3rd February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

3rd February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 3rd February 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

3rd February 2021 Tnpsc Current Affairs in Tamil

1. ‘எல்லைதாண்டிய போக்குவரத்து இயக்கத்தை மீட்டமைத்தல்’ குறித்த நிகழ்வை நடத்திய பன்னாட்டு அமைப்பு எது?

அ) ஐக்கிய நாடுகள்

ஆ) உலக பொருளாதார மன்றம்

இ) உலக வங்கி

ஈ) உலக வர்த்தக அமைப்பு

 • ‘எல்லைதாண்டிய போக்குவரத்து இயக்கத்தை மீட்டமைத்தல்’ குறித்த நிகழ்வில், மத்திய சுகாதார & குடும்ப நலத்துறை அமைச்சர் காணொலிக் காட்சிமூலம் உரையாற்றினார். உலக பொருளாதார மன்றத்தின் பொது அறக்கட்டளை நெட்வொர்க்கால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
 • எல்லைகளை மீண்டும் திறக்க தேவையான கொள்கைகள் மற்றும் கூட்டாண்மைகளைப்பற்றி விவாதிக்க மற்றும் அத்தியாவசிய பயணம், சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை பாதுகாப்பான மற்றும் நிலையான முறையில் செயல்படுத்த இந்த நிகழ்வு உதவுகிறது.

2. புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் நாளை அனுசரிக்க, ஜன.30 அன்று, எந்த இந்திய நினைவுச்சின்னம் ஒளியூட்டப்பட்டது?

அ) இந்தியாவின் நுழைவுவாயில்

ஆ) குதுப் மினார்

இ) தாஜ் மஹால்

ஈ) பொற்கோயில்

 • புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களை எதிர்கொள்வதற்கான உலகளாவிய ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக 2021 ஜன.30 அன்று பன்னாட்டு புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் நாள் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய நாள், உலகெங்கும் உள்ள 50 முக்கிய சின்னங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்படும். இதன் வரிசையில், இந்தியாவில் உள்ள முக்கிய சின்னங்களுள் ஒன்றான குதுப்மினார் 2021 ஜன.30 அன்று மின்னொளியில் ஜொலித்தது.

3. அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற ‘அம்ருத் மகோத்ஸவ்’ என்பது பின்வரும் எந்த நிகழ்வின் கொண்டாட்டமாகும்?

அ) நேதாஜியின் 125ஆவது பிறந்த நாள்

ஆ) இந்தியா விடுதலை பெற்ற 75ஆவது ஆண்டு

இ) 1971 போரின் 50ஆம் கொண்டாட்டம்

ஈ) கார்கில் போரின் 50ஆம் ஆண்டு கொண்டாட்டம்

 • நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி இராம்நாத் கோவிந்தின் உரையுடன் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் அமர்வு சமீபத்தில் தொடங்கியது. அப்போது, இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விழாக்களின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், இந்த ஆண்டு முதல் நாட்டில் ‘அம்ருத் மகோத்ஸவ்’ அனுசரிக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

4. இந்தியா தனது ‘Act East’ கொள்கையின்கீழ், கீழ்க்காணும் எந்த நாட்டோடு கூட்டு மன்றக் கூட்டத்தை நடத்தியது?

அ) நேபாளம்

ஆ) தாய்லாந்து

இ) ஜப்பான்

ஈ) சிங்கப்பூர்

 • இந்தியா, ஜப்பானுடன் இணைந்து ஐந்தாவது ‘Act East’ கூட்டத்தை நடத்தியது. இதன்சமயம், இரு நாடுகளும் வடகிழக்கு பிராந்தியத்தில் நடந்துவரும் பல்வேறு திட்டங்களின் முன்னேற்றத்தை ஆய்வுசெய்தன.
 • இந்தியாவின், ‘Act East’ கொள்கை மற்றும் ‘கட்டற்ற மற்றும் திறந்த நிலை இந்தோ-பசிபிக்’கிற்கான ஜப்பானின் பார்வை ‘Act East’ மன்றத்தின்மூலம் புரிந்துகொள்ளப்பட்டது. இது வடகீழை மண்டலத்தில் ஒரு கூட்டு தளத்தையும் வழங்குகிறது. இந்தக் கூட்டத்திற்கு வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தலைமைதாங்கினார்.

5. அல்வாரெஸ்&மார்சல் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, செப்.20ஆம் தேதி நிலவரப்படி, IBC’இன்கீழ் இந்தியாவில் தீர்வு காண்பதற்கு எடுத்துக்கொள்ளப்படும் சராசரி கால அளவு என்ன?

அ) 330 நாட்கள்

ஆ) 360 நாட்கள்

இ) 400 நாட்கள்

ஈ) 440 நாட்கள்

 • அல்வாரெஸ் & மார்சல் இந்தியாவின் அறிக்கையின்படி, செப்டம்பர் 2020 நிலவரப்படி, IBC’இன்கீழ் NCLT ஒப்புதல் அளித்த 277 வழக்குகளுக்குத் தீர்வுகாண்பதற்கு சராசரியாக 440 நாட்கள் ஆனது. திவால் நிலை மற்றும் திவால்நிலைக் குறியீட்டின்கீழ், தீர்மான செயல்முறைகளை மேம்படுத்துவதால், இதன் சதவீதம் 15-25% ஆகக் குறையக்கூடும்.

6. பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு விதிகளில் மாற்றங்களைச் செய்துள்ள அமைச்சகம் எது?

அ) வணிகம் & தொழிற்துறை அமைச்சகம்

ஆ) சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம்

இ) பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்

ஈ) நிதி அமைச்சகம்

 • பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR) விதிகளில் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் பல மாற்றங்களைச் செய்துள்ளது. பெரிய சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கான கட்டாய, “விளைவு மதிப்பீடு” இதிலடங்கும்.
 • அனைத்து சமூக பொறுப்புணர்வு திட்டங்களின் முழுமையான தகவல் -கள், நிறுவனத்தின் இணையதளத்தில், CSR குழுமத்தில் கட்டாயமாக வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதும் இதில் அடங்கும்.

7. 2020-21 பொருளாதார ஆய்வின்படி, 2021-22 நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் என்னவாக இருக்கும்?

அ) 5%

ஆ) 10%

இ) 11%

ஈ) 15%

 • சமீபத்தில் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் அமர்வில் தாக்கல்செய்யப்பட்ட பொருளாதார ஆய்வு 2020-21’இல், 2021-22ஆம் நிதியாண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி (GDP) விகிதத்தை அரசாங்கம் 11%ஆக நிர்ணயித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி -7.7% என மதிப்பிடப்பட்டுள்ளது.
 • பொருளாதார ஆய்வு என்பது தலைமைப் பொருளாதார ஆலோசகரின் வழிகாட்டுதலின்கீழ் நிதியமைச்சகத்தினால் தயாரிக்கப்பட்ட ஆண்டு ஆவணமாகும். கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், தற்போதைய தலைமைப் பொருளாதார ஆலோசகராவார்.

8. காலநிலை இடர் குறியீடு–2021’ஐ வெளியிட்டுள்ள அமைப்பு எது?

அ) UNEP

ஆ) ஜெர்மன் வாட்ச்

இ) NITI ஆயோக்

ஈ) WWF

 • ஜெர்மனியைச் சார்ந்த மதியுரையகமான ஜெர்மன்வாட்ச், அண்மையில், காலநிலை இடர் குறியீடு – 2021’ஐ வெளியிட்டுள்ளது. இறப்பு மற்றும் பொருளாதார இழப்புகள் ஆகியவற்றால் நிகழும் காலநிலை இடர்களின் அடிப்படையில் இந்தக் குறியீடு நாடுகளை வரிசைப்படுத்துகிறது. அந்த அறிக்கையின்படி, 2019ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான வானிலை நிகழ்வுகளின் காரணமாக, மிக மோசமாக பாதிக்கப்பட நாடுகளின் வரிசையில் இந்தியா ஏழாவது நாடாக இடம்பெற்றுள்ளது.

9. ஊழல் உணர்வுக் குறியீடு – 2020’இல் இந்தியாவின் தரநிலை என்ன?

அ) 83

ஆ) 84

இ) 85

ஈ) 86

 • கடந்த 2020ஆம் ஆண்டிற்கான ஊழல் உணர்வுக் குறியீடு (Corruption Perception Index) சமீபத்தில் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனலால் வெளியிடப்பட்டது. நாடுகளை மதிப்பிடுவதற்கு, இந்தக் குறியீடு எண் 0 முதல் 100 வரையிலான அளவைப் பயன்படுத்துகிறது. அதில், ‘0’ மிகவும் ஊழல் நிறைந்தது எனவும் ‘100’ ஊழலற்றது எனவும் பொருள் தருகிறது. 180 நாடுகள் இடம்பெற்றுள்ள இந்தக் குறியீட்டில், 86ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.

10. சிட்னியைச் சார்ந்த லோவி நிறுவனம் வெளியிட்டுள்ள COVID -19 செயல்திறன் குறியீட்டில் இந்தியாவின் தரநிலை என்ன?

அ) 83

ஆ) 84

இ) 85

ஈ) 86

 • சிட்னியைச் சார்ந்த லோவி நிறுவனம் தொகுத்துள்ள செயல்திறன் குறியீட்டின்படி, நியூசிலாந்து COVID-19 கொள்ளைநோயை மிகவும் திறம்பட கையாண்டுள்ளது. 98 நாடுகளை உள்ளடக்கிய குறியீட்டில் இந்தியா 86ஆவது இடத்தில் உள்ளது.
 • இது உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள், இறப்புகள், பத்து இலட்சத்துக்கு எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பதன் எண்ணிக்கை மற்றும் பத்து இலட்சத்துக்கு எத்தனை பேர் இறந்தனர் என்பதன் எண்ணிக்கை உள்ளிட்ட பல முக்கிய குறிகாட்டிகளை அளவிடுகிறது. நியூசிலாந்தைத் தொடர்ந்து வியட்நாம் மற்றும் தைவான் ஆகிய நாடுகள் உள்ளன. பிரேசில், மிகவும் மோசமாக செயல்படும் நாடாக உள்ளது.

3rd February 2021 Tnpsc Current Affairs in English

1. Which international organisation conducted the event on ‘Restoring Cross Border Mobility’?

A) United Nations

B) World Economic Forum

C) World Bank

D) World Trade Organisation

 • Union Minister of Health & Family Welfare addressed the event on Restoring Cross Border Mobility, through video conference.
 • The event was organised by World Economic Forum’s Common Trust Network, to discuss the policies and partnerships required to reopen borders and enable essential travel, tourism and commerce in a safe and sustainable method.

2. Which Indian monument was lit on January 30, to observe the Neglected Tropical Diseases (NTD) Day?

A) India Gate

B) Qutub Minar

C) Taj Mahal

D) Golden Temple

 • The second annual World Neglected Tropical Diseases (NTD) Day is observed on January 30, 2021. India is home to the world’s largest absolute burden of 11 of the major NTDs.
 • To celebrate the day, more than 50 landmarks representing 25 nations across the world will be lit up. India joins the celebration by lighting up the UNESCO world heritage site Qutub Minar, Delhi.

3. ‘Amrut Mahotsav’, which was seen in the news recently, is the celebration of which event?

A) 125th birth anniversary of Netaji

B) 75th year of India’s Independence

C) 50th year of 1971 War

D) 50th year of Kargil War

 • The Budget Session of Parliament recently began with the address of President Ram Nath Kovind to the joint sitting of both Houses of Parliament.
 • During the address, the President mentioned that the ‘Amrut Mahotsav’ will be observed in the country from this year, to mark commencement of the celebrations towards the 75th year of India’s Independence.

4. India conducted a joint forum meet with which country, under its ‘Act East Policy’?

A) Nepal

B) Thailand

C) Japan

D) Singapore

 • India conducted the 5th Act East Forum (AEF) meet with Japan and both the countries reviewed progress of various ongoing projects in the North–eastern region.
 • India’s ‘Act East Policy’ and Japan’s vision for a ‘Free and Open Indo–Pacific’ are realised through the Act East Forum, which also provides a collaborative platform in the North Eastern Region. The meeting was co–chaired by Foreign Secretary Harsh Vardhan Shringla.

5. As per a report released by Alvarez & Marsal India, what is the average time taken for resolution in India under IBC, as on Sep’20?

A) 330 days

B) 360 days

C) 400 days

D) 440 days

 • As per a recent report by Alvarez & Marsal India, as at September 2020, it took an average of 440 days for resolving 277 cases approved by the NCLT under the IBC.
 • The report stressed on the need for time–bound resolution of stressed assets and enhancing the resolution processes under Insolvency and Bankruptcy code as recovery percentages fell sharply to 15–25 % whenever there is an increase in time taken for resolution.

6. Which Ministry has recently introduced changes to Corporate Social Responsibility (CSR) Rules?

A) Ministry of Commerce & Industry

B) Ministry of Social Justice & Empowerment

C) Ministry of Corporate Affairs

D) Ministry of Finance

 • The Ministry of Corporate Affairs has recently introduced several changes to the Corporate Social Responsibility (CSR) Rules. It includes mandatory “Impact Assessment” for big CSR projects.
 • It also includes mandatory disclosure of all CSR projects and the CSR Committee’s composition on the company’s website.

7. As per the Economic Survey 2020–21, what would be India’s GDP growth rate in FY 2021–22?

A) 5%

B) 10%

C) 11%

D) 15%

 • In the Economic Survey 2020–21 tabled in the budget session of the Parliament recently, the Government has pegged in the country’s GDP growth rate for FY 2021–22 at 11%.
 • The GDP growth for the current financial year has been estimated at –7.7%. Economic survey is an annual document prepared by the Ministry of Finance under the guidance of Chief Economic Advisor. Krishnamurthy Subramanian is the present Chief Economic Advisor.

8. Which organization has released the Climate Risk Index (CRI) 2021?

A) UNEP

B) German Watch

C) NITI Ayog

D) WWF

 • The Germany–based think tank Germanwatch has recently released Climate Risk Index (CRI) 2021. The index ranks countries as per their vulnerability to climate risks both in terms of fatalities and economic losses. As per the report, India is the 7th worst–hit country on account of extreme weather events in the year 2019.

9. What is India’s rank in Corruption Perception Index (CPI) – 2020?

A) 83

B) 84

C) 85

D) 86

 • The Corruption Perception Index (CPI) for the year 2020 has been released recently by Transparency International (TI).
 • The index uses a scale of 0 to 100 to rate countries, where 0 is highly corrupt and 100 is very clean. India slipped six places and has been ranked at 86th position out of 180 countries.

10. What is the rank of India, in the COVID–19 performance index released by the Sydney–based Lowy Institute?

A) 83

B) 84

C) 85

D) 86

 • According to the performance index compiled by the Sydney–based Lowy Institute, New Zealand handled the pandemic the most effectively. India is ranked 86th in the index comprising 98 countries, which measures several key indicators including confirmed cases, deaths, cases per million people and deaths per million people.
 • New Zealand is followed by Vietnam and Taiwan while Brazil is the worst performing country.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *