3rd June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

3rd June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 3rd June 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

3rd June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. உயர்நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் வழக்கு நிலை மற்றும் வழக்கு விவரங்களை அறிய உதவும் செயலியின் பெயர் என்ன?

அ) e-Justice

ஆ) e-Courts Services

இ) e-Nyay

ஈ) e-Netra

 • தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, ஆங்கிலம், ஹிந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், காசி, மலையாளம், மராத்தி, நேபாளி மற்றும் ஒடியா உள்ளிட்ட 14 மொழிகளில் “இ-கோர்ட்ஸ் சர்வீசஸ் திறன்பேசி செயலிக்கான” கையேட்டை இந்திய உச்சநீதிமன்றத்தின் மின்னணு குழு வெளியிட்டுள்ளது. இந்தச் செயலி வழக்குரைஞர்கள், குடிமக்கள், காவலர்கள் மற்றும் பிற அரசு நிறுவனங்களுக்கு பயன்தருவதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

2. ‘புவி அமைப்பு கூர்நோக்கு ஆய்வகத்தை’ உருவாக்கவுள்ள விண்வெளி நிறுவனம் எது?

அ) NASA

ஆ) ISRO

இ) ESA

ஈ) JAXA

 • அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA, ஒரு புவி அமைப்பு கூர்நோக்கு ஆய்வகத்தை உருவாக்கவுள்ளது. அது காலநிலை மாற்றம், பேரிடர் தணிப்பு, காட்டுத்தீயை எதிர்த்துப்போராடுவது மற்றும் நிகழ்நேர வேளாண் செயல்முறைகளை மேம்படுத்துவது தொடர்பான முக்கிய தகவல்களை வழங்கும். இந்த வடிவமைப்பு, செயற்கைக்கோள்களின் தொகுப்பை உள்ளடக்கியது. அது புவியின் முழுமையான 3D மாதிரியை அடிப்பாறை முதல் வளிமண்டலம் வரை உருவாக்கும்.

3. விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு நோய்கள் பரவாமல் தடுக்க WHO மற்றும் அதன் பங்காளர்கள் அமைத்த குழுவின் பெயர் என்ன?

அ) ஒரு நலவாழ்வுக் குழு

ஆ) உலக நலவாழ்வுக் குழு

இ) விலங்குவழி நோய்கள் குழு

ஈ) உலக நலக்குழு

 • WHO ஆனது FAO, UNEP மற்றும் விலங்குகள் நலத்துக்கான உலக அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு நோய்கள் பரவாமல் தடுப்பதற்காக நிபுணர் குழுவொன்றை அமைத்துள்ளது. ‘One Health’ உயர்மட்ட நிபுணர் குழு என பெயரிடப்பட்ட இது, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியால் தொடங்கப்பட்ட ஒரு முயற்சியாகும்.
 • இடர் மதிப்பீட்டை உருவாக்குவதற்கும், விலங்குவழி நோய்ப்பரவலைத் தடுப்பதற்கு, பயன்தரும் நடைமுறைகளை ஏற்படுத்துவதற்கும் இது ஐநா அமைப்புகளுக்கு அறிவுறுத்தும்.

4. ஒருநிறுத்த (One-Stop) மையங்கள் என்பவை கீழ்காணும் எந்த நடுவண் அமைச்சகத்தின் முதன்மை திட்டமாகும்?

அ) நலவாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம்

ஆ) பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

இ) உள்துறை அமைச்சகம்

ஈ) AYUSH அமைச்சகம்

 • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டமைச்சகமானது ஒரு-நிறுத்த மையங்களை அமைப்பதாக அறிவித்துள்ளது. இத்திட்டம் பொது மற்றும் தனிப்பட்ட இடங்களில், குடும்பம், சமூகம் மற்றும் பணியிடத்தில் வன்மு -றையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இம்மையங்கள் முதன்முறையாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் 10 வெளிநாடுகளில் அமைக்கப்படவுள்ளன.

5. 2021’இல் அறிவிக்கப்பட்ட புதிய சமூக ஊடக விதிகளுடன் தொடர்புடைய அமைச்சகம் எது?

அ) உள்துறை அமைச்சகம்

ஆ) மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

இ) வெளியுறவு அமைச்சகம்

ஈ) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

 • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், அனைத்து சமூக ஊடக இடையீட்டாளர்களிடமிருந்தும் புதிய ‘தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் நெறிமுறைக்குறியீடு) விதிகள், 2021’ தொடர்பான இணக்க விவரங்களைக் கேட்டுள்ளது.
 • புதிய சமூக ஊடக விதிகளுக்கு இணங்க, சமூக ஊடக தளங்களுக்கு வழங்கப்பட்ட மும்மாத அவகாசம் மே.26 அன்று முடிவடைந்தது. இந்தப் புதிய விதிகள் நெறிமுறைகளை விதிக்கின்றன மற்றும் மூன்றடுக்கு குறைதீர்க்கும் கட்டமைப்பை அமைக்க நிர்பந்திக்கின்றன.

6. மே மாதத்தில் வரும் பௌர்ணமி விசாகம், எந்த மதத்தின் புனித நாளாக கருதப்படுகிறது?

அ) சீக்கியம்

ஆ) சமணம்

இ) பௌத்தம்

ஈ) இஸ்லாம்

 • பௌத்த பூர்ணிமா அல்லது வைசாகம் என்பது மே மாத முழு நிலவன்று உலகிலுள்ள அனைத்து பௌத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். பொ ஆ மு 623ஆம் ஆண்டில் வந்த வைசாக நாளில் தான் புத்தர் பிறந்தார். அதேநாளில், புத்தர் ஞானமடைந்தார். தனது 80ஆம் ஆண்டில், மற்றொரு வைசாக நாளில் அவர் காலமானார்.

7. எந்த மாதத்தின் முழு நிலவு, பொதுவாக, ‘பூ திங்கள்’ என்று குறிப்பிடப்படுகிறது?

அ) ஏப்ரல்

ஆ) மே

இ) ஜூன்

ஈ) ஜூலை

 • உலகெங்கிலும் ஏராளமான பூக்கள் இருப்பதால் மே மாதம் வரும் முழு நிலவு, ‘பூ திங்கள்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு, இது சந்திர கிரகணத்துடன் ஒத்துப்போனது. அதன்சமயம், நிலா சிவப்புவண்ணமாக காட்சியளித்தது. பூமிக்கு மிகநெருக்கமாக நிலா வந்ததால், அது பெரியதாகவும் பிரகாசமாகவும் தோன்றியது. இந்த சூப்பர் பூ சிவப்பு நிலவு தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்காசியாவின் சில பகுதிகளில் மட்டுமே காணப்பட்டது.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ‘டாஸ்மேனியன் டெவில்’ என்றால் என்ன?

அ) தீம்பொருள்

ஆ) கிரிப்டோகரன்சி

இ) வனவிலங்கு

ஈ) நீர்மூழ்கிக்கப்பல்

 • டாஸ்மேனிய பிசாசு என்றும் அழைக்கப்படும் Sarcophilus harrisii ஒரு மாமிச உண்ணியாகும். இது தசையால் உருவான உடலமைப்பு, கருப்பு ரோமங்கள், கொடுமையான வாசனை, அதிக ஒலியில் கத்தும் திறன், அதீத மோப்ப உணர்வு மற்றும் விரைவாக உணவு உண்ணும் பழக்கம் ஆகியவற்றை கொண்டுள்ளது.
 • ஊடக அறிக்கையின்படி, கடந்த 3,000 ஆண்டுகளில், முதன்முறையாக ஆஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்பில் 7 விலங்குகள் பிறந்துள்ளன. அழிவின் விளிம்பிலிருக்கும் இவ்விலங்குகளை இது ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

9. நோய்ப்பூச்சிக்கட்டுப்பாட்டில் பயன்படுத்தப்படும் eDNA பகுப்பாய்வு என்றால் என்ன?

அ) ecological DNA

ஆ) environmental DNA

இ) entomological DNA

ஈ) endemic DNA

 • சுற்றுச்சூழல் DNA (eDNA) என்பது மண், கடல்நீர் அல்லது வளிபோன்ற பல்வேறு சுற்றுச்சூழல் மாதிரிகளிலிருந்து சுற்றுச்சூழலுடனான தொடர்பு -களின்மூலம் சேகரிக்கப்பட்ட DNA ஆகும். ஜப்பானில், 2 இடங்களில் இருந்து, மேற்பரப்பு மண் மாதிரிகளிலிருந்து அர்ஜென்டினா எறும்பின் சுற்றுச்சூழல் DNA (eDNA)’ஐ ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக கண்ட -றிந்துள்ளனர். நோய்ப்பூச்சிக்கட்டுப்பாட்டில் பயன்படுத்தப்படும் ‘வாழ்விட -த்தை புரிந்துகொள்ளுதல் செயல்முறை’க்கு இது பயன்படுத்தப்படலாம்.

10. நாடோடி பழங்குடியினமான ‘வான் குஜ்ஜார்’, பொதுவாக, இந்தியாவின் எந்தப் பகுதியில் வசிக்கின்றனர்?

அ) இமயமலைப் பகுதி

ஆ) தக்காண பிராந்தியம்

இ) மேற்குத்தொடர்ச்சி மலை

ஈ) தெற்கு கடற்கரை

 • நாடோடி பழங்குடியினமான ‘வான் குஜ்ஜார்’ பொதுவாக இமயமலை பகுதியில் வசிக்கின்றனர். அவர்கள் வழக்கமாக இமயமலையின் அடிவாரத்திலும், ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களிலும் வசிக்கின்றனர். அண்மையில், அந்தப்பழங்குடியினரை மனிதாபிமானமற்ற நிலையில் வாழ கட்டாயப்படுத்தியதற்காக மாநில அரசை உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் குற்றஞ்சாட்டியது.
 • உத்தரகாஷியில் உள்ள கோவிந்த் பாஷு விகார் தேசிய பூங்காவிற்குள் நுழைய அனுமதிக்க அஞ்சிய மாநிலத்திடம், அவர்களுக்கு தங்குமிடம் வழங்குமாறு உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. NHRC தலைவராக அருண் மிஸ்ரா பொறுப்பேற்பு

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) தலைவராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா பொறுப்பேற்றார்.

முன்னதாக, அப்பொறுப்பிலிருந்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி HL தத்துவின் பதவிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பரில் நிறைவ
-டைந்தது. இந்நிலையில், சுமார் 5 மாதங்கள் காலியாக இருந்த அந்தப் பதவிக்கு ஓய்வுபெற்ற நீதிபதி அருண் மிஸ்ரா தற்போது பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதியாக கடந்த 2014 ஜூலையில் பொறுப்பேற்ற அருண் மிஸ்ரா, கடந்த ஆண்டு செப்டம்பரில் அந்தப் பொறுப் -பிலிருந்து ஓய்வுபெற்றார்.

2. தேவேந்திரகுல வேளாளர் எனும் பொதுப்பெயரில் ஜாதிச்சான்றிதழ் வழங்கலாம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

ஆறு ஜாதிப் பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளார் எனும் பெயரில் ஜாதிச்சான்றிதழ் வழங்கலாம் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச்செயலாளர் கே மணிவாசன் வெளியிட்ட உத்தரவு: பள்ளர், தேவேந்திர குலத்தான், குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன் ஆகிய ஜாதிப்பிரிவுகளை உள்ளடக்கியவர்களை தேவேந்திரகுல வேளாளர் எனும் பொதுப்பெயரில் அழைக்கலாம் என பல்வேறு தரப்பினரும் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதுதொடர்பாக ஆய்வுசெய்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, சட்டத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் ஆகியோரைக்கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு தமிழ்நாடு அரசுக்கு கடந்த ஆண்டு நவம்பர்.28’இல் அறிக்கை அளித்தது. மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அறிக்கையை அனுப்பிவைத்தது.

இதனை ஆய்வு செய்த மத்திய அரசு உரிய சட்டத்திருத்தத்தைச்செய்தது. இதற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த ஏப்ரல்.13’இல் ஒப்புதலளித்தார். சட்டத்திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதனால், அது நடைமுறைக்கு வந்தது. இதனை மாவட்ட ஆட்சியர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் சான்றிதழ் வழங்க அதிகாரம் பெற்ற அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என்று தனது உத்தரவில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

3. இந்தியாவில் கண்டறியப்பட்ட ‘டெல்டா’ வகை கரோனா அச்சுறுத்தலாக உள்ளது: உலக சுகாதார அமைப்பு

முதல் முறையாக இந்தியாவில் கண்டறியப்பட்ட 3 வகையான கரோனா தொற்றுகளில், ‘டெல்டா’ வகை (பி.1.617.2) தொற்று கவலையளிக்கும் வகையில் தீவிரமாக இருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. உலக அளவில் கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு வாரமும் வெளியிட்டு வருகிறது.

அதுபோல, புதிதாக வெளியிட்ட புள்ளிவிவரங்களில் கூறியிருப்பதாவது: பொதுமக்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதுடன், வேகமாக பரவும் வகையாக ‘டெல்டா’ (பி.1.617.2) வகை தீநுண்மி வரையறுக்கப்பட்டுள்ள -து. மற்ற இரு உருமாறிய வகைகள் (பி.1.617.1 மற்றும் பி.1.617.3) குறை -வான பரவல் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகைகளாக கண்ட -றியப்பட்டிருக்கின்றன. ‘டெல்டா’ வகை கரோனா இப்போது 62 நாடுக -ளில் பரவியிருக்கிறது.

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட ‘கப்பா’ (பி.1.617.1) வகை தொற்று குறிப்பிட்ட பகுதிகளில் வேகமான பரவலைக் கொண்டிருந்தபோதும், உலக அளவில் இந்த வகை கரோனாவின் பாதிப்பு குறைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. மூன்றாவது வகையான பி.1.617.3, இதுவரை அச்சுறுத்தக்கூடிய வகையிலானதா, அல்லது மிதமானதா என இதுவரை வரையறுக்கப்படவில்லை.

இந்தியாவில் பாதிப்பு விகிதம் 26 சதவீதம் குறைவு: இந்தியாவில் கடந்த வாரத்தில் 13,64,668 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருந்தபோதும், அது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 26 சதவீதம் குறைவாகும்.

குறைந்துவரும் உயிரிழப்புகள்: கரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு -களைப்பொருத்தவரை தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவி -ல்தான் அதிக உயிரிழப்புகள் (26,706) பதிவாகியிருக்கின்றன.

இருந்தபோதும், இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 8 சதவீதம் குறைவாகும். ஒட்டுமொத்தமாக உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் தற்போது தொடா்ந்து குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் உலக அளவில் 35 லட்சம் போ் புதிதாக கரோனோவால் பாதிக்கப்பட்டனர். இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 15 சதவீதம் குறைவாகும்.

78,000 புதிய உயிரிழப்புகள் பதிவாகின. இது முந்தைய வாரத்தைக் காட்டிலும் 7 சதவீதம் குறைவு என்றும் உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. மாதிரி வாடகை ஒப்பந்தச் சட்டம்; 10 முக்கிய அம்சங்கள் என்ன?

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், வாடகை சட்டங்களில் திருத்தம் கொண்டுவர மாதிரி வாடகை சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

வாடகை மற்றும் குத்தகை முறைகளில் புதிய சட்டங்களை கொண்டு வரவும் அல்லது தற்போதுள்ள வாடகை சட்டங்களில், பொருத்தமான முறையில் திருத்தங்கள் கொண்டுவரவும், மாதிரி வாடகை சட்டம் உருவாக்கப்பட்டது.

வீட்டு வாடகை உயர்வு, வாடகை முன்பணம், வாடகை ஒப்பந்தம் புதுப்பிப்பது, வீட்டைகாலி செய்வதில் ஏற்படும் தகராறுபோன்ற பிரச்சனை -களுக்கு தீர்வுகாண இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

*மத்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை தொடர்ந்து புதிய மாதிரி வாடகை ஒப்பந்த சட்டமும் கொண்டுவரப்பட்டது.

*வாடகைதாரர்களிடம் 2 மாத வாடகைக்கு மேல் பாதுகாப்பு வைப்புத் தொகை (அட்வான்ஸ்) வாங்க முடியாது என்பது உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

*வாடகை ஒப்பந்த நகலை, மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.

*முன்பெல்லாம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் வாடகை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை பதிவு செய்யாவிட்டாலும் இரு தரப்பும் நீதிமன்றம் செல்லமுடியும்.

*ஆனால், புதிய சட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள வாடகை ஆணையத்திடம் பதிவுசெய்ய வேண்டும்.

*ஆன்லைன் அல்லது நேரடியாக வாடகை ஒப்பந்தத்தை பதிவுசெய்ய வேண்டும். இந்த ஒப்பந்தத்தை பதிவு செய்யாவிட்டால், நிவாரணம் கோரி இருதரப்பும் நீதிமன்றம் செல்லமுடியாது.

*அதே சமயம், ஒப்பந்தம் போடாத நிலையில், வீட்டு உரிமையாளர் மட்டும் நீதிமன்றத்தை நாட புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

*வீட்டை காலி செய்யாவிட்டால் சட்டப்படி வாடகையை அதிகரிக்க உரிமைஉண்டு.

*வாடகை தொடர்பான புகார்களை விசாரிக்க தனி வாடகை ஆணையம் அல்லது வாடகை தீர்ப்பாயம் அமைக்க புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

*காலியாக இருக்கும் வீடுகளை எல்லாம், வாடகைக்குவிட இந்த மாதிரி வாடகை சட்டம் உதவும். வாடகை வீடுகளை, வணிகமாக நடத்துவதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை இந்தச் சட்டம் ஊக்குவிக்கும்.

5. ஈரான் போர்க் கப்பல் எரிந்து மூழ்கியது

ஈரானின் மிகப்பெரிய போர்க் கப்பல் ஓமன் வளைகுடாவில் மர்மமான முறையில் எரிந்து மூழ்கியது. கடல் பகுதியில் மேற்கத்திய நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அசோசியேட் -டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் கடற்படைக்குச் சொந்தமான ‘கார்க்’ கப்பலில் தீப்பிடித்த -து. 207 மீட்டர் நீளம்கொண்ட அந்தக் கப்பல்தான் ஈரானின் மிகப்பெரிய போர்க்கப்பலாகும். கப்பலில் பற்றிய தீயை அணைக்க தீயணைப்புக் கப்பல்கள் அந்தப் பகுதிக்கு விரைந்தன. தீயணைப்பு வீரர்களின் கடும் முயற்சிக்குப் பிறகும் அந்தக் கப்பல் கடலுக்குள் மூழ்கியது.

தலைநகர் டெஹ்ரானுக்கு 1,270 கிமீ தொலைவில், ஈரானின் ஜாஸ்க் துறைமுகப்பகுதியில் கார்க் கப்பல் மூழ்கியது.

6. இஸ்ரேல் புதிய அதிபராக ஐசக் ஹெர்ஸாக் தேர்வு

இஸ்ரேலின் 11 ஆவது அதிபராக மூத்த அரசியல்வாதி ஐசக் ஹெர்ஸாக் தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் அவர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவ -து: இஸ்ரேலின் 10ஆவது அதிபராக கடந்த 2014ஆம் ஆண்டுமுதல் பொறுப்புவகித்து வரும் ரூவன் ரிவ்லினின் பதவிக்காலம் அடுத்த மாதம் 9ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐசக் ஹெர்ஸாக் தொழிலாளர் அமைப்பின் தலைவராக இருந்துள்ளார். 2005ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை வீட்டு வசதி, சுற்றுலா, சமூகநலம் உள்ளிட்ட பல்வே -று துறைகளில் இவர் அமைச்சராக பொறுப்புவகித்துள்ளார். இஸ்ரேலில் மிகநீண்டகாலம் பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சிக் காலம் நிறைவடைந்து, புதிய பிரதமரின் தலைமையில் அரசு அமையவிருக்கும் பரபரப்பான சூழலில் ஐசக் ஹெர்ஸாக் அதிபராகத் தேர் -ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

1. What is the name of the application used to know the case status and case details of High Courts and District Courts?

A) E–Justice

B) E–Courts Services

C) E–Nyay

D) E–Netra

 • The E–Committee of the Supreme Court of India has released a manual for the “e–Courts Services Mobile app” in 14 languages which includes English, Hindi, Assamese, Bengali, Gujarati, Kannada, Khasi, Malayalam, Marathi, Nepali, Odia, Punjabi, Tamil and Telugu This app aims to benefit litigants, citizens, lawyers, police and other governmental agencies.

2. Which space agency has proposed to develop an ‘Earth System Observatory’?

A) NASA

B) ISRO

C) ESA

D) JAXA

 • The American space agency NASA has proposed an Earth System Observatory, which would provide key information regarding climate change, disaster mitigation, fighting forest fires, and improving real–time agricultural processes. The design involves a constellation of satellites, which would develop a holistic 3D model of the earth from bedrock to atmosphere.

3. What is the name of the panel set up by WHO and partners, to prevent the spread of diseases from animals to humans?

A) One Health Panel

B) World Health Panel

C) Zoonotic Diseases Panel

D) World Health Panel

 • WHO, along with FAO, UNEP and the World Organization for Animal Health formed a panel of experts to develop a global plan, to prevent the spread of diseases from animals to humans. Named the One Health High–Level Expert Panel, it was an initiative launched by France and Germany. It will advise the UN bodies to develop risk assessment and establish good practices to prevent zoonotic outbreaks.

4. One–Stop Centres is a flagship scheme of which Union Ministry?

A) Ministry of Health and Family Affairs

B) Ministry of Women and Child Development

C) Ministry of Home Affairs

D) Ministry of AYUSH

 • The Ministry of Women and Child Development (WCD) announced that it will set up One–Stop Centres (OSC).
 • This scheme aims to support women affected by violence in public and private spaces, within the family, community and at the workplace. OSCs will be first introduced in 10 foreign missions in collaboration with the Ministry of External Affairs.

5. Which Ministry is associated with the new Social Media Rules notified in 2021?

A) Ministry of Home Affairs

B) Ministry of Electronics & Information Technology

C) Ministry of External Affairs

D) Ministry of Science and Technology

 • Ministry of Electronics & Information Technology (MeiTY) has asked the compliance details over the new ‘the Information Technology (Intermediary Guidelines and Digital Ethics Code) Rules, 2021’, from all social media intermediaries. The three–month window provided to social media platforms to comply with the new social media rules ended on May 26. The rules impose a code of ethics and mandating a three–tier grievance redressal framework.

6. Vesak, the Day of the Full Moon in the month of May, is the sacred day of which religion?

A) Sikhism

B) Jainism

C) Buddhism

D) Islam

 • Vesak, the Day of the Full Moon in the month of May, is the most sacred day to millions of Buddhists across the world. It was on the Day of Vesak in the year 623 BC that the Buddha was born. It was also on the same day, the Buddha attained enlightenment, on another Day of Vesak in his eightieth year, he passed away.

7. The full moon of which month is usually referred to as the ‘Flower Moon’?

A) April

B) May

C) June

D) July

 • The full moon during the month of May is called the flower moon because of the abundance of flowers around the world. This year, it coincided with the lunar eclipse in which the moon will turn red. It was also closest to the Earth during its orbit, making it appear larger and brighter. The super flower blood moon was visible only in parts of South America, Australia and south–east Asia.

8. What is ‘Tasmanian Devil’, that was making news recently?

A) Malware

B) Cryptocurrency

C) Wild Animal

D) Submarine

 • Sarcophilus harrisii, also called as the Tasmanian devil, is a carnivorous marsupial. It has a muscular build, black fur, pungent odour, extremely loud screech, high sense of smell and fast feeding. As per media reports, seven animals have been born in the wild of Australia’s mainland for the first time in more than 3,000 years. This is expected to promote the endangered animals.

9. What is eDNA analysis, which is used in Pest Control?

A) ecological DNA

B) environmental DNA

C) entomological DNA

D) endemic DNA

 • Environmental DNA (eDNA) is the DNA collected from a variety of environmental samples such as soil, seawater or air, through their interactions with the environment. Researchers have successfully detected the environmental DNA (eDNA) of the Argentine ant in surface soil samples from two sites in Japan. This method can be used to understand the habitat which will be used in pest control.

10. ‘Van Gujjars’ a nomadic tribe usually inhabit in which region of India?

A) Himalayan Region

B) Deccan Region

C) Western Ghats

D) Southern Coast

 • Van Gujjars is a nomadic tribe, who inhabit in the Himalayan region. They usually dwell in foothills of Himalayas and in states of Jammu & Kashmir, Himachal Pradesh and Uttarakhand.
 • Recently, Uttarakhand high court has slammed the state government for forcing the tribe to live in inhuman conditions. The state, which feared to let them enter Govind Pashu Vihar National Park, Uttarkashi, was asked to provide accommodation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *