TnpscTnpsc Current Affairs

3rd August 2022 Tnpsc Current Affairs in Tamil & English

3rd August 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 3rd August 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

3rd August 2022 Tnpsc Current Affairs in Tamil

1. சமீப செய்திகளில் இடம்பெற்ற ராக்கிகர்கி என்பது எந்த மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு பழைமையான தலமாகும்?

அ. ஹரியானா 

ஆ. குஜராத்

இ. ஒடிஸா

ஈ. பஞ்சாப்

  • ஹரியானாவின் இராக்கிகர்கியில் அமைந்துள்ள பழங்கால மேடுகள் உட்பட இருபது பாரம்பரிய தலங்கள், ‘தேசிய முக்கியத்துவம்’ வாய்ந்தவையாக அடையாளங்காணப்பட்டுள்ளன. தில்லியில் உள்ள அனங்டல், ஆந்திர பிரதேச மாநிலத்தின் சிந்தகுந்தாவில் உள்ள பாறை ஓவியம்; லேவில் உள்ள பாறை ஓவிய தளம்; இமாச்சல பிரதேச மாநிலம் காலேஷ்வரம் மகாதேவர் கோவில் உள்ளிட்டவை இவ்வாறு அடையாளங்காணப்பட்ட பிற இடங்களாகும்.

2. பேரழிவை உண்டாக்கும் ஆயுதம் மற்றும் அவற்றின் விநியோக அமைப்பு (திருத்த) மசோதா – 2022 உடன் தொடர்புடைய அமைச்சகம் எது?

அ. உள்துறை அமைச்சகம்

ஆ. பாதுகாப்பு அமைச்சகம்

இ. வெளியுறவு அமைச்சகம் 

ஈ. கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் & நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம்

  • பேரழிவை உண்டாக்கும் ஆயுதம் மற்றும் அவற்றின் விநியோக முறைமைகள் (சட்டவிரோத நடவடிக்கைகள் தடை) திருத்த மசோதா – 2022’ஐ நாடாளுமன்றம் சமீபத்தில் நிறைவேற்றியது. வெளியுறவு அமைச்சகம் அம்மசோதாவை அறிமுகப்படுத்தியது. இது 2005ஆம் ஆண்டு சட்டத்தை திருத்த விழைகிறது. மேலும், பேரழிவு ஆயுதங்கள் மற்றும் அவற்றின் விநியோகம் தொடர்பான எந்தவொரு தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளுக்கும் நிதியுதவி செய்வதில் இருந்து மனிதர்களை அது தடுக்கிறது.

3. 2022 – காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவிற்காக தங்கப்பதக்கம் வென்ற அச்சிந்தா ஷூலியுடன் சார்ந்த விளையாட்டு எது?

அ. பளு தூக்குதல் 

ஆ. குத்துச்சண்டை

இ. டேபிள் டென்னிஸ்

ஈ. மட்டைப்பந்து

  • இருபது வயதான அச்சிந்தா ஷூலி 2022 – காமன்வெல்த் விளையாட்டில் 73 கிலோகிராம் எடை தூக்கும் பிரிவில் இந்தியாவுக்காக தங்கப்பதக்கத்தை வென்றார். அவர் 313 கிலோகிராம் (ஸ்னாட்ச்சில் 143 கிலோ மற்றும் கிளீன் & ஜெர்க்கில் 170 கிலோ) கூட்டு முயற்சியில் முதலிடத்தைப் பெற்றார். முன்னதாக மீராபாய் சானு மற்றும் ஜெர்மி லால்ரினுங்கா ஆகியோர் தங்கப்பதக்கங்களையும், விந்தியாராணி தேவி மற்றும் சங்கேத் சர்கார் ஆகியோர் வெள்ளிப்பதக்கங்களையும் வென்றுள்ளனர்.

4. ‘இசுலாமிய பெண்கள் உரிமை நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜூலை.31

ஆ. ஆகஸ்ட்.1 

இ. ஆகஸ்ட்.3

ஈ. ஆகஸ்ட்.5

  • ‘முத்தலாக்’ விதிக்கு எதிரான சட்டத்தை அமல்படுத்தியதைக் கொண்டாடும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் முதல் தேதி, ‘இசுலாமிய பெண்கள் உரிமை நாள்’ கடைப்பிடிக்கப்படுகிறது. தலாக்–இ–பித்தாத் எனப்படும் முத்தலாக் சட்டவிரோதமானது ஆகும். இந்திய சட்டப்படி குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

5. மாணவர்களின் கற்றல் விளைவை மேம்படுத்துவதற்காக NITI ஆயோக் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாநிலம் எது?

அ. உத்தரகாண்ட்

ஆ. அருணாச்சல பிரதேசம் 

இ. அஸ்ஸாம்

ஈ. மேற்கு வங்காளம்

  • அருணாச்சல பிரதேச மாநில அரசு, மாநிலத்தில் உள்ள 3,000–க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் விளைவை மேம்படுத்துவது தொடர்பாக NITI ஆயோக்குடனான ஒரு முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மூன்று ஆண்டு கூட்டாண்மையையும் (2022 – 25) இரண்டு இலட்சம் குழந்தைகளைச் சென்றடைவதையும் நோக்கமாகக் கொண்டது. பள்ளிக் கல்வி உருமாற்றத் திட்டமானது மாநிலங்களுக்கான NITI ஆயோக்கின் மேம்பாட்டு ஆதரவு சேவைகள் முனைவின் கீழ் உள்ளது.

6. BCCI நெறிமுறைகள் அதிகாரி மற்றும் குறைகேள் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. இரஞ்சன் கோகோய்

ஆ. வினீத் சரண் 

இ. A K சிக்ரி

ஈ. V K சிங்

  • உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வினீத் சரண், BCCIஇன் நெறிமுறைகள் அதிகாரியாகவும், குறைதீர்ப்பாளராகவும் ஓராண்டாக காலியாக இருந்த இவ்விரட்டைப் பணியிடங்களை நிரப்பியுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவடைந்த ஓய்வுற்ற நீதியரசர் D K ஜைன் அவர்களைத் தொடர்ந்த வினீத் சரண் இந்தப் பதவிக்கு வந்துள்ளார். ஒடிஸா மாநில உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதியரசரான இவர், கர்நாடகா மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதியரசராகப் பணியாற்றியுள்ளார்.

7. அண்மையில் திருகுமான் குறித்த தனது முதல் கணக்கெடுப்பை நடத்திய இந்திய மாநிலம் எது?

அ. கேரளா

ஆ. கர்நாடகா

இ. ஆந்திர பிரதேசம் 

ஈ. கோவா

  • ஆந்திர பிரதேச மாநில வனவிலங்குத் துறை, தௌலேசுவரம் மற்றும் யானம் இடையேயான கோதாவரியில் உள்ள தீவுகளில் முதன்முறையாக திருகுமான்களைக் கணக்கெடுக்கும் பணியைத் தொடங்கியுள்ளது. அழிந்துவரும் அவ்வுயிரினங்களைக் காக்க ஒரு பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்குவது இந்தக் கணக்கெடுப்பின் நோக்கமாகும்.

8. முழு நில உரிமைகொண்ட முதன்மை துறைமுகமாக மாறிய இந்தியாவின் முதல் துறைமுகம் எது?

அ. ஜவஹர்லால் நேரு துறைமுகம், மகாராஷ்டிரா 

ஆ. கொச்சி துறைமுகம், கேரளா

இ. மர்மகோவா துறைமுகம், கோவா

ஈ. காண்ட்லா துறைமுகம், குஜராத்

  • மகாராஷ்டிர மாநிலத்தின் ஜவகர்லால் நேரு துறைமுகம் இந்தியாவின் முதல் 100 சதவீத நில உரிமைகொண்ட முதன்மை துறைமுகமாக மாறியுள்ளது. அதன் அனைத்து கப்பல்களும் PPP மாதிரியில் இயக்கப்படுகின்றன. JNP, நாட்டின் முன்னணி கொள்கலன் துறைமுகங்களுள் ஒன்றாகும். மேலும் சிறந்த 100 சர்வதேச துறைமுகங்களில் அது 26ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

9. 2022 – ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?

அ. 82

ஆ. 85

இ. 87 

ஈ. 84

  • 2022 – ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில், 57 நாடுகளுக்கு எளிதாக அணுகும் வகையில் இந்திய கடவுச்சீட்டு 87ஆவது இடத்தில் உள்ளது. ஜப்பான் 193 நாடுகளுக்கு எளிதாக அணுகும் வகையில் முதல் இடத்தில் உள்ளது. சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா 192 நாடுகளுக்கான எளிதான அணுகலுடன் உலகின் அடுத்த ஆற்றல்வாய்ந்த கடவுச்சீட்டுகளைக் கொண்டுள்ளன. 2020ஆம் ஆண்டில் இந்திய கடவுச்சீட்டு வெறும் 23 இடங்களுக்கு மட்டுமே எளிதாக அணுகும் வகையில் இருந்தது.

10. சீர்மிகு நகரங்கள் – Smart City Mission திட்டத்தின்கீழ் நிதியைப் பயன்படுத்துவதில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?

அ. தமிழ்நாடு 

ஆ. கர்நாடகா

இ. மகாராஷ்டிரா

ஈ. குஜராத்

  • அரசின் சமீபத்திய தரவுகளின்படி, சீர்மிகு நகரங்கள் திட்டத்தின்கீழ் நிதியைப் பயன்படுத்திய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. நடுவணரசால் வெளியிடப்பட்ட `4333 கோடியில் தமிழ்நாடு `3932 கோடிக்கு மேல் செலவழித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் `3142 கோடியில் `2699 கோடியைப் பயன்படுத்தி இரண்டாம் இடத்தில் உள்ளது. சீர்மிகு நகரங்கள் திட்டமானது கடந்த 2015 ஜூன்.25 அன்று தொடங்கப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தூய்மைக்கடல், பாதுகாப்பான கடல் இயக்கம். சென்னை மெரினா உட்பட 75 கடற்கரைகள் தூய்மைப்படுத்தப்பட உள்ளன

தூய்மைக்கடல், பாதுகாப்பான கடல் இயக்கம் என்பது கடற்கரைப் பகுதியை தூய்மையாக்கும் பணியில் குடிமக்கள் 75 நாட்கள் பங்கேற்கும் இயக்கமாகும். இந்த இயக்கம் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி தொடங்கியது.

நாடு முழுவதும் 75 கடற்கரைகளில் ஒவ்வொரு கிலோமீட்டர் பகுதியிலும் 75 தன்னார்வலர்கள் இந்தத் தூய்மைப் பணிகளில் ஈடுபடுகின்றனர். இந்த இயக்கப்பணிகள் சர்வதேச கடலோரத் தூய்மை நாளான வரும் செப்.17ஆம் தேதி நிறைவடையும்.  அப்போது இந்தியாவிலேயே 75 கடற்கரையில் 7,500 கிமீட்டருக்கும் மேற்பட்ட கடற்கரை பகுதிகளை தூய்மைப்படுத்திய மிகப்பெரிய சாதனையாக இது அமையும். இதற்காக சுமார் `10 கோடி செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 75 கடற்கரைகளில் தமிழ்நாட்டில் உள்ள 8 கடற்கரைகளும் இதில் அடங்கும். தமிழ்நாட்டில், சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், இராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் ஆரியமான், பிறப்பன்வலசை, தூத்துக்குடியில் வஉசி, முத்துநகர், முல்லக்காடு, புதுச்சேரியில் காந்தி கடற்கரை ஆகிய கடற்கரைகள் தூய்மைப்படுத்தப்படுகின்றன.

3rd August 2022 Tnpsc Current Affairs in English

1. Rakhigarhi, which was seen in the news recently, is an ancient site located in which state?

A. Haryana 

B. Gujarat

C. Odisha

D. Punjab

  • Twenty heritage sites, including ancient mounds at Haryana’s Rakhigarhi have been identified for the ‘National importance’ tag. The other sites include Anangtal in Delhi,rock painting at Chintakunta, Andhra Pradesh; rock art site Murgi at Rdanag, Leh; Kaleshwar Mahadev Temple, Himachal Pradesh among others.

2. Which Ministry is associated with the Weapon of Mass Destruction and their Delivery Systems Amendment Bill 2022?

A. Ministry of Home Affairs

B. Ministry of Defence

C. Ministry of External Affairs 

D. Ministry of Shipping, Ports and Waterways

  • The Parliament has recently passed the Weapon of Mass Destruction and their Delivery Systems (Prohibition of Unlawful Activities) Amendment Bill 2022. Ministry of External Affairs introduced the bill. It seeks to amend the 2005 Act and to stop persons from financing any prohibited activity related to weapons of mass destruction and their delivery.

3. Achinta Sheuli, who clinched gold medal for India in the Commonwealth Games 2022, is associated with which sport?

A. Weight lifting 

B. Boxing

C. Table Tennis

D. Cricket

  • 20–year–old Achinta Sheuli clinched gold medal for India in the Commonwealth Games 2022 in 73–kg category of Weight lifting. He won the first place with a combined effort of 313 Kilograms (143kg in snatch and 170kg in clean & jerk). Mirabai Chanu and Jeremy Lalrinunnga have earlier claimed gold medals while Bindyarani Devi and Sanketh Sargar picked up silver medals.

4. When is the ‘Muslim Women’s Rights Day’ observed?

A. July.31

B. August.1 

C. August.3

D. August.5

  • ‘Muslim Women’s Rights Day’ is observed every year on the first of August to celebrate the enforcement of law against the ‘Triple Talaq’ rule. The Triple Talaq, also known as Talaq–e–Biddat was made illegal and as per the law the offenders will be jailed up to 3 years and also have to pay fine.

5. Which state signed an MoU with NITI Aayog for enhancement of the learning outcome of students?

A. Uttarakhand

B. Arunachal Pradesh 

C. Assam

D. West Bengal

  • The Arunachal Pradesh government inked a tripartite Memorandum of Understanding (MoU) with NITI Aayog on the enhancement of the learning outcome of students across 3,000 plus government schools in the state. The MoU is a three–year partnership (2022 – 25) focusing over two lakh children. The school education transformation project is under NITI Aayog’s Development Support Services for States (DSSS) initiative.

6. Who has been appointed as the BCCI ethics officer and Ombudsman?

A. Ranjan Gogoi

B. Vineet Saran 

C. A K Sikri

D. V K Singh

  • Former Supreme Court judge Vineet Saran has taken over as the BCCI’s ethics officer and ombudsman, filling the dual posts which were lying vacant for a year. Vineet Saran has succeeded Justice (Retd) D K Jain, whose term ended in June last year. He is a former Chief Justice of Odisha High Court, and also served as a judge in Karnataka and Allahabad High Court.

7. Which Indian state recently conducted its first–ever survey of blackbucks?

A. Kerala

B. Karnataka

C. Andhra Pradesh 

D. Goa

  • The Andhra Pradesh State Wildlife Department has commenced the first–ever survey of blackbucks along a stretch of islands in the Godavari between Dowleswaram and Yanam. The survey aims of drawing up a conservation plan to protect the endangered species.

8. Which is the first port in India to become a full Landlord Major Port of India?

A. Jawaharlal Nehru Port, Maharashtra 

B. Cochi Port, Kerala

C. Mormugao Port, Goa

D. Kandla Port, Gujarat

  • Maharashtra’s Jawaharlal Nehru Port has become the first 100 per cent Landlord Major Port of India with all berths being operated on PPP model. JNP is one of the leading container ports of the country and is ranked 26th among the top 100 global ports.

9. What is the rank of India in the 2022 edition of Henley Passport Index?

A. 82

B. 85

C. 87 

D. 84

  • In the 2022 edition of Henley Passport Index, Indian passport is ranked at 87 as it provides easy access to 57 countries. Japan is at the first place of the index with hassle–free entry to 193 countries. Singapore and South Korea have the next powerful passports in the world with access to 192 countries. Indian passports had access to just 23 destinations in 2020.

10. Which state topped the utilisation of funds under Smart City Mission?

A. Tamil Nadu 

B. Karnataka

C. Maharashtra

D. Gujarat

  • As per a recent government data, Tamil Nadu tops the list of states so far as utilisation of funds under Smart City Mission. Tamil Nadu has spent over Rs 3932 crore out of the Rs 4333 crore released by the Centre, Uttar Pradesh is at second position with utilisation of Rs 2699 cr out of the release of Rs 3142 crore. The Smart Cities Mission (SCM) was launched on 25 June, 2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!