ship MV Ever Given recently stuck in the Suez Canal near Suez, Egypt. As it stuck across the canal, over 150 other vessels which were to pass the waterway were waiting for the obstruction to clear. Ever Given vehicle was carrying cargo between Asia and Europe. The Suez Canal is a narrow, man–made canal that divides continental Africa from the Sinai Peninsula.

4. Which Indian legendary singer won the Maharashtra Bhushan award, the state’s highest honour?

A) S P Balasubramaniam

B) Asha Bosle

C) Lata Mangeshkar

D) Mukesh Chand

 • The Maharashtra government announced that legendary singer Asha Bhosle has been selected for the Maharashtra Bhushan award for the year 2020, the State government’s highest honour. A committee chaired by Chief Minister Uddhav Thackeray made the decision. The award was instituted in 1996 by the State government to recognise outstanding achievements of eminent persons from the state.

5. Who has been selected as the EY Entrepreneur for 2020?

A) Harsh Mariwala

B) Prathap Chandra Reddy

C) Byju Raveendran

D) Peyush Bansal

 • Chairman of the fast–moving consumer goods firm Marico, Mr Harsh Mariwala has been selected as the EY Entrepreneur for 2020. Prathap Chandra Reddy, founder and executive chairman of Apollo Hospitals Enterprise Ltd. was given the lifetime achievement award. Byju Raveendran was awarded for business transformation, while Peyush Bansal of Lenskart was awarded in the start–up category.

6. ‘DIKSHA’ web portal is associated with which Union Ministry?

A) Ministry of Education

B) Ministry of Labour and Employment

C) Ministry of Skill Development

D) Ministry of Agriculture

 • Union Minister of Education Ramesh Pokhriyal ‘Nishank’ launched 100+ comic books created by teachers and students of CBSE schools. The comics, which are aligned with topics of NCERT textbooks, can be accessed online on DIKSHA web portal or via the DIKSHA app on any android Smartphone. They can also be accessed through a new WhatsApp powered Chatbot. DIKSHA is a online learning portal.

7. National Science Day is being observed in India, to commemorate the discovery of which scientist?

A) Sir C V Raman

B) Sir Isaac Newton

C) Alexander Graham Bell

D) Louis Pasteur

 • National Science Day is being observed in India every year on 28th of February to commemorate the discovery of the ‘Raman Effect’. On the same day, CV Raman announced the discovery of the ‘Raman Effect’ and he was awarded the Nobel Prize in 1930.
 • The theme for National Science Day 2021 is ‘Future of Science and Technology and Innovation: Impact on Education Skills and Work.

8. What is the name of India’s first earth observation satellite which is to be placed in a Geosynchronous Transfer Orbit?

A) RISAT 11

B) GISAT 1

C) GSAT 7

D) INSAT 11

 • GISAT–1 is India’s first agile earth observation satellite that will be placed in a Geosynchronous Transfer Orbit. The Indian Space Research Organisation has revised the launch schedule of the geo imaging satellite GISAT–1 on board GSLV–F10 launch vehicle. The 2,268 kg satellite is expected to be launched on April 18, this year.

9. Which Union Ministry has chalked out a four–point strategy to handle the blockage at Suez Canal?

A) Ministry of Petroleum

B) Ministry of Commerce and Industry

C) Ministry of Heavy Industries

D) Ministry of External Affairs

 • The Union Commerce Ministry laid down a four–point strategy to handle the situation of total blockage at the Suez Canal. It organised a meeting with the Ministry of ports, shipping and waterways and other stake holders. As per the government’s assessment, total backlog at the waterway will likely be cleared in a week’s time.

10. ‘Shaheen 1–A’ is the nuclear capable ballistic missile, recently launched by which country?

A) Pakistan

B) Afghanistan

C) UAE

D) Israel

 • Pakistan has successfully test–fired a nuclear–capable surface–to–surface ballistic missile named Shaheen–1A. The missile has a range of 900 kilometres with sophisticated and advanced guidance system. In February, Pakistan successfully tests–fired a nuclear–capable surface–to–surface ballistic missile which can strike targets up to 290 km.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *