TnpscTnpsc Current Affairs

3rd November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

3rd November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 3rd November 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

3rd November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்கள் கீழ்க்கண்ட எந்தத் தேதியில் தங்கள் உதய நாளைக் கொண்டாடின?

அ. நவம்பர்.01

ஆ. நவம்பர்.03

இ. நவம்பர்.05

ஈ. நவம்பர்.07

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. நவம்பர்.01

  • சத்தீஸ்கர், பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம், கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திர பிரதேசம் உட்பட ஏழு மாநிலங்களும், சண்டிகர், இலட்சத்தீவுகள் மற்றும் புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களும் நவம்பர்.01ஆம் தேதி அன்று தங்கள் உதய நாளைக் கொண்டாடுகின்றன. மத்திய பிரதேசத்திலிருந்து பிரித்துருவாக்கப்பட்ட சத்தீஸ்கரில் அதன் 22ஆவது மாநில நாள் தேசிய பழங்குடியின நடன விழாவுடன் கொண்டாப்பட்டது.

2. ‘மன்கர் தாம் கி கௌரவ் கதா’ என்ற நிகழ்ச்சியை நடத்திய மாநிலம் எது?

அ. இராஜஸ்தான்

ஆ. குஜராத்

இ. அஸ்ஸாம்

ஈ. அருணாச்சல பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. இராஜஸ்தான்

  • இராஜஸ்தானில் உள்ள மன்கர் தாமில் நடைபெற்ற, ‘மன்கர் தாம் கி கௌரவ் கதா’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார். அதிகம் பேசப்படாத பழங்குடியின மாவீரர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் தியாகங்களுக்கு அவர் அப்போது அஞ்சலி செலுத்தினார். இராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மக்களின் பொதுவான பாரம்பரியமாக, ‘மன்கர்’ கருதப்படுகிறது. பிர்சா முண்டாவின் பிறந்தநாளான நவம்பர் 15ஆம் தேதி நாடு முழுவதும், ‘ஜன்ஜாதிய கௌரவ் திவாஸ்’ எனக் கொண்டாடப்படவுள்ளது.

3. மூன்று நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும், ‘குடியுரிமைச் சட்டம்’ கீழ்க்காணும் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

அ. 1947

ஆ. 1955

இ. 1962

ஈ. 1972

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 1955

  • ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானிலிருந்து வந்து தற்போது குஜராத்தின் இரண்டு மாவட்டங்களில் வசிக்கும் ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமைச் சட்டம், 1955இன்கீழ் இந்திய குடியுரிமை வழங்க இந்திய அரசு முடிவுசெய்துள்ளது. குடியுரிமைச் சட்டம், 1955இன் கீழ்தான் இந்தக் குடியுரிமை வழங்கப்படுகிறதே ஒழிய சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச்சட்டம், 2019இன் கீழ் இது வழங்கப்படவில்லை.

4. எந்த நாட்டுடனான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வணிக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது?

அ. ஐக்கிய அரபு அமீரகம்

ஆ. ஆஸ்திரேலியா

இ. அமெரிக்கா

ஈ. ஐக்கிய இராஜ்ஜியம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஆஸ்திரேலியா

  • நடுவண் வணிகம் & தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனக்கிணையான ஆஸ்திரேலிய அமைச்சருடன் மெய்நிகராக சந்திப்பு நடத்தினார். 2022 ஏப்ரலில் கையொப்பமிடப்பட்ட IndAus ECTAஇன் (இந்தியா–ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வணிக ஒப்பந்தம்) அங்கீகார நிலைகுறித்து விவாதிப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஒப்பந்தத்தை முன்கூட்டியே செயல்படுத்துவது குறித்தும் அப்போது விவாதிக்கப்பட்டது.

5. ‘ஆபரேஷன் விஜிலன்ட் ஸ்டார்ம்’ என்பது அமெரிக்காவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடத்தப்பட்ட தற்காப்புப் பயிற்சியாகும்?

அ. இந்தியா

ஆ. பிரான்ஸ்

இ. தென் கொரியா

ஈ. பாகிஸ்தான்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. தென் கொரியா

  • ‘ஆபரேஷன் விஜிலன்ட் ஸ்டார்ம்’ என்பது அமெரிக்காவுக்கும் கொரிய குடியரசுக்கும் (தென் கொரியா) இடையே நடத்தப்பட்ட ஒரு தற்காப்புப் பயிற்சியாகும். நான்கு நாள் நடந்த இந்தப் பயிற்சியில் நூற்றுக்கணக்கான வானூர்திகள் பங்கேற்றன. போர் தயார்நிலை மற்றும் இயங்குதன்மையை மேம்படுத்தும் வகையில் இந்தப் பயிற்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பயிற்சிக்கு வடகொரியாவின் வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது.

6. புதிய ‘வேர்ல்ட் 6–ரெட்’ சாம்பியனான இந்தியாவின் ஸ்ரீகிருஷ்ணா சார்ந்த விளையாட்டு எது?

அ. சதுரங்கம்

ஆ. ஸ்னூக்கர்

இ. பூப்பந்து

ஈ. டென்னிஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஸ்னூக்கர்

  • இந்தியாவின் S ஸ்ரீகிருஷ்ணா நடந்து முடிந்த இறுதிப்போட்டியில் பக்ரைனின் ஹபீப் சபாவை தோற்கடித்ததன் மூலம் புதிய, ‘வேர்ல்ட் 6–ரெட்’ ஸ்னூக்கர் சாம்பியனானார். 22 வயதான ஸ்ரீகிருஷ்ணா ஏற்கெனவே, ‘தேசிய 6–ரெட்ஸ்’ ஸ்னூக்கர் சாம்பியனாவார். அவர், கடந்த 2019இல், தேசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பும் வென்றுள்ளார்.

7. 2022இல், ‘IBSAMAR – பன்னாட்டு கடல்சார் பயிற்சியை’ நடத்தும் நாடு எது?

அ. இந்தியா

ஆ. தென்னாப்பிரிக்கா

இ. பிரேசில்

ஈ. ஜப்பான்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. தென்னாப்பிரிக்கா

  • IBSAMAR பயிற்சியின் ஏழாவது பதிப்பு, தென்னாப்பிரிக்காவில் வைத்து இந்திய, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்க கடற்படைகளுக்கு இடையே ஒரு கூட்டு பன்னாட்டு கடல்சார் பயிற்சியாக நடத்தப்படவுளது. இந்திய கடற்படையின் சார்பாக டெக் வகை போர்க்கப்பல், INS தர்காஷ், சேதக் உலங்கூர்தியும் மரைன் கமாண்டோ படையின் (மார்கோஸ்) பணியாளர்களும் இதில் பங்கேற்றனர். IBSAMARஇன் முந்தைய பதிப்பு (IBSAMAR VI) தென்னாப்பிரிக்காவின் சைமன்ஸ் டௌனில் கடந்த 2018ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.

8. ‘PowerEX’ என்ற பாதுகாப்பு பயிற்சியை நடத்திய நிறுவனம் எது?

அ. இந்திய கடலோர காவல்படை

ஆ. இந்திய கணினிவழி அவசரகால பதிலளிப்புக் குழு (CERT–In)

இ. NASSCOM

ஈ. இந்தோ–திபெத்திய எல்லைக் காவல்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இந்திய கணினிவழி அவசரகால பதிலளிப்புக் குழு (CERT–In)

  • இந்திய கணினிவழி அவசரகால பதிலளிப்புக் குழு (CERT–In) Power–CSIRT–களுடன் (Computer Security Incident Response Teams in Power sector) இணைந்து, எரிசக்தித் துறைப் பயன்பாடுகளுக்காக ‘PowerEX’ என்ற இணைய வெளி பாதுகாப்புப்பயிற்சியை நடத்தியது. ‘IT மற்றும் OT அமைப்புகளில் இணையவெளி நிகழ்வை அங்கீகரிப்பது, பகுப்பாய்வு செய்வது மற்றும் பதிலளிப்பது’ இந்தப் பயிற்சியின் நோக்கமாகும். “Defending Cyber induced disruption in IT & OT infrastructure” என்பது இந்தப் பயிற்சியின் கருப்பொருளாகும்.

9. 2022 – உலக தரநிலைகள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Value of Standardization

ஆ. Build Back Better

இ. Standards and Sustainability

ஈ. Businesses and Standards

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. Build Back Better

  • ஒவ்வோர் ஆண்டும் அக்.14ஆம் தேதி உலக தரநிலைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேச தரநிலைகள் நாள் என்றும் அழைக்கப்படும் இந்த நாள், தரப்படுத்தலின் மதிப்பைப் பற்றி நுகர்வோர், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் வணிகங்களுக்குக் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. “Build Back Better” என்பது இந்த ஆண்டு (2022) உலக தரநிலைகள் நாளுக்கானக் கருப்பொருளாகும். கடந்த 1956ஆம் ஆண்டில் இலண்டனில் நடந்தேறிய பிரதிநிதிகளின் முதல் கூட்டத்தை நினைவுகூரும் வகையில், அக்டோபர்.14ஆம் தேதி உலக தரநிலைகள் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

10. டைம்ஸ் உயர்கல்வியின் (THE) உலக பல்கலைக்கழக தரவரிசை – 2023இல் இந்திய அளவில் முதலிடம்பெற்ற நிறுவனம் எது?

அ. ஐஐடி மெட்ராஸ்

ஆ. IISc பெங்களூரு

இ. ஐஐடி கோரக்பூர்

ஈ. ஐஐடி பாம்பே

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. IISc பெங்களூரு

  • டைம்ஸ் உயர்கல்வியின் (THE) உலக பல்கலைக்கழக தரவரிசை – 2023 அண்மையில் வெளியிடப்பட்டது. இந்தத் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தொடர்ந்து 7ஆம் முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (USA) மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (UK) இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன. பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம் (IISc) இந்திய கல்வி நிறுவனங்களில் முதலிடத்தைத் தக்கவைத்து, 251–300 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மாமன்னர் இராஜராஜ சோழனின் பிறந்தநாள் அரசு விழா: தமிழ்நாடு அரசு

‘மாமன்னர்’ இராஜராஜ சோழனின் பிறந்தநாள், அரசு விழாவாகக் கொண்டாடப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சதய விழா: உலகப்புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலைக் கட்டிய, ‘மாமன்னர்’ இராஜராஜ சோழனின் பிறந்த நாள், ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில், சதய விழாவாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

2. இலக்குகளை இடைமறித்து தாக்கும் ஏடி-1 ஏவுகணை சோதனை வெற்றி

இலக்குகளை இடைமறித்து தாக்கும் ஏடி-1 ஏவுகணை முதல்முறையாக வானில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஏடி-1 என்ற இடைமறித்து தாக்கும் ஏவுகணை வளிமண்டலத்தின் 100 கிமீ உயரத்துக்கு கீழும், அதனைத் தாண்டியும் என இருவிதமாக பாயும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொலைதூரத்தில் உள்ள எறிகணைகள் மற்றும் விமானங்களை இடை மறித்துத் தாக்கும். இந்த ஏவுகணை உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நவீன கட்டுப்பாட்டு அமைப்பு, வழிகாட்டு முறைகளைக் கொண்டுள்ளது. இது இலக்கை நோக்கி துல்லியமாக பயணிக்க உதவும்.

இந்த ஏவுகணை ஒடிஸாவில் உள்ள APJ அப்துல் கலாம் தீவின் கடற்கரையையொட்டி, வெவ்வேறு இடங்களில் முதல்முறையாக வானில் செலுத்தி வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. இந்தச் சோதனையில் ஏவுகணையின் அனைத்து துணை அமைப்புகளும் எதிர்பார்த்தப்படி சிறப்பாக செயல்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

3. CRPF பெண் அதிகாரிகள் முதல்முறையாக IGஆக நியமனம்

மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) கலவரத் தடுப்பு சிறப்புப் பிரிவான அதிவிரைவுப் படை (RAF) ஐஜியாக முதல்முறையாக பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், CRPFஇன் பிகார் பிரிவுக்கும் முதல் முறையாக பெண் ஐஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் மிகப்பெரிய துணை இராணுவப்படையான CRPFஇல் (3.25 இலட்சம் பணியாளர்கள்), பல ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகு கடந்த 1987ஆம் ஆண்டில் முதல்முறையாக பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில், CRPF அதிவிரைவுப்படை ஐஜியாக பெண் அதிகாரி ஆனி ஆப்ரகாம், பிகார் பிரிவு ஐஜியாக சீமா துந்தியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக, அப்படையின் தலைமை அலுவலகம் வெளியிட்ட ஆணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிவிரைவு படைக்கு பெண் ஐஜி தலைமை தாங்குவது இதுவே முதல்முறையாகும்.

3rd November 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Seven states including Karnataka, Kerala and Andhra Pradesh celebrate their foundation day on which day?

A. November.01

B. November.03

C. November.05

D. November.07

Answer & Explanation

Answer: A. November.01

  • Seven states – including Chhattisgarh, Punjab, Haryana, Madhya Pradesh, Karnataka, Kerala and Andhra Pradesh and Union territories of Chandigarh, Lakshadweep and Puducherry are marking their anniversaries on November 1. Chhattisgarh, which was carved out of Madhya Pradesh hosted a National Tribal Dance festival to celebrate its 22nd state anniversary.

2. Which state hosted the ‘Mangarh Dham ki Gaurav Gatha’ programme?

A. Rajasthan

B. Gujarat

C. Assam

D. Arunachal Pradesh

Answer & Explanation

Answer: A. Rajasthan

  • Prime Minister Narendra Modi addressed the ‘Mangarh Dham ki Gaurav Gatha’ programme at Mangarh Dham in Rajasthan. He paid homage to the sacrifices of unsung tribal heroes and martyrs of the freedom struggle. Mangarh is considered as a shared heritage of the people of Rajasthan, Maharashtra, Madhya Pradesh and Gujarat. On 15th November, the country is going to celebrate Janjatiya Gaurav Diwas on the birth anniversary of Birsa Munda.

3. The ‘Citizenship Act’ under which citizenship is to be granted to minorities from three countries, was enacted in which year?

A. 1947

B. 1955

C. 1962

D. 1972

Answer & Explanation

Answer: B. 1955

  • The Indian Government has decided to grant Indian citizenship to Hindus, Sikhs, Buddhists, Jains, Parsis and Christians coming from Afghanistan, Bangladesh and Pakistan and currently living in two districts of Gujarat under the Citizenship Act, 1955. The move to grant citizenship comes under the Citizenship Act, 1955 and not the controversial Citizenship Amendment Act, 2019 (CAA).

4. India signed the Economic Cooperation and Trade Agreement with which country?

A. UAE

B. Australia

C. USA

D. UK

Answer & Explanation

Answer: B. Australia

  • Union Minister of Commerce and Industry Piyush Goyal had a virtual meeting with his Australian counterpart. The Meeting was held to discuss the status of ratification of IndAus ECTA (India–Australia Economic Cooperation and Trade Agreement), which was signed in April 2022. The pact’s early implementation was also deliberated upon.

5. ‘Operation Vigilant Storm’ is a Defence exercise conducted between USA and which country?

A. India

B. France

C. South Korea

D. Pakistan

Answer & Explanation

Answer: C. South Korea

  • ‘Operation Vigilant Storm’ is a Defence exercise conducted between USA and Republic of Korea (South Korea). The four–day training exercise involves hundreds of aircraft and designed to enhance combat readiness and interoperability. The exercise has sparked opposition from North Korea’s Foreign Ministry.

6. Shrikrishna of India who became the new ‘World 6–red’ Champion, plays which sports?

A. Chess

B. Snooker

C. Badminton

D. Tennis

Answer & Explanation

Answer: B. Snooker

  • S Shrikrishna of India became the new World 6–red snooker champion when he defeated Habib Sabah of Bahrain in the final. The 22–year–old Shrikrishna is the reigning National 6–Reds Snooker Champion and he has won the National Billiards Championship in 2019.

7. Which country hosts the ‘IBSAMAR multinational maritime exercise’ in 2022?

A. India

B. South Africa

C. Brazil

D. Japan

Answer & Explanation

Answer: B. South Africa

  • The seventh edition of IBSAMAR, a joint multinational maritime exercise is to be conducted among Indian, Brazilian and South African Navies in South Africa. The Indian Navy is represented by the Teg class guided missile frigate, INS Tarkash, a Chetak helicopter and the personnel from the Marine Commando Force (MARCOS). The previous edition of IBSAMAR (IBSAMAR VI) was conducted off Simons Town, South Africa in 2018.

8. Which institution hosted the ‘PowerEX’ Security Exercise?

A. Indian Coast Guard

B. Indian Computer Emergency Response Team (CERT–In)

C. NASSCOM

D. Indo–Tibetan Border Police

Answer & Explanation

Answer: B. Indian Computer Emergency Response Team (CERT–In)

  • Indian Computer Emergency Response Team (CERT–In) in collaboration with Power–CSIRTs (Computer Security Incident Response Teams in Power sector), conducted the Cyber Security Exercise ‘PowerEX’ for Power Sector Utilities. The Objective of the exercise was to ‘Recognize, Analyse & Respond to Cyber Incident in IT & OT Systems’ while the theme of the exercise was ‘Defending Cyber induced disruption in IT & OT infrastructure’.

9. What is the theme of the ‘World Standards Day 2022’?

A. Value of Standardization

B. Build Back Better

C. Standards and Sustainability

D. Businesses and Standards

Answer & Explanation

Answer: B. Build Back Better

  • Every year on October 14, the World Standards Day is observed. This day, also known as International Standards Day, aims to educate consumers, policymakers, and businesses about the value of standardisation. This year’s World Standards Day is centred on the concept of ‘Build Back Better’. October 14 was decided as the World Standards Day to commemorate the first gathering of representatives in London in 1956, which marked the launch of an international body to facilitate standardisation.

10. Which institution topped the Times Higher Education (THE) World University Rankings 2023 in India?

A. IIT Madras

B. IISc Bengaluru

C. IIT Kharagpur

D. IIT Bombay

Answer & Explanation

Answer: B. IISc Bengaluru

  • The Times Higher Education (THE) World University Rankings 2023 has been recently released. University of Oxford, UK has topped the rankings list for the 7th time consecutively. It is followed by University of Harvard (US) and University of Cambridge (UK) at second and third places. The Indian Institute of Science (IISc) has retained the top position among Indian institutes and it is placed in the 251–300 band.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!