TnpscTnpsc Current Affairs

4th & 5th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

4th & 5th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 4th & 5th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. மீன்வள அமைச்சகத்தின் அண்மைய தரவுகளின்படி, 1990-2018 வரை கடற்கரையோரத்தில் 41% அரிப்புக்கு உட்பட்ட மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) குஜராத்

இ) கேரளா 

ஈ) மகாராஷ்டிரா

  • 1990-2018ஆம் ஆண்டு வரையிலான செயற்கைக்கோள் தரவுகளின்படி, கேரளாவின் 41 சதவீத கடலோரப்பகுதி பல்வேறு அளவிலான அரிப்புக்கு உட்பட்டுள்ளது. இந்தத் தகவலை மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா மக்களவை -யில் தெரிவித்தார்.

2. ‘2021 – இந்தியப்பெருங்கடல் மாநாட்டை’ நடத்தவுள்ள நகரம் எது?

அ) புது தில்லி

ஆ) கொழும்பு

இ) அபுதாபி 

ஈ) டோக்கியோ

  • ஐந்தாவது இந்தியப்பெருங்கடல் மாநாடு – 2021 டிச.4-5 ஆகிய தேதிகளில் அபுதாபியில் நடைபெறவுள்ளது.
  • வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கர் இந்த மாநாட்டில் உரையாற்றுகிறார். இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் கருப்பொருள் “Indian Ocean: Ecology, Economy, Epidemic”. தொடக்கவுரையை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச ஆற்றுவார். மாலத்தீவுகள், பிஜி மற்றும் பிற நாடுகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்கவுள்ளனர்.

3. பொலிவுறு நகர திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான புதிய காலக்கெடு என்ன?

அ) 2022

ஆ) 2023 

இ) 2025

ஈ) 2026

  • COVID தொற்றுநோய் மற்றும் பிற காரணங்களால் மத்திய வீட்டுவசதி & நகர்ப்புற விவகார அமைச்சகம் பொலிவுறு நகர திட்டத்தைச்செயல்படுத்துவதற்கான காலக்கெடுவை 2023 ஜூன் வரை நீட்டித்துள்ளது.
  • முந்தைய காலக்கெடுவின்படி, நகரங்கள் பொலிவுறு நகர திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஆண்டுகளுக்குள் தங்கள் திட்டங்களை முடிக்க எதிர்பார்க்கப்பட்டது. 2016 ஜனவரி முதல் 2018 ஜூன் வரை 4 சுற்று போட்டிகள் மூலம் நூறு ஸ்மார்ட் நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

4. அண்மையில் வெடித்துச் சிதறிய செமேரு எரிமலை உள்ள நாடு எது?

அ) ஜப்பான்

ஆ) இந்தோனேசியா 

இ) பிலிப்பைன்ஸ்

ஈ) ஆஸ்திரேலியா

  • இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள செமரு மலை, சமீபத்தில் வெடித்துச்சிதறியது. இவ்வெரிமலை வெடித்துச் சிதறியதில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.

5. மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகமானது உள்ளூர் வணிகங்கள் மற்றும் சுய உதவிக்குழுக்களை மேம்படுத்த எந்த நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?

அ) அமேசான்

ஆ) பிளிப்கார்ட் 

இ) ஸ்னாப்டீல்

ஈ) ஜியோமார்ட்

  • பெண்கள் தலைமையிலான உள்ளூர் வணிகங்கள் மற்றும் சுயஉதவி குழுக்களை மேம்படுத்துவதற்காக பிளிப்கார்ட் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் சிறு வணிக பிரிவுகள் மற்றும் சுய உதவிக்குழுக்களை இ-காமர்ஸ் பகுதிக்குள் கொண்டுவர எண்ணுகிறது. இந்த ஒப்பந்தம் தீனதயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம் – DAY-NRLM உடன் இணைக்கப்பட்டுள்ளது.

6. நிதி அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, நாடு முழுவதும் உள்ள ATM’களின் எண்ணிக்கை என்ன?

அ) 50000

ஆ) 1.1 லட்சம்

இ) 2 .1 லட்சம் 

ஈ) 5.1 லட்சம்

  • 2021 செப்டம்பர் இறுதி வரை நாடு முழுவதும் உள்ள ATM’களின் எண்ணிக்கை 2.13 லட்சத்துக்கும் அதிகமாக இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. 47 சதவீதத்திற்கும் அதிகமான ஏடிஎம்கள் கிராமப்புற மற்றும் புறநகர்ப்புறங்களில் உள்ளன.
  • ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, திட்டமிடப்பட்ட வணிக வங்கிகள் 2021 செப்டம்பர் வரை 2.13 லட்சம் ATM’களை நிறுவியுள்ளன. இதுதவிர, 27,837 ஒயிட் லேபிள் ATM’களும் நிறுவப்பட்டுள்ளன.

7. ஆத்மநிர்பார் கிரிஷக் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ள மாநிலம் எது?

அ) குஜராத்

ஆ) உத்தர பிரதேசம் 

இ) மத்திய பிரதேசம்

ஈ) மகாராஷ்டிரா

  • உத்தர பிரதேச அரசு 2021-22 முதல் மாநிலத்தில் ஆத்ம நிர்பார் கிரிஷக் ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
  • இத்திட்டத்தின்கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் மாநிலத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் 1475 உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகள் உருவாக்கப்படும்.

8. ‘இ-சவாரி இந்தியா எலக்ட்ரிக் பேருந்து கூட்டணி’யை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) NITI ஆயோக் 

ஆ) NHAI

இ) எரிசக்தி திறன் சேவைகள் லிட்

ஈ) NTPC லிட்

  • அரசாங்க மதியுரையகமான NITI ஆயோக், இந்தியாவில் இ-பேருந்து பற்றிய அறிவைப் பகிர்ந்துகொள்வதற்காக, ‘e-Sawaari India Electric Bus Coalition’ஐ அறிமுகப்படுத்துவதாக சமீபத்தில் அறிவித்தது.
  • கன்வர்ஜென்ஸ் எனர்ஜி சர்வீஸ் லிமிடெட் (CESL) மற்றும் உலக வளங்கள் நிறுவனம், இந்தியா ஆகியவற்றுடன் இணைந்து, டிரான்ஸ்ஃபார்மேடிவ் அர்பன் மொபிலிட்டி இனிஷியேட்டிவ் ஆதரவுடன் கூட்டணி தொடங்கப்பட்டது.

9. நடப்பாண்டுக்கான மனித உரிமைகள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ) Equality, Reducing Inequalities, Advancing Human Rights 

ஆ) The ABCs of L.G.B.T.Q.I.A.+

இ) What are Human Rights

ஈ) Advocates- Torchbearers of human rights

  • மனித உரிமைகள் நாளானது ஒவ்வோர் ஆண்டும் டிச.10 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான (2021) கருப்பொருள் “Equality, Reducing Inequalities, Advancing Human Rights” என்பதாகும். ஐநா பொதுச்சபை 1948’இல் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது.
  • மக்களின் சமூக, கலாச்சார மற்றும் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அனைவரின் நலனை உறுதிசெய்யவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

10. FIDE உலக சாம்பியன்ஷிப்பை வென்ற செஸ் வீரர் யார்?

அ) மேக்னஸ் கார்ல்சன் 

ஆ) விஸ்வநாதன் ஆனந்த்

இ) கோனேரு ஹம்பி

ஈ) நெபோம்னியாச்சி

  • தற்போதைய உலக செஸ் சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் தனது பட்டத்தை தக்கவைத்து துபாயில் நடந்த FIDE உலக சாம்பியன்ஷிப்பை வென்றார்.
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த துபாய் எக்ஸ்போ 2020 இல் நடந்த உலகளாவிய போட்டியை வெல்வதற்காக ஏழு புள்ளிகளைக் கடந்து ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச் -சியை கார்ல்சன் தோற்கடித்தார். இதன்மூலம் கார்ல்சன் தனது 5ஆம் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. அஞ்சு பாபி ஜாா்ஜுக்கு உலக தடகள ஆண்டின் சிறந்த வீராங்கனை விருது

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை அஞ்சு பாபி ஜாா்ஜுக்கு உலக தடகள சம்மேளனம் சாா்பில் ஆண்டின் சிறந்த வீராங்கனை விருது வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அஞ்சு பாபி ஜாா்ஜ் கடந்த 2003-இல் பாரிஸில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றாா்.

இந்நிலையில் தடகளத்தில் அவா் ஆற்றிய சேவைக்காகவும், இந்தியாவில் இளம்பெண்கள் அதிகளவில் தடகளத்தில் ஈடுபட செய்தமைக்காவும், அவருக்கு ஆண்டு சிறந்த வீராங்கனை விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதைப் பெறும் இரண்டாவது வீராங்கனை அஞ்சு ஆவாா். எத்தியோப்பாவின் டேரட்டு டுலு கடந்த 2019-இல் இவ்விருதைப் பெற்றாா்.

தற்போது இந்திய தடகள சம்மேளனம் (ஏஎஃப்ஐ)-இன் மூத்த துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறாா். கடந்த 2016-இல் அஞ்சு பாபி ஜாா்ஜ் தடகள பவுண்டேஷனை தொடங்கி 13 இளம் சிறுமிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறாா். இவா்களில் நீளம் தாண்டுதலில் ஷைலி சிங் 20 வயதுக்குட்பட்டோா் உலக தடகளத்தில் வெள்ளி வென்றாா்.

இந்த விருதுக்கு தோ்வு செய்யப்பட்டது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. இதன் மூலம் மகளிா் தடகளத்துக்கு மேலும் சேவை புரிய ஊக்கம் கிடைத்துள்ளது என்றாா்.

2. அதிக கோல்கள்: ரொனால்டோ சாதனை

கால்பந்து விளையாட்டில் 800 கோல்கள் அடித்த முதல் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ.

போா்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வருகிறார். லண்டனில் நடைபெற்ற பிரீமியர் லீக் போட்டி ஒன்றில் ஆர்செனல் அணிக்கு எதிராக விளையாடி இரு கோல்கள் அடித்து 3-2 என தன்னுடைய அணி வெற்றி பெற உதவினார்.

இதன்மூலம் தன்னுடைய நாட்டுக்காகவும் கிளப்புக்காவும் விளையாடிய ஆட்டங்களில் 800 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இந்த இலக்கை அடைந்த முதல் வீரர் என்கிற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார். 1095 ஆட்டங்களில் 801 கோல்களை அடித்துள்ளார் 36 வயது ரொனால்டோ. சர்வதேச ஆட்டங்களில் 115 கோல்களுடன் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

3. டிசம்பர்.5 – சர்வதேச தன்னார்வலர் தினம் மற்றும் உலக மண் தினம்.

4. தேசிய அளவில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கு 4-வது இடம்

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக தரவரிசையில், தேசிய அளவிலான மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில், கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கடந்த 2020-ம் ஆண்டுக்கான இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகதரவரிசையில் 8-வது இடத்தைபெற்றுள்ளது. இப்பல்கலைக்கழகம், நாட்டில் உள்ள 67 வேளாண் நிறுவனங்களில் 8-வது இடத்தையும், தேசிய அளவிலான மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில் 4-வது இடத்தையும், தென்னிந்திய வேளாண்மைப் பல்கலைக்கழகங்களுக்கு இடையே 2-வது இடத்தையும் பெற்றுள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) அ.சு.கிருஷ்ணமூர்த்தி கூறியது:

பல்கலைக்கழக ஆசிரியர்களின் சீரிய பயிற்சி வகுப்புகள் மூலம், மாணவர்கள் அளவிலான இளநிலை, முதுநிலை ஆராய்ச்சி ஊக்கத்தொகை எண்ணிக்கையைப் பெற்றதன் வாயிலாக கல்விப் பரிமாணத்தில் அதிக மதிப்பெண் பெற முடிந்தது. பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இதை ஒரு சவாலாக ஏற்று ஆராய்ச்சிக் கட்டுரைகளை சீரிய முயற்சிகள் மற்றும் திட்டமிடல் மூலம் அதிகளவில் பிரசுரித்து நிதி ஆதாரங்களையும் பெருக்கியதன் மூலம் ஆராய்ச்சிப் பரிமாணத்தில் குறிப்பிட்ட மதிப்பெண் பெற முடிந்தது. இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு, பல்வேறு விருதுகளைப் பெற தீவிர ஊக்குவிப்பு அளிக்கப்பட்டது.

மேலும், வேளாண் விரிவாக்கத்தில் அதிகளவிலான செயல் விளக்கங்கள், வானொலி உரைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டன. இடுபொருள் வணிகர்கள், அரசு சாரா அமைப்பினர், தொழில்நுட்ப நிபுணர்கள் ஆகியோருக்கு அதிக பயிற்சிகள் வழங்கப்பட்டன. அதிகளவிலான சர்வதேச மாணவர்களை ஈர்த்ததன் மூலம், மாணவர்களின் பன்முகத் தன்மையை அதிகரித்து, மதிப்பெண்களைக் கூட்ட முடிந்தது.

இந்த தரவரிசை மூலம் பல்கலைக்கழகம் நிதிகளை ஈர்ப்பதற்காகவும், இன்னும் கூடுதலாக சர்வதேச மாணவர்கள் சேர்க்கைக்காகவும், கூட்டு ஆராய்ச்சிக்கான கூடுதல் வழிகளுக்காகவும் உலக அரங்கில் தன்நிலையை மேம்படுத்தவும் முடியும். இனிவரும் நாட்களில் பல்கலைக்கழகம் முதல் 3 இடங்களில் இடம்பிடிக்க முனைப்புடன் செயல்பட்டு உச்சத்தை எட்டும்” என்றார்.

5. ரோபோக்கள் இனிமேல் குழந்தைகளை பெற்றெடுக்கும்: உலகின் முதல் உயிருள்ள ரோபோக்களை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

உலகின் முதல் உயிருள்ள ரோபோவை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த ரோபோக்கள் தங்களை போன்றே குழந்தைகளை பெற்றெடுக்கின்றன. அமெரிக்காவின் வெர்மாண்ட், டப்ட்ஸ்,ஹார்வர்டு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக உயிரி ரோபோ ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டில் உலகின் முதல் உயிருள்ள ரோபோவை அவர்கள் உருவாக்கினர்.

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜீனோபஸ் லேவிஸ் என்ற தவளை இனத்தின் ஸ்டெம் செல்களில் இருந்து உருவாக்கியதால் இதற்கு ‘ஜீனோபாட்ஸ் 1.0’ என்று பெயரிடப்பட்டது. இவை ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான அகலம் கொண்டவை. பேக் மேன் வடிவிலான இந்த ரோபோக்களால் நகர முடியும். நீந்த முடியும்.

தொடர் ஆராய்ச்சியின் பலனாக கடந்த மே மாதம் ஜீனோபாட்ஸ் 2.0 ரோபோ உருவாக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு ஜீனோபாட்ஸ் 3.0 ரோபோ குறித்த ஆய்வறிக்கையை அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டனர். அதில் கூறியிருப்பதாவது:

உலகின் பல்வேறு நாடுகளில் இரும்பு, பிளாஸ்டிக்கால் ரோபோக்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் இருந்து வேறுபட்டு உயிரி ரோபோக்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றிருக்கிறோம். இப்போது ஜீனோபாட்ஸ் 3.0 ரோபாவை உருவாக்கியுள்ளோம். இவற்றால் தங்களைப் போன்றே குழந்தைகளை பெற்றெடுக்க முடியும். இந்த ரோபோ ஆராய்ச்சியின் மூலம் விபத்தில் படுகாயமடைந்த மனிதர்களை குணப்படுத்த முடியும். பிறவி குறைபாடுகள், புற்றுநோயை குணப்படுத்த முடியும். முதுமை பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என்று நம்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜீனோபாட்ஸ் 3.0 ரோபாவை உருவாக்கியவிஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்றுள்ள டப்ட்ஸ்பல்கலைக்கழக விஞ்ஞானி பிளாகிஸ்தான் கூறும்போது, “ஆய்வகத்தில் ஒரு ஜீனோபாட்ஸ் ரோபோ குழந்தையை பெற்றெடுக்க 5 நாட்கள் ஆகிறது. இதுவும் அச்சு, அசல் ஜீனோபாட்ஸ் ரோபோ போன்றே இருக்கிறது. எதிர்காலத்தில் அணுக் கழிவு, கடலில் சேகரமாகும் மைக்ரோபிளாஸ்டிக் கழிவு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஜீனோபாட்ஸ் ரோபோவை பயன்படுத்த முடியும்” என்றார்

ஆபத்தான ரோபோ?

அமெரிக்காவின் டூக் பல்கலைக்கழக பேராசிரியர் நிடா பாராஹனி கூறும்போது, “ஜீனோபாட்ஸ் ரோபோவால் தன்னைப் போன்றே குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்றால் அது ஆபத்தானது. இவை ஆய்வகத்தில் இருந்து தப்பி பூமியில் பல்கிப் பெருக வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் இவற்றின் இனப்பெருக்கம், செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதை கணிக்க முடியாது. செயற்கையாக உருவாக்கப்பட்ட உயிரி ரோபாவால் மனித குலத்துக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே ஆபத்தான ஆராய்ச்சியை நிறுத்த வேண்டும். மனித குலத்தின் நன்மைக்காக அனைத்து உயிரி ரோபோக்களையும் அழித்துவிட வேண்டும்” என்றார்.

6. பாரதியார் நினைவு நூற்றாண்டு: திருவல்லிக்கேணியில் 44 வாரங்களுக்கு தொடர் நிகழ்ச்சி

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பாரதியார் மறைந்த நூற்றாண்டின் நினைவாக அவரது பெருமைகளை போற்றிடும் வகையில் 14 அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ஓராண்டுக்கு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சி ஒன்று செய்தித்துறையின் சார்பில் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.

இதனை செயல்படுத்தும்விதமாக சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் 4-ந் தேதி (இன்று) தொடங்கி 44 வாரங்களுக்கு தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி, பள்ளிக்கல்வித்துறை, வானவில் பண்பாட்டு மையம் மற்றும் பாரதி புகழ் பாடும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தொடர்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்கி நடைபெறும்.

முதல் நிகழ்ச்சியான தமிழ்நாடு இசைக்கல்லூரி மாணவர்கள் வழங்கும் பாரதியின் புகழ்பாடும் நாதஸ்வர இசை நிகழ்ச்சியை 4-ந் தேதி (இன்று) மாலை 5 மணிக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைக்கிறார்.

1. As per a recent data from Fisheries Ministry, 41 per cent of the coastline of which state is subject to erosion from 1990 to 2018?

A) Tamil Nadu

B) Gujarat

C) Kerala 

D) Maharashtra

  • Satellite data from 1990 to 2018 has revealed that 41 per cent of the coastline of Kerala is subject to varying degrees of erosion. Minister of Fisheries, Animal Husbandry and Dairying, Parshottam Rupala told the data to the Lok Sabha.

2. Which city is set to host the ‘Indian Ocean Conference’ 2021?

A) New Delhi

B) Colombo

C) Abu Dhabi 

D) Tokyo

  • The fifth Indian Ocean Conference is set to be held in Abu Dhabi on December 4–5, 2021. External Affairs Minister S Jaishankar will address the Conference. The theme of the Indian Ocean Conference 2021 is “Indian Ocean: Ecology, Economy, Epidemic”. The inaugural address will be delivered by President of Sri Lanka Gotabaya Rajapaksa. The representatives of Maldives, Fiji and other countries will participate.

3. What is the new deadline for implementation of Smart Cities Mission?

A) 2022

B) 2023 

C) 2025

D) 2026

  • The Union Housing and Urban Affairs Ministry has extended the timeline for the implementation of Smart Cities Mission to June 2023 due to the Covid pandemic and other reasons. As per the earlier deadline, the cities were expected to complete their projects within five years of selection under the Smart Cities Mission. Hundred smart cities were selected through four rounds of competition from January 2016 to June 2018.

4. Semeru volcano, which erupted recently, is located in which country?

A) Japan

B) Indonesia 

C) Philippines

D) Australia

  • Semeru is the tallest mountain on Java Island, Indonesia, spewed up towers of ash and hot clouds. The eruption of Semeru volcano has killed at least 14 people and injured many people in the island.

5. Ministry of Rural Development has signed an MoU with which company, to empower local businesses and SHGs?

A) Amazon

B) Flipkart 

C) Snapdeal

D) Jiomart

  • The Ministry of Rural Development has signed an MoU with Flipkart to help empower local businesses and self–help groups (SHGs) led by women. The MoU seeks to bring the small business units and SHGs into the e–commerce fold.
  • The partnership is aligned with Deendayal Antyodaya Yojana – National Rural Livelihood Mission– DAY–NRLM.

6. As per the recent data from the Finance Ministry, what is the number of ATMs across the country?

A) 50000

B) 1.1 lakh

C) 2 .1 lakh 

D) 5.1 lakh

  • The number of ATMs across the country stood at more than 2.13 lakh by the end of September 2021, as per the data given by the Finance Ministry said in Parliament. Over 47 per cent of the ATMS are in rural and semi–urban areas. According to the RBI data, scheduled commercial banks have installed 2.13 lakh ATMs up to September 2021. In addition to this, 27,837 White Label ATMs (WLA) were also installed.

7. Which state has approved to implement Atma Nirbhar Krishak Integrated Development Scheme?

A) Gujarat

B) Uttar Pradesh 

C) Madhya Pradesh

D) Maharashtra

  • The Uttar Pradesh government has given its approval to implement Atma Nirbhar Krishak Integrated Development Scheme in the state from 2021–22. Under the scheme 1475 farmer producer organisations will be formed in the next three years in each block of the state.

8. Which institution released the launch of ‘e–Sawaari India Electric Bus Coalition’?

A) NITI Aayog 

B) NHAI

C) Energy Efficiency Services Limited

D) NTPC Limited

  • Government think tank NITI Aayog recently announced the launch of ‘e–Sawaari India Electric Bus Coalition’, to share knowledge on e–bus adoption in India. The Coalition has been launched in partnership with Convergence Energy Service Ltd and World Resources Institute, India, with support from Transformative Urban Mobility Initiative (TUMI).

9. What is the theme of the ‘Human Rights Day 2021’?

A) Equality, Reducing Inequalities, Advancing Human Rights 

B) The ABCs of L.G.B.T.Q.I.A.+

C) What are Human Rights

D) Advocates– Torchbearers of human rights

  • Human Rights Day is observed on December 10, every year. This year, the theme is ‘Equality, Reducing Inequalities, advancing human rights’. United Nations General Assembly in 1948 adopted the Universal Declaration of Human Rights. This day is celebrated to raise awareness about people’s social, cultural and physical rights and to ensure the welfare of everyone.

10. Which Chess player won the FIDE World Championship?

A) Magnus Carlsen 

B) Viswanathan Anand

C) Koneru Humpy

D) Nepomniachtchi

  • The present world chess champion Magnus Carlsen of Norway defended his title and won the FIDE World Championship in Dubai. Carlsen beat Ian Nepomniachtchi of Russia, crossing the seven-point threshold to win the global tournament held at Dubai’s Expo 2020 in the United Arab Emirates. Carlsen clinched his fifth world championship title.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!