TnpscTnpsc Current Affairs

3rd October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

3rd October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 3rd October 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

3rd October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. ‘ஸ்வச் சர்வேக்ஷன் விருதுகள் – 2022’இல் முதலிடத்தில் உள்ள நகரம் எது?

அ. மைசூரு

ஆ. இந்தூர்

இ. சென்னை

ஈ. பெங்களூரு

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இந்தூர்

  • ‘ஸ்வச் சர்வேக்ஷன் விருதுகள்–2022’இல் சிறப்பாகச் செயல்படும் நகரங்களின் பிரிவில், தொடர்ச்சியாக ஆறாவது முறையாக இந்தூர் ‘தூய்மையான நகரமாக’ அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சூரத் மற்றும் நவி மும்பை உள்ளன. மாநிலங்களின் பிரிவில், மத்திய பிரதேசம் முதலிடத்தையும், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா அடுத்தடுத்த இடங்களையும் பெற்றன. ஸ்வச் சர்வேக்ஷனின் ஏழாவது பதிப்பு, தூய்மை இந்தியா இயக்கத்தின் (நகர்ப்புறம்) முன்னேற்றம் மற்றும் பல்வேறு தூய்மை மற்றும் சுகாதார அளவுருக்களின் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைத் தரவரிசைப்படுத்துவதற்காக நடத்தப்பட்டது.

2. அண்மையில் (2022 அக்டோபரில்) இயக்கப்பட்ட மூன்றாவது ‘வந்தே பாரத்’ விரைவு இரயிலானது, கீழ்க்காணும் எந்த இருநகரங்களுக்கு இடையே இயக்கப்படுகிறது?

அ. புது தில்லி மற்றும் குருகிராம்

ஆ. மும்பை மற்றும் அகமதாபாத்

இ. பெங்களூரு மற்றும் மைசூரு

ஈ. மும்பை மற்றும் இந்தூர்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மும்பை மற்றும் அகமதாபாத்

  • ‘வந்தே பாரத்’ வரிசையில் மூன்றாவது இரயிலான காந்திநகர்–மும்பை ‘வந்தே பாரத்’ விரைவு இரயிலை மும்பை மற்றும் அகமதாபாத்தில் பிரதமர் மோதி தொடங்கிவைத்தார். மற்ற இரண்டு ‘வந்தே பாரத்’ விரைவு இரயில்கள் 2019 பிப்ரவரி மற்றும் அக்டோபர் மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட்டன; அவை முறையே புது தில்லியிலிருந்து வாரணாசி மற்றும் கத்ராவிற்கு இயக்கப்பட்டன. ‘வந்தே பாரத் 2.0’ என்றழைக்கப்படும் காந்திநகர்–மும்பை விரைவு இரயில் சுமார் 540 கிலோமீட்டர் தூரத்தை 6 மணி 30 நிமிடங்களில் கடக்கிறது.

3. ‘Universal Service Obligation Fund (USOF)’ என்பதுடன் தொடர்புடைய நடுவண் அமைச்சகம் எது?

அ. தகவல் தொடர்பு அமைச்சகம்

ஆ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

இ. MSME அமைச்சகம்

ஈ. வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. தகவல் தொடர்பு அமைச்சகம்

  • தொலைத்தொடர்புத் துறையின் (தகவல் தொடர்பு அமைச்சகம்) கீழுள்ள ஓர் அமைப்பான ‘Universal Service Obligation Fund (USOF)’, தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதித் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் உள்நாட்டு உற்பத்தி மற்றும் துறையில் புதுமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கிராமப்புறம் சார்ந்த தகவல் தொடர்பு தொழில்நுட்ப பயன்பாடுகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு நிதியளிப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

4. ‘உலக அல்சைமர் நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. செப்டம்பர்.20

ஆ. செப்டம்பர்.21

இ. செப்டம்பர்.25

ஈ. செப்டம்பர்.27

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. செப்டம்பர்.21

  • ஆண்டுதோறும் செப்.21 அன்று உலக அல்சைமர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாள் அல்சைமர் நோய், அதன் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதை கையாளும் முறைகள்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதை தனது நோக்கமாகக்கொண்டுள்ளது. அல்சைமர் நோய் என்பது மூளையின் நினைவாற்றல் & அறிவாற்றல் திறன்களை குறைக்கின்ற ஒரு நோயாகும். முதியோர்களில் பொதுவாகக்காணப்படும் ஞாபக மறதி நோய்க்கு இது காரணமாகும்.

5. “New Technologies for Greener Shipping” என்பது செப்.30 அன்று வரும் எந்த நாளின் கருப்பொருளாகும்?

அ. உலக கடற்படையினர் நாள்

ஆ. உலக கடல்சார் நாள்

இ. உலக பெருங்கடலியல் நாள்

ஈ. உலக மீன்வள நாள்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. உலக கடல்சார் நாள்

  • பன்னாட்டு கடல்சார் அமைப்பு (IMO) என்பது ஐக்கிய நாடுகள் (UN) அவையின் ஒரு சிறப்பு நிறுவனமாகும். அது கப்பல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகிறது. அதன் தலைமையகம் இலண்டனில் உள்ளது. உலக கடல்சார் நாளானது ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர்.30 அன்று கொண்டாடப்படுகிறது. COVID தொற்றால் இன்னல்களை எதிர்கொள்ளும் கடற்படையினருக்காக, IMO, 2021’ஐ அவர்களுக்கான ஓர் ஆண்டாக அறிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டிற்கான உலக கடல்சார் நாளின் கருப்பொருள், “New Technologies for Greener Shipping” என்பதாகும்.

6. உணவு இழப்பு மற்றும் சேதம் குறித்த சர்வதேச விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. செப்டம்பர்.29

ஆ. செப்டம்பர்.30

இ. அக்டோபர்.01

ஈ. அக்டோபர்.02

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. செப்டம்பர்.29

  • செப்டம்பர்.29 அன்று உணவிழப்பு மற்றும் சேதம் குறித்த மூன்றாவது சர்வதேச விழிப்புணர்வு நாளை உலகம் கொண்டாடியது. “Stop Food Loss and Waste; For the People; For the Planet” என்பது இந்த ஆண்டின் (2022) கருப் பொருளாகும். உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருட்களில் சுமார் 14% அறுவடை மற்றும் சில்லறை விற்பனையின் போது வீணாகின்றது. அதே நேரத்தில், உலகளாவிய உணவு உற்பத்தியில் 17% வரை பல்வேறு நிலைகளில் வீணாகின்றது. உலக இருதய நாளானது செப்டம்பர்.29 அன்று கொண்டாடப்படுகிறது. “Use Heart for Every Heart” என்பது இந்த ஆண்டின் (2022) கருப்பொருளாகும்.

7. சர்வதேச மொழிபெயர்ப்பு நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. செப்டம்பர்.30

ஆ. அக்டோபர்.01

இ. அக்டோபர்.02

ஈ. அக்டோபர்.03

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. செப்டம்பர்.30

  • ஆண்டுதோறும் செப்.30 அன்று சர்வதேச மொழிபெயர்ப்பு நாள் கொண்டாடப்படுகிறது. மொழிபெயர்ப்பாளர்களின் தந்தையாகக் கருதப்படும் விவிலிய மொழிபெயர்ப்பாளர் புனித ஜெரோம் நினைவாக இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. கடந்த 2017’இல் ஐநா பொதுச்சபையால் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடுகளை இணைப்பதி –லும் அமைதியை மேம்படுத்துவதிலும் மொழிவல்லுநர்கள் வகிக்கும் பங்கை அங்கீகரிப்பதற்காக இந்தச்சிறப்பு நாள் கொண்டாடப்படுகிறது. “A World without Barriers” என்பது நடப்பாண்டில் (2022) வரும் இந்நாளுக்கானக் கருப் பொருளாகும்.

8. தேசிய தன்னார்வ குருதிக்கொடை நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. அக்டோபர்.01

ஆ. அக்டோபர்.02

இ. அக்டோபர்.03

ஈ. அக்டோபர்.04

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. அக்டோபர்.01

  • தேசிய தன்னார்வ குருதிக்கொடை நாளானது ஒவ்வோராண்டும் அக்.1 அன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இது குருதிக்கொடைபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், தன்னார்வ குருதிக்கொடையை ஊக்குவிப்பதை –யும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நம் நாட்டிற்கு ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1.45 கோடி அலகு (யூனிட்) இரத்தம் தேவைப்படுகிறது. நாடு முழுவதும் 3500 உரிமம் பெற்ற இரத்த வங்கிகள்மூலம் இந்த இரத்தம் சேகரிக்கப்படுகிறது.

9. உலக வாழ்விட நாள் கடைப்பிடிக்கப்படுகிற நாள் எது?

அ. அக்டோபர் முதல் திங்கள்

ஆ. அக்டோபர் முதல் ஞாயிறு

இ. செப்டம்பர் கடைசி ஞாயிறு

ஈ. செப்டம்பர் கடைசி சனிக்கிழமை

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. அக்டோபர் முதல் திங்கள்

  • ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தில் வரும் முதல் திங்களன்று, ஐநா அவையால், “உலக வாழ்விட நாள்” அனுசரிக்கப்படுகிறது. அனைவருக்கும் போதுமான தங்குமிடத்தை வலியுறுத்தி இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, அக்.3 அன்று அனுசரிக்கப்பட்டது. “Mind the Gap. Leave No One and Place Behind” என்பது இந்த ஆண்டு (2021) வரும் உலக வாழ்விட நாளுக்கானக் கருப்பொருளாகும்.

10. பன்னாட்டு அகிம்சை நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. அக்டோபர்.01

ஆ. அக்டோபர்.02

இ. அக்டோபர்.03

ஈ. அக்டோபர்.04

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. அக்டோபர்.01

  • இந்தியாவின் ‘தேசத்தந்தை’ ‘மகாத்மா’ காந்தியடிகளின் பிறந்தநாள், ஒவ்வோர் ஆண்டும் அக்.2 அன்று பன்னாட்டு அகிம்சை நாளாக அனுசரிக்கப்படுகிறது. கல்வி மற்றும் பொதுமக்களிடையேயான விழிப்புணர்வுமூலம் அகிம்சையை பரப்புவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2004ஆம் ஆண்டில், நோபல் பரிசு பெற்ற ஈரானியர் ஷிரின் எபாடி, இந்த நினைவேந்தல் யோசனையை முதன் முதலில் முன்மொழிந்தார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்   

1. கிராமப்புறங்களில் 55% குடியிருப்புகளுக்கு குழாய்மூலம் குடிநீர்: தமிழ்நாடு அரசுக்கு நடுவணரசு விருது

ஜல் ஜீவன் திட்டத்தின்படி, தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் 55 சதவீத குடியிருப்புகளுக்கு குழாய்மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே பெருமளவில் இந்தப் பணிகளை மேற்கொண்டதற்காக முதல் பரிசை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளில் உள்ள 124.93 லட்சம் குடியிருப்புகளில் இதுவரை 69.14 லட்சம் குடியிருப்புகளுக்கு (55%) குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 55.79 லட்சம் குடியிருப்புகளுக்கு பல்வேறு திட்டங்கள் வாயிலாக குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை முன்னிட்டு `18,000 கோடி அளவிற்கு 42 புதிய குடிநீர் திட்டங்கள், 56 குடிநீர் திட்டங்களின் மறுசீரமைப்பு பணிகள் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

2. வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கமும் காரணங்களும்

மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்ஆப், கடந்த ஜூலையில் 23 இலட்சம் கணக்குகளை முடக்கியுள்ளது. பயனர்கள் தெரிவித்த புகார்கள் அடிப்படையிலும், விதிமீறல்களைக்கண்டறியும் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் கணக்குகளை வாட்ஸ்ஆப் முடக்கியுள்ளது.

வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்படுவதற்கான காரணங்கள் சிலவற்றைக் காணலாம்:

போலிக்கணக்கு உருவாக்குதல்

மற்றவர்கள் பெயரில் போலிக்கணக்குகளை உருவாக்கினால், சம்பந்தப்பட்ட நபரின் கணக்கு முடக்கப்படும்.

அதிக குறுஞ்செய்திகளை அனுப்புதல்

கைப்பேசியில் பதிவுசெய்து வைக்கப்படாத எண்ணுக்கு மிக அதிக எண்ணிக்கையிலான குறுஞ்செய்திகளை அனுப்பினால், சம்பந்தப்பட்ட வாட்ஸ்ஆப் கணக்கு முடக்கப்படும்.

அங்கீகரிக்கப்படாத பயன்பாடு

வாட்ஸ்ஆப் டெல்டா, GB வாட்ஸ்ஆப், வாட்ஸ்ஆப்+ உள்ளிட்ட அங்கீகரிக்கப்படாத செயலிகளைப் பயன்படுத்தினாலும் சம்பந்தப்பட்ட கணக்கை வாட்ஸ்ஆப் நிறுவனம் முடக்கும். அத்தகைய செயலிகளில் தனிநபர் தரவுகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால், அவற்றின் பயன்பாட்டை வாட்ஸ்ஆப் அனுமதிப்பதில்லை.

பயனர்களால் முடக்கம்

பல வாட்ஸ்ஆப் பயனர்கள் உங்களை முடக்கியிருந்தால் (பிளாக்) வாட்ஸ்ஆப் நிறுவனத்தால் கணக்கு அதிகாரபூர்வ -மாக முடக்கப்படும் அபாயமுள்ளது. போலிச்செய்திகளைப் பரப்பும் நபர் எனக்கருதி, வாட்ஸ்ஆப் இந்நடவடிக்கையை மேற்கொள்ளும்.

பயனர்களின் புகார்

உங்களுக்கு எதிராக வாட்ஸ்ஆப் பயனர்கள் பலர் புகார் தெரிவிக்கும்பட்சத்தில், உங்கள் கணக்கை வாட்ஸ்ஆப் அதிகாரபூர்வமாக முடக்கும்.

போலி தகவல்களை அனுப்புதல்

கைப்பேசிக்கோ மடிக்கணினிக்கோ அபாயம் ஏற்படுத்தும் வகையிலான தரவுகளையும் மென்பொருளையும் மற்றவர் -களுக்கு அனுப்பினால், உங்கள் கணக்கு முடக்கப்படும்.

ஆபாச படங்களை அனுப்புதல்

ஆபாச படங்கள், மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள், அவமதிக்கும் பதிவுகள் உள்ளிட்டவற்றைப் பயனர்களுக்கு அனுப்பினால், அக்கணக்கு முடக்கப்பட வாய்ப்புள்ளது.

வன்முறையைப் பரப்புதல்

வன்முறையைப் பரப்பும் வகையிலான செய்திகள், காணொலிகளை மற்ற பயனர்களுக்குப் பகிர்ந்தால், உங்கள் கணக்கு முடக்கப்படும்.

விதிகளை மீறுதல்

வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் விதிகளை மீறி நடக்கும் பயனர்களின் கணக்குகள் முடக்கப்படும்.

அதிகாரபூர்வ பதிவிறக்கம்

கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோர் உள்ளிட்ட அதிகாரபூர்வ வலைதளங்களில் இருந்து மட்டுமே வாட்ஸ்ஆப் செயலி பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும். நம்பகத்தன்மை அற்ற தளங்களிலிருந்து பதிவுசெய்யப்படும் கணக்குகள் முடக்கப்படும்.

அடையாளம் தெரியாத நபரை இணைத்தல்

அடையாளம் தெரியாத பயனரைக் குறிப்பிட்ட குழுவில் இணைத்தால், சம்பந்தப்பட்ட நபரின் வாட்ஸ்ஆப் கணக்கு முடக்கப்படும்.

விளம்பரச்செய்திகளை அனுப்புதல்

பயனர்களின் அனுமதியின்றி விளம்பரச்செய்திகளை அனுப்பினால், சம்பந்தப்பட்டவர்களின் கணக்கு முடக்கப்படும்.

சட்டவிரோத செய்திகளை அனுப்புதல்

சட்டவிரோத செய்திகளை மற்ற பயனாளர்களுக்கு அனுப்பினால், வாட்ஸ்ஆப் கணக்கு முடக்கப்படும்.

ஒரே செய்தியைப் பலருக்கு அனுப்புதல்

குறிப்பிட்ட செய்தியைக் குறைந்த நேரத்தில் பலருக்கு அனுப்பினால், உங்களின் வாட்ஸ்ஆப் கணக்கு முடக்கப்படும்.

3rd October 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which city has been named the first in the ‘Swachh Survekshan Awards 2022’?

A. Mysuru

B. Indore

C. Chennai

D. Bengaluru

Answer & Explanation

Answer: B. Indore

  • In the category of best performing cities in ‘Swachh Survekshan Awards 2022’, Indore was declared the cleanest city for sixth time in a row. It is followed by Surat and Navi Mumbai.
  • In the state category, Madhya Pradesh secured the first position, followed by Chhattisgarh and Maharashtra. The 7th edition of Swachh Survekshan was conducted to study the progress of the Swachh Bharat Mission (Urban) and rank Urban Local Bodies (ULBs) based on various cleanliness and sanitation parameters.

2. The third Vande Bharat Express train, which was recently inaugurated (in October 2022), runs between which cities?

A. New Delhi and Gurugram

B. Mumbai and Ahmedabad

C. Bengaluru and Mysuru

D. Mumbai and Indore

Answer & Explanation

Answer: B. Mumbai and Ahmedabad

  • Prime Minister Narendra Modi inaugurated the Gandhinagar–Mumbai Vande Bharat Express train Mumbai and Ahmedabad, the third in the Vande Bharat series. The two other Vande Bharat Express trains were introduced in the months of February and October 2019, run from New Delhi to Varanasi and Katra, respectively. The ‘Vande Bharat 2.0’ Gandhinagar–Mumbai Express train covers a distance of about 540 kilometres in 6 hours 30 minutes.

3. ‘Universal Service Obligation Fund (USOF)’ is associated with which Union Ministry?

A. Ministry of Communications

B. Ministry of Electronics and IT

C. Ministry of MSME

D. Ministry of Commerce and Industry

Answer & Explanation

Answer: A. Ministry of Communications

  • Universal Service Obligation Fund (USOF), a body under the Department of Telecommunications, (Ministry of Communication) officially launched Telecom Technology Development Fund (TTDF) scheme. The scheme aims to promote indigenous manufacturing and innovation in the sector. TTDF aims to fund research and development in rural–specific communication technology applications.

4. When is the ‘World Alzheimer’s Day’ observed every year?

A. September.20

B. September.21

C. September.25

D. September.27

Answer & Explanation

Answer: B. September.21

  • Every year, 21st September is observed as World Alzheimer’s Day. This day aims to raise awareness about the Alzheimer’s disease, its causes, symptoms and the ways to handle it. Alzheimer’s disease is a brain condition which retards memory & cognitive abilities of the affected person. It’s the most frequent cause of dementia in older individuals, which may cause brain cells to weaken and die.

5. “New Technologies for Greener Shipping” is the theme of which day, celebrated on 30 September?

A. World Seafarers Day

B. World Maritime Day

C. World Oceanography Day

D. World Fishery Day

Answer & Explanation

Answer: B. World Maritime Day

  • The International Maritime Organization is a specialised agency of the United Nations responsible for regulating shipping. It is headquartered at London. World Maritime Day 2021 is celebrated every year on 30 September. IMO has declared 2021 a year of action for seafarers, who are facing hardship due to the COVID–19 pandemic. The World Maritime theme for 2022 is “New Technologies for Greener Shipping”.

6. ‘International Day of Awareness on Food Loss and Waste Reduction’ is observed on which day?

A. September.29

B. September.30

C. October.01

D. October.02

Answer & Explanation

Answer: A. September.29

  • The world marks the 3rd International Day of Awareness on Food Loss and Waste on September 29, 2022. The theme of the day this year is “Stop Food Loss and Waste! For People and Planet.” Around 14 percent of food produced is lost between harvest and retail, while 17 percent of total global food production is wasted across the world in various stages. World Heart Day is also celebrated on 29 September. The theme of this year (2022) is “Use heart for every heart”.

7. When is the International Translation Day celebrated every year?

A. September.30

B. October.01

C. October.02

D. October.03

Answer & Explanation

Answer: A. September.30

  • Every year, the 30th September is celebrated as the International Translation Day. This day is chosen to remember the Bible translator St. Jerome, who is considered the father of translators. A resolution in this regard was passed by the United Nations General Assembly in the year 2017, in order to recognise the role played by language professionals in connecting nations and promoting peace. The theme of this year (2022) International Translation Day is “A World without Barriers”.

8. When is the ‘National Voluntary Blood Donation Day’ observed?

A. October.01

B. October.02

C. October.03

D. October.04

Answer & Explanation

Answer: A. October.01

  • National Voluntary Blood Donation Day is celebrated on 1st October of every year across the country. It aims to raise awareness about Blood donation and promote voluntary Blood donation in the country. Our country needs around 1.45 crore units of blood every year. Collection of blood is done through 3500 licensed blood banks across the country.

9. When is World Habitat Day observed every year?

A. First Monday of October

B. First Sunday of October

C. Last Sunday of September

D. Last Saturday of September

Answer & Explanation

Answer: A. First Monday of October

  • Every year, First Monday of October is observed by the United Nations as “World Habitat Day”, to stress on the basic right of all to adequate shelter and to highlight the state of our habitats. This year, it was observed on October 4. The theme for this year’s World Habitat Day is “Mind the Gap. Leave No One and Place Behind”.

10. When is the ‘International Day of Non–Violence’ observed every year?

A. October.01

B. October.02

C. October.03

D. October.04

Answer & Explanation

Answer: B. October.02

  • The birth anniversary of India’s ‘Father of Nation’ ‘Mahatma’ Gandhi is observed as the ‘International Day of Non–Violence’ every year, on Oct.2. The United Nations General Assembly (UNGA), in a resolution adopted in 2007, established the day as an occasion to spread the message of non–violence through education and public awareness. In 2004, Iranian Noble Laureate Shirin Ebadi proposed the idea of the commemoration.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!