TnpscTnpsc Current Affairs

4th & 5th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

4th & 5th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 4th & 5th October 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

4th & 5th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் இலகுரக போர் உலங்கு வானூர்திகளின் பெயர் என்ன?

அ. பிரதாப்

ஆ. பிரசந்தா

இ. பிரகாஷ்

ஈ. விகாஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. பிரசந்தா

  • இந்திய வான்படையானது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இலகுரக போர் உலங்கு வானூர்திகளின் முதல் தொகுதியை அறிமுகப்படுத்தியது. இந்த இலகுரக போர் உலங்கு வானூர்திக்கு, ‘பிரசந்தா’ எனப் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. அவை ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுதங்களைச் சுட்டு வீழ்த்தும் திறன்கொண்டவை. இந்த இலகுரக போர் உலங்கு வானூர்திகளை பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) உருவாக்கியுள்ளது. உயரமான பகுதிகளில் சேவையாற்றும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜோத்பூரில் நடந்த விழாவில் இந்திய வான்படையில் இது சேர்க்கப்பட்டது.

2. ‘YUVA 2.0’ என்ற திட்டத்துடன் தொடர்புடைய நடுவண் அமைச்சகம் எது?

அ. கல்வி அமைச்சகம்

ஆ. MSME அமைச்சகம்

இ. இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

ஈ. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. கல்வி அமைச்சகம்

  • கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித்துறை, அக்.2 அன்று YUVA 2.0 (Young, Upcoming மற்றும் Versatile Authors) என்ற திட்டத்தைத் தொடங்கியது. இது இளம் ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் பிரதமரின் ஒரு திட்டமாகும். YUVA 2.0 என்பது இந்திய இலக்கியத்தை பன்னாட்டளவில் வளர்ப்பதற்காக 30 வயதுக்குட்பட்ட இளம் மற்றும் ஆர்வமுள்ள எழுத்தாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்கான ஓர் ஆசிரியர் வழிகாட்டல் திட்டமாகும்.

3. இந்தியாவில், ‘ஸ்வச் பாரத் திவாஸ்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. அக்டோபர்.02

ஆ. அக்டோபர்.04

இ. அக்டோபர்.06

ஈ. அக்டோபர்.08

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. அக்டோபர்.02

  • அக்.02 அன்று இந்தியா முழுவதும், ‘ஸ்வச் பாரத் திவாஸ்’ கொண்டாடப்பட்டது. ஸ்வச் பாரத் திவாஸ்–2022’ஐ ஏற்பாடு செய்யும் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை, தூய்மை இந்தியா இயக்கம் – ஊரகம் (SBM–G) மற்றும் ஜல் ஜீவன் இயக்கம் ஆகிய இரண்டு திட்டங்களைச் செயல்படுத்துகிறது. தூய்மை கணக்கெடுப்பு – ஊரகம் (SSG) 2022, ஸ்வச்சதா கி சேவா–2022, சுஜலாம் 1.0 மற்றும் 2.0, ஜல் ஜீவன் இயக்கத்தின் செயற்பாட்டு மதிப்பீடு, கிராண்ட் கர் ஜல் சான்றளிப்பு மற்றும் துளிர் நிறுவல்கள் ஆகியவற்றுக்கான விருதுகளை இந்தியக்குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.

4. பங்குச்சந்தைகளில் பட்டியலிடத் தகுதிபெற, பிராந்திய கிராமப்புற வங்கிகளின் (RRBs) குறைந்தபட்ச நிகர மதிப்பு எவ்வளவாக இருத்தல் வேண்டும்?

அ. ரூ.100 கோடி

ஆ. ரூ.250 கோடி

இ. ரூ.300 கோடி

ஈ. ரூ.500 கோடி

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ரூ.300 கோடி

  • நிதியமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வரைவு வழிகாட்டுதல்களின்படி, பிராந்திய கிராமப்புற வங்கிகள் (RRBs) பங்குச் சந்தைகளில் பட்டியலிடவும், முந்தைய 3 ஆண்டுகளில் குறைந்தபட்சம் `300 கோடி நிகர மதிப்பு இருந்தால் நிதி திரட்டவும் தகுதிபெறும். அத்தகைய வங்கிகள் முந்தைய மூன்றாண்டுகளில் ஒவ்வொன்றிலும் 9 சதவீத அளவுக்கு போதுமான மூலதனத்தைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் முந்தைய ஐந்து ஆண்டுகளில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளின் குறைந்தபட்சம் `15 கோடி அளவுக்கு செயல்பாட்டு இலாபத்தை பதிவுசெய்திருக்க வேண்டும்.

5. ஸ்வச் சர்வேக்ஷன் – ஊரகம் – 2022இன்கீழ், பெரிய மாநிலங்கள் பிரிவின்கீழ் முதல் பரிசை வென்ற மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. தெலுங்கானா

இ. மகாராஷ்டிரா

ஈ. கர்நாடகா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. தெலுங்கானா

  • ஸ்வச் சர்வேக்ஷன் – ஊரகம் (SSG) – 2022இன்கீழ் பெரிய மாநிலங்கள் பிரிவின்கீழ் தெலுங்கானா முதல் பரிசை வென்றது. மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஊரகங்களின் சுகாதார நிலையை ஆய்வுசெய்து விருதுகளை வழங்கினார். SSG விருதுகள் – 2022இல், ஹரியானா இரண்டாவது மற்றும் தமிழ்நாடு மூன்றாவது சிறந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டன. தூய்மை இந்தியா இயக்கம் – ஊரகம் இரண்டாம் கட்டத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து 6 லட்சம் கிராமங்களையும் திறந்தவெளி மலங்கழித்தல் இல்லாததாக மாற்றுவதே நோக்கமாகும்.

6. உடலியல் அல்லது மருத்துவத்திற்கான 2022ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை வென்ற ஸ்வான்டே பாபோ என்பவர் கீழ்க்காணும் எந்த நாட்டைச் சேர்ந்த மரபியல் நிபுணராவார்?

அ. அமெரிக்கா

ஆ. ஜெர்மனி

இ. ஆஸ்திரேலியா

ஈ. சுவீடன்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. சுவீடன்

  • சுவீட மரபியலாளர் ஸ்வாண்டே பாபோ, அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக உடலியல் அல்லது மருத்துவத்திற்கான 2022 – நோபல் பரிசை வென்றார். தற்கால மனிதர்களின் அழிந்துபோன உறவினரான நியாண்டர்தாலின் மரபணுவை பாபோ வரிசைப்படுத்தினார். ‘டெனிசோவா’ என்ற முன்பின் அறிந்திராத ஹோமின்குறித்த கண்டுபிடிப்பையும் அவர் மேற்கொண்டார். மதிப்புமிக்க இவ்விருது தங்கப்பதக்கம் மற்றும் 10 மில்லியன் சுவீட குரோனர் ($1.14 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல்) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

7. UNCTADஇன் வருடாந்திர வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அறிக்கையின்படி, 2022–23ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் GDP வளர்ச்சிக்கணிப்பு என்ன?

அ. 6.2%

ஆ. 6.0%

இ. 5.7%

ஈ. 5.5%

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. 5.7%

  • வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு (UNCTAD) இந்தியாவின் பொருளாதாரம் 2022ஆம் ஆண்டில் 5.7 சதவீதமும் 2023ஆம் ஆண்டில் 4.7 சதவீதமும் வளர்ச்சியடையும் என்று மதிப்பிடுகிறது. அதன் 2022 – வருடாந்திர வர்த்தக மற்றும் மேம்பாட்டு அறிக்கையில், உலகப்பொருளாதாரம் 2022ஆம் ஆண்டில் 2.6% வளர்ச்சியடையும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வறிக்கையின்படி, மேம்பட்ட பொருளாதாரங்களில் நிலவும் பணவியல் மற்றும் நிதி இறுக்கத்தின் தற்போதைய கொள்கைப்போக்கை விரைவாக மாற்றாத வரை உலகம் உலகளாவிய மந்தநிலை மற்றும் தேக்கநிலையை நோக்கியே செல்லும்.

8. மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களின் டிஜிட்டல் இந்தியா மாநாட்டை நடத்துகிற மாநிலம்/UT எது?

அ. வாரணாசி

ஆ. புது தில்லி

இ. மும்பை

ஈ. மைசூரு

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. புது தில்லி

  • தில்லியில் அண்மையில், ‘மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களின் டிஜிட்டல் இந்தியா மாநாடு’ நடைபெற்றது. நடுவண் தகவல்தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் இம்மாநாடு நடைபெற்றது. அடுத்த 500 நாட்களில் புதிதாக 25,000 கோபுரங்கள் அமைக்க `26,000 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக நடுவண் அமைச்சர் அறிவித்தார்.

9. இந்திய இராணுவமும் இந்திய வான்படையும் இணைந்து கீழ்க்காணும் எந்த மாநிலத்தில், ‘ககன் ஸ்ட்ரைக்’ என்ற கூட்டுப்பயிற்சியை நடத்தின?

அ. ஆந்திர பிரதேசம்

ஆ. உத்தரகாண்ட்

இ. சிக்கிம்

ஈ. பஞ்சாப்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. பஞ்சாப்

  • இந்திய இராணுவத்தின் கர்கா படையணியும் இந்திய வான்படையும் பஞ்சாபின் பல பகுதிகளில் நான்கு நாட்களாக ‘ககன் ஸ்ட்ரைக்’ என்ற கூட்டுப்பயிற்சியை நடத்தின. இந்த நடவடிக்கையானது அப்பாச்சி 64E மற்றும் அதிநவீன இலகுரக உலங்கு வானூர்தி WSI ஆகியவை ஆற்றல்வாய்ந்த ஆயுத விநியோகிகளாக அங்கீகரிக்கப்பட்டதாக இராணுவம் அறிவித்தது. இந்தப் பயிற்சியின்போது தரைப்படைகளுக்கு ஆதரவாக தாக்குதல் உலங்கு வானூர்திகள் வான்வழிப்படையாகப் பயன்படுத்தப்பட்டன.

10. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுறுவதாக அறிவித்த ஆரோன் பிஞ்ச் சார்ந்த நாடு எது?

அ. இங்கிலாந்து

ஆ. ஆஸ்திரேலியா

இ. தென்னாப்பிரிக்கா

ஈ. நியூசிலாந்து

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஆஸ்திரேலியா

  • ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் ஆரோன் பிஞ்ச் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பிஞ்ச் 145 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். இந்த ஆண்டு ICC T20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கான அணித்தலைவராக பிஞ்ச் தொடர்ந்து இருப்பார். அவரது தொழிற்முறை வாழ்வில் 17 சதங்களுடன் 5400 இரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். 2013இல் இலங்கைக்கு எதிராக அறிமுகமான அவர், ஸ்காட்லாந்துக்கு எதிராக தனது முதல் சதத்தை அடித்தார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இராமேஸ்வரம் தனுஷ்கோடியில் 30 ஜிகாவாட் மின்னுற்பத்திக்கான காற்றுவளம் உள்ளது

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளையில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவிலேயே அதிக மின்னுற்பத்தி திறன்கொண்ட காற்றாலையை நடுவணரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை, இரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சர் பகவந்த் கூபா பார்வையிட்டார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த WEG நிறுவனம் `88 கோடி மதிப்பில் இந்தக் காற்றாலை டர்பைனை அமைத்துள்ளது. இதன்மூலம் 4.2 MW மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. இந்தக் காற்றாலை டர்பைனைப் பார்வையிட்டு ஆய்வுசெய்த நடுவணமைச்சர், அந்த நிறுவன அதிகாரிகளிடம் அதிக மின்னுற்பத்தி திறன்கொண்ட காற்றாலை செயல்பாடு, உற்பத்தி செலவு உள்ளிட்ட விபரங்களைக் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எதிர்காலத்தில் 7 MW மின்சார உற்பத்தித்திறன் கொண்ட டர்பைனைத் தயாரிக்கவுள்ளோம். இந்திய கடலோரப்பகுதியில் 70 GW காற்றுவளம் உள்ளது. குஜராத்திலும், தமிழ்நாட்டிலும் 35 GW காற்று வளம் உள்ளது.  குறிப்பாக இராமேஸ்வரம் தனுஷ்கோடியில் சுமார் 30 GW காற்றுவளம் உள்ளது. இங்கு இரண்டு காற்றாலை டர்பைன் நிறுவ உள்ளோம். இதன் மூலம் ராமேஸ்வரம் நகர் முழுவதும் மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என்றார். 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மரபுசாரா எரிசக்திமூலம் 500 GW மின்னுற்பத்தி செய்ய பிரதமர் இலக்கு நிர்ணையித்துள்ளார். இதற்கு போதுமான அளவு வாய்ப்பும் வளமும் இந்தியாவில் உள்ளது. சூரிய சக்தி மூலம் 300 GW மின்சாரமும் பிற மரபு சாரா எரிசக்திமூலம் 200 GW மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

2. சுவீடன் விஞ்ஞானிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு

மனித சமூகத்தின் பரிணாமம் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஸ்வீடன் விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களின் பரிணாமம்குறித்து தீவிர ஆய்வுகளை மேற்கொண்ட பாபோ, நவீன மனிதர்களின் மரபணுக்களின் தொகுதியை (ஜீனோம்), மனிதர்களின் முந்தைய பரிணாமமான நியாண்டர்தால், டெனிசோவன் ஆகியவற்றின் மரபணுத்தொகுதிகளுடன் ஒப்பிட்டு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். நியாண்டர்தால், டெனிசோவன் ஆகிய இனக்குழுக்கள் இணைந்தே மனித இனம் உருவானதாகத் தனது ஆய்வின் மூலமாக அவர் கண்டறிந்து தெரிவித்தார்.

முந்தைய இனக்குழுக்களில் இருந்து மனிதர்களின் இனக்குழு தனித்துவமானது என்ற அவரது கண்டுபிடிப்பால் மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலம் குறித்து அதிக தகவல்கள் தெரியவந்ததாக நோபல் தேர்வுக்குழு தெரிவித்து உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையில் நியாண்டர்தாலின் எலும்புகள் கண்டறியப்பட்டு மரபணு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த ஆராய்ச்சியின்மூலமாக மனிதர்களின் பரிணாம வளர்ச்சிகுறித்து தெரியவந்ததாகத் தேர்வுக்குழு தெரிவித்தது. பாபோ குழுவினரின் கண்டுபிடிப்பானது கரோனா உள்ளிட்ட நோய்த்தொற்றுகளுக்கு எதிராக மனிதர்களின் மரபணு எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் அறிந்துகொள்ள உதவியதாகக்குழு தெரிவித்தது.

நோபல் பரிசு பெற்றுள்ள ஸ்வான்டே பாபோவுக்கு சுமார் 9 லட்சம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது. வரும் டிச.10-ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் நோபல் பதக்கத்துடன் பரிசுத்தொகை அவருக்கு வழங்கப்படவுள்ளது.

4th & 5th October 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. What is the name of the first indigenously developed light combat helicopters (LCH)?

A. Pratabh

B. Prachand

C. Prakash

D. Vikas

Answer & Explanation

Answer: B. Prachand

  • The Indian Air Force inducted the first batch of indigenously developed Light Combat Helicopters, named Prachand, which are capable of firing a range of missiles and other weapons. The Light Combat Helicopters (LCH) are developed by state–run aerospace major Hindustan Aeronautics Ltd (HAL). It has been primarily designed for deployment in high–altitude regions. It was inducted into the IAF at a ceremony in Jodhpur.

2. Which Union Ministry is associated with ‘YUVA 2.0’ Scheme?

A. Ministry of Education

B. Ministry of MSME

C. Ministry of Youth Affairs and Sports

D. Ministry of Commerce and Industry

Answer & Explanation

Answer: A. Ministry of Education

  • The Ministry of Education’s Department of Higher Education inaugurated YUVA 2.0 (Young, Upcoming and Versatile Authors) on October 2. It is the Prime Minister’s Scheme for Mentoring Young Authors. YUVA 2.0 is an author mentorship programme to train young and aspiring writers under 30 years old in order to nurture Indian literature internationally.

3. Swachh Bharat Diwas is celebrated on which date in India?

A. October.02

B. October.04

C. October.06

D. October.08

Answer & Explanation

Answer: A. October.02

  • October 2 is celebrated as Swachh Bharat Diwas across India. Department of Drinking Water and Sanitation (DDWS), which organises Swachh Bharat Diwas–2022, implements two programmes –Swachh Bharat Mission Grameen (SBM–G) and Jal Jeevan Mission (JJM). President of India Droupadi Murmu confers the awards for Swachh Survekshan Grameen (SSG) 2022, Swachhta Hi Sewa 2022, Sujlam 1.0 and 2.0, Jal Jeevan Mission (JJM) Functionality Assessment, Har Ghar Jal certification and start–up Grand Challenge.

4. What is the minimum net worth of Regional rural banks, to be eligible to list on stock exchanges?

A. Rs.100 crore

B. Rs.250 crore

C. Rs.300 crore

D. Rs.500 crore

Answer & Explanation

Answer: C. Rs.300 crore

  • As per the draft guidelines issued by the Finance Ministry, Regional rural banks (RRBs) will be eligible to list on stock exchanges and raise funds if they have net worth of at least Rs 300 crore over the previous three years. Such banks must have a capital adequacy of 9 percent in each of the previous three years and recorded operating profit of at least Rs 15 crore for a minimum of three out of the preceding five years, among other norms.

5. Which state won the first prize under the Large States category under Swachh Survekshan Grameen (SSG) 2022?

A. Tamil Nadu

B. Telangana

C. Maharashtra

D. Karnataka

Answer & Explanation

Answer: B. Telangana

  • Telangana won the first prize under the Large States category under Swachh Survekshan Gramin (SSG) 2022. Indian President Droupadi Murmu presented the awards which looked into the sanitation status of rural areas. Haryana was named the second and Tamil Nadu the third best state in the SSG Awards 2022.  In the second phase of Swachh Bharat Mission Gramin, the aim is to make all six lakh villages in India free of open defecation.

6. Svante Pääbo, won the 2022 Nobel Prize in physiology or medicine, is a geneticist from which country?

A. USA

B. Germany

C. Australia

D. Sweden

Answer & Explanation

Answer: D. Sweden

  • Swedish geneticist Svante Pääbo won the 2022 Nobel Prize in physiology or medicine for discoveries related to genomes of extinct hominins and human evolution. Pääbo sequenced the genome of the Neanderthal, an extinct relative of present–day humans. He also made the discovery of a previously unknown hominin named Denisova. The prestigious award comes with a gold medal and 10 million Swedish kronor (over USD 1.14 million).

7. What is India’s GDP growth projection for 2022–23, as per UNCTAD Annual Trade and Development Report?

A. 6.2%

B. 6.0%

C. 5.7%

D. 5.5%

Answer & Explanation

Answer: C. 5.7%

  • The United Nations Conference on Trade and Development (UNCTAD) estimates India’s economy to grow 5.7% in 2022 and 4.7% in 2023. In its annual Trade and Development Report 2022, it said that world economy is expected to grow 2.6% in 2022. As per the report, the world is headed towards a global recession and stagnation unless we quickly change the current policy course of monetary and fiscal tightening in advanced economies.

8. Which state/UT is the host of the ‘Digital India Conference of State IT Ministers’?

A. Varanasi

B. New Delhi

C. Mumbai

D. Mysuru

Answer & Explanation

Answer: B. New Delhi

  • The ‘Digital India Conference of State IT Ministers’ was recently held in New Delhi. It was held under chairmanship of the Minister for Communications, Electronics and IT, Ashwini Vaishnaw. Union Minister announced that Rs 26,000 crore had been approved to install new 25,000 towers in the next 500 days.

9. Indian Army and Indian Air Force conducted a Joint Exercise named ‘Gagan Strike’ in which state?

A. Andhra Pradesh

B. Uttarakhand

C. Sikkim

D. Punjab

Answer & Explanation

Answer: D. Punjab

  • Indian Army’s Kharga Corps and Indian Air Force conducted a Joint Exercise named ‘Gagan Strike’ over a period of four days in several areas of Punjab. The army announced that the operation validated the Apache 64E and Advanced Light Helicopter WSI as potent weapon delivery platforms. Attack helicopters were employed as the aerial arm of manoeuvre in support of ground forces, during the exercise.

10. Aaron Finch, who announced retirement from international cricket, is a famous player from which country?

A. England

B. Australia

C. South Africa

D. New Zealand

Answer & Explanation

Answer: B. Australia

  • Australia Captain Aaron Finch announced his retirement from one–day international cricket. Finch has represented Australia in the 145 ODIs. Finch will continue to captain the Australian team in this year’s ICC T20 World Cup. His career includes over 5400 runs with 17 centuries. He made his debut against Sri Lanka in 2013 and smashed his maiden hundred against Scotland.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!