TnpscTnpsc Current Affairs

4th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

4th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 4th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘துலிப் திருவிழா’ என்பது இந்தியாவின் எந்த நகரத்தில் நடத்தப்படும் ஒரு விழாவாகும்?

அ) சிம்லா

ஆ) ஸ்ரீநகர் 

இ) சண்டிகர்

ஈ) கௌகாத்தி

  • ஜம்மு–காஷ்மீரின் ஸ்ரீநகரில் 10 லட்சத்துக்கும் அதிகமான துலிப் மலர்களைக் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டம் பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்பட்டுள்ளது. இந்தத் துலிப் தோட்டம் வரவிருக்கும் துலிப் திருவிழாவிற்காக பல மாதங்களாக உருவாக்கப்பட்டது.
  • ஆண்டுதோறும் வசந்தத்தின் தொடக்கத்தில் ஸ்ரீநகரில் நடைபெறும் துலிப் திருவிழா, உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப்பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது.

2. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘சஞ்சி கலை’ நடைமுறையில் உள்ள மாநிலம் எது?

அ) இராஜஸ்தான்

ஆ) ஹிமாச்சல பிரதேசம்

இ) உத்தர பிரதேசம் 

ஈ) குஜராத்

  • ‘சஞ்சி’ கலையில் ஈடுபடும் மதுரா–பிருந்தாவனஞ்சார் கலைஞர்களை ஊக்குவிக்கும் திட்டம் ஏதேனுமுள்ளதா? என்று மக்களவை உறுப்பினரும் நடிகருமான ஹேமா மாலினி அரசிடம் கேள்வியெழுப்பினார்.
  • சஞ்சி கலை என்பது ஒரு தனித்துவமான கைவினை வடிவமாகும். இது, காகிதத்தில் வெட்டப்பட்ட நேர்த்தியான வடிவமைப்புகள் மற்றும் படவடிவங்களைக் கொண்டு உள்ளது. வட இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் உள்ள மதுராவில் தோன்றிய ‘சஞ்சி’ ஓவியம் பிருந்தாவனத்திலும் வழக்கத்தில் உள்ளது.

3. அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவுறும் உலக நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) மார்ச்.23

ஆ) மார்ச்.25 

இ) மார்ச்.27

ஈ) மார்ச்.29

  • ‘அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் உலக நாள்’ ஆனது ஆண்டுதோறும் மார்ச்.25 அன்று அனுசரிக்கப்படுகிறது. “Stories of Courage: Resistance to Slavery and Unity against Racism” என்பது நடப்பு 2022 இல் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.

4. சமீபசெய்திகளில் இடம்பெற்ற PACER முன்னெடுப்பைச் செயல்படுத்துகிற மத்திய அமைச்சகம் எது?

அ) புவி அறிவியல்

ஆ) உள்துறை

இ) பாதுகாப்பு

ஈ) அறிவியல் & தொழில்நுட்பம்

  • துருவ அறிவியல் மற்றும் தாழ் வெப்ப மண்டல ஆராய்ச்சி (PACER) திட்டமானது புவி அறிவியல் அமைச்சகத்தின்கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனமான துருவ மற்றும் கடல்சார் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தினால் (NCPOR) செயல்படுத்தப்படுகிறது. இது அண்டார்டிக் திட்டம், இந்திய ஆர்க்டிக் திட்டம், தென்பெருங்கடல் திட்டம் மற்றும் தாழ் வெப்ப மண்டலம் & காலநிலை திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்தத்திட்டம் அண்டார்டிகாவிற்கு 41வது இந்திய அறிவியல் பயணத்தை ஏற்பாடு செய்கிறது.
  • PACER திட்டத்தை 2021–2026இலும் தொடர சமீபத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

5. 2021 – ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டில் முதலிடம் பிடித்த இந்திய மாநிலம்/UT எது?

அ) தமிழ்நாடு

ஆ) மகாராஷ்டிரா

இ) குஜராத் 

ஈ) தெலுங்கானா

  • NITI ஆயோக், போட்டித்திறன் மையத்துடன் இணைந்து ஏற்றுமதி தயார்நிலைப் பட்டியல் – 2021’ஐ வெளியிட்டது. இதில் பெரும்பாலான கடலோர மாவட்டங்கள், ஏற்றுமதியில் சிறப்பாகச் செயல்படுகின்றன. குஜராத் மாநிலம் 2ஆம் முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • ஏற்றுமதி தயார்நிலைப் பட்டியல் கொள்கை, வர்த்தகச் சூழல், ஏற்றுமதிச் சூழல், ஏற்றுமதி செயல்பாடு என்ற 4 முக்கிய அம்சங்களின்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை இது தரவரிசைபடுத்துகிறது. இதில் 11 துணை அம்சங்களும் உள்ளன.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘Le Corbusier’s Edict’ என்பதுடன் தொடர்புடைய இந்திய நகரம் எது?

அ) மும்பை

ஆ) புது தில்லி

இ) சண்டிகர் 

ஈ) புதுச்சேரி

  • சண்டிகரில் உள்ள கேபிடல் வளாகத்தில் 3 சிலைகளை நிறுவ பஞ்சாப் அரசு தீர்மானம் எடுத்துள்ளது. இதற்கு அந்நகரின் பாரம்பரிய நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
  • ‘சண்டிகரின் ஆணை’ என்பது சண்டிகரின் திட்டமிடுபவர் லீ கார்பூசியரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு விதி நூலாகும். சிலைகள் நிறுவலைத் தவிர, சுக்னா ஏரியில் வணிகக் கட்டமைப்புகள் ஏற்படுத்த முழுமையான தடை விதிக்கவும் இந்த ஆணை குறிப்பிடுகிறது.

7. சரிஸ்கா புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) பீகார்

ஆ) இராஜஸ்தான் 

இ) மத்திய பிரதேசம்

ஈ) கேரளா

  • இராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள சரிஸ்கா புலிகள் காப்பகத்தில் சமீபத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அக்பர்பூர் மலைத்தொடரில் 8–10 சதுர கிமீ பரப்பளவு பாதிக்கப்பட்டுள்ளதால், நீர்த்தெளிக்கும் கருவிகள் பொருத்தப்பட்ட வான்படை ஹெலிகாப்டர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. சரிஸ்கா புலிகள் காப்பகத்தில் மொத்தம் 27 புலிகள் உள்ளன.

8. Jal Shakti Abhiyan: Catch the Rain’ பிரச்சாரமானது பின்வரும் எந்த ஆண்டில் முதலில் தொடங்கப்பட்டது?

அ) 2015

ஆ) 2017

இ) 2021 

ஈ) 2022

  • புது தில்லியில் நடந்த மழைநீர் சேகரிப்பு இயக்கத்தின்கீழ் 3ஆவது தேசிய நீர் மேலாண்மை விருதுகளை வழங்கி ஜல்சக்தி திட்டத்தை இந்தியக்குடியரசுத்தலைவர் ராம்நத் கோவிந்த் தொடங்கிவைத்தார்.
  • இந்திய அரசானது 2019இல், ‘ஜல் சக்தி அபியான்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதே ஆண்டில், ‘ஜல் ஜீவன் இயக்கம்’ தொடங்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு மார்ச்.22 அன்று, ‘உலக நீர் நாளன்று, குடிமக்களை நீரைச்சேமிக்க வலியுறுத்துவதற்காக, ‘ஜல்சக்தி அபியான்: மழையைச்சேகரிக்கவும்’ என்பது தொடக்கப்பட்டது.

9. ‘இந்தியப் பெருஞ்சுவரும்’ உலகின் இரண்டாவது மிக நீளச் சுவருமானது அமைந்துள்ள மாநிலம்/UT எது?

அ) மேற்கு வங்கம்

ஆ) இராஜஸ்தான் 

இ) மகாராஷ்டிரா

ஈ) குஜராத்

  • இராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூருக்கு அருகில் உள்ள ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள, ‘கும்பல்கர்’ கோட்டை ‘இந்தியாவின் பெருஞ்சுவர்’ என்றும் அழைக்கப்படுகிறது.
  • சீனப்பெருஞ்சுவருக்கு அடுத்தபடியாக உலகின் 2ஆவது நீளமான சுவர் இதுவாகும். மார்ச்.30 அன்று ராஜஸ்தான் உருவான நாள், ‘இராஜஸ்தான் திவாஸ்’ என்று கொண்டாடப்படுகிறது.
  • 1949 மார்ச்.30 அன்று ஜோத்பூர், ஜெய்ப்பூர், ஜெய்சால்மர் மற்றும் பிகேனர் ஆகிய சமஸ்தானங்கள் ஒன்றிணைந்து ‘மாபெரும் இராஜஸ்தான் யூனியன்’ என்றானது. ‘2022’, இராஜஸ்தான் திவாஸின் 73 ஆண்டுகளைக் குறிக்கிறது.

10. நேரடிப் பயன் பரிமாற்றத்தை உறுதிசெய்வதற்காக நடுவண் துறை மற்றும் மத்திய நிதியுதவித் திட்டங்கள் இணைக்கப்பட்டுள்ள தளத்தின் பெயர் என்ன?

அ) DPT பாரத் இணையதளம் 

ஆ) ஆத்மநிர்பார் DPT இணையதளம்

இ) பிரதான் மந்திரி DBT இணையதளம்

ஈ) அம்ருத் கால் DBT இணையதளம்

  • DBT பாரத் போர்ட்டலில் 313 நடுவண் துறை மற்றும் 53 அமைச்சகங்களின் மத்திய நிதியுதவி திட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. பயனாளிகளுக்கு அவர்களின் வங்கிக்கணக்குகளில் மானியங்களை வரவு வைப்பதன் மூலம் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர நேரடிப் பயன்கள் பரிமாற்றம் திட்டம் தொடங்கப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்திய ஏற்றுமதி `32 லட்சம் கோடி: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

நாட்டின் சரக்கு ஏற்றுமதி கடந்த 2021-22 நிதியாண்டில் சுமார் `32 லட்சம் கோடியை (418 பில்லியன் டாலர்) தாண்டி சாதனை படைத்துள்ளதாக மத்திய வர்த்தக, தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: நாட்டின் சரக்கு ஏற்றுமதி 2021-22 நிதியாண்டில் சுமார் `32 லட்சம் கோடியை (418 பில்லியன் டாலர்) கடந்து சாதனை படைத்துள்ளது.

கடந்த மார்ச்.21-ஆம் தேதியே நமது இலக்கான 400 பில்லியன் டாலரை (`30.4 லட்சம் கோடி) சரக்கு ஏற்றுமதி கடந்தது. இதுவரை எந்தவொரு மாதத்திலும் இல்லாத வகையில், கடந்த மார்ச் மாதம் மட்டுமே `3.06 இலட்சம் கோடி (40.38 பில்லியன்) மதிப்பில் ஏற்றுமதி நடந்தது.

அதிகரிப்பு: கடந்த 2019-20 நிதியாண்டில் வெறும் இரண்டு லட்சம் டன்னாக (`500 கோடி) இருந்த கோதுமை ஏற்றுமதி, 2020-21-இல் 21.55 லட்சம் டன்னாகவும் (`4,000 கோடி), 2021-22 நிதியாண்டில் 70 லட்சம் டன்னாகவும் (`15,000 கோடி) அதிகரித்தது.

இந்தியாவில் விளையும் கோதுமை பெரும்பாலும் அண்டை நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக வங்கதேசத்துக்கு மட்டுமே கடந்த நிதியாண்டில் 30.50 லட்சம் டன் கோதுமை (54 சதவீதம்) ஏற்றுமதி செய்யப்பட்டது.

சர்வதேச அளவில் கோதுமை உற்பத்தியில் இந்தியா 14.14 சதவீதத்துடன் 2-ஆம் இடம் வகித்தாலும் ஏற்றுமதியில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. நாட்டில் ஆண்டுக்கு 10.76 கோடி டன் கோதுமை உற்பத்தி செய்யப்படுகிறது.

2. மியாமி ஓபன்: சாம்பியன் ஸ்வியாடெக்

மியாமி ஓபன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்தில் போலந்தின் இளம் வீராங்கனை ஐகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் ஜான் ஐஷ்நர்-ஹர்காஸ் இணை கூல்ஹோப்-ஸ்கூப்ஸ்கி இணையை வென்று பட்டத்தைக் கைப்பற்றினர்.

3. 7-ஆவது முறையாக ஆஸ்திரேலியா உலக சாம்பியன்

ICC மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 7-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா. இதுவரை நடந்த 12 உலகக்கோப்பைகளில் தற்போது ஆஸ்திரேலிய மகளிர் அணி 7-ஆவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.

அலிஸா ஹீலி சாதனை:

இதுவரை நடந்துள்ள ஆடவர் மற்றும் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதி ஆட்டங்களில் அலிஸா ஹீலி அடித்த 170 ரன்களே அதிகபட்ச ரன்களாகும்.

4. வருணா பயிற்சி 2022 நிறைவு

இந்தியா – பிரான்ஸ் கடற்படைகளுக்கு இடையிலான 20ஆவது இருதரப்பு பயிற்சியான, ‘வருணா 2022’ நிறைவடைந்தது. இந்தாண்டு நடைபெற்ற பயிற்சி ஆழ்கடல் செயல்பாடுகளில் விரிவான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த ஆழ்கடல் தந்திரப் பயிற்சியில், அதிநவீன நீர்மூழ்கி எதிர்ப்பு போர் தந்திரம், துப்பாக்கி சுடுதல், கடல் பயண பரிணாமங்கள், சூழ்ச்சித் தந்திரங்கள் மற்றும் விரிவான வான் செயல்பாடுகள் இடம் பெற்றன. எதிர் எதிர் தளங்களில் ஹெலிகாப்டர்களை இறக்குதல் போன்ற பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்தியாவின் அதிநவீன நீர்மூழ்கி எதிர்ப்பு சாதனங்களும் இந்த பயிற்சி நிறைவு நிகழ்ச்சியில் இடம் பெற்றன. ஐஎன்எஸ் சென்னை போர்க் கப்பலில் சீ கிங் எம் கே 42பி, கடலோர ரோந்து விமானமான பி-8ஐ பிரெஞ்ச் கடற்படையின் FS கூர்பெட் கப்பலும் இந்தப் பயிற்சியில் பங்கேற்று போர் ஒத்திகைகளில் ஈடுபட்டன.

5. தேசிய தூயகாற்று திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு மொத்தம் `233 கோடி ஒதுக்கீடு

தேசிய தூயகாற்று திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடிக்கு 2021 மார்ச் 31 வரை `3.06 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 15ஆவது நிதி ஆணையத்தின் (2020 -21) பரிந்துரையின்படி சென்னைக்கு `181 கோடி, மதுரைக்கு `31 கோடி மற்றும் திருச்சிராப்பள்ளிக்கு `21 கோடி என தமிழ்நாட்டிற்கு மொத்தம் `233 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காற்றுத் தர நிதியின் கீழ் சென்னைக்கு `91 கோடி, மதுரைக்கு `15 கோடி மற்றும் திருச்சிராப்பள்ளிக்கு `11 கோடி என தமிழ்நாட்டிற்கு மொத்தம் `117 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

1. ‘Tulip Festival’ is an annual festival conducted in which Indian city?

A) Shimla

B) Srinagar 

C) Chandigarh

D) Guwahati

  • Asia’s largest tulip garden, with over one million tulips, has been opened to the public in Jammu and Kashmir’s Srinagar. The Tulip Garden has been cultivated over months for the upcoming Tulip Festival.
  • The Tulip Festival in Srinagar annually attracts tourists from all over the world at the beginning of spring.

2. Sanjhi Art, which was seen in the news recently, is practised in which state?

A) Rajasthan

B) Himachal Pradesh

C) Uttar Pradesh 

D) Gujarat

  • Lok Sabha Member and Actor Hema Malini asked the government if it has any plan to encourage artists from Mathura–Vrindavan involved in Sanjhi art. Sanjhi art is a unique craft form that features exquisite designs and picture motifs, cut into paper.
  • Originated in Mathura in the north Indian state of Uttar Pradesh, Sanjhi painting is also practised in Vrindavan.

3. When is the ‘International Day of Remembrance of the Victims of Slavery’ observed?

A) March.23

B) March.25 

C) March.27

D) March.29

  • The ‘International Day of Remembrance of the Victims of Slavery’ is observed every year on March 25. The theme of the day in 2022 is “Stories of Courage: Resistance to Slavery and Unity against Racism”.

4. PACER Initiative, which was seen in the news recently, is implemented by which Union Ministry?

A) Ministry of Earth Science 

B) Ministry of Home Affairs

C) Ministry of Defence

D) Ministry of Science and Technology

  • The Polar Science and Cryosphere Research (PACER) scheme is implemented through National Centre for Polar and Ocean Research (NCPOR), an autonomous institute under the Ministry of Earth Sciences.
  • It comprises of the Antarctic program, Indian Arctic program, Southern Ocean program and Cryosphere and Climate program. The scheme is organising 41st Indian Scientific Expedition to Antarctica. PACER scheme has recently been approved for continuation during 2021–2026.

5. Which Indian state/UT topped the Export Preparedness Index (EPI) 2021?

A) Tamil Nadu

B) Maharashtra

C) Gujarat 

D) Telangana

  • NITI Aayog, in partnership with the Institute of Competitiveness, released the Export Preparedness Index (EPI) 2021. As per the report, most of the Coastal States of India are the best performers, and Gujarat was the top–performer.
  • The EPI ranks states and UTs on 4 main pillars namely ‘Policy; Business Ecosystem; Export Ecosystem; Export Performance’ and 11 sub–pillars.

6. Le Corbusier’s Edict’ which was seen in the news recently, is associated with which Indian city?

A) Mumbai

B) New Delhi

C) Chandigarh 

D) Puducherry

  • The Punjab Government made a resolution to install three statues in the Assembly Building of Capitol Complex, Chandigarh. It was opposed by Heritage Experts of the city. The ‘Edict of Chandigarh’ is a rule book prescribed by Le Corbusier, the planner of Chandigarh. Other than statues, the Edict also specifies a complete ban on noise and commercial structures at the Sukhna Lake.

7. Sariska Tiger Reserve, which was seen in the news, is located in which state?

A) Bihar

B) Rajasthan 

C) Madhya Pradesh

D) Kerala

  • A massive fire has recently broken out in the Sariska Tiger Reserve, located in Alwar district, in the state of Rajasthan. Air Force helicopters equipped with water sprays are battling the fire, as the 8–10 sq km area in the Akbarpur range has been affected. Sariska Tiger Reserve has a total of 27 tigers.

8. ‘Jal Shakti Abhiyan: Catch the Rain’ campaign was first launched in which year?

A) 2015

B) 2017

C) 2021 

D) 2022

  • The President of India Ram Nath Kovind, presented the third National Water Awards and launched the Jal Shakti Abhiyan: Catch the Rain campaign 2022 in New Delhi.
  • The Government of India in 2019 launched the ‘Jal Shakti Abhiyan’ and in the same year ‘Jal Jeevan Mission’ was also launched. On 22nd March in 2021, on ‘World Water Day’, the ‘Jal Shakti Abhiyan: Catch the Rain’ campaign was launched, to urge citizens to conserve water.

9. The ‘Great Wall of India’ and the second–longest wall of the world is located in which state/UT?

A) West Bengal

B) Rajasthan 

C) Maharashtra

D) Gujarat

  • ‘Kumbhalgarh’ also known as the Great Wall of India is a fort on the range of Aravalli Hills near Udaipur of Rajasthan state. It is the second–longest wall of the world after the Great Wall of China.
  • The formation of Rajasthan on March 30 is celebrated as ‘Rajasthan Diwas’. On 30 March 1949, the princely states of Jodhpur, Jaipur, Jaisalmer and Bikaner merged to form the ‘Greater Rajasthan Union’. 2022 marks 73 years of Rajasthan Diwas.

10. What is the name of the portal, in which central sector and centrally sponsored schemes are on–boarded to ensure Direct Benefit Transfer?

A) DBT Bharat Portal 

B) Atmanirbhar DBT Portal

C) Pradhan Mantri DBT Portal

D) Amrit Kaal DBT Portal

  • As many as 313 central sector and centrally sponsored schemes from 53 ministries have been onboarded on the DBT Bharat Portal. The Direct Benefits Transfer (DBT) programme was launched to bring transparency through the transfer of subsidies to the beneficiaries through their bank accounts.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!